விதி வலியது..

நானும் எழுத எதுவும் இல்லாததால இந்த வார இறுதி எதுவும் பதிவு போடாம உங்கள எல்லாம் நிம்மதியா விடலாம்னு பாத்தா விதி யார் மூலமாவது சதி செஞ்சிடுது. இந்த வாட்டி சதி நம்ம பூர்ணிமா மூலமா.. அவங்க ஒரு புது தொடர்ல நம்மள கோத்து விட்டுட்டாங்க. எப்படி ப்ளாகுக்கு வந்தீங்கனு சொல்லுங்கனு.. சாதாரணமாவே முக்கால்வாசி நேரம் பழைய நினைவுகள்ல உட்கார்ந்திருப்பேன் நான். இப்படி இவங்க கேட்டப்புறம் சும்மா இருப்பேனா.. அப்படியே அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே எஃபெக்டு தான் :)))))

ஆரம்பத்துல என் நண்பர் ஒருவர் சில ப்ளாக் லிங்க் எல்லாம் மெயில் பண்ணுவாரு. முக்கால்வாசி சீரியஸ் டாபிக்கா இருக்கும். சில சமயம் படிப்பேன்.. சில சமயம் தலைப்ப பாத்ததும் இது நமக்கு வேலைக்காகாதுன்னு யூ-டர்ன் போட்டு வந்துடுவேன். அதுக்கப்புறம் ஒரு நாள் ஏதோ கூகிள்ல தேட போக அது நம்ம நாட்டாமையோட ஆறு பதிவுல கொண்டு போய் விட்டுடுச்சு. பதிவு சூப்பரா இருந்துதுனு சொல்றத விட அவரோட கமெண்ட் பக்கம் எனக்கு காதுல புகை வர வைக்காத குறையா இருந்துதுங்கறது தான் உண்மை. அவ்ளோ க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ் மாதிரி எல்லாரும் கதை அடிச்சிருந்தாங்க. நானோ அப்போ தான் புது ஆபீஸ்ல சேந்திருந்தேங்கறதால பழைய நண்பர்களோடவும் பெருசா தொடர்பில்லை. புது ஆபீஸ்லயும் சொல்லிக்கற அளவுக்கு நண்பர்களாகலை யாரும். அந்த ஏக்கத்துலயே அவர் பதிவுல ஒரு கமெண்ட்ட போட்டுட்டு வந்தேன். அப்புறம் அடிக்கடி அவர் ப்ளாக் பக்கம் போக ஒரு பதிவுல கேகே கமெண்ட்ட பாத்தேன். அவரோட ப்ரொபைல் படம் வித்யாசமா இருந்துது. அப்படி என்ன படம்னு யோசிக்கறீங்களா இது தாங்க அந்த படம்.


சரி, யாருடா இவருனு எட்டிப் பாக்கலாம்னு அவர் ப்ளாக் பக்கம் போனேன். அப்போ அவர் பிரச்சனைகளை தீர்க்க புது வழினு ஒரு பதிவு போட்டிருந்தார். சும்மா இல்லாம விளையாட்டா நான் ஒரு கமெண்ட் போட அதுக்கு அவர் போட்ட பதிலை பாத்து செமையா சிரிப்பு எனக்கு. பயங்கற காமெடியான ஆள் போலனு நினைச்சிக்கிட்டேன். அவர் ப்ளாக்ல தான் என் முதல் கும்மி ஆரம்பிச்சது. ஆரம்பத்துல அனானியா கும்மியடிக்க ஆரம்பிச்சு அப்புறம் ஜி3 ங்கற பேர்லயே கும்ம ஆரம்பிச்சாச்சு. கும்மில நாட்டாமையும் கலந்துக்க கேகே ப்ளாக்ல நாங்க அடிச்ச கூத்த பாத்து கில்ஸ், ப்ரீத்ஸ், s0ul, ஆலிவ்ஆயில் னு நண்பர்கள் வட்டம் பெருசாகிட்டே போச்சு. ஆனா இதுல கொடுமை என்னனா, கேகே & நாட்டாமையோட ப்ளாக்ரோல்ல இருந்து தான் முக்கால்வாசி ப்ளாக் போயிட்டு இருந்தேன். போனது எல்லாம் எங்க மூணு பேருக்கும் பொதுவான ப்ளாக்ங்கறதால எங்க போனாலும் விடாம துரத்தி என்ன கலாய்ச்சிட்டிருந்தாங்க ரெண்டு பேரும். இது என்னடா ஜி3 க்கு வந்த சோதனைனு அதுக்கப்புறம் கமெண்டின பரணி, கடல் கணேசன் ப்ளாக்ல எல்லாம் சாருங்கற பேர்ல கமெண்ட்ட ஆரம்பிச்சேன். இப்படியே ஒரு மூணு மாசம் ப்ளாக்கர் அக்கவுண்ட இல்லாம அதர் ஆப்ஷன்லயே கும்மி அடிச்சிட்டு இருந்தேன். ஆனா நம்ம கீதா மாமி, சச்சின் கோப்ஸ் எல்லாம் அவங்க ப்ளாக்ல அதர் ஆப்ஷன் குடுக்காததால அவங்க ப்ளாக்ல எல்லாம் கமெண்ட் போடறதுக்காகவே ப்ளாக்கர் ஐடி க்ரியேட் பண்ண வேண்டியதா போச்சு.

