அற்புதமாய் ஓர் நாள்..

ரொம்ப நாளா என் அலுவலக தோழி ஒருத்தங்க அவங்க வீட்டுக்கு கூப்பிட்டிருந்தாங்க.. நேத்து தான் போக முடிஞ்சுது. காலைல டிபனுக்கே வரசொல்லிட்டாங்க. பஸ் புடிச்சு அவங்க ஊரான அனுப்புரம் (திருக்கழுகுன்றம் டூ கல்பாக்கம் போற வழில இருக்கு) போக 10 மணி ஆகிடுச்சு. போனதும் காபி, டிபன் (தோசை & சாம்பார், பூரி &உருளைகிழங்கு) எல்லாம் சாப்பிட்டுட்டு அவங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற பார்கல நேரத்தை ஓட்டினோம். ரொம்ப நாள் கழிச்சு ஊஞ்சல் எல்லாம் விளையாடி நல்ல கலாட்டாவா போச்சு நேரம். காலைல சாப்பிட்டது செரிச்சதும் மதிய சாப்பாடு சாப்பிட போயாச்சு. மெனு இதுதாங்க - மைசூர் பாகு ஸ்வீட், சாதம், மீன் குழம்பு, மீன் வருவல், இறால் தொக்கு, சிக்கன் ஃபிரை, காரட் பொரியல், ரசம் & தயிர். சும்மா வெளுத்து வாங்கியாச்சு.

சாப்பிட்டு முடிச்சதும் ஒரு 3.30 மணிக்கா கிளம்பி கல்பாக்கம் வந்தோம். நான், என் தோழி, அவளோட அம்மா, அண்ணா & நண்பர். சும்மா சொல்லக்கூடாதுங்க.. பீச் அவ்ளோ சூப்பரா இருந்துது. நம்ம சென்னைல மக்கள் நெரிசலும், கடைகளும், குப்பையுமா கடலை பாத்த மக்களுக்கு அந்த கடல் சொர்க்கம்.

ஹி..ஹி.. நாங்க தான் :)))


ரொம்ப கம்மியான மக்கள் நடமாட்டம்... விரல் விட்டு எண்ணிடலாம் மொத்த மக்களை. அவ்ளோதான் இருந்தாங்க. சீறி வரும் கடல் அலை... நல்லா வேகமாவே இருந்துது.. மொதல்ல கொஞ்ச நேரம் உட்கார்ந்து கதை பேசிட்டிருந்தோம். அப்புறம் நானும் என் தோழியும் தண்ணில நிக்க போயிட்டோம். மனசு திருப்தியடையற வரை தண்ணில இருந்துட்ட்டு அதுக்கப்புறம் அப்படி பீச்சோரமா நடக்க ஆரம்பிச்சோம். கிட்ட தட்ட 1.5 கி.மீ தூரம் நடந்திருப்போம். நடக்கற வழில எல்லாம் கிடைச்ச அழகான சிப்பிகள எடுத்துக்கிட்டு, கதை அடிச்சிக்கிட்டே நடந்தது சூப்பரா இருந்துது. அப்புறம் ஒரு இடத்துல உட்கார்ந்து எடுத்த சிப்பிய எல்லாம் சேத்து வைச்சு போட்டோ புடிச்சோம்.


நாங்க எடுத்த சிப்பி & சங்கு கலெக்ஷன்ஸ்


அற்புதமாய் ஒரு நாளை கழிச்ச திருப்தியோட சாயந்திரம் 6.30 மணிக்கு வூட்டுக்கு கிளம்பியாச்சு :)))

நானும் புத்தகங்களும்...



