கலாட்டா டைம் - III


வழக்கமா மதியம் சாப்பிட்டு முடிச்சப்புறம் ஜூஸ் / ஐஸ்க்ரீம் வாங்கிக்கிட்டு ஆபீஸ சுத்தி ஒரு வாக்கிங் போவோம். ஒரு சைட்ல மட்டும் காத்து சூப்பரா இருக்கும். அங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்து / நின்னுக்கிட்டு போற வர்றவங்கள சைட் அடிச்சிட்டு கொஞ்ச நேரம் கலாட்டா பண்ணிட்டு தான் சீட்டுக்கு திரும்பி வருவோம். போன வாரம் அப்படி தான் சாப்பிட்டு முடிச்சப்புறம் என்ன வாங்கலாம்னு யோசிச்சப்போ எனக்கு லைம் சோடா வேணும்னு சொன்னேன். பிரெண்டு அவனுக்கு குல்ஃபி வேணும்னு சொல்லி குல்ஃபி வாங்கினான். அதோட விட்டிருக்கலாம். அந்த குல்ஃபிய லைம் சோடால டிப் பண்ணி சாப்பிட போறேன்னான்.. உதை விழும்.. வேணும்னா குல்ஃபி மேல லைம் சோடா ஊத்தறேன்னு கொஞ்சம் ஊத்தினேன்.. சாப்டுட்டு சூப்பரா இருக்குனு சொன்னவன்.. அடுத்த நாள் மேங்கோ ஃபீஸ்டும் லைம் சோடாவும் காம்பினேஷன் ட்ரை பண்ணனும்னு சொன்னான்.. நல்லவனே.. நீயே இந்த விளையாட்டு விளையாடு.. நான் இன்னிக்கு கார்னிட்டோ தான் சாப்பிட போறென்னு சொல்லி எஸ் ஆயிட்டேன். ஆனாலும் அவன் அதை லைம் சோடா முக்கி முக்கி எடுத்து சாப்பிட்டப்ப சூப்பரா கலாய்ச்சிட்டிருந்தோம். நானும் சாப்பிட்டு பாத்தேன். ஐஸ்க்ரீம்ல பெருசா ஏதும் டேஸ்ட் வித்யாசம் தெரியலை. ஆனா கடைசில அந்த லைம் சோடா குடிக்கறப்போ அதுல எஃபெக்ட்டு இருந்துது ;-)

******************************

வெள்ளிக்கிழமை அன்னிக்கு வேலைய ரிசைன் பண்ணிட்டு போயிருந்த எங்க ப்ரெண்ட் ஒருத்தி எங்கள பாக்க வந்திருந்தா. அவ ஆசைப்பட்டதால எல்லாரும் அன்னிக்கு குல்ஃபி சாப்பிடலாம்னு முடிவு பண்ணி வாங்கினோம். இதுல என்ன மேட்டர்னா அது கரெக்டா சாப்பிடனும்.. மேல மட்டுமொ இல்ல கீழ மட்டுமோ சாப்பிட ஆரம்பிச்சீங்கன்னா மத்த இடத்துல எல்லாம் உருகி ஒழுக ஆரம்பிச்சிடும்.. நானும் இன்னும் ரெண்டு பேரும் ரெகுலரா சாப்பிடறதால தெளிவா சாப்பிட்டோம்.. ஆனா மீதி ரெண்டு பேர் நிறைய ஒழுகவிட அடிச்ச காத்துல உருகி ஒழுகினதெல்லாம் எல்லார் மேலயும் தெரிக்கனு எல்லார் டிரஸ்லயும் குல்ஃபி கரையோட திரும்பி வந்தோம்.