ஐடி க்ரியேட் பண்ணப்புறம் நம்ம ஆர்வக்கோளாறு சும்மா இருக்குமா? இதுல எல்லாரும் எப்படி பதிவு போடறாங்கனு டெஸ்ட் பண்ண ஒரு பிள்ளையார் படம் போட்டு எல்லாருக்கும் ஒரு வணக்கம் சொல்லி பதிவு போட்டேன். நானே எதிர்பாக்காத அளவுக்கு மக்கள் பின்னூட்ட மழை பொழிய அவங்களுக்கு நன்றி சொல்லி அடுத்த பதிவு போட்டேன்.. அப்படியே ஆரம்பிச்சது தான். இன்னிக்கு வரை ஓடிட்டிருக்கு நம்ம பொழப்பு.. ஆரம்பிச்சப்போ இருந்த நண்பர்கள் வட்டத்துல இப்போ ஆக்டிவ்வா இருக்கறது ரொம்ப சிலர் மட்டுமே. எத்தனை புதிய நண்பர்கள் அதுக்கப்புறம் அறிமுகமாகி இருந்தாலும் என் பழைய நண்பர்களை ரொம்ப மிஸ் பண்றேன்னு தான் தோணும். ரொம்ப நாள் கழிச்சு போன வாரம் என் குரு வேதா கால் பண்ணப்போ பேசினது அரை மணி நேரம் தான்னாலும் அந்த அரை மணி நேர அரட்டை தந்த புத்துணர்ச்சியை வார்த்தைகள்ல சொல்ல முடியாது. குரு, நீங்க என் பதிவை எல்லாம் படிக்கறேன்னு சொன்னதால இந்த ஐஸ நான் வைக்கறேன்னு தப்பா நினைச்சுக்க கூடாது :P

இம்புட்டு தாங்க நாம ப்ளாக்ல நுழைஞ்ச வரலாறு. சரி இந்த தொடர்ல வேற யாரையாவது கோத்து விடனுமில்ல.. நான் கோத்துவிடறது,

ரொம்ப நாளா பதிவு போடாம ஏமாத்திட்டிருக்கற கே4கே அண்ணாச்சி

சமீபத்துல மூணு வருஷம் நிறைவு விழா கொண்டாடிய சிவா மற்றும் கில்ஸ்

Earth hour 2009

It is Earth hour on March 28th, 2009 at 8:30pm local time. Please switch off all possible electrical appliances during this hour and vote for a green Earth. Please pass this information to everyone you know. For more information check out http://www.earthhour.org




P.S. Thanks KK, for sharing this video.

அயன் பாடல்கள்..


ஓஹாயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே..
ஓவாசமே சுவாசமே வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே..

நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என்கையில் வளைந்து என்மீது மிதந்து
சாலையில் நடக்கின்ற நிலவு நீ

நீயும் நீயும் அடி நீதானா
நீல நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நாந்தானா (2)

(ஓஹாயியே..)

நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என்மீது மிதந்து
மாலையில் நடக்கின்ற நினைவு நீ

ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்
மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியளே

ஒரு கையில் ஒரு கையில் நகங்களும்
மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே

இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கே
இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தேன்

ஓஹோஹோ.....
(ஓஹாயியே..)
(நெஞ்சுக்குள்...)

இமைக்காத இமைக்காத கண்களும்
எனக்காக எனக்காக வேண்டி நீ
உனைக்கண்டு உனைக்கண்டு ரசித்தேனே..

முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
இதழ் முத்தம் இதழ் முத்தம் என்றதும்
அதையெண்ணி அதையெண்ணி இனித்தேனே

சுடும் பூங்காற்றே.. சுட்டு போகாதே
இனி வானிங்கே மழைச்சாரல் பூவாய்

(ஓஹாயியே..)
(நெஞ்சுக்குள்..)

நீயும் நீயும் அடி நீதானா
நீல நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நாந்தானா (2)

நீயும் நீயும் அடி நீதானா

*****************************************

விழி மூடி யோசித்தால்..அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழைக்காலம் என் வாழ்வில் வருமா
மழைக்கிளியே மழைக்கிளியே உன் கண்ணை கண்டேனே
விழிவழியே விழிவழியே நான் என்னை கண்டேனே.. செந்தேனே..

(விழி மூடி... )

கடலாய் பேசும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே

(விழி மூடி... )

ஆசை என்னும் தூண்டில் முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம்
இது மாய வலையல்லவா புது மோக வலையல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்

(விழி மூடி...)

விடியாத இரவுகள்...



சிரித்து பேசி
மகிழ்ச்சியாய் திரிந்தாலும்
இறுதியில் வெறுமையாய்
செல்லும் நாட்கள்

எங்கேனும் செல்ல
மனம் துடித்தாலும்
எங்கென்றறியாத குழப்பத்துடன்
செல்லும் நாட்கள்

எல்லாவற்றையும் ரசித்து
வாழ நினைத்தாலும்
எதிலும் ஈடுபாடின்றி
செல்லும் நாட்கள்

விடியாத இரவுகளாய்..

