வணக்கம் மக்கள்ஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க? உலக அதிசயமா ஆபீஸ்ல ஆணி அதிகமாயிருச்சு.. அதான் உங்க ப்ளாக் பக்கமெல்லாம் வர முடியல.. அப்படியே கொஞ்சம் கேப் கிடைக்கும் போதெல்லாம் உங்க பதிவுகள எட்டி பாக்கறேன் :))
போன போஸ்ட்ல வந்து எல்லார் கமெண்டுக்கும் பதில போட்ட பில்லு பரணிக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் :-))
எல்லாரும் கே.கே. மீட்ட பத்தி ஏன் இன்னும் போஸ்ட் போடலன்னு எல்லா பக்கத்துல இருந்தும் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.. சரி, இதுக்கு மேலயும் லேட் பண்ணா வேளைக்காகாதுன்னு இதோ இன்னிக்கு போஸ்டறேன்..
ஸ்டார்ட் த மீஜிக் ;)
கே.கே.வ 24-ம் தேதி மீட் பண்ணலாம்னு முடிவு பண்ணதும் லொகேஷன் எல்லாருக்கும் பொதுவா எங்க டிசைட் பண்ணலாம்னு யோசிச்சோம்.. அப்போதைக்கு மீட்டுக்கு வர்றதுலயே குட்டி பொண்ணு நம்ம sagittarian ரம்யா.. அவங்க ஏரியா பக்கமா பாப்போம்.. அதனால கே.கே.நகர்ல மீட் பண்ணலாம்னு முடிவு பண்ணோம்.. அந்த ஏரியா பத்தி நமக்கு பெருசா ஒன்னும் தெரியாது.. சரி நீங்களே சொல்லுங்கன்னு சுப்பு கிட்டயும் ரம்யா கிட்டயும் பொருப்ப விட்டுட்டேன்.. மக்கள் திரும்பி வந்து சொன்ன லிஸ்ட்ட பாத்ததும் எனக்கு செம டென்ஷன்.. இருக்காதா பிண்ண?? அவங்க சொன்ன இடம் ஹாட் சிப்ஸ், சரவண பவன், வசந்த பவன், அடையாறு பேக்கரி.. அம்மா புண்ணியவான்களா? என்னதிது எல்லாம் வெஜிட்டேரியனா இருக்கு.. இதெல்லாம் விட்டுட்டு நல்ல நான் - வெஜ் ரெஸ்டாரண்ட்டா பாருங்க. அதுவும் நம்ம ரேஞ்சுக்கு இல்ல கே.கே. ரேஞ்சுக்குன்னு சொல்ல, கடைசியா முடிவான இடம் வடபழனில இருக்கற Green Park. ரம்யாவுக்காக அந்த ஏரியால மீட் வெச்சோம்.. ஆனா கடைசி நேரத்துல அவங்க வர முடியாம போயிடுச்சு :(
Location : Green Park, Time : 6.45 P.M.
நாம தான் Punctuality-இன் சிகரமாச்சே.. கரெக்டா அங்க போய் நின்னா நம்ம மக்கள்ஸ் யாரையும் காணோம்.. நம்ம ஏஸ் முன்னாடியே சொல்லி இருந்தாரு. அவரு ஆபீஸ் அதுக்கு பக்காத்துல தானாம். அதனால நாங்க எல்லாரும் வந்ததுக்கப்புறம் அவருக்கு போன் பண்ணா அவரு வந்துடுறதா.. சரின்னு அவருக்கு போன் பண்ணி வர சொல்லிட்டு மத்த மக்கள்ஸ் எல்லாம் எங்க இருக்காங்கன்னு பாக்கலாம்னு எல்லாருக்கும் லைனா கால் பண்ணா, கோல்மால் நான் இங்க தான் பக்கத்து சந்துல இருக்கேன் வந்துடறேன்னாரு. கே.கே.வோட தங்கமணிக்கு போன் பண்ணா வடபழனி சிக்னல்ல இருக்கோம் வந்துடறோம்னு சொல்லிட்டாங்க. சுப்புவுக்கு போன் பண்ணா நான் வடபழனிக்கு பதிலா கே.கே. நகர் வந்துட்டேன்.. இங்க இருந்து எப்படி வர்றதுன்னு தெரில.. சீக்கிரம் கண்டுபிடிச்சு வந்துடறேன்னு சொல்லிட்டாரு.. சரி.. எல்லாரும் பொருமமயா வரட்டும் நான் ஜம்முனு சோபால உக்காந்து அங்க இருந்த கொஞ்சம் நல்ல முகங்கள சைட் அடிச்சிட்டிருந்தேன்.. அப்புறம் வரிசையா நம்ம மக்கள்ஸ் வர ஆரம்பிச்சாங்க.. கே.கே வந்ததும் இந்த பில்டிங்க நான் வெளியில இருந்தே பாத்திருந்தா அப்படியே திரும்பி போயிருப்பேன்னு பீல பண்ண.. நாங்க அத பத்தி எல்லாம் கண்டுக்காம ஜம்முனு Buffet ஹால நோக்கி கிளம்பிட்டோம் :)
