விண்ணைத்தாண்டி வருவாயா..

எல்லாரும் பதிவு போடறப்போ படத்த பாத்துட்டு நான் மட்டும் சும்மா உட்கார்ந்திருந்தா நியாயமா? அதான் நானும் கோதால இறங்கிட்டேன்.ஆனாலும் இந்த படத்துக்கு டிக்கெட் ரிசர்வ் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு :(( செவ்வாய்க்கிழமை ராத்திரி 12 மணி வரைக்கும் முழிச்சிருந்து பாத்தும் சத்யம்ல சைட் ஓபன் ஆகும் போதே “இடம் காலி இல்லை”னு சொல்லிருச்சு. சரி நேர்ல புக் பண்றவங்களுக்காக விட்டு வைச்சிருப்பானோனு காலங்கார்த்தால 8.30 மணிக்கு கவுண்ட்டர் ஓபன் பண்றப்போ போய் கேட்டா அங்கயும் “பிம்பிலிக்கா பிலேபி”னு பல்ப குடுத்துட்டான் :(( சரினு ஆபீஸ்ல இருந்து கிளம்பி ஒரு 11 மணிக்கா ஐனாக்ஸ் போய் டிக்கெட் வாங்கலாம்னு போனா ஏகப்பட்ட பேர் எனக்கு முன்னாடி க்யூல (வேஸ்ட் பசங்க.. சத்யம் மாதிரி லேடீஸ்க்கு தனி க்யூ ஏதும் இல்லை.) இருந்த கும்பல பாத்தேன்.. டிக்கெட் கவுண்டர பாத்தேன்.. அப்பவே சனிக்கிழமை காலைல 9 மணி ஷோ தவிர்த்து மீதி எல்லாம் ஹவுஸ் ஃபுல்னு போட்டிருந்தான்.. சரி இது நமக்கு வேலைக்காகாதுனு கொண்டு வந்த் காசுக்கு லேண்ட்மார்க்ல 3 புக்க வாங்கிட்டு திரும்பி ஆபீஸ் வந்தாச்சு.

நண்பனுக்கு ஃபோன் பண்ணி இந்த சோக கதைய எல்லாம் சொன்னேன். அவன் விடுங்க ஜி3. மாயாஜால்ல நான் புக் பண்றேன்னு சொன்னான். சரிப்பானு விட்டுட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு ஃபோன் பண்ணி ஜி3 டிக்கெட் விலை 250 ரூபாயாம்.. சிம்பு படத்துக்கு இவ்ளோ எல்லாம் செலவு பண்ணனுமா.. திருவாண்மியூர் தியாகராஜா மாதிரி ஏதாவது லோக்கல் தியேட்டரே போதும் ஜி3 இவன் படத்துக்குனு ஃபீல் பண்ண, ரைட்டுனு சொல்லி காசி தியேட்டர்லயே டிக்கெட்ட புக் பண்ணியாச்சு (3 பேருக்கும் சேத்து டிக்கெட் விலை வெறும் 240 ரூபாய் தான். அதுவும் பால்கனிக்கு :)).

படம் பாக்க உள்ள் போறதுக்கு முன்னாடியே பயபுள்ள சொல்லுச்சு. என்னமோ நிஜத்துல நடக்கற மாதிரியே எடுத்திருக்கேன்னு பில்டப்ப குடுத்திருக்காய்ங்க.. அனேகமா ரெண்டு பேரையும் கடைசில பிரிச்சிருவாய்ங்கனு நினைக்கறேன்னு.. அப்பவே கொஞ்சம் உஷாராகி இருக்கனும்.. தப்பு பண்ணிட்டோம். முதல் பாதி கொஞ்சம் சுமாரா இருந்துச்சு.. ரெண்டாவது பாதி ஒரு வேளை நல்லா இருக்கும் போலனு மனச தேத்திக்கிட்டோம்.. படம் முடிஞ்சப்புறம் தான் தெரிஞ்சுது முதல் பாதியே ஓரளவுக்கு தேவலைனு !!!! என்ன கொடுமை சார் இது :(((

அதுக்குனு படத்துல உனக்கு எதுவுமே புடிக்கலியானு கேக்ககூடாது. சில விஷயங்கள் புடிச்சிருந்துது.. ஏ.ஆர்.ரஹ்மான் ம்யூசிக், படத்துல வந்த லொகேஷன்ஸ்... எப்பவும் ஹீரோ கூடவே வர்ற “மங்களம்” கேரக்டர் மாதிரி இதுலயும் ஒருத்தர் வந்து கலக்கியிருக்கார்.. காக்க காக்கல நிஜமாவே அவரு தானாப்பா காமரா மேன்??!!

