வாழ்த்தலாம் வாங்க :)

தமிழ்மண விருதுகள் 2008-ல் வெற்றி பெற்ற எல்லாருக்கும் வாழ்த்துக்கள். முக்கியமா நண்பர்கள் ராம், குசும்பன், நிலா செல்லம் & கே.ஆர்.எஸ் க்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் :)



பி.கு. : போன புதிர் பதிவுக்கான பதில்கள் அந்த பதிவுலயே அப்டேட் பண்ணியாச்சு :)

புதிரும் ஆதரவும்...

மத்தவங்க எல்லாம் தொடர் எழுதறாங்கன்னு நீயும் தொடர் எழுதறியே.. எல்லாரும் புதிர் போடறாங்களே நீ ஏன் போடக்கூடாதுன்னு என்னை பாத்து ஜீவ்ஸ் அண்ணாச்சி ஒரு கேள்வி கேட்டுட்டார். போஸ்ட் போட மேட்டர் இல்லாம இருக்கறப்போ இப்படி எல்லாம் லீட் குடுத்தா சும்மா இருப்போமா நாம.. போட்டுட்டோமில்ல புதிரையும்..

ஒண்ணும் பெரிய வேலையெல்லாம் இல்லை மக்கா.. கீழ இருக்கற எழுத்துக்களை சேர்த்து அது என்ன வார்த்தைன்னு கண்டுபிடிக்கனும். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு க்ளூ உண்டு :)

எடுத்துக்காட்டு : கழைக்காத்தாடு

க்ளூ : முள் நிறைந்தது

விடை : கத்தாழைக்காடு

இப்போ புதிர் :

1. கிமிந்க்யபைழிலம்த

க்ளூ : பழமை சார்ந்தது

விடை : பைந்தமிழிலக்கியம்

2. தவறிந்ழவின்அ

க்ளூ : சீச்சீ.. புத்தி கெட்டவன்

விடை : அறிவிழந்தவன்

3. ழுணிக்கெமத்டதா

க்ளூ : ஓலை கொண்டுவா

விடை : மடக்கெழுத்தாணி

4. கதிலபநம்ந்கம்க்

க்ளூ : தமிழ் இலக்கியம்

விடை : நந்திக்கலம்பகம்

5. தவத்ன்தபவிரி

க்ளூ : அச்சச்சோ பாவம்

விடை : பரிதவித்தவன்

*********************************

புதிர் போட்டாச்சு. அது என்ன ஆதரவு அப்படின்னு கேக்கறீங்களா? நம்ம ராம் அண்ணாச்சி இன்னிக்கு வந்து எப்பவுமே உங்க பாசமலர் ஜிஸ்டர்ஸ்க்கே சப்போர்ட் பண்றீங்களே.. எப்பவாவது இந்த அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணனும்னு நினைச்சாவது இருக்கீங்களான்னு கேட்டுட்டாரு.. இத்தனை நாளும் எங்கண்ணன் சிங்கம் மாதிரி சிங்கிளாவே சமாளிப்பாருன்னு நினைச்சேன். இப்படி தங்கச்சி கிட்ட வாயை திறந்து கேட்டப்புறம் சும்மா இருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க. ஆகையால் மக்களுக்கு தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் இன்று முதல் என் முழு சப்போர்ட் என் பாசமலர் அண்ணன் ராம் அவர்களுக்கு மட்டுமே :))

பி.கு. : பாசமலர் ஜிஸ்டர்ஸ் துர்கா & ஷாலினி இதனால நான் உங்களுக்கு எதிரணில சேர்ந்துட்டேன்னு தப்பா நினைக்கப்புடாது.. ராம் அண்ணாச்சியும் நம்ம கோஷ்டில சேந்துட்டாரு.. ஆக அவர் இனி உங்களை கலாய்க்கமாட்டாரு :)

*********************************
எல்லா புதிருக்கும் சரியா பதில் சொன்ன ஆளவந்தான், கப்பி, Lancelot, நிஜமா நல்லவன் எல்லாருக்கும் வாழ்த்துக்கள் :)))

சில புதிர்களுக்கு மட்டும் பதில் சொன்ன மை பிரண்ட், கில்ஸ் மற்றும் தினேஷ் க்கும், ஜி-டாக்ல் பதில் சொன்ன ராம் அண்ணாச்சி க்கும் பாராட்டுக்கள் :)))

