புன்னகை தருணங்கள் - I

பல பாடல்கள் பாக்கறப்போ / கேட்கறப்போ அந்த பாடல் பத்தி நண்பர்கள்/நாம அடிச்ச கமெண்ட் அல்லது அந்த பாடல் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு நிகழ்வு ஞாபகம் வந்து நம்மையும் மீறி புன்னகைக்க வைக்கும்.. அப்படி இன்னிக்கு காலைல என்னை புன்னகைக்க வைத்த ஒரு பாடலை பத்தி தான் இங்க பாக்க போறோம்..



என்னடா புன்னகைக்க வைச்ச பாட்டுனு சொல்லி சோக பாட்ட போட்டிருக்காளேன்னு பாக்கறீங்களா.. இந்த பாட்டை நாங்க போன வருஷம் இந்த டைம்ல (ஏப்ரல்/மே ல) அடிக்கடி போட்டுட்டிருப்போம் ஆபீஸ்ல.. ஹி..ஹி.. அப்ரைஸல் ரிஸல்ட் வர்ற டைம் ஆச்சே.. இந்த ஸ்டைல்ல ஒரு சில பாடல்கள் (முக்கால்வாசி கருப்பு வெள்ளை பாடல்கள்) தேர்ந்தெடுத்து தனியா ஒரு playlist போட்டுவைச்சிருந்தோம்.. அதுல எப்பவுமே இந்த பாட்டு தான் நம்பர்.1.. காலைல ஜெயா மேக்ஸ்ல இந்த பாட்ட பாத்ததும் என்னையும் மீறி சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். அதே சமயம், அதுக்குள்ள ஒரு வருஷம் ஆயிடுச்சானு ஆச்சர்யமாவும் இருக்கு.. போன வருஷம் இப்போ வரும் அப்போ வரும் hike papersனு சொல்ல ஆரம்பிச்ச நாள்ல இருந்து இந்த பாட்டெல்லாம் போட்டு மனசை தேத்திட்டிருப்போம் (மேனேஜரை கலாய்ச்சிட்டிருப்போம்னு கூட நீங்க இதை படிக்கலாம்). எல்லாரோட பேப்பரும் எங்க மேனேஜர் கிட்ட வந்ததும் அவர் ஓவ்வொருத்தரா ஒரு மீட்டிங் ரூம்ல கூப்பிட்டு hike papers குடுத்தாரு. ஒவ்வொருத்தரும் எங்க ரூம்ல இருந்து கிளம்பறப்போ.. நாங்க சொல்லி அனுப்பின ஒரே டயலாக்.. "டேய்... பேச்சு பேச்சா இருக்கனும்.. அவசரப்பட்டு கை எல்லாம் நீட்டிடாத" னு தான் :))

இந்த series-ல இந்த மாதிரி இன்னும் நிறைய பாடல்களை பத்தின பதிவுகள் தொடரும் :)))))

அரங்கேற்றம்

நிகழும் விரோதி ஆண்டு சித்திரை 15 ம் நாளாகிய இந்த சுபயோக சுப தினத்தில் தனது வலையுலக வாழ்க்கையில் மூண்றாம் ஆண்டில் இவள் காலடி எடுத்துவைக்கிறாள். வலைப் பதிவுகளின் எண்ணிக்கை, அதில் இடம்பெற்றுள்ள சோகமான.. சுகமான.. கவித்துவமான மற்றும் விமர்சன பதிவுகள் பிரம்ம்ம்மிக்க வைக்கின்றன. 'இத் தரை கொய்யாப் பிஞ்சு.. அதில் நீயும் ஓர் சிற்றெறும்பே' - பாரதிதாசன் காதில் ஒலிக்கிறார். [ஏன் எதுக்குனெல்லாம் கேக்கப்புடாது :))) ]

"இத்தனை ஜாம்பவான்கள் இருக்குமிடத்தில் தனக்கென ஒரு இடத்தை அடையாளம் காட்டிகொண்டுவிட்டாய்" - வெளியில் இருந்து இந்த காயத்ரி முணுமுணுக்கிறாள்.. அதனால் என்ன? எல்லா நதிகளும் கடலைச்சேரும் வரை ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. எல்லா மேதைகளும் இறுதி வரை மேதைகளாகவே வாழ்ந்திருக்கின்றனர். கண்கள் மற்றும் கற்பனையின் சக்திக்கு அப்பாற்பட்டு பரந்து விரிந்திருக்கும் இந்த வானத்தில் அவளும் ஓர் நட்சத்திரமாய் மின்னிக்கொண்டிருக்கிறாள். நட்சத்திரங்களை எண்ணும் பல குழந்தைகள் [நாங்க எல்லாரும் தான் :))) ] அவளை அவர்கள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொண்டதை எண்ணி மகிழ்ச்சியாய் புன்னகைக்கிறாள் !!

