அன்பே வா...

விஜய் டீவில அப்பப்போ ஏதாவது ஒரு காதல் கதைய சூப்பர் பில்டப்போட ஆரம்பிக்கறது வழக்கம். அப்படி இப்போ லேட்டஸ்ட்டா ஆரம்பிச்சிருக்கறது தான் அன்பே வா தொடர். தொடர் சமீபத்துலதான் ஆரம்பிச்சிருக்குங்கறதால தொடரைப்பத்தி இப்போதைக்கு ஏதும் கருத்து சொல்றமாதிரி இல்லை. ஆனா அதுல சந்தியானு ஒரு கேரக்டர். ஒன் சைட் லவ்ல அம்மணி அப்பப்போ கவிதையா அள்ளித்தெளிக்கறாங்க. அதுல இருந்து சில கவிதைகள் இங்கே பதிவாக..

சூரியன் கூட
ஓவியம் வரைகிறது.. !
உன் நிழல்... !!

என்
ஆயுள் உள்ளவரை
உன் காதல் வேண்டும்... !
இல்லையேல்...
உன் காதல் உள்ளவரை
எனக்கு
ஆயுள் போதும்.. !



எனக்குள் இருப்பது யாரென
எங்கெங்கோ தேடினாய்
உன் வீட்டின் பூட்டிய அறைக்குள்
நீ தொலைந்து போயிருப்பது
தெரியாமல்...

உலகெல்லாம் ஓடி
உன் காதல் நீ தேட...
பத்திரமாய் உன் காதல்
ஒளிந்திருக்கும் எனக்குள்!!!
நீதான் நான் என
நான் கண்டுகொண்டேன்...
நாந்தான் நீயென
நீ அறிவதெப்போது... ?


உலகம் என்னை
உதறிய போதெல்லாம்
புன்னகைத்து நின்றேன்...
பற்றிக்கொள்ள உன் கரம்
இருக்கிற தைரியம் எனக்கு...

நீ என்னை
வேண்டாமென்றாலும்
என்னாலும் உதற முடியும்...
உன்னையல்ல..
என் உயிரை!!!


வார்த்தை இல்லாமல்
வாய்ப்பு இல்லாமல்
உன் வட்ட விழி பார்க்க
இயலாமல்...
சொல்லாத காதலொன்று
சிக்கிக் கிடக்கிறது
என் நெஞ்சுக்குழிக்குள்

நீயே சொல்லிவிடேன்...
காதலை
முன்மொழியத்தான்
முடியவில்லை..
வழிமொழிந்தாவது
வருகிறேன்!!!


வலிகள் கூட சுகமானதுதான்
நீ தருகிற போது...
பிரிவுகள் கூட சுகமானதுதான்
உன் நினைவுகள் உடனிருக்கும்போது...
அழுகை கூட சுகமானதுதான்
உனக்காய் நான் அழும்போது...
வார்த்தையாய் காதலைச் சொல்வதில்
உடன்பாடில்லை எனக்கு...
வாழ்க்கையாய் அதை
வாழ்ந்து காட்டுகிறேன்
ஒரு வாய்ப்பு கொடேன்... !


நான் சிரித்தேன்.. நீ சிரித்தாய்...
நான் அழுதேன்.. நீ அழுதாய்...
நான் காயப்பட்டேன்.. நீ கண்ணீர் சிந்தினாய்...
நான் காதலிக்கும்போது
ஏன் கண்மூடிக்கொள்கிறாய்?
உன் மௌனம் சம்மதமா...
இல்லை
மறுதலிப்பா?

