டூ இன் ஒன் போஸ்ட்


First things First... நாளைக்கு (25th September) பிறந்தநாள் கொண்டாடற நம்ம சிங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி இந்த கேக்க அவருக்கு சமர்ப்பிக்கிறேன் :-)

இப்ப உங்கள் கொடுமை டைம்ஸ்.. ஆர்வக்கோளாருல நானும் ஒரு கதை எழுதி இருக்கேன். படிச்சுபாத்துட்டு கமெண்ட் பொட்டில துப்பிட்டு போங்க..

தன் மனைவி தூங்கும் அழகை ரசித்துக்கொண்டிருந்தவன் அவள் மெல்ல அசைவதை பார்த்ததும் அவள் கண்ணத்தில் மெல்லிதாய் முத்தமிட்டு "குட்மார்னிங் டா செல்லம்" என்றான். புன்னகையுடன் அவனுக்கு குட்மார்னிங் சொல்லிவிட்டு எழுந்தவள் இருவருக்குமாய் காபி கலக்கிக் கொண்டுவந்தாள். அவள் தந்த காபியை ரசித்து குடித்துக்கொண்டே "இன்னிக்கு சமையல் ஏதும் பண்ண வேணாம் ஜானு. நாம வெளியில எங்கயாவது போலாம்" என்றான்.

"ஐயாவுக்கு ஆபீஸ்னு ஒன்னு இருக்கறதே மறந்துருச்சாக்கும்?"

"அந்த சொட்ட மண்டையனுக்கு ஒரு போன போட்டு சொல்லிக்கலாம். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை."

"அம்மாவ பாத்து ரொம்ப நாளாச்சு. நீங்க லீவுன்னா இன்னிக்கே போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாமா?"

"சான்ஸே இல்ல. இன்னிக்கு முழுக்க நீயும் நானும் மட்டும் தான். உங்கம்மாவ பாக்க, வர்ற ஞாயித்துக்கிழமை வேணா போலாம்."

அவன் பிடிவாத குணம் அறிந்தவள், அதற்கு மேல் அதைப்பற்றி பேசாமல் "அப்படின்னா ஐயா ப்ளான் எல்லாம் ஏற்கன்வே போட்டுடீங்க போல??" என்று தன் சந்தேகத்தை வெளியிட்டாள்.

புன்னகையை மட்டுமே பதிலாய் தந்தவன், "நீ போய் ரெடியாகு.. போ" என்று அவளை விரட்டினான்.

அவனுடன் வெளியில் செல்வதென்றால் அவளுக்கு மட்டும் கசக்கவா செய்யும்?? ஆர்வமாய் கிளம்பினாள். அன்று முழுக்க கோவில், ஷாப்பிங், படம், பீச் என்று ஊர் சுற்றிவிட்டு இரவு வீடு திரும்பியபொழுது இருவருமே களைப்பாகத்தான் உணர்ந்தார்கள். ஆனாலும் அவனுக்கு உடல் களைப்பைவிட மனதில் ஏற்பட்ட வருத்தமே பெரிதாகத் தோன்றியது. இன்று என்ன நாள் என்று அவளுக்கு நிஜமாகவே நினைவில்லையா? அவன் பிறந்தநாளை எப்படி மறக்க முடிந்தது அவளால்? சிறு சிறு விஷயங்களையும் மறவாதவள் இதை மட்டும் மறந்தது அவனுக்கு நிஜமாகவே வருத்தமாய் இருந்தது.

அவன் மனம் ஓராண்டு காலம் பின்னோக்கிச்சென்றது. அவன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவனுடன் வேலை பார்க்கும் அனைவரோடும் படம் செல்ல திட்டமிட்டிருந்தான். ஆனால் வசந்தி மட்டும் தான் தனியாக வருவதானால் வீட்டில் அனுமதி கிடைக்காது என்று கூறி அவள் தங்கை ஜானுவையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தாள். அன்று முதல் பார்வையிலேயே இருவருக்குள்ளும் தனக்கானவர்(ள்) இவர்(ள்) தான் என்று தோன்றிவிட, இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் இனிதே நடந்தது.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவனை அவன் மனைவியின் குரல் நிஜ உலகத்திற்கு இழுத்து வந்தது. "ஏங்க மணி 11 ஆகுது. நீங்க படுக்கலியா? நாளைக்காவது ஆபீஸ் போற ஐடியா இருக்கா இல்ல நாளைக்கும் ஊர்சுத்தற ஐடியாவா?"

