இன்று
இடம் : நியூட்டன் நியு ஜெர்சியில் ஒரு இல்லத்தில்
வருடம் : 2007
பிரபாக்கர்க்கு பசித்தது. காரில் வரும் வழியில்தான் ஒரு ஸ்டார்பக்ஸ் காபி குடித்தார். ஆனாலும் அரை மணி நேரத்தில் வயிற்றில் யாரோ தாண்டவம் ஆடுவது போல் இருந்தது. பிரிட்ஜை திறந்து பார்த்தார். அதே வீனா போன கோக், பெப்சி பாட்டில்கள். ப்ரீசரில் பீட்சா இருந்தது. இப்பொழுது பார்த்து ஏதாவது காரமாக சாப்பிட வேணும் போல இருந்தது. ம்ம்ம்ம்... எப்படி தான் இந்த கன்றாவியை எல்லாம் இந்த அமெரிக்கர்கள் ஒவ்வொரு நாளும் சாப்பிடுகிறார்களோ?
அவர் மனைவி ஆனந்தி டெக்சாஸில் இருக்கும் அவள் தம்பிக்கு உடம்பு சுகமில்லை என்று இரண்டு நாட்களுக்கு முன் சென்றாள். இன்னும் இரண்டு நாட்கள் இருந்து நிலவரம் பார்த்து விட்டு வருவதாக சொன்னாள். இந்த நேரம் பார்த்து இவர்களின் ஒரே செல்ல மகள் லலிதா தனது 9 மாத குழந்தை ரவியுடன் வீட்டுக்கு வந்திருந்தாள். லலிதா டிவியில் Every body Loves Raymond பார்த்து கெக்கே பெக்கே என்று சிரித்து கொண்டிருந்தாள். விளம்பர இடைவேளையில் சேனல் மாற்றும் பொழுது சன் டிவி ஒரு நொடி தோன்றி மறைந்தது.
அன்று
இடம் : கோவில்பட்டி அரசினர் மேல் நிலைப்பள்ளி
வருடம் : 1972
பிரபாகர்க்கு தூக்கம் கண்ணை சொக்கியது. மதியம் அம்மா கொடுத்து விட்ட வத்த குழம்பும் பீன்ஸ் கறியும் ஒரு வெட்டு வெட்டி விட்டு உட்கார்ந்தால் அப்படி தான் இருக்கும். அம்மாவை சின்ன பாக்ஸ் வாங்க சொல்ல வேண்டும். அவன் அருகில் அமர்ந்திருக்கும் வேலு தூங்கியே விட்டான். இது அறிவியலா இல்லை அறுவை இயலா என்று சத்தம் போட்டு வாத்தியிடம் கேட்க வேண்டும் போல இருந்தது. ஏதோ ஒரு பூச்சியின் படத்தை வரைந்து அதைப்பற்றி சிலாகித்து கொண்டு இருந்தார்.
மணி அடித்த உடன் வகுப்பறையில் ஒரு சலசலப்பு உண்டானது. "சரி தான். நாம மட்டும் இல்லை, எல்லாருமே மணி அடிக்க தான் காத்துகிட்டு இருந்தாங்க போல" என்று பிரபாகர் நினைத்து கொண்டான். அடுத்தது வகுப்பறைக்குள் நுழைந்தார் தமிழ் வாத்தியார் காளிதாசன்.
இன்று
"லல்லி கன்னா...அந்த சன் டிவி கொஞ்சம் வெய்யேன்"
"How can you see all this mega serial shit dad? Dont you think it is boring"
லல்லி பிறந்தது வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவில் தான். அவளுக்கு தமிழ் பேசினால் புரியும். ஆனால் பேச மாட்டாள். பேசினால் ஏதோ மியூசிக் சேனல் வீஜே போல தமிழ் மேல் ரோட் ரோலேர் ஏற்றி விட்டது போல பேசுவாள். சின்ன வயதில் எப்பொழுதோ அவளை இந்தியாவுக்கு அழைத்து சென்ற பொழுது அவளுக்கு உடம்பு முடியாமல் போய் விட்டது.
"Too many mosquitos daddy."
"So nasty these roads are."
"Why are all vehicles so crowded"
என்று கேள்வி கணைகளால் பிரபாகரையும் ஆனந்தியையும் ஒரு வழி செய்து விட்டாள். அதன் பிறகு இந்தியா என்றாலே அவளுக்கு பயம். வளர்ந்த பிறகு அவளை கட்டாயபடுத்தவும் முடியவில்லை. அமெரிக்காவில் இருக்கும் தூரத்து உறவினர் வீட்டில் விட்டு விட்டு இவர்கள் மட்டும் இந்தியா சென்று வந்தார்கள். அவளுக்கு எக்ஸாம் இருப்பதாக இந்திய உறவினர்களுக்கு பொய் சொன்னார்கள். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்த ராஜாவுக்கு அவளை மணம் முடித்தார்கள். அவனும் இவளை போல அதே ABCD என்பதால் இரண்டு பேரும் ஆங்கிலத்திலேயே பேசி குடும்பம் நடத்தினார்கள்.
அன்று
அதே தமிழ் வாதியார்களுக்கு உரிய கதர் வேஷ்டி, ஜிப்பா மற்றும் நெற்றியில் பட்டை சகிதம் வந்தார் தமிழ் ஆசிரியார் காளிதாசன். இவர் வகுப்பு என்றால் மாணவர்களுக்கு கொள்ளை பிரியம். மாணவர்களை நண்பர்கள் போல நடத்துவார். முக்கியமாக கேள்வி கேட்டு தொந்தரவு செய்ய மாட்டார். பாடத்தை புரியும்படி எளிதான உதாரணங்களோட சொல்லி தருவதில் கெட்டிக்காரர்.