கடல் சேர முடியாத நதிகள்
மீண்டும் மலை திரும்புவதில்லை
காய்ந்து போவதைத் தவிர
அவற்றிற்கு
வேறு வழியுமில்லை... !
63 Responses
  1. மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்


  2. //விஜய் டீவில அப்பப்போ ஏதாவது ஒரு காதல் கதைய சூப்பர் பில்டப்போட ஆரம்பிக்கறது வழக்கம்.///

    அப்புறம் அதையே பல தடவை போட்டு கொல்லுறதும் அவுங்க வழக்கம்தானே பாஸ் :)))


  3. //சூரியன் கூட
    ஓவியம் வரைகிறது.. !
    உன் நிழல்... !!///

    வாவ்!

    வாவ்!!

    கடல் கூட உன்னை
    கடத்திச்செல்கிறது
    நீச்சல்...!

    ஹய்யோ பாஸ் எனக்கும் கவுஜ எழுத வருதே......!!!!


  4. //என்
    ஆயுள் உள்ளவரை
    உன் காதல் வேண்டும்... !
    இல்லையேல்...
    உன் காதல் உள்ளவரை
    எனக்கு
    ஆயுள் போதும்.. !///


    மாத்தி மாத்தி படிச்சாலும்
    திரும்ப திரும்ப படிச்சாலும்
    ஒரே மீனிங்கால தெரியுது !!!


  5. KK Says:

    //சூரியன் கூட
    ஓவியம் வரைகிறது.. !
    உன் நிழல்... !!///

    Opening'e super!

    //கடல் சேர முடியாத நதிகள்
    மீண்டும் மலை திரும்புவதில்லை
    காய்ந்து போவதைத் தவிர
    அவற்றிற்கு
    வேறு வழியுமில்லை... !//

    Closing'um super!


  6. KK Says:

    //விஜய் டீவில அப்பப்போ ஏதாவது ஒரு காதல் கதைய சூப்பர் பில்டப்போட ஆரம்பிக்கறது வழக்கம்//

    Cinema than ippadina TV'uma??


  7. நிகழ்ச்சிய ரெகார்டிங் போட்டு பாப்பீங்களா ??? இல்ல
    நிகழ்ச்சிய உள்வாங்குற ஆளா ??? எது எப்படியோ பதிவு நல்லா இருக்கு.


  8. k4karthik Says:

    //தொடரைப்பத்தி இப்போதைக்கு ஏதும் கருத்து சொல்றமாதிரி இல்லை.//

    thodar mudiyure varaikkum ippadi dhan irukkum..


  9. k4karthik Says:

    kavidhai ellam sooperuu..

    ungalala dhan indhe serial TRP rate ehurudhunu sollikuraanga.. nesama?



  10. Anonymous Says:

    ////சூரியன் கூட
    ஓவியம் வரைகிறது.. !
    உன் நிழல்... !!///

    இன்னொரு சொல்லப்படாத காதல் கதையா??


  11. உன் காதல் உள்ளவரை
    எனக்கு
    ஆயுள் போதும்.. !]]


    இது அருமை.

    ------------------------


    ஏங்க டீ.வி சீரியல்களெல்லாம் பார்க்குறீங்க பாஸ்


  12. ஒரு பார்வை பார்க்கிறாய்
    புதிதாய் நான் பூக்கிறேன்
    இதயம் இடம் மாறுதே

    இது காதலா
    ....................................
    நிலவோடு தேய்கிறேன்
    நினைவாலே கரைகிறேன்
    சுகமான வேதனை இது காதலா........................
    எங்கேயோ எங்கோயோ விண்மின்கள் சிதறுதே

    கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே ..
    காதல் வந்து போவதேன்
    என்ன இது என்ன இது ..

    வானவில்லில் வானம் ரெண்டு கூடுதே
    தீண்டினால் வானிலே மேகமாய் அலைகிறேன்
    நீங்கினால் தூரத்தில் புள்ளியாய் தொலைகிறேன்

    நில்லென்றால் நில்லாமல்
    ஏனென்று கேளாமல்
    ஏதேதோ செய்கிறாய் ஏனடி!

    அன்பே வா அன்பே வா அன்பே வா ஆ .............

