வாழ்த்தலாம் வாங்க :)

தமிழ்மண விருதுகள் 2008-ல் வெற்றி பெற்ற எல்லாருக்கும் வாழ்த்துக்கள். முக்கியமா நண்பர்கள் ராம், குசும்பன், நிலா செல்லம் & கே.ஆர்.எஸ் க்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் :)



பி.கு. : போன புதிர் பதிவுக்கான பதில்கள் அந்த பதிவுலயே அப்டேட் பண்ணியாச்சு :)

புதிரும் ஆதரவும்...

மத்தவங்க எல்லாம் தொடர் எழுதறாங்கன்னு நீயும் தொடர் எழுதறியே.. எல்லாரும் புதிர் போடறாங்களே நீ ஏன் போடக்கூடாதுன்னு என்னை பாத்து ஜீவ்ஸ் அண்ணாச்சி ஒரு கேள்வி கேட்டுட்டார். போஸ்ட் போட மேட்டர் இல்லாம இருக்கறப்போ இப்படி எல்லாம் லீட் குடுத்தா சும்மா இருப்போமா நாம.. போட்டுட்டோமில்ல புதிரையும்..

ஒண்ணும் பெரிய வேலையெல்லாம் இல்லை மக்கா.. கீழ இருக்கற எழுத்துக்களை சேர்த்து அது என்ன வார்த்தைன்னு கண்டுபிடிக்கனும். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு க்ளூ உண்டு :)

எடுத்துக்காட்டு : கழைக்காத்தாடு

க்ளூ : முள் நிறைந்தது

விடை : கத்தாழைக்காடு

இப்போ புதிர் :

1. கிமிந்க்யபைழிலம்த

க்ளூ : பழமை சார்ந்தது

விடை : பைந்தமிழிலக்கியம்

2. தவறிந்ழவின்அ

க்ளூ : சீச்சீ.. புத்தி கெட்டவன்

விடை : அறிவிழந்தவன்

3. ழுணிக்கெமத்டதா

க்ளூ : ஓலை கொண்டுவா

விடை : மடக்கெழுத்தாணி

4. கதிலபநம்ந்கம்க்

க்ளூ : தமிழ் இலக்கியம்

விடை : நந்திக்கலம்பகம்

5. தவத்ன்தபவிரி

க்ளூ : அச்சச்சோ பாவம்

விடை : பரிதவித்தவன்

*********************************

புதிர் போட்டாச்சு. அது என்ன ஆதரவு அப்படின்னு கேக்கறீங்களா? நம்ம ராம் அண்ணாச்சி இன்னிக்கு வந்து எப்பவுமே உங்க பாசமலர் ஜிஸ்டர்ஸ்க்கே சப்போர்ட் பண்றீங்களே.. எப்பவாவது இந்த அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணனும்னு நினைச்சாவது இருக்கீங்களான்னு கேட்டுட்டாரு.. இத்தனை நாளும் எங்கண்ணன் சிங்கம் மாதிரி சிங்கிளாவே சமாளிப்பாருன்னு நினைச்சேன். இப்படி தங்கச்சி கிட்ட வாயை திறந்து கேட்டப்புறம் சும்மா இருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க. ஆகையால் மக்களுக்கு தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் இன்று முதல் என் முழு சப்போர்ட் என் பாசமலர் அண்ணன் ராம் அவர்களுக்கு மட்டுமே :))

பி.கு. : பாசமலர் ஜிஸ்டர்ஸ் துர்கா & ஷாலினி இதனால நான் உங்களுக்கு எதிரணில சேர்ந்துட்டேன்னு தப்பா நினைக்கப்புடாது.. ராம் அண்ணாச்சியும் நம்ம கோஷ்டில சேந்துட்டாரு.. ஆக அவர் இனி உங்களை கலாய்க்கமாட்டாரு :)

*********************************
எல்லா புதிருக்கும் சரியா பதில் சொன்ன ஆளவந்தான், கப்பி, Lancelot, நிஜமா நல்லவன் எல்லாருக்கும் வாழ்த்துக்கள் :)))

சில புதிர்களுக்கு மட்டும் பதில் சொன்ன மை பிரண்ட், கில்ஸ் மற்றும் தினேஷ் க்கும், ஜி-டாக்ல் பதில் சொன்ன ராம் அண்ணாச்சி க்கும் பாராட்டுக்கள் :)))

