மன்னவன் வந்தானடி தோழி

நம்ம ப்ளாக் உலகமே தூங்க ஆரம்பிச்சிடுச்சு. அதை active ஆக்கறேன் பேர்வழின்னு ஆளாளுக்கு tag create பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. என்ன கொடுமை இது சிங்கம்லே Ace!! இப்படி ஒரு வில்லத்தனத்தோட நம்ம Dreamzz ஆரம்பிச்சு என் கிட்ட ஒப்படைச்சது தான் இந்த tag.

அவரோட தேவதை தரிசனம்

இப்போ என்னோட பகுதி
***************************

மன்னவன் வந்தானடி தோழி
பாடல் வானொலியில் ஒலிக்க
ஏனோ அவன் முகம்
தானாய் மனத்திரையில் தோன்றுகிறது

அவன்!!!

அவன் பெயர் ஆதித்யன்
என் எதிர் வீட்டில் வசிப்பவன்..

யார் சொன்னார்கள்?
முகம் மனதின்
கண்ணாடி என்று

அவன் முகம் எப்பொழுதும்
துடைத்து வைத்த
பளிங்கு போல் இருக்கும்
அவன் உணர்ச்சிகளை நிச்சயமாய்
முகம் கண்டு அறிய முடியாது

அவன் மனம் விட்டு
சிரித்து நான் பார்த்தது
அவன் தமக்கையின் குழந்தையுடன்
விளையாடும் பொழுது மட்டுமே.
அவன் சிரிக்கையில்
நிச்சயம் உள்ளம் கொள்ளை போகும்!!!

என்னையும் அறியாமல்
மெள்ள மெள்ள அவன்
எனக்குள் நுழைய ஆரம்பித்தான்
அவனிடம் பேச மனம் துடித்தது

அப்படி ஒரு நாளில் தான்
அவனை கோவிலில் சந்தித்தேன்
அவனைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும்
அப்பாவியாய் கேட்டேன்
"உங்க பேர் என்ன?"

அதன் பிறகு அவன் சொன்ன
வார்த்தைகளில் என் கவனம் இல்லை
அவன் குரலின் வசீகரத்தில்
கட்டுண்டு கிடந்தேன்

அதன் பிறகு எங்கு சந்தித்தாலும்
ஓர் அழகிய புன்னகையுடன்
நலம் விசாரிக்க ஆரம்பித்தான்

பின்னர் எதேச்சையாய் ஏற்பட்ட
எங்கள் சந்திப்புகள்
திட்டமிட்டவையாக மாறி
இறுதியில்
தினசரி சந்திப்புகளாகியது

இன்று மாலையும்
கோவிலில் சந்திக்க சொல்லியிருக்கிறான்
முக்கியமான விஷயம்
பேச வேண்டும் என்று
அது என்னவாக இருக்கும்
என்று அறிந்திருந்தாலும்
ஆவலுடன் கிளம்புகிறேன்!!!

பி.கு. இந்த கவிதைய நான் எழுதறதுக்காக டிப்ஸ் குடுத்து ஒரு பதிவே போட்ட கவிதாயினி காயத்ரிக்கு சிறப்பு நன்றிகள்.
பி.கு.கு. இந்த ஆதித்யன் பெயர் வேதா பரிந்துரை. இது எதுக்கு சொல்றேன்னு உங்களுக்கே நல்லா தெரியும் :-))
பி.கு.கு.கு. Dreamzz-க்கு ரொம்ப பெரிய மனசு. அதான் அவரு சைட் அடிச்ச மக்கள நீங்களும் சைட் அடிங்கன்னு போட்டோவா போட்டாரு. எனக்கு அவ்ளோ பெரிய மனசெல்லாம் இல்லீங்க. அதனால போட்டோ எதுவும் போடலை.

சரி. இப்போ நான் வம்புக்கு இழுக்கற 3 பேர்
1. வேதா (கவிதைய வாழ வைக்க :-))
2. கில்ஸ் (பழி வாங்கும் படலம். :P)
3. அருண் (எத்தனை tag வந்திருக்குன்னு தனியா ஒரு போஸ்ட் போட போறாராம். அதுக்கு உதவதான்:-))


இது தான் ரூல்ஸ்:
1. இந்த கவிதைல வர்ற கதைய Continue செய்யனும்.
2. குறைந்த பட்சம் ஒருவரையும், அதிகபட்சம் 3 பேரையும் டேக் செய்யலாம்.
3. ரூல்ஸ எப்ப வேணும்னா மாத்த உங்களுக்கு அதிகாரம் கண்டிப்பா உண்டு..Hopefully for the better!

என்றும் நட்புடன்







எட்டு விளையாட்டு

என்னை பத்தி 8 விஷயங்கள் எழுத சொல்லி நம்ம காயத்ரியும் புலியும் கட்டளை போட்டுட்டாங்க. அதுலயும் புலி கட்டாயமா திங்கட்கிழமைக்குள்ள எழுதிடனும்னு ஒரு உறுமல் வேற :-(( ஆனா நம்மள பத்தி 1-2 விஷயம் சொன்னாலே இத்தனை நாளா இங்க குடுத்துட்டிருக்கற பில்ட் அப் பெல்லாம் ஒரே நாள்ல தூள் தூளாயிடுமே.. இதுல 8 விஷயம் சொல்லனுமான்னு நம்ம மனசாட்சி அலற ஆரம்பிச்சிடுச்சு. சரி அதுக்கு பதிலா நமக்கு பிடித்த/நடந்த 8 நிகழ்ச்சிகளை சொல்லலாம்னு முடிவு செஞ்சு இதோ பதிவா வந்துருச்சு.. ஸ்டார்ட் மீஜிக்..