சட்டுனு ஒரு சர்வே...

இதே தலைப்புல ஒரு முறை ராம் நல்லவரா கெட்டவரான்னு கேட்டு ஒரு பதிவு போட்டேன்.

ஒரு வரில போட்ட பதிவுக்கு 130+ பின்னூட்டம் வந்ததை பாத்துட்டு டென்ஷன் ஆகி நம்ம கே4கே அண்ணாச்சி போட்ட பதிவு இங்க.

அதோட நிறுத்தினாரா.. நம்ம ப்ளாகுக்கு தனியா ஒரு விளம்பரமும் ரெடி பண்ணிட்டாரு இல்ல..



ஆனா காலத்தின் கொடுமை.. இன்னிக்கு அவருக்கே ஒரு சர்வே போட வேண்டியதா போச்சே..

ஏன் என் ப்ளாக்ல பின்னூட்டம் போடறதில்லைனு ISD கால் போட்டு கேட்டா "எனக்கு வயசாகி போச்சு. இப்போ எல்லாம் கும்மி அடிக்க முடியலை" ங்கறாரு.

நேத்து சிவா பதிவுல மட்டும் கும்மி அடிக்க முடியுமான்னு கேட்டா "நீங்களும் பாவனா படம் போடுங்க வந்து கும்முறேன்" ங்கறாரு..

ரெண்டு பதிலும் ரொம்ப முரண்படுதே.. நீங்களே சொல்லுங்க இவருக்கு நிஜமாவே வயசாகிப்போச்சா ???

என் உயிர் தோழியே..


என் முகத்தைப் பார்த்தே
என் உணர்வுகளை
புரிந்து கொள்கையில்
என் தாயானாய்

நான் தவறு
செய்யும் போது
உரிமையுடன் கண்டிக்கையில்
என் தந்தையானாய்

நான் குழம்பும் பொழுது
என்னை வழி நடத்துவதில்
என் ஆசானானாய்

அவ்வப்போது என்னுடன்
சிறு சிறு
சண்டைகள் போடும் போது
என் சகோதரியானாய்

நான் ஆதரவு தேடும் போது
தோள் கொடுத்து
உதவுகையில்
என் தோழியானாய்

எப்படி பெண்ணே
உன்னுள் மட்டும்
இத்தனை பரிமாணங்கள்
படைத்தான் ஆண்டவன்??

2007-ல் என் தோழிக்காக எழுதிய கவிதை.. இன்னிக்கு அவ பிறந்தநாள் என்பதால் மீண்டும் ஒரு முறை பப்ளிஷ் பண்றேன் :)

Good One...

Bit lengthy but a wonderful article. Just thought of sharing.

Thanks : Frozen thoughts magazine, March 2009 issue.

Pointing at Aldous Huxley's quote, "Experience is not what happens to you. It is what you do with what happens to you" Suj, Avyakta's wife sought clarification from him.

It is so heartening when your spouse can also be your intellectual companion. People go through intellectual loneliness, where they wish to share their contemplation and comprehensions of life, but don't find people interested in such intellectual bakwas. There is a different depth and quality to the relationships when husband and wife, parents and children, amidst friends, between siblings, amongst colleagues - not only discuss the day to day issues, but also enquire into the deeper and higher issues of life. When we think together, when we agree to disagree, when we understand that beyond my way and your way there can be a third way, the possibilities are limitless. Suj and Avyakta enjoyed their moments of intellectual exploration. In the intellectual sense, one plus one is always greater than two.

"What does Huxley imply when he says experience is what you do with what happens to you?" enquired Suj.

"I tell you I will be home by eight, but land up at nine. This is just an event of a husband ending up being late by an hour. You process that as 'I have taken you for granted' and 'I no more have respect for you'. Your mind questions 'Will he do this if it was a meeting with his chairman?' and it also concludes 'It is time to tell him that I am not his doormat'. And the event is just that I landed up an hour late. But the interpretation of the event by your mind is that I don't respect you and I have taken you for granted. That isn't necessarily the reality. It is only your perception of reality. That's what Huxley meant when he said 'it is what you do with what happens to you'," retorted Avyakta.

Suj poked Avyakta with her index finger and said with a smile, "Without taking a dig at me, you just cannot explain anything. Hey, don't talk as if you are some angel of a man! When I give you feed backs with a genuine intent to help you improve, you interpret it as 'I am finding fault with you all the time' and you get agitated. Same things I said in the initial months of our marriage and you used to say, 'I am so lucky to have you in my life. You always help me improve'. Same things I say to you now. But then I was an angel and now I am a devil." Of Course, by the last sentence, the smile on Suj had already dried.

In the presence of love, events are interpreted differently. When ego pops its head out, events are interpreted differently. If it is a stranger, the event is interpreted differently. If it is a relative, the interpretation is different. If it is men from that community, then the interpretation is different. If they are from this linguistic background then there is a different generalization for them.

