கிளிஞ்சல்கள்... Iபல நேரங்கள்ல நம் நண்பர்களுக்கு கிடைக்கும் வெற்றி / அங்கீகாரம் நமக்கே கிடைச்ச மாதிரி சந்தோஷத்தை குடுக்கும். எதை பத்தி சொல்றேன்னு சிலர் கெஸ் பண்ணியிருப்பீங்க. நம் சக வலைபதிவர், எங்கள் பாசமலர்
சிவீஆர் அண்ணாச்சியின் புகைப்படங்கள் "Alliance Francaise of Madras" இல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் அவருடைய திறமைக்கு கிடைத்த வெற்றி இது.. இது போல் இன்னும் அவருடைய புகைப்படங்கள் பல அரங்கங்களில் இடம் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆகஸ்ட் 19-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது. உங்களின் வருகை அவரை நிச்சயம் ஊக்கப்படுத்தும்.
இடம் : Alliance Française of Madras
New No.24, College Road,
Nungambakkam,
Chennai 600 006.
Tel: 91 44 28279803/ 28271477
நேரம் : காலை 9 முதல் மாலை 7 வரை.
சனிக்கிழமை பிற்பகல் 1 மணி வரை.
அவருடைய புகைப்படங்கள் அனைத்தையும் காண
http://www.flickr.com/photos/seeveeaar/
இப்ப எல்லாம் ஊர் சுத்தல் அதிகமாகிடுச்சு. போன வாரம் கல்பாக்கத்துல கார்னிவல் நடக்குது வாங்க ஜி3னு தோழி கூப்பிட, கட்றா பொட்டியனு கிளம்பியாச்சு. இன்சுயூரன்ஸ் ஏஜன்ஸில இருந்து நகை கடை வரை எல்லா ஸ்டாலும் இருந்துது. நல்லா ஒரு நாள் பொழுது ஓடுச்சு. ஆகஸ்ட் 9-ம் தேதி வரை இந்த கார்னிவல் நடக்கிறதாம்.


இது Giant Wheel-ல சுத்தறப்போ எடுத்தது :)

அவார்ட் நேரம் -
கனகு &
கில்ஸ் எனக்கு குடுத்த விருதுகள்...

ஸ்ரீவத்ஸ் குடுத்த விருது.

கனகு, ஸ்ரீவத்ஸ் & கில்ஸ் மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த விருதோட கேட்டகரி என் வலையுலக நண்பர்கள் எல்லாருக்குமே பொருந்துவதால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்னு இல்லாம எல்லோருக்கும் இந்த விருதை பரிசளிக்கிறேன் :))))

எதிர்பாராமல் கிடைக்கும் எந்த ஒரு பரிசும் அபரிமிதமான சந்தோஷத்தை குடுக்கும். அதுலயும் நமக்கு பிடித்த விஷயம் சம்பந்தபட்டதாகவும், கொடுப்பவர்களின் உழைப்பும் கலந்து இருந்தா.. மகிழ்ச்சிக்கு எல்லையும் உண்டோ?? என் தோழி சந்தியா அவளே பெயிண்ட் செய்து எனக்கு பரிசளித்த படம்.. என் ஃபேவரைட் பிள்ளையார் :)))))))))))))


கடைசியா ஒரு சுயவிளம்பரம் ;-) இந்த வாரம்
றேடியோஸ்பதியில் சிறப்பு நேயர் பகுதியில் என் பாடல் தேர்வுகள் ஒலிபரப்பாகியுள்ளது. நீங்களும் படிக்க / கேட்க
இங்கே செல்லுங்கள்.
இதே போல் உங்களுக்கு பிடித்த பாடல்களும் பதிவா வரணும்னு ஆசைப்படறவங்க, என்ன பாடல், ஏன் அந்த பாடல் பிடிக்கும்ங்கற காரணத்தோட kanapraba@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பலாம் :) நீங்களும் சிறப்பு நேயர் ஆகலாம் :)))