ஆன்லைன் வந்த கொஞ்ச நேரத்துல பிங் பண்ண எல்லாருமே கேட்ட ஒரே கேள்வி சிவிஆர் கல்யாணத்துக்கு போனீங்களானு தான். சரி. ஒட்டுமொத்தமா பதிவாவே போட்டு எல்லாருக்கும் சொல்லிடலாம்னு தான் இந்த பதிவு. உண்மைய சொல்லனும்னா நாங்க சிவிஆர் கல்யாணத்துக்கு போகவே இல்லை. பின்ன என்னங்க பின்ன. அர்த்த ராத்திரில(5.30-6.30) மூகூர்த்தம் வைச்சா எப்புடிங்க போறது. அதனால மொத நாளே ரிசெப்ஷனுக்கு போயிட்டு வந்துட்டோம் :) மொய் பணத்துக்கு நிறைய பேர் பணம் குடுத்திருந்தாலும் கல்யாணத்துக்கு... சாரி ரிசெப்ஷனுக்கு போனது நான், கப்பி, ஜேகே & இம்சை அரசியோட ரங்கமணி (பிரபு) மட்டும் தான்.
எல்லாரும் 7.30 மணிக்கு மண்டபத்துக்கு வந்துடலாம்னு ப்ளான் எல்லாம் ரொம்ப தெளிவா போட்டோம். போட்ட ப்ளான் படி மக்கள் எப்போ நடந்துட்டிருக்காங்க சொல்லுங்க?? நம்ம கப்பி மொத ஆளா மண்டபத்துக்கு 6.30 மணிக்கே வந்து உட்கார்ந்துட்டாரு. நான் எப்பவும் போல சமத்தா சொன்ன நேரமான 7.30க்கு போனேன். வண்டிய நிறுத்தும் போதே முன் தினம் பார்த்தேனேனு பாட்டு செமையா அலறிட்டிருந்துது. ஆஹா.. சவுண்ட் எஃபெக்ட் சூப்பரா இருக்கேனு நினைச்சிக்கிட்டே கப்பிய தேடினா அவர் கூலா சிவிஆரோட தம்பி கூட உட்கார்ந்திருந்தாரு. அந்த அப்புராணிய இதுக்கு முன்னாடி பாத்தப்போ என்னைய கவிதை எழுதறவங்கனு கப்பி போட்ட பிட்ட கரெக்டா ஞாபகம் வைச்சிருந்து அதை வைச்சே கலாய்க்க ஆரம்பிச்சாங்க :( மத்த மக்கள் எல்லாம் எங்கனு கேட்டா ஜேகேவும் பிரபுவும் 7 மணிக்கு தான் கிளம்பினாங்களாம். ஒரு 8.30மணிக்கு தோராயமா வந்துடுவாங்கனு தகவல் சொன்ன கப்பி, மொய் கவர் போய் வாங்கிட்டு வந்துடுறேன்னு கிளம்பி போனாரு... போனவரு போனவரு தான்.. அரை மணி நேரம் ஆகியும் வரலியேனு ஃபோன் பண்ணா இதோ மண்டபம் கிட்ட வந்துட்டேன்றாரு. எங்க போய் யாரை சைட் அடிச்சிட்டு வந்தாருனு யாம் அறியோம் பராபரமே !!!
நான் பாட்டுக்கு ஜாலியா அந்த அரைமணி நேரம் பாட்டு கேட்டுட்டு இருந்தேன். ஆர்க்கெஸ்ட்ரா மக்கள் சூப்பரா பாடினாங்க. அந்த காலத்துக்கு பலே பாண்டியா முதல் இந்த காலத்து அயன் பாடல்கள் வரை எல்லா பாட்டுமே கலக்கலா பாடினாங்க. மேடை அலங்காரங்களும் சூப்பரா இருந்துது. ஒரு வழியா கப்பியும் ஜேகேவும் 8 மணிக்கு வந்து சேந்தாங்க. சரினு கப்பி வாங்கிட்டு வந்த கவர்ல பணம் குடுத்த எல்லார் பேரையும் எழுதலாம்னு ஆரம்பிச்சா, சிவிஆரோட தம்பி என்னங்க கவிதை எழுதறீங்களானு கேட்டாரு (அப்பாவி லுக்கோட :(( ).. கப்பியும் சும்மா இல்லாம ஆமாங்க இங்க பாருங்க ஒண்ணு கீழ ஒண்ணா எழுதறாங்கனு (நிறைய பேர் இருந்ததால வரிக்கு நாலு பேர்னு எழுதினது ஒரு குத்தமாய்யா???) ஏத்தி விட.. தனியா வந்து சிக்கிட்டியே ஜி3ன்னு எனக்கு நானே ஃபீல் பண்ணிக்க வேண்டியதா போச்சு.
ஒரு வழியா 8.30 மணிக்கு நம்ம பிரபு வந்து சேர்ந்தாரு. அவர பாத்ததும் கப்பி ரொம்ப சந்தோஷமா “அப்பாடா இனி சாப்பிட போலாம்னு” சொன்னாரு (நிற்க. பின்னூட்டத்துல வந்து யாராவது இது நீங்க சொன்ன டயலாக் தானேனு சொன்னீங்கனா பாரபட்சமின்றி உங்கள் கமெண்ட் நிராகரிப்படும் என்பதை மிகத்தாழ்மையுடன் கூறிக்கொள்(ல்)கிறேன் :P). சரினு எல்லாரும் கூடி பேசி கிப்ட குடுக்கலாம்னு போய் லைன்ல நின்னா, அவ்ளோ நேரம் நல்ல பாட்டா பாடிட்டிருந்த ஆர்கெஸ்ட்ரா கும்பல், அப்போனு பாத்து “அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை”னு சோக ராகம் பாட ஆரம்பிக்கறாங்க. கப்பி அப்படியே அந்த சிட்டுவேஷனுக்கே போய் ஓவர் சோகமா ஒரு ரியாகஷன் குடுக்க, ஜேகே “மாப்ள நாம அப்படியே தள்ளாடிக்கிட்டே தான் மேடைல ஏறனும்”னு சொல்ல கச்சேரி சூப்பரா கலை கட்டுச்சு :)
மேடைல போய மணமக்களுக்கு வாழ்த்துக்கள சொல்லிட்டு முக்கியமான வேலையான சாப்பாட்டு பந்திய நோக்கி போயாச்சு. சாப்பிடும்போது ஜேகே நல்லாவே “பக்கத்து இலைக்கு பாயசம்” கேட்டாரு. என்ன... மனுஷன் பாயசத்துக்கு பதில் தயிர் சாதத்த கேட்டுப்புட்டாரு :(( இதுல சாம்பார் சாதத்துக்கு பதில் பிசிபெல்லாபாத் குடுத்துட்டாங்களாம். எனக்கு சாதம் போட்டு சாம்பார் ஊத்தினாதான் ஒத்துக்குவேன்னு அடம் வேற :(. என்ன கொடுமை சார் இது!!! ஒருவழியா சாப்பிட்டு முடிச்சிட்டு கைகழுவிட்டு வரும்போது கப்பி ”சாப்பிடறப்போ யாரோ என்ன பாத்து கை அசைச்சாங்க. அவர எங்கயோ பாத்த மாதிரி இருக்கு”னு சொல்லிக்கிட்டே வர.. அங்க பாத்தா எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த அபர்ணாவோட ப்ரெண்ட் உட்கார்ந்திருந்தாரு. சரி அவர பாத்து ஒரு வணக்கம் சொல்லலாம்னு அவர் சாப்பிட்டுக்கிட்டிருந்த பந்திகிட்ட போக, நாங்க அப்போதான் சாப்பிட வர்றோம்னு நினைச்சு ”இங்க வந்து உட்காருங்க”னு பந்தி பரிமாறிட்டிருந்தவங்க கூப்பிட, ஜேகே ரொம்ப பொறுப்பா “அவங்க ஏற்கனவே ரெண்டாவது ரவுண்ட் சாப்டுட்டாங்க”னு சொல்லி ஓவரா டேமேஜ் பண்ணிட்டாரு :(((((((
அப்பாலிக்கா நானும் ஜேகேவும் ஜஸ்க்ரீம் சாப்பிட, கப்பியும் பிரபுவும் பீடாவோட டின்னர முடிச்சிக்கிட்டாங்க. அப்புறம் என்னங்க.. பொறுப்பா எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்கு கிளம்பி போயாச்சு.
இவ்ளோ பெரிய பதிவ போட்டுட்டு மணமக்களுக்கு வாழ்த்த சொல்லலனா எப்படிங்க..

