நினைத்தாலே இனிக்கும்...


இந்த பிரவாகம் வலைப்பூ துவங்கி மூன்றாண்டுகள் முடிந்து சந்தோஷத்துடனும் உங்க எல்லாரோட ஆதரவுடனும் நான்காம் ஆண்டில் மகிழ்ச்சிகரமாய் நுழைகிறது. இந்த வலைப்பதிவின் உதவியால் என் வாழ்வில் பிரவாகமாக பெருகியது நண்பர்கள் வட்டம்னு சொன்னா அது மிகையாகாது. நான் அவர்கள் வலைப்பூவை படித்து பின்னூட்டமிட்டோ அவர்கள் என் வலைப்பூவை படித்து பின்னூட்டமிட்டோ அறிமுகமான நண்பர்கள் சிலர். அவர்களோட நண்பர்கள் அந்த நண்பர்களின் நண்பர்கள்னு அறிமுகமானவர்கள் பலர். அவங்களோட வலைப்பூவ நான் படிச்சது ரொம்ப கம்மி (பல சமயங்கள்ல சுத்தமா கிடையாதுங்கறது தான் உணமை :) ) ஆனாலும் ஜிடாக் அரட்டை , க்ரூப் மெயில் மொக்கைனு பழக்கமாகி அவர்களும் நல்ல நண்பர்களானது தனி கதை :)

இங்க சொல்லியே ஆகவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் வலைப்பதிவர் சந்திப்பு. முதன் முதல்ல நான் நேர்ல சந்திச்சது கன்யா-வ தான். அவங்க வீட்டுக்கு தான் போயிருந்தேன். அவங்கம்மா தங்கச்சி எல்லாரோடவும் நல்ல கலாட்டாவா நேரம் போக சாயந்திரம் எல்லாரும் ராயப்பேட்டால இருக்கற பொன்னுசாமில ஒரு கட்டு கட்டிட்டு வந்தோம். அப்படி ஆரம்பிச்சதுனாலயா என்னனு தெரியல நிறைய வலைப்பதிவர் சந்திப்பு உணவகங்கள்ல தான் நடந்துச்சு. நமக்கு ட்ரீட் குடுக்கறதுக்குன்னே நல்லவங்க நல்லா சிக்குவாய்ங்க எப்பவும் :)

அடுத்தது பதிவர்களின் கல்யாணங்களுக்கு ஊர் ஊரா சுத்தினது. 2008ல தான் ரொம்ப அதிகமா சுத்தினேன்னு நினைக்கறேன். எந்த ஊர்லயுமே எங்க போகனும் எப்படி போகனும்னெல்லாம் ரொம்ப விசாரிச்சது கிடையாது. ஒன்னு சென்னைல இருந்தே கூட வேற யாராவது வருவாங்க. இல்லாட்டி போற இடத்துல பேருந்து / ரயில் நிலையத்துல யாராவது வந்து கூட்டிட்டு போவாங்க. சில சமயம் இரண்டு கல்யாணங்கள் ஒரே நாள்லயோ அடுத்தடுத்த நாள்லயோ (முக்கியமா வேற வேற ஊர்ல) வந்தப்பவும் விடாம ரெண்டுத்துக்கும் போனதெல்லாம் இப்போ நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கு. 2008... நினைச்சு பாத்தா... நிஜமாவே ஒரு அழகிய நிலாக்காலம் தான் :) [அந்த வருஷம் நான் பதிவு போட்டது ரொம்பவே கம்மிதான். ஆனா ஊர் சுத்தினது ரொம்ப ரொம்ப ஜாஸ்தி ;) ]

ஒரு நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் இந்த வருஷம் எழுத வந்தப்போ பல புதிய நண்பர்களின் அறிமுகங்கள் கிடைச்சுது. கிடைச்சிட்டிருக்கு. புதுசு புதுசா நிறைய பேர் அறிமுகமாகிட்டிருந்தாலும் பழைய நண்பர்களும் இன்னும் தொடர்பில் இருப்பது ரொம்பவே சந்தோஷமான விஷயம். இது என்றென்றும் நீடிச்சா அதைவிட பெரிய விஷயம் எதுவுமே கிடையாது :)

