
புத்தகம் படிக்கற பழக்கம் எப்போ ஆரம்பிச்சுது?? சரியாக நினைவிலில்லை.. சின்ன வயதிலிருந்தே வீட்டில் வாங்கிய ஆனந்த விகடன், அம்மா அலுவலகம் சென்று வரும் பயணங்களில் படிக்கும் கண்மணி, ராணி முத்து நாவல்கள் என் ஆரம்பித்து, பின் வீட்டிற்கே வந்து வார இதழ்களை குடுத்து பெற்று செல்லும் நடமாடும் நூலகத்தின் உதவியுடன் தொடர்ந்தது. என்றுமே இந்த புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைத்து தேடி பிடித்தெல்லாம் படித்ததில்லை. கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் படிப்பேன். அதனாலோ என்னவோ படித்த புத்தக்த்தின் பெயரோ எழுதியவரின் பெயரோ மனதில் நின்றதில்லை. ஆனால் படிக்கும் கதைகளில் நான் ரசித்த காட்சிகள் மட்டும் என்றுமே மனதில் பசுமையாய் இருக்கும்.
கல்லூரி முடித்து வேலைக்கு சேர்ந்தபின் முழுவதுமாக படிக்கும் பழக்கம் நின்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு 6 மாத காலம் வீட்டில் வெட்டியாய் இருக்க நேரிட்டது. அப்பொழுது தான் எல்லோரும் சொல்கிறார்களே அப்படி என்ன தான் இருக்குனு படிச்சு பாத்துடலாம்னு பொன்னியின் செல்வன் நாவல் நூலகத்திலிருந்து எடுத்து படிக்க ஆரம்பித்தேன். காலை எழுந்ததும் ஆரம்பித்தால் இரவு கண்களில் தூக்கம் சொருகும் கடைசி நிமிடம் வரை படிப்பேன். அவ்வளவு ஆர்வமாக படிப்பதை பார்த்த அப்பா தான் சரித்திர நாவல்கள் உனக்கு பிடிக்கிறதென்றால் சாண்டில்யன் நாவல்கள் படித்து பார் என்றார். முதலில் நூலகத்தில் என் கண்ணில் பட்டது யவன ராணி தான். படித்ததும் பிடித்துவிட சாண்டில்யணின் எல்லா நாவல்களையும் தேடி பிடித்து படிக்க ஆரம்பித்தேன். அதே சமயம் என் கீழ் வீட்டில் இருந்த அம்மணி சிட்னி ஷெல்டன் நாவல்கள் தந்து இதுவும் வேணா படிச்சு பாருங்கனு சொல்ல.. வெட்டியா தானே இருக்கோம்.. எதை குடுத்தாலும் படிப்போம்னு ஆங்கில நாவல்களும் படிக்க ஆரம்பிச்சேன். அதன் பிறகு மீண்டும் வேலைக்கு சேர்ந்ததும் படிப்பது மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.. ப்ளாக் பக்கமெல்லாம் வந்தப்பிறகு சுத்தமாகவே நின்றுவிட்டது என்று கூட சொல்லலாம்.
இப்படி முழுமையாய் நின்றுவிட்ட ஒரு பழக்கம் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சோம்பேறித்தனத்தால் ஆரம்பிக்காமலே இருந்தது. சென்ற வாரம் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு கிப்ட் வவுச்சர் இருக்கு. நம்பர் தர்றேன். அந்த புத்தக கடைக்கு சென்று நீங்களே உங்களுக்கு பிடித்த புத்தகங்கள் வாங்கிக்கோங்கனு சொன்னாரு. அவ்ளோ தூரம் போகனுமானு நம்ம சோம்பேறித்தன்ம் எட்டி பாக்க, அப்பாவோட அலுவலகம் பக்கத்துல தானே இருக்கு, அப்பாவையே வாங்கிட்டு வர சொல்லலாமேனு நினைச்சேன். உடனே நண்பர், அப்பா ரசனை வேறயா இருக்கலாம் நீங்களே போய் உங்களுக்கு பிடித்ததா பாத்து வாங்கிக்கோங்கனு சொன்னாரு. சரினு சொன்னவருக்கு மரியாதை குடுத்து நானும் போன சனிக்கிழமை அந்த கடைக்கு போனேன்.
