Showing posts with label கிளிஞ்சல்கள். Show all posts
Showing posts with label கிளிஞ்சல்கள். Show all posts

கிளிஞ்சல்கள் - மார்ச் ‘10

மு.கு. : போன வாரம் சனிக்கிழமை எழுதி வைச்ச பதிவு இது. ப்ளாகர் சதியால பப்ளிஷ் பண்ண முடியாம போயிடுச்சு. இப்போ சில தில்லாலங்கடி வேலை பண்ணி போஸ்டை மீட்டெடுத்து பப்ளிஷிங்.. சில திருத்தங்களுடன் :))))))


வேலை இல்லாம வீட்ல வெட்டியா இருக்கறது ஒரு சுகம். அதிக வேலை இருந்து ஓவரா உழைச்சாலும் அந்த வேலை முடிச்சதும் ஒரு திருப்தி வரும் பாருங்க. அது வேறு விதமான சுகம். ஆனா இது ரெண்டும் இல்லாம தினமும் ஆபீஸ் போயிட்டு வெட்டியா உட்கார்ந்துட்டு வர்ற கொடுமை இருக்கே.. அவ்வ்வ்வ்வ்வ்... முடியலைங்க.. எவ்வளவு நேரம் தான் நானும் ஏதாவது டாக்குமெண்ட்ட தொறந்து வைச்சிக்கிட்டு படிக்கற மாதிரியே சீன போடுறது?? :((( தினமும் காலைல 10 / 11 மணிக்கு ஆபீஸ் போக வேண்டியது. கொஞ்ச நேரத்துல ஜூஸ் ஃப்ரேக்.. ஆமாங்க நான் வெளில காபி எல்லாம் சாப்பிட மாட்டேன்.. ஒன்லி ஃப்ரெஷ் ஜூஸ் தான் :P எப்படியும் திரும்பி சீட்டுக்கு வர 12 - 12.30 ஆகிடும். அடுத்து லஞ்ச் சாப்பிட 1.30 மணிக்கு போனா 2.30 மணிக்கு திரும்பி வந்துடுவோம். மறுபடி 3.45க்கு ஃப்ரேக் டைம்.. சாயங்கால நேரம்ங்கறதால அப்படி ஆபீஸ விட்டு வெளில வந்து ஒரு வாக்கிங் போனா பக்கத்துல இருக்கற டாமினோஸ்லயோ, சங்கீதாலயோ, பாஸ்கின்ஸ் ராபின்ஸ்லயோ, கேக் ஷாப்லயோ, சாட் செண்டர்லயோ, இல்லாட்டி ரோட்டோரம் விக்கற இளநீரோ, கரும்பு ஜூஸோ, தள்ளுவண்டில கொண்டு வர்ற குவாலிட்டி வால்ஸ் ஐஸ்க்ரீமோ சாப்டுட்டு திரும்ப 5 மணிக்கு சீட்டுக்கு வந்துடுவோம். 6 மணி ஆனதும் டான்னு வூட்டுக்கு கிளம்பி வந்துடுவோம். இதுக்கு நடுவுல ரொம்ப போர் அடிச்சா அப்படி பாண்டி பஜார் பக்கம் போய் இருக்கற காசுக்கு எதாவது ஷாப்பிங் பண்ணிட்டு வருவோம். இதெல்லாம் ஒரு பொழைப்பானு நீங்க கேக்கறது புரியுது. அதான் மனசாட்சி உறுத்தலுக்காக வாரத்துல ஒரு நாள் லீவு போட்டுட்டு வீட்ல ரெஸ்டிங் :)) ஏதோ வேலை இல்லாட்டியும் இப்படியாவது பொழுதை ஓட்டலாம்னு பாத்தா அதுக்கும் ஆப்பு வைக்கறாங்க. கூடிய சீக்கிரமே எல்லாரையும் மஹிந்திரா சிட்டிக்கு மாத்தறோம்னு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அந்த காட்ல போய் எப்படி பொழைப்ப ஓட்றது.. நினைச்சாலே டெர்ரராஆஆஆ இருக்கே :(((((