அவள் கிண்டலை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லாத்தால், அமைதியாய் வந்து கட்டிலில் படுத்துக்கொண்டான். ஆனாலும் அவனுக்கு உறக்கம் வராமல், அவனுக்குள் பல குழப்ப அலைகள். அவளையே எழுப்பி எப்ப்டி மறந்தாள் என்று கேட்டுவிடலாமா வேண்டாமா என்று கூட யோசித்தான். இப்படியே வெகு நேரம் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தவன் காதில் "என் ஆருயிர் கணவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்ற வார்த்தைகள் விழுந்ததும் ஆச்சர்யமும் சந்தோஷமுமாய் எழுந்து அமர்ந்தான். அவள் சொல்லிமுடிக்கவும் கடிகாரம் 12 முறை அடிக்கவும் சரியாக இருந்தது. ஆக தனக்கு சரியாக நாளின் இறுதியில் வாழ்த்த தான் அவள் அன்று முழுவதும் அமைதியாய் இருந்திருக்கிறாள். மற்றபடி அவள் தனது பிறந்தநாளை மறக்கவில்லை என்பதே அவனுக்கு மகிழ்ச்சியை தர, அந்த மகிழ்ச்சி அவன் முகத்திலும் பிரதிபளித்தது. அவன் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க நினைத்தவள் "உங்களுக்கு ஒரு பரிசும் காத்துட்டிருக்கு" எனவும், என்னவென்று சிறு குழந்தையின் ஆர்வத்துடன் அவன் கேட்க, வெட்கத்துடன் தன் கையில் இருந்த டைரியை அவனிடம் நீட்டி அன்றைய தேதிக்கான பக்கத்தை படிக்க சொன்னாள்.

அந்த பக்கத்தை பார்த்தவனின் சந்தோஷத்தை கூற சொற்கள் தேவையாய் இருக்கவில்லை..புன்னகையாலும் பெருமிதத்தாலும் ஜொலித்த அவன் முகமே போதுமானதாய் இருந்தது.

"அட என் கள்வனே!
என் சுவாசத்தை
திருடிக் கொண்டது
நீ மட்டும்தான்
என்றே நினைத்திருந்தேன்
இப்பொழுதுதான் தெரிந்தது...
பங்கிற்கு
உன் ஜூனியரும்
வந்து விட்டானென்று...!!!"

ஒரு முறைக்கு இரு முறையாய் கடைசி வரிகளைப் படித்தவன், அவளை அள்ளி அணைத்து தன்னுடைய பரிசுகளை வாரி வழங்க ஆரம்பித்தான்.

பி.கு. கவிதை இம்சை அரசியிடமிருந்து ஜி3 செய்யப்பட்டது :-)
48 Responses
  1. \\ நம்ம சிங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\\

    வாழ்த்துக்கள் சிங்கமே :)


  2. \\இப்ப உங்கள் கொடுமை டைம்ஸ்.. ஆர்வக்கோளாருல நானும் ஒரு கதை எழுதி இருக்கேன். படிச்சுபாத்துட்டு கமெண்ட் பொட்டில துப்பிட்டு போங்க.\\

    ம்...இன்னிக்கு இது கதை...விரைவில் நிஜமாக வாழ்த்துக்கள் :)))


  3. \\பி.கு. கவிதை இம்சை அரசியிடமிருந்து ஜி3 செய்யப்பட்டது :-\\

    ஒரே பதிவுல வாழ்த்து..கதை..ஜி3 கவிதைன்னு எப்படி இப்படி எல்லாம்..அவ்வ்வ்வ்வ்வவ்வ்


  4. சிங்கமலே ஏஸ்.. வாழ்த்துக்கள்...

    கேக்ல பாத்தீங்களா... புலி இருப்பதை.....


  5. //படிச்சுபாத்துட்டு கமெண்ட் பொட்டில துப்பிட்டு போங்க..//

    பொட்டி ரொம்ப சிறிசா இருக்கு...


  6. //ம்...இன்னிக்கு இது கதை...விரைவில் நிஜமாக வாழ்த்துக்கள் :)))//

    ஏன் "விரைவில்" எல்லாம் போடுற நீ....

    அத எல்லாம் நீ சொல்ல கூடாது.. போ.. போ....


  7. //ஒரே பதிவுல வாழ்த்து..கதை..ஜி3 கவிதைன்னு எப்படி இப்படி எல்லாம்..அவ்வ்வ்வ்வ்வவ்வ்//

    கோபி.. இருந்தாலும் உனக்கு வில்லத்தனம் ரொம்ப ஜாஸ்தியா...