1. முதன் முதலில் கப்பலில் ஏறியது. அப்பாக்கு முக்கால்வாசி வருஷம் வெளியூர்ல தான் வேலை. அப்போ இராமேஸ்வரத்துல வேலை பாத்துட்டிருந்தாரு. நாங்க எல்லாம் முழு ஆண்டு பரீட்சை விடுமுறைக்கு அங்க போயிருந்தோம். அந்த டைம்ல இராமேஸ்வரம் வழியா போற ஒரு கப்பல சுத்தி பாக்க அனுமதி வாங்கி எங்க எல்லாரையும் கூட்டிட்டு போனாரு. கப்பல் வரைக்கும் ஒரு படகுல போயிட்டு அதுல இருந்து கப்பல்ல ஏணி மூலமா ஏறி போனோம். அது ஒரு வெளிநாட்டு கப்பல். பயங்கர பிரம்மாண்டமா இருந்துது. உள்ளயே நீச்சல் குளம் ரெஸ்டாரெண்ட் எல்லாம் பாத்தப்போ அப்போ ரொம்ப மலைப்பா இருந்துது. அதுலயும் அதோட மேல் தளத்துல போய் நின்னு சுத்தி இருந்த கடல பாத்தப்போ.. அந்த பரவசத்த சொல்றதுக்கு நிச்சயமா வார்த்தைகள் பத்தாது. அப்புறம் போன படகுலயே திரும்பி கரைக்கு வந்தாச்சு. அன்னைலேர்ந்து மனசுக்குள்ள ஒரு ஆசை. ஒரு வாட்டியாவது கப்பல்ல பயணம் செய்யனும்னு. பாப்போம். எந்த கப்பலுக்கு அந்த குடுப்பனையோ ;-))

2. மறக்க முடியாத பிறந்தநாள். காலேஜ் முடிக்கற வரைக்கும் பெருசா பிறந்தநாள எல்லாம் கொண்டாடினதில்லைங்க. LNT-ல சேர்ந்து முதல் பிறந்தநாள் வந்தப்போ மக்கள் திக்குமுக்காட வெச்சிட்டாங்க. எங்க project மக்கள், என் training batch மக்கள்ஸ்னு ஒரே வாழ்த்து மயம் தான் அன்னிக்கு முழுக்க. சாயந்திரம் வழக்கம் போல நானும் சாந்தியும் bus stop - ல உட்காந்து கதை அடிச்சிட்டிருக்கும் போது திடீர்னு சாந்தி இங்க உட்காந்து இருக்கறதுக்கு வீட்டுக்கு வாயேன்னு கூப்டா. சரின்னு அவ வீட்டுக்கு கிளம்பினோம். பிறந்தநாள் அதுவுமா அவ வீட்டுக்கு போகும் போது சும்மாவா போறதுன்னு அவங்க வீட்டு பக்கத்துல இருக்கற McRennet-ல cake pieces வாங்கிட்டு போனேன். வீட்டுக்கு போனதும் அவங்க அப்பா கிட்ட பேசிட்டிருக்கும் போது அவ திடீர்னு நான் வாங்கிட்டு வந்த கேக்ல மெழுகுவர்த்தியோட வர, பின்னாடியே அவ தங்கையும் தம்பியும் happy birthday பாட்டு பாடிட்டே வர sweet surprise அது. மறக்க முடியாத இனிய அனுபவம் :-)

3. இன்னொரு சிறப்பு பிறந்தநாள். இது என்னோடது இல்லீங்கோ. சாந்தியோட பிறந்தநாள். எங்க projectla எப்பவுமே team-ல இருக்கற எல்லாரோட பிறந்தநாளுக்கும் சாயந்திரம் 6 மணிக்கு கேக் வெட்டி அதை birthday baby முகத்துல அப்பி (பசங்கனா கண்டிப்பா birthday bumps-ங்கற பேர்ல சூப்பர் உதைஸ் guaranteed) எல்லா சேஷ்டையும் பண்ணிட்டு அவங்கள கேள்வி கணைகளால தாக்குவோம். Simple-அ சொல்லனும்னா அது ஒரு ragging time-a இருக்கும். நம்ம சாந்தியோட பிறந்தநாளுக்கும் இந்த கூத்தெல்லாம் செஞ்சோம். அவளுக்கு கேள்வி-பதில் session வந்தப்போ நானும் எல்லார மாதிரி கலாட்டா பண்ணிட்டு உட்கார்ந்துட்டிருந்தேன். அப்போ ஒருத்தர் உன் best friend யாருன்னு கேக்க என் பக்கத்துல இருந்த ஒருத்தி உன் பேர சொல்லுவா பாருன்னா. நான் சிரிச்சிக்கிட்டே வாய்ப்பே இல்லன்னு சொன்னேன். (எனக்கு தெரிஞ்ச வரை அவ school-ல college-ல எல்லாம் கூட யாரும் close-னு சொன்னதில்லை. எல்லார் கிட்டயும் casuala பேசுவா. யார் கிட்டயும் ரொம்ப close-ஆ எல்லாம் இருந்ததில்லை.) பாத்தா அம்மணி அங்க என் பேர சொல்லிட்டா. அப்புறம் அதெல்லாம் முடிஞ்சப்புறம் என்னடி இப்படி ஒரு குண்டை போட்டுட்ட? நீ யாரும் இல்லைன்னு சொல்லுவன்னு அவ கிட்ட சொல்லிட்டிருந்தா இப்படி கவுத்துட்டியேன்னு கேட்டா அம்மணி ஜாலியா நான் யாரும் இல்லைன்னு சொன்னா ஏன் எதுக்குன்னு எக்கச்சக்கமா கேள்வி கேப்பாங்க. அதான் உன் பேர சொல்லி தப்பிச்சிட்டேன்னு சொன்னா. :-)

