இன்னுமா என்னை நம்பிட்டிருக்கீங்க???

"எனது கவிதையில் முதல் வரி நீ தான்
மொத்த கவிதையும் ஒரே ஒரு வரி தான்"

என் ஜி-டாக்-ல இந்த வரிகளை ஸ்டேடஸ் மெஸேஜா பாத்து அருமையா இருக்கு அட்டகாசமா இருக்கு கலக்கிட்டீங்கன்னு எல்லாம் பாராட்டின நல்லுள்ளங்களை பாத்தா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு.. பின்ன என்னங்க?? அந்த வரிகள் அவ்ளோ சூப்பரா இருக்கும்போதே உங்களுக்கு தெரிஞ்சிருக்க வேண்டாம்? அது என் சொந்த சரக்கா இருக்காதுனு... இன்னுமாய்யா என்னைய நம்பிக்கிட்டிருக்கீங்க !!!

ரொம்ப ரெகுலரா பேசாத மக்கள் கூட வந்து இந்த வரிகள் பத்தி கமெண்டினது ஆச்சர்யம்.. ஆனா என்ன படம் & என்ன பாட்டுனு சொன்னதும் பல பேர் இப்படி ஒரு படம்/பாட்டு பத்தி கேள்விபட்டதே இல்லைனு தான் சொன்னாங்க.. ஆகையால் உங்களுக்காக அந்த பாட்டும் பாட்டு வரிகளும் :)


Get Your Own Hindi Songs Player at Music Plugin

காஞ்சனையே காஞ்சனையே தீமீது தேன் சிந்த வா வா
காஞ்சனையே காஞ்சனையே தீமீது தேன் சிந்த வா வா

எனது கவிதையில் முதல் வரி நீ தான்
மொத்த கவிதையும் ஒரே ஒரு வரி தான்
இனி எந்தன் வாழ்விலே பெண் என்றால் நீ மட்டும் தான்

ஓ.. உன் பார்வை பட்டாம்பூச்சி என்மேல் அமர்ந்தே செல்ல
நான் அந்த பாரம் பட்டு விழுந்தேன் விழுந்தேன் மெல்ல
ஓ.. கைகள் கொடுத்து தூக்கி நிறுத்து வீழ்த்தி சென்றவள் நீயல்லவோ
என்னைமீறி உன்னை எண்ணினேன்
ஒரு மின்னல் திரி இருள் அள்ளினேன்
இங்கு எந்தன் கடிகாரமும் அதன் முட்கள் காட்டும் நொடி நேரமும்
உன்னைத் தான் சுற்றுது.. இல்லையேல் முட்டுது
காதலை எங்கு போய் விற்பது
காஞ்சனையே காஞ்சனையே தீமீது தேன் சிந்த வா வா

ம்... தூங்காமல் காத்து காத்து விழித்தே கழித்தேன் இரவை
ஏமாற்றம் தாளாமல் தான் தூதாய் தொடுத்தேன் நிலவை
ஓ.. தூக்கி எறிய தீயில் சறிய காதல் மனதென்ன காகிதமா
காலை மாலை இரு வேளையும் எந்தன் கனவில் வந்து நின்று சீண்டினாய்
ஒன்றும் நேரவில்லை என்றபின் நீ கள்ளம் சொல்லி என்னை தாண்டினாய்
ஏன் உன்னை சந்தித்தேன் என்று நான் சிந்தித்தேன்
என் இரு கண்களை கண்டித்தேன்
காஞ்சனையே காஞ்சனையே தீமீது தேன் சிந்த வா வா

எனது கவிதையில் முதல் வரி நீ தான்
மொத்த கவிதையும் ஒரே ஒரு வரி தான்
இனி எந்தன் வாழ்விலே பெண் என்றால் நீ மட்டும் தான்

