கலாட்டா டைம் - I

எங்க ஆபீஸ்ல ஆல் டைம் கலாட்டா டைம் தான்னாலும் லஞ்ச் டைம் கலாட்டா கொஞ்சம் பலமா இருக்கும். எங்க கும்பல்ல 2 பேர் வேற ப்ளோர்ல இருக்காங்க.. மதியம் சாப்பிடற நேரம் அவங்களும் எங்களோட சேர கச்சேரி கலை கட்டும் :) எப்பவும் நானும் என்னோட இன்னொரு ப்ரெண்ட் ஒருத்தியும் தான் கார்னர் சீட்ல எதிர் எதிர்ல உட்காருவோம். இது எழுதப்படாத சட்டம். அப்படியே தப்பித்தவறி வேற யாராவது உட்கார்ந்தாலும் அவங்கள எழுப்பிட்டு நாங்க உட்காருவோம். அம்புட்டு நல்லவங்க :)

அன்னிக்கும் அப்படித்தான் எல்லாரும் உட்கார்ந்து கதை அடிச்சிட்டே சாப்டுட்டு இருக்கும்போது அங்க FM ரேடியோல வாரணம் ஆயிரம் படத்துல இருந்து நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாட்டு ஓடிட்டிருந்துது.. நமக்கு புடிச்ச பாட்டுங்கறதால மக்கள் பேசறத கவனிக்காம நான் பாட்டுக்கு பாட்ட கேட்டுட்டிருந்தேன். அதுல கரெக்டா "இவள் பின்னால் நெஞ்சே போகாதே" ங்கற லைன் வரும்போது என்னையும் மறந்து நோ சொல்ல தலையாட்டற மாதிரி ஆட்டிட்டே எதிர்க்க பாத்தா என் ப்ரெண்டும் என்னை பாத்து அதே மாதிரி தலையாட்டிட்டு சிரிச்சா.. நான் என்ன நெனச்சு தலையாட்டினேன்றது அவளுக்கும் அவ என்ன பாத்து எதுக்கு தலையாட்டினாங்கறது எனக்கும் தெரியும்ங்கறதால டக்குனு ரெண்டு பேரும் சிரிச்சிட்டோம் :) மீதி இருந்தவங்க எல்லாம் நாங்க எதுக்கு சிரிக்கறோம்னு தெரியாம எங்கள பாக்க, இது தான் சாக்குனு எங்க கூட இருந்த இன்னொரு ப்ரெண்ட்.. இவங்க எப்பவுமே இப்படித்தான். அவங்களுக்குள்ளே பேசிக்கறாங்க. அவங்களுக்குள்ள சிரிச்சிக்கறாங்க.. ஆனா நம்மள எதாவது டேமேஜ் பண்ணனும்னா மட்டும் பப்ளிக்கா மானத்த வாங்கறாங்கன்னு கம்ப்ளெயிண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டார்.

நாங்க எப்ப பேசினோம்னு திருப்பி கேட்டா அதான் கண்ணாலயே பேசிக்கறீங்களே அப்படின்னுட்டு.. பசங்க பக்கம் திரும்பி இனிமே நாமளும் கண்ணால தான் பேசிக்கனும்.. இவங்களுக்கு சொல்லகூடாதுன்னு சொல்ல.. இன்னொருத்தர் அப்பிராணியா எதைப்பத்தின்னு கேக்க.. எல்லாரும் செமையா சிரிச்சிட்டோம்.. பாருங்க.. நீங்க வாயால பேசினாலே அவங்களுக்கு புரிய மாட்டேங்குது இதுல கண்ணால வேற பேசப்போறீங்களாக்கும்னு கலாய்க்க.. அவர் உடனே.. பரவாயில்லங்க.. நாங்க தனியா போயாவது பேசிக்கறோம் ஆனா உங்க முன்னாடி மட்டும் பேச மாட்டோம்னு சொன்னாரு. சரி அதையும் பாக்கலாம்னு சொல்லிட்டு கிளம்பிட்டோம்..

