அவ்வ்வ்வ்வ்வ்வ்...

நம்ம Carpie Diem யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னு நல்லெண்ணத்தோட என்னையும் டேக்ல கோத்துவிட்டுட்டாங்க.. என்னை பத்தி 25 விஷயம் சொல்லனுமாம்!! இதுக்கு முன்னால எட்டு விஷயம் சொல்ல சொல்லி கேட்டதுக்கே டாபிக்க மாத்தி எட்டு மறக்க முடியாத விஷயங்கள சொன்னேன். இப்போ 25 கேக்கறாங்க.. அந்தளவுக்கு நம்மள பத்தி சொல்ல பெருசா எதுவும் இல்லை. இருந்தாலும் நம்மையும் மதிச்சு டேக் பண்ணவங்களுக்கு மரியாதை குடுக்கறதுக்காக ஒரு பதிவு போட்டு ஒப்பேத்தறேன்.. பொறுத்தருளுங்கள் மக்கா :-))))

25-அ சிம்பிளா 5-5-ஆ பிரிச்சிக்கறேன்.. என் வசதிக்காக...

மறக்க முடியாத முதல் அனுபவங்கள்

1. முதல் வேலை கிடைத்ததும் வீட்டுக்கு கூட ஃபோன் பண்ணாம PCO-ல இருந்து என் ஃப்ரெண்டுக்கு கால் பண்ணி சொன்னது. ரெண்டாவது கால் தான் வீட்டுக்கு பண்ணேன்.

2. நண்பர்களுடன் சேர்ந்து முதன்முதலாய் நண்பர் ஒருவரின் கல்யாணத்திற்காக வெளியூர் (கோயம்பத்தூர்) சென்றது.

3. என் தோழிக்கு send off குடுக்க ஏர்ப்போர்ட் போனது.. எவ்ளோ control பண்ணியும் கண்ல தண்ணி எட்டி பாத்து காமிச்சு குடுத்துடுச்சு :-(

4. என் ப்ரெண்டோட கல்யாண ட்ரீட்க்கு அவ & அவ ஆத்துக்காரர் குடும்பத்தோட நைட் ஷோ போனது. அங்க தியேட்டர்ல 12 மணிக்கு அவ மாமியார்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கொண்டாடினது

5. எப்பவும் மத்தவங்க கல்யாணம் அல்லது அலுவலக சுற்றுலாக்கு மட்டுமே வெளியூர் பயணம் போனது போய் முதல் முறையாய் ஒரு ப்ரேக் வேணும்னு 4 நாள் நண்பர் வீட்டுக்கு போயிட்டு வந்தது. எப்படி எங்க வீட்ல இதுக்கு சம்மதம் சொன்னாங்கனு இன்னும் எனக்கு ஆச்சர்யமா இருக்கு !!

நான் செல்ல விரும்பும் 5 இடங்கள்

6. London

7. France

8. Sydney

9. New Jersey

10. San Francisco

நான் ரொம்ப possessive-அ feel பண்ற, அடுத்தவங்களுக்காக விட்டுக்குடுக்காத 5 விஷயங்கள்

11. My Best Friend

12. என்னுடைய டைரி

13. என்னுடைய ஸ்கூட்டி

14. என் தலையணை

15. எனக்கு வந்த பரிசுகள்

என்னை பிரம்மிக்க வைத்த சிலர்

16. என் பழைய டீம்மேட் பார்த்திபன்.. எப்பவுமே ரொம்ப தெளிவா இருப்பாரு. A person with 100% self-respect and self-confidence.

17. என் தோழி கவிதா. நான் என்னைக்குமே பார்த்து அதிசயிக்கும் ஒரு நபர். என்னை விட என்னை பத்தி ரொம்ப நல்லா புரிநதுகொண்டவள். A great motivator.

