மேட்டர் கேளு மச்சி...

வழக்கம் போல நேத்து பதிவ போட்டுட்டு மக்கள் அடிச்சிட்டிருந்த கும்மிய வேடிக்கை பாத்துட்டிருந்தப்போ நண்பர் ஒருத்தர் போன் பண்ணாரு. நாளைக்கு ALMA Mater 14th Anniversaary ஃபங்க்ஷனுக்கு டிக்கெட் இருக்கு வர்றீங்களான்னு கேட்டாரு (உண்மையை சொல்லணும்னா அந்த அமைப்பு எதுக்குனு கூட எனக்கு தெரியாது. இதுக்கு முன்னாடி ஒரு முறை என் தோழி அவங்க நடத்திய விழாவுக்கு போகணும். கூட வர்றீங்களான்னு என்னை கேட்டா. சரிடி போலாம்னு சொன்னேன். ஆனா அப்போ எங்களுக்கு டிக்கெட் கிடைக்கலை. அதுக்கப்புறம் அதைப்பத்தி நானும் சுத்தமா மறந்துட்டேன்). நேத்து நண்பர் கூப்பிட்டப்ப ஏனோ போகலாம்ணு தோண, சரி வர்றேன்னு அவர்கிட்ட சொல்லிட்டேன்.

காலைல 10 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம். 9.30 க்கு கரெக்டா வந்துடுங்கனு சொல்லியிருந்தார். நாமதான் ரொம்ப சமத்தாச்சே. 9.25 க்கெல்லாம் அங்க போயாச்சு. நண்பர் வரும் வரை அங்க வர்ற மக்களை எல்லாம் நல்லா வேடிக்கை பாத்துட்டிருந்தேன். கூட்டம் நல்லா கலர்ஃபுல்லா தான் இருந்துது :) கொஞ்ச நேரத்துல நண்பர் அவரோட நண்பர்கள் சிலரோட வர ஒரு குட்டி அறிமுகப்படலம் முடிச்சிட்டு உள்ள போனோம். வாசல்ல நுழைஞ்சதுல இருந்து பாக்கறவங்க எல்லாரும் Happy Morning-னு சொல்லிட்டிருந்தாங்க. முன்பின் அறிமுகமில்லாதவங்களும் புன்னகையோட வாழ்த்துவதை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துது. அரங்கம் முழுக்க மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. கடைசியில வந்த சிலருக்கு இடம் இல்லாம இருந்தப்போ விருந்தாளிகளை நிக்க வைக்கறது சரியில்லை. ALMAnites நாம தான் நம்ம வீட்டு விசேஷத்துல அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்னு திரு. ரங்கராஜன் (ALMA Mater-ஐ உருவாக்கியவர்) அவர்கள் சொல்ல உடனே பலர் எழுந்து வந்திருந்தவங்களுக்கு இடம் குடுத்து அவங்க அங்க இருந்த படிக்கட்டுகள்ல உட்கார்ந்தாங்க. பார்க்கவே ஆச்சர்யமா இருந்த்து.

சரியா 10 மணிக்கு வாசற்கதவுகளை எல்லாம் மூடிட்டாங்க. லேட்டா வர்றவங்களை அனுமதிக்க மாட்டாங்களாம். அடுத்த 2 மணி நேரம் திரு.ரங்கராஜன் தான் பேசினார். சரியா 10 மணிக்கு ஆரம்பிச்சவர் அதே மாதிரி சரியா 12 மணிக்கு முடிச்சிட்டார். ஒரு நிமிஷம் கூட முன்ன பின்ன கிடையாது :) நிறைய விஷயங்களை உதாரணங்களோடும் நகைச்சுவையோடும் தெளிவா பேசினார். ஒரு நிமிஷம் கூட வேறு எந்த டைவர்ஷனும் இல்லாம் அவர் பேச்சை மட்டுமே கேட்கவைத்தார். இந்த நிகழ்ச்சி எதைப்பத்தின்னு எதுவுமே தெரியாதுங்கறதால, எந்த ஒரு எதிர்பார்ப்பும இல்லாம அவருடைய பேச்சை கேட்டேன். அதனாலயோ என்னவோ, அவர் சொன்ன விஷயங்கள் எனக்கு பிடிச்சிருந்த்து. அவர் சொன்னதின் சாராம்சம்