    என்ன சொல்லி என்ன சொல்லி காதல் அதை உன்னிடத்தில் காட்டுவேன் சத்தமின்றி சத்தமின்றி மௌனமாய் நெஞ்சுக்குள்ளே பூட்டுவேன்
    கவிதைகள் எழுதிட வார்த்தைகள் தேடினேன்
    உன் பெயர் எழுதினால் கவிதையாய் பாடினேன்

    என் உள்ளே என் உள்ளே
    உன் கண்ணின் மின்சாரம்
    ஏதேதோ செய்யுதே
    ஏனடி
    அன்பே வா
    அன்பே வா
    அன்பே வா
    வா


  13. //ஒன் சைட் லவ்ல அம்மணி அப்பப்போ கவிதையா அள்ளித்தெளிக்கறாங்க. அதுல இருந்து சில கவிதைகள் இங்கே பதிவாக.//

    ஓ இதெல்லாம் கவிதையா... கன்பார்ம் பண்ணினதுக்கு நன்னி... :)


  14. R-ambam Says:

    naan kavithai eluthara alavukku illainaalum etho sumaara irukku !


  15. அடப்பாவிகளா!!..இந்த சினிமாகாரங்க இம்சை தான் தாங்க முடியலைன்னா டிவியுமா!!?

    ம்ஹூம்...நான் உடனே ஊருக்கு வந்தா தான் சரியாகும் போல!! ;)


  16. இந்த பையனை எங்கேயே பார்த்த மாதிரி இருக்கே.

    நல்லா தான் இருக்கான் பையன். பொண்ணும் தான் :)

    ஓஓஓஓ....கவிதைன்னா இப்படி தான் இருக்குமா?


  17. Sundari Says:

    //விஜய் டீவில அப்பப்போ ஏதாவது ஒரு காதல் கதைய சூப்பர் பில்டப்போட ஆரம்பிக்கறது வழக்கம்//

    அப்பறம் அதை பாதியில நிறுத்தறதும் வழக்கம்

    //வார்த்தையாய் காதலைச் சொல்வதில்
    உடன்பாடில்லை எனக்கு...
    வாழ்க்கையாய் அதை
    வாழ்ந்து காட்டுகிறேன்
    ஒரு வாய்ப்பு கொடேன்... !//

    Superb..


  18. G3 Says:

    @ஆயில்யன்,

    இந்த வாட்டியும் இளநீர் உங்களுக்குதான் :))))

    //அப்புறம் அதையே பல தடவை போட்டு கொல்லுறதும் அவுங்க வழக்கம்தானே பாஸ் :)))//

    அதை முழுசா முடிக்காம அந்தரத்துல தொங்க விடறதும் அவங்க ஸ்பெஷாலிட்டி தான் :))))

    //ஹய்யோ பாஸ் எனக்கும் கவுஜ எழுத வருதே......!!!//

    கலக்கறீங்க பாஸ் :)))))

    //மாத்தி மாத்தி படிச்சாலும்
    திரும்ப திரும்ப படிச்சாலும்
    ஒரே மீனிங்கால தெரியுது !!!//

    ஹிஹி.. ரெண்டும் directly proportional to each other :)))) இப்போ புரியுதா பாஸ் ;-))))


  19. G3 Says:

    @கேகே,

    //Opening'e super!//
    //Closing'um super!//

    ஹிஹி.. அதான் பதிவா போட்டுட்டேன் :))))

    //Cinema than ippadina TV'uma??//

    அட நீங்க வேற...விஜய் டீவி ப்ரோக்ராம்கெல்லாம் அவன் குடுக்கற பில்ட் அப்ப பாருங்க. சினிமாவ விட கூட ஜாஸ்தியா இருக்கும் சில சமயம் :)))


  20. G3 Says:

    @இரவீ,

    ஹிஹி.. அம்புட்டு உள்வாங்குற சக்தி இருந்தா இப்படியா உட்கார்ந்து பொட்டி தட்டிட்டிருப்பேன் ??? எல்லா எபிசோடும் தான் உடனுக்குடனே ஆன்லைன்ல வந்துடுதே.. அதுல தேடி எடுத்தேன் :))))


  21. G3 Says:

    @கே4கே,

    //thodar mudiyure varaikkum ippadi dhan irukkum..//

    :))))))))))

    //ungalala dhan indhe serial TRP rate ehurudhunu sollikuraanga.. nesama?//

    அப்படியா?? !!!