புத்தகம் படிக்கற பழக்கம் எப்போ ஆரம்பிச்சுது?? சரியாக நினைவிலில்லை.. சின்ன வயதிலிருந்தே வீட்டில் வாங்கிய ஆனந்த விகடன், அம்மா அலுவலகம் சென்று வரும் பயணங்களில் படிக்கும் கண்மணி, ராணி முத்து நாவல்கள் என் ஆரம்பித்து, பின் வீட்டிற்கே வந்து வார இதழ்களை குடுத்து பெற்று செல்லும் நடமாடும் நூலகத்தின் உதவியுடன் தொடர்ந்தது. என்றுமே இந்த புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைத்து தேடி பிடித்தெல்லாம் படித்ததில்லை. கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் படிப்பேன். அதனாலோ என்னவோ படித்த புத்தக்த்தின் பெயரோ எழுதியவரின் பெயரோ மனதில் நின்றதில்லை. ஆனால் படிக்கும் கதைகளில் நான் ரசித்த காட்சிகள் மட்டும் என்றுமே மனதில் பசுமையாய் இருக்கும்.

கல்லூரி முடித்து வேலைக்கு சேர்ந்தபின் முழுவதுமாக படிக்கும் பழக்கம் நின்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு 6 மாத காலம் வீட்டில் வெட்டியாய் இருக்க நேரிட்டது. அப்பொழுது தான் எல்லோரும் சொல்கிறார்களே அப்படி என்ன தான் இருக்குனு படிச்சு பாத்துடலாம்னு பொன்னியின் செல்வன் நாவல் நூலகத்திலிருந்து எடுத்து படிக்க ஆரம்பித்தேன். காலை எழுந்ததும் ஆரம்பித்தால் இரவு கண்களில் தூக்கம் சொருகும் கடைசி நிமிடம் வரை படிப்பேன். அவ்வளவு ஆர்வமாக படிப்பதை பார்த்த அப்பா தான் சரித்திர நாவல்கள் உனக்கு பிடிக்கிறதென்றால் சாண்டில்யன் நாவல்கள் படித்து பார் என்றார். முதலில் நூலகத்தில் என் கண்ணில் பட்டது யவன ராணி தான். படித்ததும் பிடித்துவிட சாண்டில்யணின் எல்லா நாவல்களையும் தேடி பிடித்து படிக்க ஆரம்பித்தேன். அதே சமயம் என் கீழ் வீட்டில் இருந்த அம்மணி சிட்னி ஷெல்டன் நாவல்கள் தந்து இதுவும் வேணா படிச்சு பாருங்கனு சொல்ல.. வெட்டியா தானே இருக்கோம்.. எதை குடுத்தாலும் படிப்போம்னு ஆங்கில நாவல்களும் படிக்க ஆரம்பிச்சேன். அதன் பிறகு மீண்டும் வேலைக்கு சேர்ந்ததும் படிப்பது மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.. ப்ளாக் பக்கமெல்லாம் வந்தப்பிறகு சுத்தமாகவே நின்றுவிட்டது என்று கூட சொல்லலாம்.

இப்படி முழுமையாய் நின்றுவிட்ட ஒரு பழக்கம் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சோம்பேறித்தனத்தால் ஆரம்பிக்காமலே இருந்தது. சென்ற வாரம் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு கிப்ட் வவுச்சர் இருக்கு. நம்பர் தர்றேன். அந்த புத்தக கடைக்கு சென்று நீங்களே உங்களுக்கு பிடித்த புத்தகங்கள் வாங்கிக்கோங்கனு சொன்னாரு. அவ்ளோ தூரம் போகனுமானு நம்ம சோம்பேறித்தன்ம் எட்டி பாக்க, அப்பாவோட அலுவலகம் பக்கத்துல தானே இருக்கு, அப்பாவையே வாங்கிட்டு வர சொல்லலாமேனு நினைச்சேன். உடனே நண்பர், அப்பா ரசனை வேறயா இருக்கலாம் நீங்களே போய் உங்களுக்கு பிடித்ததா பாத்து வாங்கிக்கோங்கனு சொன்னாரு. சரினு சொன்னவருக்கு மரியாதை குடுத்து நானும் போன சனிக்கிழமை அந்த கடைக்கு போனேன்.

