என் இனிய எதிர்கட்சி மக்களே...

உங்களுக்கு நன்றி கூறி இந்த 200-வது பதிவை துவங்குகிறாள் இந்த ஜி3. நிச்சயமா 3 வருஷத்துக்கு முன்னாடி உங்க அறிமுகமெல்லாம் கிடைக்காம இருந்திருந்தா எனக்கு இத்தனை நண்பர்கள் இத்தனை சந்தோஷ தருணங்கள் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான்.. இப்படி எல்லாம் செண்ட்டியா பதிவு எழுதலாம் தான். ஆனா பாருங்க. ப்ளாக்ல வந்து எதை ஒழுங்கா கத்துகிட்டேனோ இல்லையோ.. அடுத்தவங்கள நல்லா கலாய்க்கறதுக்கும் நம்மள கலாய்க்கறப்போ அதை ஸ்போர்டிவ்வாவும் எடுத்துக்க கத்துகிட்டேன்னு தான் சொல்லனும். அப்படி இருக்கறப்போ நம்ம 200-வது பதிவும் கண்டிப்பா கலாய்க்கற பதிவா தானே இருக்கனும் ;-)))

சரி.. கலாய்க்கறதுனு முடிவு பண்ணதுக்கப்புறம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படறவங்க என் எதிர்கட்சி மக்கள் தான். அதுலயும் சரியா இந்த நேரம் பாத்து நம்ம கேகேவோட பிறந்தநாள் வர அவரே வசதியா வந்து என்னை கலாய்ங்கனு முதல் வரிசைல உட்கார்ந்துட்டாரு :)

இவரை பத்தி நான் தனியா சொல்ல தேவை இல்லைனு நினைக்கறேன். என் நண்பர்கள் எல்லார்கிட்டயும் கண்டிப்பா இவர் அடிச்ச ஏதாவது ஒரு கமெண்ட்ட பத்தி நிச்சயம் சொல்லியிருப்பேன். நான் ரொம்ப ரசிச்ச எப்பவுமே மறக்காத அவரோட கமெண்ட்டுகள் நிறைய இருக்கு. அந்த அளவுக்கு டைமிங்காவும் நக்கலாவும் கலாய்க்க கூடியவர்.

சரி வாங்க.. இந்த பதிவுக்காக நான் அவர் கிட்ட கேட்ட கேள்விகளும்.. அவர் சொன்ன பதில்களும் பாக்கலாம். நீல வண்ணத்துல இருக்கறதெல்லாம் அவர் பதிலை கேட்டு என் மனசாட்சி சொன்ன கமெண்ட்டுகள் :-))

உங்க ப்ளாக் வாழ்க்கை பத்தி சொல்லுங்க

நானும் இந்த சினிமா நடிகர்கள் மாதிரி.. "ஓ!! அது ஒரு விபத்து. நான் ப்ளாகுக்கு வராம இருந்திருந்தா டாக்டராகி இருப்பேன்" அப்படினு எல்லாம் சொல்ல ஆசை தான். ஆனா என்ன பண்றது? படிச்சிட்டு வேலைக்கு சேர்ந்தப்புறம் தானே ப்ளாக் எழுத ஆரம்பிச்சேன்.. நான் நிறைய ஊர் சுத்திட்டு இருந்தேன்.. ஹலோ! நான் சொல்ல வந்தது... ஊர் சுத்தி பாத்துட்டிருந்தேன்.. சரி.. ஒரு ஒரு ட்ரிப்போட அனுபவமும் ப்ளாக்ல எழுதி வைச்சுப்போம்னு ஆரம்பிச்சேன்.. ஊர் சுத்தி சுத்தி.. பட்ஜெட் இடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. அதான் லோ பட்ஜெட்ல ப்ளாக் எழுத ஆரம்பிச்சேன்.. அதான் இப்ப்வும் இருக்கற ப்ளாக் :-))

உங்களுக்கு சொன்ன சொல்ல காப்பாத்தற பழக்கம் என்னைக்குமே இல்லையாமே.. உண்மையா?? [Ref : S0ul-க்கு சமைச்சு குடுக்கறேன்னு சொன்ன வெண்டைக்காய் சாம்பார், ஜி3-க்கு குடுக்கறேன்னு சொன்ன ஆயிரம் பொற்காசுகள்.... ]

நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. S0ul வெண்டைக்காய் சாம்பார் சாப்பிட்டு எஸ்கேப் ஆனவங்கதான் அதுக்கு அப்புறம் அவங்க அட்ரஸே இல்லாம ஆகிட்டாங்க.. :D
ஜி3-க்கு அனுப்பின பொற்காசுகள.. அவங்க coin சாக்லேட்னு (coin மாதிரி கோல்ட் பேப்பர்ல கவர் பண்ண சாக்லேட்) நினைச்சு சாப்பிட்டு.. ஆஸ்பத்திரில அட்மிட் ஆன கதைய நான் எப்படி என் வாயால சொல்லுவேன் :P

போலீஸ்கார்.. போலீஸ்கார்... எங்க இருந்தாலும் ஓடி வாங்க.. இங்க ஒரு கொலைகாரர் தைரியமா தான் செஞ்ச ஒரு கொலை + ஒரு கொலை முயற்சி பத்தி வாக்குமூலம் குடுக்கறார்... சீக்கிரம் வாங்க.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துல வர்ற கட்டிபுடி வைத்தியம் மாதிரி உங்க கட்சியில கல்யாணமான மக்கள்ஸ் எல்லாம் கடைபிடிக்கற காலில்விழும் வைத்தியம் பத்தி விளக்கம் ப்ளீஸ்....

