வாழ்த்தலாம் வாங்க

நேத்தே போட்டிருக்க வேண்டிய பதிவு. சில தவிர்க்க முடியாத காரணங்களால் போட முடியாம போயிடுச்சு :-(

திருமண நாள் வாழ்த்துக்கள்

மே 18 - முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடும் பில்லு பரணி தம்பதியினர். கல்யாணத்துக்கு முன்னாடி எங்க ட்ரீட் போனாலும் நான் தான் பில் கட்டுவேன்னு அடம் பிடிச்சிட்டிருந்த நல்லவர், கல்யாணத்துக்கப்புறம் ட்ரீட்டுக்கே வரமாட்டேங்கறார் :-(

இதே நாளில் நம் இம்சை அரசியும் தனது முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடுகிறார். இவங்க என் செல்ல தங்கச்சிங்கறதால நோ கலாய்த்தல்ஸ் ;-)))


திருமண வாழ்த்துக்கள்

மே 20 - சுதந்திர பறவைகளாய் சுற்றிக்கொண்டிருந்த ஹரீஷ் & ப்ரீத்ஸ், பெற்றோரின் ஆசியுடன் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்க போறாங்க. இருவரும் வாழ்க்கையில் எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்


பிறநதநாள் வாழ்த்துக்கள்

மே 19 - எங்கள் பாசமலர் அண்ணன் நாமக்கல் சிபியின் பிறந்தநாள். போன வருஷம் இம்சை அரசி கல்யாணத்துக்காக நாமக்கல் போயிருந்தப்போ கரெக்டா 12 மணிக்கு அண்ணாச்சியோட பிறந்தநாள கொண்டாடினது சூப்பர் அனுபவம். இந்த முறை 12 மணிக்கு ஃபோன் பண்ணா நல்லா தூங்கிட்டிருக்காரு :-(

மே 20 - அற்புதமாய் சிறுகதைகள் எழுதி அசர வைக்கும் நம் கதாசிரியர் ஹரீஷ்-க்கு பிறந்தநாள்.

மே 23 - சமயல்ல பல புதிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி இதெல்லாம் இன்னிக்கு சமைச்சேன்னு படம் போட்டு நிரூபிக்கும் எங்கள் பாசமலர் பொற்கொடி-க்கு பிறந்தநாள்

இதே நாள்ல பிறந்தநாள் காணும் நல்லுள்ளம் நம் அம்பியின் தங்கமணி. அம்பியவே சமாளிக்கறாங்கன்னா இவங்க எம்புட்டு திறமைசாலினு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்


இவங்க எல்லாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!! நீங்களும் உங்க வாழ்த்துக்களை பின்னூட்டத்துல அள்ளி தெளிச்சிட்டு போங்க மக்கா :)))
12 Responses
  1. அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள் !


  2. //அடம் பிடிச்சிட்டிருந்த நல்லவர், கல்யாணத்துக்கப்புறம் ட்ரீட்டுக்கே வரமாட்டேங்கறார் :-(//

    ஐ திங்க் அவுரு ரொம்ப நல்லவரு ஆயிருப்பாரு போல....! (இப்படித்தான் இடையிடையே இங்கீலிசுல பேசி மீ த நோ இங்கீலிசு காமிக்கணுமாம்!)


  3. //இதே நாளில் நம் இம்சை அரசியும் தனது முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடுகிறார். இவங்க என் செல்ல தங்கச்சிங்கறதால நோ கலாய்த்தல்ஸ் ;-)))//

    ஒ.கே அக்செப்டட்!


  4. //மே 20 - சுதந்திர பறவைகளாய் சுற்றிக்கொண்டிருந்த ஹரீஷ் & ப்ரீத்ஸ், பெற்றோரின் ஆசியுடன்///

    பாஸ் அப்பன்னா அவுங்க லவ் பேர்ட்ஸ்...?!!!

    வாழ்த்துக்கள் !


  5. This comment has been removed by the author.

  6. அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள் !


  7. அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்:)


  8. ambi Says:

    எல்லருக்கும், ஹரிஷ், ப்ரீத்ஸ் ஜோடிக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். (விதி யாரை விட்டது?) :))

    @ஜி3 அக்கா, நான் தான் ரவுண்டு கட்டி ஆப்பு வாங்கிட்டு இருக்கேன். சமாளிக்கறாங்களாம் இல்ல, நல்லா கிண்டி விடறீங்க பா!


  9. ambi Says:

    @ஆயிலு, கரக்ட்டா பாயிண்டை புடிச்ச பா! :))

    ஹரீஷுக்கு நான் தன் இன்ஸ்பிரேஷனாக்கும். இத தனி மெயிலுல அவனே என்கிட்ட சொன்னான்.

    நீயும் மடமடன்னு காரியத்துல இறங்கு. :p


  10. Ramya Ramani Says:

    அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள் !



  11. Dinesh C Says:

    அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள் ! -- Repeatu!