பழைய அலுவலகத்துல இருந்த நண்பர்கள் எல்லாரும் தனித்தனியா பிரிஞ்சு வேற வேற கம்பெனிக்கு வந்துட்டதால தினமும் காலைல மொத்த க்ருப்புக்கும் குட்மார்னிங்னு ஒரு மெயில போட்டு ஆரம்பிச்சாச்சுனா அம்புட்டு தான். சாயந்திரம் வரைக்கும் கும்மியோ கும்மிதான் :) குறைந்த பட்சம் 100 மெயிலாவது ஓடும். என்னைக்கு ஆபீஸ்ல இருந்து மெயில் சர்வர ரொம்ப வேலை வாங்கறனு திட்டப்போறாய்ங்களோ!! ஆனாலும் மெயில்ல நம்ம மக்களோட குசும்பு மெயில்ல டாப் கியர்ல இருக்கும். படிச்சதும் சிரிப்ப அடக்கக முடியாது. அப்படி சிரிக்கவைச்ச சில விஷயங்கள் இங்கே..
முந்தின நாளே நாளைக்கு எனக்கு ட்ரெய்னிங் இருக்கு. அதனால கும்மில கலந்துக்கமுடியாது. சாயந்திரத்துக்கு மேல வந்து கலந்துக்கறேன் சொல்லிட்டு போயிட்டான் ஒரு நல்லவன். அடுத்த நாள் பாத்தா காலைலியே புள்ள பொறுப்பா மெயில் அனுப்பறான். என்னடா ஆச்சு ட்ரெய்னிங் போறேன்னு சொன்ன.. இங்க கும்மிட்டிருக்க... ட்ரெய்னிங் எப்படி போகுதுனு கேட்டா.. "பாத்தாலே தெரியலியா ஜி3. யார் பெத்த புள்ளையோ முன்னாடி நின்னு புலம்பிட்டிருக்கு.. நான் கடைசி வரிசைல உட்கார்ந்து மெயில் செக் பண்ணிட்டிருக்கேன்" ங்கறான்.
இனனொரு நல்லவருகிட்ட காதலர்தினம் எப்படி போச்சுனு கேட்டா "ஆயிரம் பூக்கள் உள்ள ரோஜாக்கூட்டத்தில் ஒரே ஒரு ரோஜாவை ரசிக்கும் முட்டாள் செயல் "காதல்". அதனால எல்லா பூக்களையும் ரசிப்போம்.. வாழ்க்கையை ரசிப்போம்" னு கெத்தா டயலாக் விடறாரு.
இந்த காமெடி பத்தலைனு வெள்ளிக்கிழமை அன்னிக்கு எல்லாருக்கும் பட்டப்பெயர் வைப்போம்னு ஒரு த்ரெட்டு.. அவ்வ்வ்வ்வ்.. சில சாம்பிள்கள் இங்கே..
சைட்டு ஷன்முகம் (ஓவரா சைட் அடிக்கறதால)
சமையல் சூறாவளி (சமைக்கறேன் பேர்வழினு குக்கர வெடிக்க வைச்சதால)
கேடி சாமியார்
பாடும் பைங்கிளி (இந்த பேருக்கு பின்னாடி ஒரு ஹிஸ்டரியே இருக்கு.. அதை தனியா இன்னொரு பதிவா தான் போடனும் :P)
சோப்லாங்கி சுப்பிரமணி
சிஜடி சீனாதானா (சைட் அடிக்கற பொண்ணுங்க டீடெய்ல்ஸ் எல்லாம் துப்பறியறதால)
என்னது.. எனக்கு என்ன பேரு வைச்சாங்கனு சொல்லனுமா.. ஹிஹி... நோ சொந்த செலவு சூனியம்ஸ் :P
இதெல்லாம் மெயில்ல தான்னு பாத்தா.. நேத்து புள்ள ஊருக்கு போறப்போ எஸ்.எம்.எஸ் அனுப்புது..
"நான் ட்ரெய்ன்ல எங்க ஊருக்கு போயிட்டிருக்கேன். <அவன் பேரு> சார் சென்னைல இருந்து கிளம்பிபட்டாருனு நினைப்புல யாராவது பஸ்ஸ கொளுத்துறது, ட்ரெயின மறிக்கறதுனு அட்டூழியம் பண்ணா... ஒரே ஒரு எஸ் எம் எஸ்ஸ் அனுப்புங்க....