இது நடந்து கொஞ்ச நேரம் கழிச்சு.. கண்ணாலயே பேசிக்கறோம்னு சொன்னவர்கிட்ட இன்னொருத்தன் வந்து "நீங்க அன்னிக்கு பாத்தீங்க இல்ல.. அந்த பொண்ணு பேரு.... " அப்படின்னு அந்த பொன்னு பேர சொல்ல.. அவர் உடனே "டேய் இப்போ தான டா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எதுவா இருந்தாலும் இவங்க முன்னாடி பேசாதன்னு சொன்னேன்" னு ஓவரா பீல் பண்ண, நாங்க கூலா "விடுங்க விடுங்க.. உங்கள விட்டா நாங்களும் வேற யாரத்தான் கலாய்க்கறது" ன்னு அப்பாவியா கேட்டோம் :)

டிஸ்கி : இன்னிக்கு வரை அவங்க கண்ணால பேச ஆரம்பிக்கலை ;)

கலாட்டாக்கள் தொடரும்...

பூ..

மெயின் மேட்டருக்கு போறதுக்கு முன்னாடி நமக்கு இன்னொரு தபா பட்டாம்பூச்சி அவார்ட் குடுத்த எம்.ஜி.நிதிக்கு ஒரு நன்றி சொல்லிக்கறேன்.. எப்பவோ ஒரு முறை குடுத்த புக்க இன்னும் ஞாபகம் வெச்சிருக்கார் நல்லவர் :)

இப்போ மேட்டருக்கு வருவோம்.. பூ.. பட விளம்பரம் பாத்து ஏமாந்து பாக்கணும்னு ஆசைப்பட்ட படம்.. ஆனா படம் முடிஞ்சப்புறம் என்னதாண்டா சொல்ல வர்றீங்கன்னு கேக்கத்தான் தோனுச்சு.. சரி விடுங்க.. அந்த சோகக்கதை நமக்கெதுக்கு.. ஆனாலும் படத்துல ரசிக்கக்கூடிய விஷயங்கள் நிறைய இருந்துச்சு..

கதாநாயகியோட ஓவர் பொசெஸ்ஸிவ் காதல்.. எல்லாமே அவன் தான்.. அவனுக்கு மட்டும் தான்.. எப்பவும் அவன் நெனப்பு தான்னு இருக்கறது.. ஒரு காட்சில அவனுக்கு புடிச்ச கள்ளிபழத்த அவனுக்கு குடுக்க ஓடிப்போய் விழுந்து எழுந்து மேல எல்லாம் அந்த பழத்தோட சாயம் ஒட்டி உட்கார்ந்திருக்கும் போது, அவளோட தோழி அவகிட்ட "நீ அழகா இருக்க"ன்னு சொல்ல.. நம்ம அம்மணி சந்தோஷமா "என் தங்கராசுக்காக நான் எது பண்ணாலும் அழகு தான்டி"னு சொல்லி சிரிக்கும்போது.. நிஜமாவே அம்மணி ரொம்ப அழகு.. கதாநாயகியோட சின்ன வயசு கேரக்டர்ல வந்த பொன்னும் சரி.. கதாநாயகியும் சரி.. சும்மா பொளந்து கட்டி இருக்காங்க :) இப்படியும் ஒரு கண்மூடித் தனமான அன்பை ஒருத்தர் மேல வைக்க முடியுமான்னு அதிசயிக்க வெச்ச கேரக்டர் மாரி :)

படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு இங்க உங்களுக்காக :)




ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெய்யில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா

(ஆவாரம் பூ..)

காற்றில் ஆடி தினம்தோறும் உனது திசையை தொடருதடா
குழந்தைக்கால ஞாபகத்தில் இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம் நினைத்தே அது கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும் தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அதன் வார்த்தையல்ல மௌனம் ஆகும்

(சொந்த வேரோடு..)
(ஆவாரம் பூ..)

