இத்தனை நாளா என் போஸ்டெல்லாம் பொறுமையா படிக்கற உங்கள எல்லாம் நான் வேற எப்படி கூப்பிடுவேன் ;-) இத்தனை நாளும் என் ப்ளாக்-கிற்கு அமோக ஆதரவு தந்த உங்க எல்லோருக்கும் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய நன்றி சொல்லிக்கறேன்... :-)
இதோ வந்தாச்சு என்னொட வெள்ளி விழா போஸ்ட்டு.. சரி வெள்ளி விழா போஸ்ட்டு கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டுமேன்னு தமிழ்ல போடறேன்.. மக்களே.. எங்கயாவது தமிழ கொலை செஞ்சிருந்தேன்னா தயவு செஞ்சு பாயின்ட் பண்ணுங்க.. நான் திருத்திக்கறேன் :)
சரி, வெள்ளி விழா பதிவுக்கு என்ன போடறதுன்னு மண்டைய பிச்சிக்கிட்டிருந்தப்போ நம்ம அருண் வந்து பேசாம நீ ப்ளாக் உலகத்துக்குள்ள எப்படி நுழைஞ்சேன்னு போடுன்னு சொன்னாரு.. ஆஹா.. இது கூட நல்ல ஐடியாவா இருக்கேன்னு அதையே போடலாம்னு நானும் முடிவு பண்ணிட்டேன் :-)
முதல் முதலா எனக்கு ப்ளாக்-அ அறிமுக படுத்தியவரு என்னோட நண்பர் ஒருத்தர் தான். அவர் ஏதாவது நல்ல பதிவு இருந்தா அந்த ப்ளாக் லிங்க்க மெயில் பண்ணுவாரு. நானும் ரொம்ப பிஜியா இருந்ததால கரெக்டா எல்லா லிங்க்கையும் படிப்பேன் :-) நான் ப்ளாக்-ல படிச்ச முதல் பதிவு "*மதம் தேவையா* - "அ.குமாருக்கு" ஒரு பதில்". அப்பப்போ இது மாதிரி மெயில்ல வர்ற ப்ளாக்-அ மட்டும் படிச்சு டைம் பாஸ் பண்ணிட்டிருந்தேன். அப்போ ஒரு நாள் நான் கூகுல்ல எதோ தேட போனா அது பாட்டுக்கு சமத்தா என்ன கொண்டு போய் நம்ம நாட்டாமையோட ஆறு பதிவுல விட்டுடுச்சு :-) ஆஹா.. இவ்ளோ சூப்பரா ஒரு போஸ்டான்னு பாத்தா.. கமெண்ட் பக்கத்துல அதை விட கல்க்கலா ஒரு அரட்டை ஒடிட்டிருந்தது. அன்னிக்கு தாங்க என் முதல் கமெண்ட போட்டு நானும் ஜோதியில ஐக்கியமானேன் :-) அப்புறம் நம்ம நாட்டாமையோட ப்ளாக் ரோல்ல புதுசு கண்ணா புதுசுன்னு எந்த சைட் எல்லாம் காட்டுதோ அந்த சைட் எல்லாம் போய் படிச்சிட்டு வருவேன். முக்கால்வாசி தமிழ் இல்லாட்டி தங்க்லீஷ் சைட் தாங்க நம்ம சாய்ஸ். வெறும் சைலண்ட் ரீடரா படிச்சிட்டு வந்துடுவேன். கமெண்ட் எல்லாம் போட மாட்டேன். :-)
நம்மளோட ரெண்டாவது கமெண்ட வாங்கின அதிர்ஷ்டசாலி(???) ப்ளாக் நம்ம கே.கே வோடது. ஆது அவரோட நியூ வேஸ் டு ஸால்வ் ப்ராப்ளம்ஸ் பதிவு தானுங்கோ :-) கே.கே ப்ளாக்-ல அனானி-யா கமெண்ட ஆரம்பிச்சு அப்புறம் ஜீ3-யா அறிமுகமாகி கமெண்ட் பக்கத்த சாட் பக்கமா மாத்தி அரட்டை அடிச்சிட்டிருந்தது ஒரு காலம்.. ஹும்.. அது ஒரு அழகிய நிலாக் காலம் :-) நான் மூணாவதா சாருங்கற பேர்ல கமெண்டினது நம்ம பரணியோட சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் பதிவுக்கு :-)
அதுக்கப்புறம் s0ul, கடல்கணேசன், கில்ஸ், ஆலிவ் ப்ளாக்-னு லைனா மத்த ப்ளாக்-லயும் கமெண்ட ஆரம்பிச்சேன்.. ஒவ்வொரு ப்ளாக்-லயும் ஒவ்வொரு பேர்ல.. :-) ஆனா சில ப்ளாக்-ல மட்டும் அனானி கமெண்ட் எனேபில் பண்ணாததால என்னால கமெண்ட் பண்ண முடியல :-( சரி, நாமும் ஒரு ப்ளாக்கர் அக்கௌண்ட் க்ரியேட் பண்ணுவோம்னு பண்ணேன்.. ஆனா அப்போ கூட எனக்கு ப்ளாக் எழுதனும்னெல்லாம் தோணலை.. அப்புறம் ப்ளாக்கர் ஐடி க்ரியேட் பண்ணப்புறம் நமக்குள்ள இருக்கற ஆர்வக் கோளாறு சும்மா இல்லாம இதுல எப்படி பதிவு போடறாங்கன்னு நோண்ட ஆரம்பிச்சுது. அதோட விளைவு தாங்க என்னோட முதல் பதிவு. அந்த பதிவ பாத்தா உங்களுக்கே தெரியும்.. சும்மா ஒரு போட்டோவ போட்டு ஒரு ரெண்டு லைன் எழுதி இருப்பேன் :-) ஆனா அந்த பதிவுக்கு நானே எதிர்பாக்காத அளவுக்கு மக்கள் வந்து கமெண்ட் போட்டு அவங்க பாச மழைய பொழிஞ்சு என்ன திக்கு முக்காட வெச்சிட்டாங்க :-) ஆஹா.. நம்மளையும் மதிச்சு இவ்ளோ பேர் வராங்களேன்னு ஆச்சர்யபட்டு அதுக்கப்புறம் பதிவா போட்டுத் தள்ள ஆரம்பிச்சது தாங்க.. இப்போ இருபத்தஞ்சாவது பதிவுல வந்து நிக்குது :-) இது தாங்க என்னுடைய ப்ளாக்-கோட வரலாறு.. :-)
சரிங்க.. உங்க எல்லாரோட நட்பும் ஆதரவும் அடுத்த வருஷமும் தொடரும் அப்படிங்கற நம்பிக்கையோட இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி நான் அப்பீட் ஆகறேன்.. :-)
டாடா.. :-)








