கிளிஞ்சல்கள் - 2010

பதிவு எழுதி பல காலம் ஆனதால என்ன எழுதறது எப்படி எழுதறதுனு ஒன்னுமே புரிய மாட்டேங்குது. ஏதோ வர்ற ஃப்ளோல எழுதறேன். ரொம்ப மொக்கையா இருநதா பொறுத்துக்கோங்க :)

போன மாசம் பல ப்ளாக்கர் மீட்டுகள். கோபி வந்திருந்த பொழுது ஒரு முறை கப்பி, ஜே.கேவுடன், ஆயில்யன் வந்திருந்த போது ஒரு முறை கப்பி, கனகு, ஸ்ரீவத்ஸ்-உடன், மற்றோரு முறை முல்லை, தீபா, நான் ஆதவன், அமித்து அம்மா, அமுதா, ஸ்ரீமதி, கனகுவுடன்னு ஜனவரி மாசம் கலகலப்பா போச்சு. இது மட்டும் இல்லாம பழைய அலுவலக மக்களோட அவதார் (3D) & தமிழ்படம் தியேட்டர்ல பாத்து செம் ரகளை. ரெண்டுமே ஈவ்னிங் ஷோ போயிட்டு லேட்டா வந்த்தால வீட்ல நல்ல அர்ச்சனை. இதுக்கெல்லாம் அசந்துடுவோமா நாம?? உஷாரா இந்த வாரம் My name is Khan படத்துக்கு காலைல 9 மணி ஷோக்கு டிக்கெட் போட்டுட்டோமில்ல.. இப்ப என்ன செய்வாங்க.. இப்ப என்ன செய்வாங்க.. :P


நான் கண்டிப்பா எழுதியே ஆகனும்னு நினைச்ச இன்னொரு பதிவு என்னோட கோயம்பத்தூர் பயணம் பத்தி. கூட வர்றேன்னு சொன்ன கில்ஸ் கடைசி நேரத்தில்.. இல்லை இல்லை.. ஒரு வாரம் முன்னதாகவே காலை வாரி விட.. கூட வந்த சிவிஆர் அண்ணாச்சியும் அவர் மனைவியும் அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு அப்பீட் ஆக, ஜி3 அக்கா வராங்கனு பதிவு போட்ட சஞ்சய்யோ பயந்து ஊரை விட்டு ஓடிவிட விடப்பட்டேன் நான் தனிமையில் :( என்ன பண்ணலாம்னு ரொம்ப யோசிக்காம போய் சேந்த கொஞ்ச நேரத்துல நம்ம அனுசுயாக்கு போன போட்டு சேதி சொல்லிட்டு அவங்க வீட்ல ஆஜர் ஆகியாச்சு.சாயந்திரம் வரைக்கும் அவங்க வீட்ல நேரத்தை ஓட்டிட்டு சாயந்திரம் தினேஷோட ரிசப்ஷன் அட்டெண்ட் பண்ணிட்டு நல்லா சாப்டுட்டு (நான்-வெஜ் எல்லாம் போட்டாங்கப்பா :)) ஹோட்ட்லுக்கு வந்து தூங்கியாச்சு. காலைல சமத்தா கல்யாணத்துக்கு போயிட்டு வந்து ரூம்ல உட்கார்ந்து பொழுது போகாம டீவி பாத்துட்டிருந்தேன். புது நம்பர்ல இருந்து ஒரு ஃபோன். நான் மயில் விஜி பேசறேன். சஞ்சய் தான் உங்க நம்பர் குடுத்தாரு. என்ன பண்ணிட்டிருக்கீங்க? வேற ஏதும் ப்ளான் இல்லனா மதியம் வீட்டுக்கு சாப்பிட வாங்கனு கூப்பிட்டாங்க.. அவங்கள முன்னபின்ன எனக்கு தெரியாது. அவங்க ப்ளாக் பக்கம் நான் போனதில்லை. என் பளாக்குக்கும் அவங்க வந்த்தில்லை (அதனால தான் தைரியமா கூப்பிட்டாங்களோ!!!!). சிலர் ப்ளாக்ல அவங்க பின்னூட்டம் மட்டுமே பாத்திருக்கேன். இருந்தாலும் டக்குனு வர்றேனு ஒத்துக்கிட்டேன் (யாருப்பா அது?? சோறு போடறேன்னு கூப்பிட்டதால தானேனு சொல்றது??)ஆனா தெரியாதவங்க வீட்ல இருக்கற மாதிரியே தோணலை. அவங்களும் அவங்க கணவரும் ரொம்ப ஜாலியா பேசினாங்க. கலகலப்பா போச்சு அன்றைய மதியப்பொழுது.இதோ வர்றேன் அதோ வர்றேன்னு சொல்லிட்டிருந்த சஞ்சய் கரெக்டா வழியனுப்ப வந்துட்டாரு :)))