1. Face the situation - எதையும் கண்டு பயந்து ஓடாதீர்கள். தைரியமாய் சூழ்நிலையை சமாளியுங்கள். அவர் இந்த அமைப்பை துவங்க காரணமாய் இருந்தது அவருக்கு நெருங்கிய ஒருவரின் மரணம் தான். நன்றாய் படித்து நல்ல ஒரு வேலையில் இருப்பவர்களும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க தற்கொலை முயற்சியை நாடுகிறார்கள். நம் கல்வித்திட்டம் நம் மூளைக்கு மட்டுமே பாடங்கள் சொல்லி தருகிறது. ஏன் வாழ்க்கையை சந்திக்க அதில் வரும் பிரச்சனைகளை எதிர்த்து போராட சொல்லித்தருவதில்லை? அதை நாம் தான் அன்றாட வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டும். தப்பித்து ஓடுதல் என்றுமே எதற்குமே தீர்வாகாது.

2. Never give up - என்றும் எந்த ஒரு சூழ்நிலையிலும் இது என்னால் முடியாது என்று விட்டுக்கொடுக்காதீர்கள். தோல்வியடையும் ஒவ்வொருவரும் தான் வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருந்தோம் என்பதை உணருவதில்லை. உங்களால் முடியுமா என்ற சந்தேகம் வந்தால் அந்த விஷயத்தை ஆரம்பிக்காமலே விட்டுவிடுங்கள். ஆனால் ஆரம்பித்த பிறகு எக்காரணத்தை கொண்டும் அந்த விஷயத்தை முடிக்காமல் விடாதீர்கள்.

3. Waking up & Getting up - இது நம்மில் பலருக்கும் பொருந்தும் ஒரு விஷயம். விழிப்பு வந்தப்புறமும் இன்னும் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்னு எத்தனை பேர் லேட்டா எழுந்துக்கறோம். விழித்துக்கொள்வதற்கும் எழுந்துகொள்வதற்குமான இடைவெளி, நீங்கள் செய்யும் செயல்களை தள்ளிப்போடும் குனாதிசயத்துக்கான வெளிப்பாடு தான். எந்த ஒரு விஷயத்தையும் கடைசி நிமிடம் வரை தள்ளிப்போடுவீர்கள். அப்படி கடைசி நிமிடத்தில் செயல்படுத்துகையில் அந்த செயலை முடித்ததும் அப்பாடா முடித்துவிட்டோம் என்ற நிம்மதி மட்டுமே இருக்கும். அந்த செயலை முழுமையாக செய்தோம் என்ற திருப்தி இருக்காது. முடிந்தவரை இந்த இடைவெளியை குறைத்து பாருங்கள். ஒரு 21 நாட்கள் தொடர்ந்து விழிப்பு வந்தவுடன் எழுந்து உங்கள் நாளை துவங்கிப்பாருங்கள். நீங்கள் விழிக்கும் நேரத்தை உங்கள் விருப்பத்திற்கு முடிவு செய்துகொள்ளலாம்.

4. Acceptance - நம்மை சுற்றி நடப்பவைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம். அதை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் நஷ்டம் நம்மை சுற்றி இருப்பவர்க்கு அல்ல. நமக்கு தான் என்பதை புரிந்துகொள்ளுதல் அவசியம். உங்கள் அருகில் இருப்பவர் 24 மணி நேரமும் குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்று நீங்கள் எரிச்சல்படுவதால் நஷ்டம் யாருக்கு என்பதை உணருங்கள். உங்கள் எரிச்சல் அவரை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை.

இன்னும் அவர் கூறிய உதாரணங்கள் பற்றியும் கூற ஆசைதான் என்றாலும் பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
104 Responses
  1. நான் தான் ஒன்னு ;))


  2. நல்ல பதிவு ;))

    இந்த மாதிரி நல்ல விஷயத்தை எல்லாம் தொடராக போட மாட்டிங்களே!! ;))


  3. என்ன கொடுத்தாங்க?? ;)))


  4. G3 Says:

    @கோபி

    நீங்களே தான் ஃபர்ஸ்ட்டூ :))

    //நல்ல பதிவு ;))//
    மிக்க நண்றி :))

    //இந்த மாதிரி நல்ல விஷயத்தை எல்லாம் தொடராக போட மாட்டிங்களே!! ;))//
    இதுல ஏதும் உள்குத்து இல்லியே :)

    //என்ன கொடுத்தாங்க?? ;)))//
    நீங்க எதிர்பாக்கறது எதுவும் குடுக்கலை :P


  5. இங்க கும்மியடிக்கனுமா?