சரி.. எதற்காக இந்த பதிவு?? மிகவும் சிறிய ஆனால் மிகவும் முக்கியமான பதிவாக இது கருதப்படுகிறது. காதலோ, நட்போ, உறவோ உண்மையான நேசம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதில் உரிமையுடன் ஒருவரையொருவர் கேலி பேசுவது என்பது ஒரு ஆரோக்யமான உறவின் வித்திற்கு சமம். உரிமையுடன் கலாய்பபதும் கலாய்க்கப்படுவதும் எவ்வளவு மகிழ்வானது என்பதை அனுபவ பூர்வமாய் உணர்ந்திருக்கிறாள். நெடுந்தொலைவில் அன்னியமாய் இருக்கும் நட்பு மெல்ல நெருங்கி வருவதை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள். காலம் அவளை சுற்றி நல்லவர்களை மட்டும் விட்டுச் சென்றிருக்கிறது. "வெறும் வாழ்த்திற்கா இந்த பதிவு?" என்று கேட்கும் மொக்கை கும்பலுக்கு.. மன்னிக்கவும்.. நீங்கள் நேராக கும்மி அடிக்க செல்லலாம்.

இது... ஒரு பட்டாம்பூச்சி (கவிதாயினி) தன் இறக்கை விரித்து (பதிவு போட்டு) மீண்டும் பறக்க வேண்டி ஒரு முயற்சி (கோரிக்கை) .. நீங்கள் கை தட்டலாம்.. தலையிலும் குட்டலாம் (அவள் தலையில்).. இரண்டிலும் நான் மகிழ்வேன்.

நட்புடன்...
காயத்ரி

பி.கு. : இது என்னனு இன்னும் உங்களுக்கு புரியலைனா... முதல்ல இந்த பதிவை படிங்க. அப்புறம் என் பதிவை பாருங்க..

அப்படியும் புரியலியா.. அட என்னங்க நீங்க... பாலைத்திணை ஆரம்பிச்சு வெற்றிகரமா இரண்டு வருஷம் முடிஞ்சு போச்சுங்க...மூணாவது வருஷமாவது அம்மணி ஒழுங்கா பதிவு போடணும்னு சொல்லி கும்மி அடிக்க ஆர்வமுடன் காத்திருப்பதை அவை அடக்கத்துடன் இங்கு கூறிக்கொள்கிறேன் :))))))

மௌனம் பேசியதே - V

முன்னாடியெல்லாம் கிறுக்கின கவுஜைக்கு பொருத்தமான படமா எடுத்து பதிவு போடுவேன். இப்போ எல்லாம் சில படங்கள பாத்ததும் அந்த படத்துக்கு கவுஜ எழுதனும்னு தோணுது (என் கவுஜையும் சுமாரா இருக்கு நல்லா இருக்குனு சொன்ன நல்லுல்லங்களுக்கே இதன் பாவமெல்லாம் போய் சேரும் :P )



உனக்கான என் காத்திருப்பை
உணராமல் கடந்து செல்கிறாய்...
உன்னை அழைக்கவும் துணியவில்லை
உனக்கான காத்திருத்தலையும் நிறுத்தவில்லை
உறைந்துவிட்டேன் சிலையாய் !!!




உன்னைவிட்டு
விலக முயல்கிறேன்
அலைகளாய்...
விடாமல்
உள்ளிழுத்து கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்
கடலாய்!!!