Like the icons on a desktop, we hold icons for every person in our head. Some icons mean good people, some wonderful people, some not so good, some we cannot even stand , some the worst kind, and so on... These icons serve as the spectacles through which we perceive people and accordingly interpret what they do and what they do not do. When she is a good person in our head, then even a wrong from her is nullified and taken. When he is a bad person in our head, then even a right from him is negated and overlooked. Essentially, whether they are good or bad in our head is completely different from the reality of whether they are actually good or bad. That's why the same person is perceived as devil by one and angel by the other. What Gandhi is in your head and what Gandhi is in Godse's head is independent of what Gandhi actually was. What you see in Christ is not what Pilate saw in him. How true? The person need not change; when the icon we hold for the person in our head changes, it changes the relationship completely, positively or negatively.

"Let us not bring in our personal emotions into this discussion and tarnish the whole enquiry" clarified Avyakta. "What you are asking is pertinent. Aldous Huxley has revealed a great insight."

Suj walked into her open-kitchen and started preparing tea. Avyakta followed. Two things he could not resist in life - Suj and her tea. Avyakta sat on the kitchen counter. He continued, "So what happens to us is an event. How we process, perceive and interpret that event becomes our experience. So, the same event becomes a different experience for different people, depending on how they process, perceive and interpret it. Being pushed out of the train at Pietermaritzburg railway station in South Africa was an event. Gandhi could have gone into depression. However, the way he chose to process, perceive and interpret that event turned out to be a turning point not only to him but to a great nation". Avyakta added with laughter, "The whole British empire must be cursing that one white man.... if only he had allowed Gandhi to continue to travel in the first class compartment?? "

Suj intervened, "It is even more evident in the context of all these understandings, more than the problem, it is my reaction to the problem that hurts me more. More than the calamity, it is my fear of the calamity that hurts me more. More than your actions, it is how I process, perceive and interpret your actions that has a bearing on the relationship; it also has a bearing on my peace of mind. The way I see the problem is the problem. The way I see the problem can also be my solution. If I see it as a failure, it is a failure. Instead, if I see failures as a mere outcome with a feedback, I can improve with every experience. Success has its share of lessons and so are failures. In fact, what failures can teach, success cannot, and what success can teach, failures cannot. Good times, bad times or filtering times - all matter of perceptions. I can choose to perceive any event the way I want. So, progress and stagnation are just the result and effect of how I choose to process the events of my life". She then snapped, "Thank your stars Avyakta, in spite of you, our relationship has progressed because I have interpreted all your actions as your expressions of love, irrespective of what your intent might have been."

The tea was ready. Sipping his tea, Avyakta thought, "In the context of love, sarcasm induces humour. In the context of ego, sarcasm induces hurt. This is what they should have meant when they said 'It's Maya.. just an illusion'. After all, we are not dealing with reality, but only with perceived reality. We are actually not facing situations, but our interpretation of situations. It is not what you are, but it is what I think of you that has a bearing on my relationship with you. So, even God needn't be a reality. As long as I can hold an icon of devotion, surrender and faith for that perceived reality, it works in my favour". Avyakta wondered, "Could it be that it is just my perception that Suj's tea is the best in the world?" He smiled. Sipping her tea and exchanging a glance with Avyakta, Suj too smiled. Who knows what she perceived from Avyakta's smile?

Avyakta concluded, "So, it is not enough that you improve the quality of communication with the world outside. In fact, it is even more important that you improve the quality of your communication with yourself. What you tell the world and what the world tells you make a very small difference to you. However, what you keep telling yourself makes all the difference to you. What happens to you is not in your control. But, how you process what happens to you is completely in your control. And in controlling that you control your whole life. So, if everything about my life has to change, all I have to do is change the icons I need to change in my head and also control what I take into my head."

Suj remarked, "Events are God's responsibility. Experiences are man's responsibility".

Avyakta and Suj embraced each other. What this embrace meant to each other will remain each other's secret. Who will ever know how they perceived it?

நல்லா கேக்குறாங்கய்யா டீடெய்லு...

ரவீ அநியாயத்துக்கு கேள்வி கேட்டு டேக் பண்ணியிருக்காரு. எப்படியும் பதிவு போட மேட்டர் இல்லாம தானே இருக்கோம். சரி.. இதையே பதிவா போடலாம்னு முடிவு பண்ணி போட்டாச்சு :)

உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


"கா" னு ஆரம்பிக்கற எழுத்துல பேர் வைக்கனும்ங்கறதால சாமி பெயரான காயத்ரி னு எனக்கு பேர் வைச்சாங்களாம்.. என் பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுலயும் வேலைக்கு சேர்ந்தப்புறம் அப்பா பேரோட சேத்து பாக்கறப்போ எல்லாம் இன்னும் ரொம்ப பிடிக்கும். ஆனா ஆன்ஸைட் மக்கள் வரை எல்லாரும் ஜி3 னு தான் கூப்பிடறாங்கங்கறது வேற கதை.

கடைசியாக அழுதது எப்பொழுது?

