நினைத்தாலே இனிக்கும்...


இந்த பிரவாகம் வலைப்பூ துவங்கி மூன்றாண்டுகள் முடிந்து சந்தோஷத்துடனும் உங்க எல்லாரோட ஆதரவுடனும் நான்காம் ஆண்டில் மகிழ்ச்சிகரமாய் நுழைகிறது. இந்த வலைப்பதிவின் உதவியால் என் வாழ்வில் பிரவாகமாக பெருகியது நண்பர்கள் வட்டம்னு சொன்னா அது மிகையாகாது. நான் அவர்கள் வலைப்பூவை படித்து பின்னூட்டமிட்டோ அவர்கள் என் வலைப்பூவை படித்து பின்னூட்டமிட்டோ அறிமுகமான நண்பர்கள் சிலர். அவர்களோட நண்பர்கள் அந்த நண்பர்களின் நண்பர்கள்னு அறிமுகமானவர்கள் பலர். அவங்களோட வலைப்பூவ நான் படிச்சது ரொம்ப கம்மி (பல சமயங்கள்ல சுத்தமா கிடையாதுங்கறது தான் உணமை :) ) ஆனாலும் ஜிடாக் அரட்டை , க்ரூப் மெயில் மொக்கைனு பழக்கமாகி அவர்களும் நல்ல நண்பர்களானது தனி கதை :)

இங்க சொல்லியே ஆகவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் வலைப்பதிவர் சந்திப்பு. முதன் முதல்ல நான் நேர்ல சந்திச்சது கன்யா-வ தான். அவங்க வீட்டுக்கு தான் போயிருந்தேன். அவங்கம்மா தங்கச்சி எல்லாரோடவும் நல்ல கலாட்டாவா நேரம் போக சாயந்திரம் எல்லாரும் ராயப்பேட்டால இருக்கற பொன்னுசாமில ஒரு கட்டு கட்டிட்டு வந்தோம். அப்படி ஆரம்பிச்சதுனாலயா என்னனு தெரியல நிறைய வலைப்பதிவர் சந்திப்பு உணவகங்கள்ல தான் நடந்துச்சு. நமக்கு ட்ரீட் குடுக்கறதுக்குன்னே நல்லவங்க நல்லா சிக்குவாய்ங்க எப்பவும் :)

அடுத்தது பதிவர்களின் கல்யாணங்களுக்கு ஊர் ஊரா சுத்தினது. 2008ல தான் ரொம்ப அதிகமா சுத்தினேன்னு நினைக்கறேன். எந்த ஊர்லயுமே எங்க போகனும் எப்படி போகனும்னெல்லாம் ரொம்ப விசாரிச்சது கிடையாது. ஒன்னு சென்னைல இருந்தே கூட வேற யாராவது வருவாங்க. இல்லாட்டி போற இடத்துல பேருந்து / ரயில் நிலையத்துல யாராவது வந்து கூட்டிட்டு போவாங்க. சில சமயம் இரண்டு கல்யாணங்கள் ஒரே நாள்லயோ அடுத்தடுத்த நாள்லயோ (முக்கியமா வேற வேற ஊர்ல) வந்தப்பவும் விடாம ரெண்டுத்துக்கும் போனதெல்லாம் இப்போ நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கு. 2008... நினைச்சு பாத்தா... நிஜமாவே ஒரு அழகிய நிலாக்காலம் தான் :) [அந்த வருஷம் நான் பதிவு போட்டது ரொம்பவே கம்மிதான். ஆனா ஊர் சுத்தினது ரொம்ப ரொம்ப ஜாஸ்தி ;) ]

ஒரு நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் இந்த வருஷம் எழுத வந்தப்போ பல புதிய நண்பர்களின் அறிமுகங்கள் கிடைச்சுது. கிடைச்சிட்டிருக்கு. புதுசு புதுசா நிறைய பேர் அறிமுகமாகிட்டிருந்தாலும் பழைய நண்பர்களும் இன்னும் தொடர்பில் இருப்பது ரொம்பவே சந்தோஷமான விஷயம். இது என்றென்றும் நீடிச்சா அதைவிட பெரிய விஷயம் எதுவுமே கிடையாது :)

