கிளிஞ்சல்கள் - மார்ச் ‘10

மு.கு. : போன வாரம் சனிக்கிழமை எழுதி வைச்ச பதிவு இது. ப்ளாகர் சதியால பப்ளிஷ் பண்ண முடியாம போயிடுச்சு. இப்போ சில தில்லாலங்கடி வேலை பண்ணி போஸ்டை மீட்டெடுத்து பப்ளிஷிங்.. சில திருத்தங்களுடன் :))))))


வேலை இல்லாம வீட்ல வெட்டியா இருக்கறது ஒரு சுகம். அதிக வேலை இருந்து ஓவரா உழைச்சாலும் அந்த வேலை முடிச்சதும் ஒரு திருப்தி வரும் பாருங்க. அது வேறு விதமான சுகம். ஆனா இது ரெண்டும் இல்லாம தினமும் ஆபீஸ் போயிட்டு வெட்டியா உட்கார்ந்துட்டு வர்ற கொடுமை இருக்கே.. அவ்வ்வ்வ்வ்வ்... முடியலைங்க.. எவ்வளவு நேரம் தான் நானும் ஏதாவது டாக்குமெண்ட்ட தொறந்து வைச்சிக்கிட்டு படிக்கற மாதிரியே சீன போடுறது?? :((( தினமும் காலைல 10 / 11 மணிக்கு ஆபீஸ் போக வேண்டியது. கொஞ்ச நேரத்துல ஜூஸ் ஃப்ரேக்.. ஆமாங்க நான் வெளில காபி எல்லாம் சாப்பிட மாட்டேன்.. ஒன்லி ஃப்ரெஷ் ஜூஸ் தான் :P எப்படியும் திரும்பி சீட்டுக்கு வர 12 - 12.30 ஆகிடும். அடுத்து லஞ்ச் சாப்பிட 1.30 மணிக்கு போனா 2.30 மணிக்கு திரும்பி வந்துடுவோம். மறுபடி 3.45க்கு ஃப்ரேக் டைம்.. சாயங்கால நேரம்ங்கறதால அப்படி ஆபீஸ விட்டு வெளில வந்து ஒரு வாக்கிங் போனா பக்கத்துல இருக்கற டாமினோஸ்லயோ, சங்கீதாலயோ, பாஸ்கின்ஸ் ராபின்ஸ்லயோ, கேக் ஷாப்லயோ, சாட் செண்டர்லயோ, இல்லாட்டி ரோட்டோரம் விக்கற இளநீரோ, கரும்பு ஜூஸோ, தள்ளுவண்டில கொண்டு வர்ற குவாலிட்டி வால்ஸ் ஐஸ்க்ரீமோ சாப்டுட்டு திரும்ப 5 மணிக்கு சீட்டுக்கு வந்துடுவோம். 6 மணி ஆனதும் டான்னு வூட்டுக்கு கிளம்பி வந்துடுவோம். இதுக்கு நடுவுல ரொம்ப போர் அடிச்சா அப்படி பாண்டி பஜார் பக்கம் போய் இருக்கற காசுக்கு எதாவது ஷாப்பிங் பண்ணிட்டு வருவோம். இதெல்லாம் ஒரு பொழைப்பானு நீங்க கேக்கறது புரியுது. அதான் மனசாட்சி உறுத்தலுக்காக வாரத்துல ஒரு நாள் லீவு போட்டுட்டு வீட்ல ரெஸ்டிங் :)) ஏதோ வேலை இல்லாட்டியும் இப்படியாவது பொழுதை ஓட்டலாம்னு பாத்தா அதுக்கும் ஆப்பு வைக்கறாங்க. கூடிய சீக்கிரமே எல்லாரையும் மஹிந்திரா சிட்டிக்கு மாத்தறோம்னு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அந்த காட்ல போய் எப்படி பொழைப்ப ஓட்றது.. நினைச்சாலே டெர்ரராஆஆஆ இருக்கே :(((((


