வழக்கமா செப்டம்பர் மாதம் வந்தாலே ஒரே கொண்டாட்டமா இருக்கும். என் பிறந்தநாள், கல்யாணநாள், கணவர் பிறந்தநாள்ன்னு தொடர்ந்து வருவதால் ஒவ்வொரு வருஷமும் எங்கயாவது வெளியூருக்கு மூட்டைய கட்டிடுவோம். ஆனா இந்த வருஷம் சிலபல காரணங்களால் அப்படி எல்லாம் சென்னையை விட்டு வெளில எங்கயும் போகக்கூடாதுனு வீட்டுல தடை போட சரி.. சென்னைக்குள்ளயே சுத்துவோம்னு மனசை தேத்திக்கிட்டோம். ஆனா விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு வண்டில போய் விழுந்து வாரிட்டு வந்த அண்ணா பொண்ண, ஆஸ்பத்திரில சேக்க வேண்டியதா போனதால எல்லா கொண்டாட்ட மூடும் அங்கேயே ஆப் ஆகிடுச்சு. என் மருமக பல விஷயத்துல என்னை மாதிரியேன்னு பெருமையா சொல்லிட்டிருப்பேன். ஆனா அவளை ஆஸ்பத்திரில சேத்தப்போ தான் தெரிஞ்சுது பயபுள்ள என்னை மாதிரியே மருந்து மாத்திரை ஊசினா அலறுறா. அவளை ஒரு வாரம் கழிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வரும் வரை யாருக்குமே வேற எந்த நெனப்பும் இல்ல.
சரி.. பிறந்தநாள் அன்னிக்கு எப்படியும் வீட்ல இருந்து செய்யறதுக்கு ஒன்னும் இல்லையே.. நாம பேசாம ஆபீசுக்கே போகலாம்னு முடிவு செஞ்சு நான் லீவு சொல்லவே இல்ல. கடைசி நேரத்துல என் சித்தி பொண்ணு போன் போட்டு நான் வீட்டுக்கு வரேன்.. நீ ஆபீஸ் லீவு போடுன்னு சொல்லிட்டா. சரி வா எனக்கும் கடைக்குபோற வேலை இருக்குனு சொல்லி லீவு போட்டுட்டேன். என் அண்ணா பொண்ணுக்கு ஒவ்வொரு வேலையும் மருந்து போடறதுக்கு லஞ்சமா என்ன வேணும்னு கேட்க.. ஒவ்வொரு வேலை மருந்துக்கும் பொம்மை, க்ளிட்டர் பேணா, கலர் பென்சில்னு அவ பெரிய லிஸ்ட் சேத்து வெச்சிருந்தா. அதை எல்லாம் வாங்கனுமே :-).
ஆனா காலைல எழுந்தப்புறம்தான் தெரியுது பயபுள்ளைங்க கேக் எல்லாம் வாங்கி வெச்சிருக்காங்கனு. கேக் வெட்டி கொண்டாடிட்டு பீனிக்ஸ் மால்-ல இருக்கற ஸ்டார்மார்க்ல எல்லாம் வாங்கிட்டு அப்படியே பீட்சா ஹட்-ல லஞ்ச் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்துட்டோம். நாமளே எந்த கொண்டாட்டமும் வேணாம்னு நெனச்சாலும் நம்ம சுத்தி இருக்கறவங்கவிட மாட்டாங்க போல.. எல்லாம் நன்மைக்கே :-)
பிறந்தநாள் தான் இப்படி போச்சு.. கல்யாணநாளாவது ஒழுங்கா பிளான் பண்ணுவோம்னு சொல்லி கணவரை நேரா ஜிஆர்டி கூட்டிட்டு போய் அவர் பர்ஸுக்கு நல்லா வேட்டு வெச்சிட்டு.. அவரு ஆசைக்காக அவரை விவேகம் படத்துக்கு கூட்டிட்டு போயிட்டு வந்தாச்சு ;-) இன்னும் அவர் பிறந்தநாள் மட்டும் பாக்கி இருக்கு.. அதுக்கும் ஒழுங்கா பிளான் செய்யணும்.. பாப்போம் என்ன தேத்த முடியுதுன்னு :-)