******************************

லஞ்ச் டைம் மட்டும் இல்லைங்க.. சாயந்திரம் ஒரு 4-5 மணிக்கா ரொம்ப போர் அடிச்சா / தூக்கம் வர்ற மாதிரி இருந்தாலும் அங்க வந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிட்டு போவோம். வீசிற சுகமான காத்துக்கு சும்மா சூப்பர் ரிலாக்ஸிங்கா இருக்கும்.. அப்படி ஒரு நாள் நானும் உமாவும் உட்கார்ந்திருந்தப்போ அங்க இருந்த ஈச்சமரத்துல இருந்து கொத்து கொத்தா காய பறிச்சிட்டிருந்தாங்க. கொஞ்ச நேரத்துல அங்க கார் பார்க் பண்ண ரெண்டு டிரைவர்ங்க வந்து அவங்களும் கீழ தேடி தேடி எடுத்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.. ஏன் இவ்ளோ இருக்கும்போது தேடி தேடி எடுத்து சாப்பிடறாங்கனு ஒரு டவுட்டு.. சரி அது என்னனு தான் கேட்டுடுவோமேனு போய் அவங்ககிட்டயே போய் இது என்ன பழம்னு கேட்டோம். அந்த ரெண்டு டிரைவர்ல ஒருத்தர் ரொம்ப யோசிக்க இன்னொரு டிரைவர் ஈச்சம்பழம்னு சொல்ல உடனே இவர் ஆமா லயன் டேட்ஸ்க்கு தங்கச்சி இது தான்னு சொன்னாரு. அவரு எங்கள கலாய்க்கறாரா உண்மைய சொல்றாரான்னு தெரியலைன்னாலும் பேருக்கு நாங்களும் சிரிச்சிட்டு சரி நாங்களும் கொஞ்சம் எடுத்துக்கலாம்னு எடுத்துக்கிட்டோம். உடனே ஈச்சம்பழம்னு பேரை கரெக்டா சொன்ன டிரைவர் வந்து, அது காய்.. அதை சாப்பிடாதீங்க.. இது மாதிரி கருப்பா இருக்கறது தான் பழுத்தது. இதை சாப்பிடுங்கனு அவரே நல்ல பழமா பாத்து குடுக்க ஆஹா இதை தான் இவங்க தேடி தேடி எடுத்தாங்களானு நாங்களும் கொஞ்சம் தேடி (எங்க டீம் மக்களுக்காக தான்) எடுத்துக்கிட்டு போனோம்.


மேல வந்ததும் எனக்கும் உமாவுக்கும் மட்டும் ரெண்டு எடுத்து வைச்சிக்கிட்டு மீதிய மத்த மக்களுக்கு குடுத்தோம். யாருக்குமே அது என்னனு தெரியாததால சையனைட் எதுவும் எங்களுக்கு குடுக்கலை இல்லனு ஒரு பயத்தோடவே டேஸ்ட் பண்ணாங்க. உடனே ஒரு நண்பர் "இன்னிக்கு பிரதோஷம் விரதம்ங்கறதால அவங்க சாப்பிட மாட்டாங்க. அப்படி இருந்தும் நாம சாப்பிடாட்டியும் மத்தவங்களாவது சாப்பிடட்டுமேனு நல்லெண்ணத்துல கொண்டு வந்து குடுத்தா இப்படியா சந்தேகப்படறது"னு எங்களுக்கு சப்போர்ட் பண்ணாரு. நான் ரொம்ப அப்பாவியா.. அப்படி எல்லாம் தப்பா நினைச்சிக்காதீங்க. நாங்க எங்களுக்கு தனியா ரெண்டு பழம் எடுத்து வைச்சிக்கிட்டோம். 6 மணிக்கு விரதம் முடிஞ்சதும் சாப்பிட்டுப்போம்னு சொல்ல, உடனே அவர்.. "ஜி3.. நீங்க லார்ட் சிவாவ இப்படி எல்லாம் ஏமாத்தப்புடாது ஜி3" னு டயலாக் விட்டுட்டிருந்தாரு.. ஹலோ உங்களுக்கு வேணும்னா நேரா கேளுங்க குடுக்கறோம்.. அதை விட்டுட்டு ஏன் இப்படி எல்லாம் டயலாக்னு அவரையே திருப்பி கலாய்க்க ஆரம்பிச்சிட்டோம் :-)) நமக்கு சப்போர்ட் பண்ணாருங்கற ஓரே ஒரு காரணத்துக்காக அவரை கலாய்க்காம விட முடியுமா என்ன ;-))
28 Responses
  1. மீ த பர்ஸ்டேய்ய்ய்


  2. யேயப்பாடியேவ்வ்வ்வ்!
    எம்மாம் பெரிய போஸ்ட்டூ !