போன வாரத்துல ஒரு நாள் ஸ்ரீவத்ஸ் ஃபோன் பண்ணி ஆர்த்தி கிட்ட ஏரோபேட்டிக்ஸ் ஷோக்கு டிக்கெட் இருக்காம் வர்றீங்களானு கேட்க, நானும் சுறுசுறுப்பா அதைவிட வேற என்ன வேலைனு ஆஜர் ஆகிடறேன்னு சொல்லிட்டேன். என்ன ஷோன்னெல்லாம் எதுவுமே தெரியாது.ஆபீஸ்ல ஃப்ரெண்டு வீக் எண்ட் என்ன ப்ளான்னு கேட்டப்போ இது மாதிரி ம்யூசிக் அகாடமில ஏதோ ப்ரோக்ராமாம்னு சொன்னது தான் தாமதம். உனக்கு டிக்கெட் இருக்கா எப்படி கிடைச்சுதுனு ஏகப்பட்ட கேள்வி. அடடா அப்படி என்ன ஷோனு யோசிச்சப்போ அவங்களே அதுக்கான லிங்க்கும் குடுத்தாங்க. இது தான் அந்த லிங்க். அடடா இப்படி ஒரு சூப்பர் ப்ரோக்ராமுக்கா போறோம்னு ஒரே குஷிதான் போங்க. நான், ஆர்த்தி, ஆர்த்தியோட அம்மா, ஸ்ரீவத்ஸ், அபர்ணா, அபர்ணாவோட பையன் ஆகாஷ்னு எல்லாரும் சனிக்கிழமை அன்னிக்கு 6 மணி ஷோக்கு ஆஜர் ஆகியாச்சு. உள்ள போலாம்னு டிக்கெட்ட நீட்டினா அங்க இருக்கறவரு ஒரு பெரிய குண்ட போட்டுட்டாரு. இது 8.30 மணி ஷோக்கான டிக்கெட்டுங்கனு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. சரி வேற வழி இல்லை வெயிட் செஞ்சாவது பாத்துட்டு தான் போகனும்னு நாங்க முடிவெடுக்க அந்த நல்லவரு கொஞ்சம் மனமிறங்கி பரவாயில்ல.. கொஞ்சம் சீட் காலியா இருக்கு. நீங்க போய் பாத்துக்கோங்கனு உள்ள அனுப்பினான்.. எங்கிருந்தாலும் அவன் நீடூழி வாழட்டும் :D ப்ரோக்ராம் பத்தி என்னத்த சொல்ல.. சான்ஸே இல்ல போங்க.. அம்புட்டு சூப்பரா இருந்துது. ஒரு சின்ன ட்ரெய்லர் இங்க பாருஙக :)

27 Responses
  1. ஊய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் (பிகிலு அடிச்சுக்கிட்டு வாரேன்)


  2. //பதிவு எழுதி பல காலம் ஆனதால என்ன எழுதறது எப்படி எழுதறதுனு ஒன்னுமே புரிய மாட்டேங்குது.//

    வாஸ்தவம்தான்! :)



  3. //வேற ஏதும் ப்ளான் இல்லனா மதியம் வீட்டுக்கு சாப்பிட வாங்கனு கூப்பிட்டாங்க..//

    வேற ப்ளான்? சாப்பிட வாங்கன்னு கூப்பிட்ட அப்புறம், வேற ப்ளான் எங்கருந்து வரும்கறேன்? சுத்த அப்பாவியா இருப்பாங்க போலருக்கே..? :P

    எனக்கு ஒரெ ஒரு சந்தோஷம் தான் ஜி3.. என்னனா, ஆரம்ப காலத்துல (ஆச்சு 3.5 வருஷம்) நாங்க போட்ட ப்ளாக்கர் மீட்டுக்கு உன்னை கூப்பிடலைங்கறது தான் :P இல்லனா எனக்கும் அம்பிக்கும் கிடைச்ச அந்த 2 போண்டாவும் இல்லாம போயிருக்கும்!

    Anyway, அடுத்த சன்மம்னு ஒண்ணு இருந்தா, நான் நீயா தான் பொறக்கணும்! என்னா ஒரு வாழ்க்கை ச்ச.. :O


  4. Priya Says:

    When did u come cbe? Dec 09.. Ghosh I was ther G3.


