Showing posts with label கலாட்டா டைம். Show all posts
Showing posts with label கலாட்டா டைம். Show all posts

கலாட்டா டைம் - IV

பழைய அலுவலகத்துல இருந்த நண்பர்கள் எல்லாரும் தனித்தனியா பிரிஞ்சு வேற வேற கம்பெனிக்கு வந்துட்டதால தினமும் காலைல மொத்த க்ருப்புக்கும் குட்மார்னிங்னு ஒரு மெயில போட்டு ஆரம்பிச்சாச்சுனா அம்புட்டு தான். சாயந்திரம் வரைக்கும் கும்மியோ கும்மிதான் :) குறைந்த பட்சம் 100 மெயிலாவது ஓடும். என்னைக்கு ஆபீஸ்ல இருந்து மெயில் சர்வர ரொம்ப வேலை வாங்கறனு திட்டப்போறாய்ங்களோ!! ஆனாலும் மெயில்ல நம்ம மக்களோட குசும்பு மெயில்ல டாப் கியர்ல இருக்கும். படிச்சதும் சிரிப்ப அடக்கக முடியாது. அப்படி சிரிக்கவைச்ச சில விஷயங்கள் இங்கே..

முந்தின நாளே நாளைக்கு எனக்கு ட்ரெய்னிங் இருக்கு. அதனால கும்மில கலந்துக்கமுடியாது. சாயந்திரத்துக்கு மேல வந்து கலந்துக்கறேன் சொல்லிட்டு போயிட்டான் ஒரு நல்லவன். அடுத்த நாள் பாத்தா காலைலியே புள்ள பொறுப்பா மெயில் அனுப்பறான். என்னடா ஆச்சு ட்ரெய்னிங் போறேன்னு சொன்ன.. இங்க கும்மிட்டிருக்க... ட்ரெய்னிங் எப்படி போகுதுனு கேட்டா.. "பாத்தாலே தெரியலியா ஜி3. யார் பெத்த புள்ளையோ முன்னாடி நின்னு புலம்பிட்டிருக்கு.. நான் கடைசி வரிசைல உட்கார்ந்து மெயில் செக் பண்ணிட்டிருக்கேன்" ங்கறான்.

இனனொரு நல்லவருகிட்ட காதலர்தினம் எப்படி போச்சுனு கேட்டா "ஆயிரம் பூக்கள் உள்ள ரோஜாக்கூட்டத்தில் ஒரே ஒரு ரோஜாவை ரசிக்கும் முட்டாள் செயல் "காதல்". அதனால எல்லா பூக்களையும் ரசிப்போம்.. வாழ்க்கையை ரசிப்போம்" னு கெத்தா டயலாக் விடறாரு.

இந்த காமெடி பத்தலைனு வெள்ளிக்கிழமை அன்னிக்கு எல்லாருக்கும் பட்டப்பெயர் வைப்போம்னு ஒரு த்ரெட்டு.. அவ்வ்வ்வ்வ்.. சில சாம்பிள்கள் இங்கே..

சைட்டு ஷன்முகம் (ஓவரா சைட் அடிக்கறதால)
சமையல் சூறாவளி (சமைக்கறேன் பேர்வழினு குக்கர வெடிக்க வைச்சதால)
கேடி சாமியார்
பாடும் பைங்கிளி (இந்த பேருக்கு பின்னாடி ஒரு ஹிஸ்டரியே இருக்கு.. அதை தனியா இன்னொரு பதிவா தான் போடனும் :P)
சோப்லாங்கி சுப்பிரமணி
சிஜடி சீனாதானா (சைட் அடிக்கற பொண்ணுங்க டீடெய்ல்ஸ் எல்லாம் துப்பறியறதால)

என்னது.. எனக்கு என்ன பேரு வைச்சாங்கனு சொல்லனுமா.. ஹிஹி... நோ சொந்த செலவு சூனியம்ஸ் :P

இதெல்லாம் மெயில்ல தான்னு பாத்தா.. நேத்து புள்ள ஊருக்கு போறப்போ எஸ்.எம்.எஸ் அனுப்புது..

"நான் ட்ரெய்ன்ல எங்க ஊருக்கு போயிட்டிருக்கேன். <அவன் பேரு> சார் சென்னைல இருந்து கிளம்பிபட்டாருனு நினைப்புல யாராவது பஸ்ஸ கொளுத்துறது, ட்ரெயின மறிக்கறதுனு அட்டூழியம் பண்ணா... ஒரே ஒரு எஸ் எம் எஸ்ஸ் அனுப்புங்க....























