எல்லாரும் பதிவு போடறப்போ படத்த பாத்துட்டு நான் மட்டும் சும்மா உட்கார்ந்திருந்தா நியாயமா? அதான் நானும் கோதால இறங்கிட்டேன்.ஆனாலும் இந்த படத்துக்கு டிக்கெட் ரிசர்வ் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு :(( செவ்வாய்க்கிழமை ராத்திரி 12 மணி வரைக்கும் முழிச்சிருந்து பாத்தும் சத்யம்ல சைட் ஓபன் ஆகும் போதே “இடம் காலி இல்லை”னு சொல்லிருச்சு. சரி நேர்ல புக் பண்றவங்களுக்காக விட்டு வைச்சிருப்பானோனு காலங்கார்த்தால 8.30 மணிக்கு கவுண்ட்டர் ஓபன் பண்றப்போ போய் கேட்டா அங்கயும் “பிம்பிலிக்கா பிலேபி”னு பல்ப குடுத்துட்டான் :(( சரினு ஆபீஸ்ல இருந்து கிளம்பி ஒரு 11 மணிக்கா ஐனாக்ஸ் போய் டிக்கெட் வாங்கலாம்னு போனா ஏகப்பட்ட பேர் எனக்கு முன்னாடி க்யூல (வேஸ்ட் பசங்க.. சத்யம் மாதிரி லேடீஸ்க்கு தனி க்யூ ஏதும் இல்லை.) இருந்த கும்பல பாத்தேன்.. டிக்கெட் கவுண்டர பாத்தேன்.. அப்பவே சனிக்கிழமை காலைல 9 மணி ஷோ தவிர்த்து மீதி எல்லாம் ஹவுஸ் ஃபுல்னு போட்டிருந்தான்.. சரி இது நமக்கு வேலைக்காகாதுனு கொண்டு வந்த் காசுக்கு லேண்ட்மார்க்ல 3 புக்க வாங்கிட்டு திரும்பி ஆபீஸ் வந்தாச்சு.
நண்பனுக்கு ஃபோன் பண்ணி இந்த சோக கதைய எல்லாம் சொன்னேன். அவன் விடுங்க ஜி3. மாயாஜால்ல நான் புக் பண்றேன்னு சொன்னான். சரிப்பானு விட்டுட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு ஃபோன் பண்ணி ஜி3 டிக்கெட் விலை 250 ரூபாயாம்.. சிம்பு படத்துக்கு இவ்ளோ எல்லாம் செலவு பண்ணனுமா.. திருவாண்மியூர் தியாகராஜா மாதிரி ஏதாவது லோக்கல் தியேட்டரே போதும் ஜி3 இவன் படத்துக்குனு ஃபீல் பண்ண, ரைட்டுனு சொல்லி காசி தியேட்டர்லயே டிக்கெட்ட புக் பண்ணியாச்சு (3 பேருக்கும் சேத்து டிக்கெட் விலை வெறும் 240 ரூபாய் தான். அதுவும் பால்கனிக்கு :)).
படம் பாக்க உள்ள் போறதுக்கு முன்னாடியே பயபுள்ள சொல்லுச்சு. என்னமோ நிஜத்துல நடக்கற மாதிரியே எடுத்திருக்கேன்னு பில்டப்ப குடுத்திருக்காய்ங்க.. அனேகமா ரெண்டு பேரையும் கடைசில பிரிச்சிருவாய்ங்கனு நினைக்கறேன்னு.. அப்பவே கொஞ்சம் உஷாராகி இருக்கனும்.. தப்பு பண்ணிட்டோம். முதல் பாதி கொஞ்சம் சுமாரா இருந்துச்சு.. ரெண்டாவது பாதி ஒரு வேளை நல்லா இருக்கும் போலனு மனச தேத்திக்கிட்டோம்.. படம் முடிஞ்சப்புறம் தான் தெரிஞ்சுது முதல் பாதியே ஓரளவுக்கு தேவலைனு !!!! என்ன கொடுமை சார் இது :(((
அதுக்குனு படத்துல உனக்கு எதுவுமே புடிக்கலியானு கேக்ககூடாது. சில விஷயங்கள் புடிச்சிருந்துது.. ஏ.ஆர்.ரஹ்மான் ம்யூசிக், படத்துல வந்த லொகேஷன்ஸ்... எப்பவும் ஹீரோ கூடவே வர்ற “மங்களம்” கேரக்டர் மாதிரி இதுலயும் ஒருத்தர் வந்து கலக்கியிருக்கார்.. காக்க காக்கல நிஜமாவே அவரு தானாப்பா காமரா மேன்??!!