தேவர்மகன் ஸ்டைல்ல சொல்லனும்னா.. (சிவாஜி, கமல் டயலாக் சீன்..) திடீர்னு கால்ல விழுற வைத்தியத்த பத்தி கேட்டா நான் என்னப்பா சொல்லுவேன்.. யப்பா சக்தி, தி.மு.க முதல் தடவை ஜெயிச்சப்போ மொதல்ல போய் அண்ணா கால்ல விழுந்த பய நம்ம பய தான்.. காலம் காலமா கால்ல விழுற பையன் திடீர்னு கால்ல விழாத.. shake hands குடு அப்படினு சொன்னா.. என்ன பண்ணுவான்?? ஹிம்?? மெதுவா தான்யா வருவான்.. மெதுவா தான் வருவான்..

சோடா குடுங்கப்பு...

உங்களை யாரு இப்போ shake hands குடுக்க சொன்னது? அதை முதல்ல சொல்லுங்க.. சொன்னவங்கள உதைக்கனும்.. நீங்க இன்று போல் என்றும் காலில் விழ மனமார்ந்த ஆசீர்வாதங்கள் :P

உங்க ஆபீஸ்ல நாளைல இருந்து பிங்க் கலர் தான் dress code.. கண்டிப்பா பிங்க் கலர் டிரஸ்ல தான் ஆபீஸ் வரணும்னு சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?

ஷர்ட்ட கவர் பண்ற மாதிரி எனக்கு புடிச்ச கலர்ல புர்கா (ஜேஜே போடுற மாதிரி) போட்டுப்பேன்..

அதுவும் பிங்க் கலர் தான் போடனும்.. கேள்விய ஒழுங்கா படிங்க :P

Kay's brainwave-ல sidebarla Kay's braywave சேத்ததுக்கப்புறம் பயத்துல நீங்களே உங்க ப்ளாக் பக்கம் எட்டி பாக்கறதில்லையாமே.. உண்மையா???

அதை ஏன் கேட்கறீங்க... அங்க அதை போட்டதுக்கப்புறம் ஒரே ரசிகைகள் தொல்லை.. எல்லாரும் நீங்க பாடுறதை கேட்டு ஓடோடி வந்தோம்னு.. வீட்லயே தங்கிட்டாங்க.. பத்தாததுக்கு நான் பாடுறதுல மயங்கி ஒரு பொண்ணு ஒத்த கால்ல நின்னு என்னை கல்யாணம் வேற பண்ணிக்கிட்டானா பாருங்களேன்.. அவ வேற என் அளவுக்கு பெரிய பாடகியாகனும் ஆசை படறா.. அதான் அவளுக்கு ட்ரெய்னிங் குடுக்கறதுலியே எனக்கு டைம் சரியாபோயிடுது.. (நல்ல வேளை என் தங்கமணிக்கு ப்ளாக் படிக்கற பழக்கம் இல்லை :P)

அடப்பாவி.. பாட்டு கத்துக்க போன இடத்துல அம்மணியோட பாட்டுல மயங்கி, ஒழுங்கா என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க. இல்லாட்டி தினமும் பாட்டு பாடி பயமுறுத்துவேன்னு மிரட்டி அதே மாதிரி பாடி காட்ட அவங்க அதிர்ச்சியில மயங்கி விழுந்த கேப்ல தாலி கட்டி கூட்டிட்டு வந்துட்டு இப்போ என்னமா கதை விடறீங்க !!!

சரி.. கடைசியா ஜி3-யின் 200-வது பதிவு பத்தி..

அண்ணன் நாட்டாமை நாமம் வாழ்க... சகாக்கள் அருண், கில்ஸ் & BSK நாமம் வாழ்க.. (கட்சி முதல்ல...)

