எத்தனை பேருக்கு பயணம் செய்யறது புடிக்கும்னு தெரியலை. அப்படியே பிடிக்கும்னு சொன்னாலும் நிறைய பேருக்கு ரயில் பயணங்கள் தான் பிடிக்கும்னு சொல்லுவாங்க.. ஆனா எனக்கு ரயில்ல போறத விட பஸ்ல போறது தான் ரொம்ப பிடிக்கும். அதுலயும் ஜன்னலோர இருக்கை கிடைச்சா இன்னும் சந்தோஷமா இருக்கும். எங்கயாவது வெளியூர் பயணங்கள் போனா கண்டிப்பா எனக்கு ஜன்னலோர இருக்கை தான். நண்பர்களோட போனாலும் சரி.. குடும்பத்தோட போனாலும் சரி.. இது எழுதப்படாத விதி.. அப்படி குடுதுட்டாங்கன்னா அவங்க பொழச்சாங்க. நான் வேடிக்கை பாத்துக்கிட்டே என் கற்பனைல மூழ்கிடுவேன்.. இல்லாட்டி போய் சேர வேண்டிய இடம் வர்ற வரைக்கும் பேசியே அவங்கள ரப்ச்சர் பண்ணிடுவேன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும் :)
இப்ப என்னடா திடீர்னு இவ பஸ் பயணத்த பத்தி ஆரம்பிச்சிட்டான்னு யோசிகறீங்களா? போன வாரம் ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு கடைசி நேரத்துல தான் தெரியவந்துது.. என் வண்டி எனக்கு இப்படி ஏதாவது ரெஸ்ட் கெடச்சா தான் உண்டுன்னு அது பாட்டுக்கு பெட்ரோல் என் கிட்டயும் இல்லன்னு சொல்லிடுச்சு. அதனால வெள்ளிக்கிழமை அலுவலகத்துக்கு பஸ்ல போனேன். ஆனாலும் பஸ்ல போறப்போ.. பலதரப்பட்ட மக்களை பாக்கறப்போ.. வர்ற சந்தோஷமே தனி தான்.
தனக்கே கால் வைக்க இடம் இல்லாம பக்கத்துல இருக்கறவர கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நிக்க சொல்லிட்டு நண்பன் கிட்ட என் கால் மேல உன் கால வெச்சிக்கிட்டு நில்லுடான்னு சொல்ற ஃபுட்போர்ட் நண்பர்கள்.. புத்தக பையுடன் நிற்கும் குழந்தையிடம் எவ்ளோ நேரம் இப்படி பைய வெச்சிட்டு நிப்ப.. யார்கிட்டயாவது குடும்மான்னு சொல்ற நல்லுள்ளங்கள்.. யாரவது வாங்கிப்பாங்களா நம்பி குடுக்கலாம்னு ஒரு அச்சம் கலந்த குழப்பத்துடன் பார்க்கும் குழந்தை.. குடும்மான்னு கேட்டு வாங்கிக்கற பக்கத்து இருக்கை அம்மணி.. வழக்கமாய் வரும் பயணிகளிடம் நடக்கும் சரளமான உரையாடல்கள்... நிமிடத்திற்கு ஒரு முறை நடத்துனர் சொல்லும் "உள்ள போங்க.. கொஞ்சம் தள்ளி நிள்ளுங்க.. சில்லறையா குடுங்க.. " வசனங்கள்.. பேருந்து நிறுத்தங்களில், பேருந்தில் ஏற முடியாமல் தவிக்கும் பள்ளி செல்ல வேண்டிய மகனைப் பார்த்து கவலைப்படும் தாய்.. ஃபுட்போர்டடில் இருப்பவர்களின் பைகளை வாங்கிக்கொள்ளும் ஜன்னலோர இருக்கை பெண்.. சுற்றி நடப்பதை கவனிக்க கூட மனமில்லாமல் காதில் ஒரு ஹெட்செட் மாட்டிக்கொண்டு பாடல் கேட்டவாறே பயணம் செய்பவர்கள்.. இன்னும் பலர்...