வருஷத்தோட முதல் நாள் எப்படி இருக்கோமோ அப்படித்தான் வருஷம் முழுக்க இருக்கும்னு யாரோ சொன்னாய்ங்க. ஆனா என் விஷயத்துல மட்டும் அது உல்டாவேவே இருக்கு. வருஷத்தோட முதல் நாள் வெட்டியா வூட்ல ஒக்காந்து ஆத்தாவ குலாப் ஜாமூன் செய்ய சொல்லி அருண் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்து குலாப்ஜாமூன் வித் ஐஸ்க்ரீம் சாப்ட்டு வீட்ல நல்லா ரெஸ்ட் எடுத்தேன். ஆனா அதுக்கப்புறம் ஊர் சுத்தல்ஸோ சுத்தல்ஸ் தான். ஒரு வாரம் கூட வீக் எண்ட் வீட்ல வெட்டியா உட்கார்றதில்லை :(( அதுலயும் டாப் 4 வாரமா தொடர்ந்து எதாவது ஒரு படம் போனது தான். நான் எப்போ இவ்ளோ சினிமா பைத்தியம் ஆனேன்னு எனக்கே புரியலை. ஆனா ஆன்லைன் புக்கிங் புன்னியத்துல சத்யம் தியேட்டர் மட்டும் போயிட்டிருந்த நாங்க இப்போ தேவி, காசி, ஈகா, அபிராமினு எல்லா தியேட்டரும் சுத்த ஆரம்பிச்சிட்டோம். சரி போன வாரமாவது வீட்ல இருக்கலாம்னு பாத்தா ம்ஹூம்.. ஃப்ரெண்டுக்கு திங்கட்கிழமை கல்யாணம். ஞாயிறு சாயந்திரம் ரிசெப்ஷன். அதுக்கு கிப்ட் வாங்கறோம்னு போன சனிக்கிழமை ரவுண்ட்ஸ். பல்லாவரத்துல இருந்து கிளம்பி ஒலிம்பியா டெக் பார்க் கிட்ட நண்பன மீட் பண்ணிட்டு, அங்க இருந்து அண்ணா நகர்ல இருக்கற இன்னொரு நண்பன் வூட்டுக்கு போயிட்டு, 3 பேரும் கிளம்பி ஷாப்பிங் போய் கிப்ட் எல்லாம் வாங்கிட்டு மந்தைவெளில இருக்கற பொண்ணு வீட்ல வந்து எல்லாத்தையும் குடுத்துட்டு, அப்படியே மாப்பிள்ளையும் பொண்ணும் கல்யாணத்துக்கப்புறம் தங்கப்போற வீட்டுக்கு மாப்பிள்ளையோட போய் பாத்துட்டு வந்து மறுபடி பொண்ணு வீட்ல வந்து கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சிட்டு ஒரு 7.30 மணிக்கா கிளம்பி அடையார் வேங்ஸ் கிட்சன்ல டின்னர் சாப்டுட்டு சமத்தா வூட்டுக்கு வந்து சேந்தாச்சு (ஒரு நக்ர்வலம் போயிட்டு வந்த எஃபெக்டல இருந்துச்சு !!!). ஆனா ஞாயிறும் திங்களும் போன வேகம் தெரியலை. சரி கலாட்டாவா இருந்துது. நான் பொண்ணு வீட்டு சைட்னும் ஃப்ரெண்ட் ஒருத்தன் பையன் வீட்டு சைட்னும் சப்போர்ட் பண்ண, நான் மாப்பிள்ளைய கால வார்றதும் அவன் பொண்ண கலாய்க்கறதும்னு செம ரகளை. மற்றுமொறு மறக்கமுடியாத கல்யாணம் :))))