  6. G3 Says:

    @ராம்

    வேண்டவே வேண்டாம் ராசா...


  7. நீங்க சொன்னா நாங்க கேட்டுருவோமா என்ன???? கும்மி கோஷ்டிக வரட்டும்...

    அப்புறம் இருக்கு கச்சேரி.... :)


  8. படிச்சிட்டேன்....

    நல்லாயிருக்கு.... :)


  9. Really Nice post... :-)


  10. G3 Says:

    @ராம்

    //நீங்க சொன்னா நாங்க கேட்டுருவோமா என்ன???? கும்மி கோஷ்டிக வரட்டும்...
    அப்புறம் இருக்கு கச்சேரி.... :)//

    உங்க கொலைவெறி இன்னுமா அடங்கல??? !!!

    //நல்லாயிருக்கு.... :)//
    மிக்க நன்றி :)


  11. G3 Says:

    @சென்ஷி

    //Really Nice post... :-)//

    ரொம்ப நன்றி சென்ஷி :)


  12. Karthik Says:

    //9.25 க்கெல்லாம் அங்க போயாச்சு//

    Akka va nambhi tharalama meeting podalam.. en frnda kaalai la vaa da machi koopta, madiyanam vandhu LUNCH SAAPDALAMA nu vanda udane kepaan

    //கூட்டம் நல்லா கலர்ஃபுல்லா தான் இருந்துது :)//

    enakku pink thaan


  13. நல்லா இருக்கு மச்சி.. :)


  14. Karthik Says:

    //முன்பின் அறிமுகமில்லாதவங்களும் புன்னகையோட வாழ்த்துவதை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துது.//

    enakku pasanga arimugam ellam venaam

    //ஒரு நிமிஷம் கூட வேறு எந்த டைவர்ஷனும் இல்லாம் அவர் பேச்சை மட்டுமே கேட்கவைத்தார்//

    Neenga irukkum podhu Eppadi divert aagala???


    //ஏன் வாழ்க்கையை சந்திக்க அதில் வரும் பிரச்சனைகளை எதிர்த்து போராட சொல்லித்தருவதில்லை?//


    books r useless to us until our life book opens.. Epdi punch??


  15. Karthik Says:

    G3 machi... unakulla oru Kavanikira singam thonkikinu kidakka??? sema ya irundhuchu... naa la idhu maadhiri seminar pona vishil adhichu, kaatikinu, thoonginu iruppen... aana nee kavanicikiriye machi... naa edho lolu postu, vandhu neraya kumaalam nu ninachen.. nee vandhu ipdi peelings of peli sivam in phillipines kanakka pothurukka... :)


  16. Karthik Says:

    //இராம்/Raam said...
    இங்க கும்மியடிக்கனுமா?//

    Venaam ne... (thenavethu style la) Pen saabam polladadhu... Ammani saavam vida poraangya!!


  17. கேட்டுட்டேன் மச்சி... முடியல.. அவ்வ்வ்வ்வ்வ்வ் ;(


  18. G3 Says:

    @கார்த்திக்

    //Akka va nambhi tharalama meeting podalam.. en frnda kaalai la vaa da machi koopta, madiyanam vandhu LUNCH SAAPDALAMA nu vanda udane kepaan//
    அந்த ஃப்ரெண்டு பேரு கார்த்திக் இல்லியே...

    //enakku pink thaan//
    கலர் கலர் வாட் கலர் டூ யூ ச்சூஸ் அப்படினு யாராவது உன்னைய கேட்டுட்டாங்களாப்பா??

    //enakku pasanga arimugam ellam venaam//
    உனக்கு அறிமுகம் குடுக்கறேன்னு யாரு சொன்னா இப்போ?