அப்படியே அப்பீட் ஆகிடறேன்"


போறப்போதான் இப்படினு பாத்தா போய் சேந்ததும் இன்னொரு மெசேஜ்..

"மதுரையில் அதிசய பூ மழை. மக்கள் மகிழ்ச்சியில் மிதக்கிறார்கள்..



ஏன்னு கேளுங்க...



<அவன் பேரு> சார் மதுரைல லேண்ட் ஆகிட்டாரு.. காலை வணக்கம்"

காலங்கார்த்தலயேவாடா.. பேசாம உனக்கு பில்டப் பாஸ்கரன்னு பேர வச்சிடலாம்னு நான் பதில் போட.. பாஸ்கரன பஸ்காரன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டு புள்ள ஃபீல் பண்ண செம காமெடி தான் போங்க :)))

கலாட்டா டைம் - III


வழக்கமா மதியம் சாப்பிட்டு முடிச்சப்புறம் ஜூஸ் / ஐஸ்க்ரீம் வாங்கிக்கிட்டு ஆபீஸ சுத்தி ஒரு வாக்கிங் போவோம். ஒரு சைட்ல மட்டும் காத்து சூப்பரா இருக்கும். அங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்து / நின்னுக்கிட்டு போற வர்றவங்கள சைட் அடிச்சிட்டு கொஞ்ச நேரம் கலாட்டா பண்ணிட்டு தான் சீட்டுக்கு திரும்பி வருவோம். போன வாரம் அப்படி தான் சாப்பிட்டு முடிச்சப்புறம் என்ன வாங்கலாம்னு யோசிச்சப்போ எனக்கு லைம் சோடா வேணும்னு சொன்னேன். பிரெண்டு அவனுக்கு குல்ஃபி வேணும்னு சொல்லி குல்ஃபி வாங்கினான். அதோட விட்டிருக்கலாம். அந்த குல்ஃபிய லைம் சோடால டிப் பண்ணி சாப்பிட போறேன்னான்.. உதை விழும்.. வேணும்னா குல்ஃபி மேல லைம் சோடா ஊத்தறேன்னு கொஞ்சம் ஊத்தினேன்.. சாப்டுட்டு சூப்பரா இருக்குனு சொன்னவன்.. அடுத்த நாள் மேங்கோ ஃபீஸ்டும் லைம் சோடாவும் காம்பினேஷன் ட்ரை பண்ணனும்னு சொன்னான்.. நல்லவனே.. நீயே இந்த விளையாட்டு விளையாடு.. நான் இன்னிக்கு கார்னிட்டோ தான் சாப்பிட போறென்னு சொல்லி எஸ் ஆயிட்டேன். ஆனாலும் அவன் அதை லைம் சோடா முக்கி முக்கி எடுத்து சாப்பிட்டப்ப சூப்பரா கலாய்ச்சிட்டிருந்தோம். நானும் சாப்பிட்டு பாத்தேன். ஐஸ்க்ரீம்ல பெருசா ஏதும் டேஸ்ட் வித்யாசம் தெரியலை. ஆனா கடைசில அந்த லைம் சோடா குடிக்கறப்போ அதுல எஃபெக்ட்டு இருந்துது ;-)

******************************

வெள்ளிக்கிழமை அன்னிக்கு வேலைய ரிசைன் பண்ணிட்டு போயிருந்த எங்க ப்ரெண்ட் ஒருத்தி எங்கள பாக்க வந்திருந்தா. அவ ஆசைப்பட்டதால எல்லாரும் அன்னிக்கு குல்ஃபி சாப்பிடலாம்னு முடிவு பண்ணி வாங்கினோம். இதுல என்ன மேட்டர்னா அது கரெக்டா சாப்பிடனும்.. மேல மட்டுமொ இல்ல கீழ மட்டுமோ சாப்பிட ஆரம்பிச்சீங்கன்னா மத்த இடத்துல எல்லாம் உருகி ஒழுக ஆரம்பிச்சிடும்.. நானும் இன்னும் ரெண்டு பேரும் ரெகுலரா சாப்பிடறதால தெளிவா சாப்பிட்டோம்.. ஆனா மீதி ரெண்டு பேர் நிறைய ஒழுகவிட அடிச்ச காத்துல உருகி ஒழுகினதெல்லாம் எல்லார் மேலயும் தெரிக்கனு எல்லார் டிரஸ்லயும் குல்ஃபி கரையோட திரும்பி வந்தோம்.