4. LNT relieving. நான் resign பண்ணிட்டேன்னு சொன்னதும் என் BA (Business Analyst - from Client side for the applications I supported ) என் PL கிட்ட சொன்ன வார்த்தைகள் "Will it make any difference if I go and ask her to stay back?" "I dont think we will be able to get the same kind of support from the new members". இதை என் PL என்கிட்ட சொன்னப்போ நிஜமாவே எனக்குள்ள ஒரு சந்தோஷம். நாமளும் சாதிச்சிருக்கோம்னு. கடைசி நாள் கிளம்பறதுக்கு முன்னாடி என் BA-க்கு போன் பண்ணி பேசினேன். அப்பவும் அவரு "At any point in future if you would like to come back you are always welcome" னு சொன்னாரு. அதே போல எங்க டீம்-ல யாரு வேலைய resign பண்ணி போனாலும் ஒரு greeting card-ம் gift-ம் குடுத்து ஒரு குட்டி farewell நடத்துவோம் conference room-ல.அதே மாதிரி எனக்கும் ஒரு card குடுத்தாங்க. எங்க SBU manager-ல இருந்து எங்க team-ல எல்லார் கிட்டயும் sign வாங்கி குடுத்தாங்க. அதுலயும் எல்லாரும் ஒரு ரேஞ்சா பாராட்டி இருந்தாங்க. ஆனாலும் எனக்கு நான் ரொம்ப மதிச்ச என் BA கிட்ட இருந்து வந்த பாராட்டு ரொம்ப special-ன்னு feel பண்ணேன் :-)

5. முகவரி. காலேஜ் சேந்த புதுசுல என் friends கூட போய் உதயம் தியேட்டர்ல பாத்த படம். ஒரு 3-4 வருஷம் கழிச்சு தியேட்டர் போனது அதுவும் friends கூட போனதுங்கறதால ரொம்ப special. இன்னிக்கு அந்த படத்தோட பாட்டோ இல்ல காட்சியோ பாத்தாலும் ஒரு தனி சந்தோஷம் உண்டு.

6. Cricket Match. நமக்கும் Cricket-க்கும் சம்பந்தமே கிடையாதுங்க. அப்படி இருந்த என்னயும் ஒரு வாட்டி Cricket விளையாட வெச்சிட்டாங்க. என்ன கொடுமை சிங்கம்லே ஏஸ் இது :-( எங்க LNT-ல வழக்கமா Infotech-க்கும் ECC-க்கும் match நடக்கும். எப்பவுமே ECC தான் ஜெயிக்கும். அதனால ஒரு வித்யாசமா இருக்கட்டுமேன்னு ladies cricket match Infotech-க்கும் ECC-க்கும் plan பண்ணாங்க. நம்ம கவிதா அம்மணி தான் co-ordinator. அதனால ஆள் இல்லன்னதும் நம்மல கேக்காமலே நம்ம பேர சேத்துட்டா. ஏண்டி இந்த கொலைவெறின்னு கேட்டா team-க்கு ஆள் இல்ல. நீ எல்லாம் வந்தினா சும்மா லேசா பந்த தட்டினாலும் அது 4, 6ன்னு பறக்கும்னு உசுப்பேத்தி (????) விட்டுட்டா.. மட்டைய எப்படி புடிக்கனும்னு கூட தெரியாத நமக்கு தோஸ்த்துங்க 2 பேர் match அன்னிக்கு விடியற்காலைல வந்து ஏதோ கொஞ்சம் சொல்லி தர, நானும் அன்னிக்கு cricket விளையாடினேன்.. அடிச்சது என்னமோ ஒரே ஒரு 4 தான். ஆனா அத அடிச்சது கடைசில 2 run தேவைபடும் போது :-))) . அப்புறம் என்ன கப்பு எங்களுக்கு தான். அதுக்கப்புறம் ஒரு ஒரு வாரத்துக்கு ஆபீஸ்-ல எங்களுக்கு கிடைச்ச மரியாதைய சொல்ல ஒரு போஸ்ட் பத்தாது :-)))

7. Rameswaram. எங்கப்பா வேலை பாத்த ஊர்லயே எனக்கு ரொம்ப புடிச்சது இந்த ஊர் தாங்க. அங்க இருந்த office quarters, குதிரை வண்டிகள், கோயில், கடல், அப்பாவோட நண்பர் குடும்பம்னு காரணங்கள் அடுக்கிட்டே போகலாம் :-))

8. Blogging. அருமையான நண்பர்கள் கிடைக்க உதவிய இதை பத்தி எழுதலனா ஞாயமா? நீங்களே சொல்லுங்க ;-)) எனக்கே தெரியாத ஒரு ஜி3-ய எனக்கு அறிமுகப்படுத்தியதும் இது தான். நான் முதன் முதலில் எழுதிய கவிதையும் Blogging பத்தி தான். அதை இங்கே பாக்கலாம் நீங்க.

