மு.கு. : போன வாரம் சனிக்கிழமை எழுதி வைச்ச பதிவு இது. ப்ளாகர் சதியால பப்ளிஷ் பண்ண முடியாம போயிடுச்சு. இப்போ சில தில்லாலங்கடி வேலை பண்ணி போஸ்டை மீட்டெடுத்து பப்ளிஷிங்.. சில திருத்தங்களுடன் :))))))

வேலை இல்லாம வீட்ல வெட்டியா இருக்கறது ஒரு சுகம். அதிக வேலை இருந்து ஓவரா உழைச்சாலும் அந்த வேலை முடிச்சதும் ஒரு திருப்தி வரும் பாருங்க. அது வேறு விதமான சுகம். ஆனா இது ரெண்டும் இல்லாம தினமும் ஆபீஸ் போயிட்டு வெட்டியா உட்கார்ந்துட்டு வர்ற கொடுமை இருக்கே.. அவ்வ்வ்வ்வ்வ்... முடியலைங்க.. எவ்வளவு நேரம் தான் நானும் ஏதாவது டாக்குமெண்ட்ட தொறந்து வைச்சிக்கிட்டு படிக்கற மாதிரியே சீன போடுறது?? :((( தினமும் காலைல 10 / 11 மணிக்கு ஆபீஸ் போக வேண்டியது. கொஞ்ச நேரத்துல ஜூஸ் ஃப்ரேக்.. ஆமாங்க நான் வெளில காபி எல்லாம் சாப்பிட மாட்டேன்.. ஒன்லி ஃப்ரெஷ் ஜூஸ் தான் :P எப்படியும் திரும்பி சீட்டுக்கு வர 12 - 12.30 ஆகிடும். அடுத்து லஞ்ச் சாப்பிட 1.30 மணிக்கு போனா 2.30 மணிக்கு திரும்பி வந்துடுவோம். மறுபடி 3.45க்கு ஃப்ரேக் டைம்.. சாயங்கால நேரம்ங்கறதால அப்படி ஆபீஸ விட்டு வெளில வந்து ஒரு வாக்கிங் போனா பக்கத்துல இருக்கற டாமினோஸ்லயோ, சங்கீதாலயோ, பாஸ்கின்ஸ் ராபின்ஸ்லயோ, கேக் ஷாப்லயோ, சாட் செண்டர்லயோ, இல்லாட்டி ரோட்டோரம் விக்கற இளநீரோ, கரும்பு ஜூஸோ, தள்ளுவண்டில கொண்டு வர்ற குவாலிட்டி வால்ஸ் ஐஸ்க்ரீமோ சாப்டுட்டு திரும்ப 5 மணிக்கு சீட்டுக்கு வந்துடுவோம். 6 மணி ஆனதும் டான்னு வூட்டுக்கு கிளம்பி வந்துடுவோம். இதுக்கு நடுவுல ரொம்ப போர் அடிச்சா அப்படி பாண்டி பஜார் பக்கம் போய் இருக்கற காசுக்கு எதாவது ஷாப்பிங் பண்ணிட்டு வருவோம். இதெல்லாம் ஒரு பொழைப்பானு நீங்க கேக்கறது புரியுது. அதான் மனசாட்சி உறுத்தலுக்காக வாரத்துல ஒரு நாள் லீவு போட்டுட்டு வீட்ல ரெஸ்டிங் :)) ஏதோ வேலை இல்லாட்டியும் இப்படியாவது பொழுதை ஓட்டலாம்னு பாத்தா அதுக்கும் ஆப்பு வைக்கறாங்க. கூடிய சீக்கிரமே எல்லாரையும் மஹிந்திரா சிட்டிக்கு மாத்தறோம்னு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அந்த காட்ல போய் எப்படி பொழைப்ப ஓட்றது.. நினைச்சாலே டெர்ரராஆஆஆ இருக்கே :(((((