  5. k4karthik Says:

    //(நான்-வெஜ் எல்லாம் போட்டாங்கப்பா :)) //

    அடடா..கோழி போச்சே...


  6. k4karthik Says:

    //Anyway, அடுத்த சன்மம்னு ஒண்ணு இருந்தா, நான் நீயா தான் பொறக்கணும்! என்னா ஒரு வாழ்க்கை ச்ச.. //

    ஹீ ஹீ...


  7. gils Says:

    //அடுத்த சன்மம்னு ஒண்ணு இருந்தா, நான் நீயா தான் பொறக்கணும்! என்னா ஒரு வாழ்க்கை ச்ச//

    LOL :))))))))))))) chaaancela...kedi roma kaanju poirukaanga nenakren


  8. G3 Says:

    @ஆயில்ஸ்,

    பிகில் அடிச்சு வரவேற்பு குடுத்ததுக்கு நன்றி அண்ணாச்சி :)))

    @கொடி,

    வெள்ளி மெடலு உங்களுக்கே தான் :D

    //சுத்த அப்பாவியா இருப்பாங்க போலருக்கே..? :P//

    என்ன செய்ய?? நமக்கு அறிமுகமாகறவங்க எல்லாரும் இப்படியே இருக்காங்க :))))

    //எனக்கு ஒரெ ஒரு சந்தோஷம் தான் ஜி3.. //

    என்னா ஒரு வில்லத்தனம் !!!

    //Anyway, அடுத்த சன்மம்னு ஒண்ணு இருந்தா, நான் நீயா தான் பொறக்கணும்! //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்போ நான் யாரா பொறக்கறது ????


  9. G3 Says:

    @ப்ரியா,

    நான் ஜனவரில வந்திருந்தேன் ப்ரியா. 16 & 17. நீங்க வந்தப்போ சொல்லியிருந்தா இன்னொரு தபா வந்து பாத்திருக்கலாம் :))

    @கே4கே,

    :))))))))))

    @கில்ஸ்,

    வாட் இஸ் திஸ்??? சின்னப்புள்ளத்தனமா பதிவுக்கு கமெண்ட் போடாம கமெண்ட்டுக்கு கமெண்ட்ட போடறீங்க :(((


  10. \\(யாருப்பா அது?? சோறு போடறேன்னு கூப்பிட்டதால தானேனு சொல்றது??)ஆ\\\

    ச்சச...இதையே எத்தனை முறை தான் சொல்றது..புதுசாக யோசிக்கனும் :-))

    \\நான் மயில் விஜி பேசறேன். சஞ்சய் தான் உங்க நம்பர் குடுத்தாரு. என்ன பண்ணிட்டிருக்கீங்க? வேற ஏதும் ப்ளான் இல்லனா மதியம் வீட்டுக்கு சாப்பிட வாங்கனு கூப்பிட்டாங்க.. \\

    கோயம்பத்தூர்ல ஓட்டல் ஆரம்பிக்க போறாங்க போல..விஜி அக்கா ;))


  11. G3 Says:

    @கோபி,

    //புதுசாக யோசிக்கனும் :-))//

    யோசிங்க யோசிங்க.. நல்லா யோசிங்க :D

    //
    கோயம்பத்தூர்ல ஓட்டல் ஆரம்பிக்க போறாங்க போல..விஜி அக்கா ;))//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இதுல ஏகப்பட்ட உள்குத்து தெரியுதே :((((


  12. பதிவு எழுதி பல காலம் ஆனதால என்ன எழுதறது எப்படி எழுதறதுனு ஒன்னுமே புரிய மாட்டேங்குது//

    அதானே பார்த்தேன், பதிவுக்கு வரும் வழியெல்லாம் ஒரே தூசு


  13. gils, pinna enna man, ivlo naal kazhichu post podurale nu paatha, adhuvum adhe outing saapadu.. sabbbbaa.. pugainju pugainju kaadhu rendum theenju poyi!!! :)


  14. //வேற ஏதும் ப்ளான் இல்லனா மதியம் வீட்டுக்கு சாப்பிட வாங்கனு கூப்பிட்டாங்க..//



    அவங்க சாப்பாட்டை சாப்பிட யாரும் கெடைக்க மாட்டாக்களான்னு தேடிட்டு இருந்தாங்க ரொம்ப நாளா.. நீங்க சிக்கிடீங்களா.. ஐயோ பாவம்..