"யாமறிந்த மொழிகளில் தமிழ் போல் இனிமையான மொழி வேறேதும் இல்லை. இதை யாரு சொன்னா?"
"நீங்க தான் சார்" தூகத்திலிருந்து மீண்டு வந்த வேலு நக்கல் பேசினான்.
வகுப்பில் எல்லோருடன் சேர்ந்து காளிதாசனும் சிரித்தார்.
"இதை சொன்னது மகா கவி பாரதி. இரண்டாயிரம் வருஷமா ஒரு பாஷை மக்களால பேச படுதுன்னா அப்போ அந்த பாஷைல ஏதோ ஒரு சக்தி இருக்கணும். இல்லன்னா இத்தனை வருஷங்கள் தாண்டி நீங்களும் நானும் அதை பேசிகிட்டு இருக்க மாட்டோம்."
"ஆனா சார். இப்போ இங்கிலீஷ் படிக்க சொல்லி தான் என் அப்பா அம்மா என்னை வற்புறுத்தறாங்க. வேலைக்கு போற இடத்துல எல்லர்க்கிட்டையும் சகஜமா இங்கிலீஷ்ல தானே பேசி ஆகணும்?"
"ஆங்கிலம் படிங்க, வேண்டாம்னு சொல்லல. ஆனா தாய் மொழிய மறந்துடாதீங்க. சங்க கால இலக்கியம் படிங்க. பொன்னியின் செல்வன், திருக்குறள் மாதிரி தமிழ கொண்டாடற படைப்புக்கள படிங்க. நீங்க பேசிக்கிட்டு இருக்கிறது எவ்வளவு இனிமையான மொழினு அப்போ தான் உங்களுக்கு புரியும்."
"அதெல்லாம் சரி சார். ஆனா தமிழ் படிச்சா எவன் சார் வேலை தரான்? வெளில போய் தமிழ்ல பேசினாலே கவுரவ குறைச்சலா நினைக்கிற மாதிரி ஆக்கிடானுங்களே. வெறும் கெட்ட வார்த்தைகள் மட்டும் தான் தாய் மொழில பேசற மாதிரி ஆயடுச்சு சார்."
இதை சொன்ன உடனே காளிதாசன் முகம் வாடி விட்டது. "தமிழ் இனி மெல்ல சாகும்ங்கறது சரியா போச்சு". அவர் கண்கள் சற்று கலங்கினதை பார்த்து பிரபாகர்க்கும் வருத்தமாக இருந்தது.
இன்று
"Dont you miss mummy during dinner?" கேட்டாள் லலிதா.
தமிழில் அழகாக அம்மான்னு ஒரு வார்த்தை இருக்கும்போது தாயை ஏதோ எகிப்திய சவத்தின் பேரில கூப்பிடுவதை கேட்டு கஷ்டமாக இருந்தது. தன் மகளுக்கு தமிழ் பேச வரவில்லை என்பதை நினைத்து பிரபாகர்க்கு வருத்தம் ஏற்படாத நாளே இல்லை. எந்த தமிழ் தொலைக்காட்சி பார்த்தாலும் அதில் ஆங்கிலமே சரளமாக பேசுகிறார்கள். தமிழ் வழி கல்வி படிப்பவர்களுக்கு மாநில முதலிடம் அந்தஸ்து கொடுத்தாலும் எல்லோரும் ஹிந்தியும் பிரெஞ்சும் தான் படிக்கிறார்கள். தமிழை திணிப்பதை விட அதன் மேல் காதல் கொள்ள செய்ய யாரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிய வில்லை.
மேடையில் தமிழுக்காக உயிரை விட தயாராக இருப்பதாக முழக்கமிடும் முக்கால்வாசி அரசியல்வாதிகளின் பிள்ளைகள் Montford-ல் படிக்கிறார்கள். இந்தியாவில் எதாவது ஒரு அரசியல்வாதியின் பிள்ளையாவது அரசினர் பள்ளியில் படிக்கின்றனரா? எல்லாம் இளிச்சவாய் தமிழனிடம் வெறும் மேடை பேச்சில் கைத்தட்டல் வாங்கவும் வோட்டு வாங்கவும் தான். காளிதாசன் சார் சொன்னது போல "தமிழ் இனி மெல்ல சாகுமோ"????
அப்பொழுது தான் லலிதாவின் 9 மாத குழந்தை "ம்மா..ம்மா" என்று அறைக்கூவல் விட்டது. லல்லிக்கு ஒரே சந்தோஷம். பிரபாகர்க்கும் சந்தோஷமாக இருந்தது. பேச முடிகிற வரைக்கும் அதை மம்மி சொல்ல சொல்லி பழக்காமல் இருந்தால்... தமிழ் கொஞ்ச நாள் கழித்தே சாகும்.
பி.கு. : இந்த கதைய நான் எழுதலை (இது கதைய படிக்கும் போதே உங்களுக்கு தெரியும்னெல்லாம் சொல்லப்புடாது). இந்த கதைய எழுதினவரும் ப்ளாக்கர் தான். முடிஞ்சா அவரு யாருன்னு நீங்க கெஸ் பண்ணுங்க. பாக்கலாம் எத்தனை பேரு சரியா கண்டுபிடிக்கறீங்கன்னு ;))