கடைசியாக, என் வலைப்பூவை தொடர்ந்து படிக்கும் அனைவருக்கும் - "இது வரை நீங்கள் குடுத்த ஆதரவுக்கும், இனி குடுக்க போற ஆதரவுக்கும், இது வரை அடித்த கும்மிக்கும், இனி அடிக்க போகும் கும்மிக்கும் எல்லாத்துக்கும் சேத்து ஒரு பெரிய நன்னி சொல்லிக்கறேன்" :)



இருங்க அதுக்குள்ள எங்க கிளம்பறீங்க? இதுவரை இந்த வலைப்பூவில் தமிழ்ல பதிவு எழுதறேன்னு தமிழுக்கு சோதனை வைச்ச மாதிரி இன்று முதல் Little Joys of Life எனும் வலைப்பூவில் ஆங்கிலத்துக்கு சோதனை வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆக இனி நான் பீட்டர் இங்கிலிபீஷ்லயும் உங்கள் தாக்கப்போறேன்னு மிகத்தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன் :))) உங்களை அந்த இறைவன் காப்பாற்றுவாறாக :))
81 Responses
  1. வாழ்த்துக்கள் :))))


  2. //புதுசு புதுசா நிறைய பேர் அறிமுகமாகிட்டிருந்தாலும் பழைய நண்பர்களும் இன்னும் தொடர்பில் இருப்பது ரொம்பவே சந்தோஷமான விஷயம்.//

    அது!

    மிக்க மகிழ்ச்சியுடன் பெருகட்டும் நட்பு வட்டத்தின் எல்லைக்கோடுகள் :))


  3. //இன்று முதல் Little Joys of Life எனும் வலைப்பூவில் ஆங்கிலத்துக்கு சோதனை வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.//

    ரைட்டு இது மாதிரி சட்டுபுட்டுன்னு டெரரா முடிவு எடுக்கறதுதான் கரீக்ட்டு :)))))


  4. MyFriend Says:

    யோவ் ஆயில்..

    அந்த ஃபர்ஸ்ட்டூ கமேண்ட் எனக்காக ரெசர்வ் பண்ணி வச்சிருந்தாங்க.. எப்படி எனக்கு தெரியாம அதை திருடலாம் நீங்க???????


  5. MyFriend Says:

    //இந்த பிரவாகம் வலைப்பூ துவங்கி மூன்றாண்டுகள் முடிந்து சந்தோஷத்துடனும் உங்க எல்லாரோட ஆதரவுடனும் நான்காம் ஆண்டில் மகிழ்ச்சிகரமாய் நுழைகிறது.//

    உங்களுக்கு இவ்வ்வ்வ்வ்வ்வ்ளோ பெரிய குழந்தையா? சொல்லவே இல்ல!!! எல்.கே.ஜி போற அளவு பெரிய புள்ளையா?????


  6. MyFriend Says:

    //இந்த வலைப்பதிவின் உதவியால் என் வாழ்வில் பிரவாகமாக பெருகியது நண்பர்கள் வட்டம்னு சொன்னா அது மிகையாகாது. //

    பிராவகம் பிராவகம்ன்னு ஏதோ சொல்றீங்களே.. அப்படின்னா என்னா??


  7. MyFriend Says:

    //நான் அவர்கள் வலைப்பூவை படித்து பின்னூட்டமிட்டோ அவர்கள் என் வலைப்பூவை படித்து பின்னூட்டமிட்டோ அறிமுகமான நண்பர்கள் சிலர். அவர்களோட நண்பர்கள் அந்த நண்பர்களின் நண்பர்கள்னு அறிமுகமானவர்கள் பலர்.//

    தத்துவம் ஆப்ஃ தி டே


  8. Divyapriya Says:

    வாழ்த்துக்கள் G3 :)

    இவ்ளோ கல்யாணத்துக்கு போயிருக்கீங்களா?!?!?! பெரிய ஆள் தான் நீங்க :)


  9. MyFriend Says:

    //அவங்களோட வலைப்பூவ நான் படிச்சது ரொம்ப கம்மி (பல சமயங்கள்ல சுத்தமா கிடையாதுங்கறது தான் உணமை :) ) //

    ஆஹா.. உண்மை வெளியாச்சு!!!


  10. MyFriend Says:

    //ஆனாலும் ஜிடாக் அரட்டை , க்ரூப் மெயில் மொக்கைனு பழக்கமாகி அவர்களும் நல்ல நண்பர்களானது தனி கதை :)//

    தனி கதை இல்ல.. அது மெகா சீரியல்!!!