  3. //"கலாட்டா டைம் - III"///

    இதுல பெரும்பாலான இடத்துல திங்கிற டைம் பத்தியில்ல சொல்லியிருக்கு!!!!


  4. Divyapriya Says:

    பிரதோஷத்துக்கு பிரதோஷம் விரதமா? கலக்குங்க :)


  5. G3 Says:

    @ஆயில்யன்,

    வடை உங்களுக்கே ;)))

    அண்ணே.. பாதி மேட்டர அடுத்த பதிவுல போட்டுக்கலாம்னு விட்டு வைச்சிட்டேன்.. இதுக்கே பெரிய போஸ்ட்டூங்கறீங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    //இதுல பெரும்பாலான இடத்துல திங்கிற டைம் பத்தியில்ல சொல்லியிருக்கு!!!!//

    நம்மலையும் சாப்பாட்டையும் தனித்தனியா பிரிக்க முடியுமாண்ணே ;)


  6. G3 Says:

    @திவ்யப்ரியா,

    ஹிஹி.. சகவாச தோஷம்.. தொத்திக்கிச்சு ஃபிரெண்ட்கிட்ட இருந்து ;)


  7. kanagu Says:

    /* இதுல என்ன மேட்டர்னா அது கரெக்டா சாப்பிடனும்.. மேல மட்டுமொ இல்ல கீழ மட்டுமோ சாப்பிட ஆரம்பிச்சீங்கன்னா மத்த இடத்துல எல்லாம் உருகி ஒழுக ஆரம்பிச்சிடும்.*/

    குல்பிய சாப்பிடுரதுக்கு ஒரு ட்யூஷனே எடுத்துட்டீங்க :)

    எப்படியோ ஈச்சம் பழம் பத்தியும் தெரிஞ்சிகிட்டீங்க :)


  8. G3 Says:

    @கனகு,

    //குல்பிய சாப்பிடுரதுக்கு ஒரு ட்யூஷனே எடுத்துட்டீங்க :)//

    :))))))))) ட்யூஷன் பீஸ் குடுக்காம போயிட்டீங்களே :P

    //எப்படியோ ஈச்சம் பழம் பத்தியும் தெரிஞ்சிகிட்டீங்க :)//

    சாப்பிட்டும் பாத்துட்டோம்.. சூப்பரா இருக்கு ;)


  9. k4karthik Says:

    ஐய்.. ஒரு ஐஸ்ஸே ஐஸ்க்ரீமை சாப்பிடுகிறதே.. அடடே.. ஆச்சர்யகுறி!!


  10. k4karthik Says:

    //இதுல என்ன மேட்டர்னா அது கரெக்டா சாப்பிடனும்.. மேல மட்டுமொ இல்ல கீழ மட்டுமோ சாப்பிட ஆரம்பிச்சீங்கன்னா மத்த இடத்துல எல்லாம் உருகி ஒழுக ஆரம்பிச்சிடும்..//

    செய்முறை விளக்கம் குடுக்கலாமே.. எங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்ல


  11. k4karthik Says:

    //அவ ஆசைப்பட்டதால எல்லாரும் அன்னிக்கு குல்ஃபி சாப்பிடலாம்னு முடிவு பண்ணி வாங்கினோம். //

    இல்லேனாலும் அதை தானே வாங்கி சாப்டுறீங்க..!