வருஷத்தோட முதல் நாள் எப்படி இருக்கோமோ அப்படித்தான் வருஷம் முழுக்க இருக்கும்னு யாரோ சொன்னாய்ங்க. ஆனா என் விஷயத்துல மட்டும் அது உல்டாவேவே இருக்கு. வருஷத்தோட முதல் நாள் வெட்டியா வூட்ல ஒக்காந்து ஆத்தாவ குலாப் ஜாமூன் செய்ய சொல்லி அருண் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்து குலாப்ஜாமூன் வித் ஐஸ்க்ரீம் சாப்ட்டு வீட்ல நல்லா ரெஸ்ட் எடுத்தேன். ஆனா அதுக்கப்புறம் ஊர் சுத்தல்ஸோ சுத்தல்ஸ் தான். ஒரு வாரம் கூட வீக் எண்ட் வீட்ல வெட்டியா உட்கார்றதில்லை :(( அதுலயும் டாப் 4 வாரமா தொடர்ந்து எதாவது ஒரு படம் போனது தான். நான் எப்போ இவ்ளோ சினிமா பைத்தியம் ஆனேன்னு எனக்கே புரியலை. ஆனா ஆன்லைன் புக்கிங் புன்னியத்துல சத்யம் தியேட்டர் மட்டும் போயிட்டிருந்த நாங்க இப்போ தேவி, காசி, ஈகா, அபிராமினு எல்லா தியேட்டரும் சுத்த ஆரம்பிச்சிட்டோம். சரி போன வாரமாவது வீட்ல இருக்கலாம்னு பாத்தா ம்ஹூம்.. ஃப்ரெண்டுக்கு திங்கட்கிழமை கல்யாணம். ஞாயிறு சாயந்திரம் ரிசெப்ஷன். அதுக்கு கிப்ட் வாங்கறோம்னு போன சனிக்கிழமை ரவுண்ட்ஸ். பல்லாவரத்துல இருந்து கிளம்பி ஒலிம்பியா டெக் பார்க் கிட்ட நண்பன மீட் பண்ணிட்டு, அங்க இருந்து அண்ணா நகர்ல இருக்கற இன்னொரு நண்பன் வூட்டுக்கு போயிட்டு, 3 பேரும் கிளம்பி ஷாப்பிங் போய் கிப்ட் எல்லாம் வாங்கிட்டு மந்தைவெளில இருக்கற பொண்ணு வீட்ல வந்து எல்லாத்தையும் குடுத்துட்டு, அப்படியே மாப்பிள்ளையும் பொண்ணும் கல்யாணத்துக்கப்புறம் தங்கப்போற வீட்டுக்கு மாப்பிள்ளையோட போய் பாத்துட்டு வந்து மறுபடி பொண்ணு வீட்ல வந்து கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சிட்டு ஒரு 7.30 மணிக்கா கிளம்பி அடையார் வேங்ஸ் கிட்சன்ல டின்னர் சாப்டுட்டு சமத்தா வூட்டுக்கு வந்து சேந்தாச்சு (ஒரு நக்ர்வலம் போயிட்டு வந்த எஃபெக்டல இருந்துச்சு !!!). ஆனா ஞாயிறும் திங்களும் போன வேகம் தெரியலை. சரி கலாட்டாவா இருந்துது. நான் பொண்ணு வீட்டு சைட்னும் ஃப்ரெண்ட் ஒருத்தன் பையன் வீட்டு சைட்னும் சப்போர்ட் பண்ண, நான் மாப்பிள்ளைய கால வார்றதும் அவன் பொண்ண கலாய்க்கறதும்னு செம ரகளை. மற்றுமொறு மறக்கமுடியாத கல்யாணம் :))))