நான் கண்டிப்பா படிக்கனும்னு நினைத்த புத்தகங்கள் ஒரு 4-5 தான். ஆனா என் அதிர்ஷ்டம் அதுல இரும்பு குதிரைகள் புத்தகம் மட்டும் தான் இருந்துது. மீதி கிப்ட் வவுச்சர் அமௌண்ட்டுக்கு என்ன புத்தகம் வாங்கலாம்னு அப்படியே எல்லா புத்தகங்களையும் பாத்துட்டு வந்தேன். எனக்கே வித்யாசமாய் இருந்தது. எப்பவுமே புத்தகம் வாங்க போறதுன்னா என்ன வாங்கனும்னு ஒரு முடிவோட போவேன். இருந்தா வாங்குவேன். இல்லாட்டி திரும்பி வந்துடுவேன். சரி எல்லா புது பழக்கத்துக்கும் எங்கயாவது ஒரு துவக்கம் இருக்கனுமே.. இதையும் முயற்சி செஞ்சு தான் பாப்போம்னு ஒரு 4 புத்தகம் வாங்கினேன்.

பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்
உமா மகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை
சூத்திரதாரியின் பிறிதொரு நதிக்கிரை
ஓஷோவின் Tantra vision: The secret of the inner vision

இதுல நான் ஏற்கனவே படிக்கனும்னு நினைச்சது பாலகுமாரனோட இரும்பு குதிரைகள். அதுலயும் அதை படிக்க சொன்ன நண்பர் அந்த புத்தகம் பத்தி கொஞ்சம் பில்ட் அப் ஏத்தி விட மறுநாளே முதல் வேலையா அந்த புத்தகத்தை தான் படிச்சேன். எனக்கு ரொம்ப புடிச்சிருந்துது.. முக்கியமா அதுல வர்ற குதிரை கவிதைகள். சான்ஸே இல்லை.. படிச்சதும் மனதில் நின்ற இரண்டு கவிதைகள் உங்களுக்காக...

சவுக்கடி பட்ட இடத்தை
நீவிடத் தெரியாத குதிரை
கண்மூடி வலியை வாங்கும்
இதுவுமோர் சுகம்தா னென்று
கதறிட மறுக்கும் குதிரை
கல்லென்று நினைக்க வேண்டாம்
கதறிட மேலும் நகைக்கும்
உலகத்தை குதிரை அறியும்



அவல ஆடுகள் கூட இங்கே
கொம்புடன் ஜனித்ததாக
கீச்சுப் பூனைகள் கொண்டதிங்கே
கரிய நகமும் பல்லும்
யாருக்கும் தீங்கு செய்யா நத்தைக்கும்
கல்லாய் ஓடு
பச்சோந்தி நிறத்தை மாற்றும்
பல்லிவால் விஷத்தை தேக்கும்
குதிரைகள் மட்டுமிங்கே
கொம்பின்றி பிறந்ததென்ன?
வெறுப்புடன் பிறந்த மாக்கள்
பயத்தினை துணையாய் கொள்ள
விருப்புடன் பிறந்த குதிரை
கொம்பில்லை விஷமுமில்லை.
தர்மத்தை சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவர்?
குதிரைகள் காதை பாரும்
உள்ளங்கை சிவப்பு தோற்கும்
இது குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் ஏழாம் பாடம்

மீதி புத்தகங்களை படிச்சதும் அதை பத்தியும் மொக்கை போடறேன் :)))

காதல் தேசம் - I



உன் அன்பெனும் சாவி கொண்டு
என் பிடிவாத பூட்டை திறக்கிறாய்
மௌனமாய் வியக்கிறேன்
அன்பிற்கு அடிபணிந்து
மெல்ல தளரும்
என் பிடிவாதம் கண்டு !!