மேட்டர் கேளு மச்சி - II

பல பழக்கவழக்கங்கள் ஏன் செய்யறோம்னு தெரியாட்டியும் இன்னிக்கும் செஞ்சிட்டு தான் இருக்கோம். அந்த பழக்கம் ஏன் வந்தது எப்படி வந்ததுன்னு பலருக்கு தெரிவதில்லை. அப்படி இருக்கறப்போ யாராவது அதைப் பத்தி சொன்னா கேட்டுக்க ஆர்வமா இருக்கும். அப்படி தான் சமீபத்தில் Frozen thoughts அப்படிங்கற புத்தகத்துல கடவுளுக்கு தலைமுடியை காணிக்கையா குடுக்கறதை பத்தி படிச்சேன். அதுல குடுத்திருந்த விளக்கம் சரியானதாவும் இருக்கலாம் தவறானதாவும் இருக்கலாம். ஆனா அதை படிச்சதும் எனக்குள் தோன்றிய எண்ணம் "எப்படி எல்லாம் யோசிக்கறாங்க" ன்னு தான். அதுல சொல்லி இருந்த விஷயம் இது தான்.

ஏன் மக்கள் தங்களோட தலைமுடியை கடவுளுக்கு காணிக்கையா குடுக்கறாங்க? இதை நாம ரெண்டு விதமா பார்க்கலாம்.

1. தலைமுடி என்பது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, ஒரு பெருமை சேர்க்கும் விஷயம். அப்படி பெருமை சேர்க்கும் ஒரு விஷயத்தை கடவுளுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் உங்களுடைய தற்பெருமையை, ஆணவத்தை, அகந்தையை கடவுளிடம் அர்ப்பணிப்பது போலாகிறது.

2. முன்பு, மன்னர்கள் ஆண்ட காலங்களில், போரின் முடிவில், தோல்வியுற்ற மன்னர் தன் கிரீடத்தை வெற்றி பெற்ற மன்னரின் காலடியில வைப்பார்கள், தான் தோல்வியுற்று சரணடைந்ததற்கு சாட்சியாக. இங்கு சரணடைதல் என்பதை வேறு ஒரு கண்ணோட்டத்திலும் பார்க்கலாம். "இதுவரை என்னுடைய மக்களின் நலன் என் பொறுப்பில் இருந்தது. இப்பொழுது என் நாடு உன்னுடையதாகி விட்டது. என்னுடைய மக்களின் நலனை உன் பொறுப்பில் விடுகிறேன். அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்" என்று கூறுவதாகவும் சொல்லலாம். இன்றைய மனிதர்கள் அவர்கள் தலைமுடியை கிரீடமாக கருதி அதை ஆண்டவனிடம் சமர்ப்பிப்பதன் மூலம், நான் என் வாழ்க்கையை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன். இனி என்னை நீயே வழிநடத்துவாயாக என்று கூறுவது போலாகும்.

அதில் இன்னொரு விஷயமும் சொல்லியிருந்தாங்க. "Crossing the road" விளையாட்டு தான் அது. ஒரு தந்தையும் குழந்தையும் சாலையை கடக்கையில், குழந்தை தந்தையின் கைகளை பற்றிக்கொண்டு சிரித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்கும். ஆனால் தந்தையோ சில அடிகள் முன்னாடியும், சில அடிகள் பின்னாடியும், கொஞ்சம் பக்கவாட்டிலும், சில நேரங்கள் நின்றும் சில நேரங்கள் ஓடியும் சாலையை குழந்தையுடன் கடந்து முடிப்பார். சாலையை கடக்கும் வரை குழந்தை சந்தோஷத்துடன் தந்தையுடன் இங்கும் அங்கும் ஓடுவதை ரசித்துக்கொண்டிருந்தது. ஏனெனில் அந்த குழந்தையை பொறுத்தவரை சாலையை கடப்பது என்பது ஒரு விளையாட்டு. சாலையை கடக்க வேண்டிய பொறுப்பை ஏற்கனவே தன் தந்தையின் கையில் ஒப்படைத்துவிட்டது அந்த குழந்தை. அந்த குழந்தையின் வேலை சாலையை கடக்கும் வரை தந்தையின் கையை பத்திரமாக பிடித்திருக்க வேண்டியது மட்டுமே. அதற்கு பெயர்தான் சரணடைதல். நீங்கள் பிடித்திருக்கும் கையை நம்பவேண்டும். நிச்சயம் நீங்கள் சாலையின் மறுபக்கத்தில் சேர்க்கப்படுவீர்கள் என்று முழுமையாக நம்பவேண்டும்.