  15. //பதிவு எழுதி பல காலம் ஆனதால என்ன எழுதறது எப்படி எழுதறதுனு ஒன்னுமே புரிய மாட்டேங்குது.//


    அதனாலதான் சஞ்சய் இல்லாம போனதுக்கு சந்தோஷப்படாம, ஃபீல் பண்ணியிருக்கீங்களா:-)


  16. //வேற ஏதும் ப்ளான் இல்லனா மதியம் வீட்டுக்கு சாப்பிட வாங்கனு கூப்பிட்டாங்க// idha, idha, idhaththaaney neengalum yethirpaartheenga???...:) LOL


  17. yakka idhu unakkey nalla iruka? adhu eppadi unakku mattum kothu kari'ku kooptukittey irukaaanga?

    // இருந்தாலும் டக்குனு வர்றேனு ஒத்துக்கிட்டேன் //
    adhu thaaney koooopdama irundhu irundhaaalum, naan innum saapdala, inga endha hotel nalla saapadu kidaikum nu kettu irundhu irupa????


  18. @kodi:- //இல்லனா எனக்கும் அம்பிக்கும் கிடைச்ச அந்த 2 போண்டாவும் இல்லாம போயிருக்கும்! //

    konjam decent ah appuram eduuthukalam nu oru 5 nimites amaidhiah irundha, plate ah kooda kaanala :)


  19. Priya Says:

    G3, I was ther for only 3 weeks in Dec. May be next time for sure.


  20. //konjam decent ah appuram eduuthukalam nu oru 5 nimites amaidhiah irundha, plate ah kooda kaanala :)//

    decentu? naangalan theatrela romance pannama decenta padam paapom.. neenga epdi gops saar? :D


  21. G3 Says:

    @கானா பிரபா,

    ஆமாங்க.. சுத்தப்படுத்த ஆள் வேணும். நீங்க உதவறீங்களா ;)))

    @பொற்கொடி,

    ஊர் சுத்தறதையும் சாப்பிடுவதையும் தவிர்த்து யாம் ஏதும் செய்வதில்லையே கொடி :)))

    @இயற்கை,

    அவ்ளோ மோசமில்லைங்க.. நல்லா தான் சமைச்சிருந்தாங்க :))

    //அதனாலதான் சஞ்சய் இல்லாம போனதுக்கு சந்தோஷப்படாம, ஃபீல் பண்ணியிருக்கீங்களா:-)//

    அட நீங்க வேற... அந்த மனுஷன் கிட்ட ஒரு ட்ரீட் வாங்கலாம்னு பாத்தா ஏமாத்திப்புட்டாரேன்னு தான் வருத்தம் :((


  22. G3 Says:

    @தக்குடுபாண்டி,

    வாங்க வாங்க. நீங்களும் ப்ளாக் பக்கம் வந்தாச்சா.. சூப்ப்ரு :))

    @கோப்ஸ்,

    நீயும் இங்கன இருந்தா உன்னையும் கூப்பிடுவாய்ங்கப்பா :)))

    //adhu thaaney koooopdama irundhu irundhaaalum, naan innum saapdala, inga endha hotel nalla saapadu kidaikum nu kettu irundhu irupa????//

    ஷ்ஷ்ஷ்... பப்ளிக் பப்ளிக்...

    //konjam decent ah appuram eduuthukalam nu oru 5 nimites amaidhiah irundha, plate ah kooda kaanala :)//

    பந்திக்கு முந்துனு சும்மாவா சொல்லிவைச்சுட்டு போனாங்க :P


  23. G3 Says:

    @ப்ரியா,

    கண்டிப்பா :))))

    @கொடி,

    :)))))))))))


  24. Aaarti Says:

    It was very nice meeeting u.. and yes, sema lucku appadi seekram showva pathathu.... :D


  25. @kodi:- //decentu? naangalan theatrela romance pannama decenta padam paapom.. neenga epdi gops saar? :D//


    innum neenga andha theatre ah vudalai ah?...lol.. adhu oru accident'nga.. matha padi sir i mean indha gops sir rembavey decent :)

    @g3:- yakka un english blog la comment podurathukulla... yabba, oru soda plz :)


  26. kanagu Says:

    ஒரே மீட்டிங், பிலிம், கல்யாணம்-னு கலக்குறீங்க...

    /*நான்-வெஜ் எல்லாம் போட்டாங்கப்பா :)*/

    நோட் பண்ணுங்கப்பா. நோட் பண்ணுங்கப்பா.. அது எப்படி... நான் போன எந்த கல்யாணத்துலயுமே நான் - வெஜ் போட்டதே இல்ல... ஆனா அங்க மட்டும்... :( :(