வருஷத்தோட முதல் நாள் எப்படி இருக்கோமோ அப்படித்தான் வருஷம் முழுக்க இருக்கும்னு யாரோ சொன்னாய்ங்க. ஆனா என் விஷயத்துல மட்டும் அது உல்டாவேவே இருக்கு. வருஷத்தோட முதல் நாள் வெட்டியா வூட்ல ஒக்காந்து ஆத்தாவ குலாப் ஜாமூன் செய்ய சொல்லி அருண் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்து குலாப்ஜாமூன் வித் ஐஸ்க்ரீம் சாப்ட்டு வீட்ல நல்லா ரெஸ்ட் எடுத்தேன். ஆனா அதுக்கப்புறம் ஊர் சுத்தல்ஸோ சுத்தல்ஸ் தான். ஒரு வாரம் கூட வீக் எண்ட் வீட்ல வெட்டியா உட்கார்றதில்லை :(( அதுலயும் டாப் 4 வாரமா தொடர்ந்து எதாவது ஒரு படம் போனது தான். நான் எப்போ இவ்ளோ சினிமா பைத்தியம் ஆனேன்னு எனக்கே புரியலை. ஆனா ஆன்லைன் புக்கிங் புன்னியத்துல சத்யம் தியேட்டர் மட்டும் போயிட்டிருந்த நாங்க இப்போ தேவி, காசி, ஈகா, அபிராமினு எல்லா தியேட்டரும் சுத்த ஆரம்பிச்சிட்டோம். சரி போன வாரமாவது வீட்ல இருக்கலாம்னு பாத்தா ம்ஹூம்.. ஃப்ரெண்டுக்கு திங்கட்கிழமை கல்யாணம். ஞாயிறு சாயந்திரம் ரிசெப்ஷன். அதுக்கு கிப்ட் வாங்கறோம்னு போன சனிக்கிழமை ரவுண்ட்ஸ். பல்லாவரத்துல இருந்து கிளம்பி ஒலிம்பியா டெக் பார்க் கிட்ட நண்பன மீட் பண்ணிட்டு, அங்க இருந்து அண்ணா நகர்ல இருக்கற இன்னொரு நண்பன் வூட்டுக்கு போயிட்டு, 3 பேரும் கிளம்பி ஷாப்பிங் போய் கிப்ட் எல்லாம் வாங்கிட்டு மந்தைவெளில இருக்கற பொண்ணு வீட்ல வந்து எல்லாத்தையும் குடுத்துட்டு, அப்படியே மாப்பிள்ளையும் பொண்ணும் கல்யாணத்துக்கப்புறம் தங்கப்போற வீட்டுக்கு மாப்பிள்ளையோட போய் பாத்துட்டு வந்து மறுபடி பொண்ணு வீட்ல வந்து கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சிட்டு ஒரு 7.30 மணிக்கா கிளம்பி அடையார் வேங்ஸ் கிட்சன்ல டின்னர் சாப்டுட்டு சமத்தா வூட்டுக்கு வந்து சேந்தாச்சு (ஒரு நக்ர்வலம் போயிட்டு வந்த எஃபெக்டல இருந்துச்சு !!!). ஆனா ஞாயிறும் திங்களும் போன வேகம் தெரியலை. சரி கலாட்டாவா இருந்துது. நான் பொண்ணு வீட்டு சைட்னும் ஃப்ரெண்ட் ஒருத்தன் பையன் வீட்டு சைட்னும் சப்போர்ட் பண்ண, நான் மாப்பிள்ளைய கால வார்றதும் அவன் பொண்ண கலாய்க்கறதும்னு செம ரகளை. மற்றுமொறு மறக்கமுடியாத கல்யாணம் :))))