மேட்டர் கேளு மச்சி - II

பல பழக்கவழக்கங்கள் ஏன் செய்யறோம்னு தெரியாட்டியும் இன்னிக்கும் செஞ்சிட்டு தான் இருக்கோம். அந்த பழக்கம் ஏன் வந்தது எப்படி வந்ததுன்னு பலருக்கு தெரிவதில்லை. அப்படி இருக்கறப்போ யாராவது அதைப் பத்தி சொன்னா கேட்டுக்க ஆர்வமா இருக்கும். அப்படி தான் சமீபத்தில் Frozen thoughts அப்படிங்கற புத்தகத்துல கடவுளுக்கு தலைமுடியை காணிக்கையா குடுக்கறதை பத்தி படிச்சேன். அதுல குடுத்திருந்த விளக்கம் சரியானதாவும் இருக்கலாம் தவறானதாவும் இருக்கலாம். ஆனா அதை படிச்சதும் எனக்குள் தோன்றிய எண்ணம் "எப்படி எல்லாம் யோசிக்கறாங்க" ன்னு தான். அதுல சொல்லி இருந்த விஷயம் இது தான்.

ஏன் மக்கள் தங்களோட தலைமுடியை கடவுளுக்கு காணிக்கையா குடுக்கறாங்க? இதை நாம ரெண்டு விதமா பார்க்கலாம்.

1. தலைமுடி என்பது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, ஒரு பெருமை சேர்க்கும் விஷயம். அப்படி பெருமை சேர்க்கும் ஒரு விஷயத்தை கடவுளுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் உங்களுடைய தற்பெருமையை, ஆணவத்தை, அகந்தையை கடவுளிடம் அர்ப்பணிப்பது போலாகிறது.

2. முன்பு, மன்னர்கள் ஆண்ட காலங்களில், போரின் முடிவில், தோல்வியுற்ற மன்னர் தன் கிரீடத்தை வெற்றி பெற்ற மன்னரின் காலடியில வைப்பார்கள், தான் தோல்வியுற்று சரணடைந்ததற்கு சாட்சியாக. இங்கு சரணடைதல் என்பதை வேறு ஒரு கண்ணோட்டத்திலும் பார்க்கலாம். "இதுவரை என்னுடைய மக்களின் நலன் என் பொறுப்பில் இருந்தது. இப்பொழுது என் நாடு உன்னுடையதாகி விட்டது. என்னுடைய மக்களின் நலனை உன் பொறுப்பில் விடுகிறேன். அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்" என்று கூறுவதாகவும் சொல்லலாம். இன்றைய மனிதர்கள் அவர்கள் தலைமுடியை கிரீடமாக கருதி அதை ஆண்டவனிடம் சமர்ப்பிப்பதன் மூலம், நான் என் வாழ்க்கையை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன். இனி என்னை நீயே வழிநடத்துவாயாக என்று கூறுவது போலாகும்.

அதில் இன்னொரு விஷயமும் சொல்லியிருந்தாங்க. "Crossing the road" விளையாட்டு தான் அது. ஒரு தந்தையும் குழந்தையும் சாலையை கடக்கையில், குழந்தை தந்தையின் கைகளை பற்றிக்கொண்டு சிரித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்கும். ஆனால் தந்தையோ சில அடிகள் முன்னாடியும், சில அடிகள் பின்னாடியும், கொஞ்சம் பக்கவாட்டிலும், சில நேரங்கள் நின்றும் சில நேரங்கள் ஓடியும் சாலையை குழந்தையுடன் கடந்து முடிப்பார். சாலையை கடக்கும் வரை குழந்தை சந்தோஷத்துடன் தந்தையுடன் இங்கும் அங்கும் ஓடுவதை ரசித்துக்கொண்டிருந்தது. ஏனெனில் அந்த குழந்தையை பொறுத்தவரை சாலையை கடப்பது என்பது ஒரு விளையாட்டு. சாலையை கடக்க வேண்டிய பொறுப்பை ஏற்கனவே தன் தந்தையின் கையில் ஒப்படைத்துவிட்டது அந்த குழந்தை. அந்த குழந்தையின் வேலை சாலையை கடக்கும் வரை தந்தையின் கையை பத்திரமாக பிடித்திருக்க வேண்டியது மட்டுமே. அதற்கு பெயர்தான் சரணடைதல். நீங்கள் பிடித்திருக்கும் கையை நம்பவேண்டும். நிச்சயம் நீங்கள் சாலையின் மறுபக்கத்தில் சேர்க்கப்படுவீர்கள் என்று முழுமையாக நம்பவேண்டும்.