விஷூவல்லா இதை பத்தி சொல்லனும்னா.. ஜாலியா ஓடிட்டு திரியற கோழி மாதிரி எல்லார் ப்ளாக்லயும் கமெண்ட் போட்டுட்டு இருந்தாங்க ஜி3... என்னடா கோழிய அமுக்க ஒரு கூடை கிடைக்க மாட்டேங்குதேனு நாங்க கவலை பட்டப்ப ஜி3'யே கூடைய ஸ்பான்சர் பண்ணி இந்த ப்ளாக ஆரம்பிச்சாங்க.. ஜி3 ப்ளாக்ல ரொம்ப புடிச்சதுன்னா writer's block-ஏ வராத ஒரு தலைப்ப எடுத்துக்கிட்டாங்க... என்னனு கேட்கறீங்களா... அதாங்க.. சன் டீவில வாழ்த்தலாம் வாங்க ப்ரோக்ரேம் மாதிரி எல்லார் பிறந்தநாளுக்கும் கல்யாண நாளுக்கும் வாழ்த்து பதிவு போட்டே பாருங்க.. 200 பதிவுகள் போட்டுட்டு சச்சின் மாதிரி வெயிட்டா நிக்குறாங்க... [இல்லாட்டியும் ஜி3 எப்பொழுதும் வெயிட்டா தான் நிப்பாங்க.. சும்மாவா (ட்ரீட்) வசூல் ராணியாச்சே :D ] எங்கள் கட்சி மீட்டிங்-க்கு சிக்கன் பிரியாணி வாங்குவதற்காக எதிர் கட்சினும் பாராம தன் தலையையே அடமானம் வைத்து எங்களுக்கு பிரியாணி வாங்கி தந்த ஜி3, நீடூடி வாழனும்னு வாழ்த்தி, இன்னும் பல நூறு பதிவுகள் போடனும்னு வாழ்த்தி, எனக்கு இந்த பொன்னான வாய்ப்பை அளித்த ஜி3-க்கு நன்றி கூறி விடைபெற்று கொள்கிறேன்.. நன்றி வணக்கம்.

மிக்க நன்றி கேகே. உங்கள் நேரத்தை ஒதுக்கி என் கேள்விகளுக்கு பதில் சொன்னதுக்கும் இன்னும் என் ரப்ட்சர் எல்லாம் தாங்கிட்டு இருக்கறதுக்கும் :P உங்க பிறந்தநாள் அதுவுமா உங்களை வெறும் கையோட திருப்பி அனுப்பினா நல்லா இருக்காது. இந்தாங்க உங்களுக்கான பரிசு



இருங்க இருங்க மக்களே.. நீங்க எல்லாரும் எங்க கிளம்பிட்டீங்க? இனிமே தானே முக்கியமான விஷயமே இருக்கு.. நம்ம கேகேவும் அவர் தங்கமணியும் சேந்து பாடியிருக்கற டூயட்டை கேட்டுட்டு எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க..

Get this widget | Track details |


எச்சரிக்கை : பாட்டுல ஏதாவது குறை சொல்றவங்களுக்கு தண்டனையா கேகே டாண்ஸ் ஆடிய வீடியோ காமிக்கப்படும்.. பாத்து சூதனமா கமெண்ட் போடுங்க.. அம்புட்டு தான் சொல்லுவேன் :-))))
100 Responses
  1. எனக்கு தான் வடை எனக்கு தான் ;))))))


  2. //கோபிநாத் said...
    எனக்கு தான் வடை எனக்கு தான் ;))))))
    ///

    ரைட்டு தம்பி :)


  3. 200 பதிவுக்கு வாழ்த்துக்கள் :))))


  4. /அடுத்தவங்கள நல்லா கலாய்க்கறதுக்கும் நம்மள கலாய்க்கறப்போ அதை ஸ்போர்டிவ்வாவும் எடுத்துக்க கத்துகிட்டேன்னு தான் சொல்லனும்//

    குட் !

    குட்! நெறைய நெறைய நல்ல பழக்கவழக்கங்கள் கத்துக்கிட்டேன்னு சொல்லிப்புட்டீங்க :))


  5. \\உங்களுக்கு நன்றி கூறி இந்த 200-வது பதிவை துவங்குகிறாள் இந்த ஜி3\\

    தோடா வடையே வரல அதுக்குள்ள துவங்குறாங்களாமா!!! ;)))


  6. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;))


  7. //அவரே வசதியா வந்து என்னை கலாய்ங்கனு முதல் வரிசைல உட்கார்ந்துட்டாரு :)///

    நொம்ப்ப்ப நல்லவரு :))


  8. //தி.மு.க முதல் தடவை ஜெயிச்சப்போ மொதல்ல போய் அண்ணா கால்ல விழுந்த பய நம்ம பய தான்.. //



    :)))))

    ஓ....!