******************************

லஞ்ச் டைம் மட்டும் இல்லைங்க.. சாயந்திரம் ஒரு 4-5 மணிக்கா ரொம்ப போர் அடிச்சா / தூக்கம் வர்ற மாதிரி இருந்தாலும் அங்க வந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிட்டு போவோம். வீசிற சுகமான காத்துக்கு சும்மா சூப்பர் ரிலாக்ஸிங்கா இருக்கும்.. அப்படி ஒரு நாள் நானும் உமாவும் உட்கார்ந்திருந்தப்போ அங்க இருந்த ஈச்சமரத்துல இருந்து கொத்து கொத்தா காய பறிச்சிட்டிருந்தாங்க. கொஞ்ச நேரத்துல அங்க கார் பார்க் பண்ண ரெண்டு டிரைவர்ங்க வந்து அவங்களும் கீழ தேடி தேடி எடுத்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.. ஏன் இவ்ளோ இருக்கும்போது தேடி தேடி எடுத்து சாப்பிடறாங்கனு ஒரு டவுட்டு.. சரி அது என்னனு தான் கேட்டுடுவோமேனு போய் அவங்ககிட்டயே போய் இது என்ன பழம்னு கேட்டோம். அந்த ரெண்டு டிரைவர்ல ஒருத்தர் ரொம்ப யோசிக்க இன்னொரு டிரைவர் ஈச்சம்பழம்னு சொல்ல உடனே இவர் ஆமா லயன் டேட்ஸ்க்கு தங்கச்சி இது தான்னு சொன்னாரு. அவரு எங்கள கலாய்க்கறாரா உண்மைய சொல்றாரான்னு தெரியலைன்னாலும் பேருக்கு நாங்களும் சிரிச்சிட்டு சரி நாங்களும் கொஞ்சம் எடுத்துக்கலாம்னு எடுத்துக்கிட்டோம். உடனே ஈச்சம்பழம்னு பேரை கரெக்டா சொன்ன டிரைவர் வந்து, அது காய்.. அதை சாப்பிடாதீங்க.. இது மாதிரி கருப்பா இருக்கறது தான் பழுத்தது. இதை சாப்பிடுங்கனு அவரே நல்ல பழமா பாத்து குடுக்க ஆஹா இதை தான் இவங்க தேடி தேடி எடுத்தாங்களானு நாங்களும் கொஞ்சம் தேடி (எங்க டீம் மக்களுக்காக தான்) எடுத்துக்கிட்டு போனோம்.


மேல வந்ததும் எனக்கும் உமாவுக்கும் மட்டும் ரெண்டு எடுத்து வைச்சிக்கிட்டு மீதிய மத்த மக்களுக்கு குடுத்தோம். யாருக்குமே அது என்னனு தெரியாததால சையனைட் எதுவும் எங்களுக்கு குடுக்கலை இல்லனு ஒரு பயத்தோடவே டேஸ்ட் பண்ணாங்க. உடனே ஒரு நண்பர் "இன்னிக்கு பிரதோஷம் விரதம்ங்கறதால அவங்க சாப்பிட மாட்டாங்க. அப்படி இருந்தும் நாம சாப்பிடாட்டியும் மத்தவங்களாவது சாப்பிடட்டுமேனு நல்லெண்ணத்துல கொண்டு வந்து குடுத்தா இப்படியா சந்தேகப்படறது"னு எங்களுக்கு சப்போர்ட் பண்ணாரு. நான் ரொம்ப அப்பாவியா.. அப்படி எல்லாம் தப்பா நினைச்சிக்காதீங்க. நாங்க எங்களுக்கு தனியா ரெண்டு பழம் எடுத்து வைச்சிக்கிட்டோம். 6 மணிக்கு விரதம் முடிஞ்சதும் சாப்பிட்டுப்போம்னு சொல்ல, உடனே அவர்.. "ஜி3.. நீங்க லார்ட் சிவாவ இப்படி எல்லாம் ஏமாத்தப்புடாது ஜி3" னு டயலாக் விட்டுட்டிருந்தாரு.. ஹலோ உங்களுக்கு வேணும்னா நேரா கேளுங்க குடுக்கறோம்.. அதை விட்டுட்டு ஏன் இப்படி எல்லாம் டயலாக்னு அவரையே திருப்பி கலாய்க்க ஆரம்பிச்சிட்டோம் :-)) நமக்கு சப்போர்ட் பண்ணாருங்கற ஓரே ஒரு காரணத்துக்காக அவரை கலாய்க்காம விட முடியுமா என்ன ;-))