என்றென்றும்... - II

முதல் பகுதி

இன்று
"என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை"

பாடல் ஆரம்பித்ததுமே எதிர்முனையில் அலைபேசி எடுக்கப்பட்டது.

"வணக்கம்பா. நான் வர்ஷினி ஃப்ரெண்ட் சாரு பேசறேன்பா"
"எப்படிம்மா இருக்க?"
"நல்லா இருக்கேன்பா. நீங்க எப்படி இருக்கீங்க?"
"நானும் நல்லா இருக்கேன் மா"
"வேற ஒரு வேலையா வீட்டுப்பக்கம் வந்தேன். அப்படியே வர்ஷினிய பாத்துட்டு போகலாம்னு நினைச்சேன். அவ நம்பர் எதுவும் என்கிட்ட இல்லை. உங்க நம்பர் தான் இருந்தது. அதான் அவ வீட்ல இருக்காளான்னு கேக்கலாம்னு.. " அவள் தயக்கத்துடன் கேட்க
"நான் வெளியில இருக்கேன்மா. அவ இப்ப தான் அம்மாக்கு உடம்பு சரியில்லைனு நாலு நாள் அம்மா கூட இருக்கலாம்னு வந்திருக்கா. அவ நம்பர் சொல்றேன் குறிச்சிக்கறியாமா?"
"சரிப்பா"

அவர் கூறிய எண்ணை குறித்துக்கொண்டு அவருக்கு நன்றி கூறிவிட்டு அலைப்பேசியில் வர்ஷினியின் எண்ணை அழைத்தாள்.

"ஹலோ.."
"ஹலோ... "
"வர்ஷினி?? "
"யெஸ்... "
"நான் சாரு பேசறேன்..."
"ஹே.. எப்படி இருக்க? செம சர்ப்ரைஸ்"
"நான் எப்படி இருக்கேன்னு நேர்ல வந்ததும் நீயே பாத்துக்கோ.. இப்போ உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி கிட்ட இருக்கேன். இங்க எந்த சந்துல left turn பண்ணனும்னு மறந்து போச்சு. வழி சொல்லேன்."
"அங்க இருந்து கொஞ்சம் முன்னாடி வந்தா first left turn. சந்துக்கு எதிர்க்க பஸ் ஸ்டாண்ட் இருக்கும்."
"சரி. ஒரு 5 நிமிஷத்துல வந்துடறேன்"

சாரு வர்ஷினியின் வீட்டை அடைகையில், அவள் வரவை எதிர்பார்த்து வர்ஷினி வாசலிலேயே நின்றிருந்தாள். வர்ஷினியை பார்த்ததும் சாரு, "ஹே, நீ ரொம்ப குண்டாயிட்ட... " என்று கண்சிமிட்டி கூற வர்ஷினியும் அந்த விளம்பரத்தில் வரும் பெண் போல் சிரித்துக்கொண்டே "I dont care" என்றாள். (கல்லூரி நாட்களில் இந்த கேள்வியை வர்ஷினி சாருவை பார்த்து கேட்க சாரு பதில் சொல்வாள்) ஆனால் இன்று நிலைமை தலைகீழாய் மாறி நிற்க இருவருமே சிரித்துவிட்டனர்.

பேசிக்கொண்டே உள்ளே சென்ற சாரு, "என்ன ஆச்சுடீ அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனு அப்பா சொன்னாரு?" என்று கேட்க
"BP ஜாஸ்தியாயிடுச்சு. கொஞ்ச நேரம் கூட அவங்களால நிக்க முடியலை. அதான் ஒரு நாளு நாள் வந்து பாத்துக்கலாம்னு வந்தேன்"
"என்னது.. வந்தியா? ஏன் நீ எங்க இருக்க அப்போ?"
"திட்டாதடி.. உன்னோட contact நம்பர் எதுவும் என்கிட்ட இல்லை.. வேற யார் மூலமா உன்னை contact பண்றதுன்னும் தெரியலை.. நம்ம காலேஜ் மக்கள் யாரோடவும் டச் இல்லே.. அதான் யாருக்கும் சொல்ல முடியலை.. எனக்கு போன செப்டம்பர் கல்யாணம் ஆயிடுச்சு"
தனக்குள் தோன்றிய் உணர்ச்சி என்னவென்று அவள் உணர்வதற்குமுன் அவள் இதழ்கள் தானாய் கேட்டன "வித் லிங்கராஜ்?"

