வழக்கமா மார்ச் 6னு சொன்னதும் என் மனசுல தெரியற காட்சி திரிசூலம் ரயில்வே ஸ்டேஷன்ல அதிகாலைல தனியா நான் உட்கார்ந்திருக்கற காட்சி தான். நாம ரொம்ப ரசிக்கும் தருணங்கள் மனசுல அப்படியே பதிஞ்சிடும். அந்த மாதிரி ஒரு தருணம் தான் அது. மார்ச் 6, 2005. என் தோழி திருமணம் ஆகி முதல் முறையா லண்டன் கிளம்பினா. அவளை வழியனுப்ப நாங்க எல்லாரும் போகலாம்னு முடிவு செஞ்சிருந்தோம். காலைல 4.30 மணிக்கு செக் இன் அவளுக்கு. அப்போ எங்க வீடு சேலையூர் பக்கம். தெரிஞ்ச ஆட்டோ டிரைவர்கிட்ட மறுநாள் காலைல 3.30 மணிக்கு வர சொல்லி முதல் நாளே சொல்லியிருந்தோம். அதனால அர்த்த ராத்திரி 3 மணிக்கே எழுந்து கிளம்பி ரெடியா இருக்க ஆட்டோ வந்ததும் தாம்பரம் வந்து அங்க இருந்து ட்ரெயின்ல திரிசூலம் வந்து நண்பர்கள சந்திச்சு, தோழியை வழியனுப்பிட்டு, பக்கத்துல இருந்த சங்கீதால காபி சாப்பிடலாம்னு போனோம். இனிய காலை வணக்கம்னு தமிழ்ல சொல்லி வரவேற்றது ஆச்சர்யமா இருந்தது சந்தோஷமாவும் இருந்துது. [ஆனா சமீபத்துல பொயிருந்தப்போ அப்படி ஏதுமில்லைங்கறது கொஞ்சம் ஏமாற்றமா இருந்துது :(]. நண்பர்களிடமிருந்து விடைபெற்று கிளம்பி வீட்டுக்கு வர்றதுக்காக ரயில்நிலையத்துல உட்கார்ந்திருந்த காட்சி தான் நான் ஆரம்பத்துல சொன்ன காட்சி. அந்த நிமிஷங்கள் இருந்த மனநிலைய எப்படி சொல்றதுனு தெரியலை. அமைதியா எந்தவித சலசல்ப்பும் இல்லாம... Peace of mind னு சொல்லுவாங்களே அது அப்போ இருந்துச்சு.
போன சனிக்கிழமை (அதே மார்ச் 6, ஆனா வருஷம் 2010 :P ) நண்பர்களுடன் Karthik calling karthik படம் போயிருந்தோம் [விமர்சனம் எல்லாம் எழுத பொறுமை இல்லை. ஒரே வரில சொல்லிடறேன். படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்த்து :) முக்கியமா கூட வந்திருந்த நண்பர் தீபிகாவ ஓவர் ஜொள்ளோட பாத்துட்டிருக்கும்போது பாப்கார்ன் வேனுமான்னு கேட்டு டிஸ்டர்ப் பண்ணி அவரை டென்ஷன் ஆக்கி ஜென்மசாபல்யம் அடைஞ்சது தனி கதை :D] படம் பாத்து முடிச்சதுக்கப்புறம் தாரப்பூர் டவர்ஸ்ல இருக்கற க்ரோமோ கடைல லாப்டாப்போட விலை மாடல் எல்லாம் கேட்டுட்டு நாங்க எதிர்பாக்கற டெல் கம்ப்யூட்டர் இல்லைனு சொல்லிட்டீங்க அதனால நாங்க போறோம்னு வெளிநடப்பு செஞ்சிட்டு கடை வாசல்ல கொஞ்ச நேரம் நின்னு பேசிட்டிருந்தோம்.நல்ல இதமான தென்றல் காற்று மனசுக்கு ரொம்ப சுகமா இருந்த்து. சென்னை மாநகரிலே அதுவும் மவுண்ட் ரோடிலானு ஆச்சர்யத்தோட அனுபவிச்சிட்டு நண்பர்களுக்கு டாட்டா சொல்லிட்டு எல்.ஐ.சி பஸ் ஸ்டாப் வந்து நின்னு கொஞ்ச நேரம் அந்த இயற்கை காற்ற ரசிச்சு அனுபவிச்சிட்டிருந்தேன். அந்த நிமிடங்கள்ல மறுபடி அதே Peace of mind ஃபீல் பண்ண முடிஞ்சது. (கொழுப்பெடுத்துப்போய் காலியா வந்த 4-5 பஸ்ஸ அடுத்த பஸ்ல போலாம்னு விட்டுட்டு ஒரு 20 நிமிஷவாவது அங்க நின்னுட்டிருந்தேன் :D)அதுலயும் சிகப்பு சிக்னல் போட்டதும் ஒரு நிமிடம் சாலை அநாதையாய் வண்டிகளே இல்லாமலும், அடுத்த நிமிடம் பச்சை சிக்னல் வந்ததும் ரொம்ப பிசியான சாலையா மாற்றதும் பாக்கறதுக்கு பிடிச்சிருந்துது.