ஷ்யப்பா.. ஒரு வழியா எழுதி முடிச்சிட்டேன் என்னோட எட்டு பதிவ. இனி தான் சுவாரஸ்யமான பகுதி. நான் எட்டு எழுத அழைக்கும் எட்டு பேர்.

1. Padmapriya
2. Raji
3. KK
4. Gils
5. Ace
6. Gops
7. Bharani
8. Ramya

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

Deleted scenes of Learn Blogging in 30 days!!! - இரண்டாம் பாகம்

போன எபிசோட் ஓவர் பீட்டரா இருக்குனு நம்ம K4K பீல் பண்ணதால இந்த வாட்டி தமிழுக்கு தாவியாச்சு :-))) சரி சரி எல்லாரும் வாங்க. க்ளாஸுக்கு போவோம் :P

இண்டெர்வல் டைம்ல எல்லாரும் அவங்கவங்க வேலைய பாத்துட்டிருக்க நம்ம பீர் அடிக்கற பூனை.. அதாங்க.. நம்ம
கோல்மால் கோவாலு வெளியில வெராண்டால நின்னுக்குட்டு வானத்தையே பாத்துக்கிட்டிருக்காரு. இத பாத்த நம்ம அருண் KK & கில்ஸ் கோஷ்டி அங்க படை எடுக்கறாங்க.


KK : என்ன சகா? இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க??

கோல்மால் : காக்காவ சைட் அடிச்சிட்டு இருக்கேன் அண்ணாத்த.

அருண் : ஹி.ஹி.. என்ன ஓவரா முத்தி போச்சா? இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்..
ஜி3ய பாக்க போகாதே... பாக்க போகாதேன்னு.. கேட்டியா நீ?

கோல்மால் : உங்களுக்கு விஷயமே தெரியல சகா... நான் இண்டேரக்டா பல பிகர்கல சைட் அடிச்சிட்டு இருக்கேன்.

கில்ஸ் : ஒன்னும் வெளங்கற மாதிரி தெரியலியே...

கோல்மால் : இந்த காக்கா காலைல இருந்து நித்யா, ஜெயா, தீப்தி எல்லார் வீட்டுக்கும் ஒரு ரவுண்ட்ஸ் அடிச்சிட்டு வந்திருக்கு, ஆக, இப்போ நான் இத பாத்தா அவங்க எல்லாரையும் பாத்த மாதிரி தானே..

KK : அடடா, இந்த விஷயம் நமக்கு தெரியாம போச்சே.. இதோ நானும் வந்து ஜோதில ஐக்கியமாகறேன்...

கில்ஸ் : பாத்து சகா.. அப்புறம் அந்த காக்கா நேரா போய் உங்க தங்கமணி கிட்ட போட்டு குடுத்துட போகுது. இப்பொலாம் நமக்கு எதிரிங்க எங்க இருக்காங்கன்னே தெரிய மாட்டேங்குது :-(

KK : அட.. அதெல்லாம் பிரச்சனையே இல்ல சகா. அப்படி எதாவது பிரச்சனை வந்தா தான் தொபகட்டீர்னு கால்ல விழுந்துடனும்னு நம்ம
நாட்டாமை சொல்லி குடுத்திருக்காரே. அதெல்லாம் நான் கரெக்டா பண்ணிடுவேனாக்கும் :-)

அருண் : அப்போ சரி. வாங்க நாமலும் ஜோதில ஐக்கியமாயிடுவோம்.


இப்படி எல்லாரும் வானத்தையே பாத்துட்டிருக்கறத பாத்த நம்ம முதல்வர் கார்த்தி அதுக்கான காரணம் என்னன்னு கேக்க உடனே அருண் "நீங்களும் பாவம் வேகமா வேகமா போஸ்ட போட்டு 300-அ தாண்டியும் இன்னும் அம்பிக்கு ஒர்க் அவுட் ஆன ராசி நமக்கு ஒர்க் ஆகலியேன்னு பீல் பண்ணிட்டிருக்கீங்க.. வாங்க.. நீங்களும் வந்து எங்க ஜோதில ஐக்கியமாகுங்க" னு கூப்பிடறாரு. டென்ஷனான கார்த்தி க்ளாஸ் லீடர் சிங்கத்த அவர் ரூம்-ல வந்து மீட் பண்ண சொல்லிட்டு கோவமா அங்க இருந்து போறாரு.

குழப்பம் அதிகமாயிட்டதால என்ன பண்றதுன்னு தெரியாம தூங்கிட்டிருந்த சிங்கத்த எழுப்பி அருண் விவரத்த சொல்ல அலறி அடிச்சிக்கிட்டு கார்த்தி ரூம் முன்னாடி போய் நிக்கறாரு.