கடைசியாக, என் வலைப்பூவை தொடர்ந்து படிக்கும் அனைவருக்கும் - "இது வரை நீங்கள் குடுத்த ஆதரவுக்கும், இனி குடுக்க போற ஆதரவுக்கும், இது வரை அடித்த கும்மிக்கும், இனி அடிக்க போகும் கும்மிக்கும் எல்லாத்துக்கும் சேத்து ஒரு பெரிய நன்னி சொல்லிக்கறேன்" :)



இருங்க அதுக்குள்ள எங்க கிளம்பறீங்க? இதுவரை இந்த வலைப்பூவில் தமிழ்ல பதிவு எழுதறேன்னு தமிழுக்கு சோதனை வைச்ச மாதிரி இன்று முதல் Little Joys of Life எனும் வலைப்பூவில் ஆங்கிலத்துக்கு சோதனை வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆக இனி நான் பீட்டர் இங்கிலிபீஷ்லயும் உங்கள் தாக்கப்போறேன்னு மிகத்தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன் :))) உங்களை அந்த இறைவன் காப்பாற்றுவாறாக :))

திருதிரு.. துறுதுறு..

என்ன தான் பாட்டோட மெட்ட உனக்கும் எனக்கும் ஆனந்தம் பாட்டுல இருந்து அப்படியே சுட்டிருந்தாலும் பாடல் வரிகள் கேட்க நல்லா தான் இருக்கு :))))



அதிரி புதிரி ஆரம்பம்
தினமும் நடக்கும் யுத்தம்
குடுமி பிடியும் ஆரம்பம்
அமளி துமளி சத்தம்

character தான் மாறுமோ
no way
careless குணம் போகுமோ
நீ உடைகள் அணிந்த கூவம் தான்
பேச்சில் இல்லை சுத்தம் பத்தம்
too much

அதிரி புதிரி ஆரம்பம்
தினமும் நடக்கும் யுத்தம்
குடுமி பிடியும் ஆரம்பம்
அமளி துமளி சத்தம்

நம்ம பார்வைக்கே தெரியாத bacteria
அதை தேடி கண்டுபிடிச்சி clean பண்றா
எல்லா things-ஐயும் தொடச்சு தொடச்சு சைஸ் வாரியா
அடுக்கி daily ஆயுதபூஜை கொண்டாடுறா

ஹே ஹே bathroom போறதுக்கு கூட timetable
schedule போட்டு அதை follow பண்ணுறா
இவ கனவில் கூட எதையோ calculatte-அ பண்ணுறா
too much
shakira album கேட்கையில் ghazhal பஜன் போடுறா
too much too much too much

குறட்டை ஒலியில் பூகம்பம்
விடிய விடிய தூக்கம்
so what
செவிகள் கிழிய hip hop-ம்
drums-ம் அலறும் சத்தம்
thats right
shave பண்ணவே சோம்பலோ
ஹேய்...
தாடியுடன் பார்க்கவோ
காட்டு வாசி போலே தோற்றம்
அய்யோ பாவம் அக்கம் பக்கம்

அதிரி புதிரி ஆரம்பம்
தினமும் நடக்கும் யுத்தம்
குடுமி பிடியும் ஆரம்பம்
அமளி துமளி சத்தம்

தினமும் early morning 5'o clock
சுப்ரபாதம் full volume-ல play பண்ணுறா
hotel-காரன் இட்லியில manufacturing date எங்கேங்குறா
ரோடுல யாராச்சும் குப்பை போட்டா
இவ பாத்துட்டா சண்டைக்கு போறா
இவ கூட வாழ்வது என்னாலே முடியாது
முடியவே முடியாது அய்யோ no no no
நீ facebook orkut-ல் தான் ஜொல்லு வடிக்கும் அல்பம்
நீ பத்து second-ல் நூறு channel தான் மாத்தி பார்க்கும் ஜென்மம்
so what?
test match night எல்லாம் தினமும் பார்க்கும் cricket பூதம்
too much

அதிரி புதிரி ஆரம்பம்
தினமும் நடக்கும் யுத்தம்
குடுமி பிடியும் ஆரம்பம்
அமளி துமளி சத்தம்

வாலே இல்லா வாணரம்
காலன் வரும் வாகணம்
முருங்கை மரத்து வேதாளம்
அய்யோ இவனால் நித்தம் கஷ்டம்

இதே படத்துல டாக்டர் மாப்பிள்ளைனு வர்ற இன்னொரு பாட்டும் இதே மாதிரி செம கலாய்த்தலா வருது :)