அங்க நின்னுட்டிருக்கறப்போ சென்னைய பத்தி எங்க அபீஸ் மக்கள் (வட இந்திய மக்கள்) சொன்னது ஞாபகம் வந்த்து. “சென்னை மெட்ரோ சிட்டினு சொல்றோம். ஆனா மத்த மெட்ரோ சிட்டியான ஹைதராபாத், பெங்களூர், மும்பை மாதிரி சமீபத்தில கட்டப்பட்ட உயரமான கட்டிடங்கள்னு சொன்னா இங்க ரொம்பவே கம்மி. இப்பவும் நுங்கம்பாக்கம் மவுண்ட் ரோட்னு போனா இன்னுமும் பழைய கட்டிடங்கள் தான் நிறைய இருக்கு. புதுசா ஏதாவது இருந்தாலும் அது ரொம்பவும் உயர்ந்த கட்டிடமா இருக்கறதில்லை”னு சொல்லிட்டிருந்தாங்க. பஸ் ஸ்டாப்ல நின்னு சுத்தி இருந்த கட்டிடங்களை பார்த்தப்போ உண்மை தானோனு யோசிக்க வைச்சுச்சு. என்னதான் ஊருக்கு வெளிய மஹிந்திரா சிட்டி, ஓ.எம்.ஆர் சாலைலனு ஐ.டி. வளர்ந்தாலும் சிட்டிக்குள் சென்னை தன் முகவரியை பெரியதாக மாற்றி கொள்ளவில்லை தானோ??

Haven't seen K calling K yet. Yep Madras city needs a lot of change not only building but the first priority underground drainage and pollution.
Happy women's day Gayu.
//வழக்கமா மார்ச் 6னு சொன்னதும் என் மனசுல தெரியற காட்சி திரிசூலம் ரயில்வே ஸ்டேஷன்ல//
அப்ப வழக்கமே இல்லாம மார்ச் 6னு சொன்னா திரிசூலம் போலிஸ் ஸ்டேசன் ஞாபகம் வருமா?
//என் தோழி திருமணம் ஆகி முதல் முறையா லண்டன் கிளம்பினா.//
அவ்வ்வ்வ் முதல் முறையா திருமணம் ஆகின்னு மாத்தி படிச்சுட்டேன் பாஸ்
//அவளை வழியனுப்ப நாங்க எல்லாரும் போகலாம்னு முடிவு செஞ்சிருந்தோம்//
ஊர்காசு வாங்க போனோம்னு தெளிவா சொல்லிடலாமே பாஸ்
//அப்போ எங்க வீடு சேலையூர் பக்கம்.//
இப்ப சட்டையூர் பக்கமா?
//ஆனா சமீபத்துல பொயிருந்தப்போ அப்படி ஏதுமில்லைங்கறது கொஞ்சம் ஏமாற்றமா இருந்துது :(//
போன தடவை போனப்ப பில்லு கொடுத்தீங்களா?