கலாட்டா டைம் - III


வழக்கமா மதியம் சாப்பிட்டு முடிச்சப்புறம் ஜூஸ் / ஐஸ்க்ரீம் வாங்கிக்கிட்டு ஆபீஸ சுத்தி ஒரு வாக்கிங் போவோம். ஒரு சைட்ல மட்டும் காத்து சூப்பரா இருக்கும். அங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்து / நின்னுக்கிட்டு போற வர்றவங்கள சைட் அடிச்சிட்டு கொஞ்ச நேரம் கலாட்டா பண்ணிட்டு தான் சீட்டுக்கு திரும்பி வருவோம். போன வாரம் அப்படி தான் சாப்பிட்டு முடிச்சப்புறம் என்ன வாங்கலாம்னு யோசிச்சப்போ எனக்கு லைம் சோடா வேணும்னு சொன்னேன். பிரெண்டு அவனுக்கு குல்ஃபி வேணும்னு சொல்லி குல்ஃபி வாங்கினான். அதோட விட்டிருக்கலாம். அந்த குல்ஃபிய லைம் சோடால டிப் பண்ணி சாப்பிட போறேன்னான்.. உதை விழும்.. வேணும்னா குல்ஃபி மேல லைம் சோடா ஊத்தறேன்னு கொஞ்சம் ஊத்தினேன்.. சாப்டுட்டு சூப்பரா இருக்குனு சொன்னவன்.. அடுத்த நாள் மேங்கோ ஃபீஸ்டும் லைம் சோடாவும் காம்பினேஷன் ட்ரை பண்ணனும்னு சொன்னான்.. நல்லவனே.. நீயே இந்த விளையாட்டு விளையாடு.. நான் இன்னிக்கு கார்னிட்டோ தான் சாப்பிட போறென்னு சொல்லி எஸ் ஆயிட்டேன். ஆனாலும் அவன் அதை லைம் சோடா முக்கி முக்கி எடுத்து சாப்பிட்டப்ப சூப்பரா கலாய்ச்சிட்டிருந்தோம். நானும் சாப்பிட்டு பாத்தேன். ஐஸ்க்ரீம்ல பெருசா ஏதும் டேஸ்ட் வித்யாசம் தெரியலை. ஆனா கடைசில அந்த லைம் சோடா குடிக்கறப்போ அதுல எஃபெக்ட்டு இருந்துது ;-)

******************************

வெள்ளிக்கிழமை அன்னிக்கு வேலைய ரிசைன் பண்ணிட்டு போயிருந்த எங்க ப்ரெண்ட் ஒருத்தி எங்கள பாக்க வந்திருந்தா. அவ ஆசைப்பட்டதால எல்லாரும் அன்னிக்கு குல்ஃபி சாப்பிடலாம்னு முடிவு பண்ணி வாங்கினோம். இதுல என்ன மேட்டர்னா அது கரெக்டா சாப்பிடனும்.. மேல மட்டுமொ இல்ல கீழ மட்டுமோ சாப்பிட ஆரம்பிச்சீங்கன்னா மத்த இடத்துல எல்லாம் உருகி ஒழுக ஆரம்பிச்சிடும்.. நானும் இன்னும் ரெண்டு பேரும் ரெகுலரா சாப்பிடறதால தெளிவா சாப்பிட்டோம்.. ஆனா மீதி ரெண்டு பேர் நிறைய ஒழுகவிட அடிச்ச காத்துல உருகி ஒழுகினதெல்லாம் எல்லார் மேலயும் தெரிக்கனு எல்லார் டிரஸ்லயும் குல்ஃபி கரையோட திரும்பி வந்தோம்.

