புதுசு கண்ணா புதுசு..

எப்பவுமே எனக்கிருக்கற ஒரு பழக்கம் அடிக்கடி புது மொபைல் மாத்தறது [ரொம்ப frequent-அ எல்லாம் இல்லீங்க. கண்டிப்பா ஒரு மொபைல ஒரு வருஷமாவது வைச்சிருப்பேன் :) ] போன வருஷம் புது ஃபோன் வாங்கித்தாங்கப்பானு கேட்டா இந்த ஃபோன் நல்லா தானே இருக்குனு டயலாக் விட்டாரு எங்கப்பா. ரெண்டு நாள்ல அந்த போன் உடைஞ்சு போச்சு [அதுவாத்தான் உடைஞ்சுதுனு சொன்னா நீங்க நம்பித்தான் ஆகனும் :)) ] உடைஞ்ச ஃபோன் flip flop மாடல்ங்கறதால கடைல அதை வாங்கிக்க மாட்டேன்னு சொல்லிட்டான். ஒழுங்கா மொதல்லயே மாத்தி குடுத்திருந்தா இதுக்காவது கொஞ்சம் காசு கிடைச்சிருக்குமில்ல.. ம்ம்ம்.. நாம சொல்றதை என்னைக்கு கேட்டிருக்காங்க.. :)))

புது ஃபோன் வாங்கி குடுத்தப்பவே, அடுத்த 2 வருஷத்துக்கு உனக்கு வேற ஃபோன் வாங்கி தர மாட்டேன்னு சொல்லி தான் வாங்கி குடுத்தாரு அப்பா. ஹிஹி.. இந்த டயலாக்க எத்தனை வாட்டி நாம கேட்டிருக்கோம். வழக்கம் போல சரி சரின்னு மண்டைய ஆட்டிட்டு வந்துட்டேன். அது ஆச்சுங்க ஒரு வருஷத்துக்கு மேல. இன்னிக்கு காலைல எழுந்து ஆபீஸ் கிளம்பிட்டிருக்கறப்போ அப்பா கைல புது ஃபோன் ஒன்னு வைச்சு நோண்டிட்டிருந்தாரு. சும்மா இல்லாம என்ன பாத்து இந்த ஃபோன் வேணா எடுத்துக்கறியான்னு கேட்க, குடுங்க யூஸ் பண்ணி பாக்கறேன். புடிச்சிருந்தா எடுத்துக்கறேன்னு சொன்னேன். உடனே அப்பா, "அதானே. ஏதாவது புதுசுனா உடனே வேணும்னு சொல்வியே" னு டயலாக் விட்டாரு.. அவ்வ்வ்வ்வ்.. சும்மா போனவள கூப்ட்டு வைச்சு நீங்க தானே கேட்டீங்கனு சொல்லிட்டு ஃபோன வாங்கி பாத்தேன். இது ரொம்ப பெருசா இருக்கே. என் ஃபோனே இதை விட நல்லா இருக்கு. எனக்கு வேணாம்னு சொன்னேன். உடனே எங்கப்பா இதுல டீவி எல்லாம் இருக்குனு உசுப்பேத்தினாரு. அடடா, நாம நல்லவங்களா இருக்கனும்னு நினைச்சாலும் விட மாட்டாங்க போல இருக்கேனு நினைச்சிக்கிட்டு, சரி குடுங்கனு ஃபோன வாங்கியாச்சு.

சும்மா சொல்லகூடாதுங்க.. ஃபோன் நிஜமாவே சூப்பராத்தான் இருக்கு. Wide screen, super clarityனு நான் basic-அ எதிர்பாக்கற functionalities எல்லாமே இருக்கு. அப்புறம் என்ன? இனி இது என் ஃபோன் தான் :) இந்த புது ஃபோன் வாங்கினா எப்பவுமே எனக்கு ஒரு கெட்ட பழக்கம் அதுல யாரு முதல் கால் பண்றாங்கன்றத பார்ப்பேன். ஃபர்ஸ்ட் எப்பவுமே ஸ்பெஷல் இல்லையா. கண்டிப்பா outgoing-ல் முதல் கால் என் நண்பனுக்கு தான். அதுல எப்பவுமே மாற்றம் இருந்ததில்லை. ஆனா incoming நானா யாரையும் கேட்டு பண்ண சொல்ல மாட்டேன். அதுவா வரட்டும்.. யாருதுனு பாக்கலாம்னு விட்ருவேன். காலைல ஆபீஸ் வந்ததுல இருந்து எல்லாரும் கலாட்டா. மாத்தி மாத்தி கால் அடிச்சிட்டு எடுக்க சொல்லி. இதெல்லாம் செல்லாது. நான் எடுக்கமாட்டேன்னு சொல்லிட்டிருக்கேன். எப்படியும் மிஸ்டு கால்ல நாங்க தானே ஃபர்ஸ்டுனு டயலாக் விட்டுட்டிருக்காங்க. இதெல்லாம் செல்லாது. நான் அட்டெண்ட் பண்ற கால் தான் கணக்குனு சொல்லிட்டேன் :)))) ஹிஹி..