படம் : நெஞ்சில் ஜில் ஜில்
இசை : இமான்
பாடியவர் : ஆதர்ஷ்
48 Responses
  1. திரையுலகில் கவிதாயினியாக கால் பதித்த உங்களுக்கு வாழ்த்துக்கள், இன்னும் மென்மேலும் இதுபோல பாட்டுக்கள் நீங்க எழுதணும் அதை நாம கேட்கணும் :)



  2. அந்தப் பாட்டை சினிமாவுக்கே நீங்கதானே எழுதினீங்கனு நாம இப்ப சொல்றம்


  3. G3 Says:

    @கானா,

    ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு என்மேல??? என்ன பிரச்சனையா இருந்தாலும் நாம் பேசி தீத்துப்போமே.. இம்புட்டு வன்முறை நல்லதுக்கில்லை !!!

    @ஆளவந்தான்,

    :))))))))))))


  4. //அந்தப் பாட்டை சினிமாவுக்கே நீங்கதானே எழுதினீங்கனு நாம இப்ப சொல்றம்//

    ஆமாம்

    சொல்றோம்!
    சொல்றோம்!
    சொல்றோம்!


  5. G3 Says:

    @All,

    நெட்ல எவ்ளோ தேடியும் இந்த பாட்டை உண்மையிலேயே எழுதினது யாருனு கண்டுபிடிக்க முடியலை.. யாராவது கண்டுபிடிச்சு குடுத்து என்னை இந்த சின்ன பாண்டி கிட்ட இருந்து காப்பாத்துங்கப்பு.. ப்ளீஸ்


  6. திரையுலகில் கவிதாயினியாக கால் பதித்த உங்களுக்கு வாழ்த்துக்கள், இன்னும் மென்மேலும் இதுபோல பாட்டுக்கள் நீங்க எழுதணும் அதை நீங்களே பாடணும் நாங்க அதை கேட்கணும்


  7. G3 Says:

    @பெரிய பாண்டி,

    யூ டூ????

    அவ்வ்வ்வ்வ்.. அண்ணே தங்கச்சி பாவம்ண்ணே.. விட்டுடுங்கண்ணே :((


  8. //Blogger G3 said...

    @All,

    நெட்ல எவ்ளோ தேடியும் இந்த பாட்டை உண்மையிலேயே எழுதினது யாருனு கண்டுபிடிக்க முடியலை.. யாராவது கண்டுபிடிச்சு குடுத்து என்னை இந்த சின்ன பாண்டி கிட்ட இருந்து காப்பாத்துங்கப்பு.. ப்ளீஸ்/

    யாருய்யா அந்த சின்ன பாண்டி எங்க பாஸை மிரட்டுறது????


  9. G3 said...
    ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு ?? என்ன பிரச்சனையா இருந்தாலும் நான் பாட்டு பாடி தீத்துக்கிறேன்.. இம்புட்டு வன்முறை நல்லதுக்கில்லை !!!


  10. G3 Says:

    @ஆயில்ஸ்,

    ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல.. உங்களுக்கு பாட்டு தானே பாடணும் வேணும்னா நான் கவிதாகிட்ட உங்க கோரிக்கைய forward பண்றேன். அவங்க பாடி அனுப்புவாங்க :)


  11. \\\இன்னுமா என்னை நம்பிட்டிருக்கீங்க???"\\

    பாவம் விடுங்க சின்னப்புள்ளைங்க..;)


  12. உங்களோட ஜி3 பெயரின் காரணத்தை போட்டுயிருந்த இந்த வம்பு எல்லாம் வருமா!!!! ;))


  13. கோபிநாத் said...

    உங்களோட ஜி3 பெயரின் காரணத்தை போட்டுயிருந்த இந்த வம்பு எல்லாம் வருமா!!!! ;))//

    றிப்பீட்டேஏஏஏ


  14. // G3 said...

    @ஆயில்ஸ்,

    ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல.. உங்களுக்கு பாட்டு தானே பாடணும் வேணும்னா நான் கவிதாகிட்ட உங்க கோரிக்கைய forward பண்றேன். அவங்க பாடி அனுப்புவாங்க :)///

    அட்டாக் பண்ண முடிவு பண்ணிட்டீங்களா பாஸ்

    ஸோ....!

