நீண்ட நாட்களுக்கு பிறகு...

எல்லாருக்கும் வணக்கம்.. எப்படி இருக்கீங்க எல்லாரும்? ரொம்ப நாளா இந்த பக்கம் ஏதும் போஸ்ட் இல்லாததால நிம்மதியாவே இருந்திருப்பீங்க.. அப்படியே விட்டிருக்கலாம் தான்.. ஆனாலும் என் தம்பி ஆசைப்பட்டு கேட்டுட்டானே... நேத்து மீட் பத்தி ஒரு போஸ்ட் போடுன்னு.. அவன் ஆசையை நிறைவேத்தாம விட மனசு வரல.. அதான் திரும்பி வந்தாச்சு :)

நம்ம K4K அண்ணாச்சியும், தம்பி கோப்ஸ்-ம் சென்னை வராங்கன்னு சொன்னதுமே குடும்ப மீட் போட்டுடலாம்னு ஒரு மாசம் முன்னாடியே பிளான் பண்ணிட்டோம்.. நவம்பர் 27-ம் தேதி மீட்னு முடிவு பண்ணி K4K அண்ணாச்சி ஓர்குட் ல event எல்லாம் போட்டுடாரு.. சரி.. நம்ம குடும்ப மீட்ட அப்படியே பிளாக்கர் மீட்டா மாத்திடலாம்னு முடிவு பண்ணி நம்ம கில்ஸ், சீவீஆர் எல்லாரையும் லீவ் போட வெச்சாச்சு.. கோப்ஸ் வேற போன் போட்டு ஒரே மிரட்டல்... போன வாட்டி இப்படித் தான் வர சொல்லிட்டு மழை வந்துதுன்னு மீட்ட கேன்செல் பண்ணீங்க.. இந்த வாட்டியும் அப்படி ஏதாவது பண்ணீங்கன்னா அவ்ளோ தான்னு.. அவன் ஊருக்கு வந்த நேரமா என்னனு தெரியல.. நம்ம நிஷா (எங்க ஊர்ல புயலுக்கு கூட பொண்ணுங்க பேர் தான்பா வெக்கறாங்க) தமிழ்நாட்டுக்குள்ள வந்துட்டாங்க.. என்ன புயல் அடிச்சாலும் மீட் போடறது உறுதின்னு எங்களுக்கு நாங்களே சொல்லிக்கிட்டோம் :)

சரி மழைக்கு எல்லாரும் வெளில வரவே ரொம்ப யோசிக்கரதால சிட்டி சென்டர் ல மீட் பண்ணலாம்னு முடிவு பண்ணி 11 மணிக்கு எல்லாரையும் ஆஜர் ஆக சொல்லியாச்சு.. எவ்ளோ மழையா இருந்தாலும் நம்ம scooty நம்மள கை விடாதுன்னு நம்பிக்கையோட வண்டிலயே போயாச்சு.. நல்ல வேலை வண்டி நம்ம நம்பிக்கைய நல்லபடியா காப்பாத்திடுச்சு.. சொன்ன டைம்க்கு நாம என்னைக்கு போயிருக்கோம்.. நான் போனதே 11.30 க்கு தான். பாத்தா நம்ம மக்கள் யாருமே வரல.. சீவீஆர் க்கு போன் பண்ணா இங்க தான் வெளில இருக்கேன்.. எப்படி உள்ள நுழையறதுன்னு தெரியல. எல்லா பக்கமும் தண்ணியா இருக்குங்கறாறு.. எப்படியோ நீச்சல் அடிச்சு உள்ள வந்து சேருங்கன்னு சொல்லிட்டு நம்ம k4k அண்ணாச்சிக்கு போன் பண்ணா அவர், ஆட்டோ இப்போ தான் ஜெமினி தாண்டி இருக்கு.. கொஞ்ச நேரத்துல வந்துடரோம்னு சொன்னாரு. சரின்னு கோப்ஸ் க்கு போன் பண்ணா நான் ஆட்டோ ஏறி 2 மணி நேரம் ஆகுது.. இப்போ தான் கோடம்பாக்கத்துல கிளம்பின ஆட்டோ போத்தீஸ் வந்திருக்கு.. வந்துடறேங்கறான்.. இவங்க கிட்ட எல்லாம் பேசிட்டிருந்த கேப்ல சீவீஆர் வந்தாரு.. கொஞ்ச நேரத்துல K4K வும் வந்து சேர நம்ம கில்ஸ் க்கு போன் பண்ணோம்..

எப்பவும் போல தலைவர் போன் எடுக்கவே இல்ல.. சரின்னு அவர் வீட்டு landline க்கு கால் பண்ணி கேட்டா மொபைல் சைலன்ட் ல இருக்கு,, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நீங்க continue பண்ணுங்க.. நான் வேலை முடிஞ்சப்புறம் கால் பண்றேன்.. முடிஞ்சா ஜாயின் பன்றேங்கராறு.. நல்லவனே.. நல்லா இருங்க நீங்கன்னு சொல்லிட்டு, கோப்ஸ் வர்ற வரைக்கும் டைம் போகனுமேன்னு pizza hutla கொஞ்சமா (3 pizza, 1 garlic bread, 4 coke) ஆர்டர் பண்ணிட்டு வெயிட் பண்ணிடிருந்தோம்.. அந்த கேப்ல நம்ம கில்ஸ் கால் பண்ணி வீட்ல கரண்ட் போய்டுச்சு.. நான் மீட்டுக்கே வர்றேன்னு சொல்றாரு.. சரி.. வந்து சேருங்கன்னு சொல்லிட்டு நாம நம்ம pizza வ சாப்பிட ஆரம்பிச்சாச்சு.. சாப்பிட ஆரம்பிச்சது கோப்ஸ்-க்கு தெரிஞ்சுடுச்சு போல.. கரெக்டா வந்துட்டான்..

கொஞ்ச நேரத்துல கில்ஸ்-ம் வந்து சேர, கதை அடிச்சிட்டு போட்டோ எடுத்துட்டு, பீட்டர் படமான Quantum of Solace படத்துக்கு போய் ஒரு 2 மணி நேரம் ஓட்டிட்டு எல்லாரும் வீட்டுக்கு கெளம்பியாச்சு :)

குறிப்பிட பட வேண்டிய தகவல்கள் :

* சீவீஆர் "நான் மழைல நனைந்தாலும் பரவாயில்லை.. என் கேமரா எனக்கு உசுரு.. அதை நனைய விட மாட்டேன்.. அதனால கேமரா கொண்டு வர முடியாது" ன்னு சொல்லிட்டாரு :(

* பக்கத்து டேபிள்ள உட்கார்ந்திருந்த பொண்ணுங்கள நம்ம கோப்ஸ் சைட் அடிக்கவே இல்ல..

* சிட்டி சென்டர் உள்ள வந்தப்புறமும் கில்ஸ் அந்த ஜெர்கின்ன கழட்டாமலே இருந்தாரு.. கழட்டினா அதை கைல தூக்கிட்டு நிக்கற அளவுக்கு அவருக்கு தெம்பில்லையாமாம் :)

* நம்ம K4K அண்ணாச்சி எல்லா எடத்துலயும் வெறும் 1000 ரூபாய் நோட்டு தான் நீட்டராறு.. அதுலயும் எங்க யாரையும் பைசாவே எடுக்க விடாம அவரே தான் எல்லா செலவும் பண்ணாரு.. ரொம்ப நல்லவரு :)