பி.கு. : அடுத்த கல்யாண ட்ரிப்புக்கு இப்பவே டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சு. அப்படியே அதை ஒரு சுற்றுலா ட்ரிப்பா மாத்தலாம்னு ஒரு ஐடியா இருக்கு. ஆகையால் மக்களே... உங்களுக்கு தெரிஞ்சு நாகர்கோவில் சுற்றுவட்டாரத்துல ஏதாவது நல்ல இடங்கள் சுத்தி பாக்கற மாதிரி இருந்தா தகவல் சொல்லுங்க :))) நீங்க தரப்போற தகவலுக்கு முன்கூட்டியே ஒரு நன்றி சொல்லிக்கறேன் :)))

இந்த பிரவாகம் வலைப்பூ துவங்கி மூன்றாண்டுகள் முடிந்து சந்தோஷத்துடனும் உங்க எல்லாரோட ஆதரவுடனும் நான்காம் ஆண்டில் மகிழ்ச்சிகரமாய் நுழைகிறது. இந்த வலைப்பதிவின் உதவியால் என் வாழ்வில் பிரவாகமாக பெருகியது நண்பர்கள் வட்டம்னு சொன்னா அது மிகையாகாது. நான் அவர்கள் வலைப்பூவை படித்து பின்னூட்டமிட்டோ அவர்கள் என் வலைப்பூவை படித்து பின்னூட்டமிட்டோ அறிமுகமான நண்பர்கள் சிலர். அவர்களோட நண்பர்கள் அந்த நண்பர்களின் நண்பர்கள்னு அறிமுகமானவர்கள் பலர். அவங்களோட வலைப்பூவ நான் படிச்சது ரொம்ப கம்மி (பல சமயங்கள்ல சுத்தமா கிடையாதுங்கறது தான் உணமை :) ) ஆனாலும் ஜிடாக் அரட்டை , க்ரூப் மெயில் மொக்கைனு பழக்கமாகி அவர்களும் நல்ல நண்பர்களானது தனி கதை :)
இங்க சொல்லியே ஆகவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் வலைப்பதிவர் சந்திப்பு. முதன் முதல்ல நான் நேர்ல சந்திச்சது கன்யா-வ தான். அவங்க வீட்டுக்கு தான் போயிருந்தேன். அவங்கம்மா தங்கச்சி எல்லாரோடவும் நல்ல கலாட்டாவா நேரம் போக சாயந்திரம் எல்லாரும் ராயப்பேட்டால இருக்கற பொன்னுசாமில ஒரு கட்டு கட்டிட்டு வந்தோம். அப்படி ஆரம்பிச்சதுனாலயா என்னனு தெரியல நிறைய வலைப்பதிவர் சந்திப்பு உணவகங்கள்ல தான் நடந்துச்சு. நமக்கு ட்ரீட் குடுக்கறதுக்குன்னே நல்லவங்க நல்லா சிக்குவாய்ங்க எப்பவும் :)
அடுத்தது பதிவர்களின் கல்யாணங்களுக்கு ஊர் ஊரா சுத்தினது. 2008ல தான் ரொம்ப அதிகமா சுத்தினேன்னு நினைக்கறேன். எந்த ஊர்லயுமே எங்க போகனும் எப்படி போகனும்னெல்லாம் ரொம்ப விசாரிச்சது கிடையாது. ஒன்னு சென்னைல இருந்தே கூட வேற யாராவது வருவாங்க. இல்லாட்டி போற இடத்துல பேருந்து / ரயில் நிலையத்துல யாராவது வந்து கூட்டிட்டு போவாங்க. சில சமயம் இரண்டு கல்யாணங்கள் ஒரே நாள்லயோ அடுத்தடுத்த நாள்லயோ (முக்கியமா வேற வேற ஊர்ல) வந்தப்பவும் விடாம ரெண்டுத்துக்கும் போனதெல்லாம் இப்போ நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கு. 2008... நினைச்சு பாத்தா... நிஜமாவே ஒரு அழகிய நிலாக்காலம் தான் :) [அந்த வருஷம் நான் பதிவு போட்டது ரொம்பவே கம்மிதான். ஆனா ஊர் சுத்தினது ரொம்ப ரொம்ப ஜாஸ்தி ;) ]
ஒரு நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் இந்த வருஷம் எழுத வந்தப்போ பல புதிய நண்பர்களின் அறிமுகங்கள் கிடைச்சுது. கிடைச்சிட்டிருக்கு. புதுசு புதுசா நிறைய பேர் அறிமுகமாகிட்டிருந்தாலும் பழைய நண்பர்களும் இன்னும் தொடர்பில் இருப்பது ரொம்பவே சந்தோஷமான விஷயம். இது என்றென்றும் நீடிச்சா அதைவிட பெரிய விஷயம் எதுவுமே கிடையாது :)
கடைசியாக, என் வலைப்பூவை தொடர்ந்து படிக்கும் அனைவருக்கும் - "இது வரை நீங்கள் குடுத்த ஆதரவுக்கும், இனி குடுக்க போற ஆதரவுக்கும், இது வரை அடித்த கும்மிக்கும், இனி அடிக்க போகும் கும்மிக்கும் எல்லாத்துக்கும் சேத்து ஒரு பெரிய நன்னி சொல்லிக்கறேன்" :)
இருங்க அதுக்குள்ள எங்க கிளம்பறீங்க? இதுவரை இந்த வலைப்பூவில் தமிழ்ல பதிவு எழுதறேன்னு தமிழுக்கு சோதனை வைச்ச மாதிரி இன்று முதல் Little Joys of Life எனும் வலைப்பூவில் ஆங்கிலத்துக்கு சோதனை வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆக இனி நான் பீட்டர் இங்கிலிபீஷ்லயும் உங்கள் தாக்கப்போறேன்னு மிகத்தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன் :))) உங்களை அந்த இறைவன் காப்பாற்றுவாறாக :))
என்ன தான் பாட்டோட மெட்ட உனக்கும் எனக்கும் ஆனந்தம் பாட்டுல இருந்து அப்படியே சுட்டிருந்தாலும் பாடல் வரிகள் கேட்க நல்லா தான் இருக்கு :))))
அதிரி புதிரி ஆரம்பம்
தினமும் நடக்கும் யுத்தம்
குடுமி பிடியும் ஆரம்பம்
அமளி துமளி சத்தம்
character தான் மாறுமோ
no way
careless குணம் போகுமோ
நீ உடைகள் அணிந்த கூவம் தான்
பேச்சில் இல்லை சுத்தம் பத்தம்
too much
அதிரி புதிரி ஆரம்பம்
தினமும் நடக்கும் யுத்தம்
குடுமி பிடியும் ஆரம்பம்
அமளி துமளி சத்தம்
நம்ம பார்வைக்கே தெரியாத bacteria
அதை தேடி கண்டுபிடிச்சி clean பண்றா
எல்லா things-ஐயும் தொடச்சு தொடச்சு சைஸ் வாரியா
அடுக்கி daily ஆயுதபூஜை கொண்டாடுறா
ஹே ஹே bathroom போறதுக்கு கூட timetable
schedule போட்டு அதை follow பண்ணுறா
இவ கனவில் கூட எதையோ calculatte-அ பண்ணுறா
too much
shakira album கேட்கையில் ghazhal பஜன் போடுறா
too much too much too much
குறட்டை ஒலியில் பூகம்பம்
விடிய விடிய தூக்கம்
so what
செவிகள் கிழிய hip hop-ம்
drums-ம் அலறும் சத்தம்
thats right
shave பண்ணவே சோம்பலோ
ஹேய்...
தாடியுடன் பார்க்கவோ
காட்டு வாசி போலே தோற்றம்
அய்யோ பாவம் அக்கம் பக்கம்
அதிரி புதிரி ஆரம்பம்
தினமும் நடக்கும் யுத்தம்
குடுமி பிடியும் ஆரம்பம்
அமளி துமளி சத்தம்
தினமும் early morning 5'o clock
சுப்ரபாதம் full volume-ல play பண்ணுறா
hotel-காரன் இட்லியில manufacturing date எங்கேங்குறா
ரோடுல யாராச்சும் குப்பை போட்டா
இவ பாத்துட்டா சண்டைக்கு போறா
இவ கூட வாழ்வது என்னாலே முடியாது
முடியவே முடியாது அய்யோ no no no
நீ facebook orkut-ல் தான் ஜொல்லு வடிக்கும் அல்பம்
நீ பத்து second-ல் நூறு channel தான் மாத்தி பார்க்கும் ஜென்மம்
so what?
test match night எல்லாம் தினமும் பார்க்கும் cricket பூதம்
too much
அதிரி புதிரி ஆரம்பம்
தினமும் நடக்கும் யுத்தம்
குடுமி பிடியும் ஆரம்பம்
அமளி துமளி சத்தம்
வாலே இல்லா வாணரம்
காலன் வரும் வாகணம்
முருங்கை மரத்து வேதாளம்
அய்யோ இவனால் நித்தம் கஷ்டம்
இதே படத்துல டாக்டர் மாப்பிள்ளைனு வர்ற இன்னொரு பாட்டும் இதே மாதிரி செம கலாய்த்தலா வருது :)
பாடலை கேட்க
முழு பாட்டு வரிகளும் எழுத சோம்பேறி தனமா இருக்கு.. அதனால சில வரிகள் மட்டும்..
tom and jerry டிஷ்யூம் போலே
இம்சை எல்லாம் தாங்கும் சுண்டெலி யாரு
husband job-க்கு ஆள் தேடி
call for பண்ணுற நீ கேடி
யாருடா அந்த ஏமாளி
இவ கேட்கும் கோமாளி
உன்னிடம் சிக்குற ஆள் அவன்
சுனாமியில் மாட்டும் boat அவன்
ராமர் வில்ல வளைச்சா
IQ test-ல ஜெயிச்சா
moon-ல காலை மிதிச்சா
அவன் தான் உங்க range-அ
mutton stall- க்கு விரும்பி
ஆடு தான் வருமாடி