இவங்களை எல்லாம் பாக்கறப்போ நிச்சயம் உங்க கவலைய கொஞ்ச நேரமாவாது நீங்க மறக்கறது உறுதி :)
எனக்கு மூட் அவுட் ஆனா நான் செய்யற விஷயங்கள்ல ஒன்னு பஸ்ல பயணம் பண்றது. வண்டிய ஆபிஸ்லயே விட்டுட்டு பஸ் ஸ்டாப் போய் முதல்ல வர்ற பஸ்ல ஏறிடுவேன்.. அது எந்த டெர்மினஸ் போகுதோ அங்க இருந்து வீட்டுக்கு பஸ் ஏறுவேன்.. குறைந்தது ஒரு ரெண்டு மணி நேரமாவது பஸ்ல இருக்கற மாதிரி பாத்துப்பேன்.. கண்டிப்பா வீட்டுக்கு போய் சேர்றதுக்குள்ள மனசு கொஞ்சம் அமைதியாகிடும் :)
டிஸ்கி : இந்த ரசனை எல்லாம் எப்பவாவது பஸ்ல போனா மட்டுமே ரசிக்க முடியும்.. தினமும் பஸ்ல போக சொன்னா நிச்சயம் இதே ரசிக்கற மனநிலையோட எல்லாத்தையும் பாக்க முடியாதுன்னு ஒத்துக்கறேன் :)
இப்ப என்னடா திடீர்னு இவ பஸ் பயணத்த பத்தி ஆரம்பிச்சிட்டான்னு யோசிகறீங்களா? போன வாரம் ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு கடைசி நேரத்துல தான் தெரியவந்துது.. என் வண்டி எனக்கு இப்படி ஏதாவது ரெஸ்ட் கெடச்சா தான் உண்டுன்னு அது பாட்டுக்கு பெட்ரோல் என் கிட்டயும் இல்லன்னு சொல்லிடுச்சு. அதனால வெள்ளிக்கிழமை அலுவலகத்துக்கு பஸ்ல போனேன். ஆனாலும் பஸ்ல போறப்போ.. பலதரப்பட்ட மக்களை பாக்கறப்போ.. வர்ற சந்தோஷமே தனி தான்.
தனக்கே கால் வைக்க இடம் இல்லாம பக்கத்துல இருக்கறவர கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நிக்க சொல்லிட்டு நண்பன் கிட்ட என் கால் மேல உன் கால வெச்சிக்கிட்டு நில்லுடான்னு சொல்ற ஃபுட்போர்ட் நண்பர்கள்.. புத்தக பையுடன் நிற்கும் குழந்தையிடம் எவ்ளோ நேரம் இப்படி பைய வெச்சிட்டு நிப்ப.. யார்கிட்டயாவது குடும்மான்னு சொல்ற நல்லுள்ளங்கள்.. யாரவது வாங்கிப்பாங்களா நம்பி குடுக்கலாம்னு ஒரு அச்சம் கலந்த குழப்பத்துடன் பார்க்கும் குழந்தை.. குடும்மான்னு கேட்டு வாங்கிக்கற பக்கத்து இருக்கை அம்மணி.. வழக்கமாய் வரும் பயணிகளிடம் நடக்கும் சரளமான உரையாடல்கள்... நிமிடத்திற்கு ஒரு முறை நடத்துனர் சொல்லும் "உள்ள போங்க.. கொஞ்சம் தள்ளி நிள்ளுங்க.. சில்லறையா குடுங்க.. " வசனங்கள்.. பேருந்து நிறுத்தங்களில், பேருந்தில் ஏற முடியாமல் தவிக்கும் பள்ளி செல்ல வேண்டிய மகனைப் பார்த்து கவலைப்படும் தாய்.. ஃபுட்போர்டடில் இருப்பவர்களின் பைகளை வாங்கிக்கொள்ளும் ஜன்னலோர இருக்கை பெண்.. சுற்றி நடப்பதை கவனிக்க கூட மனமில்லாமல் காதில் ஒரு ஹெட்செட் மாட்டிக்கொண்டு பாடல் கேட்டவாறே பயணம் செய்பவர்கள்.. இன்னும் பலர்...