அன்று

"ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே
நீ என்னைமட்டும் காதல் பண்ணு"

கல்லூரி கேண்டீனில் ஓடிக்கொண்டிருந்த பாடல் அவர்கள் அமர்ந்திருந்த மைதானம் வரை கேடக், நித்தி ஒரு புன்னகையுடன் "ஆதர்ஷுக்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்கும். அதுவும் கடைசில ஃபாஸ்ட் பீட்ல வர்ற "லல்லாலா லாலாலா... " வரும்போது தானா ஆட ஆரம்பிச்சிடுவான்"

ஆதர்ஷ் அவள் அக்காவின் இரண்டு வயது குழந்தை என்பதை சாரு அறிவாள்.

"எப்படி இருக்கான் குட்டி வாலு?"
"எப்பவும் போல சூப்பரா இருக்கான். வீட்டுக்கு தெரியாம பாக்க போனதால ரொம்ப நேரம் அவனோட இருக்க முடியலை" வருத்தத்துடன் கூறினாள் நித்தி
"என்னதான் சொல்றாங்க உங்க வீட்ல?"
"அவ எப்போ நம்மள விட அவ வீட்டுக்காரர் தான் முக்கியம்னு போனாளோ அதுக்கப்புறம் அவ இந்த வீட்டுப்பக்கம் வரக்கூடாதுங்கறார் அப்பா. நாங்களும் அவளை போய் பாக்ககூடாதாம்"
"இது என்னடீ கொடுமையா இருக்கு. உங்கக்கா அப்படி என்னடி பெரிய தப்பு பண்ணாங்க? உங்கப்பா தானே மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணி வைச்சாரு?"
"ஆமாம். ஆனா போன வருஷம் அப்பாவுக்கும் அவ மாமனாருக்கும் சண்டை வந்துது. அதனால அப்பா அந்த உறவே வேணாம். நீ வீட்டுக்கு வந்துடுன்னு கூப்பிட்டாரு. மாமாக்கும் அவளுக்கும் எந்த பிரச்சனையும் இல்லைங்கறப்போ அவ எப்படி அவர விட்டுட்டு வருவா? உடனே அப்பாவுக்கு கோவம். எங்களை விட உனக்கு அவங்க தானே முக்கியம். அப்போ இனி எங்களுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு சொல்லிட்டு வந்துட்டார். அதுக்கப்புறம் அக்கா எவ்ளோ சமாதானம் பண்ண முயற்சி பண்ணாலும் இறங்கி வர மாட்டேங்கறார்"
"ஆனாலும் இது வறட்டு பிடிவாதமா தான் தோனுது எனக்கு"
"ம்ம்.. நான் ஏதாவது இதைப்பத்தி பேச ஆரம்பிச்சா என்னை தான் திட்றாங்க. என் தங்கச்சி எப்பவும் அவங்களுக்கு சப்போர்ட் பண்றதால அவ தான் எங்க வீட்ல ராணி. அவ வைச்சது தான் சட்டம். முடிஞ்சவரைக்கும் என்னை மட்டம் தட்றது தான் அவ வேலை. வீட்ல இருக்கவே எரிச்சலா இருக்கு இப்ப எல்லாம்"
"கவலைப்படாத.. எத்தனை நாள் தான் உன் தங்கச்சி இப்படி இருக்க போறா? அதையும் தான் பாப்போமே.. "

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலே வர்ஷினி வர அவர்கள் அந்த டாபிக்கை அத்துடன் நிறுத்திக்கொண்டார்கள். வர்ஷினி வந்ததும் தன் பையில் இருந்த போட்டோ ஆல்பத்தை எடுத்து சாருவிடம் குடுத்தாள். என் school ஃப்ரெண்ட்ஸ் போட்டோ ஆல்பம். ரொம்ப நாளா கேட்டுட்டிருந்தியே.. ஒரு வழியா இன்னிக்கு கொண்டு வந்துட்டேன் என்று சொல்லி, புகைப்படத்தில் ஒவ்வொருவராய் காட்டி இது சுமா, இது சுரேஷ், இது சதீஷ் என்று சொல்லிக்கொண்டே வந்தவள், இது லிங்கராஜ் என்று சொல்லும்போது மட்டும் சாருவை பார்த்து கண்சிமிட்டினாள். இது எதுவும் அறியாத நித்தி புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

(தொடரும்..)