எப்பவுமே கிரிக்கெட் மேட்ச் பாக்கற ஆர்வம் எனக்கு இருந்ததில்லை. வீட்ல வேற யாராவது மேட்ச் பாக்கறாங்க வேற சேனல் பாக்கமுடியாதுனா கூட நான் புக் படிக்கவோ இல்ல தூங்கவோ தான் செய்வேனே தவிர நோ கிரிக்கெட். அப்ப்டி இருந்த புள்ள, போன வாரம் மேலே சொன்ன ஈவினிங் ஸ்நாக்ஸ் நேரத்திற்கு டாமினோஸ் போயிருந்தப்ப, அங்க இருந்த டீவில சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி டேர் டெவில்ஸ் மேட்ச் ஓடிட்டிருந்துது. கூட வந்த ஃப்ரெண்டு ஆர்வமா அதை பாக்க, பேச்சு துணைக்கு ஆள் இல்லாம நான் வெளில வேடிக்கை பாத்துட்டிருந்தேன். டெல்லி டீம் பயங்கரமா ரன் அடிச்சிட்டிருந்ததால சென்னை ஜெயிக்கறது கஷ்டம்னு ஃபீலிங்க்ஸ் வேற இதுல. திரும்பி வீட்டுக்கு வந்ததும் என்னையும் அறியாம ஒரு ஆர்வம் மேட்ச் என்ன தான் ஆச்சுனு. பாத்தா 26 பால்ல 31 ரன் வேனும்னு இருந்துது. கொஞ்ச நேரம் பாத்தேன்... முடியலை. நமக்கு இதெல்லாம் பாக்கற அளவுக்கு என்னைக்கு பொறுமை இருந்திருக்கு??? வேற சேனல்ல படம் பாத்துட்டே அப்பப்போ இந்த பக்கம் ஸ்கோர் மட்டும் பாத்துட்டிருந்தேன். ஒரு வழியா கடைசில சென்னை ஜெயிச்சப்போ ஹப்பாடன்னு இருந்துச்சு. ஆனாலும் ஒரு முழு மேட்ச்ச ஃபுல்லா பாக்கற அளவுக்கு என்னைக்காவது எனக்கு பொறுமை வருமானு தெரியலை !!!

cool aa irukeenga enjoy!
ஓய்வுநேரத்தை அனுபவிங்க. ஏன் ரொம்பக் கம்மியா எழுதுறீங்க? அடிக்கடி எழுதுங்க.
ஸ்ரீ....
பாஸ் உங்களுக்கு இவ்ளோ கஷ்டங்கள் நெருக்கடிகளா படிச்சுட்டு அப்படியே ஸ்ட்ரக் ஆகிப்போயிட்டேன்!
ஆண்டவனை வேண்டிக்கோங்க!
எல்லாம் நல்லபடியா 24 அவர்ஸ் பத்தாத அளவுக்கு ஆணி புடுங்க விடுவாரு! :)))))))))))))
பாஸ் ஆபிஸ்ல உங்க கஷ்டத்தை கேட்கும் போது எனக்கு அழுகாச்சியா வருது. எனக்கும் உங்க கஷ்டத்துல பங்கெடுத்துக்கனும் போல இருக்கு. இந்த சின்ன வயசுல உங்களுக்கு தான் எவ்வளிவு கஷ்டம் :(
//ஓய்வுநேரத்தை அனுபவிங்க. ஏன் ரொம்பக் கம்மியா எழுதுறீங்க? அடிக்கடி எழுதுங்க.
ஸ்ரீ....//
அவ்வ்வ்வ் உசுப்பேத்தி விடுறாங்க பாஸ். கவுந்திடாதீங்க..... எப்பவும் போல சோம்பேறித்தனமாவே இருங்க :)
ஜி3 நீங்க செய்யுறதுக்கு பெயர் வேலைன்னா நீங்க செய்யுற இடத்துக்கு பெயர் கம்பெனின்னா அப்போ நாங்க செய்யுறதுக்கு பெயர் இன்னா...!! டேய் டேமேஜர்ஸ் இந்த பதிவு எல்லாம் படிங்கடா...;((( அவ்வ்வ்வ்வவ்f
மனம் போல தினம் ஜமாய்.. கோக கோலா என்ஜாய்...
