செப்டம்பர் மாதம்... செப்டம்பர் மாதம்...

வழக்கமா செப்டம்பர் மாதம் வந்தாலே ஒரே கொண்டாட்டமா இருக்கும். என் பிறந்தநாள், கல்யாணநாள், கணவர் பிறந்தநாள்ன்னு தொடர்ந்து வருவதால் ஒவ்வொரு வருஷமும் எங்கயாவது வெளியூருக்கு மூட்டைய கட்டிடுவோம். ஆனா இந்த வருஷம் சிலபல காரணங்களால் அப்படி எல்லாம் சென்னையை விட்டு வெளில எங்கயும் போகக்கூடாதுனு வீட்டுல தடை போட சரி.. சென்னைக்குள்ளயே சுத்துவோம்னு மனசை தேத்திக்கிட்டோம். ஆனா விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு வண்டில  போய் விழுந்து வாரிட்டு வந்த அண்ணா பொண்ண, ஆஸ்பத்திரில சேக்க வேண்டியதா போனதால எல்லா கொண்டாட்ட மூடும் அங்கேயே ஆப் ஆகிடுச்சு. என் மருமக பல விஷயத்துல என்னை மாதிரியேன்னு பெருமையா சொல்லிட்டிருப்பேன். ஆனா அவளை ஆஸ்பத்திரில சேத்தப்போ தான் தெரிஞ்சுது பயபுள்ள என்னை மாதிரியே மருந்து மாத்திரை ஊசினா அலறுறா. அவளை ஒரு வாரம் கழிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வரும் வரை யாருக்குமே வேற எந்த நெனப்பும் இல்ல.

சரி.. பிறந்தநாள் அன்னிக்கு எப்படியும் வீட்ல இருந்து செய்யறதுக்கு ஒன்னும் இல்லையே.. நாம பேசாம ஆபீசுக்கே போகலாம்னு முடிவு செஞ்சு நான் லீவு சொல்லவே இல்ல. கடைசி நேரத்துல   என்  சித்தி பொண்ணு போன் போட்டு நான்  வீட்டுக்கு வரேன்.. நீ ஆபீஸ் லீவு போடுன்னு  சொல்லிட்டா. சரி வா எனக்கும் கடைக்குபோற வேலை இருக்குனு சொல்லி லீவு போட்டுட்டேன். என் அண்ணா  பொண்ணுக்கு ஒவ்வொரு வேலையும் மருந்து போடறதுக்கு லஞ்சமா என்ன வேணும்னு கேட்க.. ஒவ்வொரு வேலை  மருந்துக்கும் பொம்மை, க்ளிட்டர் பேணா, கலர் பென்சில்னு அவ பெரிய லிஸ்ட்  சேத்து வெச்சிருந்தா. அதை எல்லாம் வாங்கனுமே :-).

ஆனா காலைல எழுந்தப்புறம்தான் தெரியுது பயபுள்ளைங்க கேக் எல்லாம் வாங்கி வெச்சிருக்காங்கனு. கேக் வெட்டி கொண்டாடிட்டு பீனிக்ஸ் மால்-ல  இருக்கற ஸ்டார்மார்க்ல எல்லாம் வாங்கிட்டு அப்படியே பீட்சா ஹட்-ல  லஞ்ச் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்துட்டோம். நாமளே எந்த கொண்டாட்டமும் வேணாம்னு நெனச்சாலும் நம்ம சுத்தி இருக்கறவங்கவிட மாட்டாங்க போல.. எல்லாம் நன்மைக்கே :-)

பிறந்தநாள் தான் இப்படி போச்சு.. கல்யாணநாளாவது ஒழுங்கா பிளான் பண்ணுவோம்னு சொல்லி கணவரை நேரா ஜிஆர்டி கூட்டிட்டு போய் அவர் பர்ஸுக்கு நல்லா வேட்டு வெச்சிட்டு.. அவரு ஆசைக்காக அவரை விவேகம் படத்துக்கு கூட்டிட்டு போயிட்டு வந்தாச்சு ;-) இன்னும் அவர் பிறந்தநாள் மட்டும் பாக்கி இருக்கு.. அதுக்கும் ஒழுங்கா பிளான் செய்யணும்.. பாப்போம் என்ன தேத்த முடியுதுன்னு :-)