    ஒன்னு போட்டாலே தாங்க முடியாது, இப்படி மூணனையும் ஒரே பதிவுல போட்டு படுத்துறீங்களே அப்படிங்குறது எப்படி சிம்பிளா சொல்லிட்ட பாரு... நீ கில்லாடி தான்ய்யா...


  8. Anonymous Says:

    gumthalakkadikava iruku kadhai..sooober...


  9. Anonymous Says:

    Ace ku advanced bday wishes!!!

    kadhai nalla irundhachu.. veda sonna maadhiri yedho ramani chandran kadhai effect!!


  10. Unknown Says:

    Oh idhu oru kadhaya? :P


  11. mgnithi Says:

    வாழ்த்துக்கள் சிங்கமே :)


  12. mgnithi Says:

    kathaiya pathi comment sollanumna....

    Word usage ellam nalla irukku.we know for sure that the female is going to wish at the end of the story. so supense factor is missing.

    And ippadi oru naal fulla wish pannama end of dayla wish panna eppadi irukkumnu naanga enga room mate vachi oru experiment pannirukom. Birthday annaiku oruthanukku bulb kudukka ithai vida nalla idea ethuvum illa.


  13. Sumathi. Says:

    ஹாய் G3,

    கதை ரொம்ப சூப்பராவே இருக்கு.

    எல்லாம் சரி ..இன்னும் எத்தனை நாளுக்குத் தான் இப்படி டகால்டி வேலை பண்ணிகிட்டு இருக்கப் போறீங்க?


  14. CVR Says:

    இம்புட்டு தெறமையா எவ்வளவு நாளா எங்கே ஒழிச்சு வெச்சிருந்தீங்க யக்கோவ்??
    கதை சூப்பரு!!!

    நம் அன்பு அண்ணன் சிங்கம்லே ஏஸ்-க்கு உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! B-)



  15. Arunkumar Says:

    kadhai veraya...

    என்னமோ போடா மாதவா !!!


  16. Arunkumar Says:

    இந்த பொண்ணுக்குள்ளயும் என்னவோ இருந்துர்க்கு பாரேன்..

    (read: 7G Rainbow Colony style)

    inime kadhai ezhudaadinga g3
    adutha stage kaaviyam ezhudunga !!!


  17. Arunkumar Says:

    oh

    comment moderasan veraya?


  18. Arunkumar Says:

    periyaalaayiteenga.. hmm


  19. Arunkumar Says:

    ennamo poda maadhava

    ellarum nalla irundha sari :)


  20. g3, meyyalume sooopper ah irunthuchu........ oru cinematic touch oda...

    and kavithai also was really good.... :)

    although we knew that she will wish him with a surprise, athu enna epadi nu neenga sonna vithathula than kadhai ninnuchu

    sari indha kadhaikku enna peru?


  21. aaga..sometimes office la velai paarkara colleagues kooda work out aagalenalum, avangala velila kootitu pona avanga family la yaaruna work out aaga chance iruku nu intha kadhai moolama moral solreengala???


  22. inna ithu...moderate ah iruntha neengalum comments ah moderate panna aarambichiteenga...any praabilams?


  23. Dreamzz Says:

    enna kadhai ithu? :(


  24. Dreamzz Says:

    aceku happy birthday wishes pa!


  25. k4karthik Says:

    சான்சே இல்லக்கா.... கதை ரொம்ப நல்லா இருந்துச்சு...

    மனசுல நின்னுட்டீங்க..


  26. k4karthik Says:

    கேக்கு இல்லாம ஒரு போஸ்ட் போடுங்கக்கா.. பாக்கலாம்....


  27. k4karthik Says:

    சிங்கம்லே க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...


  28. k4karthik Says:

    என்ன புதுசா கமெண்ட் மாடரேஷன் எல்லாம்... நல்லா இல்ல சொல்லிட்டேன்...


  29. ACE !! Says:

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! நன்றி!! நன்றி!! :) அப்பாலைக்கு வரேன்.. :)


  30. G3 Says:

    @Veda

    Attendence noted :)

    @Gopi

    //ம்...இன்னிக்கு இது கதை...விரைவில் நிஜமாக வாழ்த்துக்கள் :)))//
    Ethana per ippadi kelambi irukkeenga???

    //ஒரே பதிவுல வாழ்த்து..கதை..ஜி3 கவிதைன்னு எப்படி இப்படி எல்லாம்..அவ்வ்வ்வ்வ்வவ்வ்//
    Romba kashtapaduthitaeno?