    //rounda 10//

    நன்னி ஹை :)))))


  22. G3 Says:

    @புனிதா,

    தெரியலை.. பொறுத்திருந்து பாப்போம் :)))

    உங்க ப்ரொபைல் போட்டோ அழகு :)))))


  23. G3 Says:

    @நட்புடன் ஜமால்,

    :)))))))

    //டீ.வி சீரியல்களெல்லாம் பார்க்குறீங்க பாஸ்//

    ஹிஹி.. நடிகர்கள் கொஞ்சம் பாக்கற மாதிரி இருந்தா டீவி சீரியல் கூட பாக்கலாம்.. தப்பே இல்ல பாஸ் :)))))


  24. G3 Says:

    @இராயர் அமிர்தலிங்கம்,

    டைட்டில் பாடலோட lyrics பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க :))))


  25. G3 Says:

    @இராம்,

    //ஓ இதெல்லாம் கவிதையா... கன்பார்ம் பண்ணினதுக்கு நன்னி... :)//

    உங்களுக்கிருக்கற நக்கல் இருக்கே..... OSI :-P


  26. G3 Says:

    @R-ambam,

    ச்சே ச்சே.. என்ன இருந்தாலும் உங்க லெவலுக்கெல்லாம் போட்டி போட முடியுமா ;-))))


  27. G3 Says:

    @கோபி,

    சீக்கிரம் கிளம்பி வாங்க :))))


  28. G3 Says:

    @நான் ஆதவன்,

    //ஓஓஓஓ....கவிதைன்னா இப்படி தான் இருக்குமா?//

    அப்படித்தானுங்க ஊருக்குள்ள சொல்லிக்கறாங்க :))))))


  29. G3 Says:

    @சுந்தரி,

    //அப்பறம் அதை பாதியில நிறுத்தறதும் வழக்கம்//

    200 % ஒத்துக்கறேன் :)))


  30. kanagu Says:

    /*விஜய் டீவில அப்பப்போ ஏதாவது ஒரு காதல் கதைய சூப்பர் பில்டப்போட ஆரம்பிக்கறது வழக்கம். */

    நல்ல காலம்.. நான் அத பார்த்து ஏமாந்துடுறது இல்ல :)))))

    கவிதை எல்லாம் சூப்பர் :)


  31. Anonymous Says:

    kavithai ellam rommba nalla irukey!! Vijay tvla aarambikra surusurupa aarambipaanga,aprom veeriyam koranjirum.....ithayaavathu nallapadiya continue pannatum!


  32. G3 Says:

    @கனகு,

    //நல்ல காலம்.. நான் அத பார்த்து ஏமாந்துடுறது இல்ல :)))))//

    நீங்க புத்திசாலி தான்னு நான் ஒத்துக்கறேன் :)))


  33. G3 Says:

    @சவிதா,

    ம்ம்.. அதே அதே.. பாப்போம் எப்படி போகுது இந்த தொடர்னு :))))


  34. oh my fav serial!!! hopefully they mess this up(like how vijay tv always does)


  35. G3 Says:

    @தமிழ்மாங்கனி,

    நடுவுல don't ங்கற வார்த்தைய போட மறந்துட்டீங்களோ !! :))


  36. Carpe Diem Says:

    2 dayys munadi thaan intha serial a online la chumma parthen . Ithu nalla irunthuchu.
    //உலகெல்லாம் ஓடி
    உன் காதல் நீ தேட...
    பத்திரமாய் உன் காதல்
    ஒளிந்திருக்கும் எனக்குள்!!!
    நீதான் நான் என
    நான் கண்டுகொண்டேன்...
    நாந்தான் நீயென
    நீ அறிவதெப்போது... ?