// இதுக்கு நடுவுல ரொம்ப போர் அடிச்சா //
ஹலோ.. இதுக்கு நடுவுலேன்னு ஏதும் இருக்கா?
இன்னுமா இந்த உலகம் உன்னை நம்பி கிட்டு இருக்கு?
ஏய் இந்தா, இங்க பாரு
//காலைல 10 / 11 மணிக்கு ஆபீஸ் போக வேண்டியது. கொஞ்ச நேரத்துல ஜூஸ் ஃப்ரேக்.. ஆமாங்க நான் வெளில காபி எல்லாம் சாப்பிட மாட்டேன்.. ஒன்லி ஃப்ரெஷ் ஜூஸ் தான் :P எப்படியும் திரும்பி சீட்டுக்கு வர 12 - 12.30 ஆகிடும். அடுத்து லஞ்ச் சாப்பிட 1.30 மணிக்கு போனா 2.30 மணிக்கு திரும்பி வந்துடுவோம். மறுபடி 3.45க்கு ஃப்ரேக் டைம்.. சாயங்கால நேரம்ங்கறதால அப்படி ஆபீஸ விட்டு வெளில வந்து ஒரு வாக்கிங் போனா பக்கத்துல இருக்கற டாமினோஸ்லயோ, சங்கீதாலயோ, பாஸ்கின்ஸ் ராபின்ஸ்லயோ, கேக் ஷாப்லயோ, சாட் செண்டர்லயோ, இல்லாட்டி ரோட்டோரம் விக்கற இளநீரோ, கரும்பு ஜூஸோ, தள்ளுவண்டில கொண்டு வர்ற குவாலிட்டி வால்ஸ் ஐஸ்க்ரீமோ சாப்டுட்டு திரும்ப 5 மணிக்கு சீட்டுக்கு வந்துடுவோம். 6 மணி ஆனதும் டான்னு வூட்டுக்கு கிளம்பி வந்துடுவோம்//
இதெல்லாம் நாங்க உன் கிட்ட கேட்டோமா? ஏன் எங்க வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிகிற? உங்க அம்மா கிட்ட சொல்லி மிளகாய், உப்பு போட்டு உனக்கு சுத்தி போட சொல்லு,
(பின் குறிப்பு:- அது புது வித மிளகாய் ஊறுகாய்'னு நினைச்சி எடுத்து சாப்பிட்டுடாத ஒகே?)
பிறந்தா உன்னன மாதிரி தான் பிறக்கனும்'னு ஒரு கமெண்ட் மிஸ் ஆகுதே ஒரு மிஸஸ் கிட்ட இருந்து.. :) இந்நேரம் வந்து இருக்கனுமே? வடை காப்பி வடை காப்பி..
//ஏதோ வேலை இல்லாட்டியும் இப்படியாவது பொழுதை ஓட்டலாம்னு பாத்தா அதுக்கும் ஆப்பு வைக்கறாங்க. கூடிய சீக்கிரமே எல்லாரையும் மஹிந்திரா சிட்டிக்கு மாத்தறோம்னு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அந்த காட்ல போய் எப்படி பொழைப்ப ஓட்றது.. நினைச்சாலே டெர்ரராஆஆஆ இருக்கே :(((((
//
ஏய் இந்தா ஏய்யேய் இந்தா,
வைக்க போறாஙக இல்ல ஆப்பு, அங்க இருக்கும் ஒன்லி தோப்பு,
நொறுக்கு தீனீ திங்க உனக்கு கிடைக்காதே கேப்பு....
:)
@k4k:- //மனம் போல தினம் ஜமாய்.. கோக கோலா என்ஜாய்//
இது எதுக்கு? அதான் சொ. அக்கா ஒன்லி பிரெஷ் ஜீஸ்'னு சொல்லிட்டாங்களே :)
எனக்கு தான் 13
neenga spencer plaza.la irukkara office.kka velai sorry poitu vandhundu irukkeenga?
