கலாட்டா டைம் - I

எங்க ஆபீஸ்ல ஆல் டைம் கலாட்டா டைம் தான்னாலும் லஞ்ச் டைம் கலாட்டா கொஞ்சம் பலமா இருக்கும். எங்க கும்பல்ல 2 பேர் வேற ப்ளோர்ல இருக்காங்க.. மதியம் சாப்பிடற நேரம் அவங்களும் எங்களோட சேர கச்சேரி கலை கட்டும் :) எப்பவும் நானும் என்னோட இன்னொரு ப்ரெண்ட் ஒருத்தியும் தான் கார்னர் சீட்ல எதிர் எதிர்ல உட்காருவோம். இது எழுதப்படாத சட்டம். அப்படியே தப்பித்தவறி வேற யாராவது உட்கார்ந்தாலும் அவங்கள எழுப்பிட்டு நாங்க உட்காருவோம். அம்புட்டு நல்லவங்க :)

அன்னிக்கும் அப்படித்தான் எல்லாரும் உட்கார்ந்து கதை அடிச்சிட்டே சாப்டுட்டு இருக்கும்போது அங்க FM ரேடியோல வாரணம் ஆயிரம் படத்துல இருந்து நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாட்டு ஓடிட்டிருந்துது.. நமக்கு புடிச்ச பாட்டுங்கறதால மக்கள் பேசறத கவனிக்காம நான் பாட்டுக்கு பாட்ட கேட்டுட்டிருந்தேன். அதுல கரெக்டா "இவள் பின்னால் நெஞ்சே போகாதே" ங்கற லைன் வரும்போது என்னையும் மறந்து நோ சொல்ல தலையாட்டற மாதிரி ஆட்டிட்டே எதிர்க்க பாத்தா என் ப்ரெண்டும் என்னை பாத்து அதே மாதிரி தலையாட்டிட்டு சிரிச்சா.. நான் என்ன நெனச்சு தலையாட்டினேன்றது அவளுக்கும் அவ என்ன பாத்து எதுக்கு தலையாட்டினாங்கறது எனக்கும் தெரியும்ங்கறதால டக்குனு ரெண்டு பேரும் சிரிச்சிட்டோம் :) மீதி இருந்தவங்க எல்லாம் நாங்க எதுக்கு சிரிக்கறோம்னு தெரியாம எங்கள பாக்க, இது தான் சாக்குனு எங்க கூட இருந்த இன்னொரு ப்ரெண்ட்.. இவங்க எப்பவுமே இப்படித்தான். அவங்களுக்குள்ளே பேசிக்கறாங்க. அவங்களுக்குள்ள சிரிச்சிக்கறாங்க.. ஆனா நம்மள எதாவது டேமேஜ் பண்ணனும்னா மட்டும் பப்ளிக்கா மானத்த வாங்கறாங்கன்னு கம்ப்ளெயிண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டார்.

நாங்க எப்ப பேசினோம்னு திருப்பி கேட்டா அதான் கண்ணாலயே பேசிக்கறீங்களே அப்படின்னுட்டு.. பசங்க பக்கம் திரும்பி இனிமே நாமளும் கண்ணால தான் பேசிக்கனும்.. இவங்களுக்கு சொல்லகூடாதுன்னு சொல்ல.. இன்னொருத்தர் அப்பிராணியா எதைப்பத்தின்னு கேக்க.. எல்லாரும் செமையா சிரிச்சிட்டோம்.. பாருங்க.. நீங்க வாயால பேசினாலே அவங்களுக்கு புரிய மாட்டேங்குது இதுல கண்ணால வேற பேசப்போறீங்களாக்கும்னு கலாய்க்க.. அவர் உடனே.. பரவாயில்லங்க.. நாங்க தனியா போயாவது பேசிக்கறோம் ஆனா உங்க முன்னாடி மட்டும் பேச மாட்டோம்னு சொன்னாரு. சரி அதையும் பாக்கலாம்னு சொல்லிட்டு கிளம்பிட்டோம்..

இது நடந்து கொஞ்ச நேரம் கழிச்சு.. கண்ணாலயே பேசிக்கறோம்னு சொன்னவர்கிட்ட இன்னொருத்தன் வந்து "நீங்க அன்னிக்கு பாத்தீங்க இல்ல.. அந்த பொண்ணு பேரு.... " அப்படின்னு அந்த பொன்னு பேர சொல்ல.. அவர் உடனே "டேய் இப்போ தான டா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எதுவா இருந்தாலும் இவங்க முன்னாடி பேசாதன்னு சொன்னேன்" னு ஓவரா பீல் பண்ண, நாங்க கூலா "விடுங்க விடுங்க.. உங்கள விட்டா நாங்களும் வேற யாரத்தான் கலாய்க்கறது" ன்னு அப்பாவியா கேட்டோம் :)

டிஸ்கி : இன்னிக்கு வரை அவங்க கண்ணால பேச ஆரம்பிக்கலை ;)

கலாட்டாக்கள் தொடரும்...
22 Responses
  1. k4karthik Says:

    நானே பர்ஸ்டு



  2. k4karthik Says:

    //லஞ்ச் டைம் கலாட்டா கொஞ்சம் பலமா இருக்கும்.//

    சாப்பாட்டுக்கு அடிதடினு சொல்லுங்க ?


  3. k4karthik Says:

    //எங்க கும்பல்ல 2 பேர் வேற ப்ளோர்ல இருக்காங்க.. //

    வை புளோர்ல? உக்கார சீட் இல்லையா?