2 நாள் முன்னாடி ராம் கிட்ட மொக்கை போட்டுட்டிருந்தப்போ அவரு வழக்கம் போல என்னை கலாய்க்க.. வேணாம் ராம்.. அழுதுடுவேன்னு டயலாக் விட்டுட்டிருந்தேன்.. இதை பாத்த என் தோழி அது என்ன ஜி3 அழுதுடுவேன் அழுதுடுவேன்னு சொல்றீங்க ஆனா அழவே மாட்றீங்கன்னு கேட்க [நம்மள அழ வைச்சு பாக்க எம்புட்டு ஆர்வமா இருக்காங்க பாருங்க :( ] அதுக்கு அவ கிட்ட நாங்க எல்லாம் பப்ளிக்கா அழ மாட்டோம்ல னு கெத்தா டயலாக் உட்டு அப்பீட் ஆயிட்டேன்..

உங்களுக்கும் அதே பதில் தான்.. அழுதாலும் அதை பப்ளிக்கா சொல்ல மாட்டோம்ல :P

உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும். கையெழுத்து கொஞ்சம் சுமாரா இருக்கும்ங்கறதால என் பழைய ஆபீஸ்ல என் நண்பர்கள் எல்லாருக்கும் அசைண்மெண்ட் & ரெக்கார்ட் நான் தான் எழுதி தருவேன். அதுக்கெல்லாம் சாக்லேட் கரெக்டா வாங்கிடுவேன் :)

பிடித்த மதிய உணவு என்ன?

இப்ப எல்லாம் நண்பர்க்ளோட உட்கார்ந்து சாப்பிடறதால பல வெரைட்டி சாப்பாடு தான் ஆபீஸ்ல. சனி ஞாயிறு வீட்ல ஒரே ஒரு சாப்பாடு சாப்பிடறது ரொம்ப கஷ்டமா இருக்கு இப்போ எல்லாம் :(

நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

எல்லோரோடும் எளிதாக பேசிடுவேன். அதனால எல்லாரும் என் நண்பர்கள்னு மத்தவங்க சொல்வாங்க. என்னோட நண்பர்கள்னு என்கிட்ட கேட்டா ரொம்ப சின்ன லிஸ்டா தான் சொல்வேன் நான் :) என் நண்பர்கள் வட்டத்துக்குள்ள வரணும்னா கொஞ்சம் டைம் ஆகும்.

கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கப் ஐஸ் பிடிக்குமா கார்னிட்டோ பிடிக்குமானு கேட்கற மாதிரி இருக்கு. ரெண்டுமே பிடிக்கும்..

முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவர்களோட ஆடை. எனக்கு அவ்ளோ சீக்கிரம் யாரோட முகமும் மனசுல பதியாது. அதனால அன்னிக்கு முழுக்க அவங்கள அடையாளம் கண்டுபிடிக்க அவங்க ஆடையே துணை :)

உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன?
பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது : எந்த விஷயம் நடந்தாலும் முடிஞ்சவரை அதுல இருக்கற நல்ல விஷயங்கள் யோசிச்சு இதுவும் நன்மைக்கேனு எனக்கு நானே சொல்லிக்கறது.

பிடிக்காதது : என் தாழ்வு மனப்பான்மை

உங்க "சரி பாதி" கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

:)))))))))))))))))))))))))))))))))

[ஆளவந்தான், கார்த்திக், lancelot எல்லாம் கொலைவெறியோட அருவாளை தூக்கறாங்க.. நாம அடுத்த கேள்விக்கு போவோமே :)]

யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

இந்த நொடி ஏங்குவது என் தோழி கவிதா என்கூட இருந்திருக்கலாமோன்னு. நான் குழம்பும் பல சமயங்களில் என்னை வழிநடத்துபவள். போன வாரம் தான் ஒரு லெட்டர்பேட் தீர்ற அளவுக்கு விஷயங்கள எழுதி அவளுக்கு அனுப்பியிருக்கேன். அடுத்த வாரம் அது கிடைச்சதும் அவ என்ன சொல்ல போறான்னு ஆர்வமா உட்கார்ந்திருக்கேன் :)

இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

சந்தன நிறம்

என்ன கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

இசையருவியில் "இவன் யாரோ இவன் யாரோ" பாடல் மின்னலே படம்.

வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை ?

நீலம் [சாதாரணமாவே பேணா அந்த கலர் தானோ!! பரவாயில்லை :)]

பிடித்த மணம் ?

அம்மா சமையல் மணம்
மழை வரும் முன் வரும் மண் வாசனை
சந்தன வாசம்
பூக்களின் வாசம்

இப்போதைக்கு வேற எதுவும் ஞாபகம் வரலை..

பிடித்த விளையாட்டு ?

கல்லூரி எல்லாம் முடித்து வேலைக்கு சேர்ந்தபின் விளையாடிய cat & mouse விளையாட்டு

கண்ணாடி அணிபவரா?

அலுவலகத்தில் மட்டும் Anti-reflection glasses போடுவேன். மத்தபடி நம்ம கண்ணு இதுவரை நல்லா தான் இருக்கு.

எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

காதல், குடும்ப செண்டிமெண்ட், காமெடி.. எல்லாமே பிடிக்கும்

கடைசியாகப் பார்த்த படம்?

வெண்ணிலா கபடி குழு

பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்

என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க ?