Bench.la irukkara kodumaiyum,padaikara madhir nadikkara kodumaiyum romba kashtam,group.ah outlook.la jalli adicha konja timepass pannalam,illana romba kashtam.
Cricket matter.la naan unga companion,eleven fools are playing,11 lakh fools are watching.
@ambulisamma - /Cricket matter.la naan unga companion,eleven fools are playing,11 lakh fools are watching.//
அப்போ சார் எதை பார்ப்பீங்க? வீடியோ கேம்ஸ் ஆ?
//கூடிய சீக்கிரமே எல்லாரையும் மஹிந்திரா சிட்டிக்கு மாத்தறோம்னு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அந்த காட்ல போய் எப்படி பொழைப்ப ஓட்றது.. நினைச்சாலே டெர்ரராஆஆஆ இருக்கே :(((((
//
aaandavan oruvn irukindraan..mauahahahahaa
uffffff.. gops nandri, naan solla vendiyadhu ellathaiyum sonnadhuku.. :) naan indha posta padikave illaiye..! unga MD or CEO no. kuduka mudiyuma?
bench la irundhalum indha maadhiri sutha edam irukanume... ingayum than irukke... sediyum maramum.. ufffffffffff...
@ My days gops : Sir illenga naan.
enn ponnu valaiyadara basket ball parkave time correct.ah irukku,more than that TV.eh naanga parka mattom.
TV parkama vera enna pannuveenga.nnu aedhir kelvi kekkadheenga pls.
எவ்வளவு நாளா இப்படி ஓபி அடிச்சிக்கிட்டு இருந்தீங்க? என்ன, இனிமேல் ஊரு விட்டு ஊரு போயி ஓபி அடிக்க போறீங்க. :-) extra 3 hours sleep, on the bus.
gils சிரிக்கிறார் பாருங்க.என்ன சொல்லறீங்க?
@R-ambam,
Yes yes :)))
@Sri,
ஹிஹி.. எழுதிடுவோம் :))
@ஆயில்ஸ்,
//எல்லாம் நல்லபடியா 24 அவர்ஸ் பத்தாத அளவுக்கு ஆணி புடுங்க விடுவாரு! :)))))))))))))//
என்ன ஒரு வில்லத்தனம் !!!
@நான் ஆதவன்,
//எனக்கும் உங்க கஷ்டத்துல பங்கெடுத்துக்கனும் போல இருக்கு.//
U r most welcome boss :))
//அவ்வ்வ்வ் உசுப்பேத்தி விடுறாங்க பாஸ். கவுந்திடாதீங்க..... எப்பவும் போல சோம்பேறித்தனமாவே இருங்க :)//
கவலைப்படாதீங்க பாஸ். உங்களுக்கு போட்டியா எல்லாம் வர மாட்டேன் :)))
@கோபி,
y tension???? no tension :))))
@k4K,
Irukkae :))))))))))))))))))))
G3, ungalukku mattum eppadi velaye illatha project-a amayuthu :( :(
kadantha sila varushama etho karumbu juice machine kulla pottu pizhiyara maathiri oru feeling :(
@Gops,
//(பின் குறிப்பு:- அது புது வித மிளகாய் ஊறுகாய்'னு நினைச்சி எடுத்து சாப்பிட்டுடாத ஒகே?)
//
நல்ல வேளை முன்னாடியே சொன்ன ;))
//பிறந்தா உன்னன மாதிரி தான் பிறக்கனும்'னு ஒரு கமெண்ட் மிஸ் ஆகுதே ஒரு மிஸஸ் கிட்ட இருந்து.. :) //
வந்துட்டாங்கையா வந்துட்டாங்க :))
//வைக்க போறாஙக இல்ல ஆப்பு, அங்க இருக்கும் ஒன்லி தோப்பு,
நொறுக்கு தீனீ திங்க உனக்கு கிடைக்காதே கேப்பு.... //
என்ன ஒரு வில்லத்தனம் !!!