******************************

லஞ்ச் டைம் மட்டும் இல்லைங்க.. சாயந்திரம் ஒரு 4-5 மணிக்கா ரொம்ப போர் அடிச்சா / தூக்கம் வர்ற மாதிரி இருந்தாலும் அங்க வந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிட்டு போவோம். வீசிற சுகமான காத்துக்கு சும்மா சூப்பர் ரிலாக்ஸிங்கா இருக்கும்.. அப்படி ஒரு நாள் நானும் உமாவும் உட்கார்ந்திருந்தப்போ அங்க இருந்த ஈச்சமரத்துல இருந்து கொத்து கொத்தா காய பறிச்சிட்டிருந்தாங்க. கொஞ்ச நேரத்துல அங்க கார் பார்க் பண்ண ரெண்டு டிரைவர்ங்க வந்து அவங்களும் கீழ தேடி தேடி எடுத்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.. ஏன் இவ்ளோ இருக்கும்போது தேடி தேடி எடுத்து சாப்பிடறாங்கனு ஒரு டவுட்டு.. சரி அது என்னனு தான் கேட்டுடுவோமேனு போய் அவங்ககிட்டயே போய் இது என்ன பழம்னு கேட்டோம். அந்த ரெண்டு டிரைவர்ல ஒருத்தர் ரொம்ப யோசிக்க இன்னொரு டிரைவர் ஈச்சம்பழம்னு சொல்ல உடனே இவர் ஆமா லயன் டேட்ஸ்க்கு தங்கச்சி இது தான்னு சொன்னாரு. அவரு எங்கள கலாய்க்கறாரா உண்மைய சொல்றாரான்னு தெரியலைன்னாலும் பேருக்கு நாங்களும் சிரிச்சிட்டு சரி நாங்களும் கொஞ்சம் எடுத்துக்கலாம்னு எடுத்துக்கிட்டோம். உடனே ஈச்சம்பழம்னு பேரை கரெக்டா சொன்ன டிரைவர் வந்து, அது காய்.. அதை சாப்பிடாதீங்க.. இது மாதிரி கருப்பா இருக்கறது தான் பழுத்தது. இதை சாப்பிடுங்கனு அவரே நல்ல பழமா பாத்து குடுக்க ஆஹா இதை தான் இவங்க தேடி தேடி எடுத்தாங்களானு நாங்களும் கொஞ்சம் தேடி (எங்க டீம் மக்களுக்காக தான்) எடுத்துக்கிட்டு போனோம்.


மேல வந்ததும் எனக்கும் உமாவுக்கும் மட்டும் ரெண்டு எடுத்து வைச்சிக்கிட்டு மீதிய மத்த மக்களுக்கு குடுத்தோம். யாருக்குமே அது என்னனு தெரியாததால சையனைட் எதுவும் எங்களுக்கு குடுக்கலை இல்லனு ஒரு பயத்தோடவே டேஸ்ட் பண்ணாங்க. உடனே ஒரு நண்பர் "இன்னிக்கு பிரதோஷம் விரதம்ங்கறதால அவங்க சாப்பிட மாட்டாங்க. அப்படி இருந்தும் நாம சாப்பிடாட்டியும் மத்தவங்களாவது சாப்பிடட்டுமேனு நல்லெண்ணத்துல கொண்டு வந்து குடுத்தா இப்படியா சந்தேகப்படறது"னு எங்களுக்கு சப்போர்ட் பண்ணாரு. நான் ரொம்ப அப்பாவியா.. அப்படி எல்லாம் தப்பா நினைச்சிக்காதீங்க. நாங்க எங்களுக்கு தனியா ரெண்டு பழம் எடுத்து வைச்சிக்கிட்டோம். 6 மணிக்கு விரதம் முடிஞ்சதும் சாப்பிட்டுப்போம்னு சொல்ல, உடனே அவர்.. "ஜி3.. நீங்க லார்ட் சிவாவ இப்படி எல்லாம் ஏமாத்தப்புடாது ஜி3" னு டயலாக் விட்டுட்டிருந்தாரு.. ஹலோ உங்களுக்கு வேணும்னா நேரா கேளுங்க குடுக்கறோம்.. அதை விட்டுட்டு ஏன் இப்படி எல்லாம் டயலாக்னு அவரையே திருப்பி கலாய்க்க ஆரம்பிச்சிட்டோம் :-)) நமக்கு சப்போர்ட் பண்ணாருங்கற ஓரே ஒரு காரணத்துக்காக அவரை கலாய்க்காம விட முடியுமா என்ன ;-))

புன்னகை தருணங்கள் - II

1. காக்க காக்க - என்னை கொஞ்சம் மாற்றி



என்னுடைய all time favourite பாட்டு இது. அதுலயும் அந்த wood house-ல வர்ற சீன்.. அவ குடிக்க அவனுக்கும் அவளுக்கும் கப்ல கலந்து கொண்டு வந்து அவனுக்கு குடுக்க அடுத்த சில சீன்ல அவன் அதுல ஏதோ இருக்கற மாதிரியும் அதை குடிக்கற மாதிரியும் சீன் போட கொஞ்ச நேரம் கழிச்சு அந்த கப்ப வாங்கி கவுத்து காட்டி எதுவுமே இல்லனு சொல்ற அழகிருக்கே... செம க்யூட் சீன்...