    //Neenga irukkum podhu Eppadi divert aagala???//
    அது தான் எனக்கும் ஆச்சர்யம் :P

    //books r useless to us until our life book opens.. Epdi punch??//
    பின்றடா ராசா நீ :)))

    //naa la idhu maadhiri seminar pona vishil adhichu, kaatikinu, thoonginu iruppen...//
    அவர் ரொம்ப ஜாலியா சொன்னாரு இந்த விஷயத்தை எல்லாம். சிரிச்சு கைதட்டி கலாட்டாவாத்தான் நாங்களும் ரசிச்சிட்டிருந்தோம் :)


  19. G3 Says:

    @முத்துக்கா

    ரொம்ப நன்றி :))


  20. G3 Says:

    @சஞ்சய்

    ரொம்ப அழறீங்களோ?? கர்ச்சீப் வேணுமா???


  21. கேட்டாச்சு மச்சி கேட்டாச்சு அவ்வ்வ்


  22. G3 Says:

    @கானா பிரபா

    அடடா... யூ டூ அழுவாச்சீஸ்??? கர்ச்சீப் ஹோசேல்ல தான் ஆர்டர் குடுக்கணும் போல :P


  23. இப்படி எல்லாரும் பதிவ ஆஹா .. ஓஹோ’னு புகழ்ந்தா எப்படி, “மொக்கை” போடுறது?

    ஹி..ஹி.. பதிவுல உருப்படியான விசயம் இருந்துச்சு G3 :)))))


  24. //
    கொஞ்ச நேரத்துல நண்பர் அவரோட நண்பர்கள் சிலரோட வர ஒரு குட்டி அறிமுகப்படலம் முடிச்சிட்டு உள்ள போனோம்.
    //

    சரியா புரிய , ரெண்டு தடவ படிச்சேன்.. :))))


  25. Divyapriya Says:

    //9.25 க்கெல்லாம் அங்க போயாச்சு//

    ரொம்ப சமத்து தான் :))

    ரொம்ப நல்ல போஸ்ட் G3...waking up and getting up matter இத்தன நாளா தெரியாம போய்டுச்சு :(


  26. ambi Says:

    Very good one G3 (after a long time, he hee)

    3rd point is soo valid.


    //அவர் கூறிய உதாரணங்கள் பற்றியும் கூற ஆசைதான் என்றாலும்//

    Pls do put the 2nd, 3rd part. we don't bother.


  27. Lancelot Says:

    akka semma matter semma concept...kalakitingaa kaapi...


    aamma

    //கூட்டம் நல்லா கலர்ஃபுல்லா தான் இருந்துது//

    ithukku inna arthamnu siluvai ketkuraan???ethenum athimber usaar panningala??


  28. gils Says:

    !!! no mention of fud..ithu yaar ezhuthina post g3??


  29. Waking up & Getting up மேட்டரு ஷோக்கீது... முயற்சி செய்து பார்க்கனும்.


  30. மிக அருமையான பதிவு ...
    எனக்கு சம்மந்தம் இல்லைனாலும் சிறப்பான விஷயங்கள் நிறைய இருப்பதா தோனுது ...
    நீங்க அவ்ளோ சமத்தா ???


  31. சரி - இப்போ என் கும்மி நேரம் ...


  32. //வழக்கம் போல நேத்து பதிவ போட்டுட்டு மக்கள் அடிச்சிட்டிருந்த கும்மிய வேடிக்கை பாத்துட்டிருந்தப்போ நண்பர் ஒருத்தர் போன் பண்ணாரு. நாளைக்கு ALMA Mater 14th Anniversaary ஃபங்க்ஷனுக்கு டிக்கெட் இருக்கு வர்றீங்களான்னு கேட்டாரு//
    ஒருத்தன் சிக்கியிருக்கன் வான்னு கூபிட்டா போகாமலா இருக்க முடியும்.


  33. //உண்மையை சொல்லணும்னா அந்த அமைப்பு எதுக்குனு கூட எனக்கு தெரியாது.//
    நமக்கு அதுவா முக்கியம் ??? சின்னபுள்ள தனமா இருக்கு ...


  34. //இதுக்கு முன்னாடி ஒரு முறை என் தோழி அவங்க நடத்திய விழாவுக்கு போகணும். கூட வர்றீங்களான்னு என்னை கேட்டா. சரிடி போலாம்னு சொன்னேன். ஆனா அப்போ எங்களுக்கு டிக்கெட் கிடைக்கலை.//

    காசுகுடுத்து போறமாதிரி இருந்திருக்கும் ... எங்களுக்கு தெரியாதா ???