//ஓ.எம்.ஆர் சாலைலனு ஐ.டி. வளர்ந்தாலும் சிட்டிக்குள் சென்னை தன் முகவரியை பெரியதாக மாற்றி கொள்ளவில்லை தானோ??//
நேரா இந்த ஒருகேள்விய கேட்டிருக்கலாமே பாஸ்... இதுக்கு போய் ரயில்வே ஸ்டேசன், லண்டன், சங்கீதா காபி, சினிமா, மவுண்ட்ரோடுன்னு இழுத்துகிட்டு இருக்கீகளே :))
\\நான் ஆதவன்☀ said...

\\
ஏலேய் நீ என்ன ஏரியாவுக்கு புச்சா...எதிலும் ஒரு சுவையோட கேட்பாங்க ஜி3...;)))
//கூட வந்திருந்த நண்பர் தீபிகாவ ஓவர் ஜொள்ளோட பாத்துட்டிருக்கும்போது //
யாருப்பா அது.. நமக்கு போட்டியா..!?
//எதிலும் ஒரு சுவையோட கேட்பாங்க ஜி3...;))//
ஹி ஹீ ஹீ ஹீ....
Happy women's day !
Happy March 6 ! Wish u many more happy returns of the day :)
//மார்ச் 6, 2005. என் தோழி திருமணம் ஆகி முதல் முறையா லண்டன் கிளம்பினா. //
??thirisoolathulenthu london polama??! avlo hitech areava athu...teriama poachay!!
//தோழியை வழியனுப்பிட்டு, பக்கத்துல இருந்த சங்கீதால காபி சாப்பிடலாம்னு போனோம்/
sangeethala kaapi saapdrathukaga vantu..sidegapla thozhia vazhianupineenga enbathu thaan unmai :D
//முக்கியமா கூட வந்திருந்த நண்பர் தீபிகாவ ஓவர் ஜொள்ளோட பாத்துட்டிருக்கும்போது பாப்கார்ன் வேனுமான்னு கேட்டு டிஸ்டர்ப் பண்ணி அவரை டென்ஷன் ஆக்கி ஜென்மசாபல்யம் அடைஞ்சது தனி கதை //
grrrrrrrrrrr....aduthavaati popcornla thookamarunthu kalanthu kuduthirom ungaluku!!
//அவ்வ்வ்வ் முதல் முறையா திருமணம் ஆகின்னு மாத்தி படிச்சுட்டேன் பாஸ்//
ROTFL :D :D ithu toppu :D
/ஏலேய் நீ என்ன ஏரியாவுக்கு புச்சா...எதிலும் ஒரு சுவையோட கேட்பாங்க ஜி3...;)))/
ejjatlee..inthavaaati..kaapi suvai :D
////கூட வந்திருந்த நண்பர் தீபிகாவ ஓவர் ஜொள்ளோட பாத்துட்டிருக்கும்போது //
யாருப்பா அது.. நமக்கு போட்டியா..!?//
anne...deepu ungaluku thangachi murai..ipdilaam pesapdaathu...antha nonbar yarunu inuma ungaluku dautu? :D
oru mokkaiyoda aarambikren,
Karthik calling Karthik in C:
Public void Karthik()
{
Karthik();
}
Yup, other metros'a compare panrappo Chennai has a lot of ground to cover.. be it Traffic problem, connectivity..
Rest of India feels we are culturally isolated.. not to mention language, food..
adade neengalum enna madhri bussa vitutu vedikkai patha vetti aapeecara? :)
alo BSK!!! enna romba naala aala kanom? sowkiyama?
@Priya,
Thanks for the wishes priya :) Happy women's day to u too :)
Pollution has become a part of chennai now a days :) Not sure how a pollutionless chennai wud look :))
@நான் ஆதவன்,
//அப்ப வழக்கமே இல்லாம மார்ச் 6னு சொன்னா திரிசூலம் போலிஸ் ஸ்டேசன் ஞாபகம் வருமா?//
திரிசூலத்துல போலீஸ் ஸ்டேசன் எல்லாம் இருக்கா பாஸ் !!!