நான் கண்டிப்பா படிக்கனும்னு நினைத்த புத்தகங்கள் ஒரு 4-5 தான். ஆனா என் அதிர்ஷ்டம் அதுல இரும்பு குதிரைகள் புத்தகம் மட்டும் தான் இருந்துது. மீதி கிப்ட் வவுச்சர் அமௌண்ட்டுக்கு என்ன புத்தகம் வாங்கலாம்னு அப்படியே எல்லா புத்தகங்களையும் பாத்துட்டு வந்தேன். எனக்கே வித்யாசமாய் இருந்தது. எப்பவுமே புத்தகம் வாங்க போறதுன்னா என்ன வாங்கனும்னு ஒரு முடிவோட போவேன். இருந்தா வாங்குவேன். இல்லாட்டி திரும்பி வந்துடுவேன். சரி எல்லா புது பழக்கத்துக்கும் எங்கயாவது ஒரு துவக்கம் இருக்கனுமே.. இதையும் முயற்சி செஞ்சு தான் பாப்போம்னு ஒரு 4 புத்தகம் வாங்கினேன்.
பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்
உமா மகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை
சூத்திரதாரியின் பிறிதொரு நதிக்கிரை
ஓஷோவின் Tantra vision: The secret of the inner vision
இதுல நான் ஏற்கனவே படிக்கனும்னு நினைச்சது பாலகுமாரனோட இரும்பு குதிரைகள். அதுலயும் அதை படிக்க சொன்ன நண்பர் அந்த புத்தகம் பத்தி கொஞ்சம் பில்ட் அப் ஏத்தி விட மறுநாளே முதல் வேலையா அந்த புத்தகத்தை தான் படிச்சேன். எனக்கு ரொம்ப புடிச்சிருந்துது.. முக்கியமா அதுல வர்ற குதிரை கவிதைகள். சான்ஸே இல்லை.. படிச்சதும் மனதில் நின்ற இரண்டு கவிதைகள் உங்களுக்காக...
சவுக்கடி பட்ட இடத்தை
நீவிடத் தெரியாத குதிரை
கண்மூடி வலியை வாங்கும்
இதுவுமோர் சுகம்தா னென்று
கதறிட மறுக்கும் குதிரை
கல்லென்று நினைக்க வேண்டாம்
கதறிட மேலும் நகைக்கும்
உலகத்தை குதிரை அறியும்
நீவிடத் தெரியாத குதிரை
கண்மூடி வலியை வாங்கும்
இதுவுமோர் சுகம்தா னென்று
கதறிட மறுக்கும் குதிரை
கல்லென்று நினைக்க வேண்டாம்
கதறிட மேலும் நகைக்கும்
உலகத்தை குதிரை அறியும்

அவல ஆடுகள் கூட இங்கே
கொம்புடன் ஜனித்ததாக
கீச்சுப் பூனைகள் கொண்டதிங்கே
கரிய நகமும் பல்லும்
யாருக்கும் தீங்கு செய்யா நத்தைக்கும்
கல்லாய் ஓடு
பச்சோந்தி நிறத்தை மாற்றும்
பல்லிவால் விஷத்தை தேக்கும்
குதிரைகள் மட்டுமிங்கே
கொம்பின்றி பிறந்ததென்ன?
வெறுப்புடன் பிறந்த மாக்கள்
பயத்தினை துணையாய் கொள்ள
விருப்புடன் பிறந்த குதிரை
கொம்பில்லை விஷமுமில்லை.
தர்மத்தை சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவர்?
குதிரைகள் காதை பாரும்
உள்ளங்கை சிவப்பு தோற்கும்
இது குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் ஏழாம் பாடம்
கொம்புடன் ஜனித்ததாக
கீச்சுப் பூனைகள் கொண்டதிங்கே
கரிய நகமும் பல்லும்
யாருக்கும் தீங்கு செய்யா நத்தைக்கும்
கல்லாய் ஓடு
பச்சோந்தி நிறத்தை மாற்றும்
பல்லிவால் விஷத்தை தேக்கும்
குதிரைகள் மட்டுமிங்கே
கொம்பின்றி பிறந்ததென்ன?
வெறுப்புடன் பிறந்த மாக்கள்
பயத்தினை துணையாய் கொள்ள
விருப்புடன் பிறந்த குதிரை
கொம்பில்லை விஷமுமில்லை.
தர்மத்தை சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவர்?
குதிரைகள் காதை பாரும்
உள்ளங்கை சிவப்பு தோற்கும்
இது குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் ஏழாம் பாடம்
மீதி புத்தகங்களை படிச்சதும் அதை பத்தியும் மொக்கை போடறேன் :)))


me the firstu
அட புத்தகம் படிக்கிற விசயமா சூப்பரூ!