2. பச்சைக்கிளி முத்துச்சரம் - கறுகறு விழிகளால்



இந்த பாட்டு கேகே தான் முதல்ல அறிமுகப்படுத்தினார்.. தனியொரு அன்றில்னு வர லைன் சரியா புரியாம தனியொரு அஞ்சல்னு ஏதோ வருது.. அது என்னனு கேட்க முதல்முறை இந்த பாட்ட கேட்க ஆரம்பிச்சேன்.. அப்புறம் லூப்ல போட்டுட்டு நாள் முழுக்க இந்த பாட்டு மட்டுமே கேட்கற அளவுக்கு பைத்தியமா இருந்த நாட்கள் உண்டு.. இன்னிக்கு தேன்கிண்ணத்துல இந்த பாட்டை போடறதுக்காக பாடல் கேட்டுட்டே பாட்டு வரிகள் டைப் பண்ணிட்டிருந்தப்போ சித்தி பொண்ணு வந்து இன்னும் இந்த பாட்டை விடலியா நீனு சலிச்சிக்கிட்டு போறா.. அவளை வெறுப்பேத்தறதுக்குன்னே இன்னைக்கும் லூப்ல போட்டுவிட்டுட்டேன் :-))))))

3. வாரணம் ஆயிரம் - நீயின்றி நானுமில்லை



தினமும் ஒரு முறையாவது ஆபீஸ்ல கேட்கும் பாடல்.. எனக்கு மட்டும்னு இல்லை.. என் டீம் மக்களுக்கும் இந்த பாட்டு பிடிக்கும்ங்கறதால... அதுலயும் இந்த பாட்டு படமாக்கின இடம் எங்க க்ளையண்ட் ஆபீஸ் இருக்கற SFO ங்கறதால ஆன்சைட் போன மக்கள் அதுல வர்ற ஒவ்வொரு இடத்துக்கும் அவங்க போனப்போ நடந்த விஷயங்கள் எல்லாம் சொல்ல ஆரம்பிக்க சுவாரஸ்யமா போகும்

4. தம்பிக்கு எந்த ஊரு - காதலின் தீபம் ஒன்று



இந்த பாட்டை ஒரு முறை தெரியாத்தனமா என் மொபைல்ல காலர் ட்யூனா வைச்சிட்டேன். அதுக்கு ஆபீஸ் ப்ரெண்ட் ஒருத்தர் அது ஏங்க? விளக்கேத்தறதா இருந்தா ஒருத்தர் மனசுல மட்டும் ஏத்துங்க.. ஏன் இப்படி எல்லாருக்கும் ஏத்தறீங்கனு போட்டு கலாய்க்க நான் காலர் ட்யூனே வைக்கலை போயானு தூக்கிட்டேன். அதுக்கப்புறம் ஆபீஸ்ல சாயந்திரம் 6 மணியானா என்ன ஜி3 விளக்கேத்தலியானு ஆரம்பிப்பாரு.. ப்ளேலிஸ்ட்ல இந்த பாட்டை போட சொல்றாராம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. போய்யா இனிமே இந்த பாட்டை என் சிஸ்டத்துல நான் போட மாட்டேன்னு சொல்லிட்டேன்.. அப்பவும் விடாம நீங்க போடலனா என்ன.. நாங்க போடுவோமில்லனு அவங்க சிஸ்டம்ல போட்டு என்னை கலாய்ப்பாங்க :(((

5. சக்கரகட்டி - மருதாணி



போன பாட்டு மாதிரி நான் அடிக்கடி ரிப்பீட்ல கேட்டு இவங்ககிட்ட சிக்கின பாட்டு இது. என்ன ஜி3 இன்னிக்கு மருதாணி வைக்கலியான்னு ஆரம்பிப்பாங்க.. அடப்பாவிங்களா இப்படி கலாய்ச்சு கலாய்ச்சுதான் ஏற்கனவே ஒரு பாட்டை கேட்கும்போதெல்லாம் இந்த பாட்டுக்கு தானே கலாய்ச்சாங்கனு பீல் பண்ண வைச்சிட்டீங்க.. இன்னொரு பாட்டை அந்த லிஸ்ட்ல சேக்க விடமாட்டேன்.. நீங்க எவ்ளோ வேணும்னாலும் கலாய்ச்சிக்கோங்க.. இந்த பாட்டை நான் கேட்டே தீருவேன்னு இப்போ எல்லாம் இந்த பாட்டை போட்டுடறது :)))

என்றும் நன்றியுடன்..