//இது எதுக்கு? அதான் சொ. அக்கா ஒன்லி பிரெஷ் ஜீஸ்'னு சொல்லிட்டாங்களே :)//
coke-um குடிப்பேனே :)) ஆனா எங்க கான்டீன்ல அது கிடையாது :((
@Ambulisamma,
Hehe.. spencer'sla irukkara aapisna spencersaiyum listla sethiruppaenae :))) ennoda aapis teynampetla :D
@Gils,
Adhaan kadavul ungala ellam munnadiyae anuppitaara ;)))
@Kodi,
No murder veris plz :))
@Kanagu,
Hehe.. pesama gilskku oru uma maadiri neeyum oru hemava kandubidichu maratha suthi duet paada vendiyadhu dhaanae ;))
@Rammmmm,
I dont like sleeping on bus :)) Full volumela songs pottutu gummi adichittu povomla naanga :D
@Ace,
Welcome afterrrrrrrrrrrrrrrrrr a long time :)) Kadavul yaarala kashtatha thaangikka mudiyumnu nambaraaro avangalukku mattum dhaan kashtatha kudupparaam ;))) Me not in the listaam :D
T20 match paakrathuku poruma illaya?
naangallem Test match'ey full'a pakravanga.. innamo ponga..
well written!
blog ellaam padikkala aana adichu irukara kootha paathaa unga aapicela aani apdinnaa enna ketpaanga pola...sari enakkum oru kaalam varum...appo gils kooda kootani potu matter ah correct panren...
//well written!//
padichu paartheengalaa? kudutha ice cream ku mela koovi irukeenga pola..:D
@BSK,
Ovvoruvarukku ovvoru rasanai. wat to do :)))
@Matangi,
Thanks :) Welcome to my blog :))
@Naats,
//sari enakkum oru kaalam varum...appo gils kooda kootani potu matter ah correct panren...
//
Hehe.. paapom.. enna dhaan pandreengannu :))
//padichu paartheengalaa? kudutha ice cream ku mela koovi irukeenga pola..:D//
Ungalukku poraamai :P
//அதான் மனசாட்சி உறுத்தலுக்காக வாரத்துல ஒரு நாள் லீவு போட்டுட்டு வீட்ல ரெஸ்டிங் :))//
ஆனாலும் இது ரெம்ப ஓவர்
அடப்பாவி...அவ அவ இங்க இயர் எண்டு ஆணி ஓவரா இருக்குன்னு டென்ஷன்ஆ இருந்தா...இப்படி Stomach Fire கெளப்பறீங்ககளே...இது ஞாயமா?
ஆனாலும் நல்லா காமெடியாதான் எழுதரீக... ஓவர் ஆணில ஒரு relaxation . நன்றி
@அப்பாவி தங்கமணி,
வாங்க வாங்க :))
//அடப்பாவி...அவ அவ இங்க இயர் எண்டு ஆணி ஓவரா இருக்குன்னு டென்ஷன்ஆ இருந்தா...இப்படி Stomach Fire கெளப்பறீங்ககளே...இது ஞாயமா?//
ஹிஹி.. விடுங்க விடுங்க.. உங்கள மாதிரி நாலு நல்லவங்க ஓவரா உழைக்கறதால தான நாங்க இப்படி என்சாய் பண்ண முடியுது :))
//ஆனாலும் நல்லா காமெடியாதான் எழுதரீக... //
நன்றிங்க :)
present maDAM....
sorry nga konjam late ah vanthutten
neenga pesama marketing side kku vanga...semaiya ob adikkalam...
Hey i know the feelin of sitting idle at office and also know the feelin of doing lot of work(now) and feeling satisfied, and also know the feeling of sitting at home with nothin to do and enjoying :) (when i left the job) .
I didnot see the karthik movie, so vimarsaman onnum velangala. Good to read ur post after so many days.
As Sri said keep writing, its the best use of time.
Oh eppo vera matter odudhungo.. sari sari