வர வர கேள்வி பதில் செக்ஷன் அதிகமா வருது ப்ளாக் உலகத்துல. இப்போ சவிதா 22 கேள்விகளோட ஒரு டேக் குடுத்திருக்காங்க. நாங்க எல்லாம் சமத்தா குடுத்த டேக்க உடனே முடிச்ச்டிடுவோமில்ல :))
1. Grab the book nearest to you, turn on page 18 and find line 4?
பக்கத்துல இருக்கறது டெலிபோனோட user manual தான். திருப்பி திருப்பி பாத்துட்டேன். அதுல மொத்தமே 10 பக்கம் தான் இருக்கு :(
2. Stretch your left arm out as far as you can & touch air?
தொட்டுட்டேன். [நீங்க என்னை நம்பித்தான் ஆகனும்.. U have no other choice :P ]
3. What is the last thing you watched on TV?
காலைல ஜெயா மேக்ஸ் சானல்ல வரவு எட்டனா செலவு பத்தனா பாட்டு
4. Without looking, guess what time it is?
around 10 AM?
5. Now look at the clock, what is the actual time?
9.46 AM
6. With the exception of the computer, what can you hear?
ஃபேன் ஓடற சத்தம்
7. When did you last step outside? What were you doing?
கடைசியா வீட்டை விட்டு வெளியில போனது நேத்து சாயந்திரம். பிரதோஷம்ங்கறதால சிவன் கோவிலுக்கு போயிருந்தேன் :)))
8. Before you started this Q&As, what did you look at?
Facebook-ல Sunshine Ranch game.
9. What are you wearing?
சுடிதார்.
10. When did you last laugh?
நேற்று இரவு நண்பனோடு ஃபோன்ல பேசிக்கொண்டிருந்த பொழுது.
11. What is on the walls of the room you are in?
புதுசா அடிச்ச பெயிண்ட், 2 ட்யூப்லைட், 3 switch board, 2 cupboard, AC & Stabilizer, wall clock, hanger, wall fan. [என்னை போல சமத்தா யாராவது ஒருத்தராவது பதில் சொல்லியிருப்பாங்களா ;)))) ]
12. Seen anything weird lately?
I feel I am becoming more weird lately :))))))
13. What do you think of this quiz?
கேள்விய கொஞ்சம் குறைச்சிருக்கலாம் ;))))
14. What is the last film you saw?
தியேட்டர்ல பாத்தது - Quick Gun Murugan.
டீவில பாத்தது - குஷி
15. If you became a multimillionaire overnight, what would you buy?
கேட்க நல்லாதான் இருக்கு. நடந்தா இன்னும் நல்லா இருக்கும். கடற்கரை ஓரமா ஒரு இடம் வாங்கி கடலை பாத்த மாதிரி ஒரு விடு கட்டனும். அப்புறம் ஒரு world tour போகனும். இப்போதைக்கு இது ரெண்டு தான் ஆசை :)
16. Tell me something about you that I dunno!

இன்னிக்கு காலைல நான் இட்லி & புதினா துவையல் சாப்பிட்டேன் :))) [கண்டிப்பா இது உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை :P]
17. If you could change one thing about the world, regardless of guilt or politics, what would you do?
இந்த கேள்விக்கு எந்த பதிலும் இப்போதைக்கு தோணலை.. அப்புறமா ஏதாவது தோணினா அப்டேட் பண்றேன் :))
18. Do you like to Dance?
தனிமையில் மட்டும்.
19. Imagine your first child is a girl, what do you call her?
20. Imagine your first child is a boy, what do you call him?
அப்படி ஏதும் specific-அ இந்த பெயர் தான் வைக்கனும்னு மைண்ட்ல இல்லை. But still கண்டிப்பா தமிழ் பெயரா கொஞ்சம் வித்தியாசமான பெயரா வைக்கனும்னு மட்டும் ஐடியா இருக்கு.
21. Would you ever consider living abroad?
If the decision is in my hands, the answer would be a strong "NO".
22. What do you want GOD to say to you when you reach the pearly gates?
I would just expect a warm welcome smile from Him. That's more than enough :)
நான் கோத்து விடறது சச்சின் கோப்ஸ், மகா & இரவீ

நேரில், தொலைபேசியில், ஆர்குட், ஃபேஸ்புக், மெயில், ஜி-டாக், க்ரீட்டிங்ஸ், பதிவு, பின்னூட்டம்னு பல வழிகளில் வாழ்த்திய அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள் சொல்லிக்கறேன் :)

வாழ்த்துக்கள் சொல்றதோடு நிக்காம கடந்த மூன்று ஆண்டுகளாய் தொடர்ந்து வீட்டிற்கு பரிசுப்பொருட்கள் அனுப்பும் கவிதாயினி காயத்ரிக்கும் கே4கே அண்ணாச்சிக்கும் ஸ்பெஷலா ஒரு நன்றி :))
கொடி குட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் பத்தி டீடெய்ல்டா பதிவு போட சொன்னாங்க. மத்தவங்க சொல்லி எதை நாம உருப்படியா செஞ்சிருக்கோம் ;) அதனால டீடெய்ல்ட் பதிவுக்கு பதில் ஹைலைட்ஸ் மட்டும் :)))
August 31, 2009 - காலையில எழுந்ததும் வழக்கம் போல மெயில் படிக்க உட்கார்ந்தா லைட்டா ஒரு அதிர்ச்சி. ஒர்குட், பேஸ்புக், மெயில்னு ஒவ்வொரு விதமா ஒவ்வொருத்தர் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியிருந்தாங்க.. யாருமே அட்வான்ஸ் வாழ்த்துனு கூட சொல்லலை. ஏற்கனவே பாதி தூக்கத்துல மெயில படிச்ச எனக்கு லேசா குழப்பம் ஆரம்பிச்சுது.. இன்னிக்கு செப்டம்பர் 1-அ? இல்லை நான் எங்கயாவது என் பிறந்தநாள ஆகஸ்டு 31-னு மாத்தி குடுத்துட்டேனானு..
சரி காலைல தான் மக்கள் இப்படி பண்ணாங்கனு பாத்தா நைட்டு கரெக்டா 9.30 மணிக்கு கில்ஸ் ஃபோன் பண்ணி பிறந்தநாள் வாழ்த்து சொல்றாரு. யோவ் அது நாளைக்கு தான்யா. இப்ப எதுக்கு வாழ்த்தறீங்கனு கேட்டா சிங்கப்பூர்ல இப்போ 12 மணி ஆகிடுச்சுங்கனு சொல்றாரு. நல்லா வருவீங்க நீங்கனு நினைச்சிக்கிட்டு ஃபோன வைச்சா உடனே கோப்ஸோட ஃபோன். அவனும் கரெக்டா ஃபோன எடுத்ததும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்னு சொன்னான்.. டேய்.. நீயுமாடா? நாளைக்குதான் டா என் பிறந்தநாள்னு அவன்கிட்ட சொன்னா அவன் உடனே.. குவைத்ல 9.30 மணினா இந்தியால 12 மணி தானேங்கறான். சரிடா. அதுக்கு ஏன் இந்தியா டைம் 9.30க்கு பண்ணனு கேட்டா அதெல்லாம் அப்படித்தான்ங்கறான். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
ஆஹா.. ஆரம்பமே இப்படியானு நினைச்சிட்டிருக்கறப்போ நம்ம தங்கச்சிக்கா 10.20 க்கு ஃபோன் பண்ணா. என்னமா இந்த நேரத்துலனு கேட்டா உங்க டைம் 12 மணிக்கு பண்ணலாம்னு நினைச்சு தான் உட்கார்ந்திருந்தேன். ஆனா எப்படியும் அப்போ உங்க லைன் பிஸியா இருக்கும். அதான் இப்பவே பண்ணிட்டேன்ங்கறா... அது சரி.. இப்படியாக ஆரம்பிச்ச கூத்து ஒரு வழியா அர்த்த ராத்திரி ஒரு மணிக்கு முடிஞ்சுது.
மறுநாள் காலை பரிசு பொருட்களின் வரவுகளுடன் இனிதே துவங்கியது :)
ஆஹா.. கலெக்ஷன் அருமையா இருக்கும் போல இருக்கேனு நினைக்கறப்போவே நம்ம பழைய ஆபீஸ் மக்கள் ஃபோன் பண்ணி ஆபீஸ் வாங்கனு ஒரே பாச மழை.. சரினு போனா அவங்களே ட்ரீட்டும் குடுத்து கிப்டும் குடுத்து அசத்திட்டாங்க :) அதுலயும் அவங்க குடுத்த கார்ட்ல இடம் இல்லைனு ஸ்டிக் இட் நோட்ஸ்ல எல்லாரும் விஷஸ் எழுதி ஒட்டியிருந்த்து சூப்பரா இருந்துது :)

