Showing posts with label புத்தாண்டு. Show all posts
Showing posts with label புத்தாண்டு. Show all posts

2017

~ அதிக  நாட்கள் விடுமுறையில் கழிந்தது  (5 மாதங்கள்)
~ இத்தனை வருஷத்துக்கும் சேர்த்து  ஒரே வருஷத்தில் நிறைய ஊசிகளும் மருந்து மாத்திரைகளும் சாப்பிட வைத்தது
~ மூன்று வருடங்களுக்கு மேல் ஓர் அலுவலகத்தில் வேலை பார்ப்பதில்லை என்ற கொள்கையை தகர்த்து வெற்றிகரமாய் 5-ம் ஆண்டாய் இந்த அலுவலகத்தில் தொடர்வது
~ சென்னையை விட்டு ஒரு நாள் கூட வெளியில் செல்லாதது
~ facebook அக்கவுண்ட்டை இழுத்து மூடியது
~ வீட்டில் சாப்பிடக்கூடாதுனு சொல்றதையெல்லாம் swiggy மூலம் திருட்டுத்தனமாய் அலுவலகத்தில் delivery வாங்கி சாப்பிட்டது
~ Zuka Cafe, Nasi and Mee, Chillies-னு புது இடங்களுக்கு போனாலும், Domino's, L'amandier, Cascade, Jonah's, Eden restaturant-னு வழக்கமா போற இடங்களுக்கும் அடிக்கடி போனது
~ 13 படங்கள் திரையரங்கில் பார்த்தது
~ 7 ஆண்டுகளுக்கு பின் கவிதாயினியை குடும்பத்துடன் சந்தித்தது & கே4கே அண்ணாச்சியையும் தீபா அண்ணியையும் சந்தித்தது
~ மகிழ்ச்சியின் மொத்த உருவாய் என் தேவதை 💕

என்று பல சுவாரஸ்யஙகளுடன் இனிதே நிறைவடைந்துள்ளது :)

காத்திருந்து பார்ப்போம் 2018 எப்படி இருக்கும்னு ;)






2015 - டைரி குறிப்புகள்

ஜனவரி - ஆகஸ்ட் 

இது மருத்துவமனை வருடம் - னு சொல்ற அளவுக்கு மருத்துவமனைக்கு சொத்தை எழுதி வைச்சாச்சு.. வருஷம் தொடங்குனதும் அப்பா ஒரு ஹெல்த் செக்கப் போயிட்டு வந்தாரு. ரிப்போர்ட் என்னவோ ஒன்னும் பிரச்சனை இல்லைனு தான் வந்துது. ஆனா அதுக்கப்புறம் தான் எல்லா பிரச்சனையும் ஆரம்பிச்சுது.. கண்ணுல, கால்லனு ஒன்னு மாத்தி ஒன்னு ஆரம்பிக்க கடைசில கிட்னில வந்து நின்னுச்சு. பயாப்சி பண்ணனும்னு ஆரம்பிச்சு அதுக்கு க்ரியாட்டின் அளவு கூடுதலா இருக்கு மொதல்ல அதை குறைங்கனு சொல்லி அதுக்கு டயாலிசிஸ் லொட்டு லொசுக்கு எல்லாம் பண்ணிட்டு கடைசில பயாப்சி பண்ணா உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைனு சொல்லிட்டாங்க.. ஆனா அதை சொல்றதுக்கு அவங்களுக்கு 7 மாசம் ஆச்சு.

அப்பாவோட கதை தான் இப்படினா நானும் சங்கத்துல சேந்துக்கறேன்னு வீட்டுக்காரர் கால்ல பிரச்சனைனு அவரும் வந்து மருத்துவமனைல படுத்துக்கிட்டாரு. மாமனாரும் மருமகனும் பக்கத்து பக்கத்து மருத்துவமனைல இருக்க நானும் எங்கம்மாவும் 2 மருத்துவமனைக்கும் அலைஞ்சது இன்னிக்கு நினைச்சாலும் பகீர்ங்குது. இதுல கொடுமை என்னன்னா.. எனக்கு மருத்துவமனைன்னாலே கொஞ்சம் அலர்ஜி.. அப்படியாப்பட்ட என்னை வீட்டு பக்கமே எட்டிப்பாக்காம இராப்பகலா மருத்துவமனைலயே ஒரு வாரம் இருக்க வைச்சது இந்த வருஷம் தான்.