  11. MyFriend Says:

    //இங்க சொல்லியே ஆகவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் வலைப்பதிவர் சந்திப்பு. //

    ஆமா.. அங்கதானே வயிறார சாப்பாடு கிடைக்கும். :-)


  12. MyFriend Says:

    //முதன் முதல்ல நான் நேர்ல சந்திச்சது கன்யா-வ தான். //

    கன்யாகுமரிலயா??


  13. MyFriend Says:

    //அவங்க வீட்டுக்கு தான் போயிருந்தேன். //

    வீட்டுக்கேவா????


  14. MyFriend Says:

    //வங்கம்மா தங்கச்சி எல்லாரோடவும் நல்ல கலாட்டாவா நேரம் போக சாயந்திரம் எல்லாரும் ராயப்பேட்டால இருக்கற பொன்னுசாமில ஒரு கட்டு கட்டிட்டு வந்தோம். //

    அதானே எங்கடா சாப்பாடு பத்தி இன்னும் பேசலையேன்னு பார்த்தேன்


  15. MyFriend Says:

    //அப்படி ஆரம்பிச்சதுனாலயா என்னனு தெரியல நிறைய வலைப்பதிவர் சந்திப்பு உணவகங்கள்ல தான் நடந்துச்சு.//

    இல்லையே.. எல்லா சந்திப்புக்கும் நீங்கதான் இடம் ச்சூஸ் பண்ணதா சொன்னாங்களே???


  16. MyFriend Says:

    //நமக்கு ட்ரீட் குடுக்கறதுக்குன்னே நல்லவங்க நல்லா சிக்குவாய்ங்க எப்பவும் :)//

    நம்ம பில்லு அண்ணனை போல.. :-)


  17. MyFriend Says:

    /அடுத்தது பதிவர்களின் கல்யாணங்களுக்கு ஊர் ஊரா சுத்தினது. //

    ஊர் சுற்றும் வாலிபி!


  18. MyFriend Says:

    //2008ல தான் ரொம்ப அதிகமா சுத்தினேன்னு நினைக்கறேன். //

    அப்பதானே நிறைய திருமணம் நடந்துச்சு!


  19. MyFriend Says:

    //எந்த ஊர்லயுமே எங்க போகனும் எப்படி போகனும்னெல்லாம் ரொம்ப விசாரிச்சது கிடையாது. //

    உங்களுக்குதான் ட்ரைவர்கள் இருந்தாங்களே.. மேப் தேவைப்படாதே!


  20. MyFriend Says:

    //ஒன்னு சென்னைல இருந்தே கூட வேற யாராவது வருவாங்க.//

    ஒரு ட்ரெயினுல ஆயிரம் பேரு வருவாங்க.. அவங்க எல்லாம் கூட வர்றவங்க லிஸ்ட்டுதானே?


  21. MyFriend Says:

    //இல்லாட்டி போற இடத்துல பேருந்து / ரயில் நிலையத்துல யாராவது வந்து கூட்டிட்டு போவாங்க. //

    பிஸ்கட் காட்டி வாம்மான்னா நீங்க போயிடுவீங்கதானே? ;-)


  22. MyFriend Says:

    //சில சமயம் இரண்டு கல்யாணங்கள் ஒரே நாள்லயோ அடுத்தடுத்த நாள்லயோ (முக்கியமா வேற வேற ஊர்ல) வந்தப்பவும் விடாம ரெண்டுத்துக்கும் போனதெல்லாம் இப்போ நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கு.//

    சாப்பாட்டு விஷயத்துல நீங்க விடுறது இல்லைன்னு சொல்றீங்க.. புரியுது!


  23. MyFriend Says:

    //2008... நினைச்சு பாத்தா... நிஜமாவே ஒரு அழகிய நிலாக்காலம் தான் :)//

    நினைத்தாலே இனிக்கும்!


  24. MyFriend Says:

    அட.. அப்படி இப்படின்னு டைட்டல்க்கு வந்தாச்சு!


  25. MyFriend Says:

    //[அந்த வருஷம் நான் பதிவு போட்டது ரொம்பவே கம்மிதான். ஆனா ஊர் சுத்தினது ரொம்ப ரொம்ப ஜாஸ்தி ;) ]//

    ஆமா ஆமா


  26. MyFriend Says:

    அப்பத்தான் நீங்க ப்ளாக்கு லீவு விட்டுட்டீங்களே!