இவங்களை எல்லாம் பாக்கறப்போ நிச்சயம் உங்க கவலைய கொஞ்ச நேரமாவாது நீங்க மறக்கறது உறுதி :)
எனக்கு மூட் அவுட் ஆனா நான் செய்யற விஷயங்கள்ல ஒன்னு பஸ்ல பயணம் பண்றது. வண்டிய ஆபிஸ்லயே விட்டுட்டு பஸ் ஸ்டாப் போய் முதல்ல வர்ற பஸ்ல ஏறிடுவேன்.. அது எந்த டெர்மினஸ் போகுதோ அங்க இருந்து வீட்டுக்கு பஸ் ஏறுவேன்.. குறைந்தது ஒரு ரெண்டு மணி நேரமாவது பஸ்ல இருக்கற மாதிரி பாத்துப்பேன்.. கண்டிப்பா வீட்டுக்கு போய் சேர்றதுக்குள்ள மனசு கொஞ்சம் அமைதியாகிடும் :)
டிஸ்கி : இந்த ரசனை எல்லாம் எப்பவாவது பஸ்ல போனா மட்டுமே ரசிக்க முடியும்.. தினமும் பஸ்ல போக சொன்னா நிச்சயம் இதே ரசிக்கற மனநிலையோட எல்லாத்தையும் பாக்க முடியாதுன்னு ஒத்துக்கறேன் :)


me the first... :)
மீ த செகண்டு................. :)
//ஆனாலும் பஸ்ல போறப்போ.. பலதரப்பட்ட மக்களை பாக்கறப்போ.. வர்ற சந்தோஷமே தனி தான். ///
நல்ல விசயம் :)
//இந்த ரசனை எல்லாம் எப்பவாவது பஸ்ல போனா மட்டுமே ரசிக்க முடியும்.. தினமும் பஸ்ல போக சொன்னா நிச்சயம் இதே ரசிக்கற மனநிலையோட எல்லாத்தையும் பாக்க முடியாதுன்னு ஒத்துக்கறேன் :)//
மைனஸ் பாயிண்ட்டும் இருக்கு :)
மீ த அஞ்சோட எஸ்ஸாகிக்கிறேன்! :)
thoda...neenga irukara malaivaazh arealenthu city kullara varanumna min. moonu hour aagum...athanneram vedikka paathutu varathay oru oor vitu ooru poituvara anubavam thaan..ahtye payana katturaiya podalam..ambutu distance..ithula enamo cityla peakhour busla ungaluku matum spl seat poatu kudutha epectla feel panirukeenga :D :D railway gate mathiri aruva gate poatu vandi pudikara oor thaana neenga :D :D
habba...moochu vidama commentiachu :D :D
கலக்கல் பதிவு..;)
\\\எனக்கு மூட் அவுட் ஆனா நான் செய்யற விஷயங்கள்ல ஒன்னு பஸ்ல பயணம் பண்றது. \\\
நமக்கு சைக்கிள்..சைக்கிளை எடுத்துக்கிட்டு சுத்த போயிடுவேன்.
//போன வாரம் ஏற்ப்பட்ட பெட்ரோல் தட்டுபாடு கடைசி நேரத்துல தான் தெரியவந்துது.//
கிகிகி.. ஸ்ட்ரைக் அறிவிச்சதும் என் பைக் டேங் ஃபுல் பண்ணிட்டேன்.. இன்னும் ஒரு வாரம் தாங்கும்.. :))
vanthuten :))
எத்தனை பேருக்கு பயணம் செய்யறது புடிக்கும்னு தெரியலை.//
theriyaathu nu sollave koodathu...
284756535389582748585 perukku pudikumam :D
அப்படியே பிடிக்கும்னு சொன்னாலும் நிறைய பேருக்கு ரயில் பயணங்கள் தான் பிடிக்கும்னு சொல்லுவாங்க.. ///
including me :P
அதுலயும் ஜன்னலோர இருக்கை கிடைச்சா இன்னும் சந்தோஷமா இருக்கும். //
apa than nalla sight adika mudiyum ;)
//நமக்கு சைக்கிள்..சைக்கிளை எடுத்துக்கிட்டு சுத்த போயிடுவேன்.//
தல கோபியை நான் வழிமொழிகிறேன்.
//ஷாலினி said...
அதுலயும் ஜன்னலோர இருக்கை கிடைச்சா இன்னும் சந்தோஷமா இருக்கும். //
apa than nalla sight adika mudiyum ;)//
ரிப்பீட்டே
//எத்தனை பேருக்கு பயணம் செய்யறது புடிக்கும்னு தெரியலை.//
பயணம் பண்ற எல்லாருக்கும் தான் :P
//ஆனா எனக்கு ரயில்ல போறத விட பஸ்ல போறது தான் ரொம்ப பிடிக்கும்.//
ஏன்னா.. இதுல தான் ஈஸிய டிக்கட் இல்லாம போலாம்..
//அதுலயும் ஜன்னலோர இருக்கை கிடைச்சா இன்னும் சந்தோஷமா இருக்கும்.//
மீ டூ..இயற்கையே ரசிச்சிட்டே போறது எம்புட்டு சந்தோஸம்ல
//இல்லாட்டி போய் சேர வேண்டிய இடம் வர்ற வரைக்கும் பேசியே அவங்கள ரப்ச்சர் பண்ணிடுவேன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும் :)//
rotfl.. தன்னை அறிந்தவன் உலகத்தை வெல்வானு உங்களை வச்சி தான் சொன்னாங்கலோ !!
//இப்ப என்னடா திடீர்னு இவ பஸ் பயணத்த பத்தி ஆரம்பிச்சிட்டான்னு யோசிகறீங்களா?//
ச்சே ச்சே.. எங்களுக்கு கும்மி அடிக்க ஒரு போஸ்ட் கெடைச்சாச்சேனு தான் திங்கிங்..
//k4karthik சொல்றது என்னன்னா..