அந்த நேரத்துல வந்து யாராவது என்கிட்ட இந்த வருஷம் உனக்கு எப்படி இருந்துச்சுனு கேட்டிருந்தா சத்தியமா இந்த வருஷத்த என் வாழ்க்கைல இருந்து அழிச்சிடுங்கனு சொல்லியிருப்பேன். அவ்வளாவு கொடுமையா இருந்துது.. இதையும் நான் கடந்து வந்திருக்கேன்னு இன்னமும் என்னால நம்ப முடியலை !!

செப்டம்பர் - டிசம்பர்

இந்த புள்ளைய ரொம்ப படுத்தி எடுத்துட்டோம் பாவம்னு கடவுளுக்கே மனசு கஷ்டமாயிடுச்சோ என்னவோ.. பல நாள் ஆசைப்பட்டதை இந்த மூனு மாசத்துல அள்ளி தந்துட்டாரு. அப்படி தந்த விஷயங்கள்

1. Girls only outing - ஒன்று அல்ல இரண்டு முறை.. மொத்தம் 8 நாட்கள் செம ஆட்டம்
2.  குற்றால அருவி குளியல். குளிச்சிட்டு வந்து அங்க இருந்த கடைகள்ல பஜ்ஜி, அண்ணாச்சி பழம், பதனினு எல்லாத்தையும் ஒரு ரவுண்ட் கட்டினது
3. கோவா பயணம்
4. பல வருஷம் கழிச்சு ப்ளாக்கர் சந்திப்பு - தங்கச்சிக்கா அனு-வை சந்தித்தது
5. ஆன்சைட்டில் இருந்து கிளையண்ட் வந்ததால் 2 வாரங்கள் தினமும் அவரை மதிய சாப்பாட்டிற்கு ஒவ்வொரு ஹோட்டலாக கூட்டி சென்று கம்பெனி சொத்தை அழித்தது. தலைப்பாகட்டி முதல் GRT Temple Bay வரை ஒரு ஹோட்டலையும் விட்டு வைக்கலை - அதுவும் புரட்டாசி மாசம் இப்படி தினமும் அசைவ சாப்பாடா சாப்டேன்னு மாமியாருக்கு தெரிஞ்சா நான் செத்தேன் ;-0

இப்படி இன்னும் சிலபல விஷயங்கள் நடந்தன. அதையெல்லாம் சபையில் சுயவாக்குமூலமாக வைக்க விரும்பாத்ததால் இந்த பதிவை இங்கேயே நிறுத்திக்கொள்கிறேன் :-P

ஆகமொத்தத்தில் இந்த வருடம் துன்பத்தில் துடங்கி இன்பத்தில் நிறைவடைந்துள்ளது.. இந்த புன்னகையுடனே அடுத்த வருடத்தை வரவேற்க நான் தயாராகிட்டேன் :-)

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)



இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வணக்கம் மக்களே.. எல்லாரும் எப்படி இருக்கீங்க? புது வருஷம் உங்க எல்லாருக்கும் எப்படி ஆரம்பிச்சுது? நான் ரொம்ப புத்திசாலி மாதிரி எப்படியும் 12 மணிக்கு தான் நெட்வொர்க் டவுன் ஆகிடுமே.. ஏன் வீனா முழிசிருக்கணும்னு 9.30 மணிக்கெல்லாம் சமத்தா தூங்க போயிட்டேன்.. ஆனாலும் நம்ம மக்கள் எல்லாம் ரொம்ப நல்லவங்க.. 10 மணிக்கே என்னை எழுப்பி போன்ல மொக்க போட ஆரம்பிச்சிடாங்க.. சரி தூங்க விட மாட்டாங்க போலனு நானும் 11.30 வரை மொக்கை போட்டுட்டு மறுபடி தூங்க போனேன்.. திரும்பவும் என்னை தூங்கவிடாம 12.15க்கு அடுத்த போன்.. தூக்க கலக்கத்துல பேசினதுல ஏகப்பட்ட பல்பு வாங்கினேன்னு தனியா வேற சொல்லனுமா :(( ஆக மொத்ததுல்ல பல புல்புகளுடன் என் புத்தாண்டு ரொம்பவே பிரகாசமா ஆரம்பிச்சிருக்கு :D வருஷம் முழுக்க இப்படியே தொடராம மத்தவங்களுக்கும் நான் நெறைய பல்புகள் வாரி வழங்கற மாதிரி அமைஞ்சா இன்னும் சந்தோஷமா இருக்கும் :D

உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் :D