  27. MyFriend Says:

    //ஒரு நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் இந்த வருஷம் எழுத வந்தப்போ பல புதிய நண்பர்களின் அறிமுகங்கள் கிடைச்சுது. கிடைச்சிட்டிருக்கு.//

    புது கூட்டணி.. புது ஆட்சி!


  28. MyFriend Says:

    //புதுசு புதுசா நிறைய பேர் அறிமுகமாகிட்டிருந்தாலும் பழைய நண்பர்களும் இன்னும் தொடர்பில் இருப்பது ரொம்பவே சந்தோஷமான விஷயம்.//

    எங்களுக்கும்தான்


  29. MyFriend Says:

    //இது என்றென்றும் நீடிச்சா அதைவிட பெரிய விஷயம் எதுவுமே கிடையாது :)
    //

    எங்களுக்கும்தான்


  30. MyFriend Says:

    //கடைசியாக, என் வலைப்பூவை தொடர்ந்து படிக்கும் அனைவருக்கும் - "இது வரை நீங்கள் குடுத்த ஆதரவுக்கும், இனி குடுக்க போற ஆதரவுக்கும், இது வரை அடித்த கும்மிக்கும், இனி அடிக்க போகும் கும்மிக்கும் எல்லாத்துக்கும் சேத்து ஒரு பெரிய நன்னி சொல்லிக்கறேன்" :)
    //

    அரசியல்ல குதிக்க போறீங்களா இல்ல பாய போறீங்களா?


  31. MyFriend Says:

    //A BIG THANK YOU//

    நமக்குள்ள இதெல்லாம் எதுக்கும்மா??


  32. MyFriend Says:

    //இருங்க அதுக்குள்ள எங்க கிளம்பறீங்க? //

    நான் இன்னும் கெளம்பல.. இன்னும் கும்மிங்!


  33. MyFriend Says:

    //இதுவரை இந்த வலைப்பூவில் தமிழ்ல பதிவு எழுதறேன்னு தமிழுக்கு சோதனை வைச்ச மாதிரி இன்று முதல் Little Joys of Life எனும் வலைப்பூவில் ஆங்கிலத்துக்கு சோதனை வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆக இனி நான் பீட்டர் இங்கிலிபீஷ்லயும் உங்கள் தாக்கப்போறேன்னு மிகத்தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன் :)))//

    உங்களுக்கு மகிழ்ச்சி....

    எங்களுக்கு?????


  34. MyFriend Says:

    //உங்களை அந்த இறைவன் காப்பாற்றுவாறாக :)) //

    எல்லா புகழும் இறைவனுக்கே! ;-)


  35. MyFriend Says:

    அடடே.. சொல்ல மறந்துட்டேனே..

    உங்க ப்ளாக்குக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)

    இதை கட்டி காத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்..


  36. MyFriend Says:

    ஆனா, இப்போ நான் கோபமா இருக்கேன்.. (காரணம் உங்களுக்கு தெரியும்!)


    உங்க பேச்சு கா..... :-(


  37. Anonymous Says:

    :) Best Wishes!! :)


  38. gils Says:

    thozhilnutpa reethila i the 4th...oru vanila caker chinna peiecea oru kiloku parcel panidungo :) pravagamku gangarujilations..peterkum vaazthukal :)


  39. gils Says:

    tamizh mokka poraathunu englees mokkai veraya...dariayal thodangattum


  40. //:: மை ஃபிரண்ட் ::. said...

    யோவ் ஆயில்..

    அந்த ஃபர்ஸ்ட்டூ கமேண்ட் எனக்காக ரெசர்வ் பண்ணி வச்சிருந்தாங்க.. எப்படி எனக்கு தெரியாம அதை திருடலாம் நீங்க???????//

    அடி ஆத்தி தங்கச்சி பயந்துடேன் நான் வேணும்னா அந்த கமெண்ட் டெலிட்டு செஞ்சுடவா??? :)))))


  41. // .:: மை ஃபிரண்ட் ::. said...