வாழ்த்தலாம் வாங்க

ரம்யா - இவங்கள பத்தி சொல்லனும்னா, நாங்க கில்ஸ்ஸ கலாய்க்கறத பாத்து நானும் இந்த ஆட்டத்துல கலந்துக்கறேன்னு அறிமுகமானவங்க.. அப்புறம் திடீர்னு கொஞ்ச நாள் காணாம போயிருந்தாங்க. கில்ஸ் ஏதும் backendல மிரட்டி வெச்சிருந்தாரான்னு தெரியலை.. நீண்ட இடைவெளிக்கு பிறகு போன வாரம் நம்ம ஹரீஷோட ட்ரீட்க்கு மீட் பண்ணோம்.. சான்ஸே இல்லைங்க.. செம ப்ரெண்டிலியா பேசிட்டு வந்தாங்க.. வழக்கமா நிறைய ப்ளாக்கர்ஸ் மீட் பண்றப்போ அவங்கள பத்தி முன்னாடியே கொஞ்சம் தெரிஞ்சிருக்கும். ஆனா இவங்க பேரை தவிர எனக்கு இவங்கள பத்தி பெருசா எதுவும் தெரியாது. ஆனா அதனால எல்லாம் எங்களுக்குள்ள எந்த தயக்கமுமே இல்லை.. அவங்கள மீட் பண்ணி ரெண்டு பேரும் ட்ரீட்க்கு போயிட்டு ரிடர்ன் வர்ற வரை ஜாலியா கதை அடிச்சிக்கிட்டே போயிட்டு வந்தோம். ரொம்ப முக்கியமா இங்க சொல்ல வேண்டிய ஒரு விஷயம், என் ஸ்கூட்டிய பத்தி கில்ஸ் எவ்ளோ பயமுறுத்தியும் அதை பத்தி எல்லாம் கவலைப்படாம் என் ஸ்கூட்டில வந்த அவங்க தைரியம்... அதுக்கு தனி பாராட்டுக்கள் அவங்களுக்கு :-))



இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்னிக்கு இவங்க பிறந்தநாள்னு கொஞ்சம் முன்னாடி தான் ஆர்குட் தகவல் சொல்லுச்சு :))

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி...

வேலை செய்யும் இடத்தில் போட்டியும் பொறாமையும் தான் பொதுவா இருக்கும். ஆத்மார்த்தமான நட்பெல்லாம் அங்க இருக்காதுன்னு நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இந்த ஒரு விஷயத்துல மட்டும் நான் என்னைக்குமே ஆசீர்வதிக்கப்பட்டவளா தான் எனக்கு தோணும். முதல் கம்பெனி ஆகட்டும், இல்ல இப்போ வேலை செய்யற கம்பெனி ஆகட்டும், எப்பவுமே என் டீம் மேட்ஸ் தான் என் நெருங்கிய நண்பர்களா இருந்திருக்காங்க. இருக்காங்க. அப்படி எனக்கு கிடைச்ச அருமையான தோழி உமா-வ பத்தி தான் இங்க சொல்லப்போறேன். அவளை பாத்ததும் முதலில் மக்களை கவருவது அவளோட சிரிச்ச முகம். இரண்டாவது அவ பேசற தமிழ்.. என்ன புள்ள இப்படி சொல்லிப்புட்ட.. வா புள்ள.. போ புள்ளனு அம்மணி கிட்ட இருந்து இந்த புள்ளங்கற வார்த்தை எங்களுக்கும் தொத்திக்குச்சு இப்போ :)

ஒரு நாள் அவ அலுவலகம் வரலைன்னாலும் எனக்கு ரொம்ப போர் அடிக்கும்.. பக்கத்துலயே உட்கார்ந்திருப்பா.. மூச்சுக்கு 300 தடவை ஜி3 இதை பாருங்க. ஜி3 இது ஒர்க் ஆகமாட்டேங்குது. ஜி3 அந்த புள்ளைய என்னனு கேளுங்கனு எதுக்காவது கூப்டுக்கிட்டே இருப்பா. கொஞ்ச நேரம் ஹெட்செட் மாட்டி பாட்டு கேட்க ஆரம்பிச்சா போதும் அப்படி என்ன பாட்டு கேட்கறீங்க ஸ்பீக்கர்ல போடுங்கனு போட சொல்லிட்டு அந்த பாட்டை வைச்சே என்னை கலாய்க்கற நல்ல உள்ளம். ஆனாலும் இவ ஒரு மூணு வாரம் ஆன்சைட் போறேன்னு போனப்போ தான் ரொம்ப கஷ்டமா இருந்த்து. தினமும் காலைல சீக்கிரம் வந்து அவ தூங்க போற வரை அவளோட நாள் எப்படி போச்சுனு கதை கேட்டுட்டு, திரும்ப சாயந்திரம் அவளுக்கு கரெக்டா போன் பண்ணி எழுப்பி ஆபீஸ் கிளம்பற வரை அன்னிக்கு இங்க நடந்ததை எல்லாம் அப்டேட் பண்ணிட்டு தான் வீட்டுக்கு போவேன். அப்பவே கிண்டல் அடிச்சிட்டிருப்பேன்.. என் லவ்வர் ஆன்சைட போனாகூட இம்புட்டு வருத்தப்பட்டிருக்க மாட்டேன் போல இருக்கே.. நீ போனது ரொம்ப கொடுமையா இருக்குடீனு :-)