  37. Anonymous Says:

    அருமையான கவிதைகள்.

    எங்களுக்காக கஸ்டப்பட்டு சீரியல் பார்த்து, கவனிச்சு நல்ல நல்ல கவிதையா எடுத்துக் கொடுத்திருக்கீங்க. நன்றிங்க.


  38. Marutham Says:

    I am reminded of kadhalikka neramilai song post u had put once... ;)

    Indha serial very impractical is what i felt...konjam over'a iruku! ;)


  39. sri Says:

    ////சூரியன் கூட
    ஓவியம் வரைகிறது.. !
    உன் நிழல்... !!///
    //

    avvvvvuu enna ma ezudharaangayya..
    Naan thodar ellam pakkaradhillay, only reality shows LOL

    Kavidhai ellam nalla erukku, analum edhu OB post dhaan :)


  40. sri Says:

    //எங்களுக்காக கஸ்டப்பட்டு சீரியல் பார்த்து, கவனிச்சு நல்ல நல்ல கவிதையா எடுத்துக் கொடுத்திருக்கீங்க. நன்றிங்க//

    edhu paaratra maati therilitye, velai ellama erukeengannu solra maari erukku :)


  41. gils Says:

    hmm.en fav..kaathalika neramillai title song thaan..antha serial start panna pudusula..antah title songukaagavay paathiturnthen..aprum as usual kadis of vijay tv aaidichi :)


  42. sri Says:

    serial ellam pakkara alavukku ungalukku romba puromaingooo


  43. sri Says:

    Endha TV serial ellam arambikkum podhu nalla dhaan arukku, apparam dhaan dubakor kadai aayidudhu


  44. G3 Says:

    @Carpie Diem,

    எனக்கு எல்லாமே பிடிச்சிருந்துது :)))


  45. G3 Says:

    @மஹா,

    ஹிஹி.. நீங்க கஸ்டப்பட்டு கமெண்ட்டு போடறீங்க.. உங்களுக்காக இதை கூட செய்ய மாட்டேனா ;-))))


  46. G3 Says:

    @மருதம்,

    ம்ம்.. அந்த பாட்டு எப்பவுமே சூப்பரில்லே :))))

    நான் முழு சீரியல் எல்லாம் பாக்குறதில்லே. இந்த கேரகடர் வந்தா மட்டும் கவிதைக்காக பாக்கறது :))) மத்த கேரக்டர்ஸ் வந்தா சேனல் சேஞ்ச் தான் :))))


  47. G3 Says:

    @ஸ்ரீவத்ஸ்,

    //analum edhu OB post dhaan :)//

    ஹிஹி.. எனக்கு ஓபி போஸ்ட் தானே சூப்பரா வருது :)))

    //edhu paaratra maati therilitye, velai ellama erukeengannu solra maari erukku :)//

    நோ கமெண்ட்ஸ் :-P

    //serial ellam pakkara alavukku ungalukku romba puromaingooo//

    ஜமால்க்கு சொன்ன பதில ஒரு தபா படிச்சிக்கோங்க :)))))

    //Endha TV serial ellam arambikkum podhu nalla dhaan arukku, apparam dhaan dubakor kadai aayidudhu//

    அதுவும் ரைட்டு தான் :))))


  48. G3 Says:

    @கில்ஸ்,

    //en fav..kaathalika neramillai title song thaan..//

    என்னோடதும் :))))

    //aprum as usual kadis of vijay tv aaidichi :)//

    அது ரொம்ப கொடுமையான சீரியல் ஆயிடுச்சு :((((((



  49. Unknown Says:

    எப்பா ஒரு வேலை மிச்சம்... எப்படிடா விட்டத பிடிக்கறதுன்னு பார்த்தேன்... ரொம்ப Danks :) Nice collections :)


  50. கவிதை எல்லாம் சூப்பர். டி.வியில் தெளித்த முத்துக்களை எங்களுக்கு அளித்த உங்கள் கவிதை சேவை வாழ்க!!!