Frozen thoughts magazine. March 2009 issue

உங்கள் desktop-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

என் மனநிலை பொறுத்து. சில சமயம் ஒரே நாள்ல பல முறை மாத்துவேன். சில சமயம் பல மாசங்கள் மாத்தாம வெச்சிருப்பேன்.

பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் - மழைக்காலத்தில் வரும் தவளை சத்தம்
பிடிக்காத சத்தம் - என் ரூம்ல நான் டீவி பாக்கறப்போ ஹால்ல இருக்கற டீவில இருந்து வரும் சத்தம் :P

வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு ?

கேரளா. நான் ரொம்ப ஊர் சுத்த மாட்டேன் யூ சீ :P

உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சூப்பரா மொக்கை போடுறேன்னு எல்லாரும் சொல்லிக்கறாங்க :))))

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.

புறம் பேசுதல்

உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அப்படி எந்த சாத்தானையும் இது வரை நான் கண்டுபிடிக்கலை.. நான் நல்ல பொண்ணு. நல்லவங்களுக்கு நல்ல விஷயம் மட்டும் தான் தெரியுமாம் :)

உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

எனக்கு Europe countries போகணும்னு ஆசை. என்னுடைய முதல் clients அங்க இருந்து தான் என்பதால் அவங்க சொன்ன பல விஷயங்கள் அங்க ஒரு முறையாவது போகணும் ஆசைய உண்டு பண்ணிடுச்சு...

எப்படி இருக்கணும்னு ஆசை?

என்றுமே சந்தோஷமாய்..

மனைவி(கணவர்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் !

இப்பவே எல்லா காரியமும் அப்படி தானே பண்ணிட்டிருக்கோம் :)))

வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.

இந்த நொடி மட்டுமே வாழ்க்கை என்றென்னி ஒவ்வொரு மணித்துளியையும் ரசனையுடன் வாழ்வோம் :)

உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்
பிடித்த பதிவு எது?

கனா கானல்
காணவில்லை என் வார்த்தைகள்
எனக்கு "பிரியமான தோழி" னு பட்டம் குடுத்த பதிவு

நீங்க அழைக்கப் போகும் பதிவர்களிடம் உங்களுக்கு பிடித்த விஷயம்.
அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கேகே

பிடித்த விஷயம் - இவருடைய சேட்டை.
அழைக்க காரணம் - இவரை தமிழ் / தங்கிலீஷ் ல ஒரு பதிவு போட வைக்கனும்னு தான்

ராம்
பிடித்த விஷயம் - caring and understanding personality
அழைக்க காரணம் - ரொம்ப நாளா பதிவு போடாம ஏமாத்திட்டு இருக்காரு.

தினேஷ்
பிடித்த விஷயம் - ரொம்ப தெளிவா அடுத்தவங்களை குழப்புவது
அழைக்க காரணம் - அந்த ப்ளாக்ல கும்மி அடிக்க ஒரு வாய்ப்பை விரும்பி தான்

புகைப்படங்கள்..


சட்டத்தின் பிடியில்
சிறைபட்டிருக்கும்
சந்தோஷ தருணங்கள் !!


லேசா பறக்குது மனசு..

சமீபத்தில் அடிக்கடி கேட்கும்/பார்க்கும் பாடல்.. எத்தனைமுறை பார்த்தாலும்/கேட்டாலும் ஒவ்வொருமுறையும் ரசனையுடன் புன்னகைக்க செய்யும் பாடல் :)



காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மௌனம் புரிகின்ற தருணம் தருணம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்

லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேசா நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல

சுண்டெலி வலையில நெல்லைபோல் உந்தன்
நெனப்ப எனக்குள்ள சேர்க்குற
அல்லிப்பூ கொளத்துல கல்லைப்போல் உந்தன்
கண்விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்னேன்

கருச்சாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமும் மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்

(லேசா... )

பொத்தி பொத்தி போகும் தலச்சபுள்ளப்போலே
பொத்தி வச்சுதானே மனசு இருந்ததே
திருவிழா கூட்டத்தில் தொலையறேன் சுகமா

தொண்டைக்குழி தாண்டி வார்த்தை வரவில்ல
என்னென்னவோ பேச ஒதடு நெனைச்சது
பார்வைய பார்த்ததும் எதமா பதறுது
ராத்திரிப் பகலாத்தான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி
பூட்டுன வீட்டுலதான் புதுசா பட்டாம்பூச்சிப் பறக்குதடா

(கருச்சாங்குருவிக்கு... )

லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
பூவா விரிகிற ஒலகம் ஒலகம்
தரிசா கெடந்தது இதுவர

ஒத்தமரம் போல செத்துக்கெடந்தனே
ஒன்னப்பாத்த பின்னே உசுரு மொளச்சதே
சொந்தமா கிடப்பியா சாமிய கேப்பேன்
ரெட்டை ஜடை போட்டு துள்ளி திரிஞ்சனே
ஒன்னப்பாத்த பின்னே வெட்கம் புரிஞ்சதே
உனக்குதான் உனக்குதான் பூமியில் பொறந்தேன்

காவடி சுமப்பது போல் மனசு காதல சுமக்குதடா
கனவுல நீ வருவ அதனால் கண்ணு தூங்குதடி
(கருச்சாங்குருவிக்கு... )

இருவர்..