//எத்தனை பேருக்கு பயணம் செய்யறது புடிக்கும்னு தெரியலை.//
பயணம் பண்ற எல்லாருக்கும் தான் :P
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்! :)))
//கானா பிரபா said...
//ஷாலினி said...
அதுலயும் ஜன்னலோர இருக்கை கிடைச்சா இன்னும் சந்தோஷமா இருக்கும். //
apa than nalla sight adika mudiyum ;)//
ரிப்பீட்டே
//
வயசான காலத்துல இந்த வழிமொழிதல்கள் எதுக்கு பாஸ்?????
//நண்பன் கிட்ட என் கால் மேல உன் கால வெச்சிக்கிட்டு நில்லுடான்னு சொல்ற ஃபுட்போர்ட் நண்பர்கள்..//
சூப்பருருரு...
//இவங்களை எல்லாம் பாக்கறப்போ நிச்சயம் உங்க கவலைய கொஞ்ச நேரமாவாது நீங்க மறக்கறது உறுதி :) //
ரிபீட்டு....
// ஆயில்யன் said...
ரிப்பீட்டே
//
வயசான காலத்துல இந்த வழிமொழிதல்கள் எதுக்கு பாஸ்?????//
ஆமா பாஸ், உங்களுக்கு வயசாயிடுச்சுங்கிற உங்க ஆதங்கம் புரியுது பாஸ்,என்ன பண்றது பாஸ் ;)
//அது எந்த டெர்மினஸ் போகுதோ அங்க இருந்து வீட்டுக்கு பஸ் ஏறுவேன்.. குறைந்தது ஒரு ரெண்டு மணி நேரமாவது பஸ்ல இருக்கற மாதிரி பாத்துப்பேன்.. கண்டிப்பா வீட்டுக்கு போய் சேர்றதுக்குள்ள மனசு கொஞ்சம் அமைதியாகிடும் :)//
நானும் இந்த மாதிரி ஆசை பட்டதுண்டு.. ஆனா போனது இல்லை.. கொள்கையே இல்லாமே சில விஷயங்கள் செய்யும்போது ரெம்ப சந்தோசமா தான் இருக்கும்.. :)
யக்காவ்.. போஸ்டு நல்லா கீது..
adra adra .. en yakka g3 vaazhga..
vithyasama yosichi nee eludhi irukira post idhu thaan first pola...
naanum ippadi thaan traffic signal ah pathi oru naal eludhinen :D
//எத்தனை பேருக்கு பயணம் செய்யறது புடிக்கும்னு தெரியலை//
appadi pudichaalum, ethanai peru payanam seivaanganu thaan theriala :D
// ஆனா எனக்கு ரயில்ல போறத விட பஸ்ல போறது தான் ரொம்ப பிடிக்கும். //
yakka nee chennai to kanyakumari bus la poi paaru he he he he....
short distance (upto 8hrs) ok .. bt train thaan best enna ketta :)..
//நான் வேடிக்கை பாத்துக்கிட்டே என் கற்பனைல மூழ்கிடுவேன்.. இல்லாட்டி போய் சேர வேண்டிய இடம் வர்ற வரைக்கும் பேசியே அவங்கள ரப்ச்சர் பண்ணிடுவேன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும் :)//
appoh vazhipokkan yaaarachum vandha inna pannuva yakka? :)
eppadi cross questiON
//இப்ப என்னடா திடீர்னு இவ பஸ் பயணத்த பத்தி ஆரம்பிச்சிட்டான்னு யோசிகறீங்களா?//
aamah,engai aachum treat nu kilambitiah nu naaan sathyama yosikala :)
//போன வாரம் ஏற்பட்ட பெட்ரோல் தட்டுபாடு கடைசி நேரத்துல தான் தெரியவந்துது.//
eppa? nee eating ku modhal ah ila eating ku appuramah?