எல்லாம் நல்லா கொண்டாடி முடிச்சு வீட்டுக்கு வந்துட்டு பேக் அப் பண்ணிட்டு ஃபிரெண்டோட கல்யாணத்துக்காக பெங்களூர் போக கிளம்பியாச்சு. 10.45 A/C பஸ்ஸுக்கு டிக்கெட் புக் செஞ்சிருந்தேன். அங்க இருந்த நல்லவன், A/C பஸ்ல புக் பண்ணது கொஞ்சம் பேர்தான்னு அவங்களையும் 11 மணி volvo A/C பஸ்ல அனுப்பிவிட, ஆஹா ஜி3 அதிர்ஷ்டம் தான் போனு ஜாலியா volvo பஸ்ல பெங்களூர் நோக்கிய பயனம் துவங்கியாச்சு :)))
சொல்ல மறந்துட்டேனே... முதல் நாள் குழப்பிவிட்ட மாதிரியே சில நல்லுள்ளங்கள் கரெக்டா 1-ம் தேதி வந்து பிலேடட் விஷஸ் சொல்னதோட நிக்காம, எப்படி போச்சு பிறந்தநாள்னு வேற கேள்வி கேட்டு லைட்டா டெர்ரர் ஆக்கினாங்க :))))))))))))
பதிவு போட்டு வாழ்த்திய நல்லுள்ளங்களின் பட்டியல்...
ஒரு நாள் முன்னாடியே வாழ்த்தறேன்ற பேர்ல கலாய்த்த கில்ஸானந்தர்
கொண்டாட்டத்துக்கு இன்னும் 11 மணி நேரம் இருக்குனு ஓசி விளம்பரம் குடுத்த அன்னம்
மத்தவங்க யாராவது ஓவரா கலாய்ச்சு பதிவு போடறதுக்கு முன்னாடி சிம்பிளா சங்கத்துல ஒரு பதிவு போட்டு என்ன காப்பாத்தின கவிதாயினி
தேன் கிண்ணத்துல பாட்டு டெடிகேட் பண்ண தங்கச்சிக்கா
அது பத்தாம இன்னும் இரண்டு அற்புதமான காட்சிகளை டெடிகேட் செஞ்ச பதிவு
என் பதிவுகளோட தலைப்ப வைச்சே பதிவு போட்ட ஆயில்ஸ் அண்ணாச்சி
என்னையும் நல்லவனு நம்பற ஒரு நல்லுள்ளம் ஸ்ரீவத்ஸ்
ப்ளாக் யூனியனில் வாழ்த்து பதிவு போட்ட டுடி அக்கா
எப்பவுமே அக்காவுக்கு கார் சாவிய மட்டும் பரிசா குடுத்துட்டு கார குடுக்காம ஏமாத்தும் பாசமலர் தம்பி
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்னு கெத்து விட்டுட்டு வந்திருக்கற கார்த்திக்கோட பதிவு

கவிதையும் அல்லாத
மொக்கையும் அல்லாத
பதிவு ஒன்று என் கண்ணில் பட்டது
அது என்ன என்று புரியாமலே
பின்னூட்டமிட்டுவிட்டு வந்தேன்
வெகுசுவாரஸ்யமாய் இருந்தது
அதை தொடர்ந்து வந்த பதிவுகள்
எப்படியோ நானும் இணைந்துவிட்டேன்
அந்த பதிவு தொடரில்..
அதன்மூலம் அந்த கும்மி குழுவிலும் !!!
ஆச்சியின் ஒரிஜினல் பதிவு
தொடர்ந்த கும்மி பதிவுகள்..
ஆயில்ஸ் அண்ணாச்சி
நிஜமா நல்ல அண்ணாச்சி
நட்புடன் ஜமால்
தமிழ் ப்ரியன்
நான் ஆதவன்
தமிழன் - கறுப்பி
முத்துக்கா
கானா பிரபா அண்ணாச்சி
ஸ்ரீமதி தங்கச்சி
மறுபடி ஒரு தொடருக்கு இரவீ அழைச்சிருக்காரு. சிம்பிளா நாலு கேள்வி மட்டும் தான் கேட்டிருக்காரு ;-)))
1. அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
நமக்கு பிடித்த மனதிற்கு இதம் தரும் விஷயங்கள் என்றுமே அழகானவை தான். உதாரணத்துக்கு சொல்லனும்னா குழந்தையின் குறும்பு, பெற்றோரின் பாசம், நண்பர்களின் அக்கறை... எல்லாமே அழகு தான். இந்த அழகுகள் நிரந்தரம் தான் ஆனா நம் மனது எப்போதும் அதை அழகாய் பார்க்குமாங்கறது சந்தேகம் தான்.
2. காதல் மனிதனுக்கு அவசியமா?
திருமணத்திற்கு பின் மனைவியிடம் கணவனுக்கும், கணவனிடம் மனைவிக்கும் காதல் கண்டிப்பாக அவசியம் தான்.
3. கடவுள் உண்டா?
நம்புகிறவர்களுக்கு உண்டு. நம்பாதவர்களுக்கு இல்லை. நான் நம்புகிறேன் :-)
4. பணம் அவசியமா?
ஆடம்பரமாய் வாழும் அளவிற்கு தேவையில்லை என்றாலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணம் அவசியம் தேவை :)
இந்த தொடரை தொடர நான் அழைப்பவர்கள்,
கில்ஸ் - உங்கள கோத்து விடாம ஒரு டேக்கா???
திவ்யப்ரியா - எப்படியும் கில்ஸ் உங்கள கோத்துவிடுவாரு. அதுக்கு பேசாம நானே முந்திக்கறேனே ;-)))
பொற்கொடி - ரொம்ப நாள் கழிச்சு ஆக்டிவ் ஆகியிருக்கீங்க.. ஒழுங்கா இந்த பதிவ தமிழ்ல எழுதி போடுங்க :-)