எனக்கு சின்ன வயசுல இருந்தே ஒரு கெட்ட பழக்கம். ஆஸ்பத்திரிக்கு போகனும்னா சுத்தமா பிடிக்காது. அப்படி கஷ்டப்பட்டு மாத்திரை மருந்தெல்லாம் சாப்பிட்டு உயிர் வாழணுமானு கேள்வி கேட்கற ஆளு. அப்படி இருக்கற என்னை போன வருஷ கடைசில ஜூரம் வந்தப்போ, வீட்ல இருந்தா ஆஸ்பத்திரி போக சொல்லி தொல்லை பண்ணுவாங்களேனு தான் ஆபீஸ் வந்தேன். வந்தா இவளும் இன்னொருத்தியும் சேந்து என்னை இங்க இருக்கற ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் ஊசி குத்த வைச்சிட்டாங்க. அதுலயும் இந்த நல்லவ வாங்க ஜி3. வெறும் டெம்பரேச்சர் பாத்துட்டு மாத்திரை மட்டும் வாங்கிட்டு வந்துடலாம். ஊசி எல்லாம் போட மாட்டாங்க. இது சும்மா எக்ஸ்டென்ஷன் க்ளீனிக் தானேனு என்னென்னமோ சொல்லி கூட்டிட்டு போனா.. அங்க போனா அந்த அம்மணி இது டைபாயிட் மாதிரி இருக்கு எதுக்கும் ஒரு ஊசி போட்டுக்கோங்கனு சொல்ல அம்மணி கூலா போட்டுக்கோங்க ஜி3ங்கறா. அங்க உட்கார்ந்து ஒன்னும் சொல்ல முடியாம ஊசி போட்டுகிட்டு வெளில வந்து ஏண்டி சதிகாரி இப்படி பண்ணனு கேட்டா எங்க வீட்ல இருக்கற பாப்பா எல்லாத்தையும் இப்படி சொல்லித்தானே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவோம்ங்கறா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இதைவிட கொடுமை.. நான் ஆஸ்பத்திரி போய் ஊசி போட்டுக்கிட்டு வந்தேன்னு சொன்னா எங்கம்மா என்னை நம்பவே இல்லை :( அப்புறம் மாத்திரை மருந்து சீட் எல்லாம் காமிச்சப்புறம் அந்த ரெண்டு நல்லுங்களை பாத்தே தீரணும்.. உன்னையே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்களேங்கறாங்க :((((

இவ தான் இப்படினா இவங்கம்மா இவளுக்கு மேல. ஒரு முறை அவங்க செஞ்ச வெஜிடபிள் பிரியாணி நல்லா இருக்குனு சொல்ல அவங்கம்மா என்னைக்கு வெஜிடபிள் பிரியாணி செஞ்சாலும் காலைல கரெக்டா எனக்கு கால் வந்துடும். ஜி3 உங்களுக்கும் சேத்து அம்மா சாப்பாடு கட்றாங்க நீங்க லஞ்ச் கொண்டு வராதீங்கனு :-) நான் மறக்க முடியாத விஷயம்னு யோசிச்சா போன வருஷ கடைசில ஒரு நாள் மனசு ரொம்ப பாரமா இருக்க, கண்ல எட்டிப்பாத்த கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கிட்டு உட்கார்ந்திருந்தேன் ஆபீஸ்ல. அப்போ வழக்கம் போல அம்மணி மெசேஞ்சர்ல பிங் பண்ணா (பக்கத்து பக்கத்துல இருந்தாலும் பல சமயம் சீக்ரெட்ஸ் பேச மெசேஞ்சர் தான் யூஸ் பண்ணுவோம்). மனசு கஷ்டமா இருக்குடி இது தான் காரணம்னு நான் காரணத்தை சொல்ல அதுக்கு அவ ஒரு பதில் போட்டா பாருங்க.. அப்படி வயிறு வலிக்கற அளவுக்கு சிரிச்சேன் நான். அவ்ளோ டிப்ரெஷன் மூட்ல இருந்த எனக்கு ஒரு நிமிஷத்துல மனசு லேசாகி பாரமெல்லாம் இறங்கின மாதிரி இருந்த்து. அன்னிக்கு மனசார கடவுளுக்கு நன்றி சொன்னேன் நான்..

