காலத்தின் தடையற்ற ஓட்டத்தில்...
ஓ
ர் நாள் எனக்கு அறிமுகமாகி
சிரி
த்து பேசி ரசிக்க வைத்து
துரத்
தி துரத்தி கலாய்த்து
வீம்பிற்
கே வம்பிழுத்து
சேட்டை செய்
ய காத்திருக்கும்
நீ இன்றும் எ
ன்றும் என் ஆத்மார்த்த தோழன் :-)
உங்க ஃபேவரைட் சாக்லேட் கேக் உங்களுக்காக (ப்ளேட்ல கட் பண்ணி குடுத்த பீஸ் மட்டும் எடுத்துக்கிட்டு இடத்த காலி பண்ணுங்க.. மீதி கேக் எங்களுக்கு :P )

HAPPY BIRTHDAY KK !!!
Send this eCard !
வணக்கம் மக்கள்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க? இப்போ நம்ம ப்ளாக் உலகம் முழுக்க ஒரே கல்யாண சீசனா இருக்கு. சரி பரவாயில்ல, நம்ம காட்ல மழைதான்னு சந்தோஷப்பட்டா அதுக்கும் ஆப்பு வைக்கற மாதிரி ஒரே நாள்ல வேற வேற ஊர்ல கல்யாணத்தை வெச்சிடறாங்க. போன வாரமும் இதே கதை தான். பரணிக்கு சிதம்பரத்துல கல்யாணம் அதே நாள்ல ஜெயந்திக்கும் நாமக்கல்ல கல்யாணம். பாவம் நான்.. எங்க போவேன்.. எந்த கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணுவேன். ஜெயந்தி நல்ல புள்ளையா திங்கட்கிழமை ரிசெப்ஷன் வெச்சிருந்தா. ஓ.கே. அப்போ ஞாயிற்றுகிழமை பரணி கல்யாணம் போயிட்டு திங்கட்கிழமை நாமக்கல்ல ரிசப்ஷன் அட்டெண்ட் பண்ணலாம்னு ப்ளான் போட்டு சனிக்கிழமை நைட் நானும் ராஜியும் சிதம்பரம் கிளம்பிட்டோம். கிளம்பும்போதே நம்ம எம்ஜிநிதி ஃபோன் பண்ணி உங்க பேர்லயே ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிட்டோம். காலைல வந்ததும் நீங்க ஹோட்டல்லயே பேர சொல்லி கீ வாங்கிக்கலாம்னு சொல்லிட்டாரு. ரொம்ப நன்றிங்க. எனக்காக இன்னோரு உதவியும் பண்றீங்களா? நைட் முழுக்க மாப்பிள்ளைய நல்லா கலாய்ங்க.. தூங்கவிடாதீங்கன்னு சொன்னா அவரு அநியாயத்துக்கு நல்லவரா பாவம்ங்க பரணி. ரொம்ப நல்லவன்.. விட்ருவோம்ங்கறாரு :(

சே.. நம்ம ப்ரெண்ட்ஸ் லிஸ்ட்லயும் இவ்ளோஓஓஓ நல்லவங்களா?? சரி பொழச்சு போங்கன்னு விட்டுட்டோம். காலைல 4 மணிக்கெல்லாம் சிதம்பரம் போயாச்சு. அங்க போய ஹோட்டல்ல ரூம்க்கு போனா.. புக் பண்ணி இருந்த்து டபுள் பெட் ரூம் வித் ஏசி.. ஆஹோ. நமக்கே இதெல்லாம் ஓவரா தெரியுதேன்னு நெனச்சிக்கிட்டே பத்ரமா வந்து சேந்தாச்சுன்னு மக்களுக்கு தகவல் சொல்லிட்டோம். அப்படியே நானும் ராஜியும் கதை அடிச்சிட்டே பொறுமையா கிளம்பி 6 மணிக்கு மேல மண்டபத்துக்கு போனோம். வாசல்லயே நம்ம பரணியும் அவர் தங்கமணியும் நிக்கற போட்டோ போட்டு ஒரு பெரிய பேனர். ஆஹா மாப்பிள்ளைய கலாய்க்க நிறைய விஷயம் இருக்கும் போலன்னு நெனச்சிக்கிட்டே உள்ள நுழைஞ்சோம். அங்க மேடைல மாப்பிள்ளைக்கு ஏதோ பங்ஷன் நடந்துட்டிருந்துது. அங்க இருந்து அவர் ஹாய்-ன்னு கை காட்ட... கை புள்ளா செக்கசெவேல்னு மருதாணி.. அட்ரா.. அட்ரா... மாப்பிள்ளை ரிடர்ன் வந்ததும் எல்லாத்துக்கும் சேத்து வைச்சு கலாய்க்கனும்னு முடிவு பண்ணி எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டோம் :)
ஜம்முனு ரெண்டு சேர் இருக்கற இடமா பாத்து போய் ஒக்காந்துட்டு எல்லா சடங்கையும் பாத்துட்டிருந்தோம். இப்ப எல்லாம் கல்யாணம்னா மக்கள் எல்லாம் போறது ரிசப்ஷனுக்கு தான். தப்பி தவறி ஏதாவது கல்யாணத்துக்கு போனாலும் ப்ரெண்ட்ஸோட அரட்டைலயே பிஸியா போயிடும் கரெக்டா தாலி கட்ற நேரத்துல மட்டும் மாப்பிள்ளை பொண்ண பாப்போம். இங்க நானும் ராஜியும் மட்டும் தான்றதால முழு கல்யாணத்தையும் பாத்து நடுநடுல இது எதுக்கு பண்றாங்க அது எதுக்கு பண்றாங்கன்னு கேள்வி கேட்டு (ப்ளீஸ் நோட்... கேள்வி மட்டும் தான் கேட்டுக்கிட்டோம். பதில் ரெண்டு பேருக்குமே தெரியலே ;)))) நல்லா என்சாய் பண்ணிட்டிருந்தோம்.. நல்லபடியா கல்யாணம் முடிஞ்சதும் சரி கிப்ட் குடுக்க போலாம்னு எழுந்தா அப்போ தான் எம்ஜிநிதி உள்ள வர்றாரு. அடப்பாவி மக்கா.. இப்போ தான் வர்றீங்களான்னு கேட்டா நான் எப்பவோ வந்துட்டேன் பிண்ணாடி ஓக்காந்துட்டிருந்தேன்.. அது சரி ஏன் இப்படி கிப்ட எல்லாம் கொண்டு வந்தீங்க.. அவன் நம்ம பையன்ங்க. இதெல்லாம் தேவையே இல்லங்கங்கறாரு. இவ்ளோ லேட்டாவா இதெல்லாம் சொல்லுவாய்ங்க :(((
சரின்னு மேடைக்கு போய் கிப்ட குடுத்து மக்கள வாழ்த்திட்டு நம்ம டெஸ்டினேஷனான டைனிங் ஹாலுக்கு போயாச்சு. கரெக்டா சாப்பிட்டு முடிக்கும் போது புலிகிட்ட இருந்து ஃபோன். மண்டபம் எங்க இருக்குன்னு கேட்டு.. பத்திரிக்கைல இருந்த அட்ரெஸ அப்படியே வாசிச்சிட்டு கண்டுபிடிச்சு வந்துடுங்கன்னு சொல்லிட்டோம். அப்புறம் அவர் வந்து மாப்பிள்ளைய போய் வாழ்த்திட்டு வந்ததும் எல்லாரும் கிளம்பிட்டோம். புலி நாகைல இருக்க அதோட குகைக்கு கிளம்ப, ராஜி அவங்க ஊருக்கு கிளம்ப நான் அங்க இருந்து அடுத்த கல்யாணத்த அட்டெண்ட் பண்ண நாமக்கல் கிளம்பிட்டேன் :)