    பாலிடிக்ஸ் வேறயா....! :))


  9. அண்ணன் வந்துச்சு :)


  10. வாழ்த்துக்கள் ஜி3 போட்டு கும்மியை ஸ்டார்ட் செய்யறேன்


  11. //"என் இனிய எதிர்கட்சி மக்களே..."//

    அக்கா கேபினட் மினிஸ்டரப்போ :)


  12. //3 வருஷத்துக்கு முன்னாடி உங்க அறிமுகமெல்லாம் கிடைக்காம இருந்திருந்தா //

    நாங்கள்லாம் நிம்மதியா இருந்திருப்போம் :(


  13. //இப்படி எல்லாம் செண்ட்டியா பதிவு எழுதலாம் தான். //

    அப்ப இதுவும் மொக்கை பதிவுதானப்ப்பா


  14. பாஸ் பாட்டு சூப்பரூ வாழ்த்துக்கள் சொல்லிடுங்க கே.கேவுக்கும் :))))


  15. //நம்மள கலாய்க்கறப்போ அதை ஸ்போர்டிவ்வாவும் எடுத்துக்க கத்துகிட்டேன்னு தான் சொல்லனும்.//

    அந்த தைரியத்துலதான் கும்மி அடிக்கறோம்


  16. //நம்ம 200-வது பதிவும் கண்டிப்பா கலாய்க்கற பதிவா தானே இருக்கனும் ;-)))//

    ஹி..ஹி.. அப்படீங்களா அம்மிணி


  17. //சென்ஷி said...
    //நம்மள கலாய்க்கறப்போ அதை ஸ்போர்டிவ்வாவும் எடுத்துக்க கத்துகிட்டேன்னு தான் சொல்லனும்.//

    அந்த தைரியத்துலதான் கும்மி அடிக்கறோம்
    ///

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!


  18. //கலாய்க்கறதுனு முடிவு பண்ணதுக்கப்புறம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படறவங்க என் எதிர்கட்சி மக்கள் தான்.//

    யாரு மதிப்பு மிக்க மாண்புமிகுக்களை சொல்றீங்களா மேடம்!


  19. //என் நண்பர்கள் எல்லார்கிட்டயும் கண்டிப்பா இவர் அடிச்ச ஏதாவது ஒரு கமெண்ட்ட பத்தி நிச்சயம் சொல்லியிருப்பேன்.//

    யார் யார் காதுல ரத்தம் வருதுன்னு செக்கப்புக்கு அனுப்புங்கப்பா


  20. //அதுலயும் சரியா இந்த நேரம் பாத்து நம்ம கேகேவோட பிறந்தநாள் வர அவரே வசதியா வந்து என்னை கலாய்ங்கனு முதல் வரிசைல உட்கார்ந்துட்டாரு :)//

    அப்ப பின்னாடி இருக்கறவங்களை இப்பவே ஓடுறதுக்கு ரெடியா இருக்க சொல்லு மாப்பி


  21. //இவரை பத்தி நான் தனியா சொல்ல தேவை இல்லைனு நினைக்கறேன்.//

    அப்படியா.. அப்ப சோடா குடிச்சுட்டு உக்கார்ந்துக்குங்க


  22. //அந்த அளவுக்கு டைமிங்காவும் நக்கலாவும் கலாய்க்க கூடியவர்.//

    நம்பிட்டோம் :)


  23. //நீல வண்ணத்துல இருக்கறதெல்லாம் அவர் பதிலை கேட்டு என் மனசாட்சி சொன்ன கமெண்ட்டுகள் :-))//

    ஓ. இதுல ஜி3 யோட மனசாட்சியோட வேற கும்மி அடிக்கணுமா சரியா போச்சு போ


  24. //இருங்க இருங்க மக்களே.. நீங்க எல்லாரும் எங்க கிளம்பிட்டீங்க?///


    ஏன் கூடையில இருக்குற சாக்லேட்டை பிரிச்சு கொடுக்கப்போறீங்களா...?



  25. ம்ஹூம் பதிவு ரொம்ப சீரியசா எனக்கு தெரியாத ஆளுங்களை பத்தி இருக்குது

    சோ நேரடியா ஜி3 ய அட்டாக்கு செய்ங்கப்பா


  26. \\ சென்ஷி said...
    //இவரை பத்தி நான் தனியா சொல்ல தேவை இல்லைனு நினைக்கறேன்.//

    அப்படியா.. அப்ப சோடா குடிச்சுட்டு உக்கார்ந்துக்குங்க
    \\

    யாரை பார்த்து வெறும் சோடா மட்டும் குடிச்சுட்டு உக்கார சொன்னாய்..!!!!!!


    இது ஜி3 டா மாப்பி ;))


  27. தன்னுடைய 200வது பதிவை கவுஜை மழையாக்காமல் தப்பிக்க வைத்த ஜி3க்கு ஒரு ஸ்பெசல் ஓ ;)


  28. //
    யாரை பார்த்து வெறும் சோடா மட்டும் குடிச்சுட்டு உக்கார சொன்னாய்..!!!!!!