//என் வண்டி எனக்கு இப்படி ஏதாவது ரெஸ்ட் கெடச்சா தான் உண்டுன்னு அது பாட்டுக்கு பெட்ரோல் என் கிட்டயும் இல்லன்னு சொல்லிடுச்சு//
petrol poda kodutha kaasula nee edhaavadhu light ah tiffin mudichi irupa adhu thaan :)
//ஆனாலும் பஸ்ல போறப்போ.. பலதரப்பட்ட மக்களை பாக்கறப்போ.. வர்ற சந்தோஷமே தனி தான். //
same pinch.. i lyk it :)
//தனக்கே கால் வைக்க இடம் இல்லாம பக்கத்துல இருக்கறவர கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நிக்க சொல்லிட்டு நண்பன் கிட்ட என் கால் மேல உன் கால வெச்சிக்கிட்டு நில்லுடான்னு சொல்ற ஃபுட்போர்ட் நண்பர்கள்.. புத்தக பையுடன் நிற்கும் குழந்தையிடம் எவ்ளோ நேரம் இப்படி பைய வெச்சிட்டு நிப்ப.. யார்கிட்டயாவது குடும்மான்னு சொல்ற நல்லுள்ளங்கள்.. யாரவது வாங்கிப்பாங்களா நம்பி குடுக்கலாம்னு ஒரு அச்சம் கலந்த குழப்பத்துடன் பார்க்கும் குழந்தை.. குடும்மான்னு கேட்டு வாங்கிக்கற பக்கத்து இருக்கை அம்மணி.. வழக்கமாய் வரும் பயணிகளிடம் நடக்கும் சரளமான உரையாடல்கள்... நிமிடத்திற்கு ஒரு முறை நடத்துனர் சொல்லும் "உள்ள போங்க.. கொஞ்சம் தள்ளி நிள்ளுங்க.. சில்லறையா குடுங்க.. " வசனங்கள்.. பேருந்து நிறுத்தங்களில், பேருந்தில் ஏற முடியாமல் தவிக்கும் பள்ளி செல்ல வேண்டிய மகனைப் பார்த்து கவலைப்படும் தாய்.. ஃபுட்போர்டடில் இருப்பவர்களின் பைகளை வாங்கிக்கொள்ளும் ஜன்னலோர இருக்கை பெண்.. சுற்றி நடப்பதை கவனிக்க கூட மனமில்லாமல் காதில் ஒரு ஹெட்செட் மாட்டிக்கொண்டு பாடல் கேட்டவாறே பயணம் செய்பவர்கள்.. இன்னும் பலர்... //
totally lykd it.. art (heart) of travelling.. chancey ila :D
idhula nee vutadhu,
cell phone ringing,
bus la mokkai + loves oduradhu
eyes and eyes meeting pannuradhu
etc etc. :)
//எனக்கு மூட் அவுட் ஆனா நான் செய்யற விஷயங்கள்ல ஒன்னு பஸ்ல பயணம் பண்றது//
ilaati hotel la poi nose varaikum saapduradhu :)
//முதல்ல வர்ற பஸ்ல ஏறிடுவேன்..//
board paarthu thaaney yeruva? nee paatuku KPN maadhiri bus la yerunah adhu vera ooooruku poida povudhu :)
gud post :) ... eppadi ippadi elaaam post putting?
//பஸ்ல போறது தான் ரொம்ப பிடிக்கும். அதுலயும் ஜன்னலோர இருக்கை கிடைச்சா இன்னும் சந்தோஷமா இருக்கும்.//
எனக்கும் பஸ்ல பயணம் செய்யறது ரொம்ப பிடிக்கும் :)
பயணம் செய்வதால் மனம் லேசாவதை நானும் ஆமோதிக்கிறேன் !
//இல்லாட்டி போய் சேர வேண்டிய இடம் வர்ற வரைக்கும் பேசியே அவங்கள ரப்ச்சர் பண்ணிடுவேன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும் :)//
ஹை...same pinch :))
நீங்க சொல்றது 100 % உண்மை (டிஸ்கி உட்பட) :))
//எனக்கு மூட் அவுட் ஆனா நான் செய்யற விஷயங்கள்ல ஒன்னு பஸ்ல பயணம் பண்றது. வண்டிய ஆபிஸ்லயே விட்டுட்டு பஸ் ஸ்டாப் போய் முதல்ல வர்ற பஸ்ல ஏறிடுவேன்.. அது எந்த டெர்மினஸ் போகுதோ அங்க இருந்து வீட்டுக்கு பஸ் ஏறுவேன்.. //
இதுல ஒரு அழகான தத்துவம் இருக்கு. வாழ்க்கை எப்பவும் நாம போற மாதிரி போகாது. (அதாவது.. டூ வீலர் மாதிரி நம்ம இஷ்டத்துக்கு)
சில சமயம் அது போற போக்குல போய் நமக்கு பிடிச்ச இடத்துல இறங்கிக்கனும்...