கலாட்டா டைம் - II

போன வியாழக்கிழமை தோழியோட கல்யாணம் திருவண்ணாமலைல. சரி.. ஒரு 8 பேர் ஆபீஸ்ல இருந்து போற மாதிரி இருந்ததால கார்ல போகலாம்னு முடிவு பண்ணி குவாலிஸ் புக் பண்ணியிருந்தோம். வழக்கம் போல ஆளாளுக்கு சொதப்ப 5 பேர் மட்டுமே போனோம். குவாலிஸ்க்கு பதில் அந்த ட்ராவல்ஸ் காரன் ட்ரவேரா அனுப்பியிருந்தான். சரி.. வா எல்லாரும் ஜாலியா படுத்துட்டே போகலாம் அவ்ளோ இடம் இருக்குனு கிளம்பியாச்சு. வேளச்சேரி நல்லாஸ்ல டின்னர் சாப்டுட்டு கதை அடிச்சிட்டே ஆரம்பிச்சோம் பயணத்தை.. எல்லாரும் அவங்க ஆபீஸ்ல சேந்த முதல் நாள் எப்படி இருந்துது மத்தவங்கள பத்தி என்ன நினைச்சாங்கனு கலாட்டாவ டாபிக் ஓடிட்டிருந்துது. அப்படியே விட்டிருக்கலாம்.. நான் சும்மா இல்லாம தாம்பரம் கிட்ட வந்தப்போ ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி விழுந்து வாரி நிறைய சில்லறை அள்ளின இடத்தை காமிச்சு, இந்த ஸ்பீட் ப்ரேக்கர் தான் நான் விழ காரணமானதுன்னு சொல்ல நண்பர் ஒருத்தர் ரொம்ப சீரியஸா "ஹே அங்க பாறேன்"னு சொல்ல.. என்ன விஷயம்னு கேட்டா அங்க ஒரு ஸ்பீட் ப்ரேக்கர் இருந்ததுக்கான அடையாளமே இல்லை பாருங்களேன்ங்கறாரு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

சரி சரி.. ஏதோ என் புண்ணியத்துல ஒரு 5 நிமிஷம் சந்தோஷமா இருந்தீங்களா.. போதும்.. அடுத்த டாபிக்கு வாங்கனு மத்த கதைகள் பேச ஆரம்பிச்சாச்சு. யார் யாரு ஆபீஸ்ல யாரை சைட் அடிக்கறானு ஆரம்பிச்சு அதை வைச்சு கலாய்க்க ஆரம்பிச்சோம். பேசிட்டிருந்ததுல நேரம் போனதே தெரியலை. கரெக்டா இராத்திரி 1 மணிக்கு எங்களுக்கு ரூம் புக் பண்ணியிருந்த ஹோட்டலுக்கு போய் சேந்தோம். தூங்க போறப்பவே பசங்க கிட்ட காலைல 7.30 - 9 தானே முகூர்த்தம்.. 4.30க்கு கால் பண்றோம். ஒழுங்கா எழுந்து கிளம்புங்க. சீக்கிரமா கோவிலுக்கு போயிட்டு அப்புறம் கல்யாணத்துக்கு போவோம்னு சொல்லிட்டு நாங்க எங்க ரூம்க்கு தூங்க போயிட்டோம். சொன்ன மாதிரி 4.30க்கு போன் பண்ணி எழுப்பிட்டு நாங்க கிளம்ப ஆரம்பிச்சாச்சு. 5.30க்கு ஹோட்டல் விட்டு கிளம்பறதா ப்ளான். சரினு 5.30 க்கு கால் பண்ணா.. 3 பேர்ல ஒருத்தர் மட்டும் தான் கிளம்பியிருக்காராம். இன்னொருத்தர் இப்போ தான் கிளம்பிட்டிருக்காரு, இன்னொரு நல்லவன் இப்போதான் எழுந்து உட்கார்ந்திருக்கானாம். அடப்பாவிங்களா நாங்களே தேவலை போலனு நினைச்சிக்கிட்டு ஒழுங்கா சீக்கிரம் கிளம்புங்கனு சொல்லி போன வைச்சாச்சு. சரி.. இவங்க வர்ற வரை வெட்டியா ஏன் உட்கார்ந்திருப்பானேன்னு நானும் என் தோழியும் அப்படி ஒரு வாக்கிங் போகலாம்னு வெளில வந்தோம்.