அப்படியே அப்பீட் ஆகிடறேன்"
போறப்போதான் இப்படினு பாத்தா போய் சேந்ததும் இன்னொரு மெசேஜ்..
"மதுரையில் அதிசய பூ மழை. மக்கள் மகிழ்ச்சியில் மிதக்கிறார்கள்..
ஏன்னு கேளுங்க...
<அவன் பேரு> சார் மதுரைல லேண்ட் ஆகிட்டாரு.. காலை வணக்கம்"
காலங்கார்த்தலயேவாடா.. பேசாம உனக்கு பில்டப் பாஸ்கரன்னு பேர வச்சிடலாம்னு நான் பதில் போட.. பாஸ்கரன பஸ்காரன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டு புள்ள ஃபீல் பண்ண செம காமெடி தான் போங்க :)))

கம்பெனி வெளங்கிடும் :))
எதுக்கும் கேட்டு வச்சுக்கிறேன்ன்ன்... எதுனா எனக்கு உங்க கம்பெனில வேலை கிடைக்குமா?
ada pavigala inikum vada pocha??? :O
heehehe.. adhan pona postlaye solitene, adutha senmam.. adhe thaan. :D
haiya enaku postu matter kidaichuduchu!! :P
//பழைய அலுவலகத்துல இருந்த நண்பர்கள் எல்லாரும் தனித்தனியா பிரிஞ்சு வேற வேற கம்பெனிக்கு வந்துட்டதால..../
பழைய கம்பெனி இப்ப லீடிங்க்ல நல்லா இருக்கு :)
இப்படிக்கு
பழைய கம்பெனி பாஸ்
//என்னைக்கு ஆபீஸ்ல இருந்து மெயில் சர்வர ரொம்ப வேலை வாங்கறனு திட்டப்போறாய்ங்களோ!!//
ஒஹோ இதுதான் உங்களோட பிசி ஸ்டேட்டசு ஸ்டைலா பாஸ்? ரைட்டு !
//இனனொரு நல்லவருகிட்ட காதலர்தினம் எப்படி போச்சுனு கேட்டா "ஆயிரம் பூக்கள் உள்ள ரோஜாக்கூட்டத்தில் ஒரே ஒரு ரோஜாவை ரசிக்கும் முட்டாள் செயல் "காதல்". அதனால எல்லா பூக்களையும் ரசிப்போம்.. வாழ்க்கையை ரசிப்போம்" னு கெத்தா டயலாக் விடறாரு//
இந்த கேரக்டரை எனக்கு நொம்ப புடிச்சிருக்கே!!!
//
"மதுரையில் அதிசய பூ மழை. மக்கள் மகிழ்ச்சியில் மிதக்கிறார்கள்..//
இந்த கேரக்டரு பில்டப் பிதாமகனா இருக்கும்போலருக்கே ! :)
ஹா ஹா ஹா
////இனனொரு நல்லவருகிட்ட காதலர்தினம் எப்படி போச்சுனு கேட்டா "ஆயிரம் பூக்கள் உள்ள ரோஜாக்கூட்டத்தில் ஒரே ஒரு ரோஜாவை ரசிக்கும் முட்டாள் செயல் "காதல்". அதனால எல்லா பூக்களையும் ரசிப்போம்.. வாழ்க்கையை ரசிப்போம்" னு கெத்தா டயலாக் விடறாரு//
இந்த கேரக்டரை எனக்கு நொம்ப //
LOL :) same same :))
unga patta peyaru...potti kadaiekka :D :D
@ஆதவன்
வாங்க வாங்க :))) கம்பெனி வெளங்கறத பத்தி நமக்கேன் பாஸ் தேவையில்லாத கவலை :P
ஹிஹி.. உங்களுக்கு தானே.. பயோடேட்டா அனுப்புங்க.. HRல பாத்துட்டு பயப்படாம கூப்பிட்டாங்கன்னா வாங்க :))))
@கொடி,
என்ன கொடுமை கொடி இது.. உங்களுக்காக தானே ஊர் சுத்தறத பத்தியோ சாப்பாட்ட பத்தியோ போடாம விட்டேன்.. இப்பவும் இதே டயலாக் சொன்னா என்ன அர்த்த்ம்??? பாவம் ஜி3 :((
@ஆயில்ஸ்,
//பழைய கம்பெனி இப்ப லீடிங்க்ல நல்லா இருக்கு :)
இப்படிக்கு
பழைய கம்பெனி பாஸ்//
ஏதோ பொழைச்சு போங்கனு விட்டுட்டு வந்திருக்கோமாக்கும் :P
//ஒஹோ இதுதான் உங்களோட பிசி ஸ்டேட்டசு ஸ்டைலா பாஸ்? ரைட்டு !//
ஷ்ஷ்.. கம்பெனி சீக்ரெட் எல்லாம் வெளியில சொல்லப்புடாது பாஸ் :))))
//இந்த கேரக்டரை எனக்கு நொம்ப புடிச்சிருக்கே!!!//
அது சரி :P