    இது ஜி3 டா மாப்பி ;))//

    ஓ. அப்ப சோடா பாட்டிலை பத்திரமா திருப்பி வாங்கி வை.. யூஸ் ஆகும்


  29. \\சென்ஷி said...
    ம்ஹூம் பதிவு ரொம்ப சீரியசா எனக்கு தெரியாத ஆளுங்களை பத்தி இருக்குது

    சோ நேரடியா ஜி3 ய அட்டாக்கு செய்ங்கப்பா
    \\

    ;))) டேய் மாப்பி தெரியலைன்னா என்ன எல்லாம் நம்ம மக்கள் தாண்டா ;))

    விளையாடு மாப்பி ;)


  30. //எச்சரிக்கை : பாட்டுல ஏதாவது குறை சொல்றவங்களுக்கு தண்டனையா கேகே டாண்ஸ் ஆடிய வீடியோ காமிக்கப்படும்.. பாத்து சூதனமா கமெண்ட் போடுங்க.. அம்புட்டு தான் சொல்லுவேன் :-))))//

    சான்ஸே இல்ல.. பாட்டு ஆஹோ ஓஹா :)


  31. //சென்ஷி said...
    ம்ஹூம் பதிவு ரொம்ப சீரியசா எனக்கு தெரியாத ஆளுங்களை பத்தி இருக்குது

    சோ நேரடியா ஜி3 ய அட்டாக்கு செய்ங்கப்பா
    ///

    எஸ்!

    எஸ்!

    அப்பத்தான் சேதாரம் இல்லாம வூடு போய் சேரமுடியும் :))))


  32. \\ஆயில்யன் said...
    மீ த 25
    \\

    அது முடிஞ்சி 6 வருஷம் ஆகுது...இன்னும் மீ த 25 ன்னு சொல்லிக்கிட்டு ;))


  33. //;))) டேய் மாப்பி தெரியலைன்னா என்ன எல்லாம் நம்ம மக்கள் தாண்டா ;))

    விளையாடு மாப்பி ;)//

    கில்லி அணியின் சார்பாக முதல் கல்லை சரியாக வீசியெறிய அண்ணன் ஆயிலை அழைக்கிறேன்


  34. //சென்ஷி said...
    //;))) டேய் மாப்பி தெரியலைன்னா என்ன எல்லாம் நம்ம மக்கள் தாண்டா ;))

    விளையாடு மாப்பி ;)//

    கில்லி அணியின் சார்பாக முதல் கல்லை சரியாக வீசியெறிய அண்ணன் ஆயிலை அழைக்கிறேன்
    //

    அடப்பாவி தம்பி இது என்னவிதமா ஆப்பு ????

    :)


  35. ஓஹ்... கல் சரியாக தலையில் படாமல் மைக்கை உடைத்துவிட்டதால் மைக் இல்லாமலே ஜி3 பேச ஆரம்பித்துவிட்டார்.

    பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ஆயில்


  36. ******ஜி3: nalla adichu aadunga.. enakku kanna sokkudhu.. naan appadi thoonga poren :) Naalaikku kalaila ezhundhu mothama padichikkaren
    :D*****

    சற்றுமுன் கிடைத்த செய்தி ;)))


  37. வெண்ணிலா கபடி குழுவின் ஒப்புக்கு சப்பாணி கோபியை கல்லெடுத்து அடிக்க அன்புடன் அழைக்கின்றேன்


  38. //கோபிநாத் said...
    ******ஜி3: nalla adichu aadunga.. enakku kanna sokkudhu.. naan appadi thoonga poren :) Naalaikku kalaila ezhundhu mothama padichikkaren
    :D*****

    சற்றுமுன் கிடைத்த செய்தி ;)))

    Fri May 29, 12:19:00 AM
    //

    நம்மளை நம்மி வுட்டுட்டு போயிருக்காங்க நல்லா அடிச்சு ஆடுங்கப்பா ஊருக்கு போறப்ப டிரீட் உண்டு:)))


  39. // கோபிநாத் said...

    ******ஜி3: nalla adichu aadunga.. enakku kanna sokkudhu.. naan appadi thoonga poren :) Naalaikku kalaila ezhundhu mothama padichikkaren
    :D*****

    சற்றுமுன் கிடைத்த செய்தி ;)))//

    ஆடுகளத்தை விட்டு ஜி3 அலறி அடித்து ஓடிவிட்டதால் தைரியமாய் கும்மி தொடரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்


  40. //சென்ஷி said...
    வெண்ணிலா கபடி குழுவின் ஒப்புக்கு சப்பாணி கோபியை கல்லெடுத்து அடிக்க அன்புடன் அழைக்கின்றேன்
    /

    வா தம்பி கோபி வா !


  41. \\சென்ஷி said...
    வெண்ணிலா கபடி குழுவின் ஒப்புக்கு சப்பாணி கோபியை கல்லெடுத்து அடிக்க அன்புடன் அழைக்கின்றேன்
    \\

    மகனே உன் மண்டை தான் முதல்ல ;)))


  42. //நம்மளை நம்மி வுட்டுட்டு போயிருக்காங்க நல்லா அடிச்சு ஆடுங்கப்பா ஊருக்கு போறப்ப டிரீட் உண்டு:)))//

    ஆமாம். இன்னிக்கு பத்திரமா ஃபிரிஜ்ல வச்சிருக்குற சாம்பார் ஆயில்ஸ்க்குத்தான்


  43. //******ஜி3: nalla adichu aadunga.. enakku kanna sokkudhu.. naan appadi thoonga poren :) Naalaikku kalaila ezhundhu mothama padichikkaren
    :D*****//

    கலவர பூமியில கல்லெடுத்து அடிச்சுட்டு இருக்கோம். வேடிக்கை பார்க்காம தூங்கப்போனா எப்படி?