எப்பவுமே கிரிக்கெட் மேட்ச் பாக்கற ஆர்வம் எனக்கு இருந்ததில்லை. வீட்ல வேற யாராவது மேட்ச் பாக்கறாங்க வேற சேனல் பாக்கமுடியாதுனா கூட நான் புக் படிக்கவோ இல்ல தூங்கவோ தான் செய்வேனே தவிர நோ கிரிக்கெட். அப்ப்டி இருந்த புள்ள, போன வாரம் மேலே சொன்ன ஈவினிங் ஸ்நாக்ஸ் நேரத்திற்கு டாமினோஸ் போயிருந்தப்ப, அங்க இருந்த டீவில சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி டேர் டெவில்ஸ் மேட்ச் ஓடிட்டிருந்துது. கூட வந்த ஃப்ரெண்டு ஆர்வமா அதை பாக்க, பேச்சு துணைக்கு ஆள் இல்லாம நான் வெளில வேடிக்கை பாத்துட்டிருந்தேன். டெல்லி டீம் பயங்கரமா ரன் அடிச்சிட்டிருந்ததால சென்னை ஜெயிக்கறது கஷ்டம்னு ஃபீலிங்க்ஸ் வேற இதுல. திரும்பி வீட்டுக்கு வந்ததும் என்னையும் அறியாம ஒரு ஆர்வம் மேட்ச் என்ன தான் ஆச்சுனு. பாத்தா 26 பால்ல 31 ரன் வேனும்னு இருந்துது. கொஞ்ச நேரம் பாத்தேன்... முடியலை. நமக்கு இதெல்லாம் பாக்கற அளவுக்கு என்னைக்கு பொறுமை இருந்திருக்கு??? வேற சேனல்ல படம் பாத்துட்டே அப்பப்போ இந்த பக்கம் ஸ்கோர் மட்டும் பாத்துட்டிருந்தேன். ஒரு வழியா கடைசில சென்னை ஜெயிச்சப்போ ஹப்பாடன்னு இருந்துச்சு. ஆனாலும் ஒரு முழு மேட்ச்ச ஃபுல்லா பாக்கற அளவுக்கு என்னைக்காவது எனக்கு பொறுமை வருமானு தெரியலை !!!

வாழ்த்தலாம் வாங்க..



இன்று பிறந்தநாள் கொண்டாடற நாட்டாமை ஷ்யாம், பாடும் குயில் மருதம் மற்றும் நாளை பிறந்தநாள் கொண்டாடப்போற பாசமலர் தம்பி கோப்ஸ், குட்டிப்பொண்ணு ரம்யா எல்லாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி அவங்க சார்பா இந்த கேக்க உங்களுக்கு எல்லாம் குடுக்கறேன்.. நல்லா சாப்டுட்டு மக்கள வாழ்த்திட்டு போங்க :)))

மார்ச் 6

வழக்கமா மார்ச் 6னு சொன்னதும் என் மனசுல தெரியற காட்சி திரிசூலம் ரயில்வே ஸ்டேஷன்ல அதிகாலைல தனியா நான் உட்கார்ந்திருக்கற காட்சி தான். நாம ரொம்ப ரசிக்கும் தருணங்கள் மனசுல அப்படியே பதிஞ்சிடும். அந்த மாதிரி ஒரு தருணம் தான் அது. மார்ச் 6, 2005. என் தோழி திருமணம் ஆகி முதல் முறையா லண்டன் கிளம்பினா. அவளை வழியனுப்ப நாங்க எல்லாரும் போகலாம்னு முடிவு செஞ்சிருந்தோம். காலைல 4.30 மணிக்கு செக் இன் அவளுக்கு. அப்போ எங்க வீடு சேலையூர் பக்கம். தெரிஞ்ச ஆட்டோ டிரைவர்கிட்ட மறுநாள் காலைல 3.30 மணிக்கு வர சொல்லி முதல் நாளே சொல்லியிருந்தோம். அதனால அர்த்த ராத்திரி 3 மணிக்கே எழுந்து கிளம்பி ரெடியா இருக்க ஆட்டோ வந்ததும் தாம்பரம் வந்து அங்க இருந்து ட்ரெயின்ல திரிசூலம் வந்து நண்பர்கள சந்திச்சு, தோழியை வழியனுப்பிட்டு, பக்கத்துல இருந்த சங்கீதால காபி சாப்பிடலாம்னு போனோம். இனிய காலை வணக்கம்னு தமிழ்ல சொல்லி வரவேற்றது ஆச்சர்யமா இருந்தது சந்தோஷமாவும் இருந்துது. [ஆனா சமீபத்துல பொயிருந்தப்போ அப்படி ஏதுமில்லைங்கறது கொஞ்சம் ஏமாற்றமா இருந்துது :(]. நண்பர்களிடமிருந்து விடைபெற்று கிளம்பி வீட்டுக்கு வர்றதுக்காக ரயில்நிலையத்துல உட்கார்ந்திருந்த காட்சி தான் நான் ஆரம்பத்துல சொன்ன காட்சி. அந்த நிமிஷங்கள் இருந்த மனநிலைய எப்படி சொல்றதுனு தெரியலை. அமைதியா எந்தவித சலசல்ப்பும் இல்லாம... Peace of mind னு சொல்லுவாங்களே அது அப்போ இருந்துச்சு.