சிங்கம் : மே ஐ கம்மின் சார்?

கார்த்தி : கம் இன்.

சிங்கம் : கூப்டீங்களாமே சார்?

கார்த்தி : ஆமா.. ஆமா.. வர வர உங்க க்ளாஸ் பசங்க செய்யற அட்டூழியம் ஜாஸ்தியாயிடுச்சு. காக்கா-வ கூட விட்டு வெய்க்க மாட்றானுங்க. இனிமே இந்த க்ளாஸ் பக்கம் காக்காங்க வந்தா நம்ம பசங்க ஒழுங்கா படிக்க மாட்டாங்க. அதனால நீ என்ன பண்ற KK Association-க்கு போன போட்டு வந்து எல்லா காக்காவையும் சுட்டு தள்ள சொல்லு.

சிங்கம் : அதுக்கு எதுக்கு சார் போனு?? நம்ம KK தான் இங்கயே இருக்காறே. அவர் கிட்ட நேர்லியே சொல்லிடலாமே.

கார்த்தி : (தலையில் அடித்து கொண்டே) கஷ்டம். நான் சொன்ன KK Association - Kuruvi Kaaranga Association-யா. இது கூட தெரியாம நீ லீடரா இருந்து என்னத்த கிழிக்க போறியோ? போ. போய் மொதல்ல போன போட்டு அவங்கள வர சொல்லு.

சிங்கம் : சரி சார்.


கார்த்தியோட ரூம வுட்டு வெளில வந்த சிங்கத்துக்கு பயங்கரமா வியர்த்து கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. அவருக்கு முன்ன பின்ன பாக்காதவங்க கிட்ட போன்ல பேசனும்னா பயம். இந்த மாதிரி நேரத்துல எப்பவும் அருண் தான் அவருக்கு பதில் போன்ல பேசி ஹெல்ப் பண்ணுவாரு. ஆனா இப்பொ போன் பண்றதே அவருக்கு ஆப்பு வெய்க்கத்தான்ங்கறதால அவர் கிட்ட உதவி கேக்க முடியாதேன்னு யோசிட்டிருக்கறப்போ தான் டக்குனு அவருக்கு ஜி3 ஞாபகம் வருது. இந்த மக்களுக்கு ஆப்பு அடிக்கனும்னா அவங்கதான் உதவிக்கு வருவாங்கனு நேரா அவங்க கிட்ட போய் விஷயத்த சொல்ல அவங்க கூலா KK Association க்கு போன பண்ணி விவரத்த சொல்ல அடுத்த நிமிஷம் KK Association மக்கள்ஸ் வந்து எல்லா காக்காவையும் காலி பண்ணிட்டு போறாங்க.

தொடரும்....

கூட்டிட்டோமில்ல பஞ்சாயத்த...

வணக்கம் மக்கள்ஸ்.. என்ன? எல்லாரும் தெம்பா புது வாரத்தை ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா? உங்க ஆணிகளுக்கு நடுவுல நீங்க ரிலாக்ஸ் பண்ண வந்தாச்சு ஜி3-யோட மொக்கை போஸ்ட்.. போஸ்ட் எத பத்தின்னு நான் சொல்லனுமா என்ன?? எல்லாம் நம்ம நாட்டாமை மீட்ட பத்தி தான் :-))

சரியா சனிக்கிழமை நைட் கால் பண்ணி சென்னைக்கு ட்ரெய்ன்ல வந்துட்டே இருக்கேன்.. கூட்டுங்க நாளைக்கு பஞ்சாயத்தன்னு சொல்லிட்டாரு.. நாட்டாமை சொல்ல தட்ட முடியுமா சொல்லுங்க.. சரின்னு நானும் நம்ம மக்களுக்கெல்லாம் போன போட்டு (இந்த மாசம் இத சாக்கா வெச்சு போன் பில்ல நாட்டாமை தலைல கட்டிட வேண்டியது தான் :-))) எங்க மீட் பண்ணலாம்னு கேட்டா நம்ம வேதா இங்க அண்ணா நகர்ல சுக் சாகர்னு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு.. அங்க மீட் பண்ணலாம்னு சொன்னாங்க.. விசாரிச்சு பாத்தா அது குஜராத்தி ரெஸ்டாரண்ட்னு நம்ம ஹேய்டி சொன்னாங்க. ஆஹா.. நாம இதுவரைக்கும் போனதில்லயே.. நாட்டாமை செலவுல ஒரு ட்ரை உடலாம்னு அந்த லொகேஷனே ஓ.கே. சொல்லிட்டேன்.. ஒரு வழியா எல்லாருக்கும் போன போட்டு 3.30க்கு வந்துடுங்கன்னு சொல்லிட்டேன்.. நமக்கு அன்னிக்குன்னு பாத்து மார்னிங் ஷிப்டு வேற.. நாட்டாமை ட்ரீட்ட நம்பி ஜம்பமா வீட்ல எனக்கு மதியம் சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டேன்.. நம்ம கெட்ட நேரம் அன்னிக்குன்னு பாத்து அடுத்த ஷிப்டு மக்கள் லேட்டா வர ஆபீஸ்ல இருந்து கெளம்பவே மணி 3 ஆயிடுச்சு... சரின்னு எல்லாருக்கும் மறுபடி போன போட்டு ஒரு 3.45க்கு வந்துடுங்கன்னு சொல்லிட்டு நம்ம ஸ்கூட்டில (KK அண்ட் கில்ஸ் மாட்டுவண்டினெல்லாம் படிக்க கூடாது) கிளம்பினேன்.. இருந்த பசிக்கு சூப்பர் பாஸ்ட்ல போய் 3.50க்கெல்லாம் அங்க போயாச்சு..