18. என் பழைய கம்பெனி senior PM ராதிகா. Top level management-ல இருந்த ஒரே அம்மணி. Professionally அவங்ககிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட விஷயங்கள் ஜாஸ்தி

19. என் தோழியோட கணவர் ஆனந்த். முதல் முறை அறிமுகமானப்பவே இவ்வளவு நல்லவங்களாவும் இருக்க முடியுமானு அதிசயிக்க வைச்ச நபர். Was so happy for my friend.. அவங்க ரெண்டு பேர்ல யாரு லக்கினு தனியா பிரிச்சு சொல்ல முடியாத அளவுக்கு ரெண்டு பேருமே அற்புதமான characters.

20. முந்தின பாயிண்ட் டைப் பண்றப்போ மனசுல நின்ன இன்னொரு கேரக்டர் Mrs. KK. போன பாயிண்ட் அப்படியே இந்த ஜோடிக்கும் பொருந்தும். Lovely pair :-)

சரி.. 20 பாயிண்ட் தான் ஓ.பி அடிச்ச கடைசி 5 பாயிண்டாவது டேக்குக்கு சம்பந்தமா எழுதுவியானு நீங்க கேக்கறது புரியுது.. உங்க ஆசையையும் நிறைவேத்தறேன்.. நோ வொர்ரீஸ் :-)))

21. பாட்டு.. எப்பவுமே பாட்டு கேட்டுட்டே இருக்கனும் எனக்கு. ஆபீஸாகட்டும் வீடாகட்டும்.. என்ன பண்ணிட்டிருந்தாலும், backgroundla பாட்டு ஓடிட்டிருக்கனும். கொஞ்ச நாள் முன்னாடி வரை வண்டி ஓட்டும்போது மட்டும் பாட்டு கேட்காம இருந்தேன். இப்போ அந்த கேப் கூட விடறதில்லை. வண்டி ஓட்டும்போதும் headset-ல பாட்டு கேட்க ஆரம்பிச்சாச்சு :-)

22. தனிமையில் இனிமை காணுவது ரொம்ப புடிச்ச விஷயம்.. I will be in my own dream world :-)

23. எனக்கு இருக்கற ஒரு பழக்கம் முடிஞ்சவரை என் நண்பர்கள் பிறந்தநாள் அன்னிக்கு எப்படியாவது அவங்கள நேர்ல பாத்து வாழ்த்திடுவேன். ஒரு 5 நிமிஷம் ஆன் தி வே-ல பாத்தாலும் ஓ.கே.. ஆனா எப்படியாவது பாத்துடனும்.

24. நிறைய travel பண்ண பிடிக்கும்... Bus/Train anything is comfortable for me.. ஆனா தூங்க சொல்லகூடாது. ஜன்னலோரம் சீட் குடுத்துட்டா.. 22nd point implement பண்ண ஆரம்பிச்சிடுவேன்.

25. Possessiveness - எனக்கு ரொம்ப பிடிச்சவங்கள யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக்குடுக்க மாட்டேன். அவங்கள கேலி பேசினா கூட அவ்ளோ ஈஸியா எடுத்துக்க முடியாது. என் தோழிய பத்தி ஒரு முறை இன்னொரு நண்பர் குட்டிபிசாசு எங்க காணும்னு கேட்க, நான் டென்ஷனாகி அவ ஒன்னும் குட்டிபிசாசில்லைனு சொல்ல, அந்த நல்லவர் பக்கத்துல நின்னுட்டிருந்த இன்னொருத்தி கிட்ட நாமளும் தானே இவ ஃப்ரெண்டு.. நம்மள கலாய்க்கறதுனா எவ்ளோ சந்தோஷமா மொத ஆளா நிப்பா...ஆனா அவள ஒரு வார்த்தை சொன்னா தாங்கமுடியலியாம் பாருனு பத்த வைச்சிட்டு போயிட்டார் :-( ஆனாலும் இந்த குணம் இன்னிக்கு வரை மாறலை.. மாத்திக்கவும் தோனலை :-)

ஷ்யப்பாடா.. ஒரு வழியா டேக்க முடிச்சிட்டேன்.. என்னது?? யாரையாவது கோத்துவிடனுமா?? அய்யா சாமி.. நான் வரலைப்பா இந்த ஆட்டைக்கு.. யாருக்கெல்லாம் இந்த டேக் புடிச்சிருக்கோ அவங்களாவே இந்த டேக்க எடுத்துக்கலாம்.