போன வாரம் அப்பா அம்மாவோட ஷாப்பிங் போயிட்டு பாண்டிபஜார்ல இருக்கற அஞ்சப்பர்க்கு சாப்பிட போயிருந்தோம். 2 வருஷம் முன்னாடி கிட்டதட்ட இதே சமயத்துல ப்ளாக் நண்பர்களோட அங்க போய் அடிச்ச கூத்தெல்லாம் ஞாபகம் வந்துடுச்சு.. (@இராம், உங்க பேவரைட் மட்டன் சுக்காவும் மறக்காம ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன் :))) ) திரும்பி வீட்டுக்கு வந்ததும் அந்த மீட் பத்தி போட்டிருந்த பதிவ படிச்சு பாத்தேன். அப்படியே டைம் மிஷின்ல ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி போயிட்ட மாதிரி இருந்துச்சு. அதன் மீள்பதிவு இங்கே...
உங்க எல்லாருக்கும் வீக் எண்ட் எப்படி போச்சு? நாங்க சூப்பரா இங்க ஒரு ப்ளாக்கர் மீட் போட்டு என்சாய் பண்ணிட்டோமில்ல... நம்மளுக்கு ட்ரீட் குடுக்கறதுக்குன்னே இம்சை அரசி, ஜி, இராம் 3 பேரும் பெங்களூர்ல இருந்து சென்னை வந்திருந்தாங்க.. சனிக்கிழமை நைட் ஷிப்ட்ல இருக்கும் போதே இராமண்ணே "நீங்க நாளைக்கு காலைல நல்லா தூங்குங்க.. மதியம் 12 மணிக்கு ஒரு வேக்-அப் கால் குடுத்து எழுப்பி எங்க எப்போ மீட்டிங்னு சொல்றேன்" னு சொல்லிட்டாரு.. சொன்ன மாதிரியே சமத்தா 12.30க்கு கால் பண்ணி பாண்டி பஜார் அஞ்சப்பருக்கு 1.30க்கு வந்துடுங்கன்னு சொல்லிட்டாரு.. நாமலும் ரொம்ப சுறுசுறுப்பா 1.40க்கெல்லாம் அங்க போய் நின்னா ஒருத்தரையும் காணோம். எங்க ராசா இருக்கீங்கன்னு போன் பண்ணா இங்க தான் டி.நகர்ல சுத்திட்டிருக்கோம்.. நீங்க போய் எல்லாருக்கும் டேபிள புக் பண்ணுங்க..நாங்க வந்துடறோம்ன்னு கூலா சொல்றாரு.. சரி.. எத்தன பேருக்குன்னு கேட்டா.. நாங்க 3 பேர் (இராம், ஜி, கப்பி) இருக்கோம் இங்க.. இம்சைக்கு ஒன்னு.. உங்களுக்கு 2.. ஆக மொத்தம் 6 பேருக்குங்கறாரு.. ஆஹா. ஆரம்பமே இப்படியான்னு நெனைச்சிக்கிட்டு போய் டேபிள்க்கு சொல்லிட்டு வெயிட் பண்ணேன்..
பொறுமையா இவங்க 3 பேரும் வந்து சேந்தாங்க.. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு இம்சை, சிபி & ஜே.கே வந்து சேந்தாங்க.. சரின்னு 6 பேர்க்கான டேபிள் வேணாம் 7 பேருக்கு வேணும்னு சொன்னா மறுபடியும் அவன் எங்கள வெயிட்டிங்க்ல போட்டுட்டு 3 மணிக்கு தான் டேபிளே குடுத்தான்.. அதுக்கப்புறமும் ஆர்டர் பண்ணதெல்லாம் லேட் லேட்டா தான் வந்துது.. (இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் வீட்லயே ஒரு ரவுண்ட் சாப்டுட்டு வந்திருப்பேன் :( ) அப்பவும் சாதம் போட்டுட்டு அதுக்கு குழம்பு குடுக்க லேட் பண்ணதால நம்ம ஜி பசி பொறுக்க முடியாம வெறும் சாதத்தையே சாப்பிட ஆரம்பிச்சிட்டாரு..இதுல கப்பி மட்டும் வெஜிட்டேரியன்ங்கறதால அவருக்கு மட்டும் எல்லாம் கரக்டா வந்துடுச்சு.. என்ன அருமையான சாம்பார்.. பேஷ்.. பேஷ்-ன்னு சொல்லி எங்கள நல்லா வெறுப்பேத்திக்கிட்டே சாப்பிட்டாரு மனுசன்.. இதுல ஆர்டர் பண்ண பெப்சி வரவே இல்ல, என்னன்னு கேளுங்க தலைன்னு இராம உசுப்பேத்தி விட, அவரு கப்பிய உசுப்பேத்த, கப்பியும் உடனே அங்க ஆர்ட்ர் எடுத்தவர கூப்பிட்டாரு.. சரி.. நல்லா திட்ட போறாருன்னு பாத்தா.. நாங்க 2 பெப்சி ஆர்டர் பண்ணோம்.. சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள கொண்டு வந்து குடுத்துடுங்கன்னு மரியாதையா பேசுறாரு :(
இப்படியே எல்லாம் லேட்டா வந்தாலும் பாஸ்டா காலி பண்ணிட்டு டெஸர்ட்ஸ்ல பர்ஸ்டு ரவுண்டு எல்லாரும் ஜீஸ் சாப்பிடலாம்னு 7-அப், லைம் சோடான்னு ஆளுக்கொன்னு ஆர்டர் பண்ண நம்ம சிபியும் ஜே.கேவும் 7-அப்ல உப்ப போட்டு குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. ஆஹா..இது நல்லா இருக்கே.. இருங்க ஜே.கே. உங்களுதுல நான் கொஞ்சம் உப்ப போடறேன்னு சொன்னா.. அங்க இருந்து கப்பி.. உப்பிட்டவரை உள்ளளவும் கலாய்-னு பழமொழி எல்லாம் எடுத்து விடறாரு.. அடப்பாவிங்களா.. நீங்க இப்போ கலாய்க்கறதையே தாங்க முடியலியே.. இதுல உப்ப போட்டு நானே அதை உசுப்பேத்தனுமான்னு ப்ரீயா விட்டுட்டேன்... ஆனா கப்பி கை கழுவப்போன கேப்ல அவரொட லைம் சோடால சிபி உப்ப அனாயாசமா அள்ளி கொட்ட.. கப்பி அதையும் அசராம குடிச்சிட்டு உப்ப கொட்டினா நாங்க குடிக்காம விட்றுவோமான்னு டயலாக் அடிக்கறாரு.. சரி.. என்னமோ பண்ணுங்கன்னு நாங்க அடுத்த ரவுண்ட் ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ணோம்... இராம் உஷாரா எங்க இப்பவே அடுத்தவங்களோடதுல இருந்து எடுத்தா நம்மளுதுலயும் பங்குக்கு வருவாங்களேன்னு சுறுசுறுப்பா அவரோடத காலி பண்ணிட்டு அப்புறம் மத்தவங்களுதுல கைவரிசைய காமிக்க ஆரம்பிச்சிட்டாரு.. சிபி வேற நான் பட்டர்ஸ்காட்ச் ஆர்டர் பண்ணேன்.. பட்டர் வந்துடுச்சு ஸ்காட்ச் எங்கப்பான்னு பீல் பண்ணிட்டிருந்தாரு..
இப்படியே எல்லாரும் கலாட்டா பண்ணிட்டிருந்தோம்.. பில் வந்ததும் இம்சையும் கப்பியும் நீங்க தான் பில்ல கட்டணும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கை காட்ட.. கொஞ்ச நேரம் அப்படியே சண்டை போட்டுட்டு அப்புறம் சின்ன தம்பி பெரிய தம்பி ரேஞ்ச்ல நான் கட்டறேன்னு 2 பேருமே கார்ட நீட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. கடைசில இம்சை பெரிய மனசு பண்ணி விட்டுகுடுத்ததால கப்பியே பில்ல கட்டிட்டாரு :))
கரெக்டா எல்லாரும் அங்க இருந்து கெளம்பும் போது ராஜி வந்து எல்லாருக்கும் ஒரு வணக்கம் சொன்னாங்க.. அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு அங்க இருந்து கிளம்பி அடுத்த லொகேஷனான நடேசன் பார்க்குக்கு போனோம்.. அங்க நவீன் ப்ரகாஷும் தேவும் வந்து ஜாயின் பண்றேன்னு சொல்லி இருந்தாங்க.. அவங்க வர்றதுக்குள்ள ஏதேதோ பேச ஆரம்பிச்சு ரஜினி முதல் பின்நவீனத்துவம் வரை எல்லா டாபிக்கையும் டச் பண்ணிட்டோம்.. இராம் அவர் கேமராவ வெச்சு வானம், மரம், புல், ஹெல்மெட்டு, சுருக்கு பை கயிறுன்னு ஒன்னு விடாம எல்லாத்தையும் போட்டோ எடுத்து எனக்கும் போட்டோ புடிக்க தெரியும்னு சீன் போட்டுட்டு இருந்தாரு.. கவிதைன்னா என்னன்னு சொல்லுங்க இராம்னு கேட்டா ரொம்ப நேரம் கஷ்ட்டப்பட்டு சமாளிச்சிட்டு கடைசில க.வி.தை. = கவிதைன்னு சொல்லி முடிச்சிட்டாரு..
இப்படி கலாட்டாவா ஓடிட்டிருக்கும் போதே நவீன் வந்தாரு.. அவர தூரத்துல பாத்தப்பவே நம்ம சிபி கையெல்லாம் ஆட்டி இங்க வாங்க இங்க வாங்கன்னு கூப்பிட்டாரு.. என்ன மேட்டருன்னு பாத்தா நவீனோட கைல இருந்த வாட்டர் பாட்டில வோட்கா பாட்டில்னு தப்பா நெனைச்சிட்டாராம் ;)
கப்பி ஹோட்டல்ல சாப்பிடும் போதே தேவ் இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவாருன்னு சொன்னாரு.. பார்க்குக்கு வந்தே 1 மணி நேரம் ஆகுதே.. அவரு எப்போ வருவாருன்னு கேட்டா நாங்க எப்பவுமே ஒரே பேச்சு தான்.. அவரு வீட்ல இருந்து கிளம்பின அரை மணி நேரத்துல வந்துடுவாருங்கறாரு.. பாத்தா கொஞ்ச நேரத்துல அவரே கால் பண்ணிட்டாரு.. கப்பி உடனே ரொம்ப உற்சாகமா அண்ணே நான் உங்கள பாத்துட்டேன் நேரா வாங்கன்னு சொல்ல அதுக்கு அந்த பக்கம் என்ன சொன்னாங்கன்னு தெரியல.. அப்படியே அமைதியாயிட்டாரு.. போன வெச்சப்புறம் என்ன மேட்டருன்னு கேட்டா அவரு குடும்பத்தோட வர்றாராம்.. குடும்பம் கிளம்ப லேட் ஆகுதாம்.. சீக்கிரம் வந்துடறேன்னு சொன்னாரு.. சோ, இன்னும் ஒரு அரை மணி நேரத்துல வந்துடுவாருன்னு திரும்ப அவரு பழைய பல்லவிக்கே போயிட்டாரு :)) அப்புறம் கொஞ்ச நேரத்துல தேவும் வர இன்னும் கொஞ்ச நேரம் கதை அடிச்சிட்டு ஒரு 6 மணிக்கு மேல நானும் இம்சையும் கிளம்பிட்டோம்..
மீட்ல நாஸ்தியாக வேண்டிய இராமோட கேமரா ஏதோ போன ஜென்மத்து புண்ணியத்துனால தப்பிச்சிடுச்சு.. அதை பக்கத்துல இருந்த கல்லுல அடிச்சு உடைக்கப்போறென்னு இம்சை சொல்ல.. எங்க உங்களுக்கு தில் இருந்தா ஒடைங்க பாப்போம்.. நான் நாலணா பெட் கட்டறென்னு கப்பி சொல்ல.. ஜி என்கிட்ட 2 நாலணா இருக்குன்னு எடுத்து நீட்ட.. தேவ் "நான் கூட 5 பைசா போட்டு 30 காசா பெட் வைக்கறேன்"னு சொல்ல.. இதுக்கெல்லாம் வாய்ப்பே குடுக்காம இராம் அவரு காமராவ பத்ரமா எடுத்து வெச்சிக்கிட்டாரு :(