  4. k4karthik Says:

    //என்னையும் மறந்து நோ சொல்ல தலையாட்டற மாதிரி ஆட்டிட்டே//

    முத்திபோச்சு டோய்....


  5. k4karthik Says:

    //அவங்களுக்குள்ளே பேசிக்கறாங்க. அவங்களுக்குள்ள சிரிச்சிக்கறாங்க.. //

    யக்காவ்வ்.. என்னதிது


  6. k4karthik Says:

    //கலாட்டாக்கள் தொடரும்...//

    எதுவா இருந்தாலும் பார்த்து செய்ங்க!


  7. Divyapriya Says:

    //என்னோட இன்னொரு ப்ரெண்ட் ஒருத்தியும் தான் கார்னர் சீட்ல எதிர் எதிர்ல உட்காருவோம்.//

    ஆஹா, இதுவல்லவோ நட்பு :)

    //நான் என்ன நெனச்சு தலையாட்டினேன்றது அவளுக்கும் அவ எதுக்கு என்ன பாத்து எதுக்கு தலையாட்டினாங்கறது எனக்கும் தெரியும்ங்கறதால டக்குனு ரெண்டு பேரும் சிரிச்சிட்டோம் :)//

    எங்களுக்கு அது என்னன்னு சொல்ல மாட்றீங்களே :(

    //இன்னிக்கு வரை அவங்க கண்ணால பேச ஆரம்பிக்கலை ;)//

    பசங்களுக்கு இந்த பாஷையெல்லாம் புரியறது கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே கஷ்டம் தான் :)


  8. \\ k4karthik said...
    //கலாட்டாக்கள் தொடரும்...//

    எதுவா இருந்தாலும் பார்த்து செய்ங்க!
    \\

    அண்ணன் எவ்வழியோ தம்பியும் அதே வழி ;))


  9. G3 Says:

    @K4K

    Neengalae pharshtu :)

    Neenga en katchiya edhirkatchiyannu appappo doubt varudhae ??? ippo unga commenta paatha andha sandhegam innum koodudhu.. enna pannalaam?


  10. G3 Says:

    @Gops

    Verum attendenceoda escape??


  11. G3 Says:

    @Divyapriya

    //ஆஹா, இதுவல்லவோ நட்பு :)//
    :)))))

    //எங்களுக்கு அது என்னன்னு சொல்ல மாட்றீங்களே :(//
    Sollitta suspense poidumae :)

    //பசங்களுக்கு இந்த பாஷையெல்லாம் புரியறது கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே கஷ்டம் தான் :)//
    Adhae adhae :)


  12. G3 Says:

    @Gopinath

    //அண்ணன் எவ்வழியோ தம்பியும் அதே வழி ;))//
    Idhu kootu sadhiya? Idhu theriyaama ithana naal appuraaniya irundhuttiyae G3 :(


  13. G3 Says:

    @Raam

    Annachi neenga mootha padhivar dhaan othukkarom.. adhukkunnu ippadi verum smileya pottu dhaan adha niroobikkanumnu avasiyam illae :P


  14. ambi Says:

    paavam antha pasanga.

    //லஞ்ச் டைம் கலாட்டா கொஞ்சம் பலமா இருக்கும்.//

    itha neenga sollave venaam. :D


  15. G3 Says:

    @Ambi

    //paavam antha pasanga.//

    :))))))))

    //itha neenga sollave venaam. :D//

    Romba theliva thaan irukeenga pola :)


  16. gayathri Says:

    நாங்கலும் அப்படி தாங்க.பஸ்ல lost ஷிட் யாருக்கும் கொடுக்கா மாட்டோம்.நானும் என் ஃப்ரண்ஸ் 5 பேரும் தான் அதுல உக்காந்துட்டு போவோம்


  17. G3 Says:

    @Gayathri

    Mudhal murai vandhirukeenga.. varuga varugavena iru karam koopi varaverkiren :)

    //நாங்கலும் அப்படி தாங்க.பஸ்ல lost ஷிட் யாருக்கும் கொடுக்கா மாட்டோம்.நானும் என் ஃப்ரண்ஸ் 5 பேரும் தான் அதுல உக்காந்துட்டு போவோம்//

    Welcome to the club :)))



  18. gayathri Says:

    நான் என்ன நெனச்சு தலையாட்டினேன்றது அவளுக்கும் அவ என்ன பாத்து எதுக்கு தலையாட்டினாங்கறது எனக்கும் தெரியும்ங்கறதால டக்குனு ரெண்டு பேரும் சிரிச்சிட்டோம் :)

    கொஞ்சம் எனக்கும் சொன்னா நானும் சிரிப்பேன்ல. என் பிளாக்குக்கு வந்து எனக்கு மட்டும் thniya சொல்லுங்க ஒகே


  19. G3 Says:

    @Gayathri

    //
    கொஞ்சம் எனக்கும் சொன்னா நானும் சிரிப்பேன்ல. என் பிளாக்குக்கு வந்து எனக்கு மட்டும் thniya சொல்லுங்க ஒகே//

    Aaha.. adhu oru periya kadhayaachae.. irunga.. post poda matter illana andha kadhaya posta podalaamnu oru ideala irukken... adhu varai waitees ;)

    20 adichadhukku ungalukku oru special tea :)


  20. gayathri Says:
    This comment has been removed by the author.