//என் கால் மேல உன் கால வெச்சிக்கிட்டு நில்லுடான்னு சொல்ற ஃபுட்போர்ட் நண்பர்கள்.. //
thol kudupan thozhan kelvi patiruken..ipo kaal vere kudukuraangala? :D
missed 'kaal'um/'kaal'ai vaari vidura intha kaalathula..ithellam aboorva katchigal :)
//நான் வேடிக்கை பாத்துக்கிட்டே என் கற்பனைல மூழ்கிடுவேன்.. //
vedikkai paakatiyum ithu thaney nadakuthu by default ;)
இந்த ரசனை எல்லாம் எப்பவாவது பஸ்ல போனா மட்டுமே ரசிக்க முடியும்.. தினமும் பஸ்ல போக சொன்னா நிச்சயம் இதே ரசிக்கற மனநிலையோட எல்லாத்தையும் பாக்க முடியாதுன்னு ஒத்துக்கறேன் :)////
alavukku meerinal amirthamum nanju :)))
//உங்க கவலைய கொஞ்ச நேரமாவாது நீங்க மறக்கறது உறுதி :) //
கவலையை மறக்க வைக்கும் ஊர்தி என்பது உறுதி :)
kalakal post Gayathri :) chennaila bus travel panna feel kuduthuta..super!! :)
//எனக்கு மூட் அவுட் ஆனா நான் செய்யற விஷயங்கள்ல ஒன்னு பஸ்ல பயணம் பண்றது//
வேணும்னா விரைவுப் பேருந்தில் போகும்போது இதை அனுபவிக்க முடியும்..மற்ற நாட்களில் வாய்ப்பே இல்லை...அவ்வளவு கொடுமை பேருந்தில் பயணிப்பது(வெளிநாட்டவர்களின் நாட்டாமை கொடிக்கட்டிப் பறக்கும்)...முடிந்த மட்டிலும் அதை தவிர்க்கவே மனம் விரும்பும்..
அதிகமான பயனம் பஸ்ஸில்தான், எனது வாழ்க்கை துணைவியும் அதில் கிடைத்ததுதான்.
அதிகமாக நான் பாலகுமாரனையும், சுஜாத்தாவையும், தி.ஜாவையும் ..............................
தெரிந்து கொண்டது பஸ் பிராயனங்களில் தான் ...
பஸ் பயணத்தில் மழை வெயில் தான் பிரச்னை. ரயிலில் இந்த தொல்லை இல்லை.
சிங்கப்பூரில் இந்த பிரச்னை இல்ல..ஆனால் அங்கு ஒரு liveliness இருக்காது.
விமானபயணத்தை எப்படி மறந்தீங்க ???
வெளிநாட்டுக்கு போய் சாப்ட புடிக்காதா?
எனக்கு - நண்பனின் காரில் முன் சீட்டில் அமர்ந்து - சைட் அடித்துக்கொண்டே போவது தான் பிடிக்கும்
me the 48th
//ஆனா எனக்கு ரயில்ல போறத விட பஸ்ல போறது தான் ரொம்ப பிடிக்கும். அதுலயும் ஜன்னலோர இருக்கை கிடைச்சா இன்னும் சந்தோஷமா இருக்கும். //
enakkum BUS thaan akka... aana Footboard thaan.. Long distance na Appa, amma varuvaanga.. adhunala adakama jannal seat la ukarnthu snacks, books
//புட்போர்டடில் இருப்பவர்களின் பைகளை வாங்கிக்கொள்ளும் ஜன்னலோர இருக்கை பெண்..//
naa eppavaadhu thaan bag edhuthu poven (LUNCH veetla katuna)..
Conductor comedy la ragaaliya irukkum.. naa en padivu la poduren...
பொங்கல் வாழ்த்துக்கள்!!!
தேவா...
@ G3..
naanum ithethaanga follow panren mood outtaa anna oru terminus la irunthu innoru terminus varaikum poittu thirumba varuven mood out paranthu poidum...neenga sollrathu romba unmai- trainaa vidaa bus thaan better athulla ennaku nalla experience...
me the number 52nd :)
ennakum bus na romba pudikum but motion sickness vanthu lesa nari poidum :))
so less bus and more train.
Pongal Vazhthukkal.
காதில் ஒரு ஹெட்செட் மாட்டிக்கொண்டு பாடல் கேட்டவாறே பயணம் செய்பவர்கள்.. இன்னும் பலர்...
naanbusla pona first itha than seiven pa
ஃபுட்போர்டடில் இருப்பவர்களின் பைகளை வாங்கிக்கொள்ளும் ஜன்னலோர இருக்கை பெண்.
ithaum naan seiven.but naana kettu vang matten avangala bag kodutha than vaguven
Arumai !!! Rasanai !!!! Ella vithamana payanamum mana azhuthathai kuraikka uthavum.
We can learn when we start to explore the world by travelling :)
நல்ல பதிவுங்க..... நான் பஸ்ல போய் ரொம்ப நாள் ஆச்சுங்க.... ஊருக்கு கூட ட்ரைன் தங்க போவேன். அனா பஸ்ல போன ... எதுக்கு scold பன்னுரங்கனு தெரியாம.... இந்த சிங்கார சென்னைல பஸ் ட்ரைன் நிம்மதியா போக கூட முடியாது.
"அதுலயும் ஜன்னலோர இருக்கை கிடைச்சா இன்னும் சந்தோஷமா இருக்கும்."
same blood???