பாடலை கேட்க

முழு பாட்டு வரிகளும் எழுத சோம்பேறி தனமா இருக்கு.. அதனால சில வரிகள் மட்டும்..

tom and jerry டிஷ்யூம் போலே
இம்சை எல்லாம் தாங்கும் சுண்டெலி யாரு

husband job-க்கு ஆள் தேடி
call for பண்ணுற நீ கேடி
யாருடா அந்த ஏமாளி
இவ கேட்கும் கோமாளி

உன்னிடம் சிக்குற ஆள் அவன்
சுனாமியில் மாட்டும் boat அவன்

ராமர் வில்ல வளைச்சா
IQ test-ல ஜெயிச்சா
moon-ல காலை மிதிச்சா
அவன் தான் உங்க range-அ

mutton stall- க்கு விரும்பி
ஆடு தான் வருமாடி

Savitha's Tag !!

வர வர கேள்வி பதில் செக்‌ஷன் அதிகமா வருது ப்ளாக் உலகத்துல. இப்போ சவிதா 22 கேள்விகளோட ஒரு டேக் குடுத்திருக்காங்க. நாங்க எல்லாம் சமத்தா குடுத்த டேக்க உடனே முடிச்ச்டிடுவோமில்ல :))

1. Grab the book nearest to you, turn on page 18 and find line 4?


பக்கத்துல இருக்கறது டெலிபோனோட user manual தான். திருப்பி திருப்பி பாத்துட்டேன். அதுல மொத்தமே 10 பக்கம் தான் இருக்கு :(

2. Stretch your left arm out as far as you can & touch air?

தொட்டுட்டேன். [நீங்க என்னை நம்பித்தான் ஆகனும்.. U have no other choice :P ]

3. What is the last thing you watched on TV?

காலைல ஜெயா மேக்ஸ் சானல்ல வரவு எட்டனா செலவு பத்தனா பாட்டு



4. Without looking, guess what time it is?


around 10 AM?

5. Now look at the clock, what is the actual time?

9.46 AM

6. With the exception of the computer, what can you hear?

ஃபேன் ஓடற சத்தம்

7. When did you last step outside? What were you doing?

கடைசியா வீட்டை விட்டு வெளியில போனது நேத்து சாயந்திரம். பிரதோஷம்ங்கறதால சிவன் கோவிலுக்கு போயிருந்தேன் :)))

8. Before you started this Q&As, what did you look at?


Facebook-ல Sunshine Ranch game.

9. What are you wearing?

சுடிதார்.

10. When did you last laugh?

நேற்று இரவு நண்பனோடு ஃபோன்ல பேசிக்கொண்டிருந்த பொழுது.

11. What is on the walls of the room you are in?

புதுசா அடிச்ச பெயிண்ட், 2 ட்யூப்லைட், 3 switch board, 2 cupboard, AC & Stabilizer, wall clock, hanger, wall fan. [என்னை போல சமத்தா யாராவது ஒருத்தராவது பதில் சொல்லியிருப்பாங்களா ;)))) ]

12. Seen anything weird lately?

I feel I am becoming more weird lately :))))))

13. What do you think of this quiz?

கேள்விய கொஞ்சம் குறைச்சிருக்கலாம் ;))))

14. What is the last film you saw?

தியேட்டர்ல பாத்தது - Quick Gun Murugan.
டீவில பாத்தது - குஷி

15. If you became a multimillionaire overnight, what would you buy?

கேட்க நல்லாதான் இருக்கு. நடந்தா இன்னும் நல்லா இருக்கும். கடற்கரை ஓரமா ஒரு இடம் வாங்கி கடலை பாத்த மாதிரி ஒரு விடு கட்டனும். அப்புறம் ஒரு world tour போகனும். இப்போதைக்கு இது ரெண்டு தான் ஆசை :)

16. Tell me something about you that I dunno!


இன்னிக்கு காலைல நான் இட்லி & புதினா துவையல் சாப்பிட்டேன் :))) [கண்டிப்பா இது உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை :P]

17. If you could change one thing about the world, regardless of guilt or politics, what would you do?

இந்த கேள்விக்கு எந்த பதிலும் இப்போதைக்கு தோணலை.. அப்புறமா ஏதாவது தோணினா அப்டேட் பண்றேன் :))

18. Do you like to Dance?

தனிமையில் மட்டும்.

19. Imagine your first child is a girl, what do you call her?
20. Imagine your first child is a boy, what do you call him?