எல்லாத்தையும் சொல்லிட்டு தாமரையோட பாடல் வரிகள பத்தி சொல்லாட்டி எப்படி?? படம் பாக்கறதுக்கு முன்னாடி ஹோசானா பாட்டு மட்டுமே கேட்டிருந்தேன்.. அதுவும் ஆபீஸ்ல கேண்டீன்ல போடறப்போ கேட்டது தான்.. வரிகள் அவ்வளவா கவனிச்சதில்லை (பின்ன, சாப்பிடறதுல பிசியா இருக்கறப்போ இதெல்லாமா கவனிக்க முடியும் :P).. ஆனா இன்னிக்கு படம் பாக்கறப்போ மனசுல நின்ன பாட்டு மன்னிப்பாயா தான். வரிகள் பிரமாதம்ங்கறது மட்டும் இல்ல.. ஏ.ஆர்.ரஹ்மானும் ஷ்ரேயா கோஷலும் என்னமா உருகியிருக்காங்க.. அப்படியே பாட்ட போட்டுட்டு கண்ண மூடி ரசிச்சிட்டிருக்கலாம் போல இருக்கு. வீட்டுக்கு வந்ததுல இருந்து அந்த பாட்டு தான் லூப்ல ஓடிட்டிருக்கு. கடைசியா அந்த மாதிரி கண்ணை மூடி ரசிச்சு கேட்ட பாட்டுனா அது பொக்கிஷம் படத்துல “நிலா நீ வானம் காற்று” பாட்டு தான். அதுலயும் சின்மயி வாய்ஸ்ல கேக்கும்போது ஒரு தனி கிறக்கம் தான். அதுக்கப்புறம் இப்போ இந்த பாட்டு தான்..



மொத்ததுல படம் பாத்துட்டு வெளியில வர்றப்போ ஒரு நிம்மதி.. நல்ல வேளை.. இந்த படத்துக்கு அம்புட்டு செலவு பண்ணி மாயாஜால் எல்லாம் போகலைனு !! காப்பாத்தினதுக்கு ரொம்ம்ப நன்றி ஆண்டவா :))))

கலாட்டா டைம் - IV

பழைய அலுவலகத்துல இருந்த நண்பர்கள் எல்லாரும் தனித்தனியா பிரிஞ்சு வேற வேற கம்பெனிக்கு வந்துட்டதால தினமும் காலைல மொத்த க்ருப்புக்கும் குட்மார்னிங்னு ஒரு மெயில போட்டு ஆரம்பிச்சாச்சுனா அம்புட்டு தான். சாயந்திரம் வரைக்கும் கும்மியோ கும்மிதான் :) குறைந்த பட்சம் 100 மெயிலாவது ஓடும். என்னைக்கு ஆபீஸ்ல இருந்து மெயில் சர்வர ரொம்ப வேலை வாங்கறனு திட்டப்போறாய்ங்களோ!! ஆனாலும் மெயில்ல நம்ம மக்களோட குசும்பு மெயில்ல டாப் கியர்ல இருக்கும். படிச்சதும் சிரிப்ப அடக்கக முடியாது. அப்படி சிரிக்கவைச்ச சில விஷயங்கள் இங்கே..

முந்தின நாளே நாளைக்கு எனக்கு ட்ரெய்னிங் இருக்கு. அதனால கும்மில கலந்துக்கமுடியாது. சாயந்திரத்துக்கு மேல வந்து கலந்துக்கறேன் சொல்லிட்டு போயிட்டான் ஒரு நல்லவன். அடுத்த நாள் பாத்தா காலைலியே புள்ள பொறுப்பா மெயில் அனுப்பறான். என்னடா ஆச்சு ட்ரெய்னிங் போறேன்னு சொன்ன.. இங்க கும்மிட்டிருக்க... ட்ரெய்னிங் எப்படி போகுதுனு கேட்டா.. "பாத்தாலே தெரியலியா ஜி3. யார் பெத்த புள்ளையோ முன்னாடி நின்னு புலம்பிட்டிருக்கு.. நான் கடைசி வரிசைல உட்கார்ந்து மெயில் செக் பண்ணிட்டிருக்கேன்" ங்கறான்.

இனனொரு நல்லவருகிட்ட காதலர்தினம் எப்படி போச்சுனு கேட்டா "ஆயிரம் பூக்கள் உள்ள ரோஜாக்கூட்டத்தில் ஒரே ஒரு ரோஜாவை ரசிக்கும் முட்டாள் செயல் "காதல்". அதனால எல்லா பூக்களையும் ரசிப்போம்.. வாழ்க்கையை ரசிப்போம்" னு கெத்தா டயலாக் விடறாரு.

இந்த காமெடி பத்தலைனு வெள்ளிக்கிழமை அன்னிக்கு எல்லாருக்கும் பட்டப்பெயர் வைப்போம்னு ஒரு த்ரெட்டு.. அவ்வ்வ்வ்வ்.. சில சாம்பிள்கள் இங்கே..

