உசேலே உசேலே..

மு.கு.1 : தேன்கிண்ணத்துல பதிவிடறதுக்காக எழுதினது. இங்கயும் இருக்கட்டுமே :)) [பின்னூட்ட கயமைத்தனம் மாதிரி இது பதிவு கயமைத்தனம்னெல்லாம் சொல்லப்புடாது :P]

மு.கு.2 : யாராவது இதோட வீடியோ கிடைச்சா லிங்க் குடுங்கப்பா

Get this widget Track details eSnips Social DNA


ஆல்பம் : உசேலே
பாடல் : உசேலே உசேலே
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ், டிம்மி, கார்த்திக் & திப்பு
பாடல் வரிகள் : பா.விஜய்

உசேலே உசேலே...

உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே
மாட்டு மணிச் சத்தம்
மல்லிகைப்பூவாசம்
கைத்தறி கண்காட்சி
சந்தக் கடைவீதி
தென்னஞ்சோலை
தெருவில் பள்ளம்
மண்ணுச்சாலை
மூங்கில் பாலம்
மூக்குத்திப்பூ முந்தானைகள்
மேளச் சத்தம் வாசக்கோலம்

இல்ல இது இல்ல வெளிநாட்டில் இது இல்ல
வெள்ள வெறும் வெள்ள மாநிறமே அங்கு இல்ல

உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே

பூ உண்டு பூ உண்டு ஆளான பெண் உண்டு
பூ சூடும் பெண் இல்ல ஃபாரினுல
பாவாடை தாவணி குங்குமம் கால் மெட்டி
பார்த்துட்டே வாழலாம் நம்மூருல
நம்மோட நெழலும் தான் சாலை மேல் விழுதுன்னா
அபராதம் கேக்குறான் ஃபாரினுலே
தாம்பூலம் போட்டுட்டு எங்கேயும் தூவலாம்
கேட்பாரே இல்லயே நம்மூரூல

உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே

நம்மூரு வண்டி வச்சு வண்டி பூரா உட்கார்ந்து
உண்ணும் சுகம் அடடா
வேகாத ரொட்டி வெச்சு வேளைக்கு ரெண்டு
திண்பான் ஃபாரினுல ஐயையோ
ஆண்டிப்பட்டியில் சேவல் சண்டைக்கு
ஃபாக்ஸிங் ஈடில்லையே

உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே

சைக்கில் பெல்லின் சங்கீதம்
மொட்டைமாடி காற்றாடி
ஓட்டுப் பள்ளிக்கூடங்கள் இன்பம் இன்பம்
கம்புச்சண்டை கரகாட்டம்
கோயில் குளம் கற்பூரம்
பொங்கல் தல தீபாவளி இன்பம் இன்பம்
தண்ணிக் கொடம் சண்டையும்
பானை மோரும் பண்ணீரும்
ஜன்னலில்லா பேருந்தும் இன்பம் இன்பம்

தென்னஞ்சோலை
தெருவில் பள்ளம்
மண்ணுச்சாலை
மூங்கில் பாலம்
மூக்குத்திப்பூ முந்தானைகள்
மேளச் சத்தம் வாசக்கோலம்

இல்ல இது இல்ல வெளிநாட்டில் இது இல்ல
வெள்ள வெறும் வெள்ள மாநிறமே அங்கு இல்ல

நம்ம ஊரு ஈடேல்ல எங்கும் பச்சைப்பசேலே
நம்ம ஊரு ஈடேல்ல எங்கும் பச்சைப்பசேலே
எங்கும் பச்சைப்பசேலே

உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே...
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
14 Responses
  1. CVR Says:

    //தாம்பூலம் போட்டுட்டு எங்கேயும் தூவலாம்
    கேட்பாரே இல்லயே நம்மூரூல////
    இது பெருமை படற விஷயமா???

    இது தவிர அத்தனையும் வாஸ்தவம்தான்!! :-)


  2. G3 Says:

    @சி.வீ.ஆர்,

    அது பாட்டு எழுதினவர தான் கேக்கனும். ஆனா அந்த ஒரு வரிக்காக மொத்த பாட்ட ரிஜக்ட் பண்ண முடியல :))


  3. :)

    அங்கும் இங்குமா!

    சி.வீ.ஆர். அதை தவிர்த்து இருக்கலாம்...


  4. பாட்டு இசை ரொம்ப சூப்பர்...
    மார்டன் இசையும்,கிராமிய இசையும் இணைந்து...


  5. // பாவாடை தாவணி குங்குமம் கால் மெட்டி
    பார்த்துட்டே வாழலாம் நம்மூருல//

    அவ்வ்வ்வ்வ்....இந்தக்காலத்துலயா?
    நெனப்புத்தேன் பொழப்ப கெடுக்குமாம..

    (ஹிஹி.. ரொம்ப நாள் ஆசை இத எங்கயாவது சொல்லிப்புடனுமின்னு...
    பின்ன எல்லாரும் என்னிய சொல்லறாய்ங்களே? :P)


  6. G3 ப்ளாக்தானா இது!?!?!


  7. டெம்ப்ளேட் ஜூப்பர்


  8. \ மங்களூர் சிவா said...
    G3 ப்ளாக்தானா இது!?!?!\\

    என்ன கேள்வி இது சிவா..100% ஜி3 ப்ளாக் தான்...நீங்க பதிவை படிக்கவில்லைன்னு நினைக்கிறேன்..;)))


  9. k4karthik Says:

    அக்காவ்.. பாட்டு சூப்பரு... வீடியோ தான் கிடைகலே


  10. Dreamzz Says:

    naan edhuvum sollala!



  11. இது கொஞ்சம் சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா? அந்த பாட்டை போல உள்ளது...s


  12. தாம்பூலம் போட்டுட்டு எங்கேயும் தூவலாம்
    கேட்பாரே இல்லயே நம்மூரூல//
    இத மாதிரி அதுலையும் வெத்தலைய மடிச்சி மாமன் அத கடிச்சி துப்ப ஒரு வழி இல்லையேனு வருத்த படறாங்க.. எல்லாம் துப்பு சுல்தான் பரம்பரை போல இருக்கு..


  13. Vidya Says:

    what song is this?