பரணி கல்யாண வைபோகமே..

வணக்கம் மக்கள்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க? இப்போ நம்ம ப்ளாக் உலகம் முழுக்க ஒரே கல்யாண சீசனா இருக்கு. சரி பரவாயில்ல, நம்ம காட்ல மழைதான்னு சந்தோஷப்பட்டா அதுக்கும் ஆப்பு வைக்கற மாதிரி ஒரே நாள்ல வேற வேற ஊர்ல கல்யாணத்தை வெச்சிடறாங்க. போன வாரமும் இதே கதை தான். பரணிக்கு சிதம்பரத்துல கல்யாணம் அதே நாள்ல ஜெயந்திக்கும் நாமக்கல்ல கல்யாணம். பாவம் நான்.. எங்க போவேன்.. எந்த கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணுவேன். ஜெயந்தி நல்ல புள்ளையா திங்கட்கிழமை ரிசெப்ஷன் வெச்சிருந்தா. ஓ.கே. அப்போ ஞாயிற்றுகிழமை பரணி கல்யாணம் போயிட்டு திங்கட்கிழமை நாமக்கல்ல ரிசப்ஷன் அட்டெண்ட் பண்ணலாம்னு ப்ளான் போட்டு சனிக்கிழமை நைட் நானும் ராஜியும் சிதம்பரம் கிளம்பிட்டோம். கிளம்பும்போதே நம்ம எம்ஜிநிதி ஃபோன் பண்ணி உங்க பேர்லயே ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிட்டோம். காலைல வந்ததும் நீங்க ஹோட்டல்லயே பேர சொல்லி கீ வாங்கிக்கலாம்னு சொல்லிட்டாரு. ரொம்ப நன்றிங்க. எனக்காக இன்னோரு உதவியும் பண்றீங்களா? நைட் முழுக்க மாப்பிள்ளைய நல்லா கலாய்ங்க.. தூங்கவிடாதீங்கன்னு சொன்னா அவரு அநியாயத்துக்கு நல்லவரா பாவம்ங்க பரணி. ரொம்ப நல்லவன்.. விட்ருவோம்ங்கறாரு :(



சே.. நம்ம ப்ரெண்ட்ஸ் லிஸ்ட்லயும் இவ்ளோஓஓஓ நல்லவங்களா?? சரி பொழச்சு போங்கன்னு விட்டுட்டோம். காலைல 4 மணிக்கெல்லாம் சிதம்பரம் போயாச்சு. அங்க போய ஹோட்டல்ல ரூம்க்கு போனா.. புக் பண்ணி இருந்த்து டபுள் பெட் ரூம் வித் ஏசி.. ஆஹோ. நமக்கே இதெல்லாம் ஓவரா தெரியுதேன்னு நெனச்சிக்கிட்டே பத்ரமா வந்து சேந்தாச்சுன்னு மக்களுக்கு தகவல் சொல்லிட்டோம். அப்படியே நானும் ராஜியும் கதை அடிச்சிட்டே பொறுமையா கிளம்பி 6 மணிக்கு மேல மண்டபத்துக்கு போனோம். வாசல்லயே நம்ம பரணியும் அவர் தங்கமணியும் நிக்கற போட்டோ போட்டு ஒரு பெரிய பேனர். ஆஹா மாப்பிள்ளைய கலாய்க்க நிறைய விஷயம் இருக்கும் போலன்னு நெனச்சிக்கிட்டே உள்ள நுழைஞ்சோம். அங்க மேடைல மாப்பிள்ளைக்கு ஏதோ பங்ஷன் நடந்துட்டிருந்துது. அங்க இருந்து அவர் ஹாய்-ன்னு கை காட்ட... கை புள்ளா செக்கசெவேல்னு மருதாணி.. அட்ரா.. அட்ரா... மாப்பிள்ளை ரிடர்ன் வந்ததும் எல்லாத்துக்கும் சேத்து வைச்சு கலாய்க்கனும்னு முடிவு பண்ணி எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டோம் :)