  35. // அதுக்கப்புறம் அதைப்பத்தி நானும் சுத்தமா மறந்துட்டேன்).//
    அந்த தோழிய தான ???


  36. // நேத்து நண்பர் கூப்பிட்டப்ப ஏனோ போகலாம்ணு தோண, சரி வர்றேன்னு அவர்கிட்ட சொல்லிட்டேன்.//
    அவ்வவ் அவ் வ் வ் வ் வ் வ்... ஒண்ணுமில்ல தேம்பி தேம்பி ....


  37. // நாமதான் ரொம்ப சமத்தாச்சே. 9.25 க்கெல்லாம் அங்க போயாச்சு//
    அதான் கொஞ்சம் டைம் இருக்கே - பக்கத்துல கடைக்கு போய்ட்டு வருவோமேனு தான ????


  38. // நண்பர் வரும் வரை அங்க வர்ற மக்களை எல்லாம் நல்லா வேடிக்கை பாத்துட்டிருந்தேன்//
    நாங்க நம்பிட்டோம் ....


  39. //கூட்டம் நல்லா கலர்ஃபுல்லா தான் இருந்துது :)//
    என்னா கலருன்னு சொல்லவே இல்ல ...


  40. //முன்பின் அறிமுகமில்லாதவங்களும் புன்னகையோட வாழ்த்துவதை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துது.//
    முன்பின் அறிமுகமில்லமா இப்படி கும்மியடிப்பது எனக்கு கூட வயித்துல புளிய கரைக்குது ...


  41. //சரியா 10 மணிக்கு வாசற்கதவுகளை எல்லாம் மூடிட்டாங்க. லேட்டா வர்றவங்களை அனுமதிக்க மாட்டாங்களாம்.//
    அப்ப நானெல்லாம் இந்தமாதிரி ஒரு நிகழ்வை பாக்கவே முடியாதா ???
    நீங்க நேத்து போட்ட பதிவுல இன்னைக்கு கும்மி அடிக்கும் போதே தெரியனும் ...


  42. // எந்த ஒரு எதிர்பார்ப்பும இல்லாம அவருடைய பேச்சை கேட்டேன். அதனாலயோ என்னவோ, அவர் சொன்ன விஷயங்கள் எனக்கு பிடிச்சிருந்த்து.//
    இது கும்மியல்ல ... நிஜம் : நீங்க மேல சொன்ன விஷயம் ஒரு மிக பெரிய தத்துவம் ...
    எதிர்பார்ப்புகளே நமக்கும் மகிழ்ச்சிக்கும் இடைவெளி ஏற்படுத்துகிறது.


  43. //எதையும் கண்டு பயந்து ஓடாதீர்கள். தைரியமாய் சூழ்நிலையை சமாளியுங்கள்.//
    கொஞ்சம் டிப்ஸ் ப்ளீஸ் ...


  44. //என்றும் எந்த ஒரு சூழ்நிலையிலும் இது என்னால் முடியாது என்று விட்டுக்கொடுக்காதீர்கள்//
    விடாம கும்மியடிச்சு நிரூபிக்கறேன் ...


  45. Waking up & Getting up ? apdiyaa ...
    enakku mattum work aagura maathiri theriyala.


  46. //நம்மை சுற்றி நடப்பவைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்.//
    கொஞ்சம் கஷ்டம் தான் ... இந்த கும்மிய பாத்துட்டு சும்மா இருங்க பார்ப்போம் ...


  47. //நஷ்டம் நம்மை சுற்றி இருப்பவர்க்கு அல்ல//
    யாரு சொன்னா ??? வரவன் இந்த கும்மியையும் சேத்து படிக்கும் போது எவ்ளோ கஷ்டம் ...


  48. //இன்னும் அவர் கூறிய உதாரணங்கள் பற்றியும் கூற ஆசைதான் //
    பாகம் இரண்டை கும்மி கூட்டம் எதிர்பார்க்கிறது ...


  49. அம்மாடி இன்னைக்கு அந்த "ஆளவந்தான்" தொந்தரவு இல்ல ...
    48 அடிச்சு இவ்ளோ நேரம் இருந்தாச்சு - யாரையும் காணோம் ...


  50. போட்டு தாக்கு - இது ரவியோட 50 :)))))


  51. //ஆளவந்தான் said...