  44. \\நம்மளை நம்மி வுட்டுட்டு போயிருக்காங்க நல்லா அடிச்சு ஆடுங்கப்பா ஊருக்கு போறப்ப டிரீட் உண்டு:)))\\

    ஆயில் அண்ணே நீங்க இன்னும் வளரவேல்லண்ணே ;))

    டிரீட் உண்டு ஆனா பில்லு யாரு கொடுப்பாங்க ;))


  45. //கோபிநாத் said...

    \\சென்ஷி said...
    வெண்ணிலா கபடி குழுவின் ஒப்புக்கு சப்பாணி கோபியை கல்லெடுத்து அடிக்க அன்புடன் அழைக்கின்றேன்
    \\

    மகனே உன் மண்டை தான் முதல்ல ;)))//

    நோ நாளைக்கு ஃபிரைடே, அப்புறம் சாட்டர்டே சண்டே முடிஞ்சுதான் மண்டே :)


  46. // கோபிநாத் said...

    \\நம்மளை நம்மி வுட்டுட்டு போயிருக்காங்க நல்லா அடிச்சு ஆடுங்கப்பா ஊருக்கு போறப்ப டிரீட் உண்டு:)))\\

    ஆயில் அண்ணே நீங்க இன்னும் வளரவேல்லண்ணே ;))

    டிரீட் உண்டு ஆனா பில்லு யாரு கொடுப்பாங்க ;))//

    டேய். பில்லு கொடுக்கற ஹோட்டலுக்கு எல்லாம் ஏண்டா ஆயிலை கூட்டிட்டு போறீங்க


  47. \\சென்ஷி said...
    //******ஜி3: nalla adichu aadunga.. enakku kanna sokkudhu.. naan appadi thoonga poren :) Naalaikku kalaila ezhundhu mothama padichikkaren
    :D*****//

    கலவர பூமியில கல்லெடுத்து அடிச்சுட்டு இருக்கோம். வேடிக்கை பார்க்காம தூங்கப்போனா எப்படி?
    \\

    கலவர

    கல்லெடுத்து

    ஆகா!!! கவுஜ கவுஜ ;)))


  48. ஹைய்யா நான் தான் 50
    அப்ப எனக்குத்த்தான் பொங்கலு


  49. \\சென்ஷி said...
    // கோபிநாத் said...

    \\நம்மளை நம்மி வுட்டுட்டு போயிருக்காங்க நல்லா அடிச்சு ஆடுங்கப்பா ஊருக்கு போறப்ப டிரீட் உண்டு:)))\\

    ஆயில் அண்ணே நீங்க இன்னும் வளரவேல்லண்ணே ;))

    டிரீட் உண்டு ஆனா பில்லு யாரு கொடுப்பாங்க ;))//

    டேய். பில்லு கொடுக்கற ஹோட்டலுக்கு எல்லாம் ஏண்டா ஆயிலை கூட்டிட்டு போறீங்க
    \\

    ஏன் அவருக்கு கணக்கு தெரியாதா!!??


  50. //கலவர

    கல்லெடுத்து

    ஆகா!!! கவுஜ கவுஜ ;)))//

    ஆமா. தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி வச்சு பக்கத்துல உக்கார்ந்துக்கோ


  51. \\சென்ஷி said...
    ஹைய்யா நான் தான் 50
    அப்ப எனக்குத்த்தான் பொங்கலு
    \\

    50வதாக வந்து பொங்கல் பெருசா இல்ல முதல்ல வந்த வடை பெருசா!! ;))


  52. //\\

    ஏன் அவருக்கு கணக்கு தெரியாதா!!??//

    அவருக்கு கணக்கு தவிர பாக்கி எல்லாம் வரும்


  53. //கோபிநாத் said...
    \\நம்மளை நம்மி வுட்டுட்டு போயிருக்காங்க நல்லா அடிச்சு ஆடுங்கப்பா ஊருக்கு போறப்ப டிரீட் உண்டு:)))\\

    ஆயில் அண்ணே நீங்க இன்னும் வளரவேல்லண்ணே ;))

    //

    அடப்பாவி தெரிஞ்சுக்கிட்டிண்ணா கம்முன்னு மனசுலயே வைச்சுக்கோய்யா அதையெல்லாமா சபையில சொல்றது ! :)))


  54. //
    50வதாக வந்து பொங்கல் பெருசா இல்ல முதல்ல வந்த வடை பெருசா!! ;))//

    யாரு முன்னாடி வர்றாங்கறது முக்கியமில்லை. யாரு கடைசி வரைக்கும் நிக்குறாங்குறதுதான் முக்கியம்