  12. G3 Says:

    @கே4கே,

    //ஐய்.. ஒரு ஐஸ்ஸே ஐஸ்க்ரீமை சாப்பிடுகிறதே.. அடடே.. ஆச்சர்யகுறி!! //
    படத்துல இருக்கற அக்காவ பாத்து ரொம்ப ஜொல்லு விடாதீங்க.. உங்க ஃபிரெண்ட் கிட்ட போட்டு குடுத்துடுவேன். அவர் தான் உங்கள நல்லா திட்டுவாரு :P

    //செய்முறை விளக்கம் குடுக்கலாமே//
    ஹிஹி.. நீங்க இங்க வர்றப்போ எனக்கு வாங்கித்தாங்க.. அப்போ குடுக்கறேன் :)))))

    //இல்லேனாலும் அதை தானே வாங்கி சாப்டுறீங்க..! //
    :)))))))))))))))))))


  13. G3 Says:

    @கோபி,

    :)))))))))))))))

    @கோப்ஸ்,

    கரெக்டா வந்திருக்க ;)))))


  14. gils Says:

    ussssss..ebba...imbutu peria posta..ipothaiku attendance...


  15. gils Says:

    kulfi sapdra kutti soakka keethunu oils anna sola sonar :D


  16. manasu Says:

    ஒரே சாப்பாடு பிரவாகம்.............

    நல்ல ஆபிஸ்.. நல்ல ஊழியர்கள்?!

    ஆபிஸ் எங்க இருக்கு... ஒரு கேன்டீன் தொடங்கலாமன்னு பார்க்கிறேன்.


  17. குல்பி ஐஸ் ல சர்பது சேர்த்து சாப்பிட்டு பாருங்க ......
    நல்ல இருக்கும்...

    பிறகு ......
    ஸ்பெஷல் குல்பி ன்னு ஒரு வகைறா இருக்கு ...
    அது இன்னும் taste யாக இருக்கும்


  18. SUBBU Says:

    //நமக்கு சப்போர்ட் பண்ணாருங்கற ஓரே ஒரு காரணத்துக்காக அவரை கலாய்க்காம விட முடியுமா என்ன ;-))//


    :)))))))))
    உம்மையெல்லாம் நாடு கடத்த வேண்டும்
    :)))))))))


  19. கடைசில அந்த லைம் சோடா குடிக்கறப்போ அதுல எஃபெக்ட்டு இருந்துது //

    அந்த எஃபெக்ட்டு எப்படி இருந்தது...


  20. R-ambam Says:

    entha office kku ipdi maanju maanju ulaikareenga?


  21. KK Says:

    //இதுல என்ன மேட்டர்னா அது கரெக்டா சாப்பிடனும்.. மேல மட்டுமொ இல்ல கீழ மட்டுமோ சாப்பிட ஆரம்பிச்சீங்கன்னா மத்த இடத்துல எல்லாம் உருகி ஒழுக ஆரம்பிச்சிடும்..//

    Enna oru aaraichi....

    Kulfi saapida sambalam kodutha kasakava poguthu :P


  22. KK Says:

    Photo nalla iruke... seri post'a padipomnu paarthen... paatha OB post'u.... :(


  23. G3 Says:

    @Jols,

    Romb vazhiyudhu thodachikonga :P

    @Manasu,

    Vaanga vaanga.. neenga vandhu canteen open pannadhum modhal boni enga group dhaan ;)


  24. G3 Says:

    @Mayvee,

    Sarbath inga kedaikaadhae.. chance kedacha try panni paakaren.. adhu ennanga? special guifi? enga kedaikumnu sollunga :))

    @Subbu,

    Endha naatukku kadatha poreenga? Europe countries en choice ;)

    @Vigneshwari,

    Adhellam sonna effecta irukaadhu.. neenga saaptu paarunga :))))


  25. G3 Says:

    @R-ambam,

    Ellam oru potti thatra aapis dhaan :)))

    @KK,

    //Kulfi saapida sambalam kodutha kasakava poguthu //
    //paatha OB post'u.... :(//

    :)))))))))))))))))))))))))))))))))))))))


  26. //நமக்கு சப்போர்ட் பண்ணாருங்கற ஓரே ஒரு காரணத்துக்காக அவரை கலாய்க்காம விட முடியுமா என்ன ;-)) //

    ரைட்டு!