எல்லாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !!!
சமீபத்துல ட்ரெய்லர் எல்லாம் போட்டு கலக்கறானே.. சூர்யா வேற சூப்பரா இருக்கான். சரி பாட்டை கேட்டு தான் பாக்கலாம்னு நெட்ல தேடினா பாவி மக்கா இன்னிக்கு சாயந்திரம் தான் ஆடியோவே ரிலீஸ் பண்றானாம்.. அதுக்கு முன்னாடியேவாடா ட்ரெய்லரு ???? நல்லா இருங்கடே !!!!
நான் பார்த்த ட்ரெய்லர் நீ(ங்க) பார்க்க இங்கே (நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை பாட்டு ட்யூன்லயே படிக்கனும் :-P)

விஜய் டீவில அப்பப்போ ஏதாவது ஒரு காதல் கதைய சூப்பர் பில்டப்போட ஆரம்பிக்கறது வழக்கம். அப்படி இப்போ லேட்டஸ்ட்டா ஆரம்பிச்சிருக்கறது தான் அன்பே வா தொடர். தொடர் சமீபத்துலதான் ஆரம்பிச்சிருக்குங்கறதால தொடரைப்பத்தி இப்போதைக்கு ஏதும் கருத்து சொல்றமாதிரி இல்லை. ஆனா அதுல சந்தியானு ஒரு கேரக்டர். ஒன் சைட் லவ்ல அம்மணி அப்பப்போ கவிதையா அள்ளித்தெளிக்கறாங்க. அதுல இருந்து சில கவிதைகள் இங்கே பதிவாக..

சூரியன் கூட
ஓவியம் வரைகிறது.. !
உன் நிழல்... !!
என்
ஆயுள் உள்ளவரை
உன் காதல் வேண்டும்... !
இல்லையேல்...
உன் காதல் உள்ளவரை
எனக்கு
ஆயுள் போதும்.. !
ஓவியம் வரைகிறது.. !
உன் நிழல்... !!
என்
ஆயுள் உள்ளவரை
உன் காதல் வேண்டும்... !
இல்லையேல்...
உன் காதல் உள்ளவரை
எனக்கு
ஆயுள் போதும்.. !

எனக்குள் இருப்பது யாரென
எங்கெங்கோ தேடினாய்
உன் வீட்டின் பூட்டிய அறைக்குள்
நீ தொலைந்து போயிருப்பது
தெரியாமல்...
உலகெல்லாம் ஓடி
உன் காதல் நீ தேட...
பத்திரமாய் உன் காதல்
ஒளிந்திருக்கும் எனக்குள்!!!
நீதான் நான் என
நான் கண்டுகொண்டேன்...
நாந்தான் நீயென
நீ அறிவதெப்போது... ?
எங்கெங்கோ தேடினாய்
உன் வீட்டின் பூட்டிய அறைக்குள்
நீ தொலைந்து போயிருப்பது
தெரியாமல்...
உலகெல்லாம் ஓடி
உன் காதல் நீ தேட...
பத்திரமாய் உன் காதல்
ஒளிந்திருக்கும் எனக்குள்!!!
நீதான் நான் என
நான் கண்டுகொண்டேன்...
நாந்தான் நீயென
நீ அறிவதெப்போது... ?

உலகம் என்னை
உதறிய போதெல்லாம்
புன்னகைத்து நின்றேன்...
பற்றிக்கொள்ள உன் கரம்
இருக்கிற தைரியம் எனக்கு...
நீ என்னை
வேண்டாமென்றாலும்
என்னாலும் உதற முடியும்...
உன்னையல்ல..
என் உயிரை!!!
உதறிய போதெல்லாம்
புன்னகைத்து நின்றேன்...
பற்றிக்கொள்ள உன் கரம்
இருக்கிற தைரியம் எனக்கு...
நீ என்னை
வேண்டாமென்றாலும்
என்னாலும் உதற முடியும்...
உன்னையல்ல..
என் உயிரை!!!

வார்த்தை இல்லாமல்
வாய்ப்பு இல்லாமல்
உன் வட்ட விழி பார்க்க
இயலாமல்...
சொல்லாத காதலொன்று
சிக்கிக் கிடக்கிறது
என் நெஞ்சுக்குழிக்குள்
நீயே சொல்லிவிடேன்...
காதலை
முன்மொழியத்தான்
முடியவில்லை..
வழிமொழிந்தாவது
வருகிறேன்!!!
வாய்ப்பு இல்லாமல்
உன் வட்ட விழி பார்க்க
இயலாமல்...
சொல்லாத காதலொன்று
சிக்கிக் கிடக்கிறது
என் நெஞ்சுக்குழிக்குள்
நீயே சொல்லிவிடேன்...
காதலை
முன்மொழியத்தான்
முடியவில்லை..
வழிமொழிந்தாவது
வருகிறேன்!!!

வலிகள் கூட சுகமானதுதான்
நீ தருகிற போது...
பிரிவுகள் கூட சுகமானதுதான்
உன் நினைவுகள் உடனிருக்கும்போது...
அழுகை கூட சுகமானதுதான்
உனக்காய் நான் அழும்போது...
வார்த்தையாய் காதலைச் சொல்வதில்
உடன்பாடில்லை எனக்கு...
வாழ்க்கையாய் அதை
வாழ்ந்து காட்டுகிறேன்
ஒரு வாய்ப்பு கொடேன்... !
நீ தருகிற போது...
பிரிவுகள் கூட சுகமானதுதான்
உன் நினைவுகள் உடனிருக்கும்போது...
அழுகை கூட சுகமானதுதான்
உனக்காய் நான் அழும்போது...
வார்த்தையாய் காதலைச் சொல்வதில்
உடன்பாடில்லை எனக்கு...
வாழ்க்கையாய் அதை
வாழ்ந்து காட்டுகிறேன்
ஒரு வாய்ப்பு கொடேன்... !