எல்லாத்தையும் சொல்லிட்டு தாமரையோட பாடல் வரிகள பத்தி சொல்லாட்டி எப்படி?? படம் பாக்கறதுக்கு முன்னாடி ஹோசானா பாட்டு மட்டுமே கேட்டிருந்தேன்.. அதுவும் ஆபீஸ்ல கேண்டீன்ல போடறப்போ கேட்டது தான்.. வரிகள் அவ்வளவா கவனிச்சதில்லை (பின்ன, சாப்பிடறதுல பிசியா இருக்கறப்போ இதெல்லாமா கவனிக்க முடியும் :P).. ஆனா இன்னிக்கு படம் பாக்கறப்போ மனசுல நின்ன பாட்டு மன்னிப்பாயா தான். வரிகள் பிரமாதம்ங்கறது மட்டும் இல்ல.. ஏ.ஆர்.ரஹ்மானும் ஷ்ரேயா கோஷலும் என்னமா உருகியிருக்காங்க.. அப்படியே பாட்ட போட்டுட்டு கண்ண மூடி ரசிச்சிட்டிருக்கலாம் போல இருக்கு. வீட்டுக்கு வந்ததுல இருந்து அந்த பாட்டு தான் லூப்ல ஓடிட்டிருக்கு. கடைசியா அந்த மாதிரி கண்ணை மூடி ரசிச்சு கேட்ட பாட்டுனா அது பொக்கிஷம் படத்துல “நிலா நீ வானம் காற்று” பாட்டு தான். அதுலயும் சின்மயி வாய்ஸ்ல கேக்கும்போது ஒரு தனி கிறக்கம் தான். அதுக்கப்புறம் இப்போ இந்த பாட்டு தான்..
மொத்ததுல படம் பாத்துட்டு வெளியில வர்றப்போ ஒரு நிம்மதி.. நல்ல வேளை.. இந்த படத்துக்கு அம்புட்டு செலவு பண்ணி மாயாஜால் எல்லாம் போகலைனு !! காப்பாத்தினதுக்கு ரொம்ம்ப நன்றி ஆண்டவா :))))

என் இனம்ங்க நீ(ங்க)! :)
இரண்டாம் பாதியை ஒரு அளவுக்கு மேல பார்க்க முடியல... தியேட்டர்ல எல்லாரும் கத்த ஆரம்பிச்சுட்டாங்க. துபாய்லயே இப்படின்னா சென்னையில எப்படி இருந்திருக்கும் :))
Seattle la young, lively crowd.. adhuke ellrum kaduppa irundhom. I cant believe GV menon is getting so many second chances, while others are being packed off mercilessly in this industry.. onume purilaba :-(
aiyo kadavule, nee en postuku repeattay, naan un postuku line ku line repeattay!!!! seriously!!
ama songs munnadiye kettadhu illiya, ekgi?
I don't see his (actor) movies for some weird reasons. May be not too.
அப்போவே கிளி சொல்லுச்சி..எஸ்கேப்புடா கோபின்னு ;))
\\:(( செவ்வாய்க்கிழமை ராத்திரி 12 மணி வரைக்கும் முழிச்சிருந்து பாத்தும் சத்யம்ல சைட் ஓபன் ஆகும் போதே “இடம் காலி இல்லை”னு சொல்லிருச்சு.\\\
;-))))))
:-) padathai vida neenga ticket vangina kathaye nalla irukunga
இந்தப் படம் சம அளவில் பிடித்தவர்கள் கூட்டத்துக்கும், பிடிக்காதவர் கூட்டத்துக்கும் இருக்கு, பிடித்ததில் என் வாதம்
1. இங்கே கதையை தேடாமல் காதல் வரும் போது தீர்க்கமாக முடிவெடுக்காமல் திணறும் அவஸ்தை #அனுபவம்
2. ஆண்கள் ஓவரா சீன் போட்டுக் காதலிக்கும் அதே சமயம் உள்ளுக்குள் எரிமலையாய் பெண்ணின் மனதில் முகிழ்ந்திருக்கும் காதல
3. டிப்பிக்கல் அப்பாக்களின் சுபாவம்
4. அலும்பு பண்ணாத அழகாக தன் பாத்திரத்தை செய்த சிம்பு
5. இயல்பாகக் காட்டிய ஊடல்கள் , கூடல்கள்
6. த்ரிஷாவின் முதல் படம்
இத்தகைய வகையறாக்களால் பிடித்துப் போனது, இன்னொரு தடவை பார்க்கத் தயார்.
(விஜயகாந்த் பாணியில்)பெரிய பாண்டிக்கு எப்பவுமே பெரிய மனசு அங்க்க்
@நான் ஆதவன்,
சேம் ப்ளட் :))))))
@கொடி,
ஹிஹி.. நாங்க எல்லாம் விஷுவல் பாத்தப்புறம் தான் பாட்ட கேக்கறது.. சில சம்யங்கள்ல விதிவிலக்கு உண்டு :D
@ப்ரியா,
யார் படமா இருந்தாலும் பாத்துட்டு நல்லா இல்லைனு சொன்னாலும் சொல்லுவோமே தவிர பாக்காம விடமாட்டோம் :)))
@கோபி,
தப்பிச்சிட்டீங்களா !!!
@இயற்கை,
அட ஆமால்ல :)))
@கானா பிரபா,
:)))))))))))))))))
ஒரு விஷயம் பிடிக்கறதுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.. ஆனா பிடிக்காம போறதுக்கு காரணம் ஏதும் தேவையில்லை.. அப்படினு நான் சொல்லலை.. லவ்டுடேல சுவலட்சுமி சொல்வாங்க :D
me the no reading.....
padam seeing first then putting comment 12 ok ?
13
@கோப்ஸ்,
டபுள் ஓகே :)))
Appo neenga tamil padammum parkareenga.
@ambulisamma,
aamaamungo :)))