எப்பவுமே கிரிக்கெட் மேட்ச் பாக்கற ஆர்வம் எனக்கு இருந்ததில்லை. வீட்ல வேற யாராவது மேட்ச் பாக்கறாங்க வேற சேனல் பாக்கமுடியாதுனா கூட நான் புக் படிக்கவோ இல்ல தூங்கவோ தான் செய்வேனே தவிர நோ கிரிக்கெட். அப்ப்டி இருந்த புள்ள, போன வாரம் மேலே சொன்ன ஈவினிங் ஸ்நாக்ஸ் நேரத்திற்கு டாமினோஸ் போயிருந்தப்ப, அங்க இருந்த டீவில சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி டேர் டெவில்ஸ் மேட்ச் ஓடிட்டிருந்துது. கூட வந்த ஃப்ரெண்டு ஆர்வமா அதை பாக்க, பேச்சு துணைக்கு ஆள் இல்லாம நான் வெளில வேடிக்கை பாத்துட்டிருந்தேன். டெல்லி டீம் பயங்கரமா ரன் அடிச்சிட்டிருந்ததால சென்னை ஜெயிக்கறது கஷ்டம்னு ஃபீலிங்க்ஸ் வேற இதுல. திரும்பி வீட்டுக்கு வந்ததும் என்னையும் அறியாம ஒரு ஆர்வம் மேட்ச் என்ன தான் ஆச்சுனு. பாத்தா 26 பால்ல 31 ரன் வேனும்னு இருந்துது. கொஞ்ச நேரம் பாத்தேன்... முடியலை. நமக்கு இதெல்லாம் பாக்கற அளவுக்கு என்னைக்கு பொறுமை இருந்திருக்கு??? வேற சேனல்ல படம் பாத்துட்டே அப்பப்போ இந்த பக்கம் ஸ்கோர் மட்டும் பாத்துட்டிருந்தேன். ஒரு வழியா கடைசில சென்னை ஜெயிச்சப்போ ஹப்பாடன்னு இருந்துச்சு. ஆனாலும் ஒரு முழு மேட்ச்ச ஃபுல்லா பாக்கற அளவுக்கு என்னைக்காவது எனக்கு பொறுமை வருமானு தெரியலை !!!

கிளிஞ்சல்கள் - 2010

பதிவு எழுதி பல காலம் ஆனதால என்ன எழுதறது எப்படி எழுதறதுனு ஒன்னுமே புரிய மாட்டேங்குது. ஏதோ வர்ற ஃப்ளோல எழுதறேன். ரொம்ப மொக்கையா இருநதா பொறுத்துக்கோங்க :)

போன மாசம் பல ப்ளாக்கர் மீட்டுகள். கோபி வந்திருந்த பொழுது ஒரு முறை கப்பி, ஜே.கேவுடன், ஆயில்யன் வந்திருந்த போது ஒரு முறை கப்பி, கனகு, ஸ்ரீவத்ஸ்-உடன், மற்றோரு முறை முல்லை, தீபா, நான் ஆதவன், அமித்து அம்மா, அமுதா, ஸ்ரீமதி, கனகுவுடன்னு ஜனவரி மாசம் கலகலப்பா போச்சு. இது மட்டும் இல்லாம பழைய அலுவலக மக்களோட அவதார் (3D) & தமிழ்படம் தியேட்டர்ல பாத்து செம் ரகளை. ரெண்டுமே ஈவ்னிங் ஷோ போயிட்டு லேட்டா வந்த்தால வீட்ல நல்ல அர்ச்சனை. இதுக்கெல்லாம் அசந்துடுவோமா நாம?? உஷாரா இந்த வாரம் My name is Khan படத்துக்கு காலைல 9 மணி ஷோக்கு டிக்கெட் போட்டுட்டோமில்ல.. இப்ப என்ன செய்வாங்க.. இப்ப என்ன செய்வாங்க.. :P