ஆயுள் முழுதும் தவம் கிடந்தே ஒற்றைக் காலில் நிற்குதடா
மாலையாகி தவழ்ந்திடவே உனது மார்பை கேட்குதடா
பனியில் அது கிடக்கும் நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீ தான் அதன் வாசங்கள் எல்லாம் நீ தான்
நீ விட்டுச் சென்றால் பட்டு போகும்

(சொந்த வேரோடு..)
(ஆவாரம் பூ..)

ஜில்லுன்னு 3 ப்ளாக்

நம்மள இன்னும் இந்த ஊரு நம்பிட்டிருக்குங்கறதுக்கு சாட்சி தான் நம்ப கார்த்திக் குடுத்திருக்கற இந்த பட்டாம்பூச்சி அவார்டு [கார்த்திக் உஷாரா இருந்துக்கோங்க.. நீங்க பண்ண இந்த தப்புக்கு உங்க வீட்டுக்கு ஆட்டோ இல்ல.. டேங்கர் லாரியே வந்தாலும் ஆச்சர்யப்படறதுக்கில்ல :) ]



நமக்கு குடுத்த இந்த அவார்ட நாம சிலருக்கு குடுக்கனுமாமில்ல.. நாம யாருக்கு குடுக்கறதுன்னு ஒரு லிஸ்ட் போட்டா அது பாட்டுக்கு மளிகை கடை லிஸ்ட் மாதிரி போய்கிட்டே இருக்கு.. சரி.. இப்படி போனா 4 போஸ்ட் ஒன்னா போடற மாதிரி ஆயிடும்.. அதனால ஒரு 3 பேருக்கு மட்டும் அவார்ட குடுப்போம்னு முடிவு பண்ணியாச்சு.. (எல்லாம் நமக்கு நாமே முடிவு பண்ணிக்கற திட்டம் தான் :) )

கூலான ப்ளாக் அப்படின்னு சொன்னவுடனே ஞாபகம் வந்தது நம்ம குசும்பன் பிளாக் தான்.. எப்ப யார் ஏதாவது காமெடியான பதிவு சொல்லுன்னு கேட்டாலும் டக்குன்னு சொல்றது குசும்பனோட பதிவுகள் தான். அதனால இப்பவும் இந்த அவார்ட மொதல்ல வாங்கறவர் அவர் தான் :)

அடுத்த படியா நம்ம கப்பி ப்ளாக் தான் ஞாபகம் வந்துது.. இதை பத்தி மட்டும் தான் எழுதுவார்னு சொல்ல முடியாத அளவுக்கு எல்லாத்த பத்தியும் ரசிக்கும் படியா எழுதக்கூடியவர்.. ஜாவா பாவலர், கப்பி நிலவர், அறிவுஜீவி ன்னு பல பட்ட பெயர்கள் கொண்ட நம்ம கப்பிக்கு இந்த அவார்ட் குடுக்கப்படுகிறது :)

மூனாவதா இந்த அவார்ட் நம்ம திவ்யப்ரியவுக்கு குடுக்க விரும்பறேன்.. இவங்க கதைகளை படிக்க ஆரம்பிச்சு அப்படி மெல்ல மெல்ல மத்த போஸ்டும் படிக்க ஆரம்பிச்சு இப்போ அவங்க ரசிகையாவே மாறியாச்சு :) [இந்த விஷயம் அவங்களுக்கே தெரியாது.. ஏன்னா அவங்க ப்ளாக்ல நான் ரொம்ப அதிசயமா தான் கமெண்டே போடுவேன் :P]

சொல்ல மறந்துட்டேன்.. இந்த ஆட்டத்துக்கு 3 விதிமுறைகள் இருக்காம்..

1. இந்த பட்டாம்பூச்சி படத்த உங்க ப்ளாக்ல போட்டுக்கணுமாம்
2. உங்களுக்கு இந்த பட்டத்த குடுதவங்களுக்கு லிங்க் குடுத்து ஓசி விளம்பரம் குடுக்கணுமாம்.
3. நீங்க யாருக்கெல்லாம் இந்த பட்டத்த குடுக்க போறீங்களோ அவங்க லிங்க் எல்லாம் கரெக்டா குடுதுடனுமாம் :)