அயன் பாடல்கள்..


ஓஹாயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே..
ஓவாசமே சுவாசமே வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே..

நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என்கையில் வளைந்து என்மீது மிதந்து
சாலையில் நடக்கின்ற நிலவு நீ

நீயும் நீயும் அடி நீதானா
நீல நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நாந்தானா (2)

(ஓஹாயியே..)

நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என்மீது மிதந்து
மாலையில் நடக்கின்ற நினைவு நீ

ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்
மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியளே

ஒரு கையில் ஒரு கையில் நகங்களும்
மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே

இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கே
இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தேன்

ஓஹோஹோ.....
(ஓஹாயியே..)
(நெஞ்சுக்குள்...)

இமைக்காத இமைக்காத கண்களும்
எனக்காக எனக்காக வேண்டி நீ
உனைக்கண்டு உனைக்கண்டு ரசித்தேனே..

முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
இதழ் முத்தம் இதழ் முத்தம் என்றதும்
அதையெண்ணி அதையெண்ணி இனித்தேனே

சுடும் பூங்காற்றே.. சுட்டு போகாதே
இனி வானிங்கே மழைச்சாரல் பூவாய்

(ஓஹாயியே..)
(நெஞ்சுக்குள்..)

நீயும் நீயும் அடி நீதானா
நீல நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நாந்தானா (2)

நீயும் நீயும் அடி நீதானா

*****************************************

விழி மூடி யோசித்தால்..அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழைக்காலம் என் வாழ்வில் வருமா
மழைக்கிளியே மழைக்கிளியே உன் கண்ணை கண்டேனே
விழிவழியே விழிவழியே நான் என்னை கண்டேனே.. செந்தேனே..

(விழி மூடி... )

கடலாய் பேசும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே

(விழி மூடி... )

ஆசை என்னும் தூண்டில் முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம்
இது மாய வலையல்லவா புது மோக வலையல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்

(விழி மூடி...)
21 Responses
  1. G3 Says:

    Thanks to Dinesh for recommending Ayan songs :)

    Made me cheer up today :))))))


  2. நாந்தான் நிசமாவே மீ த பர்ஸ்ட்டூ :))


  3. //நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
    கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
    என்கையில் வளைந்து என்மீது மிதந்து
    மாலையில் நடக்கின்ற நினைவு நீ//


    ரைமிங்கா நல்லா இருக்கே...!


  4. gayathri Says:

    முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
    இதழ் முத்தம் இதழ் முத்தம் என்றதும்
    அதையெண்ணி அதையெண்ணி இனித்தேனே

    intha lines nallairuku


  5. //கடலாய் பேசும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்//


    என்னமா ஃபீல் பண்ணியிருக்காங்க :)


  6. Lancelot Says:

    akka yaaru unga IRON?


  7. gils Says:

    lancy gud kostin :)) g3yoda iron yaru...itha pathi oru survey post podu


  8. Lancelot Says:

    @ Gils anna

    super ideavaa irukaae puthu postukku matter kedachututhey...

    G3 Akka manasukkul (rendum eppadi kothu viduthu paaru)


  9. நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
    கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
    என் கையில் வளைந்து என்மீது மிதந்து
    மாலையில் நடக்கின்ற நினைவு நீ
    //

    எனக்கு இது தான் ரொம்ப பிடிச்ச லைன்ஸ்:)


  10. gayathri Says:

    விழி மூடி யோசித்தால்..அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே

    intha song naane en blogla podanumnu nenachen athukulla negale pottutenga

    super song da enkau rompa rompapudikum


  11. gayathri Says:

    கடலாய் பேசும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்
    மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
    தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
    தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடும

    intha linesku mattume naan intha song oru naliku 10 timesku mela keppen da super song


  12. //ஓஹாயியே ஆயியே ஆயியே ஆயி //

    இசை யாரு ஹாரிஸ் சா?

    ;)))


  13. //
    intha linesku mattume naan intha song oru naliku 10 timesku mela keppen da super song
    //
    kanna pinna'nu rasikkireenga pola :))


  14. @G3,

    ipdeyellam "me the first " neengale poda koodathu.. aama....

    pathivuleye p/s'a pottirukkalam'la.. ennaathithu chinna pulla thanama irukku :)))


  15. gayathri Says:

    ஆளவந்தான் said...
    //
    intha linesku mattume naan intha song oru naliku 10 timesku mela keppen da super song
    //
    kanna pinna'nu rasikkireenga pola :))

    mmmmmmmmmmmmmmmmmmmm


  16. Divyapriya Says:

    ரொம்ப நாளா i was missing from action...so, இப்போதைக்கு ஒரு attendance மட்டும் போட்டுக்கோங்க :))


  17. நேத்தைக்கு தான் இறக்கினோன்...கேட்டுக்கிட்டு இருக்கேன்...ஆனால் கேட்டதையே கேட்குற மாதிரி ஒரு பீல் ;)


  18. //G3 said...
    Thanks to Dinesh for recommending Ayan songs :)

    Made me cheer up today :))))))
    //
    நான் இன்னும் பாடல்களை கேட்கவில்லை.. கேட்டுட்டு..கருத்து சொல்றேன்...


  19. MyFriend Says:

    இதைத்தானே அன்னைக்கு தேன்கிண்ணத்துல போட சொன்னேன்!!!! :-(


  20. MyFriend Says:

    //G3 said...

    Thanks to Dinesh for recommending Ayan songs :)

    Made me cheer up today :))))))//

    இது டூ மச்சு.. முத கமேண்டு ஆயிலுக்குதான்!


  21. gayathri Says:

    சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்.



    இது மாய வலையல்லவா புது மோக வலையல்லவா

    naduvula oru line missing ma