டைரி குறிப்புகள்: மார்ச் 2

மாசா மாசம் Full day powershut down = எங்கள் Outing day. இந்த மாசமும் அதுக்கு விதிவிலக்கு இல்ல. காலைல 9 மணிக்கு டான்னு கிளம்பி (மின்சாரம் கட் ஆகறதுக்குள்ள கிளம்பனுமில்ல ;)) நேரா EA போனோம். A Good Day to Die Hard படம். படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வந்த Dolby Atmos Sound effect விளம்பரம் செம டாப். படம் ஓகே ரகம் தான். ஒரு வாட்டி பாக்கலாம். படம் முடிஞ்சதும் அடுத்து நாங்க போனது ஜெமினி சர்க்கஸ்க்கு

ரொம்ப நாள் (வருஷம்) ஆச்சே சர்க்கஸ் எல்லாம் போய்.. எப்படி தான் இருக்குனு போய் பாப்போம்னு போனது தான்..  2 மணி நேரம் நல்லாவே பொழுது போச்சு. ஆனா ப்ரோக்ராம் முழுக்க ஒரு பயத்தோடவே உட்கார்ந்திருந்தோம்.. போட்டிருந்த ப்ளாஸ்டிக் இருக்கை அம்புட்டு வீக்கு. அதுக்கு உதவி செய்ற மாதிரி தரை வெறும் கல்லும் மண்ணுமா கிடந்துது். உட்கார்ந்திருக்கற இருக்கை நம்ம வெயிட் தாங்காம வளையுதா இல்ல மண்ணுல புதையுதானு புரியாமலே இது உடைஞ்சுடுமோன்னு கொஞ்சம் பயத்தோடவே உட்கார்ந்திருந்தோம்.. கடல் தண்ணில நிக்கறப்போ ஒரு 5 நிமிஷம் ஒரே இடத்துல நின்னா நம்ம கால் மண்ணுல புதைஞ்சிடும். கொஞ்ச நேரத்துல ஒரு அடி முன்னாடியோ இல்ல சைட்லயோ நகர்ந்து நிப்போம்.. அது மாதிரி இருக்கை மண்ணுல புதைய புதைய ஒரு அரை மணி நேரத்துக்கு ஒரு தரம் கொஞ்சம் கொஞ்சமா நகர்த்தி நகர்த்தி உட்கார்ந்தோம் :-(

ரொம்பவும் பிடித்த நிகழ்ச்சிகள்னு பாத்தா
1. Girls Cycling - செமையா இருந்துச்சு.
2. Hanging Balance - அவ்வ்... வாய்லயே கயிரை புடிச்சிக்குட்டி பம்பரம் மாதிரி சுத்தறாங்க..
3. Birds show - வூட்டுக்காரருக்கு புடிச்சிருந்துதுனு சொன்னாரு.. நான் அப்போ ஐஸ்க்ரீம் சாப்பிடறதுல பிஸியா இருந்துட்டேன். சரியா கவனிக்கலை
4. Buffoon acts - என்னத்த புதுசா செஞ்சிடப்போறாங்கனு நினைச்சோம்.. ஆனா நிஜமாவே வாய் விட்டு சிரிச்சோம்.. எத்தனை வருஷம் போனாலும் இவங்க மவுசு மட்டும் குறையவே குறையாது போல :-)
5. இது பேரு மறந்துடுச்சு. ரவுண்டா ஒரு உருள்ற ஐட்டம் வைச்சு அதுக்கு மேல சிலதை வச்சு அது மேல ஏறி நின்னு பேலன்ஸ் பண்ணி அதுல நின்னுட்டே வளையத்த போடுறதும் கழட்டறதும்..செஞ்சவருக்கு நிஜமாவே திறமை ஜாஸ்தி தான்.

பிடிக்காத நிகழ்ச்சிகள்
1. மோட்டார் பைக் - ஸப்பா எவ்ளோ சத்தம் :-( காது கிழிஞ்சிடுச்சு
2. ஒட்டகம் - கூட்டிட்டு வந்து நாற்காலி மேல 2 கால் வைக்க வைச்சாங்க.. ஆனா அதுக்கே அந்த ஒட்டகம் எவ்ளோ அடி வாங்குச்சு :-(

ஆனாலும் Best of the lot-னா அது நாய்கள் வந்த ஷோ தான்.. சில நாய்கள் சொன்னதை செஞ்சாலும் ஒன்னு ரெண்டு நீ என்ன சொல்றது நான் என்ன கேக்கறதுங்கற ஸ்டைல்ல நடந்துக்கிட்டது டாப்... முக்கியமா சறுக்கு மரம்.. 4 நாய்கள்ல 3 கரெக்டா செஞ்சிட ஒரு நாய் மட்டும் படிக்கட்டு ஏறிட்டு மறுபடி படிக்கட்டு வழியாவே இறங்கிடுச்சு.. ஒரு வாட்டி 2 வாட்டி இல்ல.. 3 வாட்டி.. அதுக்குப்புறமும் அதை கஷ்டப்படுத்த வேணாம்னு திருப்பி கூட்டிட்டு போய்ட்டாங்க :)

இப்படியாக சர்க்கஸ் நிகழ்ச்சி முடிஞ்சப்புறம் பொருட்காட்சிக்கு போனோம்.. நாங்க போனது முக்கியமா அந்த பெரிய டில்லி அப்பளம் சாப்பிட + கொஞ்சம் ஷாப்பிங் பண்ண.. ரெண்டு வேலையையும் கரெக்டா முடிச்சுட்டு டான்னு 6 மணிக்கு வீட்டுக்கு வந்துட்டோம்.
 