நான் கண்டிப்பா எழுதியே ஆகனும்னு நினைச்ச இன்னொரு பதிவு என்னோட கோயம்பத்தூர் பயணம் பத்தி. கூட வர்றேன்னு சொன்ன கில்ஸ் கடைசி நேரத்தில்.. இல்லை இல்லை.. ஒரு வாரம் முன்னதாகவே காலை வாரி விட.. கூட வந்த சிவிஆர் அண்ணாச்சியும் அவர் மனைவியும் அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு அப்பீட் ஆக, ஜி3 அக்கா வராங்கனு பதிவு போட்ட சஞ்சய்யோ பயந்து ஊரை விட்டு ஓடிவிட விடப்பட்டேன் நான் தனிமையில் :( என்ன பண்ணலாம்னு ரொம்ப யோசிக்காம போய் சேந்த கொஞ்ச நேரத்துல நம்ம அனுசுயாக்கு போன போட்டு சேதி சொல்லிட்டு அவங்க வீட்ல ஆஜர் ஆகியாச்சு.சாயந்திரம் வரைக்கும் அவங்க வீட்ல நேரத்தை ஓட்டிட்டு சாயந்திரம் தினேஷோட ரிசப்ஷன் அட்டெண்ட் பண்ணிட்டு நல்லா சாப்டுட்டு (நான்-வெஜ் எல்லாம் போட்டாங்கப்பா :)) ஹோட்ட்லுக்கு வந்து தூங்கியாச்சு. காலைல சமத்தா கல்யாணத்துக்கு போயிட்டு வந்து ரூம்ல உட்கார்ந்து பொழுது போகாம டீவி பாத்துட்டிருந்தேன். புது நம்பர்ல இருந்து ஒரு ஃபோன். நான் மயில் விஜி பேசறேன். சஞ்சய் தான் உங்க நம்பர் குடுத்தாரு. என்ன பண்ணிட்டிருக்கீங்க? வேற ஏதும் ப்ளான் இல்லனா மதியம் வீட்டுக்கு சாப்பிட வாங்கனு கூப்பிட்டாங்க.. அவங்கள முன்னபின்ன எனக்கு தெரியாது. அவங்க ப்ளாக் பக்கம் நான் போனதில்லை. என் பளாக்குக்கும் அவங்க வந்த்தில்லை (அதனால தான் தைரியமா கூப்பிட்டாங்களோ!!!!). சிலர் ப்ளாக்ல அவங்க பின்னூட்டம் மட்டுமே பாத்திருக்கேன். இருந்தாலும் டக்குனு வர்றேனு ஒத்துக்கிட்டேன் (யாருப்பா அது?? சோறு போடறேன்னு கூப்பிட்டதால தானேனு சொல்றது??)ஆனா தெரியாதவங்க வீட்ல இருக்கற மாதிரியே தோணலை. அவங்களும் அவங்க கணவரும் ரொம்ப ஜாலியா பேசினாங்க. கலகலப்பா போச்சு அன்றைய மதியப்பொழுது.இதோ வர்றேன் அதோ வர்றேன்னு சொல்லிட்டிருந்த சஞ்சய் கரெக்டா வழியனுப்ப வந்துட்டாரு :)))


போன வாரத்துல ஒரு நாள் ஸ்ரீவத்ஸ் ஃபோன் பண்ணி ஆர்த்தி கிட்ட ஏரோபேட்டிக்ஸ் ஷோக்கு டிக்கெட் இருக்காம் வர்றீங்களானு கேட்க, நானும் சுறுசுறுப்பா அதைவிட வேற என்ன வேலைனு ஆஜர் ஆகிடறேன்னு சொல்லிட்டேன். என்ன ஷோன்னெல்லாம் எதுவுமே தெரியாது.ஆபீஸ்ல ஃப்ரெண்டு வீக் எண்ட் என்ன ப்ளான்னு கேட்டப்போ இது மாதிரி ம்யூசிக் அகாடமில ஏதோ ப்ரோக்ராமாம்னு சொன்னது தான் தாமதம். உனக்கு டிக்கெட் இருக்கா எப்படி கிடைச்சுதுனு ஏகப்பட்ட கேள்வி. அடடா அப்படி என்ன ஷோனு யோசிச்சப்போ அவங்களே அதுக்கான லிங்க்கும் குடுத்தாங்க. இது தான் அந்த லிங்க். அடடா இப்படி ஒரு சூப்பர் ப்ரோக்ராமுக்கா போறோம்னு ஒரே குஷிதான் போங்க. நான், ஆர்த்தி, ஆர்த்தியோட அம்மா, ஸ்ரீவத்ஸ், அபர்ணா, அபர்ணாவோட பையன் ஆகாஷ்னு எல்லாரும் சனிக்கிழமை அன்னிக்கு 6 மணி ஷோக்கு ஆஜர் ஆகியாச்சு. உள்ள போலாம்னு டிக்கெட்ட நீட்டினா அங்க இருக்கறவரு ஒரு பெரிய குண்ட போட்டுட்டாரு. இது 8.30 மணி ஷோக்கான டிக்கெட்டுங்கனு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. சரி வேற வழி இல்லை வெயிட் செஞ்சாவது பாத்துட்டு தான் போகனும்னு நாங்க முடிவெடுக்க அந்த நல்லவரு கொஞ்சம் மனமிறங்கி பரவாயில்ல.. கொஞ்சம் சீட் காலியா இருக்கு. நீங்க போய் பாத்துக்கோங்கனு உள்ள அனுப்பினான்.. எங்கிருந்தாலும் அவன் நீடூழி வாழட்டும் :D ப்ரோக்ராம் பத்தி என்னத்த சொல்ல.. சான்ஸே இல்ல போங்க.. அம்புட்டு சூப்பரா இருந்துது. ஒரு சின்ன ட்ரெய்லர் இங்க பாருஙக :)