@இராம்
முதல் கமெண்ட்ட மட்டும் போட்டுட்டு எங்க ஓடிட்டீங்க?
@ஆயில்யன்
:))))
ரெண்டாவதா வந்து நாலு கமென்ட் போட்டு அஞ்சு அடிச்சதுக்கு மிக்க நண்ணி :)
@கில்ஸ்
ரொம்ப பேசிட்டீங்க.. அடுத்த பதிவு உங்கள டேமேஜ் பண்ணி தான் :P
@கோபிநாத்
//கலக்கல் பதிவு..;)//
நன்றி கோபி :)
//நமக்கு சைக்கிள்..சைக்கிளை எடுத்துக்கிட்டு சுத்த போயிடுவேன்.//
ம்ம்.. கேள்விபட்டிருக்கேன்.. பசங்க சைக்கிள் இல்லாட்டி வண்டி எடுத்துட்டு கிளம்பிடுவீங்கன்னு :)
@சஞ்சய்
என்னதிது உலக அதிசயமா என்ன எதுவும் ஒட்டாம அமைதி புள்ளைய கமெண்டிட்டு போயிருக்கீங்க? உடம்பு ஏதாவது சரி இல்லையோ ?
@ஷாலினி
வாம்மா மின்னல் :)
//theriyaathu nu sollave koodathu...//
தெரியாதத தெரியாதுன்னு தானே சொல்லணும்.. தெரியாதத எப்படி தெரியும்னு சொல்ல முடியும்? சொல்லு சொல்ல்லு.. நீயே சொல்லு :)
//apa than nalla sight adika mudiyum ;)//
//vedikkai paakatiyum ithu thaney nadakuthu by default ;)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... ரகசியத்த இப்படி பப்ளிக்ல சொல்லலாமா? :(
//missed 'kaal'um/'kaal'ai vaari vidura intha kaalathula..ithellam aboorva katchigal :)//
அதே அதே :))
//alavukku meerinal amirthamum nanju :)))//
நீங்க சொன்னா கரெக்ட்டு தான் ஆபிசர் :)
//kalakal post Gayathri :) chennaila bus travel panna feel kuduthuta..super!! :)//
:)))) தன்யனானேன் :)
@கானா பிரபா
//தல கோபியை நான் வழிமொழிகிறேன்.//
//ரிப்பீட்டே//
:))))))))) கோபி யின் சிஷ்யர்னு கரெக்டா ப்ரூவ் பண்ணிட்டீங்க :)
@கே4கே
//ஏன்னா.. இதுல தான் ஈஸிய டிக்கட் இல்லாம போலாம்.. //
ஆஹா.. இது நல்ல ஐடியாவா இருக்கே.. ஆனா ரயில்லயும் டிக்கெட் இல்லாம போகலாம்... அது தான் இன்னும் சுலபம் :)
//மீ டூ..இயற்கையே ரசிச்சிட்டே போறது எம்புட்டு சந்தோஸம்ல //
//கொள்கையே இல்லாமே சில விஷயங்கள் செய்யும்போது ரெம்ப சந்தோசமா தான் இருக்கும்.. :) //
அதே அதே :))
//rotfl.. தன்னை அறிந்தவன் உலகத்தை வெல்வானு உங்களை வச்சி தான் சொன்னாங்கலோ !!//
:))))))))))))))))))))))))))))))))))))
//யக்காவ்.. போஸ்டு நல்லா கீது.. //
ரொம்ப நன்றிண்ணா :))
@கோப்ஸ்
//adra adra .. en yakka g3 vaazhga..
vithyasama yosichi nee eludhi irukira post idhu thaan first pola...//
ஆஹா.. அக்காவ பாராட்டின தம்பிக்கு ஒரு நன்றி சொல்லிகறேன் :)
//naanum ippadi thaan traffic signal ah pathi oru naal eludhinen :D//
அப்படியா.. லிங்க் குடுத்திருந்தா உனக்கும் விளம்பரம் ஆகி இருக்கும்ல :))
//appadi pudichaalum, ethanai peru payanam seivaanganu thaan theriala :D//
ம்ம்.. ரைட்டு :)
//short distance (upto 8hrs) ok .. bt train thaan best enna ketta :)..//
நான் அதிகபட்சமா பதினாலு மணி நேரம் பஸ்ல போயிருக்கேன்.. எனக்கு அது கம்ஃபர்ட்டா தான் இருந்துது :)
//appoh vazhipokkan yaaarachum vandha inna pannuva yakka? :)//
பாக்க நல்லா இருந்த சைட் அடிப்பேன் ;)
//eppa? nee eating ku modhal ah ila eating ku appuramah?//
ஈட்டிங்க்கு அப்புறம் தான் :P
//totally lykd it.. art (heart) of travelling..//
நன்றி நன்றி :)
//board paarthu thaaney yeruva? nee paatuku KPN maadhiri bus la yerunah adhu vera ooooruku poida povudhu :)//
:))))))))))))))))))) உன்னால மட்டும் எப்படி டா இப்படி எல்லாம் யோசிக்க முடியுது ?