  31. G3 Says:

    @Siva

    //கேக்ல பாத்தீங்களா... புலி இருப்பதை.....//
    Ungala paathu avaru bayandhu odiduvaaru.. appuram cakea naama saaptukkalaamnu plan panni thaanae andha photo potten :P

    //பொட்டி ரொம்ப சிறிசா இருக்கு...//
    Periya pottiya poda fund pathala :(

    //அத எல்லாம் நீ சொல்ல கூடாது.. போ.. போ....//
    Avara thorathittu neenga sollaporeengalo?? ;)

    //கோபி.. இருந்தாலும் உனக்கு வில்லத்தனம் ரொம்ப ஜாஸ்தியா...//
    Enakkennamo ungalukku thaan jaasthiyonnu doubtu varudhey..


  32. G3 Says:

    @Veda

    //ரமணிசந்திரன் புத்தகங்களை ரொம்ப படிக்காதேன்னு சொன்னேன்ல:))//
    Neenga englipish bookum padikaadhangareenga.. idhayum padikaadhangareenga.. appadina naan enna avvaiyaar ezhudhinadhayum maanikkavaasagar ezhudhinadhayuma padikka??? :((

    //அய்யோ எப்ப நீ கமெண்ட் மாடரேஷன் போட்ட? //
    Neenga modha commenta pottuttu ponappuram ;)

    //ஜி3 செய்த கவிதை நல்லா இருக்கு :)//
    Nalla irukkaradhunaala dhaanae G3 pannen :P

    //மூணாவது எங்க?//
    Inga dhaan irukku :)

    //ஓகே :) அப்ப தெளிவா தான் இருக்க :)//
    Unga aasirvadham :)


  33. G3 Says:

    @Gils

    //gumthalakkadikava iruku kadhai..sooober...//
    gumthalakkadikava?? Appadina enna????

    Padmapriya

    //veda sonna maadhiri yedho ramani chandran kadhai effect!!//
    Paavam avanga kaadhula idhu vizhundha tension aayiduvaanga..

    @BSK

    //Oh idhu oru kadhaya? :P//
    Ippadilaan kelvi ketta enakku badhil solla theriyaadhu..


  34. G3 Says:

    @mgnithi

    //Word usage ellam nalla irukku//
    Nandri hai :))

    //so supense factor is missing. //
    Kathu kutti naan.. en kitta idhellam edhirpaakalaama neenga?

    //Birthday annaiku oruthanukku bulb kudukka ithai vida nalla idea ethuvum illa//
    Naan neraya perukku neraya vaati kuduthirukkaenae :)))


  35. G3 Says:

    @Sumathi

    //கதை ரொம்ப சூப்பராவே இருக்கு.//
    Thankies :))

    //எல்லாம் சரி ..இன்னும் எத்தனை நாளுக்குத் தான் இப்படி டகால்டி வேலை பண்ணிகிட்டு இருக்கப் போறீங்க?//
    Endha ducaltya soldreenga neenga? **Me asking with one appavi face**

    @CVR

    //இம்புட்டு தெறமையா எவ்வளவு நாளா எங்கே ஒழிச்சு வெச்சிருந்தீங்க யக்கோவ்??
    கதை சூப்பரு!!!//
    Enna vechu kaamedy keemedy pannaliyae :)


  36. G3 Says:

    @Arun

    //kadhai veraya...
    என்னமோ போடா மாதவா !!!//
    Yaaruppa indha maadhavan? pudhusa irukkaru?

    //இந்த பொண்ணுக்குள்ளயும் என்னவோ இருந்துர்க்கு பாரேன்..
    (read: 7G Rainbow Colony style)//
    ROTFL =)) Eppadi ippadilaan unnala mattum comment poda mudiyudho :))

    //adutha stage kaaviyam ezhudunga !!!//
    En indha kola veri unakku??