கிளிஞ்சல்கள்... II

கிளிஞ்சல்கள்... I

பல நேரங்கள்ல நம் நண்பர்களுக்கு கிடைக்கும் வெற்றி / அங்கீகாரம் நமக்கே கிடைச்ச மாதிரி சந்தோஷத்தை குடுக்கும். எதை பத்தி சொல்றேன்னு சிலர் கெஸ் பண்ணியிருப்பீங்க. நம் சக வலைபதிவர், எங்கள் பாசமலர் சிவீஆர் அண்ணாச்சியின் புகைப்படங்கள் "Alliance Francaise of Madras" இல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் அவருடைய திறமைக்கு கிடைத்த வெற்றி இது.. இது போல் இன்னும் அவருடைய புகைப்படங்கள் பல அரங்கங்களில் இடம் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆகஸ்ட் 19-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது. உங்களின் வருகை அவரை நிச்சயம் ஊக்கப்படுத்தும்.

இடம் : Alliance Française of Madras
New No.24, College Road,
Nungambakkam,
Chennai 600 006.
Tel: 91 44 28279803/ 28271477

நேரம் : காலை 9 முதல் மாலை 7 வரை.
சனிக்கிழமை பிற்பகல் 1 மணி வரை.

மேலும் விபரங்களுக்கு - http://simplycvr.blogspot.com/2009/07/my-exhibition-in-alliance-francaise.html

அவருடைய புகைப்படங்கள் அனைத்தையும் காண http://www.flickr.com/photos/seeveeaar/


இப்ப எல்லாம் ஊர் சுத்தல் அதிகமாகிடுச்சு. போன வாரம் கல்பாக்கத்துல கார்னிவல் நடக்குது வாங்க ஜி3னு தோழி கூப்பிட, கட்றா பொட்டியனு கிளம்பியாச்சு. இன்சுயூரன்ஸ் ஏஜன்ஸில இருந்து நகை கடை வரை எல்லா ஸ்டாலும் இருந்துது. நல்லா ஒரு நாள் பொழுது ஓடுச்சு. ஆகஸ்ட் 9-ம் தேதி வரை இந்த கார்னிவல் நடக்கிறதாம்.


இது Giant Wheel-ல சுத்தறப்போ எடுத்தது :)


அவார்ட் நேரம் - கனகு & கில்ஸ் எனக்கு குடுத்த விருதுகள்...




ஸ்ரீவத்ஸ் குடுத்த விருது.


கனகு, ஸ்ரீவத்ஸ் & கில்ஸ் மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த விருதோட கேட்டகரி என் வலையுலக நண்பர்கள் எல்லாருக்குமே பொருந்துவதால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்னு இல்லாம எல்லோருக்கும் இந்த விருதை பரிசளிக்கிறேன் :))))


எதிர்பாராமல் கிடைக்கும் எந்த ஒரு பரிசும் அபரிமிதமான சந்தோஷத்தை குடுக்கும். அதுலயும் நமக்கு பிடித்த விஷயம் சம்பந்தபட்டதாகவும், கொடுப்பவர்களின் உழைப்பும் கலந்து இருந்தா.. மகிழ்ச்சிக்கு எல்லையும் உண்டோ?? என் தோழி சந்தியா அவளே பெயிண்ட் செய்து எனக்கு பரிசளித்த படம்.. என் ஃபேவரைட் பிள்ளையார் :)))))))))))))



கடைசியா ஒரு சுயவிளம்பரம் ;-) இந்த வாரம் றேடியோஸ்பதியில் சிறப்பு நேயர் பகுதியில் என் பாடல் தேர்வுகள் ஒலிபரப்பாகியுள்ளது. நீங்களும் படிக்க / கேட்க இங்கே செல்லுங்கள்.