  55. //
    அடப்பாவி தெரிஞ்சுக்கிட்டிண்ணா கம்முன்னு மனசுலயே வைச்சுக்கோய்யா அதையெல்லாமா சபையில சொல்றது ! :)))//

    அடப்பாவி.. அப்ப நீ இன்னும் அந்த நாலரை அடியிலதான் நின்னுட்டு இருக்கியா


  56. // சென்ஷி said...
    //\\

    ஏன் அவருக்கு கணக்கு தெரியாதா!!??//

    அவருக்கு கணக்கு தவிர பாக்கி எல்லாம் வரும்
    //

    ம்ஹுக்கும் எங்க வருது :( எல்லாமே பெயிலுதான்



  57. \\ சென்ஷி said...
    //\\

    ஏன் அவருக்கு கணக்கு தெரியாதா!!??//

    அவருக்கு கணக்கு தவிர பாக்கி எல்லாம் வரும்
    \\

    அப்போ அண்ணி பெயர் பாக்கியா!!! ;)))


  58. //
    ம்ஹுக்கும் எங்க வருது :( எல்லாமே பெயிலுதான்//

    அதைத்தான்ப்பா ரொம்ப டீஜண்டா சொன்னேன்


  59. //சென்ஷி said...
    //
    50வதாக வந்து பொங்கல் பெருசா இல்ல முதல்ல வந்த வடை பெருசா!! ;))//

    யாரு முன்னாடி வர்றாங்கறது முக்கியமில்லை. யாரு கடைசி வரைக்கும் நிக்குறாங்குறதுதான் முக்கியம்
    //

    சூப்பரூ !


  60. //
    அப்போ அண்ணி பெயர் பாக்கியா!!! ;)))//

    நீ ஒரு அறிவுக்கொழுந்துண்ணே


  61. // ஆயில்யன் said...

    60//

    அறுபது அடித்த அண்ணனை வாழ்த்தி குருவி பட டிவிடி தருகிறோம்


  62. //சென்ஷி said...
    //
    அடப்பாவி தெரிஞ்சுக்கிட்டிண்ணா கம்முன்னு மனசுலயே வைச்சுக்கோய்யா அதையெல்லாமா சபையில சொல்றது ! :)))//

    அடப்பாவி.. அப்ப நீ இன்னும் அந்த நாலரை அடியிலதான் நின்னுட்டு இருக்கியா
    //

    ஐய்ய்ய்ய்ய்ய்ய அதை சொல்லுல நான் 6 அடி உசரமாக்கும்


  63. // ஆயில்யன் said...

    //சென்ஷி said...
    //
    50வதாக வந்து பொங்கல் பெருசா இல்ல முதல்ல வந்த வடை பெருசா!! ;))//

    யாரு முன்னாடி வர்றாங்கறது முக்கியமில்லை. யாரு கடைசி வரைக்கும் நிக்குறாங்குறதுதான் முக்கியம்
    //

    சூப்பரூ !//

    அப்படியா.. டேய் சூப்பராம்டா :)


  64. // கோபிநாத் said...
    \\ சென்ஷி said...
    //\\

    ஏன் அவருக்கு கணக்கு தெரியாதா!!??//

    அவருக்கு கணக்கு தவிர பாக்கி எல்லாம் வரும்
    \\

    அப்போ அண்ணி பெயர் பாக்கியா!!! ;)))
    //


    அப்படி எதாச்சும் இருந்தா கண்ணுல காமிங்கப்பா ஒளிச்சு வைச்சுக்கிட்டே இருக்காதீங்க :)))))


  65. //ஐய்ய்ய்ய்ய்ய்ய அதை சொல்லுல நான் 6 அடி உசரமாக்கும்//

    அப்ப நீ ஆறு அடிக்குத்தான் தாங்குவியா ஆயில்ஸ்


  66. நான் எஸ்கேப்பு ;))


  67. //அப்படி எதாச்சும் இருந்தா கண்ணுல காமிங்கப்பா ஒளிச்சு வைச்சுக்கிட்டே இருக்காதீங்க :)))))//

    வூட்டுக்கு போட்டோ அனுப்பி வைக்குறோம்.


  68. //கோபிநாத் said...

    நான் எஸ்கேப்பு ;))//

    நீ ரொம்ப லேட் பிக்கப்பு


  69. //சென்ஷி said...
    //ஐய்ய்ய்ய்ய்ய்ய அதை சொல்லுல நான் 6 அடி உசரமாக்கும்//

    அப்ப நீ ஆறு அடிக்குத்தான் தாங்குவியா ஆயில்ஸ்
    ///

    தம்பி சென்ஷி களம் மாறி தடம் மாறி போறோம் மீண்டும் லைனுக்கு வாப்பா!