சரி.. இவ்ளோ தூரம் வந்துட்டு புது ஃபோன பாக்காம போனா எப்படி?? இது தாங்க என் புது ஃபோன் :))

42 Responses
  1. k4karthik Says:

    firstuuuuuuuuuuuuuuuu


  2. k4karthik Says:

    embuttu naalu achchu..


  3. k4karthik Says:

    appalika padichitu vandhu kummuran..


  4. pone sooper
    adhutha varusam enakku thandudunga

    udanchaalum paravala.. naan vaangikiren!!


  5. tharum podhu apdiye ungalukku therinja en vayasu ulla ponnungaloada nos thaanga!!


  6. :)

    ஏம்மாத்தம்?

    கால் வந்துச்சா இல்லையா?


  7. அவ்வ்வ்வ்வ்..இதுக்கும் மீ த பர்ஸ்ட்டு எல்லாம் உண்டா!! ;)


  8. Lancelot Says:

    @ akka

    yaar antha nanban....and yaar call kaaga wait panningaa unmaya sollunga...illati naanum karthikum tea kudippu poraatam nadathuvom...


  9. Anonymous Says:

    Nice mobile...

    Enna Model nga phone..? model no sollama vitutengalae...


  10. புது மொபைல் நல்லாத்தான் இருக்கு.

    சரி சரி... நம்பர் சொல்லுங்க. முதல் கால் துபாயிலிருந்து நானே கூப்பிடறேன்.


  11. gayathri Says:

    [அதுவாத்தான் உடைஞ்சுதுனு சொன்னா நீங்க நம்பித்தான் ஆகனும் :))

    ok nampitom pa


  12. gils Says:

    wide joom..good clarity..hmm..cordless fonela kannadi poatu oora emathreengala :D


  13. gils Says:

    neenga pesara pechuku ungaluku varushathuku ila..maasathuku oru fone thevai padum..tamizhnaatla paathi service provider pozhaikarathay ungalalaa thaanunga :D


  14. G3 Says:

    @கே4கே,

    ரொம்ப நாள் கழிச்சு ஃபர்ஸ்ட்டு வந்திருக்கீங்க போல. பொருமையா வந்து படிச்சிட்டு கமெண்ட்டுங்கோ :)


  15. G3 Says:

    @கார்த்திக்,

    என்னடா புது ஐடில எல்லாம் வர்ற??

    //adhutha varusam enakku thandudunga//
    பாக்கலாம் :))

    //tharum podhu apdiye ungalukku therinja en vayasu ulla ponnungaloada nos thaanga!!//
    எல்லாம் பையனுங்க நம்பரா போட்டு தர்றேன் :))))


  16. G3 Says:

    @சிவா,

    //ஏம்மாத்தம்?//
    ?? என்ன கேக்கறீங்கன்னு புரியலை

    //கால் வந்துச்சா இல்லையா?//
    வந்தாச்சு வந்தாச்சு... நாளைக்கு லஞ்ச்சுக்கு ட்ரீட் குடுக்கறேன். இடம் நேரம் எல்லாம் டிசைட் பண்ணி சொல்லுங்கனு இப்போ தான் ஒரு நல்லவர் கால் பண்ணாரு :)) ஆரம்பமே அசத்தலா இருக்குல்ல ;))))


  17. G3 Says:

    @கோபி,

    எல்லாத்துக்குமே உண்டு :)))


  18. G3 Says:

    @Lancelot,

    //yaar antha nanban//
    யாருன்னு சொன்னா உனக்கு தெரியாதே.. he is not a blogger :)))

    //yaar call kaaga wait panningaa unmaya sollunga//
    :))))))))))))))))))))))

    //illati naanum karthikum tea kudippu poraatam nadathuvom...//
    இப்போ நான் சொல்லலனா நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கைல டீயே குடிக்க மாட்டீங்களாக்கும் :P


  19. G3 Says:

    @Alwaysdrmz,

    Welcome to my blog :) Model LG HB620T


  20. G3 Says:

    @கணினி தேசம்,

    //சரி சரி... நம்பர் சொல்லுங்க. முதல் கால் துபாயிலிருந்து நானே கூப்பிடறேன்.//
    0-9 க்குள்ள இருக்கற நம்பர் தான். Permutation and combination போட்டு கண்டுபிடிங்க பாப்போம் :)))


  21. G3 Says:

    @காயத்ரி,

    நீ ரொம்ப நல்லவ :))


  22. G3 Says:

    @கில்ஸ்,

    y the u pogais?? :P


  23. k4karthik Says:

    //அடிக்கடி புது மொபைல் மாத்தறது//

    பெரிய ஆளுங்க நீங்க.. நாங்க எல்லாம் பழைய போனை தான் மாத்துவோம்..


  24. k4karthik Says:

    //உடைஞ்ச ஃபோன் flip flop மாடல்ங்கறதால கடைல அதை வாங்கிக்க மாட்டேன்னு சொல்லிட்டான்.//

    ஒருவேளை நீங்க tip top'a போயிருந்த வாங்கிருபானோ என்னவோ..