    மீ


    த


    எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்


  15. //கோபிநாத் said...

    உங்களோட ஜி3 பெயரின் காரணத்தை போட்டுயிருந்த இந்த வம்பு எல்லாம் வருமா!!!! ;))//

    அதானே...!

    நான் ஒன்லி ஒன் கொஸ்டீன் தான் கேட்டேன் 3 என்ன நீங்க படிச்சு வாங்குன பட்டமான்னு...?


  16. //கோபிநாத் said...

    \\\இன்னுமா என்னை நம்பிட்டிருக்கீங்க???"\\

    பாவம் விடுங்க சின்னப்புள்ளைங்க..;)/

    அதான் பெருசு சொல்லிடுச்சுல்ல போங்கப்பு போய் பொழப்ப பாருங்க...!

    :))))))))))))



  17. G3 Says:

    @கோபி,

    //பாவம் விடுங்க சின்னப்புள்ளைங்க..;)//

    ஏதோ நீங்க சொல்றீங்கனு விடறேன் :))))

    //உங்களோட ஜி3 பெயரின் காரணத்தை போட்டுயிருந்த இந்த வம்பு எல்லாம் வருமா!!!! ;))//

    நம்ம நண்பர்களாச்சே.. நம்மள பத்தி தெரிஞ்சவங்கதானேனு தப்பா நினைச்சுப்புட்டேன் கோபி :(


  18. G3 Says:

    @ஆயில்யன்,

    //அட்டாக் பண்ண முடிவு பண்ணிட்டீங்களா பாஸ் ஸோ....!மீ த ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்//

    அந்த பயம் இருக்கட்டும் :P

    //நான் ஒன்லி ஒன் கொஸ்டீன் தான் கேட்டேன் 3 என்ன நீங்க படிச்சு வாங்குன பட்டமான்னு...?//

    ஆண்டவா... இவங்ககிட்ட இருந்து என்னைய மட்டும் காப்பாத்து ;) அப்படி காப்பாத்திட்டீனா எங்க ஆயில்ஸ் அண்ணாச்சிக்கு மொட்டை அடிச்சு நாக்குல அலகு குத்தி உன் சன்னிதிக்கு கூட்டிட்டு வர்றேன்பா :))


  19. G3 Says:

    @இராம்,

    நீங்க மூத்த பதிவர்தான் ஒத்துக்கறோம்.. அதுக்குனு இப்படி எல்லா பதிவுக்கும் வெறும் சிரிப்பான் போட்டுட்டு போறது உங்களுக்கே ஓவரா தெரியலை :P


  20. //ஆண்டவா... இவங்ககிட்ட இருந்து என்னைய மட்டும் காப்பாத்து ;) அப்படி காப்பாத்திட்டீனா எங்க ஆயில்ஸ் அண்ணாச்சிக்கு மொட்டை அடிச்சு நாக்குல அலகு குத்தி உன் சன்னிதிக்கு கூட்டிட்டு வர்றேன்பா :))/


    என்னோட சம்மதமே இல்லாம என்னிய கமிட் பண்ணிவிட்டுட்டீங்களே மொட்டை அடிக்காமலே பார்க்க ஒரு”ங” மாதிரி இருப்பேன் மொட்டை அடிச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


  21. //
    ஆண்டவா... இவங்ககிட்ட இருந்து என்னைய மட்டும் காப்பாத்து ;) அப்படி காப்பாத்திட்டீனா எங்க ஆயில்ஸ் அண்ணாச்சிக்கு மொட்டை அடிச்சு நாக்குல அலகு குத்தி உன் சன்னிதிக்கு கூட்டிட்டு வர்றேன்பா :))
    //
    ”நடக்கவச்சே” கூட்டிட்டு வர்றேன்பா :))


  22. //
    என்னோட சம்மதமே இல்லாம என்னிய கமிட் பண்ணிவிட்டுட்டீங்களே மொட்டை அடிக்காமலே பார்க்க ஒரு”ங” மாதிரி இருப்பேன் மொட்டை அடிச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    //
    அப்போ அலகுக்கு ஓகே வா?