இத்துடன் நன்றி வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் ஜி3.. ஜி3.. ஜி3.. !!!

மௌனம்...



உள்ளிருக்கும் ரகசியங்களை
ஆழத்தில் மறைத்து
அமைதியாய் காட்சியளிக்கும்
ஆழ்கடலின் மௌனம்
எனக்கும் சாத்தியமானால்...

கலாட்டா டைம் - II

போன வியாழக்கிழமை தோழியோட கல்யாணம் திருவண்ணாமலைல. சரி.. ஒரு 8 பேர் ஆபீஸ்ல இருந்து போற மாதிரி இருந்ததால கார்ல போகலாம்னு முடிவு பண்ணி குவாலிஸ் புக் பண்ணியிருந்தோம். வழக்கம் போல ஆளாளுக்கு சொதப்ப 5 பேர் மட்டுமே போனோம். குவாலிஸ்க்கு பதில் அந்த ட்ராவல்ஸ் காரன் ட்ரவேரா அனுப்பியிருந்தான். சரி.. வா எல்லாரும் ஜாலியா படுத்துட்டே போகலாம் அவ்ளோ இடம் இருக்குனு கிளம்பியாச்சு. வேளச்சேரி நல்லாஸ்ல டின்னர் சாப்டுட்டு கதை அடிச்சிட்டே ஆரம்பிச்சோம் பயணத்தை.. எல்லாரும் அவங்க ஆபீஸ்ல சேந்த முதல் நாள் எப்படி இருந்துது மத்தவங்கள பத்தி என்ன நினைச்சாங்கனு கலாட்டாவ டாபிக் ஓடிட்டிருந்துது. அப்படியே விட்டிருக்கலாம்.. நான் சும்மா இல்லாம தாம்பரம் கிட்ட வந்தப்போ ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி விழுந்து வாரி நிறைய சில்லறை அள்ளின இடத்தை காமிச்சு, இந்த ஸ்பீட் ப்ரேக்கர் தான் நான் விழ காரணமானதுன்னு சொல்ல நண்பர் ஒருத்தர் ரொம்ப சீரியஸா "ஹே அங்க பாறேன்"னு சொல்ல.. என்ன விஷயம்னு கேட்டா அங்க ஒரு ஸ்பீட் ப்ரேக்கர் இருந்ததுக்கான அடையாளமே இல்லை பாருங்களேன்ங்கறாரு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

சரி சரி.. ஏதோ என் புண்ணியத்துல ஒரு 5 நிமிஷம் சந்தோஷமா இருந்தீங்களா.. போதும்.. அடுத்த டாபிக்கு வாங்கனு மத்த கதைகள் பேச ஆரம்பிச்சாச்சு. யார் யாரு ஆபீஸ்ல யாரை சைட் அடிக்கறானு ஆரம்பிச்சு அதை வைச்சு கலாய்க்க ஆரம்பிச்சோம். பேசிட்டிருந்ததுல நேரம் போனதே தெரியலை. கரெக்டா இராத்திரி 1 மணிக்கு எங்களுக்கு ரூம் புக் பண்ணியிருந்த ஹோட்டலுக்கு போய் சேந்தோம். தூங்க போறப்பவே பசங்க கிட்ட காலைல 7.30 - 9 தானே முகூர்த்தம்.. 4.30க்கு கால் பண்றோம். ஒழுங்கா எழுந்து கிளம்புங்க. சீக்கிரமா கோவிலுக்கு போயிட்டு அப்புறம் கல்யாணத்துக்கு போவோம்னு சொல்லிட்டு நாங்க எங்க ரூம்க்கு தூங்க போயிட்டோம். சொன்ன மாதிரி 4.30க்கு போன் பண்ணி எழுப்பிட்டு நாங்க கிளம்ப ஆரம்பிச்சாச்சு. 5.30க்கு ஹோட்டல் விட்டு கிளம்பறதா ப்ளான். சரினு 5.30 க்கு கால் பண்ணா.. 3 பேர்ல ஒருத்தர் மட்டும் தான் கிளம்பியிருக்காராம். இன்னொருத்தர் இப்போ தான் கிளம்பிட்டிருக்காரு, இன்னொரு நல்லவன் இப்போதான் எழுந்து உட்கார்ந்திருக்கானாம். அடப்பாவிங்களா நாங்களே தேவலை போலனு நினைச்சிக்கிட்டு ஒழுங்கா சீக்கிரம் கிளம்புங்கனு சொல்லி போன வைச்சாச்சு. சரி.. இவங்க வர்ற வரை வெட்டியா ஏன் உட்கார்ந்திருப்பானேன்னு நானும் என் தோழியும் அப்படி ஒரு வாக்கிங் போகலாம்னு வெளில வந்தோம்.