அங்க போனதும் வண்டிய நிறுத்திட்டு போன பாத்தா 3 மிஸ்டு கால்.. வேதா, நாட்டாமை & சிபி கிட்ட இருந்து. சிபி கிட்ட இருந்து ஒரு மெசேஜ் வேற. என்ன வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலியேன்னு. மெசேஜ் படிச்சிட்டிருக்கும் போதே நம்ம நாட்டாமை வந்து ஒரு வணக்கம் போட்டு அட்டெண்டஸ சொன்னாரு. சரி சிபி எங்க இருக்காருன்னு கால் பண்ணலாம்னு யோசிக்கும் போதே நாட்டாமை அங்க இருக்கறவர பாத்தா சிபி மாதிரியே இருக்கேன்னு அவரு கிட்ட போய் நீங்க தான் சிபியான்னு கேக்க அப்புறம் தான் பாத்தோம் அவரு வ.வா.சங்கம் டீ-ஷர்ட் போட்டுட்டு நிக்கறத.. அவர் கிட்ட இண்ட்ரோ குடுத்துட்டிருக்கும் போதே கோல்மால் கோபால் கால் அடிச்சு எங்க இருக்கீங்கன்னு கேட்டுட்டு நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி அவரே நான் உங்கள பாத்துட்டேன். நான் வர்றேன்னு சொல்லி போன வெச்சிட்டாரு.. பாத்தா பக்கத்துல தான் எங்கயோ சைட் அடிச்சிட்டு இருந்தாரு போல. அவர பாத்ததும் நாட்டமைக்கு ஆச்சரியம் அது எப்படி எல்லாரும் நேர்ல பாத்தா இந்த பூனையும் பால் குடிக்குமான்ற ரேஞ்ச்ல இருக்கீங்கன்னு ஒரே பீலிங்.. அவரு மட்டும் தான் பாக்க கொஞ்சம் கேடி மாதிரி இருந்தாருன்னு நான் தனியா சொல்ல வேண்டியதில்லைன்னு நினைக்கறேன் :-))

சரி. இன்னும் யாரு வரணும்னு நாட்டாமை கேக்க.. உங்க தங்கச்சி வேதா வரணும்னு நான் சொல்ல, நாட்டாமை உடனே போன போடுன்னு உத்தரவு போட்டுடாரு. சரின்னு நானும் கால் பண்ணா அவங்க 10 நிமிஷத்துல வந்துடறேன்னு சொன்னாங்க.. நாட்டாம அதுக்குள்ள சரி பக்கத்துல ப்ரூட் ஷாப் ஒன்னு இருக்காம். அது நல்லா இருக்கும்னு ப்ரெண்டு சொன்னான். நாம் அங்க போலாம். நீங்க வேதாக்கு மெசேஜ் அடிச்சிட்டு வாங்கன்னு சொல்லிட்டு அவரு சர்ருனு ப்ரெண்டு கார்ல ஏறி போய்டாரு. அப்புறம் நான் போன் பண்றதுக்குள்ள வேதாவே வந்துட நாங்க 2 பேரும் நாட்டாமையோட ப்ரெண்டு சொன்ன கடைய தேடி போய் சேந்தோம்.. அங்க போனதும் இருந்த எல்லாருக்கும் வணக்கம் சொல்லிட்டு பேசிட்டிருந்த வேதா கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு இன்னும் யாரு யாருன்னே தெரியலன்னு பீல் பண்ண அவங்களுக்கு ஒரு ஃபார்மல் இண்ட்ரோ குடுத்துட்டு நான் நம்ம வேலைய பாப்போம்னு மெனு கார்ட கைல எடுத்தேன்.. அதை பாத்ததும் ஒரு குட்டி ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு :-((

மெனு கார்ட்ல வெறும் ஜீஸ் ஐடம் தான் இருக்கு.. என்ன நாட்டாமை உங்கள நம்பி மதியம் சாப்பிடாம ஓடோடி வந்த என்ன இப்படி ஏமாத்திட்டீங்களேன்னு கேட்டா, ஒரு வேலை சாபிடலனா ஒன்னும் ஆயிடாது.. ஜூஸ ஆர்டர் பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு :-(( இருய்யா உன்ன திட்ட வேண்டியதெல்லாம் போஸ்டா போட்டு திட்டிக்கறேன்னு அவரு கிட்ட சொல்லிட்டு மெனு கார்ட பாத்தா அடுத்த ஆப்பு :-(( நம்ம ஃபேவரைட் ஃபல்லூடாவும் லிஸ்ட்ல இல்ல. பிஸ்தா ஃப்லேவரும் லிஸ்ட்ல இல்ல.. சரி, மெனு டைப் பண்ணும் போது தெரியாம விட்டிருப்பாங்க சின்ன பசங்கன்னு மனச தேத்திக்கிட்டு சர்வர் வந்ததும் அவரு கிட்ட கேட்டா அவரும் அதெல்லாம் எங்க கடைல இல்லன்னு சொல்லிட்டாரு.... நாட்டாமைய திட்டினதுல பாதிய அவனுக்கும் டெடிகேட் பண்ணிட்டு ஒரு வெண்ணிலா மில்க் ஷேக் ஆர்டர் பண்ணேன்.