அப்படி ஏதும் specific-அ இந்த பெயர் தான் வைக்கனும்னு மைண்ட்ல இல்லை. But still கண்டிப்பா தமிழ் பெயரா கொஞ்சம் வித்தியாசமான பெயரா வைக்கனும்னு மட்டும் ஐடியா இருக்கு.

21. Would you ever consider living abroad?

If the decision is in my hands, the answer would be a strong "NO".

22. What do you want GOD to say to you when you reach the pearly gates?

I would just expect a warm welcome smile from Him. That's more than enough :)

நான் கோத்து விடறது சச்சின் கோப்ஸ், மகா & இரவீ

மர்ம தேசம் !!


அச்சம் கலந்த ஆர்வத்துடன்
அசைவின்றி அமர்ந்து
இனி நிகழப்போவதை அறிய
இதயம் வேகமாய் துடிதுடிக்க
நிச்சயம் சுபமாய் முடியுமென்ற
நம்பிக்கையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்...

திரையில் ஓடிக்கொண்டிருக்கும்
திகில் படத்தையும்,
திசையறியா படகாய்
தத்தளித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையையும் !!

இனியதொரு துவக்கம்...

நேரில், தொலைபேசியில், ஆர்குட், ஃபேஸ்புக், மெயில், ஜி-டாக், க்ரீட்டிங்ஸ், பதிவு, பின்னூட்டம்னு பல வழிகளில் வாழ்த்திய அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள் சொல்லிக்கறேன் :)


வாழ்த்துக்கள் சொல்றதோடு நிக்காம கடந்த மூன்று ஆண்டுகளாய் தொடர்ந்து வீட்டிற்கு பரிசுப்பொருட்கள் அனுப்பும் கவிதாயினி காயத்ரிக்கும் கே4கே அண்ணாச்சிக்கும் ஸ்பெஷலா ஒரு நன்றி :))

கொடி குட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் பத்தி டீடெய்ல்டா பதிவு போட சொன்னாங்க. மத்தவங்க சொல்லி எதை நாம உருப்படியா செஞ்சிருக்கோம் ;) அதனால டீடெய்ல்ட் பதிவுக்கு பதில் ஹைலைட்ஸ் மட்டும் :)))

August 31, 2009 - காலையில எழுந்ததும் வழக்கம் போல மெயில் படிக்க உட்கார்ந்தா லைட்டா ஒரு அதிர்ச்சி. ஒர்குட், பேஸ்புக், மெயில்னு ஒவ்வொரு விதமா ஒவ்வொருத்தர் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியிருந்தாங்க.. யாருமே அட்வான்ஸ் வாழ்த்துனு கூட சொல்லலை. ஏற்கனவே பாதி தூக்கத்துல மெயில படிச்ச எனக்கு லேசா குழப்பம் ஆரம்பிச்சுது.. இன்னிக்கு செப்டம்பர் 1-அ? இல்லை நான் எங்கயாவது என் பிறந்தநாள ஆகஸ்டு 31-னு மாத்தி குடுத்துட்டேனானு..

சரி காலைல தான் மக்கள் இப்படி பண்ணாங்கனு பாத்தா நைட்டு கரெக்டா 9.30 மணிக்கு கில்ஸ் ஃபோன் பண்ணி பிறந்தநாள் வாழ்த்து சொல்றாரு. யோவ் அது நாளைக்கு தான்யா. இப்ப எதுக்கு வாழ்த்தறீங்கனு கேட்டா சிங்கப்பூர்ல இப்போ 12 மணி ஆகிடுச்சுங்கனு சொல்றாரு. நல்லா வருவீங்க நீங்கனு நினைச்சிக்கிட்டு ஃபோன வைச்சா உடனே கோப்ஸோட ஃபோன். அவனும் கரெக்டா ஃபோன எடுத்ததும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்னு சொன்னான்.. டேய்.. நீயுமாடா? நாளைக்குதான் டா என் பிறந்தநாள்னு அவன்கிட்ட சொன்னா அவன் உடனே.. குவைத்ல 9.30 மணினா இந்தியால 12 மணி தானேங்கறான். சரிடா. அதுக்கு ஏன் இந்தியா டைம் 9.30க்கு பண்ணனு கேட்டா அதெல்லாம் அப்படித்தான்ங்கறான். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