  70. சரி விடு.. நானும் ஜூட் விட்டுக்கறேன்


  71. //கோபிநாத் said...
    நான் எஸ்கேப்பு ;))
    //

    சரி ஒடிப்போ! :)))


  72. // சென்ஷி said...
    சரி விடு.. நானும் ஜூட் விட்டுக்கறேன்
    //


    ரெண்டு பயபுள்ளைங்களும் ஒரே டைம்ல ஜூட் ஆகுதா ரைட்டு...?! :)))


  73. // சென்ஷி said...
    75
    //

    பிச்சுப்புடுவேன் நாந்தான் 75 இது 76 :))



  74. எண்பதுல முடிப்போம் காலையில மிச்சத்தை ஸ்டார்ட் பண்ணிக்கிடலாம் :)


  75. 200க்கு வாழ்த்துக்கள் :)


  76. KK Says:

    Intha cinema karaangalukkuthan vilambaram pannuraangana enakkuma??

    seri seri... arasiyal vaazhkayil ithellam satharanamappa....


    // வந்து என்னை கலாய்ங்கனு முதல் வரிசைல உட்கார்ந்துட்டாரு :)//
    Evvelavo pannitom itha panna maatoma?? :D


  77. KK Says:

    micha comment'a veetukku poi poduren...


  78. Priya Says:

    Congrats on your 200th post Gayu;))

    You beat KKs humor now.

    Happy Birthday KK. Where is Syam- nattamai? Madras veyyila kanama poitara?


  79. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !!!
    தொடரட்டும் உங்களது சேவை...


  80. gils Says:

    avvvvvvvvvv.....as usual konjam latea vanten...saga iniya piranthanaal nal vaazhthukkal :)) ennathan edir katchiya irunthalum..vaangina kaasuku vanjanai ilama koovirukanga ggg :D athukaga oru spl paarattu...appala..badilaam soooberu :D seri ravusu


  81. gayathri Says:

    200 பதிவுக்கு வாழ்த்துக்கள் :)))


  82. நாங்க எல்லாம் எந்த கட்சிங்க?


  83. kanagu Says:

    200-vathu padivukku vazhthukkal akka.. nalla kaalaikreenga.. :)

    athukkaga.. iravu veetuku sendravudam meedhi comment kal poda padum :)


  84. ambi Says:

    200 பதிவுக்கு வாழ்த்துக்கள் :))

    அடிச்சு ஆடிய கோபி, ஆயிலு, சென்ஷிக்கு ஒரு ஓ!

    ஜி3 அக்கா நாமம் வாழ்க, வளர்க அவர் புகழ். :))


  85. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... :)


  86. 200'க்கு வாழ்த்துக்கள்... :)


  87. 200க்கு வாழ்த்துகள் சாமியோவ்.. :)


    பாட்டு சூப்பரு.. :)))


  88. 200க்கு வாழ்த்துகள்


  89. G3 Says:

    @கோபி, ஆயில்யன், சென்ஷி,

    200-வது பதிவுக்கு வந்து வாழ்த்தி கும்மி அடிச்சு கொண்டாடிய உங்க பாசத்துக்கு நான் தலைவணங்குகிறேன் :)))))) நன்றி மக்கா :)

    @ஆளவந்தான்,

    நன்றி :))

    கட்சி விவரங்கள் தனி மடலில் :P


  90. G3 Says:

    @கேகே,

    வீட்டுக்கு போயிட்டு கமெண்ட்டு போடறேன்னு சொன்னீங்க.. இன்னும் வீடு போய் சேரலையா??? :P

    @ப்ரியா,

    Thanks Priya :-)))

    //You beat KKs humor now.//
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... :)))))))


  91. G3 Says:

    @இரவீ,

    நன்றி இரவீ :)))

    @கில்ஸ்,

    அடுத்த கூவல் உங்களுக்கு தானுங்கோ :P

    @காயத்ரி,

    நன்றிமா :)))


  92. G3 Says:

    @கனகு,

    நன்றி கனகு.. நீங்களும் இன்னும் வூட்டுக்கு போய் சேரலியா :P

    @அம்பி,

    நன்றி அம்பி :)))) ஓவரா கூவினதுக்கு அடுத்த முறை நீங்க சென்னை வர்றப்போ ஜூஸ் கடைல ட்ரீட் வைச்சிடலாம் :)


  93. G3 Says:

    @இராம்,

    நன்றி இராம் :))))

    @சஞ்சய்,

    நன்றி சஞ்சய் :))))))))

    @இயற்கை,

    நன்றிங்க :))))



  94. k4karthik Says:

    200-vadhu padhivukku 100 adiche paasakaara annan naane naane naane..!


  95. kanagu Says:

    ungaloda indha 200-vathu pathiva pathi sonna padhil than top :)
    athuvum epdi neengala vandhu poriyila sikkuneenga na avar sonnathu sooper :) sema comedy ah irundhudu :)


  96. Marutham Says:

    G#..
    kalakkungaaaaaaaaaaa


    200 and still counting... :D

    GREAT GOING>>..

    one of the consistent blogger u r! :)

    ROTFL @ the last 4 lines...
    idhu enaku thonama pochey..apdi adi vangitene! ;)

    KK great singing...2 perum dhool panirukeenga
    Made 4 eachother!

    Belated birthday wishes