    //comment moderasan veraya?//
    :)))

    //periyaalaayiteenga.. hmm//
    un dhoshthaachey :))

    //ennamo poda maadhava
    ellarum nalla irundha sari :)//
    Enna oru nalla manasu :))


  37. G3 Says:

    @rsubras

    //g3, meyyalume sooopper ah irunthuchu........ oru cinematic touch oda...
    and kavithai also was really good.... :)//
    Thank u thank u :))

    //sari indha kadhaikku enna peru?//
    Yosichu paathen onnum urupadiya thonala :((

    //aaga..sometimes office la velai paarkara colleagues kooda work out aagalenalum, avangala velila kootitu pona avanga family la yaaruna work out aaga chance iruku nu intha kadhai moolama moral solreengala???//
    Avvvv.. naan appadilaan onnum sollalae.. sollalae.. sollalae :P

    //moderate ah iruntha neengalum comments ah moderate panna aarambichiteenga...any praabilams?//
    Namma kitta problem pandra alavukku yaarukkum dhillu innum varalae :P Adhu ellarum podaraangalae.. naamum poduvomnu oru nappasa dhaan :))


  38. G3 Says:

    @K4K

    //சான்சே இல்லக்கா.... கதை ரொம்ப நல்லா இருந்துச்சு...
    மனசுல நின்னுட்டீங்க..//
    Idhula ul/veli kuthellam edhuvum illayae... appadina nandri sollikaren :))

    //கேக்கு இல்லாம ஒரு போஸ்ட் போடுங்கக்கா.. பாக்கலாம்.... //
    Edho naan saapudaradhukku munnadi ungalukkellam kaatalaamnu paathen.. venaama.. seri vidunga.. next timela irundhu ungalukku kaatamalae saaptukkaren :))

    //என்ன புதுசா கமெண்ட் மாடரேஷன் எல்லாம்... நல்லா இல்ல சொல்லிட்டேன்...//
    adutha postukku thookidaren :) Indha oru postukku mattum irukkatumae ;)


  39. G3 Says:

    @Dreamzz

    //enna kadhai ithu? :(//
    Adha kadhaya padikkaravangala dhaan ketkanum.. naan ezhudhinadhoda seri.. padichellam paakalae.

    @Ace

    //வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! நன்றி!! நன்றி!! :) அப்பாலைக்கு வரேன்.. :)//
    U r most welcome :)) Treat enganu mattum correcta sollidunga :)


  40. KK Says:

    Kadhai super G3... Aana avan wife 12 o clock wish panniduva appadinu guess panniten.... athu unga style appadinu therinjathu naalayo yennavo...
    Ava gift appadinu sonna appave junior vishayamum guess panniten :D
    Wise men think alike naala unga kathai super o super :)


  41. KK Says:

    ACE.. appy B'day!!


  42. ஜி Says:

    Birthday Vaazththukkal Ace... aka Sara...

    G3.. kalakki potteenga... kavithaiya paditcha udanaiye sameebaththulathaan engeyo paditcha maathiri thonitchu.. appuram PC paatha udanethaan purinjuthu :))

    Imp mattera sollave illaiye?? athukkum oru vaazththu... :))


  43. G3 Says:

    @KK

    //Kadhai super G3... //
    Nandri hai :))

    //Aana avan wife 12 o clock wish panniduva appadinu guess panniten.... athu unga style appadinu therinjathu naalayo yennavo...//
    Anubavam pesudhu ;))

    //Ava gift appadinu sonna appave junior vishayamum guess panniten :D//
    Aaha.. adhayuma??

    //Wise men think alike naala unga kathai super o super :)//
    Cycle gapla ungalayum andha listla add pannikiteengalae :P


  44. G3 Says:

    @Ji

    //G3.. kalakki potteenga... //
    Ellam seniors unga aasirvadham dhaan :))

    //kavithaiya paditcha udanaiye sameebaththulathaan engeyo paditcha maathiri thonitchu.. appuram PC paatha udanethaan purinjuthu :))//
    :))

    //Imp mattera sollave illaiye?? athukkum oru vaazththu... :))//
    Adhu inimae dhaan.. annaikku vera post podalaamnu yosichadhaala idha ippavae pottuten :)


  45. MyFriend Says:

    G3க்கு G3யும் வாழ்த்தும் மட்டும்தான் தெரியும்ன்னு சொன்னவங்க எல்லாம் இங்க ஓடி வாங்க.. இந்த கதையை படிச்சுட்டு பேசுங்க மக்கா. :-)


  46. MyFriend Says:

    கதை ரொம்ப நல்லா வந்திருக்கே G3.. நீங்க ப்ரீயாவின் இடத்தை ரீஃபில் பண்ணிட்டீங்க போங்க. இனி நீங்க "நானும் ஒரு எழுத்தாளி.. நானும் ஒரு எழுத்தாளி"ன்னு பெருமையா சொல்லிக்கலாம். :-)


  47. MyFriend Says:

    கொஞ்சம் லேட்டா வந்தாலும்....

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏஸ் சரவணன் அவர்களே. :-)