போன சனிக்கிழமை (அதே மார்ச் 6, ஆனா வருஷம் 2010 :P ) நண்பர்களுடன் Karthik calling karthik படம் போயிருந்தோம் [விமர்சனம் எல்லாம் எழுத பொறுமை இல்லை. ஒரே வரில சொல்லிடறேன். படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்த்து :) முக்கியமா கூட வந்திருந்த நண்பர் தீபிகாவ ஓவர் ஜொள்ளோட பாத்துட்டிருக்கும்போது பாப்கார்ன் வேனுமான்னு கேட்டு டிஸ்டர்ப் பண்ணி அவரை டென்ஷன் ஆக்கி ஜென்மசாபல்யம் அடைஞ்சது தனி கதை :D] படம் பாத்து முடிச்சதுக்கப்புறம் தாரப்பூர் டவர்ஸ்ல இருக்கற க்ரோமோ கடைல லாப்டாப்போட விலை மாடல் எல்லாம் கேட்டுட்டு நாங்க எதிர்பாக்கற டெல் கம்ப்யூட்டர் இல்லைனு சொல்லிட்டீங்க அதனால நாங்க போறோம்னு வெளிநடப்பு செஞ்சிட்டு கடை வாசல்ல கொஞ்ச நேரம் நின்னு பேசிட்டிருந்தோம்.நல்ல இதமான தென்றல் காற்று மனசுக்கு ரொம்ப சுகமா இருந்த்து. சென்னை மாநகரிலே அதுவும் மவுண்ட் ரோடிலானு ஆச்சர்யத்தோட அனுபவிச்சிட்டு நண்பர்களுக்கு டாட்டா சொல்லிட்டு எல்.ஐ.சி பஸ் ஸ்டாப் வந்து நின்னு கொஞ்ச நேரம் அந்த இயற்கை காற்ற ரசிச்சு அனுபவிச்சிட்டிருந்தேன். அந்த நிமிடங்கள்ல மறுபடி அதே Peace of mind ஃபீல் பண்ண முடிஞ்சது. (கொழுப்பெடுத்துப்போய் காலியா வந்த 4-5 பஸ்ஸ அடுத்த பஸ்ல போலாம்னு விட்டுட்டு ஒரு 20 நிமிஷவாவது அங்க நின்னுட்டிருந்தேன் :D)அதுலயும் சிகப்பு சிக்னல் போட்டதும் ஒரு நிமிடம் சாலை அநாதையாய் வண்டிகளே இல்லாமலும், அடுத்த நிமிடம் பச்சை சிக்னல் வந்ததும் ரொம்ப பிசியான சாலையா மாற்றதும் பாக்கறதுக்கு பிடிச்சிருந்துது.

அங்க நின்னுட்டிருக்கறப்போ சென்னைய பத்தி எங்க அபீஸ் மக்கள் (வட இந்திய மக்கள்) சொன்னது ஞாபகம் வந்த்து. “சென்னை மெட்ரோ சிட்டினு சொல்றோம். ஆனா மத்த மெட்ரோ சிட்டியான ஹைதராபாத், பெங்களூர், மும்பை மாதிரி சமீபத்தில கட்டப்பட்ட உயரமான கட்டிடங்கள்னு சொன்னா இங்க ரொம்பவே கம்மி. இப்பவும் நுங்கம்பாக்கம் மவுண்ட் ரோட்னு போனா இன்னுமும் பழைய கட்டிடங்கள் தான் நிறைய இருக்கு. புதுசா ஏதாவது இருந்தாலும் அது ரொம்பவும் உயர்ந்த கட்டிடமா இருக்கறதில்லை”னு சொல்லிட்டிருந்தாங்க. பஸ் ஸ்டாப்ல நின்னு சுத்தி இருந்த கட்டிடங்களை பார்த்தப்போ உண்மை தானோனு யோசிக்க வைச்சுச்சு. என்னதான் ஊருக்கு வெளிய மஹிந்திரா சிட்டி, ஓ.எம்.ஆர் சாலைலனு ஐ.டி. வளர்ந்தாலும் சிட்டிக்குள் சென்னை தன் முகவரியை பெரியதாக மாற்றி கொள்ளவில்லை தானோ??