  25. k4karthik Says:

    //Wide screen, super clarityனு நான் basic-அ எதிர்பாக்கற functionalities எல்லாமே இருக்கு.//

    இருந்தாலும் உங்க எதிர்பார்ப்பு கொஞ்சம் கம்மி தான்.. :P


  26. Divyapriya Says:

    super phone ஆ தான் இருக்கு...நடத்துங்க...நான் phone மாத்தக் கூடாதுன்னு நினைச்சாலும், phone அதுவா கால வாரி விட்ருது :(


  27. //
    k4karthik said...

    firstuuuuuuuuuuuuuuuu
    //
    ரைட் விடு :)


  28. //
    உடனே எங்கப்பா இதுல டீவி எல்லாம் இருக்குனு உசுப்பேத்தினாரு.
    //
    ஏற்கன்வே ஆபிஸ்லே சண்டிவி பாக்குற கோஷ்டி தானே நீங்க


  29. //
    நாம சொல்றதை என்னைக்கு கேட்டிருக்காங்க.. :)))
    //
    ”யாரு” மிஸ்ஸிங் :)


  30. ரவுண்டா ஒரு பெரிய ஸ்மைல் :)))))))))))))))))))))
    :)))))))))))))))
    :))))))))))))))))))))))))))))
    :)))))))))
    :)))))))))))))))))))
    :)))))))))))))))))))))))


  31. KK Says:

    Nagai Siva: கால் வந்துச்சா இல்லையா?

    Gils: neenga pesara pechuku ungaluku varushathuku ila..maasathuku oru fone thevai padum..

    Ellathukkum oru repeatu...


  32. KK Says:

    // k4karthik said...
    firstuuuuuuuuuuuuuuuu//

    aha... vada poche... (vadivel style'a)


  33. ////ஏம்மாத்தம்?//
    ?? என்ன கேக்கறீங்கன்னு புரியலை//

    அட ஆண்டவா!

    என்ன விலை?

    //வந்தாச்சு வந்தாச்சு... நாளைக்கு லஞ்ச்சுக்கு ட்ரீட் குடுக்கறேன். இடம் நேரம் எல்லாம் டிசைட் பண்ணி சொல்லுங்கனு இப்போ தான் ஒரு நல்லவர் கால் பண்ணாரு :)) ஆரம்பமே அசத்தலா இருக்குல்ல ;))))//

    உங்களுக்குக்கேனே வருவாங்க போல...

    ;)


  34. G3 Says:

    @கே4கே,

    இந்த பேச்செல்லாம் இருக்கட்டும்.. சொன்ன மாதிரி சீக்கிரம் நீங்க ஒரு புது ஃபோன் வாங்கி குடுங்க :P


  35. G3 Says:

    @திவ்யப்ரியா,

    ஹிஹி.. அது காலை வார்ற காலம் வரை நான் அதை யூஸ் பண்றதில்லை :))


  36. G3 Says:

    @ஆளவந்தான்,

    சன் டீவியா.. சீ சீ.. அதை நாங்க வீட்லயே பாக்கமாட்டோம்.. இதை ஆபீஸ் போய் வேற பாக்கனுமாக்கும் :P

    ஹலோ.. ரவுண்டா ஒரு ஸ்மைல்னு சொல்லிட்டு நிறைய ஸ்மைல் போட்டிருக்கீங்க.. அதுலயும் ஓன்னு கூட ரவுண்டா இல்ல.. என்ன கொடுமை ஆளவந்தான் இது :P


  37. G3 Says:

    @சென்ஷி,

    :))))))))))))))) [நாங்களும் சிரிப்போமில்ல :P]


  38. G3 Says:

    @கேகே,

    ரிப்பீட்டே போட்டுட்டு ஓடியிருக்கீங்க.. நிஜமா போஸ்ட்ட படிச்சீங்களா??

    நீங்க இங்க வடைய விட்டதுக்கு பழி வாங்கிட்டீங்க இல்ல.. இருக்கட்டும் பாத்துக்கறேன் :P


  39. G3 Says:

    @சிவா,

    ஹிஹி.. விலையா? எவனுக்கு தெரியும்.. இது ஓசி.யா வந்தது :)))

    //உங்களுக்குக்கேனே வருவாங்க போல...//
    :)))))))))))))))))))))))))))))))))))))))))


  40. kanagu Says:

    phone super ka.... :)


  41. ////ஏம்மாத்தம்?//
    ?? என்ன கேக்கறீங்கன்னு புரியலை//

    அட ஆண்டவா!
    //

    :)

    அது "ஏம்மாத்தம் " இல்லை "எம்மாத்தம்.."

    அட ஆண்டவா ?!! இந்த புலி தமிழ் ல என்னோட வீக் ஆ இருக்கு.. கொஞ்சம் சொல்லிக்கொடு. !!


  42. Anonymous Says:

    ஜி3 புதுசா Apple® iPhone™ 3G வந்திருக்கு :-))