ரொம்ப செண்டியா போயிடுச்சே பதிவு.. சரி விஷயத்துக்கு வருவோம். நாளைக்கு அம்மணிக்கு பொறந்தநாளு. அதான் அவள பத்தி ஒரு பதிவு போட்டு அவளுக்கு வாழ்த்தலாம்னு தோணுச்சு.



" Happy Birthday My Dear !! "


இன்று போல் என்றும் சந்தோஷமாய் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)

ராயலாய் ஒரு வாழ்த்து...



சிறுசிறு விஷயங்களுக்கும்
தொட்டாச்சினுங்கியாய்
சுருண்டு விடுபவளை






சூறாவளி புயலிலும்
வளைந்து கொடுத்து
உயிர் வாழும்
நாணலாய் மாற்றுகிறாய்






குழந்தையின் கரம்பற்றி
நடைபழக கற்றுத்தரும்
தாயின் பொறுமையுடனும்
அக்கறையுடனும்







இந்த நன்நாளில்
பல ஆண்டுகளுக்குமுன்
ஜனித்த உனக்கும்
இரு ஆண்டுகளுக்குமுன்
ஜனித்த நம் நட்புக்கும்
உளங்கனிந்த வாழ்த்துக்கள்




ஹாலிவுட் அம்மணி Kristen stewart-க்காக தவம் கிடக்கும் அண்ணாச்சிக்கு பீட்டர் இங்கிலீஷ்லயும் வாழ்த்துனுமாமில்ல ;)



With you my friend,
I can be myself
I dont need to pull back my tears
nor hide any of my fears
I can tell you
all my secrets
And laugh at
all your mistakes
I can take all your time
without reason or rhyme
I can compete with you
And, you'll still be my best friend right through
Because you like me for what I am
So, here's cheers to this special relationship

Happy Birthday Raam !!!


பி.கு. :
இங்கிலிபீஷ் வாழ்த்து ஒரு க்ரீட்டிங் கார்ட்ல இருந்து சுட்டது. ஒரு நிமிஷம் இந்த இங்கிலிபீஷ் வாழ்த்தும் நானே சொந்தமா எழுதியிருப்பேனோனு சந்தேகப்பட்ட அப்பாவி ஜீவன்களுக்கு.. "இன்னுமாயா என்னைய நம்பிக்கிட்டிருக்கீங்க" :P

புதுசு கண்ணா புதுசு..

எப்பவுமே எனக்கிருக்கற ஒரு பழக்கம் அடிக்கடி புது மொபைல் மாத்தறது [ரொம்ப frequent-அ எல்லாம் இல்லீங்க. கண்டிப்பா ஒரு மொபைல ஒரு வருஷமாவது வைச்சிருப்பேன் :) ] போன வருஷம் புது ஃபோன் வாங்கித்தாங்கப்பானு கேட்டா இந்த ஃபோன் நல்லா தானே இருக்குனு டயலாக் விட்டாரு எங்கப்பா. ரெண்டு நாள்ல அந்த போன் உடைஞ்சு போச்சு [அதுவாத்தான் உடைஞ்சுதுனு சொன்னா நீங்க நம்பித்தான் ஆகனும் :)) ] உடைஞ்ச ஃபோன் flip flop மாடல்ங்கறதால கடைல அதை வாங்கிக்க மாட்டேன்னு சொல்லிட்டான். ஒழுங்கா மொதல்லயே மாத்தி குடுத்திருந்தா இதுக்காவது கொஞ்சம் காசு கிடைச்சிருக்குமில்ல.. ம்ம்ம்.. நாம சொல்றதை என்னைக்கு கேட்டிருக்காங்க.. :)))