1. சச்சின் கோப்ஸ் - ஒரு காலத்துல தூங்கற நேரம் தவிர மீதி நேரம் எல்லாம் மொக்கை போட்டுட்டிருந்த நல்லவன். நீ நல்லா இருக்கியான்னு கேட்க 40 பேர் இருக்கலாம்.. ஆனா நீ சாப்டியான்னு கேட்க 4 பேர் தான் இருப்பாங்க நான் அந்த 4 பேர்ல ஒருத்தன்னு பாசமழை பொழியும் நல்லவன். ஆனா இப்போ எல்லாம் ரொம்ப பிஸின்னு சீன போட்டுட்டு சுத்திட்டிருக்கான் :(

2. ரம்யா - இவ்வளவு பாசமாவும் ஒருத்தர் இருக்க முடியுமான்னு என்ன அசர வைச்ச நல்லவள். அம்மணியும் கல்யாணம் குழந்தைனு இப்ப குடும்ப இஸ்திரி ஆயிட்டதால ஆன்லைன் பக்கம் வர்றதே இல்லை :(



ஏண்டா இன்னிக்கு இவங்கள பத்தி பீல் பண்றேன்ன்னு யோசிக்கறீங்களா.. ஹிஹி.. இன்னிக்கு இவங்க 2 பேருக்கும் பிறந்தநாள் :)) என்ன தான் அவங்க பிஜியா இருந்தாலும் நாம வெட்டியா தானே இருக்கோம். அதான் பதிவு போட்டு வாழ்த்தலாம்னு :)))))


HAPPY BIRTHDAY GOPS & RAMYA !!!

சென்னையில் இது மழைக்காலம்..

அட ஆமாங்க. இரண்டு நாட்களாய் சென்னைல அடைமழைன்னு சொல்ற அளவுக்கு மழை கொட்டாட்டியும், லேசா தூறல் போட்டு சூடான சென்னையை கொஞ்சம் குளிர்ச்சியான சென்னையா மாத்திட்டு இருக்கு. எனக்கு மழைல நனையறது ரொம்ப பிடிக்கும். ஏதாவது ஒரு சாக்கு வைச்சு மழைல ஆட்டம் போட்டுட்டு வருவேன். வேலையே செய்யாத நல்ல புள்ளை நான், மழை பெய்யும்போது மட்டும் அம்மா மாடில தண்ணி கொட்ற ஓட்டைல குப்பை அடைச்சிருக்குமா. போய் க்ளீன் பண்ணிட்டு வர்றேன்னு குடையோட மொட்டை மாடிக்கு ஓடிடுவேன். எங்கம்மா மாடிக்கு போன பொண்ணு இன்னும் கீழ வரக்காணுமே தேடிட்டு வர்ற வரை மட்டுமே நனைய முடியும் :(

மழைல நனையறது ஒரு தனி சுகம். அதுக்கு ஈடு இணையே கிடையாது. மழைல நனைஞ்சதுல மறக்க முடியாததுன்னு சொன்னா நானும் என் தோழிகள் ரெண்டு பேரும் வி.ஜி.பி போயிருந்தோம். அப்போ பீச்ல நின்னுட்டிருக்கும் போது சூப்பர் மழை... பீச்ல ஓரமா ஒதுங்க ஏது இடம்? நல்லா ஜாலியா கொட்ற மழைலயும் கடல் அலையோட விளையாடிட்டு வந்தோம். இன்னொரு நாள் மழை பெய்யும் போது நானும் பாட்டியும் தான் வீட்ல இருந்தோம். பாட்டி சொல்லி என்னைக்கு நாம கேட்டிருக்கோம். நான் மழைல நனைய போறேன்னு பாட்டிகிட்ட சொல்லிட்டே மொட்டை மாடில போய ஒரு மணி நேரம் சூப்பரா நனைஞ்சிட்டு வந்தேன். நைட் அம்மா வீட்டுக்கு வந்தப்புறம் ரவுண்ட் கட்டி திட்டினது தனி கதை.

அதுக்கப்புறம் வண்டி வாங்கினபிறகு நல்லா மழைல நனைஞ்சிக்கிட்டே வண்டி ஓட்றது ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சுது. போன வருஷம் நம்ம கே4கே அண்ணாச்சியும், கோப்ஸும் வந்திருந்தப்போ ஒரு மீட் போட்டோம். அன்னிக்கு சென்னையில் வெள்ளம் திரண்டோடற அளவுக்கு மழை. அவ்ளோ மழைலயும் என் வண்டியில தான் போவேன்னு போனேன். ஒரு பத்து அடிக்கு முன்னாடி என்ன இருக்குனு கூட தெரியாத அளவுக்கு பேய் மழை. அன்னிக்கு ட்ரைவிங் வாழ்நாள்ல மறக்கவே மாட்டேன். அவ்ளோ என்ஜாய் பண்ணேன் :)