மெயின் ரோடு வரை ஒரு வாக்கிங் போயிட்டு அப்படியே பக்கத்துல இருந்த அக்னி லிங்கமும் பாத்துட்டு வர்றதுக்கும் இவங்க கிளம்பறதுக்கும் சரியா இருந்துது. சரினு கிளம்பி கோவிலுக்கு போனா அங்க செம கூட்டம்.. அண்ணாமலையாரும், உண்ணாமலையாரையும் பாக்கவே டைம் ஆயிடுச்சு. சரினு அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் அட்டெண்டன்ஸ் போட்டுட்டு வந்துட்டோம். திரும்ப ஹோட்டலுக்கு வந்து கிப்ட் எல்லாம் எடுத்துக்கிட்டு மண்டபத்துக்கு கிளம்பியாச்சு. கல்யாணம் எல்லாம் முடிஞ்சு மாப்பிள்ளையும் பொண்ணும் ப்ரீயாகற வரை கொஞ்சம் வெயிட் பண்ணிட்டு அப்புறம் மேடைக்கு போனோம் எங்க கிப்ட குடுக்க.

மொதல்ல எங்க கிப்டான மோதிரத்தை மாப்பிள்ளை கிட்ட குடுத்து பொண்ணுக்கு போட்டு விட சொன்னோம். கல்யாணப் பொண்ணும் ரொம்ப சந்தோஷமா கைய நீட்ட மாப்பிள்ளை பாட்டுக்கு அந்த மோதிரத்தை அவர் கைல போட ட்ரை பண்ணிட்டிருந்தாரு.. ஹலோ அந்த மோதிரம் உங்களுக்கு இல்லை. அவளுக்குனு சொன்னா கொஞ்சம் பெருசா இருந்தா நானே போட்டுட்டிருந்தேப்பேனேனு ஃபீல் பண்ணிட்டு அவளுக்கு போட்டு விட்டாரு. இப்போ தான் முக்கியமான பாயிண்ட்னு அவங்க ரெண்டு பேருக்கும் வாங்கியிருந்த கார்டை அவங்களுக்கு குடுத்து இப்பவே திறந்து பாருங்க. உங்க ரியாக்ஷனை காண ரொம்ப ஆவலாய் இருக்கோம்னு சொல்ல... மாப்பிள்ளை கார்ட் டைட்டில பாத்துட்டு அது என்னமோ ரொம்ப கரெக்டு தான்னு சொல்ல, பொண்ணு கார்ட பாத்துட்டு அடிப்பாவிங்களா.. இருங்க அப்புறம் பொறுமையா முழுசா படிச்சிட்டு ஃபோன் போட்டு ரியாக்ஷன் குடுக்கறேன்னு சொல்ல.. நாங்க அப்படியே அப்பீட் ஆயிட்டோம்..

அப்ப்டி என்ன கார்ட் குடுத்தோம்னு தானே யோசிக்கறீங்க இது தாங்க அந்த கார்டு...


With sympathy - பொண்ணுக்கு
With deepest sympathy - மாப்பிள்ளைக்கு

:)))))))))))))))))))))))))))))))))

கலாட்டா டைம் - I

எங்க ஆபீஸ்ல ஆல் டைம் கலாட்டா டைம் தான்னாலும் லஞ்ச் டைம் கலாட்டா கொஞ்சம் பலமா இருக்கும். எங்க கும்பல்ல 2 பேர் வேற ப்ளோர்ல இருக்காங்க.. மதியம் சாப்பிடற நேரம் அவங்களும் எங்களோட சேர கச்சேரி கலை கட்டும் :) எப்பவும் நானும் என்னோட இன்னொரு ப்ரெண்ட் ஒருத்தியும் தான் கார்னர் சீட்ல எதிர் எதிர்ல உட்காருவோம். இது எழுதப்படாத சட்டம். அப்படியே தப்பித்தவறி வேற யாராவது உட்கார்ந்தாலும் அவங்கள எழுப்பிட்டு நாங்க உட்காருவோம். அம்புட்டு நல்லவங்க :)