மெயின் ரோடு வரை ஒரு வாக்கிங் போயிட்டு அப்படியே பக்கத்துல இருந்த அக்னி லிங்கமும் பாத்துட்டு வர்றதுக்கும் இவங்க கிளம்பறதுக்கும் சரியா இருந்துது. சரினு கிளம்பி கோவிலுக்கு போனா அங்க செம கூட்டம்.. அண்ணாமலையாரும், உண்ணாமலையாரையும் பாக்கவே டைம் ஆயிடுச்சு. சரினு அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் அட்டெண்டன்ஸ் போட்டுட்டு வந்துட்டோம். திரும்ப ஹோட்டலுக்கு வந்து கிப்ட் எல்லாம் எடுத்துக்கிட்டு மண்டபத்துக்கு கிளம்பியாச்சு. கல்யாணம் எல்லாம் முடிஞ்சு மாப்பிள்ளையும் பொண்ணும் ப்ரீயாகற வரை கொஞ்சம் வெயிட் பண்ணிட்டு அப்புறம் மேடைக்கு போனோம் எங்க கிப்ட குடுக்க.

மொதல்ல எங்க கிப்டான மோதிரத்தை மாப்பிள்ளை கிட்ட குடுத்து பொண்ணுக்கு போட்டு விட சொன்னோம். கல்யாணப் பொண்ணும் ரொம்ப சந்தோஷமா கைய நீட்ட மாப்பிள்ளை பாட்டுக்கு அந்த மோதிரத்தை அவர் கைல போட ட்ரை பண்ணிட்டிருந்தாரு.. ஹலோ அந்த மோதிரம் உங்களுக்கு இல்லை. அவளுக்குனு சொன்னா கொஞ்சம் பெருசா இருந்தா நானே போட்டுட்டிருந்தேப்பேனேனு ஃபீல் பண்ணிட்டு அவளுக்கு போட்டு விட்டாரு. இப்போ தான் முக்கியமான பாயிண்ட்னு அவங்க ரெண்டு பேருக்கும் வாங்கியிருந்த கார்டை அவங்களுக்கு குடுத்து இப்பவே திறந்து பாருங்க. உங்க ரியாக்ஷனை காண ரொம்ப ஆவலாய் இருக்கோம்னு சொல்ல... மாப்பிள்ளை கார்ட் டைட்டில பாத்துட்டு அது என்னமோ ரொம்ப கரெக்டு தான்னு சொல்ல, பொண்ணு கார்ட பாத்துட்டு அடிப்பாவிங்களா.. இருங்க அப்புறம் பொறுமையா முழுசா படிச்சிட்டு ஃபோன் போட்டு ரியாக்ஷன் குடுக்கறேன்னு சொல்ல.. நாங்க அப்படியே அப்பீட் ஆயிட்டோம்..

அப்ப்டி என்ன கார்ட் குடுத்தோம்னு தானே யோசிக்கறீங்க இது தாங்க அந்த கார்டு...


With sympathy - பொண்ணுக்கு
With deepest sympathy - மாப்பிள்ளைக்கு

:)))))))))))))))))))))))))))))))))