    //இந்த பிரவாகம் வலைப்பூ துவங்கி மூன்றாண்டுகள் முடிந்து சந்தோஷத்துடனும் உங்க எல்லாரோட ஆதரவுடனும் நான்காம் ஆண்டில் மகிழ்ச்சிகரமாய் நுழைகிறது.//

    உங்களுக்கு இவ்வ்வ்வ்வ்வ்வ்ளோ பெரிய குழந்தையா? சொல்லவே இல்ல!!! எல்.கே.ஜி போற அளவு பெரிய புள்ளையா?????//

    ஹய்யோ ஹய்யோ எல்.கே.ஜி போற அளவு சின்னபுள்ளதான் :)


  42. //Divyapriya said...

    வாழ்த்துக்கள் G3 :)

    இவ்ளோ கல்யாணத்துக்கு போயிருக்கீங்களா?!?!?! பெரிய ஆள் தான் நீங்க :)///

    பெரும்புள்ளி அதாவது தமிழ்ல சொல்லுவாங்களே வி.வி.ஐ.பி அப்படி ஒரு கேரக்டரு :)))


  43. //.:: மை ஃபிரண்ட் ::. said...

    //இல்லாட்டி போற இடத்துல பேருந்து / ரயில் நிலையத்துல யாராவது வந்து கூட்டிட்டு போவாங்க. //

    பிஸ்கட் காட்டி வாம்மான்னா நீங்க போயிடுவீங்கதானே? ;-)//

    நீங்க முதல்ல டிக்கெட் புக் செய்யுங்க மலேஷியா டூர்க்கு தங்கச்சி ஆவலுடன் வெயிட்டீஸ்ல இருக்காங்க :)))


  44. kanagu Says:

    வாழ்த்துக்கள் அக்கா... :))

    இன்னும் பல ஆண்டுகள் பிரவாகம் தொடர வாழ்த்துக்கள்..

    ட்ரீட் எல்லாம் கிடையாதா???


  45. நான் காம் வருட பிறந்த நாள் வாழ்த்துக்கள், இன்னமும் நிறைய எழுதுங்கள். எங்களுக்கு வழிகாட்டியாக இருங்கள் என வேண்டுகிறேன். அப்புறம் எனக்கு இங்கிலி பீச் எல்லாம் புரியாது ஆதலால் தமிழிலும் எழுதுமாறு வேண்டி,விரும்பிகோட்டுகொள்கிறேம்(கொல்லுகிறேம்).
    நிறைய எழுதுங்கள், நிறைய பகீர்ந்துகொள்ளுங்கள்.


  46. k4karthik Says:

    4th varushathukul kaal vaikum ungalai vazhththi welcome pandraaann indhe k4k...!


  47. sri Says:

    Congrats !! :)

    3 years appadi perya sadhanai dhaan :)

    I havent done any blogger meet, waitin for my first meet in the coming weekend :) but I can understand what might u feel when u meet you friends and get along with them :)

    Very glad and proud to be ur friend, your writings speaks for itself! And All the best for the english blog!


  48. sri Says:

    //ஊர் சுற்றும் வாலிபி//

    Ennaga edhu mayil pili maari solranga.

    Endha padhivila kummi kammiya erukkara maari erukkey


  49. sri Says:

    //ட்ரீட் எல்லாம் கிடையாதா???
    //

    G3 apdi ellam namala vitruvaangala enna ?

    Enkku ticket eduthu kudukarennu solli erukaanga , chennaila nadaka erukkaara pandhikku


  50. வாழ்த்துக்களுடன் மீ த 50 :-)


  51. G3 Says:

    @ஆயில்யன்,

    நன்னி பாஸ் :))))

    //ரைட்டு இது மாதிரி சட்டுபுட்டுன்னு டெரரா முடிவு எடுக்கறதுதான் கரீக்ட்டு :)))))//

    நீங்க சொல்லிட்டா அப்பீலே கிடையாது பாஸ் :)))

    //பெரும்புள்ளி அதாவது தமிழ்ல சொல்லுவாங்களே வி.வி.ஐ.பி அப்படி ஒரு கேரக்டரு :)))//

    ஏன் இந்த மர்டர் வெறி பாஸ்?????

    //நீங்க முதல்ல டிக்கெட் புக் செய்யுங்க மலேஷியா டூர்க்கு தங்கச்சி ஆவலுடன் வெயிட்டீஸ்ல இருக்காங்க :)))//

    ஆமா ஆமா :))))


  52. G3 Says:

    @தங்கச்சிக்கா,

    என்னதிது கோசிக்கற பழக்கமெல்லாம்.. நம்ம அண்ணாச்சிதானே.. மன்னிச்சு வுட்றப்புடாதா??