அன்னிக்கும் அப்படித்தான் எல்லாரும் உட்கார்ந்து கதை அடிச்சிட்டே சாப்டுட்டு இருக்கும்போது அங்க FM ரேடியோல வாரணம் ஆயிரம் படத்துல இருந்து நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாட்டு ஓடிட்டிருந்துது.. நமக்கு புடிச்ச பாட்டுங்கறதால மக்கள் பேசறத கவனிக்காம நான் பாட்டுக்கு பாட்ட கேட்டுட்டிருந்தேன். அதுல கரெக்டா "இவள் பின்னால் நெஞ்சே போகாதே" ங்கற லைன் வரும்போது என்னையும் மறந்து நோ சொல்ல தலையாட்டற மாதிரி ஆட்டிட்டே எதிர்க்க பாத்தா என் ப்ரெண்டும் என்னை பாத்து அதே மாதிரி தலையாட்டிட்டு சிரிச்சா.. நான் என்ன நெனச்சு தலையாட்டினேன்றது அவளுக்கும் அவ என்ன பாத்து எதுக்கு தலையாட்டினாங்கறது எனக்கும் தெரியும்ங்கறதால டக்குனு ரெண்டு பேரும் சிரிச்சிட்டோம் :) மீதி இருந்தவங்க எல்லாம் நாங்க எதுக்கு சிரிக்கறோம்னு தெரியாம எங்கள பாக்க, இது தான் சாக்குனு எங்க கூட இருந்த இன்னொரு ப்ரெண்ட்.. இவங்க எப்பவுமே இப்படித்தான். அவங்களுக்குள்ளே பேசிக்கறாங்க. அவங்களுக்குள்ள சிரிச்சிக்கறாங்க.. ஆனா நம்மள எதாவது டேமேஜ் பண்ணனும்னா மட்டும் பப்ளிக்கா மானத்த வாங்கறாங்கன்னு கம்ப்ளெயிண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டார்.

நாங்க எப்ப பேசினோம்னு திருப்பி கேட்டா அதான் கண்ணாலயே பேசிக்கறீங்களே அப்படின்னுட்டு.. பசங்க பக்கம் திரும்பி இனிமே நாமளும் கண்ணால தான் பேசிக்கனும்.. இவங்களுக்கு சொல்லகூடாதுன்னு சொல்ல.. இன்னொருத்தர் அப்பிராணியா எதைப்பத்தின்னு கேக்க.. எல்லாரும் செமையா சிரிச்சிட்டோம்.. பாருங்க.. நீங்க வாயால பேசினாலே அவங்களுக்கு புரிய மாட்டேங்குது இதுல கண்ணால வேற பேசப்போறீங்களாக்கும்னு கலாய்க்க.. அவர் உடனே.. பரவாயில்லங்க.. நாங்க தனியா போயாவது பேசிக்கறோம் ஆனா உங்க முன்னாடி மட்டும் பேச மாட்டோம்னு சொன்னாரு. சரி அதையும் பாக்கலாம்னு சொல்லிட்டு கிளம்பிட்டோம்..

இது நடந்து கொஞ்ச நேரம் கழிச்சு.. கண்ணாலயே பேசிக்கறோம்னு சொன்னவர்கிட்ட இன்னொருத்தன் வந்து "நீங்க அன்னிக்கு பாத்தீங்க இல்ல.. அந்த பொண்ணு பேரு.... " அப்படின்னு அந்த பொன்னு பேர சொல்ல.. அவர் உடனே "டேய் இப்போ தான டா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எதுவா இருந்தாலும் இவங்க முன்னாடி பேசாதன்னு சொன்னேன்" னு ஓவரா பீல் பண்ண, நாங்க கூலா "விடுங்க விடுங்க.. உங்கள விட்டா நாங்களும் வேற யாரத்தான் கலாய்க்கறது" ன்னு அப்பாவியா கேட்டோம் :)

டிஸ்கி : இன்னிக்கு வரை அவங்க கண்ணால பேச ஆரம்பிக்கலை ;)

கலாட்டாக்கள் தொடரும்...