எல்லாரும் ஒருத்தர ஒருத்தர் அறிமுகம் பண்ணிக்கிட்டு பேசிட்டிருக்கும் போதே சூப் வந்துது.. அதை குடிச்சிட்டிருக்கும் போது திடீர்னு பில்லு கிட்ட இருந்து ஒரு போன். (தலைவரு மொதல்ல வரலைன்னு சொல்லி இருந்தாரு) நான் இங்க வாசல்ல இருக்கேன். நீங்க எங்க இருக்கீங்கன்னு. சரி அவர போய் கூட்டிட்டு வரலாம்னு எழுந்தா, கே.கே உடனே ஹையா பில்லு கட்ட பில்லுவே வந்துட்டாரு. நானே போய் அவர கூட்டிட்டு வர்றேன்னு துள்ளி குதிச்சு ஓடினார். பில்லு வந்துட்டு நான் உங்கள எல்லாம் பாக்கலாம்னு தான் வந்தேன். எனக்கு சாப்பாடெல்லாம் எதுவும் வேணாம்னு சொல்லிட்டாரு. சரி அவர் இருக்கும் போதே மக்களுக்கு வாங்கின கிப்ட குடித்துடலாம்னு கே.கே.க்கு அவரு ஆசைப்பட்டு கேட்ட ராஜாராம் ப்ராண்ட் வேர்கடலை பர்ஃபியும், அவரோட தங்கமணிக்கு அவரு போட்டோ பிரிண்ட் பண்ண கப்பும் (கப் எங்க மனசு மாதிரியே கொஞ்சம் பொருசா இருந்துது :))குடுத்தோம். கோல்மால் அவர் பங்குக்கு ஒரு flower vase-ம் ஒரு கார்டும் குடுத்தாரு. அத பிரிச்சதும் நம்ம கே.கே. பாத்துக்கோங்கப்பா.. இப்பவே கூஜா தூக்கிட்டேன்னு சந்தோஷமா டயலாக் அடிச்சிட்டிருந்தாரு :)
இந்த கேப்ல ப்ரீத்ஸ் எல்லார் கிட்டயும் பேசனும்னு ஆசைப்பட்டான்னு சொல்லி சுப்பு அவங்களுக்கு கால் பண்ண எல்லாரும் அவங்க கிட்ட போன்ல பேசினோம். அது முடிஞ்சதும் பில்லு சரி எனக்கு டைம் ஆச்சு.. தம்பி காத்துட்டிருப்பான்னு சொல்லி அவரு ஜூட் விட்டுட்டாரு. கே.கே.வோட தங்கமணிக்கு கொஞ்சம் வருத்தம். கே.கே ப்ளாக்ல நிறைய பொண்ணுங்க கமெண்ட்ஸ் பாத்திருக்கேன். அதனால நிறைய பொண்ணுங்க தான் வருவங்கன்னு நினைச்சேன்னு சொல்லிட்டிருந்தாங்க :)) சரி கே.கே. வ கொஞ்சம் ஓட்டலாம்னு பாத்தா வந்த மக்கள் எல்லாரும் அவரோட சேந்து நமக்கே ரிவீட் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. சரி. இதை இப்படியே விட்டா சரி வராது. நம்ம துணைக்கு Sat தான் சரியான ஆளுன்னு அவங்களுக்கு போன் பண்ண அவங்களால முடிஞ்ச உதவிய கொஞ்சம் போன் மூலமாவே பண்ணாங்க :)) அப்புறம் நம்ம வேதா கால் பண்ணி எல்லார் கிட்டயும் பேசிட்டு அப்படியே அவங்க ப்ளாக்குக்கு வந்து கமெண்ட சொல்லி சுப்பு கிட்ட அவங்க ப்ளாக்கும் ஒரு விளம்பரம் குடுத்துக்கிட்டாங்க :))
எல்லார் கிட்டயும் பேசிட்டு அப்படியே சைட்ல சாப்பிட்டும் முடிக்க நாங்க ஆர்டர் பண்ண கேக் வந்து சேந்துது. கே.கே.வோட தங்கமணி மெழுகுவர்த்திய ஊத கே.கே கேக்க கட் பண்ண எல்லாரும் அதையும் கொஞ்சம் டேஸ்ட் பண்ணிட்டு அப்படியே மீதியெ பேக் பண்ணி கே.கே. கிட்ட குடுத்துட்டோம்.. நம்ம கே.கே. பில்ல பே பண்ண, ஒரு சூப்பர் ஈவ்னிங் ஸ்பெண்ட் பண்ண சந்தோஷத்துல எல்லாரும் கிளம்பினோம்.. கிளம்பும் போது கூட கே.கே. நம்மள விடறதா இல்ல. உங்க வண்டிய நாங்க பாத்தே ஆகனும்னு வண்டி பார்க்கிங்க்கு வந்து எல்லாரும் லைனா நின்னுட்டாங்க. சரின்னு நம்ம Scooty Pep-அ எல்லாருக்கும் பெருமையா காமிச்சிட்டு அதான் பாத்துட்டீங்க இல்ல. எல்லாரும் கிளம்புங்கன்னு சொன்னா அதெல்லாம் கிடையாது அது எப்படி உங்க வெயிட்டோட மூவ் ஆகுதுன்னு பாத்தே தீரணும்னு அடம் பிடிக்க.. இதுக்கு மேல இங்க இருந்தா நமக்கு ஆப்பு பலமா வரும்னு நம்ம மனசாட்சி வார்ன் பண்ண, மீ த எஸ்கேப்..
அப்புறம் மத்த மக்கள்ஸ் எல்லாம் எப்போ கிளம்பினனங்கன்னு அவங்க தான் வந்து சொல்லனும் :)