போன வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு அண்ணனுக்கு விபத்து நேர்ந்துதவிட்டது
என்று கேள்விப்பட்டதிலிருந்து ஓரளவு குணமாகி நேற்று இரவு அவனை
ஐசியூவிலிருந்து வெளியில் கொண்டுவரும் வரை யாரும் ஒரு நிலையில் இல்லை. வீடே சூன்யமாய் இருந்தது போல் இருந்தது.. இப்பொழுது ஓரளவிற்கு உடல் நலம் தேவலை. ஆனால் முழுவதுமாய் குணமாக குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என்கிறார்கள். இந்த ஒரு வார காலமாய் அலைபேசியிலும் மெயிலிலும் ஜிடாக்கிலும் அக்கறயுடன் விசாரித்து ஆறுதலும் தைரியமும் அளித்த அணைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். முக்கியமாய் பதிவு போட்டு பலரின் பிரார்த்தனைகளை பெற்று தந்து ஐசியூவிலிருந்து வெளியில் கொண்டுவந்து விட்டார்கள் என்றதும் முதல் வேலையாய் இன்று நேரிலும் வந்து பார்த்துவிட்டு ஆறுதல் சொல்லி சென்ற கவிதாவிற்கு ஸ்பெஷல் நன்றிகள்.



P.S. : You all touched my heartனு இருக்கனும் கார்ட்.. ஆனா அப்படி ஏதும் கிடைக்கலை.. அதனால நீங்க படிக்கறப்போ You allனு படிச்சிக்கோங்க ;)

புத்தகங்கள்...

நம்ம திவ்யப்ரியா ரொம்ப நாள் முன்னாடி டேக் பண்ணியிருந்தாங்க புத்தகங்கள் பத்தி.. அவங்களுக்காக இந்த் பதிவு..

One book that changed my life:

என் வாழ்க்கைய மாத்தின புத்தகம்னு சொல்ற அளவுக்கெல்லாம் எதுவும் இல்லை. ஆனா என் ஆர்வத்தை சரித்திர நாவல் பக்கம் கவர்ந்திழுத்ததுனு சொல்லனும்னா சாண்டில்யனோட யவன ராணி தான். அதுக்கப்புறம் கொஞ்ச நாள் சாண்டில்யனோட நாவல்கள் எல்லாத்தையும் தேடி தேடி படிக்க ஆரம்பிச்சிட்டேன்.

The book you have read more than once:

கல்கியின் பார்த்திபன் கனவு. முதல் முறை படிச்சு முடிச்சு பல வருஷங்கள் கழித்து நண்பர் அவர் பேர்ல இருக்கற நாவல்.. சூப்பரா இருக்குனு சொல்லி அதுல ஒவ்வோரு சீனா ரசிச்சு வர்ணிச்சப்போ.. எனக்கு கதை மட்டும் ஞாபகம் இருக்கு.. ஆனா நீங்க சொல்ற அளவுக்கு டீடெய்ல்டா ஞாபகம் இல்லை.. இன்னொரு முறை படிச்சிட்டு வந்து இந்த டாபிக்ல டிஸ்கஷன கண்டினியூ பண்ணுவோம்னு சொல்லிட்டு ரெண்டாவது முறை அந்த நாவல படிச்சிட்டு வந்தேன்.