சைட்டு ஷன்முகம் (ஓவரா சைட் அடிக்கறதால)
சமையல் சூறாவளி (சமைக்கறேன் பேர்வழினு குக்கர வெடிக்க வைச்சதால)
கேடி சாமியார்
பாடும் பைங்கிளி (இந்த பேருக்கு பின்னாடி ஒரு ஹிஸ்டரியே இருக்கு.. அதை தனியா இன்னொரு பதிவா தான் போடனும் :P)
சோப்லாங்கி சுப்பிரமணி
சிஜடி சீனாதானா (சைட் அடிக்கற பொண்ணுங்க டீடெய்ல்ஸ் எல்லாம் துப்பறியறதால)

என்னது.. எனக்கு என்ன பேரு வைச்சாங்கனு சொல்லனுமா.. ஹிஹி... நோ சொந்த செலவு சூனியம்ஸ் :P

இதெல்லாம் மெயில்ல தான்னு பாத்தா.. நேத்து புள்ள ஊருக்கு போறப்போ எஸ்.எம்.எஸ் அனுப்புது..

"நான் ட்ரெய்ன்ல எங்க ஊருக்கு போயிட்டிருக்கேன். <அவன் பேரு> சார் சென்னைல இருந்து கிளம்பிபட்டாருனு நினைப்புல யாராவது பஸ்ஸ கொளுத்துறது, ட்ரெயின மறிக்கறதுனு அட்டூழியம் பண்ணா... ஒரே ஒரு எஸ் எம் எஸ்ஸ் அனுப்புங்க....























அப்படியே அப்பீட் ஆகிடறேன்"


போறப்போதான் இப்படினு பாத்தா போய் சேந்ததும் இன்னொரு மெசேஜ்..

"மதுரையில் அதிசய பூ மழை. மக்கள் மகிழ்ச்சியில் மிதக்கிறார்கள்..



ஏன்னு கேளுங்க...



<அவன் பேரு> சார் மதுரைல லேண்ட் ஆகிட்டாரு.. காலை வணக்கம்"

காலங்கார்த்தலயேவாடா.. பேசாம உனக்கு பில்டப் பாஸ்கரன்னு பேர வச்சிடலாம்னு நான் பதில் போட.. பாஸ்கரன பஸ்காரன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டு புள்ள ஃபீல் பண்ண செம காமெடி தான் போங்க :)))

மணமாலையும் மஞ்சளும் சூடி...



இன்று திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தங்கச்சிக்கா அனுவிற்கு அன்பு நெஞ்சங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள். தேன்கிண்ணத்தின் சூறாவளி அனுவிற்காக இந்த சிறப்பு பாடல் :)

ஜோதி நிறஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போடப் போறா மாலை போடப்போறா
ராஜ மேடையிலே நட்சத்திர பந்தலிலே
போடப்போறான் தாலி போடப்போறான்

அட உங்க மணவிழா
இது எங்கள் திருவிழா
அட பச்ச பநதலில்
சில லட்சம் வெண்ணிலா
அட உங்க மணவிழா
இது எங்கள் திருவிழா
அட பச்ச பநதலில்
சில லட்சம் வெண்ணிலா

ஜோதி நிறஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போடப் போறா மாலை போடப்போறா
ராஜ மேடையிலே நட்சத்திர பந்தலிலே
போடப்போறான் தாலி போடப்போறான்

பட்டுச்சேலையிலே நிலவை பக்கம் பார்க்கின்றேன்
எட்டாம் வண்ணத்தில் வானவில்லை இன்றே பார்க்கின்றேன்
பட்டுச்சேலையிலே நிலவை பக்கம் பார்க்கின்றேன்
எட்டாம் வர்ணத்தில் வானவில்லை இன்றே பார்க்கின்றேன்
தங்கத்துக்கே சங்கிலியா செங்கமலத்துக்கே மல்லிகையா
தங்கத்துக்கே சங்கிலியா செங்கமலத்துக்கே மல்லிகையா
தேனுண்ணும் திருவாயை நான் உண்ணும் நாள் வந்ததோ

ஜோதி நிறஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போடப் போறா மாலை போடப்போறா
ராஜ மேடையிலே நட்சத்திர பந்தலிலே
போடப்போறான் தாலி போடப்போறான்

கண்ணம் பூசியதும் சந்தனம் தங்கம் ஆகியதோ
இவள் மார்பை தொட்டவுடன் வைரம் விண்மீன் ஆகியதோ
கண்ணம் பூசியதும் சந்தனம் தங்கம் ஆகியதோ
இவள் மார்பை தொட்டவுடன் வைரம் விண்மீன் ஆகியதோ
இதயக்கூட்டில் வளத்தாளே தாய்
இவளை எனகனம் பிரிவோளோ
இதயக்கூட்டில் வளத்தாளே தாய்
இவளை எனகனம் பிரிவோளோ

ஆனந்தம் ஒரு கண்ணில்
துயரங்கள் மறு கண்ணிலே

அட உங்க மணவிழா
இது எங்கள் திருவிழா
அட பச்ச பநதலில்
சில லட்சம் வெண்ணிலா
அட உங்க மணவிழா
இது எங்கள் திருவிழா
அட பச்ச பநதலில்
சில லட்சம் வெண்ணிலா