உயிரே என் உயிரே...

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஹோ ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே
நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னைப் பாரடி

இது வரை எங்கிருந்தாய்…..
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்

உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா
இன்னும் என்னை புரியலையா

நான் சிரித்து மகிழ்ந்து சிலிர்க்கும் வரத்தை நீ கொடுத்தாய்
நான் நினைத்து நினைத்து ரசிக்கும் கணத்தை நீ அளித்தாய்

எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்

(உயிரே என் உயிரே)

உன்னுடன் இருக்கையிலே…..
நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே
இதுவரை நானும் பார்த்த நிலவா
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா

உன்னுடன் நடக்கையிலே
என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள்
ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே

நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாசக் காற்றை மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்

நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னைப் பாரடி

(உயிரே என் உயிரே)




இந்த பாடலை, நாளை (19th Feb) பிறந்தநாள் கொண்டாடும் என் உயிர் தோழிக்கு (நோட் தி பாயிண்ட் தோழி தான்) டெடிக்கேட் செய்யறேன்.

எந்த பாடல் போடலாம்னு யோசிச்சப்போ மனதில் தோன்றிய சில பாடல் வரிகள்..

"தாமரை இல்லை நீர் நீ தானா
தனி ஒரு அன்றில் நீ தானா
புயல் தரும் தென்றல் நீ தானா
புதையல் நீ தானா"

"தாயாக நீதான் தலை கோத வந்தால்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்"

"வாழ்வின் திசை மாறும் பாதைகளும் மாறும்
நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே
சொந்தம் நூறு வரும் வந்து வந்து போகும்
என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே
உன் பாதம் போகும் பாதை மண்ணுக்கு சந்தோஷங்கள்
உன்னோடு ஓர் ஓர் நிமிஷம் உயிருக்கு ஆனந்தங்கள்"

அட.. எல்லா பாட்டையும் சொல்லிட்டு வாழ்த்து சொல்லாம போனா நல்லாவா இருக்கும்...


"நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!"

மேட்டர் கேளு மச்சி...

வழக்கம் போல நேத்து பதிவ போட்டுட்டு மக்கள் அடிச்சிட்டிருந்த கும்மிய வேடிக்கை பாத்துட்டிருந்தப்போ நண்பர் ஒருத்தர் போன் பண்ணாரு. நாளைக்கு ALMA Mater 14th Anniversaary ஃபங்க்ஷனுக்கு டிக்கெட் இருக்கு வர்றீங்களான்னு கேட்டாரு (உண்மையை சொல்லணும்னா அந்த அமைப்பு எதுக்குனு கூட எனக்கு தெரியாது. இதுக்கு முன்னாடி ஒரு முறை என் தோழி அவங்க நடத்திய விழாவுக்கு போகணும். கூட வர்றீங்களான்னு என்னை கேட்டா. சரிடி போலாம்னு சொன்னேன். ஆனா அப்போ எங்களுக்கு டிக்கெட் கிடைக்கலை. அதுக்கப்புறம் அதைப்பத்தி நானும் சுத்தமா மறந்துட்டேன்). நேத்து நண்பர் கூப்பிட்டப்ப ஏனோ போகலாம்ணு தோண, சரி வர்றேன்னு அவர்கிட்ட சொல்லிட்டேன்.

காலைல 10 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம். 9.30 க்கு கரெக்டா வந்துடுங்கனு சொல்லியிருந்தார். நாமதான் ரொம்ப சமத்தாச்சே. 9.25 க்கெல்லாம் அங்க போயாச்சு. நண்பர் வரும் வரை அங்க வர்ற மக்களை எல்லாம் நல்லா வேடிக்கை பாத்துட்டிருந்தேன். கூட்டம் நல்லா கலர்ஃபுல்லா தான் இருந்துது :) கொஞ்ச நேரத்துல நண்பர் அவரோட நண்பர்கள் சிலரோட வர ஒரு குட்டி அறிமுகப்படலம் முடிச்சிட்டு உள்ள போனோம். வாசல்ல நுழைஞ்சதுல இருந்து பாக்கறவங்க எல்லாரும் Happy Morning-னு சொல்லிட்டிருந்தாங்க. முன்பின் அறிமுகமில்லாதவங்களும் புன்னகையோட வாழ்த்துவதை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துது. அரங்கம் முழுக்க மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. கடைசியில வந்த சிலருக்கு இடம் இல்லாம இருந்தப்போ விருந்தாளிகளை நிக்க வைக்கறது சரியில்லை. ALMAnites நாம தான் நம்ம வீட்டு விசேஷத்துல அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்னு திரு. ரங்கராஜன் (ALMA Mater-ஐ உருவாக்கியவர்) அவர்கள் சொல்ல உடனே பலர் எழுந்து வந்திருந்தவங்களுக்கு இடம் குடுத்து அவங்க அங்க இருந்த படிக்கட்டுகள்ல உட்கார்ந்தாங்க. பார்க்கவே ஆச்சர்யமா இருந்த்து.