    இப்படி எல்லாரும் பதிவ ஆஹா .. ஓஹோ’னு புகழ்ந்தா எப்படி, “மொக்கை” போடுறது?
    //
    அவங்கவங்க வேலைய அவங்கவங்க பண்ணனும் ...
    எதிலும் ஒரு தொழில் தர்மம் வேணும்,
    கும்மின்னு வந்துட்டா - சும்மா போய்ட முடியுமா...


  52. //
    Ravee (இரவீ ) said...

    அவங்கவங்க வேலைய அவங்கவங்க பண்ணனும் ...
    எதிலும் ஒரு தொழில் தர்மம் வேணும்,
    கும்மின்னு வந்துட்டா - சும்மா போய்ட
    //

    பெரியவுக சொன்ன்னா பெருமா சொன்ன மாதிரி..

    என்ன ரெடியா. ஒரு செஞ்சுரி போடுவேமா


  53. //
    கோபிநாத் said...
    என்ன கொடுத்தாங்க?? ;)))
    //

    அமைதி படை படத்துல அல்வா குடுத்தாங்க :)))))))


  54. //
    Ravee (இரவீ ) said...
    அம்மாடி இன்னைக்கு அந்த "ஆளவந்தான்" தொந்தரவு இல்ல ...
    48 அடிச்சு இவ்ளோ நேரம் இருந்தாச்சு - யாரையும் காணோம்
    //
    கொஞ்ச நேரம் அசந்தேன். அதுக்குள்ள் வந்து அடிச்சுட்டியேபா.. நல்ல இரு சாமீ.. நல்லா இரு


  55. //
    gils said...
    !!! no mention of fud..ithu yaar ezhuthina post g3??
    //
    இது ஊரறிஞ்ச ரகசிய்ங்கிறதுனால, இப்ப்ல்லாம் விளம்பர படுத்துறத தவிர்க்கிறாங்கனு நெனக்கிறேன்


  56. ரொம்ப நேரமா பாத்தேன் ஒருத்தரும் வரல.. சரி எக்ஸ்ட்ராவா ஒரு குவார்ட்டர் அடிச்சுட்டு போறேன்


  57. // நண்பர் ஒருத்தர் போன் பண்ணாரு.//
    // சரிடி போலாம்னு சொன்னேன்.//
    // நேத்து நண்பர் கூப்பிட்டப்ப ஏனோ போகலாம்ணு தோண, //

    ஏன் இந்த ஓர வஞ்ச்னை??


  58. //
    நாமதான் ரொம்ப சமத்தாச்சே.
    //

    தனக்கு தானே இப்படி தம்பட்டம் அடிக்க கூடாது. :))))


  59. //
    இடம் குடுத்து அவங்க அங்க இருந்த படிக்கட்டுகள்ல உட்கார்ந்தாங்க. பார்க்கவே ஆச்சர்யமா இருந்த்து.
    //
    இது கொஞ்சம் ஓவரா தெரியல.. படிக்கட்டுல உக்கார்ரது உங்களுக்கு ஆச்சர்யமா?


  60. யோவ் ரவீ.. எங்கப்பா போன, இப்படி த்னியா பொலம்ப விட்டுட்டியே :)


  61. //
    சரியா 10 மணிக்கு ஆரம்பிச்சவர் அதே மாதிரி சரியா 12 மணிக்கு முடிச்சிட்டார்
    //
    பேச்சை கவனிச்சீங்களா? இல்ல
    வாச்சை கவனிச்சீங்களா?


  62. //
    என்றும் எந்த ஒரு சூழ்நிலையிலும் இது என்னால் முடியாது என்று விட்டுக்கொடுக்காதீர்கள்
    //
    75 தான்.. நீங்களும் எனக்கு பிரியாணி வாங்கி தர்ற் முயற்சியை கை விட்டுடாதீங்க


  63. //
    இன்னும் அவர் கூறிய உதாரணங்கள் பற்றியும் கூற ஆசைதான் என்றாலும் பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
    //
    எங்க மேல உங்களுக்கு எவ்ளோ அக்கறை :))


  64. //
    கர்ச்சீப் வேணுமா???
    //
    கூவி..கூவி விக்கிறத பாத்தா சொந்தமா ஒரு க்ர்ச்சீப் பேக்டரி இருக்கும் போல