இவரு இப்படி எல்லாம் சொதப்புவாருன்னு தெரிஞ்சு தானோ என்னமோ பாதி மக்கள் பஞ்சாயத்துக்கு வரலைன்னு முன்னாடியே எஸ் ஆயிட்டாங்க.. எஸ் ஆன மக்கள்ஸ் லிஸ்ட பாருங்க
ஹேய்டி எங்க ஆபீஸ்ல அவுட்டிங்னு ஸ்டெர்லிங் ரெஸார்ட் கூட்டுட்டு போறாங்க.. நான் அதுக்கு போறேன்னு சொல்லிட்டாங்க
பரணி எனக்கு வேற வேலை இருக்குன்னு சொல்லிட்டாரு
சசி பிரபா நான் என் ஸிஸ்டர் வீட்லயே நல்ல சாப்பாடு சாப்டுக்கறேன்னு சொல்லிட்டாங்க..
ராஜி நான் என் ப்ரெண்டோட உதயம் தியேட்டர்ல உன்னாலே உன்னாலே படம் பாக்கறேன்னு சொல்லிட்டாங்க
கில்ஸு எனக்கு வயிறு சரியில்லன்னு சொல்லி ஜூட் வுட்டுட்டாரு

ஏமாந்த மக்கள்ஸ் நாங்க தான்னு நெனச்சிக்கிட்டே எல்லாருடயும் பேசிட்டிருந்தேன். அப்போ நம்ம சசி மெசேஜ் அனுப்பினாங்க. எல்லாரும் வந்து சேந்தாச்சான்னு.. நான் ஆச்சுங்கன்னு சொன்னதும் அவங்க உடனே போன பண்ணி எங்கண்ணன் கிட்ட போன குடுங்கன்னு சொல்ல நான் பவ்யமா நாட்டாமை கிட்ட போன குடுத்துட்டேன். அவங்க கிட்ட பேசி முடிச்சுட்டு பில்லுக்கு போன போட்டு வர சொல்லுங்க.. நானே பில்ல கட்றேன்னு சொல்லி கூப்பிடுங்கன்னாரு. நான் என்ன சொல்றது நீங்களே சொல்லுங்கன்னு போன போட்டு அவர் கிட்ட குடுத்துட்டேன். அவரு அங்க பேசி முடிச்சதும் ராம் நம்ம சிபியோட போன்ல கூப்டாரு. அவரு போனுக்கு 2 ஆம்பளைங்க பேசிக்க அத யூஸ் பண்ணா புடிக்காதாம். டொக்கு டொக்குனு 2 நிமிஷத்துக்கு ஒரு தடவை அது ஆப் ஆகி அதோட கோவத்த காம்சிட்டிருந்துது. உடனே சிபி ராமுக்கு கால் பண்ணி யப்பா ராசா நீ சொர்ணாக்கா போனுக்கு (இவங்க பேசிக்க போன குடுத்து உதவறதுக்கு என்ன ஒரு பாராட்டு பாருங்க :-(() கால் பண்ணுன்னு சொல்லிட்டாரு. அவரும் நம்ம போனுக்கு கால் பண்ணி நாட்டாமை வேதான்னு எல்லார் கிட்டயும் ஓரு ரவுண்டு பேசினாரு. அப்புறம் சிபியோட மொபைலுக்கு ஜொள்ளுபாண்டி கால் பண்ணாரு. அவரு ரொம்ப நல்லவர் போல... சிபி கிட்ட மட்டும் பேசிட்டு வெச்சிட்டாரு. இந்த போனுக்கெல்லாம் நடுவுல சிபிக்கு நாட்டாமையோட தனி வழக்கு வேற.. நயந்தாராவ அவருக்கு வுட்டு குடுத்துடனுமாம்.. என்ன கொடுமை இது சிங்கம்லே ஏஸ்???

இந்த கலாட்டா எல்லாம் ஓடும் போதே ஆர்டர் பண்ண ஐடமும் வர எல்லாரும் அதை சாப்பிட்டு முடிச்சோம். முடிச்சது தான் தாமதம் நாட்டாமைக்கு இருப்பு கொல்லல.. 6 மணி ஷோ சிவாஜி படத்துக்கு டிக்கெட் ரிஸர்வ் பண்ணி இருந்தாராம். அதனால "படத்துக்கு போகனும். நயந்தாரா வையும்.. ஆள விடு" ன்னு சப்பானி ஸ்டைல டயலாக் அடிச்சிட்டு ஜூட் வுட்டுட்டாரு. அப்புறம் நான் வேதா சிபி கோல்மால் எல்லாரும் கொஞ்ச நேரம் பேசிட்டிருந்துட்டு கெளம்பினோம். இவ்ளோ நேரம் நடந்த பஞ்சாயத்துல ஒரு ஜீவன் மட்டும் வாயே தொறக்காம ரொம்ப அமைதியா ஒக்காந்திருந்துது.. கேட்டா நான் பேசறத பாத்து தான் மிரண்டுட்டாருன்னு சிபி அவருக்கு சப்போர்ட் வேற... அந்த பயந்த பாப்பா மீட் முடிஞ்சதும் வீட்டுக்கு போய் பண்ண மொத காரியத்த இங்க பாருங்க..