  51. அந்த பொண்ணே “கவிதை” மாதிரி தான் இருக்கு :))))


  52. //
    ஆயில்யன் said...

    மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்
    //

    கொஞ்ச நாளா நான் வரல.. ஆட்டம் ஜாஸ்தியா இருக்கு போல :)))


  53. ipdi kooda G3 panlama!!! enaku mattum yen idhellam thona matengudhu? oru velai inum konjam periya paapava aganumo? ;)


  54. Anonymous Says:

    //"ஹிஹி.. நீங்க கஸ்டப்பட்டு கமெண்ட்டு போடறீங்க.. உங்களுக்காக இதை கூட செய்ய மாட்டேனா ;-))))"//

    கண்டுபுடிச்சிட்டீங்களே


  55. KK Says:

    helo! intha couple oda photo pudikala... atleast Nayan, shriya oda photo'vathu podunga vanthu paakurom...


  56. G3 Says:

    @அன்னம்,

    50-க்கு நன்னி ஹை :)))

    ~~~~~~~~~~~~~~

    @வனிதா,

    ஹிஹி :))))))

    ~~~~~~~~~~~~~~

    @அமுதா,

    நன்னி நன்னி :)))))


  57. G3 Says:

    @ஆளவந்தான்,

    வந்ததும் உங்க வேலைய ஆரம்பிச்சாச்சா !!!

    ~~~~~~~~~~~~~~

    @பொற்கொடி,

    ஹிஹி.. நீங்க எப்பவும் கொடி குட்டியாவே இருங்க.. அது தான் நல்லது.. இல்லாட்டி எனக்கு போட்டியாயிடப்ப்போகுது :-P


  58. G3 Says:

    @மஹா,

    :))))))))))))))))))))

    ~~~~~~~~~~~~~~

    @கேகே,

    உங்களுக்காக அடுத்த பதிவுல நயந்தாரா இருக்கற வீடியோவே போட்டிருக்கேன்.. ஓகேவா ;-)))


  59. Anonymous Says:

    //நான் முழு சீரியல் எல்லாம் பாக்குறதில்லே. இந்த கேரகடர் வந்தா மட்டும் கவிதைக்காக பாக்கறது :))) மத்த கேரக்டர்ஸ் வந்தா சேனல் சேஞ்ச் தான் :))))//


    எனக்கு இந்த கேரக்டர் மட்டும் பிடிச்சிருக்கு...அப்படியே இந்த கேரக்டருக்கு பிண்ணனி குரல் யாருன்னு பார்த்துச் சொல்லுங்களேன்...காதலிக்க நேரமில்லை திவ்யா என்ற கேரக்டருக்கும் இதே பிண்ணனி குரல்தான் :-)


  60. ஆகா...கவிதை கொப்பளிக்குதே!! மீ த அப்பீட்டு!!

    எப்படி பாஸ் இவ்ளோவும் ஞாபகம் வச்சிருக்கீங்க...உங்கம்மா என்ன கொடுத்தாங்கன்னு கேட்டுச் சொல்லுங்க..பப்புவுக்கு ட்ரை பண்ணலாம்!! :-)


  61. MyFriend Says:

    இதுவும் கொஞ்ச நாள்ல மொக்கை ட்ராமாவா ஆகப்போகுது.. அதான் இந்த தடவ நாங்கெல்லாம் ரொம்ப வெவரமாவே பார்க்கல. ;-)