சரியா 10 மணிக்கு வாசற்கதவுகளை எல்லாம் மூடிட்டாங்க. லேட்டா வர்றவங்களை அனுமதிக்க மாட்டாங்களாம். அடுத்த 2 மணி நேரம் திரு.ரங்கராஜன் தான் பேசினார். சரியா 10 மணிக்கு ஆரம்பிச்சவர் அதே மாதிரி சரியா 12 மணிக்கு முடிச்சிட்டார். ஒரு நிமிஷம் கூட முன்ன பின்ன கிடையாது :) நிறைய விஷயங்களை உதாரணங்களோடும் நகைச்சுவையோடும் தெளிவா பேசினார். ஒரு நிமிஷம் கூட வேறு எந்த டைவர்ஷனும் இல்லாம் அவர் பேச்சை மட்டுமே கேட்கவைத்தார். இந்த நிகழ்ச்சி எதைப்பத்தின்னு எதுவுமே தெரியாதுங்கறதால, எந்த ஒரு எதிர்பார்ப்பும இல்லாம அவருடைய பேச்சை கேட்டேன். அதனாலயோ என்னவோ, அவர் சொன்ன விஷயங்கள் எனக்கு பிடிச்சிருந்த்து. அவர் சொன்னதின் சாராம்சம்

1. Face the situation - எதையும் கண்டு பயந்து ஓடாதீர்கள். தைரியமாய் சூழ்நிலையை சமாளியுங்கள். அவர் இந்த அமைப்பை துவங்க காரணமாய் இருந்தது அவருக்கு நெருங்கிய ஒருவரின் மரணம் தான். நன்றாய் படித்து நல்ல ஒரு வேலையில் இருப்பவர்களும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க தற்கொலை முயற்சியை நாடுகிறார்கள். நம் கல்வித்திட்டம் நம் மூளைக்கு மட்டுமே பாடங்கள் சொல்லி தருகிறது. ஏன் வாழ்க்கையை சந்திக்க அதில் வரும் பிரச்சனைகளை எதிர்த்து போராட சொல்லித்தருவதில்லை? அதை நாம் தான் அன்றாட வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டும். தப்பித்து ஓடுதல் என்றுமே எதற்குமே தீர்வாகாது.

2. Never give up - என்றும் எந்த ஒரு சூழ்நிலையிலும் இது என்னால் முடியாது என்று விட்டுக்கொடுக்காதீர்கள். தோல்வியடையும் ஒவ்வொருவரும் தான் வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருந்தோம் என்பதை உணருவதில்லை. உங்களால் முடியுமா என்ற சந்தேகம் வந்தால் அந்த விஷயத்தை ஆரம்பிக்காமலே விட்டுவிடுங்கள். ஆனால் ஆரம்பித்த பிறகு எக்காரணத்தை கொண்டும் அந்த விஷயத்தை முடிக்காமல் விடாதீர்கள்.

3. Waking up & Getting up - இது நம்மில் பலருக்கும் பொருந்தும் ஒரு விஷயம். விழிப்பு வந்தப்புறமும் இன்னும் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்னு எத்தனை பேர் லேட்டா எழுந்துக்கறோம். விழித்துக்கொள்வதற்கும் எழுந்துகொள்வதற்குமான இடைவெளி, நீங்கள் செய்யும் செயல்களை தள்ளிப்போடும் குனாதிசயத்துக்கான வெளிப்பாடு தான். எந்த ஒரு விஷயத்தையும் கடைசி நிமிடம் வரை தள்ளிப்போடுவீர்கள். அப்படி கடைசி நிமிடத்தில் செயல்படுத்துகையில் அந்த செயலை முடித்ததும் அப்பாடா முடித்துவிட்டோம் என்ற நிம்மதி மட்டுமே இருக்கும். அந்த செயலை முழுமையாக செய்தோம் என்ற திருப்தி இருக்காது. முடிந்தவரை இந்த இடைவெளியை குறைத்து பாருங்கள். ஒரு 21 நாட்கள் தொடர்ந்து விழிப்பு வந்தவுடன் எழுந்து உங்கள் நாளை துவங்கிப்பாருங்கள். நீங்கள் விழிக்கும் நேரத்தை உங்கள் விருப்பத்திற்கு முடிவு செய்துகொள்ளலாம்.