//கண்மணி, ராணி முத்து நாவல்கள் ///
தேவி எல்லாம் படிக்க மாட்டீங்களா பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்??
:)
//காலை எழுந்ததும் ஆரம்பித்தால் இரவு கண்களில் தூக்கம் சொருகும் கடைசி நிமிடம் வரை படிப்பேன்///
பாஸ் இது செம டெர்ரரான படிப்பு ஆச்சே !
present m'am!
//. அதே சமயம் என் கீழ் வீட்டில் இருந்த அம்மணி சிட்னி ஷெல்டன் நாவல்கள் தந்து இதுவும் வேணா படிச்சு பாருங்கனு சொல்ல.. வெட்டியா தானே இருக்கும்.. எதை குடுத்தாலும் படிப்போம்னு///
நீங்க வெட்டியாய் இருக்கீங்க அப்படிக்கிற நினைப்பு பர்ஸ்ட் அந்த அம்மணிக்குத்தான் வந்திருக்கும்ம்னு நினைக்கிறேன் சிஸ்டர் :))
//மீதி புத்தகங்களை படிச்சதும் அதை பத்தியும் மொக்கை போடறேன் :)))///
தொடரும்ங்கறதுக்கு இப்படி ஒரு டிவிஸ்டா ரைட்டு :)
நிஜம் தாங்க...நம்மில் பல பேருக்கு புத்தகம் படிக்கிற வழக்கம் தொலைஞ்சே போச்சுன்னு சொல்லலாம்...
இந்த மாதிரி புத்தகங்களின் சாரத்தையாவது உங்களின் பதிவுகள் மூலமாக படிக்க முடிகிறது.
நன்றி!
avvvvvvvvvv..athukula 8 kaments!!! kuthrai kavithai nachu..romba nalaruku...enaku intha mathir yarachum recommend panni padikara books usuala set aagarathilla..i go for popular taste..apdi onum sikalaina etha venumnalum padipen :)
book reading thaan readingnu en nenkareenga..blog reading kuda reading thaana...ipolam hardcopy reading kurainju poachu enaku..i've a minilibrary of softcopy books :)
:))
பகிர்விற்கு நன்றி! இன்னும் எழுதுங்க.
கவிதை அட்டகாசம் ;)
\மீதி புத்தகங்களை படிச்சதும் அதை பத்தியும் மொக்கை போடறேன் :)))\\
போடுங்க போடுங்க போட்டுக்கிட்டே இருங்க ;)
//கல்லூரி முடித்து வேலைக்கு சேர்ந்தபின் முழுவதுமாக படிக்கும் பழக்கம் நின்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்
Same here ..college days read so many book , office vantha pina stopped everything.But luckily now i am getting time to read in the Train .
//அதே சமயம் என் கீழ் வீட்டில் இருந்த அம்மணி சிட்னி ஷெல்டன் நாவல்கள் தந்து இதுவும் வேணா படிச்சு பாருங்கனு சொல்ல..
same pinch :) .Naan first read panina Novel um sheldon oda Tell me your dreams. I must have read that book atleast 5 times :)
G3 Where can i read tamil books online ?
nice photo... post nemba perusa irukku...so appalika varen...
நல்ல தேர்வு. நாணா ஐயர்,ராவுத்தர்,விசுவனாதன்,தாரிணி,காயத்ரி எல்லாம் இன்னும் நினைவில் இருக்கிறது.
மெர்குரிப்பூக்கள்,தாயுமானவன், கரையோர முதலைகள் (முதலை கவிதை இருக்கும்)இவையும் படிக்கலாம்.
பகிர்வுக்கு நன்றி
//கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் படிப்பேன். அதனாலோ என்னவோ படித்த புத்தக்த்தின் பெயரோ எழுதியவரின் பெயரோ மனதில் நின்றதில்லை. ஆனால் படிக்கும் கதைகளில் நான் ரசித்த காட்சிகள் மட்டும் என்றுமே மனதில் பசுமையாய் இருக்கும்//
என் இய(ல்பு)லாமையும் இதுதான்.:-)
கருத்துகள் மனதில் நிற்பது போல் பெயர்கள் மனதில் பதிவதில்லை.
நான் சின்ன வயசு ல இருந்தே நிறைய படிப்பேனுங்க.....
ஞாபக மறதியால் எல்லாத்தையும் மறந்து விடுவேன்....