இதே போல் உங்களுக்கு பிடித்த பாடல்களும் பதிவா வரணும்னு ஆசைப்படறவங்க, என்ன பாடல், ஏன் அந்த பாடல் பிடிக்கும்ங்கற காரணத்தோட kanapraba@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பலாம் :) நீங்களும் சிறப்பு நேயர் ஆகலாம் :)))

கிளிஞ்சல்கள்...

நம்ம கவிதாயினி காயத்ரிக்கு போட்ட பதிவ பத்தி அம்மணி ஒன்னுமே சொல்லலையே.. பதிவ பாத்தாளா இல்லையானு கேட்கலாம்னு ஃபோன் பண்ணேன். ஃபோன எடுத்ததும் ஒரு குரல் சொல்லுங்க எப்படி இருக்கீங்கனு ரொம்ப கேஷுவலா கேட்க கவிதாயினி ஃபோன வேற யாரு எடுக்க போறா சித்தார்த் தான் போலனு நானும் சித்தார்த் கிட்ட பேசறதா நினைச்சிக்கிட்டு பேசிட்டிருந்தேன். கிட்டதட்ட 5 நிமிஷம் அந்த சைட் இருந்த நபரும் அதே பிட்ட மெயிண்டேன் பண்ணாலும் நடுவுல ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்துது நம்மள வைச்சு ஏதோ காமெடி பண்றாங்களோனு. அதுக்கப்புறம் எதுக்கோ சஞ்சய் பேரு 2-3 வாட்டி வரவும் தான் திடீர்னு மண்டைல பல்பு எரிஞ்சுது இது சஞ்சய்யோட வாய்ஸ்சாச்சேனு.. அடப்பாவி.. சஞ்சய் நீயானு கேட்டா அந்த பக்கம் கவிதாயினி, சித்தார்த், சஞ்சய்னு எல்லாரும் ரவுண்டு கட்டி சிரிக்கறாங்க. அவ்ளோ நேரம் நான் வாங்கின மொக்கைய எல்லாரும் ஸ்பீக்கர்ல போட்டு கேட்டிருக்காங்க.. அடப்படுபாவிங்களானு இருந்தாலும் நான் வாங்கின பல்ப நினைச்சு எனக்கே சிரிப்பு தாங்கல. சஞ்சய் உடனே ஹலோ வாங்கின பல்புக்கு நியாயமா நீங்க அழனும் சிரிக்க கூடாதுங்கறாரு.. என்னதிது சின்னப்புள்ளத்தனமாயில்ல இருக்கு..வாங்கற பல்புக்கெல்லாம் அழனும்னா எந்த காலத்துல நான் அழுது முடிக்கறது.. அதெல்லாம் நாங்க அப்பப்ப தொடச்சிட்டு போய்க்கிட்டே இருப்போமில்ல :))))))


Punctuality = கில்ஸ் அப்படினு நான் தனியா ஒரு பதிவே போடலாம். அவ்வளவு நல்லவரு மனுஷன். சொன்ன டைம்க்கு வந்துட்டாருன்னா அன்னிக்கு கண்டிப்பா மழை உண்டு. அப்படி இருந்தாலும் அவரையும் மனுஷன்னு மதிச்சு போன சனிக்கிழமை சாயந்திரம் 4 மணிக்கு பெசண்ட் நகர்ல மீட் பண்ணலாம்னு கூப்பிட்டோம். சரி சரினு சொல்லிட்டு.. 3 மணிக்கு ஃபோன் பண்ணா 4 மணிக்கு ரொம்ப குஷ்டமாச்சேங்கறாரு.. சரி பொழைச்சு போங்க.. 5.30க்காவது வருவீங்களானு கேட்டா.. 5.30க்கு தானே.. வந்துடறேன்னு சொன்னாரு. இவரை நம்பி மருதமும் நானும் கிளம்பி போனா மனுஷன் 6.45 வரை வரவே இல்லை. அப்பவும் இன்னும் 10 நிமிஷத்துல வர்றேன் 15 நிமிஷத்துல வர்றேன்னு ரன்னிங் கமெண்ட்ரி தான்.. இது வேலைக்காகாது.. நீங்க ஆணியே புடுங்க வேணாம்.. நாங்க உங்கள வீட்ல வந்தே பாத்துக்கறோம்னு நேரா அவர் வீட்டுக்கே படையெடுத்தாச்சு. வீட்டுக்கு போனதுக்கு ஒரே லாபம் பல வருஷங்களா அவர் எனக்கு தர வேண்டிய சாக்லேட் கணக்குக்கு ஒரு சாக்லேட் மட்டும் குடுத்தாரு.. அடுத்த சாக்லேட்ட வாங்க இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கனுமோ !!!