One book you would want on dessert island:

சாப்பாடும் குடுத்து புத்தகமும் குடுப்பீங்கன்னா... சரித்திர நாவல் எதுவா இருநதாலும் எனக்கு ஓகே தான் :) இல்ல புத்தகம் மட்டும் தான் குடுப்பீங்கன்னா... அக்ஷய பாத்திரம் மாதிரி ஏதாவது சோறு குடுக்கற அக்ஷய புத்தகம் எதாவது இருந்தா ஓகே :)

One book that made you laugh:
One book that made me cry:

தனியா ஒரு புத்தகம் மட்டுமே என்னை அழ வைச்சுதுன்னோ இல்லை சிரிக்க வைச்சிதுன்னோ சொல்ல முடியாது. நான் எப்பவுமே புத்தகம் படிக்கும் போது அந்த காட்சிகள் கற்பனைகளா கண் முன்னாடி நிக்கற அளவுக்கு இன்வால்வ் ஆகி படிப்பேன்.. அதனால சோகமான கட்டங்களில் கண்ணீரும், நகைச்சுவையான கட்டங்களில் சிரிப்பும் ரொம்ப இயல்பா வரும்..

One book you wish you had written:

இவ்வளவு டெர்ரரா எல்லாம் இன்னும் நான் யோசிக்க ஆரம்பிக்கலை.

One book that you wish had never been written:

ஹிஹி.. இப்படி பீல் பண்ண வேண்டிய சிட்டுவேஷனும் இன்னும் வரலை.. ஏன்னா எனக்கு தான் இன்னும் புத்தகம் எழுதற ஐடியாவே தோனலையே :)

One book you are currently reading:

இப்போதைக்கு எதுவும் படிக்கலை. கொஞ்ச நாளா புத்தகம் படிக்கற நல்ல பழக்கம் குறைஞ்சு போச்சு. இனி தான் ரீஸ்டார்ட் பண்ணனும்.

One book you have been meaning to read:

பாலகுமாரனோட இரும்பு குதிரை. நண்பர் ஒருவர் பல காலமா படிக்க சொல்லிட்டிருக்காரு. அதை தனியா போய் தேடி வாங்கற அளவுக்கு பொறுமை இல்லை. அதான் அவர் கிட்டயே சொல்லிட்டேன்.. அடுத்த வாட்டி என்னை பாக்க வர்றப்போ நீங்களே அந்த புத்தகத்தை எனக்காக வாங்கிட்டு வந்துடுங்கனு :))))

One book you’ll recommend

என்னோட ரெக்கமெண்டெஷன்னா சரித்திர நாவல் ரசிகர்களுக்கு கண்டிப்பா சாண்டில்யனோட நாவல்கள் தான்.

யாரையாவது கோத்து விடனுமே.. எனக்கு தெரிஞ்சு நிறைய புத்தகங்களை ஆர்வமா படிக்கற ஆளவந்தான் & இராம் இந்த டேக்க எழுதனும்னு ஆசைப்படறேன் :-)))

ஆனந்த தாண்டவம்..



பூவினை திறந்துகொண்டு போய் ஒழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

தண்டவாளம் பக்கம் பக்கம்
தொட்டு கொள்ள நியாயம் இல்லை
நீயும் நானும் பக்கம் பக்கம்
கட்டிக்கொள்ள சொந்தம் இல்லை
வாசனை தீண்டிட நினைக்கிறாய்
அது வசப்பட போவதில்லை
வானுக்கும் பூமிக்கும் என்றுமே
மழை உறவுகள் தீர்வதில்லை
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

இதய கூட்டை பூட்டிக் கொண்டேன்
கதவை தட்டி கலகம் செய்தாய்
கதவை பூட்டி உள்ளே சென்றேன்
கண்கள் வழியே மீண்டும் வந்தாய்
வருஷங்கள் மாறிய போதிலும்
புது வசந்தங்கள் வருவதுண்டு
வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள்
புது வடிவத்தில் மலர்வதுண்டு

பூவினை திறந்துகொண்டு போய் ஒழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே
விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்


படம் - ஆனந்த தாண்டவம்
பாடியவர்கள் - ஸ்ரீநிவாஸ், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரிகள் - வைரமுத்து
இசை - G.V.பிரகாஷ்