புது ஃபோன் வாங்கி குடுத்தப்பவே, அடுத்த 2 வருஷத்துக்கு உனக்கு வேற ஃபோன் வாங்கி தர மாட்டேன்னு சொல்லி தான் வாங்கி குடுத்தாரு அப்பா. ஹிஹி.. இந்த டயலாக்க எத்தனை வாட்டி நாம கேட்டிருக்கோம். வழக்கம் போல சரி சரின்னு மண்டைய ஆட்டிட்டு வந்துட்டேன். அது ஆச்சுங்க ஒரு வருஷத்துக்கு மேல. இன்னிக்கு காலைல எழுந்து ஆபீஸ் கிளம்பிட்டிருக்கறப்போ அப்பா கைல புது ஃபோன் ஒன்னு வைச்சு நோண்டிட்டிருந்தாரு. சும்மா இல்லாம என்ன பாத்து இந்த ஃபோன் வேணா எடுத்துக்கறியான்னு கேட்க, குடுங்க யூஸ் பண்ணி பாக்கறேன். புடிச்சிருந்தா எடுத்துக்கறேன்னு சொன்னேன். உடனே அப்பா, "அதானே. ஏதாவது புதுசுனா உடனே வேணும்னு சொல்வியே" னு டயலாக் விட்டாரு.. அவ்வ்வ்வ்வ்.. சும்மா போனவள கூப்ட்டு வைச்சு நீங்க தானே கேட்டீங்கனு சொல்லிட்டு ஃபோன வாங்கி பாத்தேன். இது ரொம்ப பெருசா இருக்கே. என் ஃபோனே இதை விட நல்லா இருக்கு. எனக்கு வேணாம்னு சொன்னேன். உடனே எங்கப்பா இதுல டீவி எல்லாம் இருக்குனு உசுப்பேத்தினாரு. அடடா, நாம நல்லவங்களா இருக்கனும்னு நினைச்சாலும் விட மாட்டாங்க போல இருக்கேனு நினைச்சிக்கிட்டு, சரி குடுங்கனு ஃபோன வாங்கியாச்சு.

சும்மா சொல்லகூடாதுங்க.. ஃபோன் நிஜமாவே சூப்பராத்தான் இருக்கு. Wide screen, super clarityனு நான் basic-அ எதிர்பாக்கற functionalities எல்லாமே இருக்கு. அப்புறம் என்ன? இனி இது என் ஃபோன் தான் :) இந்த புது ஃபோன் வாங்கினா எப்பவுமே எனக்கு ஒரு கெட்ட பழக்கம் அதுல யாரு முதல் கால் பண்றாங்கன்றத பார்ப்பேன். ஃபர்ஸ்ட் எப்பவுமே ஸ்பெஷல் இல்லையா. கண்டிப்பா outgoing-ல் முதல் கால் என் நண்பனுக்கு தான். அதுல எப்பவுமே மாற்றம் இருந்ததில்லை. ஆனா incoming நானா யாரையும் கேட்டு பண்ண சொல்ல மாட்டேன். அதுவா வரட்டும்.. யாருதுனு பாக்கலாம்னு விட்ருவேன். காலைல ஆபீஸ் வந்ததுல இருந்து எல்லாரும் கலாட்டா. மாத்தி மாத்தி கால் அடிச்சிட்டு எடுக்க சொல்லி. இதெல்லாம் செல்லாது. நான் எடுக்கமாட்டேன்னு சொல்லிட்டிருக்கேன். எப்படியும் மிஸ்டு கால்ல நாங்க தானே ஃபர்ஸ்டுனு டயலாக் விட்டுட்டிருக்காங்க. இதெல்லாம் செல்லாது. நான் அட்டெண்ட் பண்ற கால் தான் கணக்குனு சொல்லிட்டேன் :)))) ஹிஹி..

சரி.. இவ்ளோ தூரம் வந்துட்டு புது ஃபோன பாக்காம போனா எப்படி?? இது தாங்க என் புது ஃபோன் :))

உளறுதல் என் உள்ளத்தின் வேலை - II

உளறுதல் என் உள்ளத்தின் வேலை - I


என வாழ்நாட்களில்
சிறிது காலம்
பின்னோக்கி பயணித்து
உன்னுடனான
நினைவுகளை மட்டும்
சேமிக்கிறேன்

உன்னுடன் களித்த
ஒவ்வொரு நொடியும்
உன்னுடன் பேசிய
ஒவ்வொரு வார்த்தையும்
என் நினைவேட்டில்
பசுமரத்தாணியாய்

இப்பொழுது பார்க்கையிலும்
அந்த நிகழ்வுகளை
கண்முன் நிறுத்துகிறது
நிகழ்வுகளை மட்டுமா?
உன்னையும் தான்

நீ...
எவருமே ஏற்படுத்தாத
சலனத்தை என்னுள்
ஏற்படுத்தியவன்

உன்னைவிட சிறந்தவர்
எவருமில்லையென்று
ஆச்சர்யப்படவைத்தவன்

குறும்பு கோபம்
அன்பு பொறுப்பு
அக்கறை பாசம்
நாட்டுப்பற்று
எல்லாம் கொண்டவன்

என்றும் எப்பொழுதும்
மாசற்றவன் என்னவனென
பெருமைபடவைப்பவன்

எனக்கானவனாய்
கற்பனைகளில் மட்டுமே
நிலைத்திருப்பவன் !!!