ஜம்முனு ரெண்டு சேர் இருக்கற இடமா பாத்து போய் ஒக்காந்துட்டு எல்லா சடங்கையும் பாத்துட்டிருந்தோம். இப்ப எல்லாம் கல்யாணம்னா மக்கள் எல்லாம் போறது ரிசப்ஷனுக்கு தான். தப்பி தவறி ஏதாவது கல்யாணத்துக்கு போனாலும் ப்ரெண்ட்ஸோட அரட்டைலயே பிஸியா போயிடும் கரெக்டா தாலி கட்ற நேரத்துல மட்டும் மாப்பிள்ளை பொண்ண பாப்போம். இங்க நானும் ராஜியும் மட்டும் தான்றதால முழு கல்யாணத்தையும் பாத்து நடுநடுல இது எதுக்கு பண்றாங்க அது எதுக்கு பண்றாங்கன்னு கேள்வி கேட்டு (ப்ளீஸ் நோட்... கேள்வி மட்டும் தான் கேட்டுக்கிட்டோம். பதில் ரெண்டு பேருக்குமே தெரியலே ;)))) நல்லா என்சாய் பண்ணிட்டிருந்தோம்.. நல்லபடியா கல்யாணம் முடிஞ்சதும் சரி கிப்ட் குடுக்க போலாம்னு எழுந்தா அப்போ தான் எம்ஜிநிதி உள்ள வர்றாரு. அடப்பாவி மக்கா.. இப்போ தான் வர்றீங்களான்னு கேட்டா நான் எப்பவோ வந்துட்டேன் பிண்ணாடி ஓக்காந்துட்டிருந்தேன்.. அது சரி ஏன் இப்படி கிப்ட எல்லாம் கொண்டு வந்தீங்க.. அவன் நம்ம பையன்ங்க. இதெல்லாம் தேவையே இல்லங்கங்கறாரு. இவ்ளோ லேட்டாவா இதெல்லாம் சொல்லுவாய்ங்க :(((

சரின்னு மேடைக்கு போய் கிப்ட குடுத்து மக்கள வாழ்த்திட்டு நம்ம டெஸ்டினேஷனான டைனிங் ஹாலுக்கு போயாச்சு. கரெக்டா சாப்பிட்டு முடிக்கும் போது புலிகிட்ட இருந்து ஃபோன். மண்டபம் எங்க இருக்குன்னு கேட்டு.. பத்திரிக்கைல இருந்த அட்ரெஸ அப்படியே வாசிச்சிட்டு கண்டுபிடிச்சு வந்துடுங்கன்னு சொல்லிட்டோம். அப்புறம் அவர் வந்து மாப்பிள்ளைய போய் வாழ்த்திட்டு வந்ததும் எல்லாரும் கிளம்பிட்டோம். புலி நாகைல இருக்க அதோட குகைக்கு கிளம்ப, ராஜி அவங்க ஊருக்கு கிளம்ப நான் அங்க இருந்து அடுத்த கல்யாணத்த அட்டெண்ட் பண்ண நாமக்கல் கிளம்பிட்டேன் :)
23 Responses
  1. naan thaaan 1st ah :P


  2. aah aaah appadiey / eppadioh poitu vandhuta... gud gud...

    kalyanathaku pona sare, moi vachiah?


  3. //சே.. நம்ம ப்ரெண்ட்ஸ் லிஸ்ட்லயும் இவ்ளோஓஓஓ நல்லவங்களா?? //


    அதானே! எப்படி இதெல்லாம்?


  4. //வணக்கம் மக்கள்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க? //

    நல்லா இருக்கோம்.


  5. //நான் அங்க இருந்து அடுத்த கல்யாணத்த அட்டெண்ட் பண்ண நாமக்கல் கிளம்பிட்டேன்//

    அப்ப இன்னொரு பதிவு உண்டு!.


  6. ம்ம்ம்...உங்க காட்டுல மழை... அசத்துங்க!!! ;))

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ;)))

    \\நான் அங்க இருந்து அடுத்த கல்யாணத்த அட்டெண்ட் பண்ண நாமக்கல் கிளம்பிட்டேன் :)
    \\

    அடுத்த பந்திக்கு வெயிட்டிங் ;))


  7. \\\ஜம்முனு ரெண்டு சேர் இருக்கற இடமா பாத்து போய் ஒக்காந்துட்டு \\


    ரெண்டு சேர் இருக்கற இடம் எல்லாம் வேற இருக்கா!!!! ;)))


  8. golmaalgopal Says:

    eppidiyo...namma saaarbula G3 yakka poittu vandhutaanga...