  65. ஹேய்.. யாராவது இருக்கீங்கள பா.. :(


  66. @ரவீ
    //
    நீங்க அவ்ளோ சமத்தா ??
    //

    இந்த கேள்விக்கும் பதிவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை;

    அதே சமயம் இந்த கேள்விக்கும் பதிவருக்கு எந்த சம்பந்தமுமில்லை;

    அதே சமயம் இந்த கேள்விக்கும் இந்த பின்னூட்டத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை;

    ஸ்ஸ்ஸ் அப்பபாபா இப்ப்வே கண்ண கட்டுதே :)


  67. //
    Ravee (இரவீ ) said...
    யாரு சொன்னா ??? வரவன் இந்த கும்மியையும் சேத்து படிக்கும் போது எவ்ளோ கஷ்டம் ...

    //

    கரெக்டா சொன்ன மாமே :))))


  68. //
    Ravee (இரவீ ) said...
    Waking up & Getting up ? apdiyaa ...
    enakku mattum work aagura maathiri theriyala.
    //

    Try the reverse Getting up and thn Sleeping.. Hope this will work out :) enakku nallave workout aaguthu :))))


  69. //
    Ravee (இரவீ ) said...
    //எதையும் கண்டு பயந்து ஓடாதீர்கள். தைரியமாய் சூழ்நிலையை சமாளியுங்கள்.//
    கொஞ்சம் டிப்ஸ் ப்ளீஸ் ..
    //

    என்னபா இன்னுமா இந்த கைநீட்டுற பழக்கத்த விடல


  70. @ஆளவந்தான் by Ravee (இரவீ )
    //
    ஆளவந்தான் said...
    //
    Ravee (இரவீ ) said...
    யாரு சொன்னா ??? வரவன் இந்த கும்மியையும் சேத்து படிக்கும் போது எவ்ளோ கஷ்டம் ...

    //

    கரெக்டா சொன்ன மாமே :))))

    //

    நான் எப்பவுமே ரொம்ப ரைட்.. பாண்டியன் படத்துல இருக்குற டயலாக் என்னோடது தான்

    பி.கு மொக்கையின் உச்சகட்டம் இது :)))))


  71. //
    ஆளவந்தான் said...
    ஹேய்.. யாராவது இருக்கீங்கள பா.. :(
    //

    யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துற்து பத்தி கேள்விபட்டிருக்கேன்...
    நீ கடையே இல்லாம் ஆத்திகிட்டிருக்கியே.. உன் கடம உணர்ச்சிய நெனக்கும் போது புல்லரிக்குது பா :))))


  72. @G3
    //
    உனக்கு அறிமுகம் குடுக்கறேன்னு யாரு சொன்னா இப்போ?
    //
    அப்போ அறிமுகம் எனக்கா.. ஹிஹிஹி..


  73. மன்ச விட்டுடாத இன்னும் மூனே ரன் தான்


  74. எழுபத்து நாளு


  75. யாரெங்கே.. அடித்துவிட்டான் ஆளவ்ந்தான் 75. கொடுத்து அனுப்புங்கள் அவன் கேட்டதை.


  76. gayathri Says:

    உங்களால் முடியுமா என்ற சந்தேகம் வந்தால் அந்த விஷயத்தை ஆரம்பிக்காமலே விட்டுவிடுங்கள். ஆனால் ஆரம்பித்த பிறகு எக்காரணத்தை கொண்டும் அந்த விஷயத்தை முடிக்காமல் விடாதீர்கள்.

    super da

    athavathu munna vacha kaala penna vaika kudathunu solreya ok ok


  77. gayathri Says:

    ஆளவந்தான் said...
    யாரெங்கே.. அடித்துவிட்டான் ஆளவ்ந்தான் 75. கொடுத்து அனுப்புங்கள் அவன் கேட்டதை.

    enna ketenga fulla offa


  78. @ஆளவந்தான்
    // பெரியவுக சொன்ன்னா பெருமா சொன்ன மாதிரி..//

    என்ன ரெடியா. ஒரு செஞ்சுரி போடுவேமா//

    சொல்லிபுட்டு -இப்டி பாதியில போயடியலே....


  79. @ஆளவந்தான்
    // அமைதி படை படத்துல அல்வா குடுத்தாங்க :)))))))//
    எனக்கு வரல !!!!!