இதுக்கு மேலயும் சொல்றதுக்கு நிறைய விஷயமிருக்கு.. ஆனா உங்க மேல கொஞ்சம் பரிதாப பட்டு இப்போதைக்கு இத்தோட நிறுத்திக்கறேன்..

இத படிச்சப்புறமும் தெளிவா இருந்தீங்கன்னா வந்து கமெண்டிட்டு போங்க..

உங்க தலையெழுத்த யாரால மாத்த முடியும் :-)

மக்கள்ஸ்... எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சு போஸ்ட் போட்டு.. சரி இன்னிக்கு எப்படியும் ஒரு போஸ்ட் போட்டுடனும்னு முடிவு பண்ணி எதையாவது ஜி3 பண்ணலாம்னு பாத்தா ஒன்னும் ஒழுங்கா கிடைக்கல :-(( சைட்ல நம்ம சிவிஆர் கிட்ட சேட் பண்ணும்போது நான் கிறுக்கி வெச்சிருந்த கிறுக்கல எல்லாம் காட்ட அவரு வாய வெச்சிட்டு சும்மா இல்லாம நல்லா இருக்குன்னு சொல்லிட்டாரு.. உடனே நம்ம மண்டைல 1000 வாட்ஸ் பல்ப் ஒன்னு பளிச்சுனு எரிஞ்சுது.. இதையே போஸ்டா போட்டா என்னன்னு.. சோ மக்கள்ஸ் நீங்க இந்த கொடுமைய அனுபவிக்க காரணமானவர கை காமிச்சிட்டேன்.. இனி நீங்களாச்சு.. அவராச்சு.. :-)) சரி... இப்போ நம்ம கிறுக்கல்ஸ என்சாய்(????) பண்ணுங்க :-))

உன்னை காண மனம் துடித்தாலும்
காண்பதை தவிர்க்கிறேன்
என் கண்ணில் வழியும் காதலை
உணர்ந்திடுவாயோ என்ற உறுத்தலினால்

உன்னிடம் பேச மனம் துடித்தாலும்
பேசுவதை தவிர்க்கிறேன்
எங்கே என் மாற்றத்தை
அறிந்திடுவாயோ என்ற அச்சத்தினால்

உன்னை விட்டு விலக நினைக்கிறேன்
இயலவில்லை...
உன்னை மறக்க முயற்சிக்கிறேன்
முடியவில்லை...
உன்னுடன் வாழ ஆசைபடுகிறேன்
அதிர்ஷ்டமில்லை...
சரியென்று சாக துடிக்கிறேன்
துணிவுமில்லை!!!

*********************

உன்னிடம் என் துயரங்களை கூறி
மடியில் முகம் புதைத்து அழுகையில்
உணர்கிறேன்
எல்லாம் நன்மைக்கே!!!


********************

என்னவனின் நினைவுகளை கூட
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாதாம்..
அவை தனக்கு மட்டுமே சொந்தம்
என்று என் மனம்
உரிமை கொண்டாடுகிறது!!!

Deleted scenes of Learn Blogging in 30 days!!!

Makkals, ellarum eppadi irukkeenga? Namma KK potta Learn Blogging in 30 days post padichiruppeenga.. Aana adhula neraya scenes-a KK delete pannitaaru.. Exclusive-a ungalukkaaga inga adha release pandrom.. start meejic :-))

When Priya neram priya was telling about what inspired her to write the story, karthikeyan noticed that KK was busy writing something on his notepad. He was really surprised to see such a studious student taking notes in the class and wanted to praise KK. But when he went near KK's seat, KK was seriously drawing something on his notepad. Karthikeyan got furious on seeing this and made KK to stand up on the bench. Seeing KK standing on the bench with his heads down, he said "Now you feel ashamed for standing on the bench. You will remember this punishment hereafter and be attentive in the class". KK with one appavi look immediately replied "If I keep my heads up it is hitting on the roof sir :-( "

Whole class burst out laughing...

The cultural function was announced and everyone was participating on some program or the other. KK enrolled his name for singing competition and immediately ran to Prithz asking her to teach him some nuances of singing. The song he had chosen to sing was Minnalae from May maadham. How much ever Prithz trained him he was unable to get the sad mood on his voice. Prithz was so upset and asked s0ul to help her out. s0ul thought that this would be the best chance to take revenge on KK, for not getting the vendakka sambar he had promised her. She murmured something on Prithz's ears and immediately they both went to Karthikeyan and spoke to him. The next day Karthikeyan announced that each team participating will have a colour to represent their team. The colours will be allocated by the management team and the participants will be receiving their respective costumes. Just when the singing competition was about to start, Prithz gave KK a parcel saying that was the costume allocated for him. When KK came out of dressing room with his pink colour costume he was completely sad as he hated that colour. Finally on the stage he sang the song with utmost sadness and won the first prize. Prithz and s0ul were too happy to see KK in pink dress and were jumping all around the stadium :-)

To be continued...