நானும் கடவுள் நம்பிக்கையும்

எங்க வீட்ல யாரை கேட்டாலும் இவளா.. இவளுக்கு கடவுள் நம்பிக்கைனா கிலோ என்ன விலைன்னு கேட்பானு தான் சொல்லுவாங்க.. ஏன்னா அவங்களுக்கு கடவுள் நம்பிக்கைனா தினமும் காலைல எழுந்து வீட்ல பூஜை பண்ணனும்.. கோவிலுக்கு போகனும்.. நல்ல நாள் திருநாள்னா விரதம் இருக்கனும்... இப்படி சில பல வரைமுறைகள்.. ஆனா இதெல்லாம் எனக்கு எப்போ செய்யனும்னு தோணுதோ அப்போ தான் செய்வேன்.. யாராவது இதை நீ கண்டிப்பா செய்யனும்னு சொன்னா.. நீ என்ன சொல்றது.. நான் கண்டிப்பா அதை செய்யவே மாட்டேன்னு வீம்பு பண்ணுவேன்... இப்படி அவங்க படுத்தின பாட்டுல நான் செய்யவே மாட்டேன்னு முறுக்கிக்கிட்ட விஷயங்கள் தான் மேல சொன்ன கோவிலுக்கு போறது, வீட்ல பூஜை பண்றது, விரதம் இருக்கறது எல்லாம்.

மாமியார் ஊருக்கு போனாலும் கூட நான் சமையல் வேலைலாம் பாத்துக்கறேன்.. இந்த பூஜை வேலை மட்டும் நீ பாத்துக்கோப்பானு என் வீட்டுக்காரர் தலைல கட்டிருவேன். நமக்கு வாச்சவர் மட்டும் என்ன லேசுபட்ட ஆளா.. நான் பூ போடறது பூஜை பண்றதெல்லாம் பண்ணிடறேன்.. நீ இந்த விளக்க மட்டும் ஏத்தி குடுத்துட்டு போன்னு நம்மள தட்டி குடுத்தே அவரும் காரியத்தை சாதிச்சுக்குவாரு.. கேடி ஃபெல்லோ 😉😉 இவங்க கிட்ட எல்லாம் இப்படி சீன் போட்டாலும் எனக்கு எப்பவுமே என் கடவுள் பிள்ளையார் என் கூடவே இருந்து வழி நடத்தறார்ங்கறதுல அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை..

எப்போ வீட்டை விட்டு கிளம்பினாலும் எஙகள் தெருவில் இருக்கும் விநாயகருக்கு மனசுக்குள்ளயே ஒரு சல்யூட் அடிச்சிட்டு தான் கிளம்புவேன்.. அதே போல் அலுவலகத்தில் ஒரு குட்டி பிள்ளையார் சிலை  என் லேப்டாப் மேல இருக்கும். ஏனோ அந்த குட்டி சிலைய பாத்துட்டிருந்தாலே எந்த பிரச்சனையையும் சமாளிச்சிடலாம்னு ஒரு நம்பிக்கை வந்துடும். என் நம்பிக்கையின் நாயகனாய் விளங்கும் தும்பிக்கை விநாயகனுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ;)



கண்ணம்மா - றெக்க



கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மனி தீபம்
அது யாரோ நீ

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை

செம்பருத்தி பூவப்போல சிநேகமான வாய்மொழி
செல்லம் கொஞ்ச கோடை கூட ஆகிடாதோ மார்கழி
பால் நிலா உன் கையிலே  சோறாகிப்போகுதே
வானவில் நீ சூடிட மேலாடையாகுதே
கண்ணம்மா…… கண்ணம்மா…… நில்லம்மா…
உன்னை உள்ளம் எண்ணுதம்மா

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை

உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே
மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே
பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்
தேவதை நீதான் என வாயார போற்றுவான்
கண்ணம்மா……… கண்ணம்மா…… என்னம்மா...
வெட்கம் நெட்டித்தள்ளுதம்மா 

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மனி தீபம்
அது யாரோ நீ...