Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

பையா



ஜி3யின் வாழ்க்கையில் முதல் முறையாக படம் வெளிவந்த அன்றே படத்தை பார்த்து முதல் ரெக்கார்ட் ஆரம்பிச்சாச்சு நேத்து. ப்ளானிங் ஆரம்பிச்சதென்னமோ "Clash of the Titans" படம் பாக்க தான். ஆனால கடைசில நண்பன அவன் குடும்பத்தோட அந்த படம் போறதால ப்ளான மாத்தி பையா போகலாம்னு முடிவு செஞ்சோம். ஆனா எங்களோட நிதி நிலைமை ஒத்துழைக்காததால (வெறும் 3 ரூபாய அக்கவுண்ட்ல வைச்சிக்கிட்டு எங்க டிக்கட்ட புக் பண்றது) வியாழக்கிழமை சமபளம் வரும் வரை காத்திருக்க வேண்டியதா போச்சு. சம்பளம் வந்தப்புறம் பாத்தா ஊருக்குள்ள இருக்கற அத்தனை தியேட்டரும் ஹவுஸ்புல் :(( சரி வேற வழியில்லை. போடு மாயாஜால்ல டிக்கட்டனு மாலை 4.30 மணி காட்சிக்கு புக் பண்ணியிருந்தோம்.

நண்பனின் அறிவுரைப்படி மத்த மக்கள்ஸ்க்கு படம் டைம் 4.15னு சொல்லி வைச்சதால எல்லாரும் கரெக்டா 4.20க்கு வந்து சேந்துட்டாங்க. ஆனா தியேட்டர்காரனோ 4.30 மணி ஷோவுக்கு 4.40க்கு தான் உள்ளையே விட்டான் :(( [நாங்க லேட்டா போனா மட்டும் கரெக்டா ஆரம்பிச்சிடறான்பா :(( ] படத்த பத்தி சொல்லனும்னா “All(லாஜிக்கே இல்லாத கதையும் சேத்து தான்) is fair in love and war" ங்கற பழமொழிய ஒத்துக்கறவங்கவளுக்கு வேணா படம் புடிக்கலாம்.. மத்த மக்கள்ஸ்.. ஒரு தபா பாக்கலாம். சில சீன்கள் (நண்பர்கள் கார்த்திய கலாய்க்கறது) சிரிக்க வைப்பது உறுதி. ஒரு காட்சியில் கார்த்தி ஃபோன்ல ஓவரா ஃபீல் பண்ணி அவரோட காதல் ஃபீலிங்க்ஸ சொல்லிட்டிருக்கறப்போ ”முன்னாடி எல்லாம் காரை எவனாவது லைட்டா தொட்டாலே எவ்ளோ கோவம் வரும். இப்போ எல்லாம் எவனும் கீறிட்டு போனா கூட கோவமே வரமாட்டேங்குது”னு சொல்ல உடனே காருக்கு சொந்தக்கார நண்பன் “எப்படிடா வரும் அது என்னோட காராச்சே”னு சொல்லவும் கார்த்தி உடனே ஃபோன கட் பண்ணிடறார் :)))

கார்த்தி - முந்தின ரெண்டு படத்துல பண்ண மாதிரியே கேர்லெஸ் காரெக்டர். தமன்னாவ பாத்து ஓவரா வழியறாரு. ஆனா இம்புட்டு வழியறவரு கடைசி வரைக்கும் காதல தமன்னா கிட்ட சொல்ல மாட்டாராம். கடைசி சீன்ல நண்பர்கள் வந்து தமன்னா கிட்ட போட்டு குடுப்பாங்களாம் அவரு அம்மணிய எம்புட்டு லவ் பண்றாருன்னு.. அப்பவும் சார் வெட்கப்பட்டுக்கிட்டு அப்படியெல்லாம் இல்லைங்கனு டயலாக் விடுவாராம்.. அவ்வ்வ்வ்வ்வ்... என்ன கொடுமை சரவணா இது :((

தமன்னா - கார்த்தியோட லவ்வ எவ்ளோ ஓபனா காமிச்சிருக்காங்களோ அதுக்கு ஆப்போஸிட்டா அம்மனிக்கு வர்ற லவ்வ ரொம்பவே subtle-அ சொல்லியிருக்காங்க. ஆர்ப்பாட்டம் அதிகம் இல்லாம அதே சமயம் ஓவர் அழுவாச்சியாவும் இல்லாத காரெக்டர் :)

கார்த்தியோட நண்பர்கள் - எல்லாருமே புது முகம். வழக்கமான நண்பர்கள் வட்டம் இல்லாம வெளில வந்த்த்துக்கே லிங்குசாமிக்கு நன்னி சொல்லனும். ஆனா அதுல எந்த பசங்களுமே கண்ணுக்கு குளுர்ச்சியா இல்லைங்கறது வருத்தமான விஷயம் :(

தமன்னாவ துரத்தற கும்பல் + கார்த்திய துரத்தற கும்பல்.. படத்துல பெஸ்ட் காமெடி பீஸ் :))) ரெண்டு காரெகடர்.. ஒரு அம்மா காரெக்டர் (யாரோட அம்மானு கடைசி வரை சொல்லவேயில்லை :P)+ கார்த்தியோட அப்பா காரெக்டர்... போன்ல மட்டுமே சவுண்ட் உட்டு அப்பீட் ஆகிடறாங்க :)

பாடல்கள் - என் காதல் சொல்ல நேரமில்லை பாட்டு மட்டும் ஃபிரெண்டோட ரெக்கமெண்டேஷ்ன்னு கேட்டேன். பிடிச்சிருந்துது. ஆனா படத்துல பாக்கறப்போ தேவையே இல்லாத ஒரு இடத்துல அந்த பாட்ட போட்டிருந்தது கொடுமை. படம் ஆரம்பத்துல வர்ற துளிதுளி, பூங்காற்றே பாட்டு சுமார் ரகம். நண்பன் ”இதுக்கு அவன் பேசாம தமன்னா போட்டோவ ஸ்லைட் ஷோவா போட்டிருக்கலாம்.. நல்லா இருந்திருக்கும்”னு ஃபீல் பண்ணான். மூனாவதா வந்த அடடா மழை பாட்டு கொடுமெயிலும் கொடுமை. இதுக்கு பேசாம நம்ம கவிப்பேரரசு குசும்பர் பஸ்ல போட்ட எதிர்கவிஜய கடன் வாங்கியாவது பாட்டா போட்டிருக்கலாம்னு தோனுச்சு :). சுத்துதே சுத்துதே பாட்டுக்கு அவங்க கற்பனை பண்ணியிருந்த லொகேஷன் கான்செப்ட் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா அது ஸ்க்ரீன்ல பாக்கதான் கொஞ்சம் கொடுமையா இருந்துச்சு :(

மொத்தத்துல படம் ஓகே டைப். தாராளமா ஒரு தபா பாக்கலாம். முழு படமா பாக்கறத விட டீவில ஒன்னு ரெண்டு சீனா போடறப்போ பாத்தீங்கனா ரொம்பவும் பிடிக்கும் :))