//இந்த கேரக்டரு பில்டப் பிதாமகனா இருக்கும்போலருக்கே ! :)//
இந்த பேர் கூட நல்லா இருக்கே :))))
@கணேஷ்.,
வருகைக்கும் புன்னகைக்கும் நன்றி கணேஷ் :)))
@கில்ஸ்,
//unga patta peyaru...potti kadaiekka :D :D//
ஹலோ.. ஆர்குட்ல நடந்த கும்மியெல்லாம் அந்த பசங்களுக்கு தெரியாது.. அதனால இந்த பேரெல்லாம் அவங்களுக்கு தெரியாது :P
ROFTL
I so missed ur post :) thanks for the comeback, U are so lukcy to have all those nice ppl around u :) I could use friends like that these days :)
Office Lunch time , coffee break.. ellaam oru kondattam than.. ivlo vaelai panrathanaala thaan blog update panna time edukutho ?
ketta busy nu solluva, aanah 100 mail elaaam ok vaa? selaadhu selaadhu.....edho..
btw, G3 unmai aanah artham unga nanbargalukku theriumaah?
hehe.. arumai!
P.S: adiyaen ungal blogirku pudhuvaravu.. entry fee, ragging edhaavadhu irukumanu veetla kaeka sonnanga.. yaanum ex-infoscion.. concession edhaenum unda? ;)
100 mails a day!!... G3 velaye mail padikradhu dhana??? Pls let me know of any openings in ur company.. free food coupons maari... unlimited time with free salary ah :D
@Srivats,
ஹிஹி.. திரும்பி வந்துட்டோமில்ல.. இனி மொக்கைகள் தொடரும் :))
//U are so lukcy to have all those nice ppl around u :) I could use friends like that these days :)//
ரொம்ப வெட்டியா இருந்தா சொல்லுங்க.. கும்மி மெயில ஃபார்வேர்ட் பண்ணி விடறேன். சூப்பரா படிச்சு என்சாய் பண்ணலாம் :))))
@R-ambam,
ஹிஹி.. கரெக்டா புரிஞ்சிக்கிட்டீங்க :))))))
@Gops,
அதெல்லாம் ஆபீஸ் மெயில் ஜடில ராசா.. நீயும் ஆபீஸ் மெயில் ஐடிக்கு மெயில் அனுப்பு. டக்குனு பதில் அனுப்பறேனா இல்லையா பாரு :))
@Towards me,
Welcome to my blog :)))
ஹிஹி.. எண்ட்ரி ஃபீஸ் எல்லாம் நான் கேக்கமாட்டேன். தைரியமா வாங்க :)) ஃபீஸே கிடையாதுங்கறேன்.. நீங்க concession கேக்கறீங்களே !!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@Santosh,
Welcome to my blog :)))
என்னங்க எல்லாரும் 100 மெயிலுக்கு இப்புடி அலற்றீங்க??? அந்த க்ரூப்ல குறைஞ்சது 10 பேராவது இருக்காங்க. ஆளுக்கு 10 மெயில் போட்டாலே 100 மெயில் வந்துடும்ங்க !!!
சரி சரி.. சேத்துக்கலாம்.. ஆனா குறைஞ்சது 4 மாசம் இங்க வேலை பாக்கனும்.. சம்மதமா?? அப்ப தான் எனக்கு Referral bonus கிடைக்கும் :P
//சமையல் சூறாவளி (சமைக்கறேன் பேர்வழினு குக்கர வெடிக்க வைச்சதால)
//
enga vootle idhu dhinam dhinam nadakradhu dhan..!
//பாஸ்கரன பஸ்காரன்னு //
hee heee.. ayyoo pavam..!
@அண்ணாச்சி,
:))))))))))))))
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in

had a look at this blog for the first time... amazing.. thanks for your post brough some amazing memories back..
cute