2012 - திரும்பி பார்க்கிறேன்

ஜனவரி - மார்ச்

* முதல் முறையாக புத்தாண்டை 12 மணிக்கு நண்பர்களுடன் கொண்டாடியது
* கடைசி நிமிடத்தில் முடிவு செய்து பொங்கலுக்கு பார்சிலோனா சென்றது திரும்பி வரும் முன் பர்ஸை தொலைத்து சல்லி காசில்லாமல் வீடு (பெல்ஜியம்) திரும்பியது
* வீட்டுக்காரர் பெல்ஜியம் வர அவருடன் சேர்ந்து சுற்றிய இரண்டு மாதங்கள்.. பாரீஸ், ஸ்விஸ் எல்லாம் போனது அது வரை நினைத்தும் பார்த்திராத விஷயங்கள்... ரொம்பவே ரசிச்சு வாழ்ந்த நாட்கள் அவை.. :)

ஏப்ரல் - ஜீன்

* ஏற்கனவே கொஞ்சமா ஹோம் சிக் இருக்க... உடம்பு  முடியாம போனதும் ரொம்பவே ஏங்க வைச்சிடுச்சு.. ஹாஸ்பிட்டல் போனா அம்ம போட்டிருக்குனு சொல்லிட்டாங்க.. இதுக்கும் மேல தாங்காது கட்றா மூட்டையனு ஊருக்கு பொட்டிய கட்டிட்டு வந்தாச்சு
* லீவ் தரமாட்டேன்னு ஆபீஸ்ல சொல்ல.. நீ என்னடா சொல்றது நீயே உன் வேலையை வைச்சிக்கோனு ரிசைனும் பண்ணிட்டு தான் ப்ளைட்டு ஏறினதே :)
* வீட்டின் புது வரவாய் - சாண்ட்ரோ கார்

ஜீலை - செப்டம்பர்

* ஒரு வழியா நோட்டீஸ் பீரியட் முடிஞ்சு வேலையில் இருந்து முழுசா விலகினது ஜூலை மாதம் தான்
* ஆகஸ்டில் அண்ணா கல்யாணம், செப்டம்பரில் என் பிறந்த நாள், கல்யாண நாள்னு கொண்டாட்டங்களுடன் சென்ற மாதங்கள்


அக்டோபர் - டிசம்பர்

*  அம்மாவின் முதல் விமானப் பயணம் :) சென்னை - பூனே.. அங்கிருந்து காரில் சிரடி சென்று வந்தது
* வீட்டுக்காரரின் சொந்தங்களில் 2 மரணங்கள்.. அவற்றுக்காகவும் தொடர்ந்த 15-ம் நாள் 30-ம் நாள் துக்கங்களுக்க்காகவும்னு சென்னை - ஜெயங்கொண்டம் ஏகப்பட்ட முறை பயணம் செய்ய வேண்டியதாயிடுச்சு.

முதல் ஆறு மாதங்கள் வேலை ஊர் சுத்தல்கள்னு ஒரு வித சந்தோஷம்னா கடைசி ஆறு மாதங்களா வீட்டு வேலைய மட்டும் பார்த்துக்கிட்டு லோக்கல்ல சுத்தறதும் சந்தோஷமா தான்  இருக்கு. மனசுக்குள்ள லைட்டா இப்படியே இருந்துடலாம்.. அடுத்த வேலை எல்லாம் தேட வேண்டாம்னு தோனுது. பொறுத்திருந்து தான் பாக்கனும்.. 2013-ல் என்ன நடக்குதுனு...

New year cards

 
8 Responses
  1. ரொம்ப நாள் கழிச்சி வீட்டுக்கு வந்துயிருக்கிங்க போல...வாழ்த்துக்கள் ;)


  2. G3 Says:

    நன்றி கோபி. வருடத்துக்கு ஒரு வாட்டியாவது கொஞ்சம் தூசி தட்டி வைப்போமேன்னு ஒரு நல்லெண்ணம் தான் :)


  3. //வருடத்துக்கு ஒரு வாட்டியாவது கொஞ்சம் தூசி தட்டி வைப்போமேன்னு ஒரு நல்லெண்ணம் தான் :)//

    ரொம்ப கஷ்டம்.. எல்லாம் ஒரெ குட்டைல ஊறின மட்டைங்க.. நான் என்னைய சொன்னேன் என்னைய சொன்னேன்..


  4. G3 Says:

    @கொடி, அது அப்படியில்லை... மொத்தமா மொக்கைய தாங்க வீட்ல ஒரு ஜீவன் இருக்கறப்போ இந்த பக்கம் வந்து மத்தவங்கள ஏன் டிஸ்டர்ப் பண்ணுவானேன்னு தான் :)


  5. gils Says:

    //மொத்தமா மொக்கைய தாங்க வீட்ல ஒரு ஜீவன் இருக்கறப்போ இந்த பக்கம் வந்து மத்தவங்கள ஏன் டிஸ்டர்ப் பண்ணுவானேன்னு தான் :)

    //


    avvvvvvvvvvvvvvvvvvvvvvvvlo nalalvangala neenga :D:D surukkama narukkunu varusha kathai pooravum soliteenga :d


  6. G3 Says:

    @Gils,

    //
    avvvvvvvvvvvvvvvvvvvvvvvvlo nalalvangala neenga :D//

    :)))) Yes yes :D


  7. Priya Says:

    Happy New Year G3. I was in India for 3 weeks but time was too short to contact anyone.


  8. G3 Says:

    @Priya, Eppavumae busy scheduleodayae vareenga pola ;) Next time atleast konjam free time-oda vaanga :) Meet pannidalaam :D