நான் சிரித்தேன்.. நீ சிரித்தாய்...
நான் அழுதேன்.. நீ அழுதாய்...
நான் காயப்பட்டேன்.. நீ கண்ணீர் சிந்தினாய்...
நான் காதலிக்கும்போது
ஏன் கண்மூடிக்கொள்கிறாய்?
உன் மௌனம் சம்மதமா...
இல்லை
மறுதலிப்பா?
கடல் சேர முடியாத நதிகள்
மீண்டும் மலை திரும்புவதில்லை
காய்ந்து போவதைத் தவிர
அவற்றிற்கு
வேறு வழியுமில்லை... !

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அர்ச்சனையை முடித்துவிட்டு பிரகாரத்தை சுற்றிக்கொண்டிருந்த பவித்ரா தன் கோபத்தை அடக்க மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள். காலை 6 மணிக்கு கோவிலுக்கு வருவதாக சொன்ன சங்கர் இன்னும் வந்து சேரவில்லை. கோவிலில் கோபப்படக்கூடாது என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டே கோவிலை சுற்றிக்கொண்டிருந்தாள்.
சங்கர் வர்றதுக்குள்ள இவங்களை பத்தி ஒரு சின்ன இண்ட்ரோ.. சங்கரும் பவித்ராவும் ஒரே அலுவலகத்தில் கடந்த மூன்று வருடமாய் காதல் செய்து வருகிறார்கள். அட ஆமாங்க. அலுவலகத்துல இவங்க வேலை செய்யறதை விட காதல் செய்யற நேரம் தான் அதிகம். சங்கர் வீட்டிற்கு ஒரே பிள்ளை. பிள்ளையின் ஆசையே பெற்றோரின் ஆசைன்னு அவங்களும் இவங்க காதலுக்கு பச்சை கொடி காட்டிட்டாங்க. பவித்ரா...
அட இதோ சங்கர் வந்துட்டான். இனி இங்க நடக்கறத நீங்க பாருங்க. நான் கேப் கிடைக்கறப்போ வந்து இண்ட்ரோவ கண்டினியூ பண்றேன்.
தன் முன் வந்து நின்ற சங்கரை முறைத்துவிட்டு எதுவும் பேசாமல் ஒரு தூணின் அருகே சென்று அமர்ந்தாள் பவித்ரா. சங்கர் கிடைத்த சந்தர்ப்பத்தில் சந்நிதி சென்று கடவுளுக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு வந்து அவளுடன் அமர்ந்தான்.
"சாரி சாரி சாரி" வழக்கம் போல் சங்கர் தான் மௌனத்தை கலைத்தான்.
"பேசாத நீ. நான் என்ன எனக்காகவா கோவிலுக்கு வர சொன்னேன். உன் பிறந்தநாளுக்கு உனக்காக அர்ச்சனை பண்றப்போ நீ கூட இருந்தா நல்லா இருக்கும்னு தானே வர சொன்னேன். அதுக்கு கூட இப்படி லேட்டா வந்தா என்ன அர்த்தம்?"
"உனக்கு ஒண்ணு தெரியுமா?"
"என்ன?"
"நமக்காக நாம வேண்டிக்கறதை விட அடுத்தவங்களுக்காக நாம வேண்டிக்கிட்டா அதுக்கு பலன் அதிகம்?"
"இப்ப என்ன சொல்ல வர்ற நீ?"
"எனக்காக நான் வந்து வேண்டிக்கறதை விட நான் நல்லா இருக்கணும்னு நினைக்கற நீ எனக்காக வேண்டிக்கிட்டா அதுக்கு பலன் அதிகம். அதுக்கப்புறம் நான் எதுக்கு தனியா வேண்டிக்கணும்" என்று கேட்டவாறே அவளை பார்த்து கண்சிமிட்டினான் சங்கர்.
சற்றே யோசனையுடன், "வியாக்கியானம் எல்லாம் நல்லாதான் இருக்கு. அப்படினா நான் வேண்டினது கண்டிப்பா பலிக்குமா?" என்று வினவினாள் பவித்ரா
"நிச்சயமா"
"அப்பாடா இப்போ தான் சந்தோஷமா இருக்கு. எதுக்கும் இன்னிக்கு கொஞ்சம் நிறைய சாப்பிட்டு தெம்பா இரு நீ"
என்ன சொல்கிறாள் என்று புரியாத குழப்பத்துடன், "புரியலியே. அப்படி என்ன வேண்டிக்கிட்ட?"
"ஹிஹி.. நீ சொன்ன நேரத்துக்கு கோவிலுக்கு வராததால உனக்கு இன்னிக்கு நல்லா நாலு தர்ம அடி விழணும்னு வேண்டிக்கிட்டேன்"
மேலே பார்த்தவாறு இரு கரங்களை கூப்பி "ரொம்ப நன்றி பெருமாளே" என்றான் சங்கர்.
இப்பொழுது புரியாமல் விழிப்பது பவித்ராவின் முறையாயிற்று. "எதுக்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்ற நீ? கம்மியா வேண்டிக்கிட்டேன்னா? ஒரு வேளை 108 இல்ல 1008னு வேண்டியிருக்கணுமோ?"
"அடிப்பாவி.. அதுக்கு இல்லை. எப்பவுமே வேண்டுதலை வெளியில சொன்னா அது பலிக்காதுன்னு சொல்லுவாங்க. அப்படினா இப்போ நீ வேண்டிக்கிட்டதும் பலிக்காதில்ல.. அதான்." என்றான் கூலாக.
"அப்படியா.. பலிக்குதா இல்லையானு பாத்துடலாம்" என்றவாறே அவனை அடிப்பது போல் சைகையுடன் அவள் எழ
"ஹே.. பொறந்தநாள் அதுவுமா ஒரு அப்பாவி புள்ளைய அடிச்ச பாவம் உனக்கு வேணாம். சரி சரி மொறைக்காத. நேரமாச்சு கிளம்பலாம் வா. அம்மா உன்னை அப்படியே வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க"
"இப்பவா? இப்ப வீட்டுக்கு வந்துட்டு வந்தா ஆபீஸுக்கு லேட் ஆகிடுமே. சாயந்திரம் வரட்டுமா?"
"ஆபீஸா? அதெல்லாம் இன்னிக்கு போக வேண்டாம். உனக்கும் சேத்து நானே நேத்து லீவ் சொல்லிட்டேன். இன்னிக்கு ஃபுல்லா ஐயா கூட தான் நீ இருக்க போற" கூறிக்கொண்டே அவன் வண்டியை நோக்கி செல்ல, எதுவும் சொல்லத்தோன்றாமல் அவளும் அவன் பின்னால் நடந்தாள்.
வீட்டு வாசலில் இறங்கியதும் "ஒரு நிமிஷம்" என்று அவளிடம் சொல்லிவிட்டு வீட்டு வாசலில் சென்று நின்று "வாருங்கள் மகாராணி" என்று சேவகன் போல் சிரம் தாழ்த்தி அவளை வரவேற்க, அதை பார்த்து கொண்டிருந்த அவன் அம்மா புன்னகையுடன் "வாம்மா. நல்லா இருக்கியா?" என்று வாஞ்சையுடன் வரவேற்றார்.
"நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?" என்று கேட்டவாரே அவளும் வீட்டில் நுழைந்தாள்.
"நானும் நல்லா இருக்கேன்மா. என் புள்ளை இப்படி எல்லாம் பண்றானேனு பாத்து ஏமாந்துடாதமா. என் புள்ள ஐஸ் வைக்கறதுல கில்லாடி. நாம உஷாரா இல்லைன்னா தலைல மொளகாய் அரைச்சிட்டு அவனுக்கு ஆகவேண்டிய காரியத்தை சாதிச்சுக்குவான்".
"போச்சுடா மாமியாரும் மருமகளும் இப்பவே ஒண்ணு கூடிட்டீங்களா? கல்யாணத்துக்கப்புறம் என் கதி அதோ கதி தான் போல. அப்பா எங்கிருந்தாலும் உடனே உங்கள் பிள்ளையின் உதவிக்கு வரவும்" என்று உரக்க கத்தினான் சங்கர்.
அதை பார்த்து புன்னகைத்தவாறே அவன் தாய் "உங்கப்பா கார் இன்னும் வரலியே. ஏன்னு விசாரிச்சிட்டு வர்றேன்னு ட்ராவல்ஸ் வரைக்கும் போயிருக்காரு" என்றாள்
"ஏம்மா? எங்கயாவது வெளியில கிளம்பறீங்களா?" என்று கேட்டாள் பவித்ரா
"இவன் ஒண்ணும் சொல்லலியாமா உன்கிட்ட? இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. அதான் இன்னிக்கே உனக்கு கல்யாணப்புடவை எடுக்க காஞ்சிபுரம் போகலாம்னு சொல்லியிருந்தேன். கூட்டிட்டு வரப்போ அதை சொல்லலியா இவன்?"
"ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான்மா சொல்லலை நான்"
இவங்கள விட்டா பேசிக்கிட்டே இருப்பாங்க.. அப்புறம் கதை முடியற வரை நான் பவித்ரா பத்தி இண்ட்ரோ குடுக்காமலே விட்டுடுவேன் போல இருக்கு. அதனால இங்க நடுவுல புகுந்து என் வேலையை முடிச்சிடறேன். பவித்ராவுக்குனு குடும்பம் எதுவும் கிடையாதுங்க. அவளுக்கு இந்த அன்பு, பாசம், அக்கறை எல்லாம் புதுசு. தாய் தந்தை யாரென்றே அறியாமல் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து, ஒரு நல்லவரின் ஸ்பான்சர்ஷிப்பின் உதவியால் பட்டப்படிப்பு முடித்து மூன்று ஆண்டுகளுக்கு முன் சங்கர் வேலை செய்யும் அதே அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தவள் தான் பவித்ரா. அலுவலகத்தில் கிடைத்த சங்கரின் நட்பு காலப்போக்கில் காதலாய் மாறினாலும் அவளுக்குள் ஒரு அச்சம் இருக்கவே செய்தது. சங்கரின் குடும்பத்தில் சொந்த ஊர் எது என்று கூட அறியாத தன்னை மருமகளாய் ஏற்றுக்கொள்வார்களா என்று. ஆனால் முதல் முறை சங்கர் அவன் வீட்டிற்கு அழைத்து சென்ற போது அவர்கள் எந்த தயக்கமும் இன்றி முழுமனதுடன் அவளை வரவேற்றது அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அதை அவள் வாய்விட்டு கேட்கவும், அவர்கள் சிரித்து கொண்டே "எங்க பையனோட சந்தோஷம் தான்மா எங்களுக்கு முக்கியம். அவன் தேர்ந்தெடுத்த பொண்ணு நீ நல்ல குணவதியா இருக்கறப்போ எங்களுக்கு வேற எதுவுமே குறையாய் தெரியலை" என்று கூறி அவளை சமாதானப்படுத்தினார்கள். சரி இப்போ பேக் டூ கதை.
சங்கரின் அப்பா காருடன் வந்து சேரவும் நால்வரும் கிளம்பி சென்று காஞ்சிபுரத்தில் ஷாப்பிங் எல்லாம் முடித்துவிட்டு கோவிலுக்கு சென்று தரிசனங்கள் முடித்துக்கொண்டு வீடு திரும்ப இரவு ஆகிவிட்டது. சங்கர் பவித்ராவை அவள் தங்கியிருக்கும் ஹாஸ்டலில் இறக்கிவிட்டுவிட்டு,
"பிறந்தநாள் அதுவுமா எனக்கு எதுவும் பரிசு இல்லையா?" என்று ஆர்வமாக கேட்டான்.
தான் பரிசாக குடுத்த சட்டையை தானே அணிந்திருக்கிறான். இன்னும் என்ன பரிசு என்று குழப்பத்துடன் அவள் விழிக்க...
அவன் கன்னத்தை காட்டி "ஒண்ணே ஒண்ணு" என்று கேட்டான்.
அவன் நோக்கம் புரிந்து "காலைல வேண்டுதல் பலிக்காதுனு சொன்னியே இப்போ பலிக்கப்போகுது பாரு" என்று கையை ஓங்க, அவன் "போடி" என்று கூறிவிட்டு பைக்கை விருட்டென்று கிளப்பினான்.

