புது டெம்ப்ளேட் போட்டுட்டு அதுக்கு ஏத்த மாதிரி ஒரு பதிவு போடலனா எப்படி?? ஹி..ஹி.. அதான் நம்ம வாத்தியாரம்மா பதிவுல இரூந்து ஒரு கவிதைய சுட்டு இங்கன போட்டுட்டேன் :-)) இவங்களோட எல்லா பதிவுமே என்ன ரொம்ப அசர வைக்கும்.. இவ்வளவு அருமையாவும் எழுத முடியுமான்னு.. சும்மா ஒரு சாம்பிள் பாருங்களேன்..
ஒரு தொலைபேசி உரையாடலின் முடிவில்
நாம் இருவரும்
சண்டையிட்டுக் கொண்டோம்
இருபத்து நான்கு யுகங்களாய்
இருவரும் பேசிக்கொள்ளவில்லை
மறுநாள் நான் வரும் வழியில்
ஒரு சாலை சந்திப்பில்
எனக்காக காத்திருந்தாய்!
உன்னை மறைத்துக் கடந்து செல்லும்
வாகனங்களுக்கிடையே
உன் புன்னகை மட்டும்
என்னிடம் வந்து சமாதானம் பேசியது...
அதன் பின்னாக...
அந்தச் சாலையைக் கடக்கும் போதெல்லாம்
நீ நின்றிருந்த இடத்தைக்
கண்கள் அன்னிச்சையாய் நோக்குகின்றன..
எப்போதும் போல
அது வெறுமையாய் இருக்கிறது
நீ இல்லாத என் வாழ்க்கையைப் போன்றே.
ஒரு தொலைபேசி உரையாடலின் முடிவில்
நாம் இருவரும்
சண்டையிட்டுக் கொண்டோம்
இருபத்து நான்கு யுகங்களாய்
இருவரும் பேசிக்கொள்ளவில்லை
மறுநாள் நான் வரும் வழியில்
ஒரு சாலை சந்திப்பில்
எனக்காக காத்திருந்தாய்!
உன்னை மறைத்துக் கடந்து செல்லும்
வாகனங்களுக்கிடையே
உன் புன்னகை மட்டும்
என்னிடம் வந்து சமாதானம் பேசியது...
அதன் பின்னாக...
அந்தச் சாலையைக் கடக்கும் போதெல்லாம்
நீ நின்றிருந்த இடத்தைக்
கண்கள் அன்னிச்சையாய் நோக்குகின்றன..
எப்போதும் போல
அது வெறுமையாய் இருக்கிறது
நீ இல்லாத என் வாழ்க்கையைப் போன்றே.