வண்டி வாங்கறதுக்கு முன்னாடி வரை மழை காலம்னா குடை கொண்டு போன்னு வீட்ல ரொம்ப டார்ச்சர் பண்ணுவாங்க. குடைய வாங்கற மாதிரி வாங்கிட்டு தண்ணி குடிக்க போறேன்னு ஏதாவது சாக்க சொல்லி என் ரூம்க்கு வந்து குடைய வெச்சிட்டு போயிடுவேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்ப வந்ததும் சாரிமா.. மறந்துட்டேன் காலைலன்னு கப்சா விடுவேன். இப்போ வண்டி வந்தப்புறம் குடைக்கு பதில் ரெயின்கோட். இப்படி வீட்ல வெச்சு ஏமாத்துவேன்னு சொல்லி எங்கமா ரெயின்கோட் எப்பவுமே வண்டியிலேயே வெச்சிக்க சொல்லுவாங்க. நானும் ரொம்ப நல்ல பிள்ளைங்கறதால அதை எப்பவுமே பத்திரமா வண்டியிலேயே வெச்சிருப்பேன். மழை பெய்யும்போது கூட ;)))

இன்னிக்கும் ஆபீஸ்ல இருந்து வர்றப்போ நல்லா ஜாலியா மழைல நனைஞ்சிக்கிட்டே வண்டி ஓட்டிட்டு வந்தேன். வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் அம்மா "வழக்கம் போல நல்லா நனைஞ்சிட்டு வந்தியா" ன்னு ஆரம்பிச்சிட்டாங்க அவங்க அர்ச்சனையை. எத்தனை வருஷம் ஆனாலும் இவங்க மட்டும் மாறவே மாட்றாங்கப்பா :)))

மௌனம் பேசியதே - IV


சிறுகுழந்தையின் விரல் பட்டு உடையும் நீர்க்குமிழியென
காதலின் ஸ்பரிசம் பட்டு மறைகிறது உன்மீதான கோபங்கள்!!


யாரோ ஒருவன் செய்யும் தவறையும் மன்னிக்க பழகுகிறேன்
அவன் உன்னை நினைவுப்படுத்துவதால்...


மெதுமெதுவாய் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் கடல்போல்
ஆட்கொள்ளப்படுகிறேன் காதலால் !!!

பி.கு. : கடைசியில் இருப்பது என் நண்பனுடைய படம். என் ப்ளாக்ல போட அனுமதி குடுத்த நண்பனுக்கு ஸ்பெஷல் நன்றிகள். அவனுடைய மற்ற படங்களை பார்க்க

திருவிளையாடல் version 2.0.0.9

திருவிளையாடல் படத்துல தருமி சிவன் கிட்ட கேள்வி கேட்ட மாதிரி, நம்ம நாகை சிவா கிட்ட கேள்வி கேட்டா என்ன பதில் சொல்வார்?? நீங்களே படிச்சு பாருங்களேன் :))

பிரிக்க முடியாதது என்னவோ?
சிவாவும் புலியும்

பிரியக்கூடாதது
குவாட்டரும் சைட்டிஷ்ஷும்

சேர்ந்தே இருப்பது
நக்கலும் நானும்

சேராதிருப்பது
பீரும் மோரும்

சொல்லக்கூடாதது
என்னிடம் கவிதை

சொல்லக்கூடியது
உங்கள் பேங்க் அக்கவுண்ட் யூசர் ஐடியும், பாஸ்வர்டும்

பார்க்கக்கூடாதது
சிம்புவின் படங்கள்

பார்த்து ரசிப்பது
அதில் வரும் ஹீரோயின்கள்

ப்ளாகில் சிறந்தது
கும்மி

கும்மி என்பது
இந்த பதிவில் மக்கள் அடிக்கப்போவது

கதைக்கு
தேவ்

கவிதைக்கு
நவீன்

மொக்கைக்கு
ஜி3

தில்லுக்கு
வெட்டி

ஜொள்ளுக்கு
பாண்டி

லொள்ளுக்கு
நாங்க

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. என்ன கேள்வி கேட்டாலும் சளைக்காம பதில் சொல்றாரே.. இவரு ரொம்ப நல்ல்ல்ல்லவரு போல.. சரி சரி.. ரொம்ப ஓவரா கேள்வி கேட்டு வர வேண்டிய ட்ரீட்டுக்கு நாமளே ஆப்பு வெச்சிக்ககூடாது.. நல்ல புள்ளையா வாழ்த்த சொல்லிட்டு ட்ரீட் வாங்கிட்டு போய்டுவோம் :)



இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா !!!


பி.கு. 1 : எங்க தேடியும் கிடைக்காத இந்த பாடலை கண்டுபிடிச்சு அனுப்பிய கானா பிரபாவுக்கும், இந்த வலைதளத்தை ரெக்கமண்ட் பண்ணிய கே4கே அண்ணாச்சிக்கும் ஸ்பெஷல் நன்றிகள் :)

பி.கு. 2 : சில படங்களில் கோல்மால் வேலை செய்ய உதவிய ராம் அண்ணாச்சிக்கு தனியா Absulte பாட்டில் சிவா செலவுல தான் வேணுமாம்.. சிவா, நீங்களே அவரை டீல் பண்ணிக்கோங்க :)