//அவ்வ்வ்வ் முதல் முறையா திருமணம் ஆகின்னு மாத்தி படிச்சுட்டேன் பாஸ்//
உங்கள மாதிரியே எல்லாரையும் நினைச்சா எப்புடி பாஸ் :P
//ஊர்காசு வாங்க போனோம்னு தெளிவா சொல்லிடலாமே பாஸ்//
அட அதைத்தானே பாஸ் நானும் சொல்லியிருக்கேன்.. இல்லையா?? ;)))
//இப்ப சட்டையூர் பக்கமா?//
இல்ல.. தூரமா :)))
//போன தடவை போனப்ப பில்லு கொடுத்தீங்களா?//
என்னைக்கு நாம அதெல்லாம் குடுத்திருக்கோம்..அன்னிக்கு மட்டும் குடுக்க :P
//நேரா இந்த ஒருகேள்விய கேட்டிருக்கலாமே பாஸ்... இதுக்கு போய் ரயில்வே ஸ்டேசன், லண்டன், சங்கீதா காபி, சினிமா, மவுண்ட்ரோடுன்னு இழுத்துகிட்டு இருக்கீகளே :))//
நேரா கேட்டிருந்தா நீங்க இப்படி கும்மியடிச்சிருக்க முடியுமா பாஸ்???
@கோபி,
//ஏலேய் நீ என்ன ஏரியாவுக்கு புச்சா...எதிலும் ஒரு சுவையோட கேட்பாங்க ஜி3...;)))//
எப்படி கோபி உங்களால மட்டும் இப்படியெல்லாம் முடியுது.. அவ்வ்வ்வ்வ்வ்
@கே4கே,
//யாருப்பா அது.. நமக்கு போட்டியா..!?//
எல்லாம் நம்ம கில்ஸ் தான் :)))
@R-ambam,
Thank U :)) Ungalukkum happy womens day :))))
@கில்ஸ்,
//??thirisoolathulenthu london polama??!//
திரிசூலத்துல தான் விமானநிலையம் இருக்குனு தெரியாத ஞானசூன்யமா நீங்க :P
//sangeethala kaapi saapdrathukaga vantu..sidegapla thozhia vazhianupineenga enbathu thaan unmai :D//
இருக்கலாம் ;)))))
//grrrrrrrrrrr....aduthavaati popcornla thookamarunthu kalanthu kuduthirom ungaluku!!//
முடிஞ்சா ட்ரை செஞ்சு பாருங்க :))))
//ejjatlee..inthavaaati..kaapi suvai :D//
ஆஹா.. ஒரு க்ரூப்பாத்தான் கிளம்பியிருக்கீங்களா :))))
@பிஎஸ்கே,
வெல்கம் பேக்.. எப்படி இருக்க???
ப்ரோக்ராமிங்க்ல உனக்கு 100 மார்க் தான் போ :))))
//Rest of India feels we are culturally isolated.. not to mention language, food..//
மக்கள்ஸ் எல்லாம் இங்க நைட் லைஃபே இல்லைனு ஃபீல் பண்றாங்க.. என்னதிது எல்லா கடையும் டான்னு 10/10.30க்கு மூடிடறான்னு கேட்கறாங்க :(((
@கொடி,
//adade neengalum enna madhri bussa vitutu vedikkai patha vetti aapeecara? :)//
யூ டூ !!! சேம் ப்ளட் :)))))))
Liked this post somehow. Maybe because of the first sentence (specifically அதிகாலைல தனியா. Reminded me of Maniratnam's அலைபாயுதே montages). A good visual sentence.
எல்லா ஊரும் அப்படித்தான். பெங்களுரிலயும் not too many high-rises, Metro கட்டறேன்னு எல்லாத்தயும் தோண்டி போட்டிருக்காங்க. எல்லா roadம் traffic jam. No night life (No pubs/restaurants open beyond 11:00 PM. எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம் anyway).
ஆனாலும் பாவம் Gils. சும்மா ஏதோ ஜொள்ளிட்டிருந்தவரை Pop-corn கேட்டு அவரு ஜொள்ளுல நற நறன்னு மண்ண போட்டுட்டீங்க! வாழ்க :-)
Yes its true. Nannum thing panniruken . Chennai perukkathan cityya irukku.