அதனால் தான் அதை எல்லாம் மீண்டும் ஒரு இரண்டு முறை படித்து விடுவேன்...
பொன்னியின் செல்வன் ; வெறி பிடிச்ச மாதிரி ஒரு வாரத்தில் படித்து முடித்தேன்....
சரி அந்த புக்ஸ் பற்றி எப்போ எழுத போறீங்க ????
அட இது சூப்பரு.......
நானும் வேலைக்கு போனதுக்கு அப்புறம் படிக்கிறது குறைங்சிடுச்சி.. இப்போ Harry Potter படிச்சிட்டு இருக்கேன்... ரொம்ப நல்லா இருக்கு.. :)
நீங்களும் டைம் இருந்த படிங்க அக்கா :)
/*சவுக்கடி பட்ட இடத்தை
நீவிடத் தெரியாத குதிரை
கண்மூடி வலியை வாங்கும்
இதுவுமோர் சுகம்தா னென்று
கதறிட மறுக்கும் குதிரை
கல்லென்று நினைக்க வேண்டாம்
கதறிட மேலும் நகைக்கும்
உலகத்தை குதிரை அறியும்*/
உண்மை
hey wat a bingo!!! நானும் இன்னிக்கு தான் இரும்பு குதிரைகள் வாங்கிட்டு வந்திருக்கேன்...அடுத்த வாரம் தான் ஆரம்பிக்கனும்...
@ஆயில்யன்,
இந்த வாட்டியும் வடை உங்களுக்கே :)
//தேவி எல்லாம் படிக்க மாட்டீங்களா பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்??//
லிஸ்ட்ல மிஸ் ஆயிடுச்சோ.. அதுவும் படிப்போமில்ல :)))
//பாஸ் இது செம டெர்ரரான படிப்பு ஆச்சே //
அதே அதே :)
//நீங்க வெட்டியாய் இருக்கீங்க அப்படிக்கிற நினைப்பு பர்ஸ்ட் அந்த அம்மணிக்குத்தான் வந்திருக்கும்ம்னு நினைக்கிறேன் சிஸ்டர் :))//
கண்டுபிடிச்சிட்டீங்களா !!!
//தொடரும்ங்கறதுக்கு இப்படி ஒரு டிவிஸ்டா ரைட்டு :)//
கண்டுக்காதீங்க :))
@கே4கே,
அட்டெண்டன்ஸ் போட்டாச்சு :)))
~~~~~~~~~~~~
@கபிலன்,
:))) அப்போ நிறைய புத்தகங்கள பத்தி எழுதினா படிக்க ஆட்கள் இருக்கீங்கனு சொல்லுங்க :)))
~~~~~~~~~~~~
@கில்ஸ்,
ஏற்கனவே உங்ககிட்ட சொன்ன மாதிரி எனக்கு ஏனோ கம்ப்யூட்டர்ல படிச்சா படிச்ச மாதிரியே இல்ல.. எனக்கு எப்பவும் கைல புக்க வைச்சிக்கிட்டு படிக்கறது தான் பெட்டர் :)))
@சென்ஷி,
சொல்லிட்டீங்க இல்ல.. ரைட்டு :)))
~~~~~~~~~~~~
@கோபி,
நீங்களும் சொல்லிட்டீங்க இல்ல.. போட்டு தாக்கிட வேண்டியதுதான் :)
~~~~~~~~~~~~
@Carpe Diem,
குட் குட்.. படிக்கறது நிஜமாவே மைண்ட்க்கு ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கு :)
டிட்டோ.. நானும் Tell me ur dreams தான் ஆரம்பிச்சேன் :))))
ஆன்லைன் புக்ஸ் லிங்க் எல்லாம் மெயில் பண்ணியிருக்கேன் உங்களுக்கு :)
@கேகே,
:))) சரி சரி.. பொறுமையா வாங்க :)
~~~~~~~~~~~~
@மனசு,
கண்டிப்பாங்க.. நீங்க சொன்ன எல்லா புத்தகங்களையும் கூடிய சீக்கிரம் படிக்கிறேன் :)
~~~~~~~~~~~~
@சுபஸ்ரீ இராகவன்,
:))) சேம் பின்ச் :))))
@மேவீ,
//பொன்னியின் செல்வன் ; வெறி பிடிச்ச மாதிரி ஒரு வாரத்தில் படித்து முடித்தேன்....//
அடடா.. நீங்களும் நம்ம கோஷ்டியா :))) குட் குட் :D
மத்த புக்ஸ் எல்லாம் படிச்சதும் அதை பத்தி எழுதறேன் :)
~~~~~~~~~~~~
@கனகு,
Harry potter தானே.. படிச்சிடுவோம் :)))
~~~~~~~~~~~~
@திவ்யப்ரியா,
சூப்பர் :)))) படிங்க படிங்க.. சூப்பரா இருக்கும் :))))
//சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு 6 மாத காலம் வீட்டில் வெட்டியாய் இருக்க நேரிட்டது. //
ரெசிசனா?