*** முற்றும் ***
புத்தகங்களின் நடுவில் வரும் விளம்பரங்களில் கவனத்தை ஈர்க்கும் விளம்பரங்கள் வெகு சில மட்டுமே. சில சமயம் தாளின் வழுவழு தன்மை, சில சமயம் வசீகரிக்கும் வண்ணங்கள், சில சமயம் அதில் வரும் வாசகங்கள்னு பல காரணங்கள் இருக்கும். அது போல் இந்த விளம்பரத்தில் வந்த வாசகத்தை பார்த்ததும் இது எதற்கான விளம்பரம் என்று ஒரு முறை பார்க்க செய்த்து நிச்சயம் இந்த விளம்பரத்தின் வெற்றிதான் :)
கிளிஞ்சல்கள்... I
பல நேரங்கள்ல நம் நண்பர்களுக்கு கிடைக்கும் வெற்றி / அங்கீகாரம் நமக்கே கிடைச்ச மாதிரி சந்தோஷத்தை குடுக்கும். எதை பத்தி சொல்றேன்னு சிலர் கெஸ் பண்ணியிருப்பீங்க. நம் சக வலைபதிவர், எங்கள் பாசமலர் சிவீஆர் அண்ணாச்சியின் புகைப்படங்கள் "Alliance Francaise of Madras" இல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் அவருடைய திறமைக்கு கிடைத்த வெற்றி இது.. இது போல் இன்னும் அவருடைய புகைப்படங்கள் பல அரங்கங்களில் இடம் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆகஸ்ட் 19-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது. உங்களின் வருகை அவரை நிச்சயம் ஊக்கப்படுத்தும்.

இடம் : Alliance Française of Madras
New No.24, College Road,
Nungambakkam,
Chennai 600 006.
Tel: 91 44 28279803/ 28271477
நேரம் : காலை 9 முதல் மாலை 7 வரை.
சனிக்கிழமை பிற்பகல் 1 மணி வரை.
மேலும் விபரங்களுக்கு - http://simplycvr.blogspot.com/2009/07/my-exhibition-in-alliance-francaise.html
அவருடைய புகைப்படங்கள் அனைத்தையும் காண http://www.flickr.com/photos/seeveeaar/

இப்ப எல்லாம் ஊர் சுத்தல் அதிகமாகிடுச்சு. போன வாரம் கல்பாக்கத்துல கார்னிவல் நடக்குது வாங்க ஜி3னு தோழி கூப்பிட, கட்றா பொட்டியனு கிளம்பியாச்சு. இன்சுயூரன்ஸ் ஏஜன்ஸில இருந்து நகை கடை வரை எல்லா ஸ்டாலும் இருந்துது. நல்லா ஒரு நாள் பொழுது ஓடுச்சு. ஆகஸ்ட் 9-ம் தேதி வரை இந்த கார்னிவல் நடக்கிறதாம்.
இது Giant Wheel-ல சுத்தறப்போ எடுத்தது :)

அவார்ட் நேரம் - கனகு & கில்ஸ் எனக்கு குடுத்த விருதுகள்...

ஸ்ரீவத்ஸ் குடுத்த விருது.

கனகு, ஸ்ரீவத்ஸ் & கில்ஸ் மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த விருதோட கேட்டகரி என் வலையுலக நண்பர்கள் எல்லாருக்குமே பொருந்துவதால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்னு இல்லாம எல்லோருக்கும் இந்த விருதை பரிசளிக்கிறேன் :))))

எதிர்பாராமல் கிடைக்கும் எந்த ஒரு பரிசும் அபரிமிதமான சந்தோஷத்தை குடுக்கும். அதுலயும் நமக்கு பிடித்த விஷயம் சம்பந்தபட்டதாகவும், கொடுப்பவர்களின் உழைப்பும் கலந்து இருந்தா.. மகிழ்ச்சிக்கு எல்லையும் உண்டோ?? என் தோழி சந்தியா அவளே பெயிண்ட் செய்து எனக்கு பரிசளித்த படம்.. என் ஃபேவரைட் பிள்ளையார் :)))))))))))))

கடைசியா ஒரு சுயவிளம்பரம் ;-) இந்த வாரம் றேடியோஸ்பதியில் சிறப்பு நேயர் பகுதியில் என் பாடல் தேர்வுகள் ஒலிபரப்பாகியுள்ளது. நீங்களும் படிக்க / கேட்க இங்கே செல்லுங்கள்.
இதே போல் உங்களுக்கு பிடித்த பாடல்களும் பதிவா வரணும்னு ஆசைப்படறவங்க, என்ன பாடல், ஏன் அந்த பாடல் பிடிக்கும்ங்கற காரணத்தோட kanapraba@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பலாம் :) நீங்களும் சிறப்பு நேயர் ஆகலாம் :)))
Subscribe to:
Posts (Atom)