ஆர்குட் ப்ரொபைல் பிக்-ல போட ஒரு நல்ல படமா வரையனுமே.. ஏதாவது ஐடியா குடுங்க பாப்போம்

ஆஹா.. இன்னிக்கு கலாய்க்க ஒருத்தன் சிக்கிட்டான்யா :)

அய்யோ.. பாவம் இன்னிக்கு கொஞ்சம் ஓவர் டோஸ் ஆயிடுச்சு. அவங்கள பாத்தா எனக்கே பாவமா இருக்கே :(

கடவுளே எனக்கு போட்டியா இன்னொரு அப்பாவி சிறுமி இந்த ப்ளாக் உலகத்துல வரவே கூடாது !!

என் லாலிபாப்ல உங்களுக்கு பங்கு தர மாட்டேனே :P

அடடா.. இப்படி வாழ்த்து மழைல நனைச்சு என்ன தேவதையா கொண்டாடறாங்களே எல்லாரும் :)
இது யாருன்னு இன்னுமா உங்களுக்கு தெரியல?? எங்கள் செல்ல தேவதை
துர்கா தான். அவளுக்கு எங்களோட மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் :) உங்க வாழ்த்தையும் கமெண்ட்ல சொல்லிட்டு போங்க :)
போன வருஷம் இதே நாள்ல மே மாசத்துல பொறந்தநாள் கொண்டாடற எல்லாருக்கும் சேத்து ஒரு பதிவு போட்டேன். இந்த வருஷமும் அது மாதிரி எதாவது பதிவு போடலாம்னு பாத்தா பாதி மக்கள ப்ளாக் உலகத்துலயே காணோம்.. அவங்கள கலாய்ச்சு போஸ்ட் போட்டாலும் அவங்க வந்து படிப்பாங்களான்னு கூட தெரியல.. என்ன கொடுமையிது
காணாம போன ஏஸ் :((
சரி.. எப்பவும் போடறமாதிரி அமைதியா ஒரு பூங்கொத்தும் கேக்கும் போட்டு நல்லபுள்ளயா வாழ்த்த மட்டும் சொல்லிப்போம் :)
பிறந்தநாள் கொண்டாடும் மக்கள்
12 -
மு.கா.13 -
கோல்மால் கோபால்15 -
Prithz19 -
நாமக்கல் சிபி20 -
ஹரீஷ்23 -
பொற்கொடி, Ms.Congeniality24 -
திவ்யா 29 -
கே.கே31 -
கில்ஸ்திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மக்கள்
16 -
வேதா18 -
பரணி, இம்சை அரசிஎல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் :))


தூக்கத்திலும்
தனிமையை நாடுகிறேன்
உன் பெயரை உளறிவிடுவேனோ
என்ற அச்சத்தில்

உன்னைவிட்டு விலகியிருக்கும் நாட்களில்
உன்னருகில் இருக்க துடிக்கும் மனம்
உன்னருகில் இருக்கையிலோ
விலகி நின்று ரசிக்கசொல்லும்
ரகசியமென்னவோ

நேரம் காலம் பார்த்து
உன்னிடம் சொல்ல
ஏனோ விருப்பமில்லை
எனக்குள் தானாய் தோன்றியது போல்
ஓர் நாள் உன்முன் தானாய் வெளிப்படும்
என் காதல்
அந்த நொடிக்காக
காத்திருப்பேன் நான்.