    (kandippa namma ellaarkkagavum extra sweet saaptruppaanga...) correct dhaane?? :)


  9. ஜி Says:

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!!!


  10. MyFriend Says:

    ////நான் அங்க இருந்து அடுத்த கல்யாணத்த அட்டெண்ட் பண்ண நாமக்கல் கிளம்பிட்டேன்//

    அப்ப இன்னொரு பதிவு உண்டு!.//

    ரிப்பீட்டேய்...


  11. Arunkumar Says:

    manamakkulukku
    manamaarndha
    vaazthukkal ...


  12. ஜம்முனு ரெண்டு சேர் இருக்கற இடமா பாத்து போய் ஒக்காந்துட்டு எல்லா சடங்கையும் பாத்துட்டிருந்தோம்
    நீங்க உட்காந்துட்டீங்க சௌகரியமா. அப்புறம் ராஜி எங்கே உட்காந்தாங்க அதைச் சொல்லவே இல்லையே.


  13. mgnithi Says:

    Know that u will post on Bharani's wedding. Enga damager ore velaiya rendu peru panna koodathunu sollirukkanag. So me was waiting.

    //தூங்கவிடாதீங்கன்னு சொன்னா அவரு அநியாயத்துக்கு நல்லவரா பாவம்ங்க பரணி. ரொம்ப நல்லவன்.. விட்ருவோம்ங்கறாரு :( //

    Avvvvvvvvvvvvvvv


  14. mgnithi Says:

    //அவர் ஹாய்-ன்னு கை காட்ட... கை புள்ளா செக்கசெவேல்னு மருதாணி.. //

    Naanum intha mattera note pannen. Next meet pannum pothu kalaichikkalamnu vitutten.


  15. Syam Says:

    //தூங்கவிடாதீங்கன்னு சொன்னா அவரு அநியாயத்துக்கு நல்லவரா பாவம்ங்க பரணி. ரொம்ப நல்லவன்.. விட்ருவோம்ங்கறாரு :( //

    Avvvvvvvvvvvvvvv//

    repeattttaaaaiii... :-)


  16. golmaalgopal said...
    eppidiyo...namma saaarbula G3 yakka poittu vandhutaanga...

    pinna kalyana saapaduna g3 miss pannuvaangala :) kalyana seasonnu evalvu gushila irukaanga paarunga.

    Mrs&Mr Bharani kku enga vaazthukkal.


  17. பரணிக்கு சிதம்பரத்துல கல்யாணம் அதே நாள்ல ஜெயந்திக்கும் நாமக்கல்ல கல்யாணம். பாவம் நான்.. எங்க போவேன்.. எந்த கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணுவேன்

    chu chu chu..evalavu periya prechanai g3 kku :) indha kalynam mudinju flightla adutha kalyanam poida vendiyadhu dhaane


  18. அடுத்த கல்யாணத்த அட்டெண்ட் பண்ண நாமக்கல் கிளம்பிட்டேன் :)


    velaiyye idhaane anga :)


  19. Anonymous Says:

    baraniku fone panna..hellotune oduthu..
    "
    Kaadhaluku kangal illai yaro sonaray
    ada moolai kuda ilai endru sonen nanay
    aana ipo...
    Hmmmmmmmmm..."

    //அவர் ஹாய்-ன்னு கை காட்ட... கை புள்ளா செக்கசெவேல்னு மருதாணி.. //

    ada..neenga vera..avar konjam shy typela..athan vekkapatrupar.. :D


  20. Anonymous Says:

    andrum inrum enrum..anony = gils


  21. வாழ்த்துக்கள் பரணி:)


  22. //இப்போ நம்ம ப்ளாக் உலகம் முழுக்க ஒரே கல்யாண சீசனா இருக்கு.//
    சீசன் முடியறதுக்குள்ள சட்டுபுட்டுனு முடிங்க... ருசி கண்ட பூனைங்களாட்டம் தொடர்ச்சியா கல்யாணதுக்கு போய்ட்டு இப்போ சும்மா இருக்க முடியலை... சீக்கிறம் உங்களுக்கும் கெட்டி மேளம் கொட்டட்டும்.. :P


  23. Priyamanaval Says:

    hmmm... apdiye barani sir kalyanathuku poitu vandha madhiri iruku. :-)
    but raji ivlo detailed ah enkitta sollave illiye... anyways... happy married life to mr&mrs.bharani!!!