திருட்டுப்பயலே - தையதா
தையதா தையதா தைய தையதா
பையதா பையதா பஞ்சு முத்தம் தா

உயிர் வாழ்கிற வரைக்கும்
உனக்கே மடி கொடுப்பேன்
இனி ஓர் ஜென்மம் இருந்தால்
உனக்கே மீண்டும் பிறப்பேன்
உனது கனவில் நினைவில் உருவில்
நானே என்றும் இருப்பேன்

தையதா தையதா தைய தையதா
பையதா பையதா பஞ்சு முத்தம் தா

நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைவதில்லை
நேசம் பாசம் நிஜமானது
மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை
அன்பே நம் காதல் அது போன்றது
பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை
சொன்னதை செய்தாலே நிகரேதும் இல்லை
நீ உறுதியானவன் என் உரிமையானவன்
பசி ருசியை பகல் இரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன்

தையதா....
தையதா தையதா தைய தையதா
பையதா பையதா பஞ்சு முத்தம் தா

குங்குமம் அப்பி குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண்நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனம் ஆட்ட கனா கண்டேன் தோழி நான்

பிறவி வந்து போனாலும் உறவு முறிவதில்லை
உயிரை உயிரால் முறுக்கேற்றவா
உன்னை போன்ற அன்பாளன் யார்க்கு வாய்க்கும் மீண்டும்
உடலை உடலால் குளிப்பாட்டவா
ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா
மறு கணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்
உன்னை இறுக்கி அணைக்கிறேன் உயிர் நுரைக்க ரசிக்கிறேன்
அணுஅணுவாய் உனை பிளந்து என் ஆயுள் அடைப்பேன்

தையதா....

2012 - திரும்பி பார்க்கிறேன்

ஜனவரி - மார்ச்

* முதல் முறையாக புத்தாண்டை 12 மணிக்கு நண்பர்களுடன் கொண்டாடியது
* கடைசி நிமிடத்தில் முடிவு செய்து பொங்கலுக்கு பார்சிலோனா சென்றது திரும்பி வரும் முன் பர்ஸை தொலைத்து சல்லி காசில்லாமல் வீடு (பெல்ஜியம்) திரும்பியது
* வீட்டுக்காரர் பெல்ஜியம் வர அவருடன் சேர்ந்து சுற்றிய இரண்டு மாதங்கள்.. பாரீஸ், ஸ்விஸ் எல்லாம் போனது அது வரை நினைத்தும் பார்த்திராத விஷயங்கள்... ரொம்பவே ரசிச்சு வாழ்ந்த நாட்கள் அவை.. :)

ஏப்ரல் - ஜீன்

* ஏற்கனவே கொஞ்சமா ஹோம் சிக் இருக்க... உடம்பு  முடியாம போனதும் ரொம்பவே ஏங்க வைச்சிடுச்சு.. ஹாஸ்பிட்டல் போனா அம்ம போட்டிருக்குனு சொல்லிட்டாங்க.. இதுக்கும் மேல தாங்காது கட்றா மூட்டையனு ஊருக்கு பொட்டிய கட்டிட்டு வந்தாச்சு
* லீவ் தரமாட்டேன்னு ஆபீஸ்ல சொல்ல.. நீ என்னடா சொல்றது நீயே உன் வேலையை வைச்சிக்கோனு ரிசைனும் பண்ணிட்டு தான் ப்ளைட்டு ஏறினதே :)
* வீட்டின் புது வரவாய் - சாண்ட்ரோ கார்

ஜீலை - செப்டம்பர்

* ஒரு வழியா நோட்டீஸ் பீரியட் முடிஞ்சு வேலையில் இருந்து முழுசா விலகினது ஜூலை மாதம் தான்
* ஆகஸ்டில் அண்ணா கல்யாணம், செப்டம்பரில் என் பிறந்த நாள், கல்யாண நாள்னு கொண்டாட்டங்களுடன் சென்ற மாதங்கள்


அக்டோபர் - டிசம்பர்

*  அம்மாவின் முதல் விமானப் பயணம் :) சென்னை - பூனே.. அங்கிருந்து காரில் சிரடி சென்று வந்தது
* வீட்டுக்காரரின் சொந்தங்களில் 2 மரணங்கள்.. அவற்றுக்காகவும் தொடர்ந்த 15-ம் நாள் 30-ம் நாள் துக்கங்களுக்க்காகவும்னு சென்னை - ஜெயங்கொண்டம் ஏகப்பட்ட முறை பயணம் செய்ய வேண்டியதாயிடுச்சு.

முதல் ஆறு மாதங்கள் வேலை ஊர் சுத்தல்கள்னு ஒரு வித சந்தோஷம்னா கடைசி ஆறு மாதங்களா வீட்டு வேலைய மட்டும் பார்த்துக்கிட்டு லோக்கல்ல சுத்தறதும் சந்தோஷமா தான்  இருக்கு. மனசுக்குள்ள லைட்டா இப்படியே இருந்துடலாம்.. அடுத்த வேலை எல்லாம் தேட வேண்டாம்னு தோனுது. பொறுத்திருந்து தான் பாக்கனும்.. 2013-ல் என்ன நடக்குதுனு...

New year cards