ஜோடி நம்பர் 1











இதுல யாரு குசும்பன், யாரு மஞ்சுனு நான் உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை ;)

ஏப்ரல் 16 அன்று தங்கள் திருமண வாழ்வின் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் திரு & திருமதி குசும்பன் அவர்களுக்கு

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் !!!

உங்கள் வாழ்வில் அன்பும், மகிழ்ச்சியும், ஆன்றோரின் ஆசியும் என்றும் நிறைந்திருக்க, நிலைத்திருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

பயணங்கள் முடிவதில்லை...



ஏற்கனவே ஒரு முறை என்னுடைய பதிவில் பேருந்து பயணங்கள் பற்றியும், சுற்றியுள்ள மக்களையும் அவர்களின் செயல்களையும் ரசித்துக்கொண்டே பயணிப்பது மிகவும் பிடிக்கும் எனவும் சொல்லியிருந்தேன். அதற்கு இணையாக இரவு நேர பயணங்களும் நான் மிகவும் ரசிப்பவை. அதிலும் தனியாக பயணிக்கும் இரவு பயணங்கள் தனி சுகம். ஜன்னலோர இருக்கை, ஐபாடிலிருந்து கசியும் மெல்லிய பாடல், இலக்கின்றி இருட்டை வெறிக்கும் பார்வை, இதை பற்றி தான் சிந்திக்க வேண்டும் என்ற வரைமுறையின்றி பார்க்கும் பொருளோ கேட்கும் பாடலோ ஏதேனும் ஒரு நிகழ்வை நினைவூட்ட, நூல் பிடித்தது போல் ஓர் நினைவில் இருந்து மற்றொன்று, அதிலிருந்து இன்னொன்று என்று எண்ணங்களின் ஓட்டத்தில் பயணித்து இறுதியில் ஆரம்பித்த நினைவுக்கு சம்பந்தமேயில்லாத ஒரு விஷயத்தை பற்றி நினைப்பது.. இடையிடையே நண்பர்களின் குறுந்தகவல்கள், எங்கிருக்கிறாய்? என்று ஆரம்பித்து அவர்கள் உறங்க செல்லும்வரை குறுந்தகவல்களின் உதவியுடனேயே நம்முடன் பயணிப்பது. உண்மையிலேயே கவலைகளை மறந்து வாழ்க்கையில் ரசிக்க நிறைய விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது.

வழக்கத்திற்கு மாறாய் இந்த முறை Sleeper A/C பஸ்ஸில் பதிவு செஞ்சிருந்தேன். உட்கார ரொம்ப வசதியாக இருந்தது. எல்லாம் ஒழுங்கா போனா அது நல்லதில்லையே.. ஏதாவது சொதப்பினா தானே ஜி3. அதே மாதிரி இந்த பயணத்துலயும் ஒரு சொதப்பல் பண்ணேன். ஒன்பது மணி நேர பயணத்தையும் அழகாய் ரசித்து கொண்டே சென்று இறங்க வேண்டிய இடம் வந்த்தும் மூட்டை முடிச்சுடன் இறங்கி நண்பருக்காக காத்திருந்தேன். அவரும் ரொம்ப நேரம் காத்திருக்க வைக்காம 5 நிமிஷத்துல வந்துட்டார். அங்க இருந்து ஆட்டோல ஏறி கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம் தான் பாக்கறேன். கையில இருந்த பர்ஸ்ஸ காணும். அடடா, பஸ்ல இருந்து இறங்கினப்போ அதை எடுக்க மறந்துட்டோம்னு ஞாபகம் வர, உடனே நண்பர்கிட்ட சொல்ல.. திருப்புடா ஆட்டோவ KPN ஆபீஸுக்குனு , KPN ஆபீஸூக்கு போனோம். அவங்க வண்டி எந்த இடத்துல இருக்கும்னு சொல்ல அங்க போய விசாரிச்சா.. நல்லவர் டிரைவர் பர்ஸ பத்திரமா எடுத்து வைச்சிருந்தார். அப்பாடானு அவருக்கு நன்றி சொல்லி பர்ஸ வாங்கிக்கிட்டேன். அவரு அதோட விட்டிருக்கலாம். எல்லாம் சரியா இருக்கானு பாத்துக்கோமானு அவர் சொல்ல, பக்கத்துல இருந்த நல்லவர் ஒருத்தர் அங்க தானேமா நீங்க இறங்கி நின்னுட்டிருந்தப்போ உங்க முன்னாடி காமிச்சு இது யாருதுனு கேட்டுட்டிருந்தோம்னு சொல்ல.. அடப்பாவமே.. இதை கூடவா கவனிக்காம யோசனைல இருந்தேன்னு இருந்துது :( அன்று மதியம் என் தோழியிடம் இந்த கதையை சொல்ல, அப்படி என்ன யோசிச்சிட்டிருந்தீங்கனு கேட்க, நானும் அப்பாவியா உண்மைய அப்படியே சொன்னேன். அம்மணி அதுக்கு சிரிச்சா பாருங்க.. ஒரு 5 நிமிஷம் கேப் விடாம சிரிச்சிட்டு உங்களுக்கு இது தேவை தான்னு சொல்லி போன வைச்சிட்டா :(