    //உங்களுக்கு இவ்வ்வ்வ்வ்வ்வ்ளோ பெரிய குழந்தையா? சொல்லவே இல்ல!!! எல்.கே.ஜி போற அளவு பெரிய புள்ளையா?????//

    இதுக்கு ஆயில்ஸ் சொன்ன பதிலை நானும் ஆமோதிக்கறேன் :))
    //ஹய்யோ ஹய்யோ எல்.கே.ஜி போற அளவு சின்னபுள்ளதான் :)//

    //பிராவகம் பிராவகம்ன்னு ஏதோ சொல்றீங்களே.. அப்படின்னா என்னா??//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... என்னை வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலியே !!!!

    //தத்துவம் ஆப்ஃ தி டே//

    நிஜம் ஆப் தி டே :P

    //ஆஹா.. உண்மை வெளியாச்சு!!!//

    ஆஹா.. நானாத்தான் உளறிட்டேனா???

    //தனி கதை இல்ல.. அது மெகா சீரியல்!!!//

    அதுவும் ரைட்டு தான் :))))

    //ஆமா.. அங்கதானே வயிறார சாப்பாடு கிடைக்கும். :-)//

    :)))))))))))))))))))))))))))))))))))))))))

    //கன்யாகுமரிலயா??//

    சென்னைல தான் :)

    //வீட்டுக்கேவா????//

    ஆமா ஆமா :)))

    //அதானே எங்கடா சாப்பாடு பத்தி இன்னும் பேசலையேன்னு பார்த்தேன்//

    அது இல்லாம ஜி3 பதிவா?? வாட் இஸ் திஸ்?? சின்னப்புள்ளதனமா இல்ல இருக்கு :P

    //இல்லையே.. எல்லா சந்திப்புக்கும் நீங்கதான் இடம் ச்சூஸ் பண்ணதா சொன்னாங்களே???//

    அதையும் சொல்லிட்டாங்களா.. சரி சரி.. கண்டுக்காத ;))))


  53. G3 Says:

    @தங்கச்சிக்கா,

    //நம்ம பில்லு அண்ணனை போல.. :-)//

    எக்ஜாக்ட்லி :))))

    //ஊர் சுற்றும் வாலிபி!//

    :))))))))))))))))))))))))

    //அப்பதானே நிறைய திருமணம் நடந்துச்சு!//

    ஆமா.. பல பேர் சம்சார சாகரத்துல போன வருஷம் சிக்கி அப்படியே ப்ளாக் உலகத்த விட்டு அப்பீட்டு ஆயிட்டாங்க :((

    //உங்களுக்குதான் ட்ரைவர்கள் இருந்தாங்களே.. மேப் தேவைப்படாதே!//

    டிரைவர்களா??? இது என்ன புது கதை??

    //ஒரு ட்ரெயினுல ஆயிரம் பேரு வருவாங்க.. அவங்க எல்லாம் கூட வர்றவங்க லிஸ்ட்டுதானே?//

    நான் பதிவர்கள சொன்னேண்டா செல்லம் :)))

    //பிஸ்கட் காட்டி வாம்மான்னா நீங்க போயிடுவீங்கதானே? ;-)//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்... பிஸ்கட் எல்லாம் பத்தாது.. ஃபுல் மீல்ஸ் போடறதா இருந்தா தான் போவேன் :P

    //சாப்பாட்டு விஷயத்துல நீங்க விடுறது இல்லைன்னு சொல்றீங்க.. புரியுது!//

    இப்பத்தானா !!!!

    //நினைத்தாலே இனிக்கும்!//
    //அட.. அப்படி இப்படின்னு டைட்டல்க்கு வந்தாச்சு!//

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    //புது கூட்டணி.. புது ஆட்சி!//
    //அரசியல்ல குதிக்க போறீங்களா இல்ல பாய போறீங்களா?//

    அதெல்லாம் நமக்கு தெரியாத விஷயம்.. அதனால ஒதுங்கி இருக்கறது தான் பெட்டர் :)))

    //நமக்குள்ள இதெல்லாம் எதுக்கும்மா??//

    சொல்லனும்னு தோனுச்சு ;)))))

    //நான் இன்னும் கெளம்பல.. இன்னும் கும்மிங்!//

    குட் குட் :)))))

    //உங்களுக்கு மகிழ்ச்சி....
    எங்களுக்கு?????//

    நோ கமெண்ட்ஸ் :))))))