என் மொபைல்க்கு ஒரு நல்ல பவுச் தேடி தேடி சலிச்சு போனப்போ என் தோழி ஒருத்தங்க நான் செஞ்சு தர்றேனு சூப்பரா ஒரு பவுச் செஞ்சு குடுத்தாங்க. சைட்ல ஹெட்செட் மாட்ட வசதியா இடம் விட்டு ஜி3னு பேரு போட்டு.. அட இது நல்லா இருக்கே. எனக்கும் சொல்லி தாங்களேன்னு அவங்க கிட்ட கத்துக்கிட்டு நானே என் ஐபாட்க்கு பவுச் போட்டேன். ஆர்வமா இருந்ததால நெட்ல தேடி இன்னொரு டிசைனும் போட்டேன். சூப்பரா பொழுது போகுது :-))




போன வாரத்துல படிச்ச புத்தகம் Preeti shenoy-ன் 34 Bubblegum and Candies. அவங்களோட வலைதளத்தை சமீப காலமா தான் படிக்க ஆரம்பிச்சேன். அவங்க ப்ளாக்ல அவர் போட்டிருந்தது "Like my blog? You'll LOVE my Book!" அப்படினு தான். நிச்சயமா அவங்களோட வலைதளம் எனக்கு பிடிச்சிருந்துது. அவங்க அந்த புத்தகத்தைப்பற்றி குடுத்திருந்த அறிமுகமும் பிடிச்சிருந்துது. சரி என்ன தான் இருக்குனு அந்த புத்தகத்தையும் வாங்கி படிச்சாச்சு. 34 நிகழ்வுகளை தொகுத்து குடுத்திருக்காங்க. எனக்கு பிடிச்சிருந்துது.

நான் படிக்க ஆரம்பிச்ச இன்னொரு புத்தகம் உமா மகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை. சத்தியமா அந்த புத்தகத்தை முழுசா படிக்க முடியலைங்க. ஓவர் சோகம், ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் (சரியான அறிமுகங்கள் ஏதும் இல்லை. கதையின் போக்கில் நாமே புரிந்துகொள்ள வேண்டும்), தொடர்ச்சியாய் இல்லாமல் அங்கங்கு சில சம்பவங்கள் (உதாரணத்திற்கு ஒரு அம்மணிய டைபாய்டின் உச்சத்தில் ஆஸ்பத்திரியில் சேர்க்க அவர்கள் படும் அவஸ்தைய ஒரு அத்தியாயத்துல சொல்லியிருப்பாங்க.. நடுவுல வேறு சில அத்தியாயங்கள்ல மத்த கதாபாத்திரங்கள் பத்தி சொல்லிட்டு அப்புறம் ஒரு அத்தியாயத்துல இவங்க ஆஸ்பத்திரில இருந்து வீட்டுக்கு திரும்பி வர்ற காட்சிய சொல்லியிருப்பாங்க. திரும்ப சில அத்தியாயம் கழித்து இவங்க கதாபாத்திரம் பத்தி சொல்ல வர்றப்போ அடுத்த பிரசவத்திற்கு செல்வது போல் சொல்லப்படுகிறது). இது நமக்கு வேலைக்காகாதுனு அப்படியே அந்த புக்கை ஓரம்கட்டி வைச்சாச்சு.

தற்சமயம் படித்துக்கொண்டிருப்பது Arundhati Roy-ன் The God of Small Things.


வலையுலகில் புதுசா ஒரு தோழி வந்திருக்காங்க. அன்னம்ங்கற பேர்ல எழுதறாங்க. அவங்க பதிவுல கும்ம இங்க போங்க :-))))

கிளிஞ்சல்கள் சேகரிப்பு தொடரும்...