//eppadi ippadi elaaam post putting?//
விடு விடு.. எனக்கும் தெரியாம எப்பவாவது இப்படி நல்லா போஸ்ட் வந்துடுது :)
@பூர்ணிமா சரண்
//எனக்கும் பஸ்ல பயணம் செய்யறது ரொம்ப பிடிக்கும் :)//
சூப்பரு :)
//பயணம் செய்வதால் மனம் லேசாவதை நானும் ஆமோதிக்கிறேன் !//
:))))))
@திவ்யப்ரியா
//ஹை...same pinch :))
நீங்க சொல்றது 100 % உண்மை (டிஸ்கி உட்பட) :))//
:))))))))))))))
நன்றி திவ்யா :)
@காண்டீபன்
//இதுல ஒரு அழகான தத்துவம் இருக்கு. வாழ்க்கை எப்பவும் நாம போற மாதிரி போகாது. (அதாவது.. டூ வீலர் மாதிரி நம்ம இஷ்டத்துக்கு)
சில சமயம் அது போற போக்குல போய் நமக்கு பிடிச்ச இடத்துல இறங்கிக்கனும்...//
:)))))))))))))))))))))))))))))))))))
@இனியவள் புனிதா
//வேணும்னா விரைவுப் பேருந்தில் போகும்போது இதை அனுபவிக்க முடியும்..மற்ற நாட்களில் வாய்ப்பே இல்லை...அவ்வளவு கொடுமை பேருந்தில் பயணிப்பது(வெளிநாட்டவர்களின் நாட்டாமை கொடிக்கட்டிப் பறக்கும்)...முடிந்த மட்டிலும் அதை தவிர்க்கவே மனம் விரும்பும்..//
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அனுபவம் :))))
@நட்புடன் ஜமால்
//அதிகமான பயனம் பஸ்ஸில்தான், எனது வாழ்க்கை துணைவியும் அதில் கிடைத்ததுதான்.//
ஆஹா.. வாழ்த்துக்கள் :))))))
//அதிகமாக நான் பாலகுமாரனையும், சுஜாத்தாவையும், தி.ஜாவையும் ..............................
தெரிந்து கொண்டது பஸ் பிராயனங்களில் தான் ...//
எனக்கு பயணம் பண்றப்போ படிக்கறதுல கான்சென்ட்ரேஷன் போகாது :)
@இரவீ
//வெளிநாட்டுக்கு போய் சாப்ட புடிக்காதா? //
யாராவது கூட்டிட்டு போறேன்னு சொன்ன நான் என்ன வேணாம்னா சொல்லப்போறேன் ?
//எனக்கு - நண்பனின் காரில் முன் சீட்டில் அமர்ந்து - சைட் அடித்துக்கொண்டே போவது தான் பிடிக்கும்//
உங்க கார்ல போனா ஒத்துக்க மாட்டீங்களோ? :P
@கார்த்திக்
//Long distance na Appa, amma varuvaanga.. adhunala adakama jannal seat la ukarnthu snacks, books//
அப்பா அம்மா கூட இருந்தா சமத்து புள்ள சீனா? கலக்கற கார்த்திக் :)
//Conductor comedy la ragaaliya irukkum.. naa en padivu la poduren...//
சீக்கிரம் போடு.. அதையும் படிப்போம்.. :))
@தேவன்மயம்
நன்றி.. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :)
@Lancelot
Same pinch... ரொம்ப அழுத்தி கிள்ளிட்டேனோ? :P
@unknown blogger
ஹிஹி.. இந்த வாட்டி பாரு.. உன் பேர நான் சொல்லவே இல்ல :)
:))) ஆஹா.. அப்படினா உனக்கு ரயில் தான் பெஸ்ட்டு :P
@வே.நா.சம்பத்குமார்
நன்றி.. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :)
@காயத்ரி
ரொம்ப நல்லவளா இருக்கியேடி செல்லம் :)
@Rajkingme
நன்றி ராஜ்.. உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன் :))
@Mayvee
//இந்த சிங்கார சென்னைல பஸ் ட்ரைன் நிம்மதியா போக கூட முடியாது.//
ஹிஹி.. எங்க ஊர்ல இதெல்லாம் ரொம்ப சகஜம்.. கொஞ்ச நாள்ல பழகிடும் :)
//same blood???//
u too :)))))))
காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..