  80. @ஆளவந்தான்
    // கொஞ்ச நேரம் அசந்தேன். அதுக்குள்ள் வந்து அடிச்சுட்டியேபா.. நல்ல இரு சாமீ.. நல்லா இரு//
    இன்னம இந்த நேரம் தான் - நம்ம நேரம்.


  81. @ஆளவந்தான்
    // இது ஊரறிஞ்ச ரகசிய்ங்கிறதுனால, இப்ப்ல்லாம் விளம்பர படுத்துறத தவிர்க்கிறாங்கனு நெனக்கிறேன்//

    ஆமாங்கறேன் ... பாருங்க பதில கூட காணும்...


  82. @ஆளவந்தான்
    // யோவ் ரவீ.. எங்கப்பா போன, இப்படி த்னியா பொலம்ப விட்டுட்டியே :)//

    டெய்லி பன்னண்டு மணிக்கு தூங்கினா ... உடம்பு தாங்காது சாமி ...
    கொஞ்சம் சீக்கரமா வாங்க ....


  83. @ஆளவந்தான்
    // பேச்சை கவனிச்சீங்களா? இல்ல
    வாச்சை கவனிச்சீங்களா?//
    சூப்பருன்னேன் ... கரீட்டா புடிச்சிங்க ...


  84. @ஆளவந்தான்
    // 75 தான்.. நீங்களும் எனக்கு பிரியாணி வாங்கி தர்ற் முயற்சியை கை விட்டுடாதீங்க//
    எனக்கு சட்னி -உங்களுக்கு பிரியாணியா?


  85. @ஆளவந்தான்
    // ஹேய்.. யாராவது இருக்கீங்கள பா.. :(//
    ஒங்கள நெனச்சா ... ரொம்ப பாவமா இருக்கு ...


  86. @ஆளவந்தான்
    // இந்த கேள்விக்கும் பதிவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை;

    அதே சமயம் இந்த கேள்விக்கும் பதிவருக்கு எந்த சம்பந்தமுமில்லை;

    அதே சமயம் இந்த கேள்விக்கும் இந்த பின்னூட்டத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை;

    ஸ்ஸ்ஸ் அப்பபாபா இப்ப்வே கண்ண கட்டுதே :)//

    அப்ப 'ஸ்ஸ்ஸ் அப்பபா' க்கும் 'கண்ண கட்டுதே' க்கும் சம்பந்தமுமில்லை.


  87. @ஆளவந்தான்
    // Try the reverse Getting up and thn Sleeping.. Hope this will work out :) enakku nallave workout aaguthu :))))//

    நூறு சதவீதம் உண்மை ....


  88. @ஆளவந்தான்
    // என்னபா இன்னுமா இந்த கைநீட்டுற பழக்கத்த விடல///

    அதெப்டி ....


  89. @ஆளவந்தான்
    // பி.கு மொக்கையின் உச்சகட்டம் இது :)))))//
    கூட இருந்து பாக்க முடியாம போய்டுச்சே .....


  90. @ஆளவந்தான்
    // ஹேய்.. யாராவது இருக்கீங்கள பா.. :(
    //

    யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துற்து பத்தி கேள்விபட்டிருக்கேன்...
    நீ கடையே இல்லாம் ஆத்திகிட்டிருக்கியே.. உன் கடம உணர்ச்சிய நெனக்கும் போது புல்லரிக்குது பா :))))//

    பாத்து - பசுமாடு வந்து மேஞ்சுட போகுது ...


  91. @ஆளவந்தான்
    // மன்ச விட்டுடாத இன்னும் மூனே ரன் தான்//
    என்ன ஒரு வில்லத்தனம் ...







  92. 97 :))))))))))))))))))))))))))))))))


  93. ரவி..

    புதுசா இன்னொரு வாசல் தொறந்து இருக்குபா.. அங்க நம்ம மொக்க தான் வியாபாரம்... )))



  94. This comment has been removed by the author.

  95. ஐயோ.. ஐயோ இன்னைக்கும் என்னால உமக்கு உதவ முடியாம போச்சே :)))


  96. வா ராசா வா ...
    சந்தோசமா????


  97. //ஆளவந்தான் said...

    ஐயோ.. ஐயோ இன்னைக்கும் என்னால உமக்கு உதவ முடியாம போச்சே :)))//
    அதுக்குதான் நான் இருக்கேனே ....