Neengalum books priyaraa super!
Ana thamizh bookellam romba kashtam he he.. shedny sheldon dhaan naanum initial stagesla padichen, page turners! tell me ur dreams dhaan top notch! Neraya book download panni vachukuven, ana kadaila poi vangittu vandhadhaan padippen :P
குதிரை கவிதை ரொம்ப நல்லா இருக்கு. ஏனோ ஒரு வித சோகம் டக்குனு மனதை கவ்வி விட்டது. பல மனிதர்களும் இந்த குதிரைகள் போல தானே இன்னிக்கு தேதிக்கு வளைய வருகிறார்கள். :(
சரி விடுங்க, ஒவர் சீன் நம்ம உடம்புக்கு ஆகாது. பஞ்சாபி குதிரை பத்தி ஏதேனும் கவிதை இருந்தா கொஞ்சம் ஜொள்ளுங்க. நமக்கு உபயோகமா இருக்கும். :))
புத்தகம் வாசிக்கும் அனுபவம் இருக்கிறதே, அதை வெறும் வார்த்தைகளில் சொல்ல முடியாது. வாசிப்பு அனுபவம் என்பதே காணாமல் போய்விட்டதோ என்று நினைத்திருந்த தருணத்தில், இப்படிப் பதிவுகளில், வாசிப்பு அனுபவங்கள், ஒரு தொடர் சங்கிலியாக வந்து கொண்டிருப்பது,உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது!
@ஷோபிகண்ணு,
3 வருஷத்துக்கு முன்னாடி ரெசிசன் இருந்துதா?? நான் சும்மா வேலைக்கு போய் போர் அடிக்குதுனு ப்ரேக் எடுத்தேன் :)
~~~~~~~~~~~~~~~~
@ஸ்ரீவத்ஸ்,
எனக்கு இங்கிலிபீஷ் தான் கொஞ்சம் கஷ்டம் :) சேம் பின்ச்.. எனக்கும் ஏனோ சாப்ட் காபில படிக்க பிடிக்கறதில்லை :)
@அம்பி,
அண்ணாச்சி, இன்னும் நீங்க அடங்கலையா?? பஞ்சாபி குதிரை கவிதை கேக்குதா? சரி சரி.. உங்க தங்கமணி மெயில் ஐடிக்கு அனுப்பி விடறேன்.. அவங்ககிட்ட இருந்து வாங்கிக்கோங்க :)
~~~~~~~~~~~~~~~~
@கிருஷ்ணமூர்த்தி,
நன்றிங்க வருகைக்கும் கருத்துக்கும். நிஜமாவே புத்தகங்கள் வாசிக்கும் அனுபவம் ஒரு தனி சுகம்தான் :)
IRUMBU KUDHIRAIKUM SAVUKADI AH?
enna kodumai ace idhu
Thanks for sharing :) i will try to read :) :)
@கோப்ஸ்,
ஹிஹி.. அதுல ஹீரோ அவனோட சூழ்நிலைக்கு குதிரை கவிதைகள் எழுதுவான் :))
~~~~~~~~~~~~~~
@இராஜலெட்சுமி பக்கிரிசாமி,
உங்களுடைய வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிங்க :) படிச்சு பாருங்க.. நிஜமாவே சூப்பரா இருக்கு :D
ayya balakumaran udaiyar pagathai mudithu vittar,,adhai konjam nengal try pannalame? then S.Ramakrishanan avarkalin nedunkuruthi,sandalyanin kadal pura ,,
padithu vittu sollungal
@இராயர் அமிர்தலிங்கம்,
நன்றிங்க உங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.. நீங்க சொன்னதுல கடல் புறா மட்டும் நான் படிச்சிருக்கேன். மீதியெல்லாம் கண்டிப்பா படிச்சு பாக்கறேன் :)
http://balakumaranpesukirar.blogspot.com/2009/06/blog-post_28.html
just visit