4. Acceptance - நம்மை சுற்றி நடப்பவைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம். அதை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் நஷ்டம் நம்மை சுற்றி இருப்பவர்க்கு அல்ல. நமக்கு தான் என்பதை புரிந்துகொள்ளுதல் அவசியம். உங்கள் அருகில் இருப்பவர் 24 மணி நேரமும் குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்று நீங்கள் எரிச்சல்படுவதால் நஷ்டம் யாருக்கு என்பதை உணருங்கள். உங்கள் எரிச்சல் அவரை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை.

இன்னும் அவர் கூறிய உதாரணங்கள் பற்றியும் கூற ஆசைதான் என்றாலும் பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

என்றென்றும்... - I

இன்று

"மனசுக்குள்ளே காதல் சிரிக்குது
மழையும் இல்லை வெயிலும் இல்லை
அப்புறம் எப்படி வானவில் வந்தது"

அலறிய அலைப்பேசியை எடுத்தாள் சாரு. அவள் தோழி மதுமிதாவின் வீட்டிற்கு செல்வதற்கான வழியை விசாரித்துக் கொண்டு அலைப்பேசியை அதன் உறையில் வைத்தாள். ஓரளவு தெரிந்த இடம்தான் என்பதால் அதிகம் சிரமப்படாமல் மதுவின் வீட்டை சென்றடைந்தாள். தோழிகள் இருவர் கூடினால் சொல்லவும் வேண்டுமா? நண்பர்கள் பற்றிய அரட்டையில் துவங்கி இன்றைய திரைப்படங்கள் வரை எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தனர். இடையிடையே மதுவின் அம்மாவும் உரையாடலில் கலந்து கொள்ள நேரம் சென்றதே தெரியவில்லை இருவருக்கும். சிறிது நேரம் கழித்து கடிகாரம் பார்த்த பொழுது தான் சாரு நேரமாகிவிட்டதை உணர்ந்தாள். மதுவிடமும் அவள் தாயாரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

மதுவின் வீட்டிலிருந்து வருகையில் தான் சாருவுக்குள் அந்த எண்ணம் தோண்றியது. அவள் கல்லூரித் தோழி வர்ஷினியின் வீடும் அங்கு தான். இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு பல வருடங்கள் ஆகியிருந்தன. இன்று அவள் வீட்டிற்கு சென்று பார்த்தால் என்ன என்று யோசித்தாள். ஆனால் வர்ஷினி வீட்டிற்கு செல்லும் வழி அவளுக்கு நினைவில் இல்லை. சரி, அவளிடமே முகவரி கேட்டுக்கொள்வோம் என்று அலைப்பேசி எடுத்து வர்ஷினியின் எண்ணை தேடினாள். ஆனால் அவள் துரதிர்ஷ்டமோ என்னவோ வர்ஷினியின் பெயரில் எந்த எண்ணும் அவள் அலைப்பேசியில் சேமிக்கப்படவில்லை. விதியை நொந்துகொண்டே வேறேதும் வழி கிடைக்குமா என்று அவள் அலைப்பேசியில் உள்ள எண்களை எல்லாம் நோட்டம் விடுகையில் தான் அந்த எண் அவள் கண்ணில் பட்டது.


அன்று

"ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்"

பாடலை பாடி முடித்ததும் அங்கு எழுந்த கைத்தட்டல் ஒலியில் நித்தி என்றழைக்கப்படும் நித்யா சற்று தடுமாறித்தான் போனாள். கல்லூரியின் இடைவேளைப் பொழுதில் சும்மா இல்லாமல் சாருவும் வர்ஷினியும் அவளை பாடச்சொல்லிக் கேட்க, மெல்லிய குரலில் ஆரம்பித்த நித்தி மெல்ல மெல்ல பாட்டில் ஒன்றி பாடிக்கொண்டிருந்தாள். அரட்டை அடித்துக்கொண்டிர்ந்த மொத்த வகுப்பும் அமைதியாகி அவள் பாட்டை ரசித்து கேட்க ஆரம்பித்தனர். அவள் பாடி முடித்த அடுத்த நொடி மக்கள் எல்லோரும் அவளை பாராட்டி மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தனர்.