இதுகூட பரவாயில்லைங்க.. திரும்ப வர்றப்போ வந்து பஸ் ஏற்றிவிட்டு போன நண்பர், வழக்கம்போல குறுந்தகவல்ல பேசிட்டிருக்க.. திடீர்னு ஒரு மணிநேரம் கழிச்சு "ஹலோ, பர்ஸ் எல்லாம் பத்திரமா எடுத்துக்கிட்டீங்களா இல்லை ஆட்டோலியே விட்டுட்டீங்களான்னு கேட்க, நானும் பதறிப்போய் பேக்ல பர்ஸ் இருக்குனு உறுதி பண்ணிக்கிட்டு அவருக்கு குறுந்தகவல் அனுப்பிட்டேன். பேக்ல தான் இருக்கு. செக் பண்ணிக்கிட்டேன்னு.. உடனே போன் பண்ணி, நிஜமாவே இப்போ தான் பாக்கறீங்களான்னு கலாய்க்கறாரு.. போய்யா.. போ.. இன்னிக்கு பொழுதுக்கு நல்லா கலாய்ச்சீங்க இல்ல.. போய் தூங்குங்கனு சொல்லிட்டு நானும் தூங்க போயிட்டேன் :))

அழகு மயிலாட..







Loved these peacocks @ Children's park, Guindy.

இதயக்கண்ணாடி


உன் பிம்பத்தை
சுமந்த குற்றத்திற்காக
சுக்கு நூறாய் உடைத்தாய்

உடைந்த ஒவ்வொரு
சிதறலிலும்
உன் பிம்பத்தையே
காட்டுகி்றதென் இதயம்!!!

பி.கு. : நம்ம ஸ்ரீமதியோட கவிதைய பாத்ததும் தோனினது :-)

மௌனம் பேசியதே

இன்னிக்கு ஏதேதோ டாபிக் பேச ஆரம்பிச்சு கடைசில "இவ்வளவு நாள் நல்லா தானேடா இருந்தீங்க. எங்க இருந்துடா வந்துச்சு இந்த லவ்வு" ங்கற அதி பாப்புலர் டயலாக்ல வந்து நிக்க... மௌனம் பேசியதே படத்து சீன் எல்லாம் திரும்ப போட்டு ஒவ்வொரு சீனுக்கும் கமெண்ட் அடிக்க ஆரம்பிச்சிட்டோம்.. நீங்களும் பாத்து ரசிக்க..







Mr.April Fool 2009



இவன் ஒருத்தனைத்தவிர வேற யாருக்கும் இந்த பட்டத்தை குடுக்க முடியும்னு தோனலை :) ஏன்னு கேக்கறீங்களா.. இங்க பாருங்க..



இப்படி ஒரு ஸ்டேட்டஸ் மெஸேஜ போட்டு அதுக்கு வாழ்த்து சொல்ற ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு கதை சொல்லி ஏமாறவைச்சு சந்தோஷப்பட்டுட்டிருக்கான் :))) இந்த உலகம் இன்னுமா இவனை நம்புது??? என்ன கொடுமை சார் இது :(

டிஸ்கி : எத்தனை நாள் தான் ஏமாற்றவங்களுக்கே இந்த பட்டத்தை குடுக்கறது? ஒரு மாறுதலுக்கு ஏமாத்தறவனுக்கு குடுப்போமே :D