  23. விடாம.. .குவார்ட்டரு


  24. ஆஹா இதை வச்சே ஒரு பதிவு போட்டுட்டீங்களா G3!!!!!!!!!!!!


  25. உண்மையிலேயே அழகான வரிகள்!


  26. நானும் கூட கேட்கனும்னு தான் நினைச்சேன்... ஆனா பாருங்க கொஞசம் பிசி ஆயிட்டதால கேட்க முடியலை:(


  27. இந்த மாதிரி நல்ல நல்ல வரிகளா ஸ்டேடஸ் மெஸ்சேஜ்ல வச்சு அதைப் பத்தியும் பதிவு போடனும் சரியா?????



  28. //
    ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு என்மேல??? என்ன பிரச்சனையா இருந்தாலும் நாம் பேசி தீத்துப்போமே.. இம்புட்டு வன்முறை நல்லதுக்கில்லை !!!
    //
    அட உங்களுக்கு இன்னும் விசயம் தெரியாத. நீங்க ”மொக்கை” போடுற்த, அதாவது பேசுறத வன்முறையில சேத்துட்டாங்களாம்.. பின்ன.. கத்தியின்றி ரத்த்மின்றி பலி பல நடக்குதுன்னா அது வன்முறை இல்லீய்யா...


    அய்யா யாராவது இந்த பொண்ணுக்கு உலகத்தை பத்தி எடுத்து சொல்லுங்கய்யா :)))


  29. ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா வந்ததிற்க்காக ஒரு 30 போட்டாச்சு:))


  30. ஆளவந்தான் said...
    //
    ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு என்மேல??? என்ன பிரச்சனையா இருந்தாலும் நாம் பேசி தீத்துப்போமே.. இம்புட்டு வன்முறை நல்லதுக்கில்லை !!!
    //
    அட உங்களுக்கு இன்னும் விசயம் தெரியாத. நீங்க ”மொக்கை” போடுற்த, அதாவது பேசுறத வன்முறையில சேத்துட்டாங்களாம்.. பின்ன.. கத்தியின்றி ரத்த்மின்றி பலி பல நடக்குதுன்னா அது வன்முறை இல்லீய்யா...


    அய்யா யாராவது இந்த பொண்ணுக்கு உலகத்தை பத்தி எடுத்து சொல்லுங்கய்யா :)))

    //

    ஏம்ப்பா உங்களுக்கு எல்லாம் தூக்கமே வரதா????
    சாமத்துல கூட எல்லா பக்கமும் கம்மெண்ட்டீட்டே இருக்கீங்களே????????????


  31. //

    ஏம்ப்பா உங்களுக்கு எல்லாம் தூக்கமே வரதா????
    சாமத்துல கூட எல்லா பக்கமும் கம்மெண்ட்டீட்டே இருக்கீங்களே????????????
    //
    எனக்கு இங்கே பட்ட பகல் ரெண்டு மணிங்க :)


  32. G3 Says:

    @ஆயில்ஸ்,

    //என்னோட சம்மதமே இல்லாம என்னிய கமிட் பண்ணிவிட்டுட்டீங்களே //

    எல்லாரும் பலி ஆட்டை கேட்டுகிட்டா பலி குடுக்க கமிட் பண்றாங்க ;-)


  33. G3 Says:

    @ஆளவந்தான்,

    //”நடக்கவச்சே” கூட்டிட்டு வர்றேன்பா :))//

    அதை இன்னும் முடிவு பண்ணலை.. ரொம்ப சேட்ட பண்ணார்னா அங்க பிரதட்சனம் பண்ண வைச்சே கூட கூட்டிட்டு போகலாம் ;-)