"ஏண்டி, எவளாவது ஒருத்தி என் சத்தம் ஜாஸ்தியானதும் சொல்லி இருக்கலாம்ல. இப்படி அமைதியா இருந்து அநியாயமா போட்டு குடுத்துட்டீங்களே" என்று செல்லமாய் தோழிகளிடம் கடிந்து கொண்டாள் நித்தி

"நீ அவ்வளவு அழகா பாடிட்டிருக்கும்போது எப்படி தடுத்து நிறுத்தறதுன்னு தான் நாங்க எதுவும் சொல்ல்லை. ஆனா அப்படி செய்யாதது தப்பு தானோன்னு இப்போ தோணுது. பாரு இப்போ உனக்கு இவ்ளோ ரசிகர் கூட்டம் சேந்துட்டாங்க. இனி எங்களை எல்லாம் நீ கண்டுக்கவா போற.. " என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு வர்ஷினி கேட்க பொய் கோபத்துடன் நித்தி அவளை அடிக்க தயாரானாள்.


தினமும் கல்லூரி வகுப்புகள் துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே சாருவும் நித்தியும் கல்லூரிக்கு வந்து விடுவார்கள். சாருவிற்கு கூட்டமாக வரும் பேருந்தில் வருவது பிடிக்காது. சீக்கிரமாக வந்தால் காலியாக வரும் பேருந்தில் வந்துவிடலாம் என்று சீக்கிரம் வருவாள். நித்திக்கோ அவள் கல்லூரியில் இருக்கும் நேரங்கள் மட்டுமே சந்தோஷமான் நேரங்கள் என்பதால் முடிந்தவரை சீக்கிரம் வந்துவிடுவாள். பல நாட்கள் இவர்கள் வரும் நேரத்திற்கு வகுப்பறை கதவுகள் கூட திறக்கப்பட்டிருக்காது. அந்த சமயங்களில் கல்லூரி மைதானத்தில் இவர்கள் இருவரையும் காணலாம். அப்படி ஒரு நாள் மைதானத்தில் அமர்ந்திருக்கையில் தான் நித்தி அவளது குடும்பத்தை பற்றி கூற ஆரம்பித்தாள்..

(தொடரும்..)

பி.கு. 1: எல்லாரும் தொடர்கதையா போட்டு தாக்கும்போது நாம மட்டும் சும்மா இருந்தா எப்படி.. அதான் களத்துல இறங்கியாச்சு :)

பி.கு. 2: இதே மாதிரி ஒரு ஒரு வருஷத்துக்கு முன்னாடி நான் எழுதின கதை இங்கே

A for Appy, B for Birthday... K for Karthik :-)


எப்பவுமே ஸ்பெஷல் தான்..
ஆனாலும் இன்னிக்கு ரொம்ப ஸ்பெஷல்..
ஏன்னா...




As You Celebrate
Your Birthday

Wishing you a future that holds....
Joy in full measure,
memories to treasure,

laughter to cheer you,
faithful friends near you,

deep thoughts that inspire
and
all that your heart desires.


என்றென்றும் அன்புடன்,

உங்களுக்காக ஆர்டர் பண்ண ஸ்பெஷல் கேக்.. சீக்கிரம் வாங்க..
லேட்டா வந்துட்டு கேக் கிடைக்கலைன்னு சொல்லப்புடாது :)

P.S. : This is my 150th Post.. Dedicated to my sweet brother as his birthday gift :-)

மௌனம் பேசியதே - III


அரிதாய் தோன்றினாலும்
அளவற்ற மகிழ்ச்சி தரும்
வானவில் - நீ



இமைக்காமல் ரசிக்கும்
இன்பமாய் நனையும்
மழை - உன் புன்னகை



இதமாய் வீசும்
இதயத்தை வருடும்
தென்றல் - உன் அன்பு



எங்கும் நிறைந்திருக்கும்
என்றும் நிலைத்திருக்கும்
வானம் - நம் காதல்