ஆஹா.. ஆரம்பமே இப்படியானு நினைச்சிட்டிருக்கறப்போ நம்ம தங்கச்சிக்கா 10.20 க்கு ஃபோன் பண்ணா. என்னமா இந்த நேரத்துலனு கேட்டா உங்க டைம் 12 மணிக்கு பண்ணலாம்னு நினைச்சு தான் உட்கார்ந்திருந்தேன். ஆனா எப்படியும் அப்போ உங்க லைன் பிஸியா இருக்கும். அதான் இப்பவே பண்ணிட்டேன்ங்கறா... அது சரி.. இப்படியாக ஆரம்பிச்ச கூத்து ஒரு வழியா அர்த்த ராத்திரி ஒரு மணிக்கு முடிஞ்சுது.

மறுநாள் காலை பரிசு பொருட்களின் வரவுகளுடன் இனிதே துவங்கியது :)

ஆஹா.. கலெக்ஷன் அருமையா இருக்கும் போல இருக்கேனு நினைக்கறப்போவே நம்ம பழைய ஆபீஸ் மக்கள் ஃபோன் பண்ணி ஆபீஸ் வாங்கனு ஒரே பாச மழை.. சரினு போனா அவங்களே ட்ரீட்டும் குடுத்து கிப்டும் குடுத்து அசத்திட்டாங்க :) அதுலயும் அவங்க குடுத்த கார்ட்ல இடம் இல்லைனு ஸ்டிக் இட் நோட்ஸ்ல எல்லாரும் விஷஸ் எழுதி ஒட்டியிருந்த்து சூப்பரா இருந்துது :)


எல்லாம் நல்லா கொண்டாடி முடிச்சு வீட்டுக்கு வந்துட்டு பேக் அப் பண்ணிட்டு ஃபிரெண்டோட கல்யாணத்துக்காக பெங்களூர் போக கிளம்பியாச்சு. 10.45 A/C பஸ்ஸுக்கு டிக்கெட் புக் செஞ்சிருந்தேன். அங்க இருந்த நல்லவன், A/C பஸ்ல புக் பண்ணது கொஞ்சம் பேர்தான்னு அவங்களையும் 11 மணி volvo A/C பஸ்ல அனுப்பிவிட, ஆஹா ஜி3 அதிர்ஷ்டம் தான் போனு ஜாலியா volvo பஸ்ல பெங்களூர் நோக்கிய பயனம் துவங்கியாச்சு :)))

சொல்ல மறந்துட்டேனே... முதல் நாள் குழப்பிவிட்ட மாதிரியே சில நல்லுள்ளங்கள் கரெக்டா 1-ம் தேதி வந்து பிலேடட் விஷஸ் சொல்னதோட நிக்காம, எப்படி போச்சு பிறந்தநாள்னு வேற கேள்வி கேட்டு லைட்டா டெர்ரர் ஆக்கினாங்க :))))))))))))

பதிவு போட்டு வாழ்த்திய நல்லுள்ளங்களின் பட்டியல்...

ஒரு நாள் முன்னாடியே வாழ்த்தறேன்ற பேர்ல கலாய்த்த கில்ஸானந்தர்

கொண்டாட்டத்துக்கு இன்னும் 11 மணி நேரம் இருக்குனு ஓசி விளம்பரம் குடுத்த அன்னம்

மத்தவங்க யாராவது ஓவரா கலாய்ச்சு பதிவு போடறதுக்கு முன்னாடி சிம்பிளா சங்கத்துல ஒரு பதிவு போட்டு என்ன காப்பாத்தின கவிதாயினி

தேன் கிண்ணத்துல பாட்டு டெடிகேட் பண்ண தங்கச்சிக்கா

அது பத்தாம இன்னும் இரண்டு அற்புதமான காட்சிகளை டெடிகேட் செஞ்ச பதிவு

என் பதிவுகளோட தலைப்ப வைச்சே பதிவு போட்ட ஆயில்ஸ் அண்ணாச்சி

என்னையும் நல்லவனு நம்பற ஒரு நல்லுள்ளம் ஸ்ரீவத்ஸ்

ப்ளாக் யூனியனில் வாழ்த்து பதிவு போட்ட டுடி அக்கா

எப்பவுமே அக்காவுக்கு கார் சாவிய மட்டும் பரிசா குடுத்துட்டு கார குடுக்காம ஏமாத்தும் பாசமலர் தம்பி

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்னு கெத்து விட்டுட்டு வந்திருக்கற கார்த்திக்கோட பதிவு