    //அப்போ அலகுக்கு ஓகே வா?//

    ஓகே இல்லாட்டியும் விடற மாதிரி இல்லே :-))

    //விடாம.. .குவார்ட்டரு//

    இதை மட்டும் கரெக்டா அடிச்சிடறீங்க :))

    //பின்ன.. கத்தியின்றி ரத்த்மின்றி பலி பல நடக்குதுன்னா அது வன்முறை இல்லீய்யா...//

    இது அபாண்டமான குற்றச்சாட்டு... என் மொக்கையால் பலி எதுவும் இதுவரை நடக்கலை.. முதல் பலியா உங்களை தான் இப்போதைக்கு டார்கெட் பண்ணியிருக்கேன் :P


  34. G3 Says:

    @பூர்ணிமா,

    //ஆஹா இதை வச்சே ஒரு பதிவு போட்டுட்டீங்களா G3!!!!!!!!!!!!//

    :)))))))))))))))))))))))

    //உண்மையிலேயே அழகான வரிகள்!//

    அதே அதே :))))

    //நானும் கூட கேட்கனும்னு தான் நினைச்சேன்... ஆனா பாருங்க கொஞசம் பிசி ஆயிட்டதால கேட்க முடியலை:(//

    ரொம்ப பிஜியா இருக்கீங்கனு பரிக்ஷீத் சொன்னான்

    //இந்த மாதிரி நல்ல நல்ல வரிகளா ஸ்டேடஸ் மெஸ்சேஜ்ல வச்சு அதைப் பத்தியும் பதிவு போடனும் சரியா?????//

    நீங்க சொல்லிட்டீங்க இல்லை.. செஞ்சிடலாம் :)))

    30-க்கு நன்னி :))) [நம்ம ரெகுலர் கவுண்ட்டர்ல ஒன்னு சேத்துக்கிட்டேன் :)))


  35. Anonymous Says:

    அட அட என்னா அருமையான வரிகள்.
    கலக்கிட்டீங்கப்பா...

    எனக்கு அந்த வரிகள் ரொம்ப பிடிக்கும்.


  36. gayathri Says:

    naan ippa than first itme intha song kekuren nalla irku da



  37. / G3 said...

    @ஆயில்ஸ்,

    ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல.. உங்களுக்கு பாட்டு தானே பாடணும் வேணும்னா நான் கவிதாகிட்ட உங்க கோரிக்கைய forward பண்றேன். அவங்க பாடி அனுப்புவாங்க :)///

    அட்டாக் பண்ண முடிவு பண்ணிட்டீங்களா பாஸ்

    ஸோ....!

    மீ


    த


    எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்//

    ஆமா இங்க என்ன நடக்குது ?!!

    கவிதாவின் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நனைய பேர் ரொம்ப ஆசைப்படற மாதிரி தெரியுது !! :))))

    ஆனாலும் உங்க எல்லாருக்கும் இவ்வளவு தைரியம் இருப்பதை நினைத்து நான் ரொம்ப பெருமை படறேன்..!!


  38. G3 Says:

    @மகா,

    :)))))))))))))


  39. G3 Says:

    @காயத்ரி,

    நீயும் இப்போ தான் கேக்கறியா? குட் குட் :)))

    40-க்கு நன்னி ஹை :)))


  40. G3 Says:

    @கவிதா,

    நோ கமெண்ட்ஸ் :)))))))))))


  41. Unknown Says:

    ippadiyum sila peru irukainga. :P


  42. KK Says:

    திரையுலகில் கவிதாயினியாக கால் பதித்த உங்களுக்கு வாழ்த்துக்கள், இன்னும் மென்மேலும் இதுபோல பாட்டுக்கள் நீங்க எழுதணும் அதை நீங்களே பாடணும் நாங்க அதை கேட்கணும்


  43. KK Says:

    btw font color'a black'a poteengana konja nalla kannu theriyum...


  44. இந்த பாட்டை எழுதியவர் தாமரைன்னு ஒரு தளம் சொல்லுது :)