    //உங்க ப்ளாக்குக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)
    இதை கட்டி காத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

    நன்னி நன்னி :))) 3-வது பிறந்தநாள் அன்னிக்கு 33 கும்மியா.. உன் கும்மித்திறன் நீடுழி வாழ்கடி செல்லம் :)))


  54. G3 Says:

    @திவ்யப்ரியா,

    நன்றி திவ்யா :) அட.. ஆன்சைட் மக்கள் எல்லாரும் குடுக்கற மொய் பணத்தை கரெக்டா மாப்பிள்ளை/பொண்ணு கிட்ட குடுக்கறதுக்காவது போய்தானே ஆகனும் :))))

    @சவிதா,

    நன்றி சவிதா :)))

    @கில்ஸ்,

    நோ நோ.. யூ தி ஃபிப்த் :P வாழ்த்துகளுக்கு நன்னி ஹை :)))

    என்னது??? ஒரு கிலோ சின்ன பீஸா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ஹிஹி.. நீங்க டரியலாக ரெடியா இருங்க :D


  55. G3 Says:

    @கனகு,

    நன்றிபா :))))

    ட்ரீட் தானே வாங்கிடுவோம் :)) கில்ஸ் அடுத்த மாசம் சென்னை வர்றாராம்.. அவர்கிட்ட மொத்தமா ட்ரீட் வாங்கிடுவோம் ;)))))

    @பித்தன்,

    நன்றிங்க :))

    //எங்களுக்கு வழிகாட்டியாக இருங்கள் என வேண்டுகிறேன். //

    ஆகா.. நீங்களும் என்னை வச்சு காமெடி பண்றாப்போல தெரியுது !!!

    //ஆதலால் தமிழிலும் எழுதுமாறு வேண்டி,விரும்பிகோட்டுகொள்கிறேம்(கொல்லுகிறேம்).//

    அடடடா.. நீங்க இப்படி வேண்டி விரும்பி கேட்காட்டியும் நான் எழுதுவேன். அவ்ளோ லேசுல உங்கள எல்லாம் நிம்மதியா விட்ற முடியுமா ;))) பிரவாகத்திலும் மொக்கை தொடரும் இங்கிலிபீஷ் ப்ளாக்லயும் மொக்கை தொடரும் (டபுள் அட்டாக்)னு தான் சொல்லி இருக்கேன் :)))))

    @கே4கே,

    நன்றி அண்ணாச்சி :)) வெல்கம் ட்ரிங்க்ஸ் குடுப்பீங்கள்ல :))))


  56. G3 Says:

    @ஸ்ரீ,

    நன்றி நன்றி :))))

    //3 years appadi perya sadhanai dhaan :)//

    ஆனாலும் என்னை விட சீனியர் நீங்க எல்லாம் இருக்கீங்கள்ல :)))

    //I havent done any blogger meet, waitin for my first meet in the coming weekend :) //

    ஆகா.. 3 வருஷமா நோ மீட்டிங்.. நான் 2006லயே ஆரம்பிச்சிட்டேன் அதெல்லாம் :))))))

    //Very glad and proud to be ur friend, your writings speaks for itself!//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்.. தன்யனானேன் :))) உங்கள மாதிரி பெரியவங்களோட ஃப்ரெண்டுனு சொல்லிக்கறது எங்களுக்கெல்லாம் பெருமையாச்சே :))

    //Ennaga edhu mayil pili maari solranga.
    Endha padhivila kummi kammiya erukkara maari erukkey//

    ஏன்? ஏன்?? இம்புட்டு கொலைவெறி :)))

    //G3 apdi ellam namala vitruvaangala enna ?//

    அதானே.. அடுத்த மாசம் கில்ஸ் வந்ததும் ட்ரீட் தான் :)) அவர் ஏன் வரனும்னு கேட்கறீங்களா.. அவர்கிட்ட இருந்து தானே ட்ரீட் வாங்கப்போறோம் :P

    @சென்ஷி,

    நன்றி சென்ஷி வாழ்த்துக்களுக்கும் 50-க்கும் :)))))


  57. Anonymous Says:

    வாழ்த்துகள் :-)


  58. ஆகா..! ! !

    மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    கலக்குங்க ;)


  59. G3 Says:

    @புனிதா & கோபி,

    மிக்க நன்றி :))))


  60. moondravathu aandu niraivutru naangam aandil kaaladi eduthu vaipatharkum vaazhthukal


  61. appadiye thangachi akka my friend pota ella commentukum appadiye oru repeatu...


  62. R-ambam Says:

    vazhthukkal...!


  63. வாழ்த்துக்கள் G3!


  64. Annam Says:

    vaazhthukkal thozhi


  65. Annam Says:

    melum neraya post eluthavum vaazhthukkal:)


  66. Annam Says:

    thamizhla ezhuthi kalakkurathu pothaathunu ENGLISH veraya:) hmmm nadanthungqa nadanthunga


  67. Annam Says:

    Neenga telungu hindi malayalam ippdi ella mozhilayum ezhuthi kalakkuveenga ini varum Naatkalis so athuku advance vaazhthukkal:)


  68. G3 Says:

    @DD அக்கா, R-ambam, இரவீ,

    அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் :))))

    @அன்னம்,

    வாழ்த்துக்களுக்கு நன்றிமா :)))

    //Neenga telungu hindi malayalam ippdi ella mozhilayum ezhuthi kalakkuveenga //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... என்னை வச்சு காமெடி பண்றத நிப்பாட்டவே மாட்டீங்களா !!!


  69. KK Says:

    //இன்று முதல் Little Joys of Life எனும் வலைப்பூவில் ஆங்கிலத்துக்கு //

    Adangopuraane.... :D
    Appo inni I can talk in inglees walk in inglees eat in inglees thana???


  70. KK Says:

    //அப்படி ஆரம்பிச்சதுனாலயா என்னனு தெரியல நிறைய வலைப்பதிவர் சந்திப்பு உணவகங்கள்ல தான் நடந்துச்சு. நமக்கு ட்ரீட் குடுக்கறதுக்குன்னே நல்லவங்க நல்லா சிக்குவாய்ங்க எப்பவும் :)//

    Helo enna neenga force panni kootitu poi mottai adichutu ippadi oru dialogue veraya??? enna kodumai ace (enga irukaaro??) ithu???


  71. KK Says:

    Kongratulations for 3 anniversary!!

    (sollave maranthuten paarunga...)
    Haiya!! adutha thadava India pogumbothu G3 thalaiya motta adikalam :D


  72. Unknown Says:

    வாழ்த்துக்கள் !!!

    Check my msg... அது உமக்கே :P


  73. இங்கேயும் ஒரு சந்தேகம். கேக்கலாமுங்களா?

    உங்களது இந்த டமிலு சேவை தொடருமுங்களா?


  74. பிடிங்க உங்க உங்களுக்குரிய வாழ்த்துக்களை :))


  75. G3 Says:

    @KK,

    //Appo inni I can talk in inglees walk in inglees eat in inglees thana???//

    Yaah yaah... u see... :P

    //Helo enna neenga force panni kootitu poi mottai adichutu ippadi oru dialogue veraya???//

    மொட்டை அடிச்சிக்கோங்க ஆபீஸர்னு மண்டைய காமிச்சது நீங்க தானே :P

    //Kongratulations for 3 anniversary!!//

    Dank U Dank U :))))

    //Haiya!! adutha thadava India pogumbothu G3 thalaiya motta adikalam :D//

    U have more strong reasons to give treat :P So neenga dhaanae tharanum :P


  76. G3 Says:

    @Vanitha,

    நன்றி அம்மணி :))) 2 நாளா இப்போ தான் அந்த பாட்டை தான் முனுமுனுத்துட்டிருக்கேன் ;))))

    @ஆளவந்தான்,

    வாழ்த்துக்களுக்கு நன்றி பாஸ் :)))

    //உங்களது இந்த டமிலு சேவை தொடருமுங்களா?//

    கண்டிப்பாக.. நிச்சயமாக.. நிரந்தரமாக... :)))))))


  77. Dinesh C Says:

    Wow! :) new blogkuen wishes.. poi etti pakiren


  78. G3 Says:

    @Dinesh

    Nandri nandri :)))


  79. Unknown Says:

    //2 நாளா இப்போ தான் அந்த பாட்டை தான் முனுமுனுத்துட்டிருக்கேன் ;))))//

    Situation பார்த்து போட்டோமுல்ல ;)


  80. Sundari Says:

    வாழ்த்துக்கள்!!!


  81. Priya Says:

    Congrats Gayu:))